பாசுமதி (தொடர்ச்சி)
நேற்றைய தொடர்ச்சி...
....ஆமாம் இந்த மழையில் பார்த்த பாறைகள இவள் யானைன்னு சொல்லிவருகிறாள்.
"வாங்கப்பா எல்லோரும் க்ரீன்வூட்ஸ் ரிஸார்ட்டுக்குப் போகலாம்" என்று கிளப்பினான்.
3
வெள்ளி இரவு பெய்ய ஆரம்பித்த மழை சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் தொடர்ந்தது.
அறைகளில் கணப்பு போடப்பட்டது. சுற்றி இருந்த மலைகளில் மழை மூட்டம், அதற்குள் வெள்ளி இழையாக அருவிகள் என்று தெரிய ஆரம்பித்தன.
இரவு பகல் என்று பாராமல் உழைத்தவர்களுக்கு இந்த ஓய்வு பிடித்திருந்தது.
நிதானமாகத் தூங்கினார்கள். நிதானமாக எழுந்தார்கள். சுற்றி இருந்த வராந்தாவில் மலைச்சாரலில் உடை நனைய நடந்து மகிழ்ந்தார்கள்.
சுமதிக்கும் தாரிணிக்கும், அவளது அனஸ்தடிஸ்ட் ரூபா மேனனுக்கும் ஒரே அறை ஒதுக்கப் பட்டிருந்தது சௌகரியமாகப் போனது.
திங்கள் அன்று காலை காலை உணவுக்கு ஒவ்வொருவராக வந்து சேர ஆரம்பித்தார்கள்.
பாசுவும் சுமதி, தாரிணி ஒன்றாக நுழையும் பொது, ரூபாவும் அழகான டென்னிஸ் உடையில் உடல் வடிவம் தெரிய வந்ததும் பாசுவின் கண்கள் அவளை விட்டு மாறவில்லை.
"ரெடி ஃ பார் எ கேம்?" என்று ஆவலுடன் வினவினான்.
தாரிணியும் சுமதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணசைத்துப் புன்னகை புரிந்து கொண்டனர்.
"ஓ நான் ரெடி. முதலில் நல்ல ப்ரேக்பாஸ்ட் வேண்டும்" என்றபடி தன் தட்டை, ரொட்டி, வெண்ணெய், ஜாம் என்று நிரப்பத் துவங்கினாள்.
அவளுக்கு அடுத்து பாசுவும் ஆவலுடன் நகர்ந்தான்.
தாரிணியும் சுமதியும், நறுக்கி வைத்திருந்த பழங்களையும், கார்ன்ஃப்ளெக்ஸ் +பால் என்று எடுத்துக் கொள்ள, "ஹாய்" என்ற உற்சாகக் குரல் கேட்டதும் தன்னிச்சையாக சுமதி அந்தத் திசையைப் பார்க்க, தினேஷ், மதிவாணன் வருவதைக் கண்டு கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் .
"இந்த டேபிளுக்கு வாருங்கள்" என்று அழைப்பு விடுத்தாள். மேஜை அடியில் அவள் காலை மிதித்தாள் சுமதி. "ஏன்பா வம்பை விலைக்கு வாங்குகிறாய்?"
மதி நிறுத்தாமல் பேசுவான். காதே ஓட்டையாகிடும். "ஏன் தினேஷ் வந்தால் கசக்கிறதோ?"
சுமதியின் முறைப்பைக் கவனிக்காமல், மற்றவர்களை நோட் டம் விட்டாள்.
அடுத்த மேஜையில் ரூபாவும் பாசுவும் உலகையே மறந்தவர்களாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்
மதிவாணன் டீமைச் சேர்ந்த அருண் வருண் இரட்டையர் அவரவர் தோழிகளுடன் வர கலகலப்புக்கு கூடியது.
மதிவாணனும் தினேஷும் இவர்கள் எதிரில் உட்கார, சாப்பிடுவதில் மும்முரமானாள் சுமதி.
மதிவாணன் சுமதியிடம் பேச விரும்பி, "எல்லாம் எடுத்துக்கொண்டீர்களா
சுமதி? குழிப்பணியாரம் போடுகிறார்கள், எடுத்து வரவா?" என்றான்.
சுமதி "தாங்க் யூ காலையில் எண்ணெய் சாப்பாடு எடுத்துக்கொள்வதில்லை" என்றபடி தன் காப்பிக்காக எழுந்தாள்.
"ஃபில்டர் காஃபி மேம்" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
அங்கே தினேஷ் ஒரு தட்டில் டெகாக்ஷன், பால்,சர்க்கரை எல்லாம் வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
"உங்களுக்கேன் சிரமம்...." என்றபடி அதை வாங்கிக்கொண்டு
அனைவருக்கும் காப்பியைப் பகிர்ந்தாள்.
