புதன், 13 டிசம்பர், 2017

விண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்


கொடுக்கப்பட்ட "எண்ணெய் அன்பு" -   ஐந்தாம் கருவுக்கு இரண்டாம்  கதை.
விண்ணிலிருந்து வந்த விண்மீன்
கீதா ரெங்கன்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் 2.30 மணி அகால இரவிலும் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. உறவுகளும் நட்புகளும் பிரிதலில் கை குலுக்கல்கள், பொக்கேக்கள், செல்ஃபிக்கள் என்று இருந்த கூட்டத்தினிடையே பேரன் துருவ் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு நுழைவாயில் வரை வந்ததும் ட்ராலியை வள்ளிப்பாட்டி தன் கைக்கு மாற்றிக் கொண்டு உள்ளே நுழைய பேரன் விசிட்டர் சீட்டு வாங்கிக் கொண்டு விசிட்டர் பகுதிக்குள் சென்றான்.


பாட்டி பவளத்தைத் தொட இன்னும் 5 வருடங்கள் உள்ளன என்றாலும் இன்னும் 10 வயது குறைத்துச் சொல்லலாம் போன்று கம்பீரத்துடனும், கெத்துடனும் இருந்தார். ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் 5.30 மணிக்கு டேக் ஆஃப். செக்கின் முடிந்து செக்யூரிட்டி செக்கப் போகும் முன் பேரனுடன் கம்பித் தடுப்பிற்கு இப்புறம் நின்று பாட்டிகளுக்கே ஆன கரிசன அட்வைஸ்களைக் கொடுத்துவிட்டு உச்சி முகர்ந்து பை சொல்லிக் கொண்டே செக்யூரிட்டி செக் வரிசையை நோக்கி நடந்த போது


“ஓ! காட்! ஸாரி..ஸாரி வெரி வெரி ஸாரி” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினார். ப்ரிட்டிஷ் ஏர்வேஸின் விமானப் பணிப்பெண்ணின் சீருடையில் ஓர் இந்திய முகம். வள்ளிப் பாட்டி எதற்கு “ஸாரி” என்று சொல்கிறது இந்தப் பெண் என்று. கவனித்ததில் தன் ட்ராலியில் சிறிதாக இடித்தபடி அவளது ட்ராலி பேக்.


“ஸாரி? நான் தான் சொல்லணும் பெண்ணே! என் பேரனுக்கு பை சொல்லிக்கிட்டே செக்யூரிட்டி வரிசையைப் பார்த்துக்கிட்டே நடந்ததுல கவனிக்கலை..”


“ஓ! நோ! இட் ஸ் மை மிஸ்டேக். நான் கொஞ்சம் ஹரிபரில… ஸாரி அகைய்ன்” என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்தாள். அப்பெண்ணிற்கு வள்ளிப் பாட்டியின் முகம் ரொம்ப ஃபெமிலியராக இருந்தது போல் தோன்றவே மீண்டும் திரும்பிப் பார்த்தபடிச் சென்றாள். வள்ளிப் பாட்டிக்கும் இப்பெண்ணின் முகம் ஏனோ மனதிற்கு நெருக்கமாகத் தோன்றியது.


வீணான கற்பனை! உலகில் ஒரே போன்று 7 பேர் இருப்பார்களாமே! என்று சிந்தனையைப் புறந்தள்ளி செக்யூரிட்டி செக்கப் முடிந்து கேட் அருகே லௌஞ்சில் காத்திருந்த போது, அந்தப் பெண் ப்ரிடிஷ் ஏர்வேஸ் யூனிஃபார்மில்தானே இருந்தாள் அவளும் இதே ஃப்ளைட்டில் ஏர்ஹோஸ்டஸா? பேத்தி இப்போது உயிரோடிருந்தால் இவள் வயதுதான் இருக்கும் ஒரு 23, 24 வயது.? இப்படித்தான் இருந்திருப்பாளோ. விளம்பரத்தில் வரும் அழகுப் பதுமையாய்! விமானப் பணிபெண் என்றால் சும்மாவா?


மொபைல் அதிர்ந்தது! ஓ! அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்ததில், வாட்சப் குடும்பக் குழுவில் விசாரித்து மெசேஜ் வந்திருக்குமே! மறந்தேவிட்டதே என்று செக்கின் எல்லாம் நல்லபடியாக முடிந்து ஃப்ளைட்டுக்குக் காத்திருப்பதை மெஸேஜ் அனுப்பினார். மகனுடனும் பேசினார். விமானத்திற்குச் செல்லும் கேட் திறந்திட, விமானத்தின் நுழைவாயிலில் அதே பெண். வள்ளிப்பாட்டிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அப்பெண்ணும் வியப்புடன் நோக்கிவிட்டு மலர்ந்து காலைவணக்கம் சொல்லி பாட்டியை அவரது சீட்டிற்கு அழைத்துச் சென்று மேலே அவரது ஹேன்ட் லக்கேஜை காபினில் வைக்க உதவினாள்.


பாட்டியை அப்பெண்ணின் நினைவு விடவில்லை. தமிழ்ப்பெண் போல இருக்கிறாளே. சென்னையில்தான் இருப்பாளோ? ஆனால் உச்சரிப்பு ப்ரிட்டிஷ் அக்சென்ட். லண்டன் வாழ் தமிழ்ப்பெண்ணோ?


“மேம் ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகப் போகிறது. ஸீட் பெல்ட் ப்ளீஸ்” என்று அந்தப் பெண்ணின் குரல் கேட்டதும், ஸீட்பெல்ட் கூடப் போட மறக்கும் அளவு அப்பெண்ணின் நினைவு இவ்வளவு நேரம் தன்னை ஆக்கிரமித்துள்ளதே என்று நினைத்துக் கொண்டார். பாட்டிக்கு சீட்பெல்டைப் போட உதவிவிட்டு, கால்களைச் சரியாக நீட்டி வைத்துக் கொள்ளவும் உதவினாள் வசீகரமானப் புன்னகையுடன்!


ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகி முக்கால்மணி நேரம் கடந்ததும் காஃபி, டீ, ஜூஸ் வழங்க வந்தாள் அப்பெண். பாட்டியின் கண்களில் சோர்வு தெரியவும், “மேம்! எனி ப்ராப்ளம்?” என்று கேட்டதும் பாட்டிக்கு அவளது கரிசனம் இதமாய் இருந்திட அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு,


“இல்லை எதுவும் இல்லை” என்று ஆரஞ்ச் ஜூஸ் கேட்டு வாங்கிக் கொண்டார். ஏதேனும் பிரச்சனை என்றால் தன்னிடம் சொல்லுமாறும் சொல்லிவிட்டுச் சென்றாள்.


இவளிடம் சொல்லும் வேதனையா இது? எனக்குத்தான் ஏனோ அவளைப் பேத்தியாகக் காணத் தோன்றுகிறது. அவள் யாரோ? “எந்தப் பொண்ணையாவது பாத்து என் பேத்தி போலனு ஓவரா ஆசைய வளத்துக்காதேனு” பேரன்கள் மற்றும் மகனின் குரல்கள் எச்சரித்தது. ஜூஸைக் குடித்து முடித்த பாட்டி இன்னும் 10 மணி நேரத்தைக் கடக்க வேண்டுமே என்று கண்ணை மூடிக் கொண்டார்.


கண்ணை மூடினால் இந்த மனசு சும்மாவா இருக்கிறது. திறந்த வீட்டிற்குள் கண்டதும் நுழைவது போல் நுழையும் பாழாய்ப் போன நினைவுகளை எந்த செக்யூரிட்டி செக்கும் இல்லாமல் மனம் அனுமதிக்கிறது.


15 வயதில் திருமணம். 20 வயதுக்குள் முதலாவது ஆண், இரண்டாவது பெண், மூன்றாவதும் பெண் என்று மூன்று குழந்தைகள். மகன் கானமூர்த்திக்கும், மகள்களில் பெரியவள் சாரமதிக்கும் ஒரே வருடத்தில் கல்யாணம்! மகன் சிங்கப்பூர் சென்று பின்னர் லண்டனில் செட்டில் ஆகிவிட்டான். சாரமதியின் இரு ஆண் குழந்தைகளும் சிறிய குழந்தைகளாக இருந்த போது சாரமதிக்கு இரத்தப் புற்றுநோய் வந்து விண்ணுலகம் சென்றுவிட்டாள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள என்று மாப்பிள்ளை 6வது மாதத்தில் மறுமணம் செய்து கொண்டாலும் குழந்தைகள் வள்ளிப்பாட்டி, தாத்தாவிடம் தான் வளர்ந்தார்கள்.


மூன்றாவது மகள் வருணப்பிரியாவின் திருமணத்தின் போது பிரச்சனைகள் எழுந்ததால் சம்பந்திகள் வள்ளிப்பாட்டிக் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளவில்லை. மாப்பிள்ளை அஸ்ஸாமில் தேயிலை கம்பெனியில் நல்ல வேலையில் இருந்தார். அவரது பெற்றோரும் அவர்களுடன் இருந்ததால் தொடர்பே இல்லாமல் இருந்தது. பாட்டியின் குடும்பமே வேதனைப்பட்டது. அப்போதெல்லாம் இப்போது இருப்பது போல் தொலைதொடர்பு இல்லையே.


மூன்றாவது பெண்ணிற்கு, வள்ளிப்பாட்டியின் குடும்பத்திற்கே ஒரே பேத்தியாக நட்சத்திரா பிறந்தாள். பிரசவத்திற்குக் கூட அம்மாவின் வீட்டிற்கு வரவில்லை. அதன் பின், மாமியாரின் உடல்நிலை குன்றியதால், மாமியாரும் மாமனாரும் போபாலில் இருக்கும் தங்கள் வீட்டிற்கே வந்துவிட்ட பின் இரு முறை, பிரச்சனைகளுக்கு நடுவில் எப்படியோ மாப்பிள்ளையும், மகளும் குழந்தையுடன் வந்து சென்றனர்.


ஆனால் விதி அங்கும் விளையாடியது. பேத்தி நட்சத்திரா 4 வயதாக இருந்த போது பாட்டியின் மகள் ரத்தப் புற்றுநோயால் இறந்து போனாள். அதன் பின் மாப்பிள்ளை பேத்தியுடன் வந்து தங்கிவிட்டுப் போனார். கொள்ளை அழகு. பொம்மை போல் மகளின் சாயலில் இருந்தாள். அது ஒன்றுதான் ஆறுதலாக இருந்தது. குழந்தை அம்மாவைத் தேடி அழுத போதெல்லாம், பாட்டி விண்ணைக் காட்டி “அதோ பார் அந்த நட்சத்திரம் அதுதான் உன் அம்மா உன்னப் பாத்துக் கண்ணைச் சிமிட்டரா பார்” என்று சொல்லி சாதம் ஊட்டியிருக்கிறார். தன் மகளைத் தானே வளர்ப்பேன் என்று மாப்பிள்ளை விரும்பியதால் தடுக்கவில்லை. மாப்பிள்ளையைத் தொடர்பில் இருக்குமாரும், முடிந்த போது நட்சத்திராவை தங்களுடன் தங்க விடவும் வேண்டிக் கொண்டனர், புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்கள்.


அவர்கள் வந்தது அதுவே கடைசியாகிப்போனது. மாப்பிள்ளையும், நட்சத்திராவும் பைக்கில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்டார்கள் என்ற செய்திதான் வந்தது, 10 நாள் தாமதமாக. அதன் பின் எந்த விவரமும் கிடைக்கவில்லை. வள்ளிப்பாட்டியும் தாத்தாவும் தாங்கள் என்ன பாவம் செய்தோமோ என்று வருந்தி வெந்த நாட்கள். அடுத்து வள்ளிப்பாட்டியின் கணவரின் மரணம்.


ஏனோ ஒரு சிலரின் வாழ்கையில் மட்டும் விதி எனும் அரக்கன் மிகவும் கோரமாக விளையாடுகிறான். பாட்டிக்கு. வேதனையிலிருந்து மீளவே ஒரு சில வருடங்கள் ஆனது. இப்போதும் அதை நினைத்தால் சிறு குழந்தை போல் தேம்பி அழத் தொடங்கிவிடுவார்.


தன்னை விடச் சிறியவர்கள் எல்லாம் கண்ணை மூட அதை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் வேதனையில் வாழ வேண்டியுள்ளதே என்று நினைத்தாலும் தன் மகள் சாரமதி விட்டுச் சென்ற குழந்தைகள் துருவ் மற்றும் கார்த்திகேயனுக்காகத் தான் வாழ்வதை நினைத்துச் சமாதானம் அடைவார். பேரன்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள். பாட்டியும் பேரன்களுமாக சேர்ந்து ஒருவருக்கொருவர் அன்பான பராமரிப்பில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது


இப்போது மகனுடன் சில மாதங்கள் இருந்துவிட்டு வருவதற்குத்தான் இந்தப் பயணம். மகன் வழி இரு பேரன்கள். மூத்தவன் அஸ்வின் மருத்துவன். இரண்டாமவன் பரணிதரன் இசையில் ட்ரினிட்டி காலேஜில் மேற்படிப்பில். பாட்டி என்று பிரித்தானிய உச்சரிப்பில் அழைப்பதே இனிமையாக இருக்கும். பாட்டியிடம் தமிழில் பேச வேண்டும் என்று கொஞ்சம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாட்டியும் ஆங்கிலம் கற்றுக் கொண்டு பேரன்களுக்கு நிகராகப் பேசுவார். அன்பான மருமகள் லலிதா.


