சனி, 24 நவம்பர், 2012

பொடி விஷயம்!


*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. 

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை 
நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருங்கை விதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. 

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாழை  பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.  

(மின் அஞ்சல் அனுப்பியவர்: அனந்தநாராயணன், அசோக் லேலண்டு. ஆனால் அவருக்கு அனுப்பியவர் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை! )
                

செவ்வாய், 20 நவம்பர், 2012

இணையத்தில் கச்சேரி!

             

மேலே காணப்படும் நிகழ்ச்சிகள், இணையத்தின் மூலம், உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் பார்க்க, கேட்க முடியும் என்று விளம்பரப் படுத்தியுள்ளார்கள். 

நவம்பர் இருபத்துநான்கு, சனிக்கிழமை மாலை நாலரைமணிக்கு, கீழே காணப்படும் சுட்டியில் சொடுக்கி, நிகழ்ச்சிகளை கண்டு ரசியுங்கள். 

                                                       " இதுதான் சுட்டி"


ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

வாசகர் அனுப்பிய குறும்பு 01


                 
Geetha Sambasivam சொல்கிறார் : 

   
sea world , San Antonio in Texas dolphin தலைகீழா நீந்துவது.  அவங்க நேரா நீந்தச் சொன்னதுக்கு அது குறும்பா வேணும்னு நீஞ்சும்.
   

அடுத்தது சீ லயன் விஷமம் பண்ணறச்சே!   
    

   

திங்கள், 2 ஜூலை, 2012

வா.பூ.:: By கீதா சாம்பசிவம்

           
எல்லாமே வா.பூ. தான்.  இன்னும் சிலது இருக்கின்றன.  வேணும்னா அதையும் அனுப்பி வெறுப்பேத்தலாம்னு ஒரு எண்ணம்.  என்ன சொல்றீங்க?  
             
கீதா சாம்பசிவம் 
               
எண்ணங்கள்                
எங்கள் கமெண்ட்: பூனை, யானை 'தும்பி'க்கை எல்லாம் நல்லா இருக்கு. 
                      
நானும் இருக்கேன் நண்டு வலையிலே என்கிறார் இவர்.. (கீ சா அவர்கள் சற்று முன் அனுப்பியது!! )
           

ஞாயிறு, 1 ஜூலை, 2012

வாயில்லா பூச்சிகள்:: வாசகர் படைப்புகள் 01


                        
அன்புள்ள எங்கள் ப்ளாக்,
     
படங்களைப் பகிர்வதில் மகிழ்ச்சி. தங்களின் எந்த வலைப்பூவில் வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம்.
          
அன்புடன்
ராமலக்ஷ்மி
             
வலைப்பூ: முத்துச்சரம்

 
எங்கள் கமெண்ட்: அ  ஆ இ ஈ ---- அசத்திட்டீங்க! ரொம்ப சுறு சுறு! எங்களுக்கும் வாயிருந்தும் சொற்கள் வரவில்லை! 
      

வியாழன், 3 மே, 2012

மச்சம் :: வரைந்தவர் மீனாக்ஷி
அன்புள்ள எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு,

இதை வரையறதுக்கு கொஞ்சம் இல்லை கொஞ்சம் கூடவே கஷ்டமா இருந்துது. :) ஆனா சுவாரசியமா இருந்துது. நன்றி உங்களுக்கு.

அன்புள்ள
மீனாக்ஷி.
செவ்வாய், 3 ஏப்ரல், 2012

நல்ல சகுனம் :: By மீனாக்ஷி.


                
அன்புள்ள எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு,
             
இந்த பகுதில குழந்தைகள் வரையறாங்களோ இல்லையோ நான் ரொம்ப மும்முரமா வரையறேன். :) நான் வரைஞ்ச இந்த கழுதை பேரு 'அபெல்' (Abel). எந்த கழுதை படத்தை பாத்தாலும் அதோட கண்கள் சோகமா, பாக்கவே பாவமா இருக்கா மாதிரி எனக்கு தோணும். இப்ப இந்த படத்தை பாக்கும்போதும் எனக்கு அப்படித்தான் தோணித்து.
                
சின்ன வயசுல எங்க சித்தப்பாவோட ஏதாவது கிண்டலா பேசும்போதெல்லாம் விளையாட்டா என்னை 'கழுதை, உன்னை உதைக்கணும்' ம்னு சொல்லுவார். 'கழுதை தானே உதைக்கும் சித்தப்பா' அப்டின்னு நான் பதிலுக்கு சொன்னா, 'இந்த கழுதையை நான்தான் உதைப்பேன்' அப்படின்னு சொல்லுவார். :)  இப்ப அவர் உயிரோட இல்லை. எனக்கு இந்த கழுதை படம் வரையும்போது அவர் கிண்டல் பண்ணினதுதான் ஞாபகம் வந்துது.
     