"பாசுவுக்கு நம் மேல் கவனம் இல்லை. ரூபாவுடன் டென்னிசுக்குப் போய்விட்டார்" என்று நமட்டுத்தனமாகச் சிரித்தான்.
"இப்பொழுதைய பொழுதே நிரந்தரம். என்ன அழகான காலை! நாம் நால்வரும் யானைகள் பார்க்கப் போவோமா?" என்று கேட்டான்.
"அவைகள் தண்ணீர் அருந்த வரும் நேரம். சீக்கிரம் கிளம்புங்கள்"
என்று வாசலை நோக்கி விரைந்தான்.
நான்கு பேரும் சேர்ந்து நடக்கையில், சுமதியிடம் ஒரு புதுவிதப் பூவைக் காண்பிக்க நின்றான் தினேஷ்.
மிக அழகான ஆரஞ்சு வர்ணத்தில் இதழ் விரித்து நின்ற பூவை ஆவலோடு பார்த்த வண்ணம் நின்ற சுமதியிடம் சட்டென்று தன் மனதிலிருந்ததைச் சொல்லிவிட்டான் தினேஷ்.
"உன்னை மதி, பாசு இருவரும் விரும்புகிறார்கள். நீ யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்? என்னை அவர்களது தூதுவனாக நினைத்துக் கொள்" என்றதும் சுமதியின் கோபம் கண்களில் தெரிந்தது.
"நான் பணம் சம்பாதிக்க வந்தேன். கணவனை சம்பாதிக்க வரவில்லை மிஸ்டர் தினேஷ். அதற்கு இன்னும் இரண்டு வருடம் போக வேண்டும்.
இப்போதைக்கு நாம் யானைகளை மட்டும் பார்க்கலாம். அவைகளுக்குத் துணை தேட தூது தேவை இல்லை.. நேரிடையாகச் சொல்லிவிடும் என்று முன்னோக்கி விரைந்தாள்.
தினேஷ் திகைத்து நின்றான், இந்தக் கோபத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.
"நில்லுங்கள் சுமதி " என்பதற்குள் அவள் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டாள். தினேஷ் தன் பொறுமையைச் சேகரித்துக் கொண்டு அந்த யானைகளின் கூட்டத்தையும், குட்டி யானைகளின் சேஷ்டையையும் ரசித்துப் படம் எடுத்தான். நடுநடுவே சுமதியையும் காமிராவில் அடைக்க மறக்கவில்லை.
தான் அவசர பட்டிருக்க வேண்டாம் என்று தோன்றியது. பெண் தான் விரும்பிய தேர்ந்தெடுத்த ஆணைத்தான் தேர்ந்தெடுப்பாள் எல்லாம் அறிவுக்கு உரைத்தது.
அன்றைய சாப்பாட்டு நேரத்தில் சுமதியைக் காணவில்லை. அறையிலே சாப்பாடை வரவழைத்துக் கொண்டதாக தாரிணி சொன்னாள் .
தினேஷுக்கு மனம் சங்கடப்பட்டது . இந்த விஷயத்தில் என் புகுந்தோம். என்று மதியையும், பாசுவையும் கவனித்தான். அவர்கள் மதிய உணவோடு உற்சாக பானங்களான பியர், இன்னும் பெண்களோடு மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
"தினேஷ் வா... எங்களோடு சேர்ந்து கொள்" என்று அவனுக்கு வேறு அழைப்பு.
மறுத்துவிட்டுக் கிளம்பிய தினேஷ், நேரே சென்றது சுமதியின் அறைக்குத்தான்.
மெலிதாக இசை கேட்டுக் கொண்டிருக்க, படுத்திருந்தவள் அவன் தட்டியதும், "உள்ளே வரலாம்" என்று குரல் கொடுத்தாள்.
தினேஷ் உள்ளே நுழைந்ததும் அவள் முகம் வாடியது.
"சுமதி...." என்று அழைத்தவன், "உன்னைத் தவறாக அணுகி விட்டேன்.
இருவரும் மிக வற்புறுத்தியதால் இந்த விஷயங்களில் அனுபவம் இல்லாத எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் உளறி விட்டேன் என்னை மன்னித்து விடு" என்றான்.
"அது எனக்கும் புரிந்தது தினேஷ். அவர்கள் இருவரும் என் வாழ்க்கையைத் தீர்மானிக்க வேண்டாம். நான் ஏற்கனவே ஒருவரைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனக்கு சற்று எட்டாக் கைதான்"
என்று புன்முறுவலோடு அவனைப் பார்த்தாள் .