பாட்டியின் வீட்டில் நட்சத்திரக் கதைகள் மிகவும் ப்ராபல்யம். பாட்டியின் மூன்று குழந்தைகளும் திருமணத்திற்கு முன் தங்களுக்குள் பேசிக் கொண்டபடி தங்கள் குழந்தைகளுக்கு நட்சத்திரங்களின் பெயரிலோ அதன் அர்த்தத்திலோ பெயர் சூட்ட வேண்டும் என்று. அப்படியே சூட்டவும் செய்தார்கள்.
“மேம் ப்ரேக்ஃபாஸ்ட். வெஜ்?” என்று பின்னாலிருக்கும் பயணியிடம் அப்பெண் கேட்கவும், தற்காலிகமாகப் பூமிக்குச் சென்றிருந்த பாட்டியின் மனம் விமானத்திற்கு வந்தது. பாட்டியிடமும் வெஜ் ப்ரேக்ஃபாஸ்ட்தானே என்று உறுதி செய்து கொடுத்துவிட்டு அப்பணி முடிந்ததும் பாட்டியின் அருகில் வந்து அதிகமாகக் குளிருகிறதோ என்று கேட்டு பாட்டியிடம் இருந்த கம்பளியால் போர்த்தினாள். கண்களில் காலையில் பார்த்த ஃப்ரெஷ்னெஸ் இல்லாமல் சோகம் இருப்பதாகத் தெரிந்ததும் அவரது கையைப் பிடித்துக் கொண்டு என்ன பிரச்சனை என்று கேட்கவும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்கள் அப்பெண்ணின் கோட்டில் குத்தியிருக்கும் அந்தப் பேட்ஜிற்குத் திரும்பியது.


“ஐ ஆம் தாரா”


“ஓ அப்படி என்றால் என் பேத்தி இறக்கலையோ? ஒரு வேளை என் பேத்தியை வேறு ஒரு ரூபத்தில் இறைவன் இந்த விண்ணில் அனுப்பியிருக்கானோ?” பாட்டியின் மனது பரபரக்க


“ஏதாவது பிரச்சனையா”


“நோ!...நோ…நைஸ் நேம். ஐ லைக் இட். இன்ஃபேக்ட்…..” என்று தொடங்கியவர் நிறுத்தியதும் தாரா என்ன என்பது போல் பார்க்கவும் ஒன்றுமில்லை என்று சொல்லி, பெருமூச்சுடன், “ஓகே! யு கேரி ஆன் யுவர் ட்யுட்டி, மை சைல்ட்” என்று தலையை வருடிச் சொல்லவும், தாரா, அவரது கையைப் பிடித்துக் கொண்டு,


“லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்! வி ஆர் ப்ளெஸ்ட்! ஜஸ்ட் அங்க பாருங்க! லவ்லி பேபி! க்யூட் ஸ்மைல்! சரி ஏதாவது சினிமா பார்க்கிறீர்களா” என்று கேட்கவும், சரி எனவும் அப்பெண் போட்டுக் கொடுத்துவிட்டு “ஏதாவது பிரச்சனை என்றால் தயங்காமல் சொல்லுங்கள்.” என்று சொல்லி அன்புடன் வருடிக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.


அவளது வார்த்தைகள் பாட்டியுள் மகிழ்ச்சியாய்ப் பரவிட, படம் கூடப் பார்க்காமல் அந்த நினைவிலேயே உறங்கியும் போனார். லஞ்ச் வந்தது. தாரா அடிக்கடி வந்து பாட்டியைக் கவனித்துக் கொண்டாள். லண்டன்!. விமானம் தரையிறங்கியது. இறங்கும் முன் பாட்டியிடம் தாரா தனது அலைபேசி எண்ணைக் கொடுக்க, பாட்டியும் தாராவிடம் தன் விலாசம், அலைபேசி எண்ணைக் கொடுத்தார். இருவருமே தங்களை ஏதோ ஒன்று பிணைப்பது போல் உணர்ந்தனர்.
“அடுத்த ட்யூட்டி எப்போ”


“நாளை மறு நாள் தான்”


“நாளை ஞாயிறு! வீட்டில் எல்லாரும் இருப்பாங்க. இனிய காலை எங்க வீட்டுல தொடங்கட்டுமே!”


“ஐ வில் ட்ரை. வருவதாக இருந்தால் உங்களை அழைக்கிறேன். நீங்களும் இங்குச் சில மாதங்கள் இருப்பீர்கள் தானே?”


“ஆம்! யு ஆர் ஆல்வேய்ஸ் வெல்கம்”


பாட்டியை அழைத்துச் செல்ல இரண்டாவது பேரன் பரணி வந்திருந்தான். பாட்டி அவனைக் கண்டதும் தான் கண்ட பெண்ணைப் பற்றி ஒன்று விடாமல் சொல்லவும், அவன் சிரித்துக் கொண்டே,


“ஓ பாட்டி! ஒவ்வொரு தடவையும் யாரையாவது பாத்து நட்சத்திரா மாதிரி இருக்கானு சொல்லுற.” என்று கலாய்த்தான். சென்னையிலிருந்து அழைப்பு….”ஹை துருவ், கார்த்தி பாட்டி அரைவ்ட். ஐ ஆம் ட்ரைவிங்க்……பாட்டி இந்தா துருவும், கார்த்தியும்” 


பாட்டி அவர்களிடமும் தாரா புராணம் பாடினார். ஸ்பீக்கரில் இருந்ததால் அவர்களும் பரணியும் சேர்ந்து சிரித்துக் கலாய்த்தனர். பரணியின் அண்ணன் அஸ்வினை நினைத்து பாட்டி வேறு கணக்கும் போட்டார். வீட்டிற்கு வந்ததும் தாராவைப் பற்றி பிரஸ்தாபித்தார்.


“ஹோ அம்மா உனக்கு ரொம்ப பிரமை! அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்றாப்ல யாரையாவது நாம மனசுல நினைச்சுட்டே இருந்தா, நாம பாக்கறவங்க எல்லாம் அப்படியே இருக்காப்ல இருக்கும்…”


“பாட்டி, அப்பா தாராவ கோஸ்ட்னு சொல்றாரு” என்று கலாய்த்தான் அஸ்வின். அவர்களது மதிய உணவு நேரம், பாட்டிக்கு இந்திய நேரப்படி மாலை காஃபி நேரம். பாட்டி ஃப்ளைட்டில் சாப்பிட்டிருந்ததால் காஃபி மட்டும் போதும் என, பாட்டியை ரெஸ்ட் எடுத்துக்கொள்ளச் சொன்னாள் மருமகள் லலிதா. மாலையில் தாராவின் அழைப்பு. மறு நாள் ஞாயிறு காலை தான் வருவதாக. பாட்டிக்கு ஒரே  பரபரப்பு. ஏதோ தன் பேத்தியே வருவது போல் தடபுடலாகச் சமைக்க வேண்டும் என்றார். சென்னையில் இருக்கும் பேரன்களிடமும் சொல்லிச் சந்தோஷப்பட்டார்.


“அத்தை அவ இந்த ஊர்னா சாப்பாடு?….” என்று மருமகள் இழுக்கவும்


“பரவால்ல, நம்ம ஊர் சாப்பாடே செய்வோம். அதிருக்கட்டும். அவ அம்மாவுக்கு வாங்கி வைச்ச அந்த ஸ்டார் ஸ்டட் இருக்கே…..அத” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மருமகள் லலிதா குழம்பினாள்.


“அத்தை என்ன சொன்னீங்க? அவ அம்மாவா? என்ன அத்தை? இவ தாரா! கிஃப்ட் கொடுக்கலாம். ஆனா, நீங்க அவ அம்மானு சொல்றீங்களே!? .அப்புறம் அவளைப் பத்தி ஒன்னுமே தெரியாதே…ஸோ..வரட்டுமே பார்ப்போமே…”


“என்னவோ தெரியலை லலிதா, அவ நம்ம வீட்டுப் பொண்ணு போலவே தோணுது.”


மூத்த மகளின் பேரன்கள் கூட இருப்பதால் அந்த மகளை இழந்ததை விட, சின்ன மகள் குடும்பமே இல்லாததால், ஒரே பேத்தியும் போனதால், இப்படிச் சிலசமயம் நினைத்துக் கொள்கிறார், பாவம். என்று நினைத்துக் கொண்டாள் லலிதா. இரவு மகனிடமும். பேரன்களிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள். அவர்களும் பாவம் அவர் மகிழ்வுடன் இருக்கட்டும் என்று விட்டுவிட்டனர். மருத்துவப் பேரன் பாட்டியின் பிபி, சுகர் எல்லாம் செக் பண்ணினான்.


“கூல்! ஆல் பெர்ஃபெக்ட்” என்றான்


“எல்லாம் பெர்ஃபெக்ட்டாதான் இருக்கும். அதுவும் நாளைக்குத் தாரா வராளே!” என்று மகன் மூர்த்தி பாட்டியைச் சீண்டினான். என்றாலும் எல்லோருக்குமே தாராவைப் பார்க்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்தது.


மறுநாள் ஞாயிறு காலை தாராவை வரவேற்க வீடே அலங்காரத்துடன் ஜொலித்தது. பாட்டியோ உற்சாகத்துடன் சமையலறையில் புகுந்தார். டிப்பிக்கல், இந்திய பாரம்பரிய கல்யாணச் சாப்பாடு தயாரானது. வாழை இலையில்தான் சாப்பாடு என்று அதுவும் வாங்கியாயிற்று. தாரா மட்டும் தான் வர வேண்டும்.


தாரா வந்தாள். 

அழைப்பு மணி ஒலிக்கவும் அனைவரும் வாயிலில் வந்திட வரவேற்பே தடபுடலாக இருந்தது. தெய்வீக உணர்வுடனான கலையம்சம் நிறைந்த வீட்டைப் பார்த்ததும், இதுவரை உணர்ந்திராத ஒரு வித்தியாசமான உணர்வு, அனுபவம் தன்னுள் பரவுவதை உணர்ந்தாள். மூர்த்திக்கும் கூட, தன் தங்கை வருணப்பிரியா அந்த வயதில் பாய்கட், ஜீன்ஸ், பொட்டில்லாத நெற்றி என்றிருந்திருந்தால் எப்படி இருந்திருப்பாளோ அப்படியே தாரா இருப்பதைப் போல் தோன்றிடத் தன் அம்மா பரபரத்ததில் வியப்பில்லை என்றே நினைத்தான். பாட்டி தாராவின் உச்சி முகர்ந்து, தாராவை முதலில் பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்.


“அம்மா ஒரு நிமிஷம்” என்று சொல்லிய மூர்த்தி, “தாரா! பூஜை அறை.. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே? என்று கேட்டிட, பாட்டிக்கு அப்போதுதான் உறைத்தது. தான் இதுவரை தன் பேத்தியாகவே நினைத்து நடந்து கொண்டது. “ஸாரி” என்றார்.


“நோ ப்ராப்ளம். இதுல என்ன இருக்கு? எல்லாக் கடவுளும் ஒன்னுதானே!” என்று சொல்லி பூஜை அறைக்குள் சென்றவளுக்குச் சட்டென்று புல்லரித்தது. சிறிய வயதில் ஏதோ ஒரு கோயிலுக்குச் சென்ற நினைவு வந்தது. சுற்றிக் கண்ணைச் சுழல விட்டதில் எதிர்ப்புறம், சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களில் ஒன்று ஈர்த்தது. தாரா பக்கத்தில் போய்ப் பார்க்கவும், பாட்டி அதைக் காட்டி,


“என் ரெண்டாவது பொண்ணு, மாப்பிள்ளை, அவங்க மகள், இது என் மூத்த மகள், மாப்பிள்ளை, இது என் ஹஸ்பன்ட். எல்லாரும் விண்ணில்” என்று மேலே காட்டினார். புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்குக் கொஞ்சம் குழப்பம். இது உண்மையாக இருக்குமா? மனம் பரபரத்தது.


“என்னாச்சு தாரா அப்படியே நின்னுட்ட?”


“இது…இது உங்க மகளா?” என்று வியப்புடன் கேட்டுத் திரும்பவும், பாட்டி அதற்குள் சமையலறைக்குச் சென்றிருந்தார். பாயஸமும், வடையும் பூஜை அறைக்கு வந்தன.


