சனி, 29 ஜனவரி, 2011

படம் வரைதல் 2011 - 01 ஆகாஷ்

அநன்யா, 

இங்கே கீழே இருப்பது, ஆகாஷ் என்று ஒருவர் வரைந்த படம். நாங்க அவரிடம், அந்த இரண்டு வளை கோடுகள் மட்டும் வரைந்து, மவுசை அவர் கையில் கொடுத்தோம். அவர் மீதி எல்லாவற்றையும் வரைந்துவிட்டார்,  பெயிண்ட் உதவியால். (கே ஜெகன் எங்களை மன்னிப்பாராக. )  

ஏன் இதை எல்லாம் எழுதுகிறோம் என்றால், நீங்களும் என்ன வேண்டுமானாலும், வரையலாம், அனுப்பலாம், என்பதற்காகத்தான்.

அதையும் தவிர, அன்னபட்சி படம் நாங்கள் முழுவதுமாக வரைந்து, அதைப் போலவே வாசகர்களை வரைந்து அனுப்பி வைக்க சொல்லியிருந்தோம். கொடுக்கப்பட்டுள்ள இரண்டு கோடுகளிலிருந்து, யார், என்ன வரைந்து அனுப்பினாலும், ஏற்றுக்கொள்ளப்படும்.



(இந்தப் படத்திற்கு, யாராவது விளக்கம் பின்னூட்டத்தில் அளித்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம். படம் போட்டவர், இதற்கு விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.)
              

10 கருத்துகள்:

  1. ஷப்பாபாபா.. இப்பவே கண்ண கட்டுதே...

    பதிலளிநீக்கு
  2. அந்த ஆகாஷுக்கு ஒரு 1.5 வயசு இருக்குமா? :P

    பதிலளிநீக்கு
  3. அந்த ஆகாஷுக்கு, (1.5 X 2.5) வயசு!

    பதிலளிநீக்கு
  4. //(இந்தப் படத்திற்கு, யாராவது விளக்கம் பின்னூட்டத்தில் அளித்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம். படம் போட்டவர், இதற்கு விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.) //

    இது ஒரு பெரிய விஷயமே இல்லை, பல முக்கிய பிரச்சினைகளில் அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் இப்படிதான் நூடுல்ஸ் போல் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. // விளக்கம் பின்னூட்டத்தில் அளித்தால்//

    *-*-*-*-*-*-*-*-*-*-*-

    ஆஹா....

    கோடு கொண்ட இந்த ஓவியம் மிக மிக அருமை...

    ஒவ்வொரு கோடும் ஒவ்வொரு சேதி சொல்கிறதே!! (என்ன சேதி என்று தான் தெரியவில்லை!!)...

    சின்ன பசங்க எது பண்ணினாலும் அது அழகு தான்....

    பதிலளிநீக்கு
  6. 17600000,00,00,000 பணம் போன இடத்தின் பாதை குறிப்புகள். சரியா?

    பதிலளிநீக்கு
  7. வாழ்க்கை சிக்கலில்லாத நேர்க்கோடு கிடையாது. சிலரின் உண்மையான நிறங்கள் சமயம் வரும்போது மட்டுமே தெரியும்

    பதிலளிநீக்கு
  8. What a brilliant imagination and what a description by the tender fingers for a title 'Indian Politics'. The core lines indicate subjects like 2-G Spectrum. Keep it up dear child.

    பதிலளிநீக்கு