செவ்வாய், 12 செப்டம்பர், 2017

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

விதி வலியது – நெல்லைத்தமிழன்.அன்புடன்

நெல்லைத் தமிழன்.வாசகர்களே!.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வரலாம். ஆனால் அந்த Impact இருக்கணும், ஆனால் நடந்ததை அப்படியே பிரதிபலிப்பதாகவும் ஆகிவிடக்கூடாது என்று முயன்றிருக்கிறேன். அதனால், உண்மைக்கும் இந்தக் கதைக்கும் தூரம் இருக்கும். கதையை வாசிக்கும்போது, மனதில் நிகழ்ச்சி ஓடவேண்டும், ஆனால் செய்திபோல் இருந்துவிடக்கூடாது என்று மனதில் தோன்றியது. கொடுக்கப்பட்ட வரிகள், சொன்ன கதைக்குப் பொருந்துகிறதா என்று பாருங்கள். நடந்த நிகழ்வைப் பற்றியும், அதில் நடக்காமல் போனவற்றைப் பற்றியும் தொடர்புபடுத்தி எழுதலாம். ஆனால் ரொம்ப நீண்டுவிடும். வெறும் கதையாக எழுதும்போதும், ‘தலைவரின்’ சாந்த முகம் என் கண்ணில் வந்துபோகிறது. இப்படி நடந்திருந்தால், இப்படி நடக்காமல் இருந்திருந்தால் என்று பலவற்றையும் யோசிக்கத் தோன்றுகிறது. ஒரு செயல், அது செய்யப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றவேண்டும். அது யாருக்கும் பிரயோசனமில்லாமல், அர்த்தம் இல்லாமல் போவதில் என்ன உபயோகம் இருக்கிறது? விதி வலியதுதானே.

எங்கள் கிரியேஷன்ஸ்- கண்டிஷனல் கரு 03  

விதி வலியது – நெல்லைத்தமிழன்