“ஆமாம்…தாரா! இதோ இந்தக் குழந்தைய நினைச்சுத்தான் உன்னை மாதிரியான சில பொண்ணுங்களை எல்லாம் தன் பேத்தி மாதிரினு சொல்லுவாங்க அம்மா. ஆனா இதுவரை யாரும் வீட்டுக்கு வந்ததில்லை.…” என்றான் மூர்த்தி.


“ஐ ஸீ!.” சாமி அறையிலிருந்து ஹாலுக்கு வந்தாள். “அதுல இருக்கறவங்க என் பேரன்ட்ஸ் போல இருக்கு. வேக் மெமொரிஸ்… அவங்க எங்க இருந்தாங்க”


“உன் பேரன்ட்ஸ்? ஆர் யு ஷ்யூர்? அவங்க அஸ்ஸாம்ல” என்று சொல்லித் தன் தங்கையின் கதையைச் சுருக்கமாகச் சொல்லி அதன் பின் வேறு விவரங்கள் இல்லை என்றான்.


“ஓ! இஸ் இட்? ஓ! காட்! அம்மா ப்ரியா, அப்பா விக்கி! தட் ஆக்ஸிடென்ட்… என் கதை போல இருக்கு! ஐ திங்க் தட் சைல்ட் மஸ்ட் பி..யா…ஐ ஆம் தட் சைல்ட் ”


“இஸ் இட்? ஆர் யு ஷ்யுர்? .எப்படி தாரா? விக்னேஷும் குழந்தையும் இறந்துட்டதாத்தானே எங்களுக்குத் தகவல் வந்துச்சு. கடவுளே இது நிஜமா? என்று அம்மாவிடம் சொல்ல பரபரக்க, பாட்டியும், லலிதாவும், பூஜை அறையிலிருந்து வந்து, “சப்பிடலாம்” என்று சொல்ல…


“அம்மா……நீ நினைச்சது உண்மையாயிடுச்சும்மா, தாரா தான் நட்சத்திரா”


பாட்டி அப்படியே உறைந்து நின்றார்! நெஞ்சே அடைத்துவிடும் போல் இருந்தது! பேச்சே இல்லை. அப்படியே பேத்தியைக் கட்டிக் கொண்டுத் தேம்பித் தேம்பி அழுதார்! பேரன்கள் இப்படியும் நடக்குமா என்ற வியப்பில் ஆழ்ந்து வாயடைத்து நின்றிருந்தனர்.


“எப்படித் தாரா? என் நட்சத்திராவா நீ!? கடவுளே……இது…..உண்மைதானா….?” அதற்கு மேல் பாட்டியால் பேச இயலவில்லை.


“வேக் மெமொரிஸ்… நானும் அப்பாவும் பைக்ல போனது. நான் கீழ விழுந்தேன். அப்புறம் என்னாச்சு தெரில. என்னை வளர்த்த என் அம்மா அப்பா, இங்கிலிஷ் கப்பிள். அவங்க எனக்குப் புரியற வயசு வந்தப்ப சொன்னது…. ஆக்ஸிடென்ட்ல ஆன் த ஸ்பாட்ல அப்பா இறந்துட்டாராம். 


நான் ரோட்லருந்து உருண்டு கீழ மரத்தடில விழுந்திருந்திருக்கேன். ஸிட்டிலருந்து ரொம்ப வெளிலயாம். ஆக்ஸிடென்ட் ஸ்பாட்டுக்கு லேட்டா வந்த போலீஸுக்கு நான் கண்ணுல படலை. அப்புறம் அங்க ஒரு வயசான ட்ரைபல் ஷெப்பர்ட் என்னைப் பார்த்துட்டு, மூச்சு இருக்கறதப் பாத்துட்டு எடுத்துட்டுப் போய் ஹெர்பல் மெடிசின் கொடுத்துக் காப்பாத்திருக்கார்.


6 மாசம் அங்கதான் இருந்திருக்கேன். அவருக்கு நான் பேசினது புரியலை. ஆனா மா, பா ஸவுண்ட் நான் என் பேரன்ட்ஸ் சொல்லி அழுதுருக்கேன்னு அவருக்குப் புரிஞ்சுருக்கு. அந்தத் தாத்தா எனக்கு வானத்தைக் காட்டி, மா, பா, தாரா…தாரா நு சொல்லிக் காட்டுவார். அது எனக்கு நினைவு இருக்கு. அங்க ஆடு நிறைய இருக்கும். சுத்தி மரம், மலை, காடுனு இருக்கும்.


அப்போ அஸ்ஸாம்ல ட்ரைபல் கான்ஃபிளிக்ட்ஸ் ரொம்பத் தீவிரமா இருந்துச்சாம். என்னைக் காப்பாத்தின அந்த ட்ரைபல் தாத்தா போலீஸ்கிட்ட போகலையாம். எனக்கு ஏதாவது ஆபத்து வந்திரும்னு பயந்து என்னைத் தனியாவே விடமாட்டாராம். அவர் ச்ர்ச்சுக்கு என்னையும் கூட்டிட்டுப் போனப்ப அங்க வந்திருந்த இங்க்ளிஷ் கப்பிள் என்கிட்ட அன்பா பேசிட்டிருக்கறதப் பார்த்து, குழந்தைய பாத்துக்க முடியலை, கூட்டிட்டுப் போக முடியுமானு கேட்க, அவங்களும் கொஞ்சம் ஏஜ்ட் கப்பிள், குழந்தை இல்லாததால சரினு சொல்லிட்டாங்களாம்.


ஆனா முதல்ல என்னை ரொம்ப சமாதானப்படுத்த வேண்டியிருந்துச்சாம். நான் 4 வயசுல இருந்ததால என்னைத் தத்தெடுக்க ரொம்பப் பாடுபட்டு அப்புறம் மிஷினரி மூலமா கஷ்டப்பட்டு ஃபார்மாலிட்டிஸ் கம்ப்ளீட் பண்ணிக் கூட்டிட்டு வந்தாங்களாம். ஆனா அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க. அன்பானவங்க. இங்க வந்து எனக்கு கவுன்சலிங்க் எல்லாம் கொடுத்து, அன்புனாலயும், பிரார்த்தனையினாலயும் நான் அந்த அதிர்ச்சியிலருந்து இருந்து வெளிய வந்து நல்லா ஆனேனாம். 


இப்ப அவங்களும் உயிரோட இல்லை. யாருமே இல்லையேனு நினைச்சு சில சமயம் வருத்தமா இருக்கும். எனக்கு என் பேரன்ட்ஸ் முகம் நினைவு இருக்கு. க்ரான்ட்மாவ ஏர்போர்ட்ல பார்த்ததும் என் அம்மா போல இருக்காங்களோனு தோணிச்சு. மனசுக்குள்ள ஏதோ ஒன்னு அவங்க என்னைக் கூப்பிட்டப்ப வரத் தோணிச்சு. இங்க அந்த ஃபோட்டோ பார்த்ததும்…… அதான் உங்ககிட்ட விவரங்கள் கேட்டேன்….’


“மிராக்கிள்” என்றான் மருத்துவப் பேரன் அஸ்வின். எல்லோருக்குமே அப்படித்தான் தோன்றியது.


“இனி என்னை மேம்னு கூப்பிடாதமா. பாட்டினோ, அம்மானோ கூப்பிடேன். எனக்கு நீ நட்சத்திரா. தாரா, நட்சத்திரா ரெண்டும் ஒன்னுதான். பாரு எப்படி அதுவும் அமைஞ்சுசருச்சு! உனக்கு ரெண்டு அண்ணாக்கள் இருக்காங்க சென்னைல. ஈவ்னிங்க் காட்டறேன். இதோ இவங்க உனக்கு மாமா, அத்தை, கஸின்ஸ் என்று அறிமுகப்படுத்தினார். உறவு சொல்லிக் கூப்பிடறியாமா….ப்ளீஸ்”


எல்லோரும் பாட்டியை ஆமோதித்தனர். அன்றைய தினத்தைக் கொண்டாட நினைத்தனர். தாராவும் தன் உறவுகள் கிடைத்த மிரக்கிளை நினைத்து மகிழ்ச்சியில் திளைத்தாள். வித்தியாசமான சாப்பாடு, கல்சர், பரணி கீபோர்டில் வாசித்த கதனகுதூகலம் அனைத்தையும் ரசித்தாள்! குடும்பமே குதூகலித்தது!


“சரி நீ இனி எங்களோடு இருக்கியா. ப்ளீஸ். இனிமேலும் தனியா இருக்க வேண்டாமே. குட் யு கன்ஸிடர் இட்?” - மூர்த்தி


“ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு. ம்ம்ம் பட், நான் வளர்ந்த கல்சர், மதம் டிஃப்ரன்ட். யோஸிக்கணும். கொஞ்சம் டைம் வேணும். அதுக்கு முன்னாடி, என்னை வளர்த்த பேரன்ட்ஸோட க்ளோஸ் ரிலேட்டிவ்ஸ் எனக்கும் ரிலேட்டிவ்ஸ். அவங்க அன்புக்குக் கடமைப்பட்டிருக்கேன் அவங்ககிட்ட எல்லாம் சொல்லி உங்களை அறிமுகப்படுத்தி அப்புறம் இங்க வரதைப் பத்தி யோசிக்கலாம் இல்லையா?”


“நிச்சயமா….தாரா. வாட் யு ஸே இஸ் 100% ரைட். ஒரு கெட்டுகெதர் அரேஞ்ச் பண்ணி எல்லாரையும் வரவழைச்சு சொன்னா நல்லாருக்கும் இல்லையா?.ம்ம் அன்ட், வி கேன் ஈஸிலி அட்ஜஸ்ட் வித் யு தாரா என்று இரு பேரன்களும் சொல்ல,


“ஃபர்ஸ்ட் ஒன்.. இட்ஸ் எ குட் ஐடியா!......செகன்ட் ஒன்…..ம்ம் புரிகிறது! கிவ் மி சம் டைம்..” தாராவுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது இவர்களின் அன்பும். வளர்த்த அம்மா அப்பா சொல்லும் “லைஃப் இஸ் ப்ளிஸ்ஃபுல்” வார்த்தைகளை அவள் உதடுகள் உச்சரித்தன.


“நட்சத்திரா! நான் ஒன்னு கேக்கட்டா? ப்ளீஸ் தப்பா எடுத்துக்காத. நீ இந்த ரிஸ்க் நிறைஞ்ச வேலைதான் செய்யணுமா? வேற வேலை தேடிக்க முடியாதா?” என்று பாட்டி தன் ஆதங்கத்தை வெளியிட்டார்.


“எனக்குச் சின்ன வயசு நினைவுகள் அப்பப்ப வரும். ஒரு பாட்டி….தட் மஸ்ட் பி யு?! எனக்கு வானத்தைக் காட்டி என் அம்மா ஸ்டார்னு சொன்னது, அப்புறம் அந்த தாத்தா வானத்தைக் காட்டிச் சொன்னது, என்னை வளர்த்த அம்மா அப்பா சொன்னது எல்லாம் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. என் பேரன்ட்ஸ் நட்சத்திரங்களா, மேகங்களோட இருக்கறதா நினைச்சு தேடுவேன். சில சமயம் அழுகை வரும். அப்ப ஏதாவது விமானம் பறந்தா. அதைப் பார்த்ததும், பைலட் ஆனா நட்சத்திரங்கள் மேல நான் மோதிடுவேனோ?, மேகங்களைத் துளைச்சுட்டு போகணுமேனு எல்லாம் சைல்டிஷா நினைச்சதுண்டு. ஆனா பறந்துட்டே இருந்தா என் அம்மா அப்பாவையும் பார்க்கலாமோனு அப்படி நினைச்சதுல வந்த கனவுதான் இந்த வேலை. பறக்கும் போது கிட்டத்துல தெரியற மேகக் கூட்டம் கடவுளோட உலகம்னு தோனும். முன்னாடி அவங்க முகம் தெரியுதானும், இப்ப என்னை வளர்த்த பேரன்ட்ஸும் தெரியறாங்களானும் பார்த்து என் உலகில் இருப்பேன்.”


“இதுவே மறு ஜென்மம் போல இருக்கு. உன்னை இனியும் இழந்துட மனசில்ல ஒரு பயம் அதனாலதான் கேட்டேன்மா. உன் ஆசையைக், கனவைக் கலைக்க விரும்பலை. உன்னை வளர்த்த பேரன்ட்ஸ் ஃபோட்டோவும் ரெண்டு தர முடியுமா? ஒன்னு இங்க சாமி ரூம்ல வைக்கணும். இன்னொன்னு சென்னை வீட்டுல சாமி ரூம்ல.” என்றார் வள்ளிப்பாட்டி.