என்னோட நேரத்துல இந்த படம் வரைஞ்ச கொஞ்ச நேரம் ரொம்ப சுவாரசியமா இருந்துது. நன்றி உங்களுக்கு.

அன்புடன்
மீனாக்ஷி.செவ்வாய், 27 மார்ச், 2012

நல்ல சகுனம்


இவர் கத்தினால் நல்ல சகுனம். 


பொறுமையாக பொதி சுமக்கும் உழைப்பாளி. 


இவருடைய பாலில் குளித்தவர் யாரோ உண்டு - யார் அது? 


இவரை பேப்பரில் வரைந்தால், அந்தப் பேப்பரையே அவர் சாப்பிட்டுவிடக் கூடும் - எச்சரிக்கை. 


வரைந்து அனுப்புங்க, வலையிடுகிறோம்! 

  

ஞாயிறு, 25 மார்ச், 2012

மியாவ் By மீனாக்ஷி!


அன்புள்ள எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு,

நான் மெயில் பண்ணின மியாவ் படம் கிடைச்சுதா?   நான் கவனம் இல்லாம இந்த படத்தை  engalcreations@gmail.com  இந்த முகவரிக்கு அனுப்பிட்டேன்.  அதான் இப்போ திரும்ப இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பறேன்.   

இது நான் வரைந்த பூனை குட்டி.  பதிவுல வந்த பூனை துறு துறுன்னு ரொம்ப அழகா இருந்துது.  அதனால அச்சா அதே மாதிரி வரைய ரொம்ப முயற்சி பண்ணினேன்.  ஆனாலும் ஓரளவுதான் அதே மாதிரி வந்திருக்கு.  கொஞ்சம் உர்ருன்னு கூட இருக்கு. :)  இதோட பேரு 'cutie'.   வரைய ரொம்ப சுவாரசியமா இருந்துது.  நன்றி உங்களுக்கு.


அன்புடன் 
மீனாக்ஷி 


    

திங்கள், 19 மார்ச், 2012

பூனை வரைந்தவர் : கு கு

இதையே வெளியிட்டுவிட்டோம். இனிமேல் வரைபவர்கள் எல்லோரும் தைரியமா அனுப்பி வையுங்க. 


எங்கள் கமெண்ட்: முகத்தில் குறும்பு தெரியுதே! கு கு - இது நீங்க வளர்க்கும் பூனையா? 
    

சனி, 17 மார்ச், 2012

மியாவ்! மியாவ்!!

         
கோடை வந்துவிட்டது. 


குழந்தைகளுக்குக் கோடை விடுமுறையும் வந்திருக்கும் அல்லது விரைவில் வந்துவிடும். 


குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மீண்டும் படம் வரையும் ஆர்வத்தைக் கிளறிவிடலாம் என்று நினைத்ததால், இந்தப் பதிவு. 
              
ஒரு A5 அளவு பேப்பர் எடுத்துக் கொள்ளவும். (210 mm X 149 mm - என்று நினைக்கின்றோம். சரிதானா ஹுசைனம்மா?) 


அதில் கீழ்க்கண்ட வகையில், படிப்படியாக பென்சில் ஸ்கெட்ச் செய்யவும். 


இறுதியில் வருகின்ற உருவத்தை, தேவையானால், வர்ணம் அடித்து அல்லது கருப்பு வெள்ளைப் படமாக, JPG or BMP ஃபார்மட்டில், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். 


படம் வரையத் தெரியாதவர்கள் பூனை பற்றிய கவிதை, கதை, விவரங்கள், வியாசம் - என்று எதையாவது பதியுங்கள், அனுப்புங்கள். 


பதிவிடுகின்றோம் உங்கள் கலக்கல்களை / கிறுக்கல்களை! 

தயக்கமில்லாம அனுப்புங்க. 
                           

வெள்ளி, 13 ஜனவரி, 2012

165 ஆவது தியாகராஜ ஆராதனை.

165 ஆவது தியாகராஜ ஆராதனை விழா.

நாள்: January 13 - 2012.

நிகழ்ச்சி: பஞ்சரத்ன கிருதிகள்.

கீழே எம் பி 3 கோப்பாக. கேட்டு இரசியுங்கள்.டவுன்லோட் லிங்க் : இங்கே சொடுக்குக!

     

சனி, 7 ஜனவரி, 2012

கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா ...

                              
இசை அனுபவம் - எழுதியவர் குரோம்பேட்டைக் குறும்பன். 

ஆசிரியர்களே! 
'சவடால் கதைப் போட்டி'யில் எனக்கு டெப்பாசிட் கிடைக்காது என்பது தெரிந்துவிட்டது. 

