ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

அர்ஜுனா, அர்ஜுனா !


 



அர்ஜுனா!

என்ன குருவே?

வில்லை எடு!

எடுத்தேன்!

அம்பைத் தொடு !

தொடுத்தேன்!

மரம் தெரிகிறதா?

இல்லை!

கிளை  தெரிகிறதா?

இல்லை!

இலை தெரிகிறதா?

இல்லை!

கனி?

இல்லை!

பூ?

இல்லை!

பறவை?

இல்லை!

என்ன தெரிகிறது?

தலை!

விடு அம்பை!

சர்ரக் ....  

ஆ! ஐயோ - பாவி என் தலையில் அம்பை எய்துவிட்டாயே!
           
நீதி : இலக்கு எது என்று தெளிவாகக் கூறுங்கள். தெளிவில்லாத இலக்குகள் தேறாது!