“ஓ ஷ்யூர்! பாட்டி தரேன்!....டோன்ட் பி பானிக்! எனக்கு ஒன்னும் ஆகாது! ஐ அம் அல்வேய்ஸ் யுவர் ஸ்டார்!” என்று பாட்டியை அணைத்துக் கொண்டாள் தாரா!


77 கருத்துகள்:

 1. படிக்க தொடங்கிட்டேன் ஹி.. ஹி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதையை சரியாக கொண்டு வந்து இணைத்தீர்கள் விமான பணிப்பெண் வேலை செய்ய ஆசைப்பட்ட காரணம் அருமை.

   தாரா ஸாரி நட்சத்திராவின் திருமணம் வள்ளிப்பாட்டியின் பேரனோடுதானே...

   நீக்கு
  2. கில்லர்ஜி மிக்க நன்றி.....ஸ்ரீராமுக்குக் கதையை அனுப்பி (இது இரண்டாவதுகாப்பி முதல் காப்பியில் நிறைய கட் செய்து....) இன்னும் ட்ரிம் செய்யணுமா என்று வாட்சப்பில் கேட்டு பாருங்கள் அப்புறம் தட்டிக் கொட்ட்டி அனுப்பறேன் என்று....அனுப்பியதும் ஸ்ரீராம் பாஸிட்டிவாகவே சொல்லியிருந்தார்....பப்ளிஷ் பண்ணுகிறேன் என்றும் சொல்லியதால் அப்புரம் கட்டிங்க் எதுவும் செய்யவில்லை..

   இதே கருத்துகளை அவரும் சொல்லியிருந்தார். கேள்வியும்....

   முதல் காப்பியில் மகனிடம் பாட்டி தன் கணக்கைச் சொல்லுவதாகவும் அதற்கு மகன், நீ அந்தக்காலம்...இக்காலப் பசங்கள் இவங்க மனசுல என்ன இருக்குனு கேக்காம ...அப்புறம் தாரா வேறு கல்சரில் வளர்ந்தவள்...முதலில் நம்முடன் பழகட்டும் அப்புறம் அதை எல்லாம் பார்க்கலாம் என்று சொல்லுவதாக எழுதியிருந்தேன் அதை கட் செய்துவிட்டேன்....

   அப்புறம் பாட்டி அந்த ஸ்டட்டை கொடுபப்தாகவும் எழுதியிருந்தென் அதையும் கட் செய்டுவிட்டேன்...இப்படி நிறைய...

   மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு...

   கீதா

   நீக்கு
  3. கில்லர்ஜி உங்கள் பதிவு ஒன்றிற்கு கோமதிக்கா நட்சத்திரக் கதை ஒன்றைச் சொல்லியிருந்தார் அதற்கு நான் கொடுத்த பதிலும் நினைவிருக்கு இல்லையா..

   அப்போதே இந்தக் கதை அல்மோஸ்ட் முடித்துவிட்டேன்...இதைப் பற்றிச் சொல்ல அடித்து அப்புறம் வேண்டாம் கதை பற்றி அங்கு வேண்டாம் என்று விட்டுவிட்டேன்...

   அதே நட்சத்திரக் கதைகள் நீங்கள் சொல்லியிருந்தது போல் உல்டா செய்து என் மகனுக்கு...அவன் அடுத்த தலைமுறையாச்சே....

   கீதா

   நீக்கு
 2. வாவ் !! சூப்பர்ப் கீதா ..மனிதர்களின் மன உணர்வுகளை அழகாய் ஓவியம் தீட்ட தெரிந்தவர் நீங்க அதனால் தான் கதை சரளமாக அழகாய் நகர்கிறது ..ஒரு முழு திரைப்படத்தை பார்த்த உணர்வு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றிஏஞ்சல் கருத்திற்கு.....இன்னும் சில உணர்வுகள் வசனங்கள் இருந்தன...எல்லாம் எடுத்துவிட்டேன் நீளம் கருதி....

   வாவ் உங்கள் அவதார் சூப்பர்!! ஆம் நீங்கள் பேப்பர் க்ராஃப்ட்ஸ் - கிராஃப்ட்ஸ் (எல்லா கலையுமே) ஏஞ்சல் தான்!!!! இல்லை இது உணர்வுப் பெருக்கினால் அல்ல மனதிலிருந்து.....(அஃப்கோர்ஸ் இதுவும் ஒர் உணர்வுதானே!!!!!!!!!!)

   தாரா வின் உணர்வுகள் அந்த மேகம், ஸ்டார் எல்லாம் கீதாவின் உணர்வுகள்...கீதா இன்னும் அவளது நெருங்கிய உறவுகளைத் தேடுகிறாள் அதில்...அதைப் பற்றி கீழே சொல்லுகிறேன்...

   மீண்டும் நன்றி...

   நீக்கு
 3. யப்பா இவ்ளோவு பெரிய பதிவை அப்பக்க வரேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மதுரை...ஸாரி...நானும் எவ்வளவோ ட்ரிம் பண்ண முயற்சி செய்தேன்....ஓரளவிற்கு மேல் மனம் ஏற்கவில்லை...அதனால்....அப்புறம் ஸ்ரீராமும் பாஸிட்டிவாகச் சொன்னதால்....

   மிக்க நன்றி அப்புறமா வாங்க கருத்து சொல்ல..

   கீதா

   நீக்கு
 4. அடடா இங்கேயும் ஒரு பாட்டி... கொடுத்த அட் க்கு ஏற்ப கதையை அதுக்குள்ளயே வைத்து நகர்த்தியிருக்கிறீங்க கீதா, சூப்பரா இருக்கு கதை... எனக்கு கருவே புரியுதில்லை.. அதனால எக் கற்பனையும் இன்னும் எழவில்லை:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. http://www.hindustantimes.com/bollywood/british-airways-ad-s-viral-response-is-fuelled-by-love/story-rs5fh4PKmQWOaDTIxOwxNP.html

   அதிரா இந்தச் சுட்டியைப் போய் பாருங்கள்......இதை உங்களுக்குக் கொடு

   நீக்கு
  2. அதிரா இந்தச் சுட்டியைப் போய் பாருங்க அதில் நல்ல விளக்கமாக இருக்கும்...நான் அந்த விளம்பரம் இங்கு வந்ததும் எனக்கு உடனேமனதில் வந்தவர்கள் நம் வல்லிம்மாவும், காமாட்சி அம்மாவும் தான். அப்புறம் கதை மனதில் தோன்றியது என் பாட்டி தாத்தா சொன்ன நட்சத்திரக் கதைகள்....அப்படி விரிந்ததுதான் இது...அந்த சுட்டியைப் போய்ப் பார்த்தால் உங்களுக்கும் கற்பனை எழும்..எழுதுங்கள்..விளம்பரம் ஓர் உண்மைக் கதையின் அடிப்படையில் எடுக்கபப்ட்டது என்று வருகிறது. அந்தப் பெண் பெயர் ஹெலினா...என்றும் வாசித்த நினைவு...

   மிக்க நன்றி அதிரா..

   கீதா

   நீக்கு
 5. //தன்னை விடச் சிறியவர்கள் எல்லாம் கண்ணை மூட அதை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் வேதனையில் வாழ வேண்டியுள்ளதே/// இக்காலத்தில் பலரின் புலம்பல் இதுவாகத்தான் இருக்கிறது:(...

  கதை மிக நன்றாக நகர்ந்திருக்கு கீதா, இம்முறை முடிந்தவரை கதையைச் சோட்டாக்கி இருக்கிறீங்க என்பது புரியுது...

  கடசிப் பந்தி கண் கலங்க வைத்து விட்டது... நட்சத்திராவின் உரையாடலில்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அதிரா....யெஸ் முடிந்த வரை ஷார்ட்டாகி இருக்கேன்...சில வசாங்களைக் கூடச் சேர்த்துவிட்டேன்..அதாவது தனித் தனியாக எழுதியிருந்தேன் லாஜிக் அண்ட் யதார்த்தம் வேண்டி...

   உதாரணத்திற்கு //“நிச்சயமா….தாரா. வாட் யு ஸே இஸ் 100% ரைட். ஒரு கெட்டுகெதர் அரேஞ்ச் பண்ணி எல்லாரையும் வரவழைச்சு சொன்னா நல்லாருக்கும் இல்லையா?.ம்ம் அன்ட், வி கேன் ஈஸிலி அட்ஜஸ்ட் வித் யு தாரா என்று இரு பேரன்களும் சொல்ல,


   “ஃபர்ஸ்ட் ஒன்.. இட்ஸ் எ குட் ஐடியா!......செகன்ட் ஒன்…..ம்ம் புரிகிறது! கிவ் மி சம் டைம்..” தாராவுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது இவர்களின் அன்பும். வளர்த்த அம்மா அப்பா சொல்லும் “லைஃப் இஸ் ப்ளிஸ்ஃபுல்” வார்த்தைகளை அவள் உதடுகள் உச்சரித்தன.//

   இது எல்லாம் ஒவ்வொன்றின்ற்கும் தாரா தனித்தனியயகச் சொல்வது போல் அதன் பின்னர் சேர்த்துவிட்டேன்....இப்படிச் சில...

   சில சமயம் என்னால் அதிகம் ட்ரிம் செய்ய முடியலை என்றால் வெளியிட வேண்டுமா....என்று தோன்றி அப்படியே சில கதைகள் உள்ளன....

   மிக்க நன்றி அதிரா...

   கீதா

   நீக்கு
 6. ஒரு நிலைக்கு மேல் படிக்க இயல வில்லை..

  கண்கள் நனைகின்றன..ஏனென்று
  ஸ்ரீராம் அவர்களுக்குத் தெரியும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குட்மார்னிங் துரை செல்வராஜூ ஸார்... பப்ஷளிஷ் செய்ததில் ஏதும் குறையா?

   நீக்கு
  2. மிக்க நன்றி துரை செல்வராஜு சகோ! ஓ அப்படியா....

   ஸ்ரீராம் கேட்டிருப்பது போல் எனதும்....

   மிக்க நன்றி சகோ

   கீதா

   நீக்கு
  3. துரை சகோ ஸாரி...உங்கள் மனம் வருந்தும்படி ஆகிவிட்டதோ...?

   கீதா

   நீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம்/ கீதா...

   ஒரு நிலைக்கு மேல் படிக்க இயலவில்லை என்றால் -
   மனம் நெகிழ்ந்து விட்டது..

   சுற்றம் சொந்தம் என்றெல்லாம் ஆசைப்பட்டுக் கொண்டிருந்த என்மனம் -
   விதியின் வலிமையால் தனித்துக் கிடந்து தவித்துக் கொண்டிருக்கின்றது...

   திரைப்படங்களில் கூட நெகிழ்ச்சியான உரையாடல்கள் என்றால் மனம் கசிந்து விடும்..

   கௌதம் ஜி அவர்கள் கொடுத்த காட்சிகளுக்கு
   இப்படித்தான் கட்டமைப்பு செய்ய வேண்டும்...

   எனது முந்தைய கதைகளான - பாக்கியம், அப்பாவின் மகள் -
   இதிலெல்லாம் உரையாடல்களை எழுதும்போது என் மனம் பட்டபாடு எனக்குத் தான் தெரியும்..

   மனம் வருந்தும்படி ஒன்றும் இல்லை. நெகிழ்ந்து விட்டது..
   மீண்டும் சமன் செய்வது பெரும்பாடாக இருக்கின்றது..

   இதற்காகத்தான் இந்தத் தடவை நான் களத்தில் இறங்கவில்லை..

   மற்றபடி எந்தக் குறையுமில்லை.. வாழ்க நலம்..

   நீக்கு
  5. துரை சகோ உங்கள் உணர்வுகள் புரிகிறது...எனக்கும் இந்த விளம்பரம் பார்த்ததும் மனது நெகிழ்ந்து, கண்கள் என்னையும் அறியாமல் கசிந்துவிட்டது...அப்போது கதை தோன்றிய போது என் பாட்டி, அத்தைகள்.... அவர்களுக்கு நான் ரொம்ப செல்லம்...அது போல என் அம்மாவின் மதினிகட்கும்... என் மாமிகள் அனைவருக்கும் இப்போதும் ரொம்ப செல்லம்...என் அழைப்பு இல்லை என்றால் உடன் கூப்பிட்டு என்ன ஆச்க என்று உரிமையுடன் கேட்டு....அன்பு செலுத்துபவர்கள்..வீட்டிற்கு அழைத்துவிடுவார்கள்...

   ஆம் சகோ எனக்கும் உறவுகளுடன் சேர்ந்து இருப்பது ரொம்ப பிடிக்கும்....கொஞ்சம் உணர்ச்சிவசப்படக் கூடியவள் தான்...

   இதற்கும், இங்கு கிடைத்திருக்கும் அன்பு உள்ளங்களை நினைத்தும் பல முறை இறைவனுக்கு நன்றி சொல்லுவேன்

   மிக்க நன்றி சகோ....