அதிர்ச்சியுடன் அவளை பார்த்தவன் "யாரென்று எனக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.
"உங்களுக்கு மிகவும் தெரிந்தவர் தான். அவருக்கு என் மனம் தெரியும் நாள் விரைவில் வரும். இதோ இந்த ஐஸ்க்ரீம் நன்றாக இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள்" என்று அவனை உபசரித்தாள்.
குழப்பத்தோடு அவள் முகத்தைப் பார்த்தவனுக்கு ஐஸ்க்ரீம் இனிக்கவில்லை.
"நீ பார்த்துவைத்தவர் இரண்டு வருடம் காத்திருப்பாரா?" என்றான்.
"அது என் சாமர்த்தியத்தைப் பொறுத்து இருக்கிறது. நடக்கும் என்றே தோன்றுகிறது"
"நம் வட்டத்தில் இருக்கிறாரா?" என்றவனிடம், முகத்தைக் காட்டாமல் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, "ம்ம்ம்ம்.... இருக்கிறார்" என்றாள்.
மனம் நிறைந்த சிரிப்பு வெளிப்பட்டது அவளிடம்.
"தினேஷ் பயப்பட வேண்டாம். நாம் இப்போது ஒழுங்கான சாப்பாட்டுக்குச் செல்வோம். வாருங்கள்" என்று அழைத்ததும்
அவனும் எழுந்தான்.
"பெண்களைப் புரிந்து கொள்வது எனக்கு எப்பவும் சிரமம்" என்றான்.
"நான் புரிய வைக்கிறேன். ஆமாம் உங்கள் மணவாழ்க்கை எப்போது ஆரம்பம்?" என்று பதில் கேள்வி போட,
"உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் எனக்கு இன்பம் தான்" என்றவனை நின்று பார்த்தவள்,
"கிடைத்துவிட்டாள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நேர்மறை எண்ணம் எப்பொழுதும் நிச்சயமாக நடக்கும். ஹியர் இஸ் டு த வொண்டர்புல் ப்ஃயூச்சர்" என்று அவனிடம் கையை நீட்டினாள்.
அவள் கையைப் பற்றியதும் 'மொழி' படத்தில் வருவது போல அவனுக்குள் வெளிச்சம் பரவியது. பின் நடந்ததெல்லாம் அழகானவை.
சுபம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
கதை நன்றாக இருக்கிறது. பெண்ணுக்கு இது ரொம்ப டிரிக்கி சிட்டுவேஷன். என் நண்பனிடம் என்னைத் தூது செல்லச் சொன்ன ஒரு பெண் நினைவுக்கு வருகிறாள்.
பதிலளிநீக்குஇருந்தாலும் ஒரு பெண்ணுக்கா இத்தனை போட்டிகள் என்ற எண்ணம் வருவது தவிர்க்க இயலவில்லை...
எனக்கு இந்த மாதிரி ஒரு சிட்டுவேஷன் அமைந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன்? ஒரு பெண்ணுக்குப் போட்டியிடும் ரேசிலேயே இருந்திருக்க மாட்டேன்.. ஹா ஹா ஹா.
//என் நண்பனிடம் என்னைத் தூது செல்லச் சொன்ன ஒரு பெண் நினைவுக்கு வருகிறாள்.//
நீக்குஆ.... பின்னாடி சுவையான ஒரு கதை கேவாபோக்கு கிடைக்கும் போலிருக்கே....
இல்லை ஸ்ரீராம்... கதையா எனக்கு எழுதத் தெரியாது. நண்பனுக்கு எது சரியோ, அதை மட்டும்தான் நான் செய்திருக்கிறேன். அந்தப் பெண் சரிப்பட்டு வரமாட்டாள், ஹெல்த் பிரச்சனைகள் உண்டு என்று தூது சொல்லும்போதே அவனிடம் சொல்லிவிட்டேன். ஹா ஹா.
நீக்குஇன்னொரு சமயம், வேறு ஒரு பெண்ணுக்கு, (தூது செல்ல அவசியமே இல்லை என்றபோதும், நான் அவள் மனத்தில் என்ன இருக்கு என்று அறிய நினைத்தபோது), அவன் எனக்காகத் தூது போய், அந்தப் பெண்ணுக்கும் அவனுக்கும் 'கா' உண்டாகிவிட்டது. அப்போதும் எனக்கு அவன் மீது வருத்தம் வந்தாலும், அவனுக்கு ஆதரவாகத்தான் இருந்தேன். அது எனக்கு ஒரு அனுபவம்.