இதோ ஒரு புதுவகை இசை விமரிசனம். விமரிசனம் கூட அல்ல - இது ஒரு அனுபவம். 

படியுங்க; பிருந்தாவன சாரங்கா பாட்டு - நெட்டிலே எங்காவது கிடைத்தால் எடுத்துப் போடுங்க - அல்லது சுட்டி கொடுங்க. 

முன்னறிவிப்பு: இது ஒரு இனிய கற்பனை. 

********************************************************************
அஸ்தினாபுரம். 
பாண்டவர்களைக் காண வந்தான் கண்ணன். பாண்டவர்கள் வாய் நிறைய வரவேற்றனர். 

பிறகு அர்ஜுனன் கேட்டான், "எங்கே கண்ணா இந்தப் பக்கம்?"

கண்ணன்: "நான் எப்பவுமே உங்க பக்கம்தானே!"

தருமர்: "அது சரி! நாங்களும் எப்பவும் உன் பக்கமே!"

கண்ணன்: " எல்லோருக்கும் அவரவர்கள் சிறு வயதில் வாழ்ந்த, விளையாடிய இடத்தைக் காணவேண்டும் என்று பெரிய வயதில் ஆசை இருக்கும். எனக்கும் இப்பொழுது நான் சிறு வயது சேட்டைகள் செய்த பிருந்தாவனத்தைக் காணவேண்டும் என்று ஆசையாக உள்ளது."

பாண்டவர்கள்: "ஆமாம் - உன் பிருந்தாவனக் கதைகளைக் கேட்கும்பொழுதெல்லாம் எங்களுக்கும் அந்த இடங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததுண்டு. தேரில்தானே வந்திருக்கின்றாய் கண்ணா? நாம் அனைவரும் அங்கே செல்வோம்."

கண்ணனும் பாண்டவரும் தேரேறி மகிழ்ச்சியாக பிருந்தாவனம் செல்கின்றனர். 
***********************************************************************

பிருந்தாவனம் சென்றடைந்தவுடன், கண்ணன், "ஆஹா ஆஹா - சிறு வயது நினைவுகள் இங்கு ஒவ்வொரு இடத்தைப் பார்க்கையிலும் நினைவுக்கு வந்து மயங்க வைக்கின்றதே!"

அர்ஜுனன்: "கண்ணா உன் சிறு வயது விளையாட்டுகளை மீண்டும் ஒரு முறை எங்களுக்கு கூறு. எந்த இடத்தில் என்னென்ன லீலைகள் புரிந்தாய் என்பதை எங்களுக்குச் சொல்லு."

கண்ணன், பாண்டவர்களுக்கு பிருந்தாவனத்தைச் சுற்றி காட்டியபடி, பல சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றான். 

பிறகு, பாண்டவர்களிடம், "நான் இங்கே ஒளிந்து கொள்கின்றேன்; என்னை நீங்கள் ஐவரும் கண்டு பிடிக்க முடியுமா?" என்று கேட்டான். 
பாண்டவர்களும் சரி என்று இசைந்தனர். 

பாண்டவர்கள் ஐவரும், அங்கு இருந்த ஒரு மேடை மீது அமர்ந்து கண்களை மூடிய வண்ணம், கண்ணன் ஒளிந்துகொள்ள சற்று அவகாசம் அளித்தனர். கண்ணன் சென்று ஒளிந்துகொண்டான். 

*************************************************************************
இதோ மேடை மீது பஞ்ச பாண்டவர்கள்: 


தர்மராக கத்ரி கோபால்நாத்(சாக்ஸஃபோன்) பீமராக பெங்களூர் ராஜசேகர் (முகர்சிங்) நகுலனாக பட்ரி சதீஷ்குமார் (மிருதங்கம்) சகாதேவனாக ராஜேந்திர நகோத் (தபலா) எல்லாவற்றுக்கும் மேலே, வில் வீரனான அர்ஜுனனுக்கு நிகர் - வில்லேந்தும் வீராங்கனை கன்னியாகுமரி (வயலின்). 

தேடல் ஆரம்பமாயிற்று. 
   
தர்மர் தேட ஆரம்பிக்கின்றார். பின்னாலேயே அர்ஜுனன் வில்லுடன் வழி தொடர, பீம, நகுல சகாதேவர்கள் பின் தொடர, கண்ணனைத் தேடுகின்றார்கள். 

தர்மர்: "அதோ அந்தக் காக்கைச் சிறகினில் இருப்பானோ?"

அர்ஜுனன்: "ஆம் அண்ணா. எனக்கும் அதே சந்தேகம்தான்!"

மற்றவர்கள்: "ஊஹூம் - இங்கே இல்லை கண்ணன்."