   கீதா

   நீக்கு
 7. தன்னை விடச் சிறியவர்கள் எல்லாம் கண்ணை மூட அதை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் வேதனையில் வாழ வேண்டியுள்ளதே என்று நினைத்தாலும்//// அன்பு கீதா,
  எத்தனை அழகாகக் கதை நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள். மிக அருமை.
  மகள்களின், மகனின் என்று எல்லாப் பெயர்களும்
  அசத்துகின்றன. வளமான கற்பனை.
  அருமைத் தமிழ் . வாழ்க வளமுடன் அம்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா இந்த வசனம் என் அப்பாவின் அம்மா-என் பாட்டி சொல்லுவது. என் அத்தைகள் இருவரும் ப்ளட்கேன்ஸரில் போய்விட்டார்கள்.அ துவும் என் அப்பா மூத்தவர். அடுத்து இரு அத்தைகள். இடையில் பிறந்து போனவர்கள் சிலர்.... பெரிய அத்தை நான் 5 வயதில் இருந்தப்ப இறந்துவிட்டார். அப்போது நான் இலங்கையில். என் பாட்டியும் தாத்தாவும் என் அப்பா, என் அம்மா மட்டும் இந்தியா வந்தார்கள்.... நான் சிறிய அத்தையின் கவனிப்பில். அம்மாவின் அண்ணாதான் அத்தையின் கணவர். பெண் கொடுத்து பெண் எடுப்பது என்று...நான் என் இரு அத்தைகளுக்கும் டார்லிங்க்! அக்குடும்பத்திற்கு முதல் குழந்தை என்பதால்...அப்போ என் பாட்டி வானைக் காட்டி அங்குதான் அத்தை இருக்கிறார் என்று என்னைச் சமாதானப்படுத்திச் சென்றதால்...நான் வானை நோக்கி மேகங்களில் அத்தை பறக்கிறாரா என்று தேடுவேன்...அப்புறம் சின்ன அத்தையும் ப்ளட் கேன்ஸரில் இறந்துவிட்டார். நான் அவர் குழந்தைகளுடன் நானும் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தேன்....அப்போது நான் திருமணமாகி இருந்தாலும் அவர் இறந்ததும் வானை நோக்கி அவர் முகத்தைத் தெடுவேன்..தாத்தா,.மாப்பிளைகளும் , என் அம்மா என்று எல்லோரும் இறந்துவிட (50 வயதிற்குள்....என் பாட்டியும் அப்பாவும் தான் பாட்டி 92 வயதுவரை என்னுடன் தான் இருந்தார். அப்போது அடிக்கடி அவர் சொல்லுவார்....இதை..

   பெயர்களும் என் தங்கை பெண் அவள் குழந்தைகளுக்கு நட்சத்திரப் பெயர்கள் என்று (எங்கள் வீட்டில் என் தாத்தா பாட்டி சொன்ன நட்சத்திரக் கதைகள் ப்ராபல்யம்) துருவ், தாரா என்று சூட்டியுள்ளாள். அப்புறம் ஸ்ருதி, ஸ்வாதி, ஸ்ரீதேஷ் என்றும் பெயர்கள்....உண்டு

   மிக்க நன்றி வல்லிம்மா...உங்களின் கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 8. நேற்று ஸ்ரீராம் பப்ளிஷ் பண்ணியாச்சு என்று மெஸேஜ் கொடுத்தும் கணினி படுத்துவிட்டதால் பார்க்க முடியலை. இன்று காலை மொபைலில் பார்த்தேன். பதில் கொடுக்க கணினி எழ படுத்திவிட்டது. நல்லகாலம் இப்போது மெதுவாக வந்துவிட்டது. கொஞ்சம் மெமரி ப்ராப்ளம் இருக்கு கணினிக்கு..ஹா ஹா ஹா

  ஒரு சில தளங்கள் திறந்தால் உடன் கணினி சோர்ந்து போகிறது...ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்து வராமல் இப்படி...பழுது பார்க்கச் சொல்லியாச்சு...பார்ப்போம்....

  கீதா

  பதிலளிநீக்கு
 9. ஏஞ்சல் அண்ட் அதிரா,

  நான் அதிகம் விமானத்தில் பறந்ததில்லை. ஒரு சில முறைதான். ஒரு தடவை தவிர மற்றது தனியாக... அப்போது நான் போர்டிங்க் பாஸ் அவர்கள் தரும் போது என்ன சீட் விண்டோ ஆர் எய்சில் என்று கேட்டால் விண்டோ என்று சொல்லிடுவேன்....எனக்கு ரொம்பப் பிடிக்கும் மேகக் கூட்டாம் பார்த்துக் கொண்டே வருவதில்...வாவ்!! அது என்ன அழகு...படங்களில் வரும் தேவலோகம் போல் தோன்றும்....அப்போதும் இந்த நினைவுகள் வரும்...அத்தைகள், என் அம்மா, தாத்தா அதில் தெரிகிறார்களா என்று குழந்தைத் தனமாகத் தேடுவேன்...ரொம்ப ரசிப்பென். அது போல் கீழே பூமி சில சமயம் தெரியும்...கடல் பகுதி என்றால் கடல் தெரியும் பாருங்கள் வாவ்!!! ரொம்ப ரசிப்பேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ, எந்த ஏர்லைன்ஸில் வின்டோ சீட் வேணுமானு கேட்டுக் கொடுக்கிறாங்க? :) நமக்கெல்லாம் அப்படி யாரும் கேட்கிறதே இல்லை. இந்தப்பக்கம் இரண்டு பேர், அந்தப் பக்கம் இரண்டு பேர்னு உட்கார்ந்திருக்க நட்ட நடுவே தான் கிடைக்கும். :)

   நீக்கு
  2. நான் அனேகமாக எப்போதும் விண்டோ சீட்டில்தான் பயணிக்கிறேன். சில சமயம் அப்படி Book ஆகலைனா, Check in சமயத்தில் கேட்டுவாங்குவேன். இப்போதெல்லாம், அவங்களாகவே கேட்கமாட்டாங்க. ஏன்னா, அவங்க சீட் அலகேட் செய்து திரும்பவும் போர்டிங் பாஸ் பிரிண்ட் பண்ணணும்கறதுனால.

   இப்போ புதுசா, ஏர்லைன்ஸ்ல, தோசை மாதிரி, ஆர்டினரி எகானமி, ப்ரீமியம் எகானமி, Preferred Rows னுலாம் வச்சிருக்காங்க. Emergency Row, First row இதெல்லாம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை.

   நீக்கு
  3. யெஸ் அக்கா இதுவரை பயணித்த போது எல்லாம் விண்டோ தான். நெல்லை சொல்லுவது போலதான். சமீபத்தியதா நெல்லை இது...ஓ!! நான் இந்த வருடம் ஏப்ரல் மாதம் போக வேண்டியதானது டொமெஸ்டிக் தான். அப்போது கூட போர்டிங்க் பாஸ் கொடுக்கும் போது கேட்டாங்க நெல்லை. அப்புறம் வரும் போது ஆன்லைன் செக்கிங்க் போர்டிங்க் வாங்கினப்புறமும் கிடைச்சுருச்சு.... இப்போ மாறிடிச்சு போல...

   கீதா

   நீக்கு
  4. உண்மைதான் கீதா, பிளேன் முகிலின் மேல் ஏறியபின்.. கீழே பஞ்சு மெத்தைபோல தெரியும் முகில் கூட்டம்.. அதைப் பார்த்ததும் மனம் பட்டாம் பூச்சிபோலாகிடும்.

   நாங்கள் எப்பவும் ஒன்லைனிலேயே ரிக்கெட் புக் பண்ணுவோம்.. அப்பவே கொஞ்சம் எக்ஸ்டா மணி கொடுத்தால், சீட் நம்பரையும் நம் விருப்பத்துக்கேற்ப செலக்ட் பண்ணிடுவோம்.. இல்லை எனில் செக் இன் பண்ணும்போதுதான் கவுண்டரில் கேட்டு வாங்கோணும்.. அந்நேரம் நல்ல சீட் களும் போய் விடும்.. சிலசமயம் எல்லோருக்கும் ஒரே வரிசையிலும் சீட் கிடைக்காது.

   நீக்கு
  5. உள்நாட்டுப் பயணத்தில் கூடக் கேட்ட சீட் கொடுப்பதில்லை! :) இது எங்கள் அனுபவம். நாங்க ரொம்பவே பின்னால் போனால் சிரமமாக இருக்கு என்பதால் முன் பக்கமாக சீட் ஒதுக்கச் சொல்லிக் கேட்போம். ம்ஹூம்! கொடுக்கவே மாட்டாங்க! அநேகமா ஜி30, 31 அல்லது எஃப் 40, 41 அப்படினு வரும்! சின்ன வயசுக்காரங்களுக்கு எல்லாம் முன்னாடி கொடுத்திருப்பாங்க! :) நாங்க காபின் லகேஜைத் தூக்கிட்டுப் போயிட்டே இருப்போம்! இறங்கும்போதும் அதே! :)

   நீக்கு
  6. @ geethaa akka ..//Geetha SambasivamDecember 14, 2017 at 1:14 PM
   ஹையோ, எந்த ஏர்லைன்ஸில் வின்டோ சீட் வேணுமானு கேட்டுக் கொடுக்கிறாங்க? ''

   Lufthansa வில் எப்பவும் கேப்பாங்க அக்கா ..3 டைம்ஸ் கேட்டாங்க ஆனா நான் மிடில் ரோவில் தான் உக்காருவேன் :)

   நீக்கு
  7. @கீதா ..எனக்கு ரொம்ப பயம் :) ஓரத்தில் உட்க்கார :) நானும் சின்னப்பிள்ளையில் எப்படி இந்த விமானம் இவ்ளோ போரையும் தூக்கிட்டு பறக்குதுன்னு யோசிப்பேன் ஆனால் கனவிலும் நினைக்கலை வாழ்க்கை விமானத்தில் ஏறி பல்லலாயிரம் மைல்களுக்கு அப்பால் கொண்டு இறக்கி என்னை தனியா தைரியசாலியாக்கி விட்டிருக்கு பாருங்க :)
   மேற்கூறிய வரிகளில் தைரியசாலி என்பதை அழுத்தமாக படிக்கவும் :)

   நீக்கு
  8. ///அநேகமா ஜி30, 31 அல்லது எஃப் 40, 41 அப்படினு வரும்! சின்ன வயசுக்காரங்களுக்கு எல்லாம் முன்னாடி கொடுத்திருப்பாங்க! :)//

   அது கீதாக்கா.. என்ன தெரியுமோ? பல சீட்கள் காசுக்கு வித்திடுவினம்... காசுக்கு விலைப்பட்டுப் போகும் சீட்கள்.. முன் வரிசையிலும் + பாத்ரூம் அருகில் இல்லாதவை.. மற்றும் பிளேனின் இறக்கை மறைக்காத சீட்களாகவும் இருக்கும்... பிளேனின் இறக்கைக்கு மேலே வரும் விண்டோ சீட்கள் மிஞ்சி இருக்கும்.. அது பெயர்தான் விண்டோ சீட்ட்.. மற்றும்படி வெளியே எதுவும் தெரியாது விங்ஸ் மறைக்கும்.. எட்டி எட்டி வெளியே பார்க்கோணும்...

   சில லூஸ் சனம்... நல்ல அருமையான வியூத் தெரியும் விண்டோ சீட்டை வாங்கிப் போட்டு, ஜன்னலுக்கு சட்டரைப் போட்டு விட்டு நித்திரை கொள்வார்கள்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  9. கீதாக்கா கவலையை விடுங்க...நானும் கை கோர்க்கறேன் உங்களோடு. இனி விண்டோ சீட் தரலைனா...நாம போராடுவோம்...வேண்டும் வேண்டும் விண்டோ ஸீட் வேண்டும்னு இல்லைனா நாங்க கூவத்துல (பக்கத்துல அதுதானே ஓடுது!!!) குதிச்சுருவோம்னு அதிரா மாதிரி. அதுவும் இல்லைனா கேப்டன் ஸ்டைல்ல னு சொல்லுவோம். கேப்டன் ஸ்டைலா அப்படினு மெர்ஸல் ஆகிடுவாங்க. அதுக்கு விண்டோ ஸீட்டே கொடுத்துடறோம் தாயினு சொல்லிடுவாங்க...!!!!

   கீதா

   நீக்கு
  10. சில லூஸ் சனம்... நல்ல அருமையான வியூத் தெரியும் விண்டோ சீட்டை வாங்கிப் போட்டு, ஜன்னலுக்கு சட்டரைப் போட்டு விட்டு நித்திரை கொள்வார்கள்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்:))//

   ஹையோ எஸ் அதிரா.....எனக்கும் கடுப்பாகும்...