இதைக் கதையாக எழுதும் திறமை இல்லை.
அன்பு முரளி மா, எனக்கும் முதலில் இந்தக் கருவை எப்படிக் கதையாக்குவது என்று
நீக்குகுழப்பமே ...... மதுரை,கோச்சடை என்று யோசித்ததில்
அங்கே நடந்த சம்பவம் நினைவுக்கு வர மிச்ச 80 சதவிகிதம்
கதையாக்கிவிட்டேன். கௌதமன் ஜியின் கற்பனை மிக வித்தியாசம் ஆனது.
கருத்துக்கு மிக நன்றி மா.
>>> பெண்களைப் புரிந்து கொள்வது எனக்கு எப்பவும் சிரமம்!.. - என்றான்... <<<
பதிலளிநீக்குஅவனுக்கு மட்டுமா!...
அன்பு துரை செல்வராஜு,
நீக்குஎண்ணம் செல்லும் திசையில் கதை அமைந்துவிட்டது.
சுமதியின் மனதை எப்போதோ கவர்ந்திருக்கிறான் தினேஷ். அவனே
இவர்கள் இருவருக்குத் தூது வந்தது
அவளுக்கு வருத்தம் கொடுக்க,மற்றதை மகிழ்ச்சியாக முடிப்பது சுலபம் தானே,.
பாசுமதியில் பிரியாணியும் ,புலாவும் நிறைவானவை. நன்றி மா.
இயல்பான நடை..
பதிலளிநீக்குநன்றாக எழுதியிருக்கின்றீர்கள்...
பாசுமதி பிரியாணி போல!.. - அருமை...
நான் நினைத்தது போல் தினேஷ்தான் ஜோடி சுமதிக்கு.
பதிலளிநீக்குமணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்பு துரை செல்வராஜு,
நீக்குஎண்ணம் செல்லும் திசையில் கதை அமைந்துவிட்டது.
சுமதியின் மனதை எப்போதோ கவர்ந்திருக்கிறான் தினேஷ். அவனே
இவர்கள் இருவருக்குத் தூது வந்தது
அவளுக்கு வருத்தம் கொடுக்க,மற்றதை மகிழ்ச்சியாக முடிப்பது சுலபம் தானே,.
பாசுமதியில் பிரியாணியும் ,புலாவும் நிறைவானவை. நன்றி மா.❤❤❤❤❤❤❤❤
அன்பு கோமதி உங்கள் வாழ்த்துகளை அவர்களுக்குச் சேர்த்து விட்டேன்.
நீக்குநினைத்ததேதான்...அதே அதே தினேஷு!!! சுமதி!!! சுமதி மதியுள்ளவள். சு வையும் மதியையும் விட்டு மிஸஸ் தினேஷ் ஆகப் போகிறாள்!!! சூப்பர் வல்லிமா!!!
பதிலளிநீக்குகீதா
😍😍😍😍😍😍😍😍இது நெடு நாளாக அவள் மனதில் இருந்திருக்க வேண்டும்.
நீக்குகதைக் கருவிலிருந்து நான் சற்றே விலகியதற்குக் காரணம்.
பெண் மனம். அவளுடைய சற்றே பழமையான வளர்ப்பு.
தன் மனம் நாடுபவனாய்த் தேர்ந்தெடுத்துவிட்டாள். அவனும் அந்தச் சிந்தனைக்கு ஆதரவு கொடுத்ததே சிறப்பு. பா,ம இருவரையும் விட்டுவிட்டு சு/ரு//தினேஷ் சேர்த்துவிட்டாள்.Geetha ma.
அன்பு ஸ்ரீராம் , என் வழக்கமான எல்லோரும்... கடைசியில் சேர்த்தது மிக அருமை. அன்புக்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல சுபமான முடிவு. நன்றாக இருக்கிறது
பதிலளிநீக்குகீசா மேடம்... யாருக்கு சுப முடிவு? இரண்டுபேர் ஏமாந்துட்டாங்க. அதில் யார், தன் மனசுல வஞ்சம் வளர்க்கப்போறாங்கன்னு தெரியாது. இதுல சுப முடிவுன்னு சொல்றீங்களே..
நீக்குஆமாம் கீதா. அன்பு கொண்ட இருவர் இணைவதில்தான் மகிழ்ச்சி.
நீக்குதாம்பத்யம் இனிக்க இதுவே வழி.மிக நன்றி மா.
ஹாஹா முரளி. அப்படியொரு ஆங்கிளில் கதை எழுதலாமோ.
பதிலளிநீக்குவீரப்பா பாஷையில் சபாஷ் சரியான போட்டி. நீங்கதான் எழுதுங்களேன்.