சனி, 29 ஜனவரி, 2011

படம் வரைதல் 2011 - 01 ஆகாஷ்

அநன்யா, 

இங்கே கீழே இருப்பது, ஆகாஷ் என்று ஒருவர் வரைந்த படம். நாங்க அவரிடம், அந்த இரண்டு வளை கோடுகள் மட்டும் வரைந்து, மவுசை அவர் கையில் கொடுத்தோம். அவர் மீதி எல்லாவற்றையும் வரைந்துவிட்டார்,  பெயிண்ட் உதவியால். (கே ஜெகன் எங்களை மன்னிப்பாராக. )  

ஏன் இதை எல்லாம் எழுதுகிறோம் என்றால், நீங்களும் என்ன வேண்டுமானாலும், வரையலாம், அனுப்பலாம், என்பதற்காகத்தான்.

அதையும் தவிர, அன்னபட்சி படம் நாங்கள் முழுவதுமாக வரைந்து, அதைப் போலவே வாசகர்களை வரைந்து அனுப்பி வைக்க சொல்லியிருந்தோம். கொடுக்கப்பட்டுள்ள இரண்டு கோடுகளிலிருந்து, யார், என்ன வரைந்து அனுப்பினாலும், ஏற்றுக்கொள்ளப்படும்.(இந்தப் படத்திற்கு, யாராவது விளக்கம் பின்னூட்டத்தில் அளித்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம். படம் போட்டவர், இதற்கு விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.)
              

வெள்ளி, 28 ஜனவரி, 2011

வரைந்து பாருங்கள்.

ரொம்ப நாள் கட் அடிச்சுட்டு, ஊர் சுற்றிக் கொண்டிருந்த எங்கள் டிராயிங் மாஸ்டர், திரும்பி வந்துவிட்டார்.

அவர் அனுப்பி வைத்த படமும், க்ளு வும் இங்கே.

படம்:

                                                                        

க்ளூ: இதை வைத்து, ஒரு பழங்கால மிருகத்தின் படம் வரையவேண்டும்.

(பின் குறிப்பு: எங்கள் சித்திர ஆசிரியர் இப்படித்தான் பைத்தியக்காரத்தனமாக ஏதாவது க்ளூ கொடுப்பார். அதை எல்லாம் இலட்சியம் செய்யாமல், வாசகர்கள், இந்த இரண்டு கோடுகளைப் பயன்படுத்தி, எது வேண்டுமானாலும் வரைந்து அனுப்பலாம்.)