   கீதா

   நீக்கு
  11. //Lufthansa வில் எப்பவும் கேப்பாங்க அக்கா ..3 டைம்ஸ் கேட்டாங்க// அதெல்லாம் சும்மா! லுஃப்தான்ஸா தான் நாலு முறை போனோம். ஒரே ஒரு முறை மட்டும் நல்ல இருக்கைகள் கிடைத்தன. மத்தபடி எங்கேயோ உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போட்டுடுவாங்க! எல்லோரையும் தாண்டிட்டுப் போகறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடும்.

   நீக்கு
  12. அப்போ அந்த வில்லங்கம் புடிச்ச லுப்தான்சா எனக்கு பயம்னு தெரிஞ்சே ஓர சீட்டை குடுத்து மேலே அனுப்ப பிளான் போட்டாங்களோ :)

   நீக்கு
 10. கதையில் சில இடங்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்து விட்டது. என்னை வளர்த்த பேரண்ட்ஸின் கல்ச்சர் மதம்டிஃபரெண்ட்ஸ். அவர்களின் உறவுகள் எனக்கும் உறவானவர்கள். அவர்களையெல்லாம் அறிமுகப்படுத்தி இப்படிப்போகும் வசனங்கள், எவ்வளவு பக்குவப்பட்டபெண் என்றுஉணர்த்துகிறது. டாக்டர்பேரன் பாட்டிக்கு பிபி.,ஷுகர் எல்லாம் செக் பண்ணினான் பாட்டி அவம்மாவிற்ரு வாங்கிய ஸ்டட் கிப்டாகக் கொடுக்கலாம் என்றபோது. என்னைக்கூட சிலஸமயங்களில் இப்படிச் செய்வார்கள். நடக்கும் விஷயம். வள்ளிப்பாட்டியும் பாசம் நிறைந்து எல்லாவற்றிலும் அடிபட்டவள். அழகுப் பின்னல். ஆகாயமும்,மேகங்களும் நல்ல நட்புக்கூட்டம். நட்க்ஷத்திராதான் தாரா அப்பாடா பெயர்பொருத்தம். ரஸித்தேன். விளம்பரப்படத்தில் பாட்டியாக இங்குள்ளவர்களும் என்னை மாதிரி உள்ளது என்றார்கள். ஆரம்பகாலகட்டத்தில் ஏதோ மேல் உலகத்தில் ஸஞ்சரிப்பது போலவே இருந்தது விமானப் பிரயாணம். தொடர்பில்லாமல் மனதில் தோன்றியவைகளை எழுதியுள்ளேன். புனைவாகத்தோன்றவில்லை. நிகழ்வாக இருக்குமோ அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது ஒரு சில உணர்வுகள், உரையாடல்கள் வெவ்வேறு மாந்தர்களின் நிகழ்வுகளில் விளைந்த புனைவுதான் தவிர, இதில் சொல்லப்பட்டது போன்று நிகழ்வு இல்லை காமாட்சிம்மா. நான் எஸ்தர் அம்மாவைப் பற்றிய (பதிவர் விசுவின் அம்மா) அறியும் போது இப்படியான குழந்தைகள் விடப்படுவது அறிந்ததுண்டு. அதுவும் வடகிழக்கு மாநிலங்களில் கூட அவரது சேவையில் இணைந்தவர் ஒருவர் இருக்கிறார். அப்படி தோன்றிய ஒரு நிகழ்வின் அடிப்படையில் தோன்றிய கற்பனை.

   நாம் வாழ்க்கையில் அடிவாங்க அடிவாங்க நம் மனம் மிகவும் பக்குவம் அடையும் தானே. புடம் போடப்பட்ட பொன் என்பது போல். இதில் தாராவின் மனம் கிட்டத்தட்ட எனது என்று சொல்லலாம். என் வாழ்வில் நிறைய அடிவாங்கள்கள் உண்டு சிறுவயது முதல். ஒவ்வொரு அடிவாங்கலும் எனக்கு ஒவ்வொரு பாடம் கற்பித்தது. இது எல்லோருக்கும் நிகழ்வதுதான். அதைப் போன்று என் மகனும்...அவன் வேறு விதமாகக் கஷ்டப்பட்டுள்ளான். இப்பவும் அவனுக்கு சில குடும்ப கமிட்மென்ட்ஸ் இருக்கு....அப்படி தாராவும் நிறைய ஃபேஸ் பண்ணிட்டாள் இல்லையா அது அவளை ரொமப்வே யோசிக்க வைக்கும் இல்லையா....

   //டாக்டர்பேரன் பாட்டிக்கு பிபி.,ஷுகர் எல்லாம் செக் பண்ணினான் பாட்டி அவம்மாவிற்ரு வாங்கிய ஸ்டட் கிப்டாகக் கொடுக்கலாம் என்றபோது. என்னைக்கூட சிலஸமயங்களில் இப்படிச் செய்வார்கள்.// உண்மையாக இந்தக் கதையை எழுதும் போதும் வல்லிம்மாவும் நீங்களும் மாறி மாறி பாட்டி வடிவில் வந்தீர்கள்....

   யெஸ் வள்ளிப்பாட்டியும் ரொமப்வே அடி வாங்கியவள். என் பாட்டி அதில்...அவர் வயதாக வயதாக மிகவும் பக்குவப்ப்ட்டுப் போனார். எல்லாவற்றையும் ஏற்கும் நிலைக்கு வந்தார். ரொம்ப ஆச்சாரம் என்றால் அப்படி ஒரு ஆச்சாரம்...ஆனால் எல்லாரையும் இழந்து என் அப்பா மட்டும் என்று ஆனதும் மிகவும் மனதைப் பக்குவப்படுத்தத் தொடங்கினார்.

   //ஆரம்பகாலகட்டத்தில் ஏதோ மேல் உலகத்தில் ஸஞ்சரிப்பது போலவே இருந்தது விமானப் பிரயாணம். தொடர்பில்லாமல் மனதில் தோன்றியவைகளை எழுதியுள்ளேன். //

   ஹை என்னைப் போல!! ஹா ஹா ஹா....நீங்கள் எழுதியவைகளை வாசிக்கிறேன் காமாட்சிம்மா...

   மிக்க நன்றி காமாட்சிம்மா

   கீதா

   நீக்கு
 11. மிக அருமையாகச் சம்பவங்களைக் கோர்வையாகச் சொல்லி இருக்கிறீர்கள். சில வீடுகளில் இப்படித் தான் வயசானவங்க இருக்கும்போது இளவயதுக்காரங்க மரணம் பாதிப்புக்களை ஏற்படுத்தும். :( எப்படியோ தாரா அலயஸ் நக்ஷத்திரா பாட்டியின் பேரன்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டால் நல்லது தானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா மிக்க நன்றி. ஆமாம் என் பாட்டிரொம்ப வருத்தபப்டுவார். எதுக்கு நான் இருக்கேன் இருக்கேன் அப்படினு...அதுவும் ஒரு சிலரைப் பார்த்தா ராஜம் மாதிரியே இருக்க என்று என் இரண்டாவது அத்தையை நினைத்துச் சொல்லி கொண்டே இருப்பார். அவர் அத்தை, குழந்தைகள் என்று அத்தையின் கணவரும் தாத்தாவும் அடுத்தடுத்து போனதும் இவர்கள் சேர்ந்து நாங்கள் இருந்த மாமாவின் வீட்டின் மாடியில் இருக்க கிட்டத்தட்டக் கூட்டுக் குடும்பம் தான். நான் ரொம்ப எஞ்சாய் செய்திருக்கேன் கூட்டுக் குடும்பம். கருத்து வேறுபாடுகள் வரும் ஆனால் எல்லோரும் நலல்வரே போலத்தான் உதவிக் கொண்டு இருப்பார்கள்.

   //எப்படியோ தாரா அலயஸ் நக்ஷத்திரா பாட்டியின் பேரன்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டால் நல்லது தானே!//

   நல்லதுதான் ஆனால் அதற்கு அவள் மனம் ஒப்பணும்...அவளுக்கு கல்சர், மதம் வேரியேஷன் இருக்கும்....அண்ட் பேத்தியாகவே இருந்துவிட்டு போகலாம் என்றும் நினைக்கலாம்....தொடர் என்றால் எழுதலாம் இன்னும் நிறைய....ஆரம்பத்திலிருந்தே இதை குறுநாவலாகக் கூடக் கொண்டு செல்லலாம்....

   மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
 12. இந்தத் தளத்துக்கு வர கொஞ்சம் 'மனசாட்சி உறுத்துது. ஸ்ரீராம்/கேஜிஜி சாருக்குத் தெரியும் காரணம்.

  ஒரு கதை அல்லது புனைவு எழுதும்போது, நாமும் அந்தச் சம்பவங்களோடே பயணிக்கிறோம். இது நம்மை affect செய்யும். கதை எழுதுவது (sincere ஆக எழுதுவது) எத்தனை கஷ்டம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். Knot ரொம்ப சுலபம் (எனக்கு, ஏன்னா, அத்தனை கதைகள், சம்பவங்கள் படித்திருக்கிறேன்). கதையா எழுதும்போது, அந்த அந்தப் பாத்திரங்களில் நம்மை வைத்துத்தான் உரையாடல்கள் வளர்க்கமுடியும். அதனால் அது சுலபமல்ல. நல்ல கதை என்பது, குறைந்த பட்சம் 20 தடவையாவது படித்துச் செப்பனிட்டால்தான் வரும். அது Professionals ஐத் தவிர மற்றவர்களுக்குக் கஷ்டம் (நேரப் பற்றாக்குறை). இன்னொன்று, ஒரு கதை எழுத ஆரம்பித்தால், முடித்துவிடவேண்டும். இல்லைனா, பாதிப் பாதில இருந்தால், பின்பு நாம படிக்கும்போது, அந்த உணர்வில் கதையை எழுதமுடியாது.

  கதை நல்லா கோர்வையாக வந்துள்ளது. ஆனால் நிறைய நபர்களை நினைவுகொள்ளவேண்டியிருக்கிறது. உரையாடல்கள் எல்லாம், 'இப்படி மனிதர்கள் இருந்தால் எப்படி இருக்கும்' என்று நினைக்கவைத்தது. மொத்தத்தில் எனக்குப் பிடித்த கதை. விக்கிரமன் பாணி கதைகள்தான் எனக்கு இப்போது பிடிக்கிறது. எல்லாரும் நல்ல மனிதர்கள் என்பதைப் போன்று. அதைப்போன்றே நீங்களும் எழுதியிருக்கீங்க. வயதானவர்கள் இத்தனை புரிதலுடன் இருந்தால் நன்றாக இருக்கும். (கதையைப் படிக்கும்போது எனக்கு பதிவர்கள் இருவர் ஞாபகம் வந்தது-கதா பாத்திர வடிவில். அவர்களும் இங்கு பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்)

  உங்கள் தகவலுக்காக, நான் 5.30 மணி லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னையில் பார்த்ததில்லை.

  கேஜிஜி சாரினால் எனக்குத்தான் பிரச்சனையாகிவிட்டது. இனி எல்லா விமானப் பயணத்திலும் ஏர்ஹோஸ்டஸை (ஆண்கள் அல்லர்) உற்றுப்பார்க்க ஆரம்பித்துவிடுவேன் போலிருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை மிக மிக நன்றி. இதிலும் சண்டை போட்ட சம்பந்திகள் இருக்கிறார்களே...ஆனால் அவர்கள் வேண்டாமே இங்கு...இந்தக் கதைக்கு...

   அப்புறம் இந்தக் கதைக்கு வேண்டியது பாட்டியும், பேத்தியும் தானே....அப்புறம் பேத்தி ஓகே சொன்னாலும் அவளும் உடனடியாகச் சேர்வாளா என்று சொல்லமுடியாது அதுவும் சொல்லியுள்ளேன். அப்புறம் என் உறவினர்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் புரிதலில் இருக்கிறார்கள். இதிலும் மாமியார் மருமகள் பிரச்சனை, அப்புறம் மாந்தர்களை ரொம்பக் கெட்டவர்களாக எதற்கு நெல்லை..அதுதான் எல்லார் வாழ்க்கையிலும் உள்ளதே..தினமும் பார்க்கிறோமே...என் வீட்டில் என் மாமி (மாமாவின் மனைவி) ரொம்பவே புரிதல். அவரது மகன் கிறித்தவப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கான். அவன் வீட்டில் போய் இருந்துவிட்டும் வருவார்....70 வயதாகிறது அவருக்கு.

   விக்ரமன் கதை// ஹா ஹா ஹா ..கதையிலேனும் கொஞ்சம் நலல்து சொல்வோமே.ஹாஹா

   என் பையன் இரு முறை ட்ராவல் செஞ்சது அதில்தான். முதல் முறை லண்டன் வழியாக, நியூயார்க் சென்று நார்த் கரோலினா போனான். இரண்டாவது முறை லண்டன் வழியாக ஸான்ஃப்ரான்ஸிஸ்கோ, ஆரெகன்....அதனால்தான் மீண்டும் அவனிடம் கன்ஃபெர்ம் செய்து கொண்டுதான் எழுதினேன். கூகுளில் பார்த்த போது இப்போது மாற்றியுள்ளது தெரிந்தது. என் மச்சினரும் இதே ஃப்ளைட்டில் பயணித்துள்ளார். பிஸினஸ் முடித்துவிட்டு உடனடியாகத் திரும்புவதற்கு ஏற்ற ஃப்ளைட் என்று...

   ஆனால் ஆட்க்யூமென்ட்ஸ் எழுதியிருந்தேன் நெல்லை எல்லாம் முதல் காப்பியில். பின்னர் எடுத்துவிட்டேன். லண்டனில் பாட்டிக்கும் மகன், மருமகள் ஆனால் எடுத்துவிட்டேன் நீளம் கருதி....வேண்டாம் பாட்டி பேத்தியோடு முடியட்டும் என்று...நிறைய கட்டிங்க் செய்ய வேண்டியதானது. இங்கு மேலே கருத்தில் ஓரிரு உதாரணமும் கொடுத்திருக்கேன்...

   எளிதாக இருக்கவில்லை நெல்லை. //கதையா எழுதும்போது, அந்த அந்தப் பாத்திரங்களில் நம்மை வைத்துத்தான் உரையாடல்கள் வளர்க்கமுடியும். அதனால் அது சுலபமல்ல. நல்ல கதை என்பது, குறைந்த பட்சம் 20 தடவையாவது படித்துச் செப்பனிட்டால்தான் வரும். // யெஸ் யெஸ்....நான் இதற்கு முந்தைய கரு அந்த பேருந்து, ரயில், அப்புறம் விமானம் வரும் அக்தை எழுதிட்டேன். ஆனால் திருப்தி தரலை...இன்னும் செப்பனிட வைத்துள்ளேன். அதில் நிறைய பிரச்சனைகள் பிரிதல் என்று இருக்கும்...கடைசியில் சேர்தல் என்று ஆனால் இடையில் பல பிரச்சனைகளின் காரணமாகத் திருத்த இயலாமல் போட்டு இருக்கேன்...

   //இந்தத் தளத்துக்கு வர கொஞ்சம் 'மனசாட்சி உறுத்துது. ஸ்ரீராம்/கேஜிஜி சாருக்குத் தெரியும் காரணம்.// எனக்கும் யூகிக்க முடியுது.....ஒரு கதை.... எழுதுவதாகச் சொல்லி நீங்கள் தரவில்லையே அதுவா?!!!

   // இன்னொன்று, ஒரு கதை எழுத ஆரம்பித்தால், முடித்துவிடவேண்டும். இல்லைனா, பாதிப் பாதில இருந்தால், பின்பு நாம படிக்கும்போது, அந்த உணர்வில் கதையை எழுதமுடியாது.//

   ஆமாம் உண்மைதான் நெல்லை அப்படி நிறைய இருக்கு. ஆனால் சிலது இப்போது மீண்டும் அதற்குள் பயணித்து எழுத நினைத்துள்ளேன்...அப்ப்டித்தான் சில வெளிவந்தன....

   யெஸ் பதிவர்கள் வல்லிம்மா, காமாட்சியம்மா...அவர்களின் மனதும் கூட இந்தப் பாட்டியிடம் இருபப்தாக என் மனதில் தோன்றியது எழுதும் போது...

   மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு

   நீக்கு
  2. கேஜிஜி சாரினால் எனக்குத்தான் பிரச்சனையாகிவிட்டது. இனி எல்லா விமானப் பயணத்திலும் ஏர்ஹோஸ்டஸை (ஆண்கள் அல்லர்) உற்றுப்பார்க்க ஆரம்பித்துவிடுவேன் போலிருக்கு.//

   ஹா ஹா ஹா ஹா ரொமப்வே சிரிச்சுட்டேன் நெல்லை இதற்கு....

   கீதா

   நீக்கு
  3. மாமி (மாமாவின் மனைவி) ரொம்பவே புரிதல். - இதெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமில்லை கீதா ரங்கன். It requires lot of digesting power and attitude.

   நீக்கு
  4. யெஸ்!! நிச்சயமாக. என் குடும்பத்தில் இன்னும் சிலர் இருக்காங்க நெல்லை. ரொம்பவே பக்குவப்பட்டுப் போகிறார்கள் இந்த மாமி ஸ்பெஷல் சில்ரன் பள்ளியில் வாலண்டியராக இருக்கார். நான் என் குடும்பத்திலிருந்தே நிறைய கற்கிறேன். எனக்கு இந்த மாமி மிகச் சிறந்த உதாரணமாகத் தெரிவார். மனிதர்களை மிக மிக நன்றாகப் புரிந்து கொள்வார். அதே போன்று என் நாத்தனார் அவரும் கான்ஸரில் இறந்துவிட்டார். நாத்தனாரின் ஒரே மகன் வேறு சாதிப் பெண்ணைத்தான் மணந்தான். முதலில் என் மாமனர் மாமியாரிடம் தான் வந்து சொல்லி ஒப்புதல் கேட்டான். அவன் பயந்தான் தாத்தா பாட்டி என்ன சொல்வார்களோ என்று ஆனால் அவர்கள் முழு சம்மதம்தெரீவித்தார்கள். அப்பெண்ணை ஏற்றுக் கொள்ளவும் செய்தார்கள். அஅதையும் விட என் மாமியாரின் அக்கா இறப்பதற்கு முன் அமெரிக்க சென்ற பொது இந்தப் பையன் வீட்டிற்கும் சென்று அவள் கொடுத்ததைச் சாப்பிட்டார்கள். அவர் இத்தனைக்கும் மிகுந்த ஆசாரமாக இருந்தவர்.

   மிக்க நன்றி நெல்லை...

   கீதா

   நீக்கு
  5. முன்னால் அதாவது ஓரிரு வருடங்கள் முன்னர் வரை லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் காலையில் தான் கிளம்பிட்டு இருந்தது. நாங்க எமிரேட்ஸில் பயணிக்கும்போது கவனித்திருக்கேன். அநேகமாக அரை மணி நேர வித்தியாசத்தில் இரண்டும் டேக் ஆஃப் ஆகும். இப்போ மாத்தி இருக்காங்க போல!

   நீக்கு
  6. //என் மாமியாரின் அக்கா இறப்பதற்கு முன் அமெரிக்க சென்ற பொது இந்தப் பையன் வீட்டிற்கும் சென்று அவள் கொடுத்ததைச் சாப்பிட்டார்கள். அவர் இத்தனைக்கும் மிகுந்த ஆசாரமாக இருந்தவர்.//

   என் மாமியார் மிகக் கடுமையான ஆசாரங்களைக் கடைப்பிடிப்பார். ஆனால் எங்க மைத்துனரின் பிள்ளை வேறு மாநிலப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். அப்போ அவங்க எவ்விதமான ஆசாரமும் பார்க்கவில்லை. அந்தப் பெண்ணை ஏற்றுக் கொண்டார்கள். ஒருவேளை வயது காரணமாக இருக்கும். 90 வயதுக்கு மேல் ஆகி விட்டது அப்போவே! இனிமேல் என்ன என்னும் எண்ணமாக இருந்திருக்கும்! ஆனால் எங்களிடம் கடுமையாக நடந்துப்பாங்க! நாங்க வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்குக் காஃபி கொடுப்பது எனில் பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்துச் சூடு பண்ணிக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் அடுப்பையே அலம்பணும் என்பார்! பாத்திரத்தை இடுக்கியினால் பிடித்துக் கொண்டு எரியும் நெருப்பின் மேலே காட்டிச் சூடு பண்ணணும். நெருப்புக் கொழுந்து கையில் எல்லாம் படும். எரியும். ஆனாலும் அவங்க தன் கொள்கையில் பிடிவாதமா இருந்தாங்க! கடைசியில் அவங்களைப் பார்த்துக்கவே ஆள் போட்டுப் பார்த்துக்க வேண்டி இருந்தது. குளிப்பாட்டி, உடைமாற்றி எல்லாம் செவிலிப் பெண்மணி தான் செய்யும்படி ஆச்சு! எதுவுமே சில காலம் தான்! பின்னர் தானாக மாறி விடுகிறது.

   நீக்கு
  7. கீசா மேடம். - எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர், ரொம்ப ஆசாரம் என்றெல்லாம் முழுகுவதில்லை. அவருடைய அண்ணன் மிக மிக ஆசாரம். இவங்களோட தம்பி பையன் ஒரு வட நாட்டுப் பெண்ணை காதலித்து மணந்துகொண்டார். அவங்க அப்பாவுக்கு ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், மூத்த அண்ணனுக்கு பயங்கரக் கோபம். தன் தம்பி, திருமணத்தை attend செய்ய டிக்கெட் புக் பண்ணியிருக்கான் என்பது அறிந்து, 'நீ ஏன் திருமணத்துக்குப் போகிறாய்' என்று சொல்லி தடுத்துவிட்டார். இதுமாதிரி ஏகப்பட்ட மாற்றுத் திருமணங்கள் நடக்குது. இப்போ இருக்கற காலத்துல, ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒருவேளை, நம்ம வீட்டுக்கு வருவதைத் தடுக்கலாம் (அப்படித் திருமணம் செய்துகொண்டவர்கள்), ஆனால் திருமணத்துக்குப் போகாமல் பகிஷ்கரிக்க முடியாது (ஏன்னா நாளை நம் வீட்டில் என்ன நடக்கும் என்பது தெரியாது).

   இன்னொண்ணு, எல்லா மாமியார்களும், எங்கு செல்லுபடியாகுமோ அங்கு தன் கண்டிப்பையும், எங்கு செல்லுபடியாகாதோ அங்கு அமைதியாகவும் இருப்பதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தியவர்களை நான் பார்த்ததில்லை.

   நீக்கு
  8. //எல்லா மாமியார்களும், எங்கு செல்லுபடியாகுமோ அங்கு தன் கண்டிப்பையும், எங்கு செல்லுபடியாகாதோ அங்கு அமைதியாகவும் இருப்பதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தியவர்களை நான் பார்த்ததில்லை.// நூற்றுக்கு இருநூறு சதம் உண்மை! :) உங்க வாயிலே சர்க்கரையைக் கொட்டறேன்.

   நீக்கு
  9. கீ.ரங்கன் மேடம் - இரு முறை ட்ராவல் செஞ்சது - சும்மா நீங்க செக் பண்ணித்தான் எழுதினீங்களான்னு தெரிஞ்சுக்க அப்படிச் சொன்னேன். பல வருடங்களுக்கு முன், என் மாமா பையனும் (இங்கிலாந்துல டாக்டரா இருக்கான்) காலை விமானத்தில்தான் சென்றான்.

   நீக்கு
  10. ஆமாம் கீதாக்கா எமிரேட்ஸும் அரை மணி நேர வித்தியாசத்தில் உண்டு. இரு ஃப்ளைட்டுக்கும் செக்கிங்க்.....அதனால் கூட்டம் நிறையவே இருந்தது. இப்போ 7.30 என்று பார்த்த நினைவு. கூகுளில்...

   கீதா

   நீக்கு
  11. கீ.ரங்கன் மேடம் - இரு முறை ட்ராவல் செஞ்சது - சும்மா நீங்க செக் பண்ணித்தான் எழுதினீங்களான்னு தெரிஞ்சுக்க அப்படிச் சொன்னேன்.//

   ஆ ஆ ஆ ஆ!!!! உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (கர் எல்லாரும் போடறாங்க ஸோ நான் உர் ஹிஹிஹிஹிஹி)

   கீதா

   நீக்கு
  12. ஆமாம் கீதாக்கா வயது காரணமாக இருக்கலாம்..

   என் பாட்டியும் கூட அப்படித்தான் செம ஆச்சாரம் னெருப்பில் காட்டி என்று அப்புறம் இறுதியில் நீங்கள் சொல்லிருக்கீங்களே...அப்படி...அவங்க கர்பப்பை முழுவதும் வெளியே தான் இருந்தது. முதலில் அவர்களாகவே புடவை உடுத்தும் போதெல்லாம் எனக்குத் தெரியலை...ரொம்ப வருஷமா இருந்திருக்கு. அப்புறம் நான் அவர்களைக் குளிக்க வைக்கும் நிலை அப்போதுதான் எனக்குத் தெரிந்தது முதலில் புரியவில்லை. பெரிய கட்டி போன்று தொங்கிக் கொண்டிருந்தது. உடனே ஆஸ்பத்திர்க்குக் கொண்டு சென்றேன். அப்போ டாக்டர் உள்ளே தள்ளி அப்புறம் வெளியே வராமல் செய்துட்டாங்க...90 என்பதால் ஆப்பரேஷன் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிட்டாங்க. அப்ப கூட பாட்டி ஹையோ டாக்டர். நர்ஸ் வந்து வாயில எல்லாம் வைக்கறாளே நு சொல்லிட்டுருந்தாங்க...நான் மிரட்டினேன் ஹா ஹா ஹா ...அப்புறம் டயபர் வைக்கும் நிலை வரவும் என்னால் தூக்கிச் செய்ய முடியலைனு என் அப்பாவும், தம்பியும் ஆள் போட்டு டயஃபர் எல்லாம் வாங்கிக் கொடுத்து செய்ய வைத்தோம்...நான் இல்லாத போது அப்பெண் தான் பாட்டியைக் குளிக்கவும் வைத்தது...அப்படித்தான் ஆனது..ஆனால் பாட்டி ஏற்றுக் கொண்டார் வேறு வழி??

   கீதா

   நீக்கு
 13. //கதையா எழுதும்போது, அந்த அந்தப் பாத்திரங்களில் நம்மை வைத்துத்தான் உரையாடல்கள் வளர்க்கமுடியும். அதனால் அது சுலபமல்ல// என்னைப் பொறுத்தவரை இதான் சுலபம். ஆனால் அதற்கும் விமரிசனங்கள் வருவதால் இந்த க.க.போவுக்கு எழுதிய இரண்டு, மூன்று கதைகள் செப்பனிடாமல் தூங்குகின்றன. எப்போவும் தன்னைச் சுற்றியே, தன்னைப் பற்றியே சொல்லிக்கிறா என்கிறார்கள். அதான் வேண்டாம்னு விட்டுட்டேன். தன்னிலிருந்து அந்நியப்பட்டு எழுதுவது என்பது எளிதல்ல என்னைப் பொறுத்தவரை! சித்தப்பா கூடப் பெரும்பாலும் தன் அனுபவங்களையும், வீட்டு உறவினர் அனுபவங்களையுமே கதையாக்கி இருக்கிறார். அதில் எலி கதையும், ரிக்‌ஷா கதையும் கூட உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் இந்தக் கற்பனை. யார் இப்படிச் சொல்றா? எழுதுங்க எழுதுங்க.

   'சுலபம்' - நான் சொன்னது, ஒரு கோப scene வருது, இல்லை வருத்த scene வருது. நமக்கு அந்த உணர்ச்சி எழுதும்போது தொத்திக்கும், அதிலேயே உழலுவோம். இது எனக்கு நடந்தது. அதனால இது பொது என்று நினைத்தேன்.

   நீக்கு
  2. கற்பனை எல்லாம் இல்லை. உண்மை! :) கோபமான நிகழ்வோ, வருத்தமான நிகழ்வோ எழுதுகையில் கூடியவரை மனதைப் பாதிக்காமல் பார்த்துக் கொண்டாலும் வார்த்தைகள் வந்து விழும்போது நம்மை மறந்து விடுகிறோமே! அப்போ நம் உணர்வுகள் அதில் கலக்கின்றன. இது என் அனுபவம்.

   நீக்கு
  3. 'நான் சொன்னது, இதை - எப்போவும் தன்னைச் சுற்றியே, தன்னைப் பற்றியே சொல்லிக்கிறா என்கிறார்கள்.

   நீக்கு
  4. கீதக்கா என்ன அக்க இப்படிச் சொல்லறீங்க...இதுல என்ன இருக்கு நீங்கள் அழகா எழுதலாமே அப்ப்டித்தானே எல்லாருமெ ஏதோ ஒரு வகையில் தனக்கு அல்லது தன்னைச் சுற்றி நடந்ததைத்தானே எழுதறாங்க...எழுதறோம்....

   ஆம் வசனங்கள் கூட நம்மை சில சமயம் அந்தக் கதாபாத்திரத்தில் அப்படித்தான் இருத்தி வைத்துத்தான் வருது...ஒரு சில சமயம் பிற காரெக்டர்கள் அவங்க பேசறது அல்லது அவங்க சொன்னா என்ன சொல்வாங்கனு வரும்....

   அக்கா ப்ளீஸ் எழுதுங்க....நாங்க இருக்கோமே வாசிக்க....அந்த இருப்புல இருக்கறத செப்பனிட்டு கொண்டாங்க....ப்ளீஸ்....

   கீதா

   நீக்கு

  5. 'சுலபம்' - நான் சொன்னது, ஒரு கோப scene வருது, இல்லை வருத்த scene வருது. நமக்கு அந்த உணர்ச்சி எழுதும்போது தொத்திக்கும், அதிலேயே உழலுவோம். இது எனக்கு நடந்தது. அதனால இது பொது என்று நினைத்தேன்.//

   ஆம் எனக்கும் இப்படித் தோன்றும்....

   கீதாக்கா நெல்லையின் கருத்தையும் வழிமொழிகிறேன்...பொதுதான் ப்ளீஸ் எழுதுங்க....கொண்டாங்க உங்க கதைய...

   கீதா

   நீக்கு
 14. @Geethaa sam akkaa ..

  / தன்னிலிருந்து அந்நியப்பட்டு எழுதுவது என்பது எளிதல்ல என்னைப் பொறுத்தவரை! சித்தப்பா கூடப் பெரும்பாலும் தன் அனுபவங்களையும், வீட்டு உறவினர் அனுபவங்களையுமே கதையாக்கி//
  நானும் அப்படிதான்க்கா பல சம்பவங்கள் பார்த்தது நம்மருகில் நடந்தது இப்பவும் யதினமும் பார்ப்பவற்றையே எழுதறேன் ..
  அப்படி எழுதும்போது அதை வாசிக்கும்போது நாமும் அந்த கதா பாத்திரங்களாமாறிடுவோம் ..

  நீங்க என் கதையிலும் சொன்னிங்க இதே போல ஒரு கதை இருக்குன்னு அங்கேயே சொன்னேன் எழுதுங்க இப்பவும் சொல்றேன் நாங்க வாசிக்க ரெடியா இருக்கோம் சீக்கிரம் எழுதுங்க .

  இதில் இன்னொரு பக்கமும் இருக்கு கதை புக்கா வாசிக்கும்போது வாசகர்களின் கருத்துக்களை அறியவே முடியாதது ஆனா இங்கே நாம் எல்ல்லோருமே பின்னூட்டத்தில் பேசுகிறோம் கதா பாத்திரங்களைப்பற்றி அதுவும் நமக்கு ஒரு வெற்றி சந்தோசம்

  பதிலளிநீக்கு
 15. விமான பயணம் நல்ல அனுபவம்தான் மிக நன்று

  பதிலளிநீக்கு
 16. ஸ்ரீராம் அண்ட் கௌதம் அண்ணா மிக்க மிக்க நன்றி கதையை வெளியிட்டமைக்கும், அளித்துவரும் ஊக்கத்திற்கும்....

  மீண்டும் மீண்டும் நன்றியுடன்

  கீதா

  பதிலளிநீக்கு
 17. ஸ்ரீராம் இப்போதான் கவனித்தேன் "எண்ணெய் அன்பு" என்பதை....

  எரிபொருளாய் அன்பு!!! ???? எதுவும் (வண்டி மட்டும் அல்ல நாமும் இயங்க உணவு ஒரு எரிபொருளாய்) இயங்க ஏதேனும் ஒரு வகை எரிபொருள் அவசியம் இல்லையா....அப்படி ஒரு நல்ல உறவிற்கு அன்பு ஓர் எரிபொருளாய் ஸோ எரிபொருளாய் அன்பு!?!?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா ரங்கன் - எண்ணெய் அன்பு என்பதற்கு ஒட்டாத அன்பு என்றுதான் பொருள் கொள்ளணும். முகத்திலும் அன்பைக் காண்பித்து ஆனால் உள்ளன்பிலாத அன்பு (வெளி வேஷம் மாதிரி)

   நீக்கு
 18. professional touch உடன் எழுதப்பட்டிருந்த கதை! சம்பவங்களை கோர்த்த விதம் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்! சில இடங்கள் கொஞ்சம் அவசரமாக எழுதி இருப்பது போல தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி பானுக்கா கருத்திற்கு....இதுவே கதை ரொம்ப நீளமாகிவிட்ட்து என்று பல டயலாக்ஸ் எடுத்துவிட்டேன் பானுக்கா...மேலேயே ஒரு சில உதாரணங்கள் சொல்லிருக்கேன்.....

   எனக்கு அக்கா ஷார்ட்டா எழுத இன்னும் பழக வேண்டும்னு தோனுது!!!!! நீங்க உங்க தொகுப்புல ஒரு பக்கக் கதையா கூட ரொம்ப நல்லா எழுதியிருந்தீங்க....எனக்கெல்லாம் அப்படி எழுத வருமா எழுத முயற்சி செய்யறேன்....மிக்க நன்றி அக்கா மீண்டும்

   கீதா

   நீக்கு
 19. // இன்னொன்று, ஒரு கதை எழுத ஆரம்பித்தால், முடித்துவிடவேண்டும். இல்லைனா, பாதிப் பாதில இருந்தால், பின்பு நாம படிக்கும்போது, அந்த உணர்வில் கதையை எழுதமுடியாது.//

  என்னை பொறுத்த வரை அப்படி இல்லை. என்னுடைய கதைகளை ஒரு வாரம், இரெண்டு வாரமெல்லாம் எழுதி இருக்கிறேன். மனசுக்குள் ஊறப்போட்டு விடுவேன். அங்கு ஒரு வடிவம் கொடுத்த பிறகுதான் எழுத ஆரம்பிப்பேன். அதனால் சிரமம் இருக்காது. என்ன கஷ்டம் என்றால் சட்டென்று எழுதி விட முடியாது, நேரம் எடுக்கும்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா நானும் ஊறப்போட்டுவிடுவேன் ஒரு சில கதைகள்....ஆனால் அப்படி ஊறப் போட்டவற்றை மீண்டும் எடுக்கும் போது சில சமயம் அந்த ஃபீல் ப்ஃப்ளோ போய் விடுகிறது. மீண்டும் அதனுள் போய் மனதை அந்த ஃபீலுக்குக் கொண்டு போய் அப்புறம் தான் எழுத முடிகிறது.....அதனால் தான் எனக்குக் கதைகள் எழுதுவதில் ரொம்பத் தாமதம் ஏற்படுகிறது....எ பி கே வா போக்கு இன்னும் கதைகள் வைச்சுருக்கேன் முடிக்காம...ஊறப்போட்டு....முடிக்க நினைத்துள்ளேன் பார்ப்போம்...

   நீக்கு
 20. எண்ணெய் அன்பு என்பதை விட ஏரி பொருளாய் அன்பு என்பது பொருத்தமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 21. Sorry, எரி பொருளாய் அன்பு என்று படிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை!! மிக்க நன்றி பானுக்கா!!! கருத்திற்கு...ஏரி என்று வந்துவிட்டாலும் நாங்கள் எரி என்றுதான் வாசிப்போம் தெரியாதா என்ன இப்படி வருவது....எனக்கு ரொம்பவே வரும் அக்கா...

   கீதா

   நீக்கு
 22. வழக்கம்போல ஸூப்பர் கீதா. நெகிழ்வான கதைகள் எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டீர்கள். ராகங்களின் பெயர், நட்சத்திரங்களின் பெயர்... அவள் ஏர்ஹோஸ்டஸ் ஆனதற்கு காரணம்.. ஸூப்பர். இதை நம்ம ஏரியாவில் வெளியிடுவதை விட, கேவாபோ வுக்கு யூஸ் பண்ணலாம் என்று ஆசைப்பட்டேன். ஆனால் தீம் காட்டிக் கொடுத்துடும் என்று விட்டு விட்டேன். கௌ அண்ணன் வேறு சண்டைக்கு வந்துவிட்டால்.....!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஸ்ரீராம்....நான் சும்மாத்தான் கேட்டேன்....மெயில்ல கொடுத்ததால் இங்கு கொடுக்கலையோனு.....பரவால்லா எங்க போட்டா என்ன ஸ்ரீராம்.....ஆமாம் கௌ அண்ணன் பெஞ்ச்ல ஏறி நிக்க வைச்சுருவார் ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 23. இதில் நான் செய்துள்ள ஒரு திப்பிசம் பற்றி எனக்கும் கீதாவுக்கும் மட்டுமே தெரியும். வேறு யாரும் சொல்லவில்லை. நாங்கள் சொல்லப்போவதில்லை!!!!

  பதிலளிநீக்கு
 24. ஸ்ரீராம் பாத்தீங்களா....துரை சகோ ஸ்ரீராமுக்குத் தெரியும் நு சொல்லிருக்கார்...

  நெல்லை கௌதம் அண்ணாவுக்கும் ஸ்ரீராமுக்கும் மட்டும் தெரியும் காரணம் நு

  இப்ப நீங்க எனக்கும் கீதாவும் மட்டும் தெரியும் அப்படினு...

  ஆ நிறைய ரகசியங்கள் புதைந்து கிடக்கிறதே!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 25. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று

  வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான

  ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது.

  அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய

  நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள்,

  பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின்

  ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  பதிலளிநீக்கு