தர்மர்: " அப்போ அந்த மூங்கில் காட்டில்? புல்லாங்குழல் சத்தம் கேட்கிறதே - அங்கு இருப்பானோ?"

அர்ஜுனன்: "ஆமாம். அதுவும் சாத்தியமே!"

மற்றவர்கள்: "நாம் வந்தவுடன் புல்லாங்குழல் சத்தம் நின்றுவிட்டதே!"

தர்மர்: "அந்தப் பூ?"

இல்லை.

தர்மர்: "அந்த மயிலிறகில்?"

ஊஹூம் - மயிலிறகு மௌனப் புன்னகை புரிகின்றதே!

தர்மர்: "அந்தக் கருமேகக் கூட்டம் அவன்தானோ?"

மற்றவர்கள்: "கருமேகங்கள் கான மழையாகப் பொழிகின்றனவே - இங்கேயும் கண்ணனைக் காணோமே!"

தர்மர்: "அந்த வானவில்லாக இருக்கின்றானோ?"

அர்ஜுனன்: "வானவில் வந்தது போலவே மறைந்துவிட்டதே! கண்ணன் அதில் மறைந்திருக்க முடியாது."

தர்மர்: "இந்த மலை வடிவாகி நிற்கின்றானோ - அந்த மலையப்பன்?"

மற்றவர்கள்: "இல்லை - இந்த மலை எப்பொழுதுமே இங்குதான் இருக்கின்றது. பழைய தோற்றம்தான்."

தர்மர்: "இந்த இனிய தென்றல்தான் அவனோ?"

மற்றவர்கள்: "இருக்காது. இந்தத் தென்றல் நம்மைத் தீண்டிய பிறகு நம்மோடு நிற்காமல் சென்று விட்டதே! நம் கண்ணனாக இருந்தால், நம்மை விட்டு நீங்க மாட்டானே!"

தர்மர்: "அப்போ கண்ணன் எங்கே? கண்ணா நீ எங்கே இருக்கின்றாய்?"

எல்லோரும் சேர்ந்து: : "கண்ணா - எங்கே இருக்கின்றாய் நீ?"

புன்னகை தவழும் முகத்துடன், அவர்கள் எதிரில் பிரத்யட்சமாகின்றான் கண்ணன்.

பாண்டவர்கள்: "கண்ணா எங்கே மறைந்திருந்தாய் நீ? எங்களால் உன்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையே!"

கண்ணன் கூறினான்: "நான் உங்களுடனேயே இருந்தேன். நீங்கள் ஐவரும் இசைத்த பிருந்தாவன சாரங்கா ராகமாக - அந்த ராகத்தின் எழில் வடிவமாக, அந்த ஸ்வரக் கோர்வைகளை சுவாசித்தவண்ணம், தாளக் கட்டுகளாக இதயம் துடிக்க, ஆரோகண அவரோகண அலைகளின் ஆர்ப்பரிப்புகளை இரசித்தவண்ணம். உங்கள் தேடல்களுக்குள்ளேயே நான் மறைந்து நின்றதால் உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை."

                

வெள்ளி, 6 ஜனவரி, 2012

வாக்காளப் பெருமக்களுக்கு .... கீதா சாம்பசிவம் வேண்டுகோள்!


               
//கீதா சாம்பசிவம் மேடம் - கான்வாசிங் உண்டு. நீங்க உங்கள் தரப்பு வாதங்களை, உங்களுக்கு வோட்டுப் போட்டால் வாக்காளப் பெருமக்களுக்கு என்ன இலவசம் கொடுப்பீர்கள் என்று எழுதி engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். ஜனவரி பதினான்காம் தேதி வரை வாக்குப் பதிவு இருக்கின்றது. ஒரு கை பார்த்துவிடலாம்!//


//ஒரு ஓட்டுக்கு ஒரு ஆடு, ஒரு ரெப்ரெஜிரேடர், ஏசி கார் இலவசம். இன்னும் நிறைய இலவசத் திட்டங்கள் வருகின்றன. சைனாவில் ஆர்டர் கொடுத்து செய்ய வேண்டியிருப்பதால் தாமதமாகிறது. அதற்காக ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டாம். அப்பாதுரை. //

ஹாஹா, மேலே இருப்பது எங்கள் ப்ளாக் எனக்குக் கான்வாசிங்குக்குக் கொடுத்த அனுமதி.  என்னடா தானைத் தலைவியா இருந்துட்டு அனுமதி எல்லாம் கேட்கறேன்னு பார்க்கறீங்களா?  தேர்தல்னு வந்தால் எலக்‌ஷன் கமிஷனின் உத்தரவுகளை மதிக்கணுமே!  அதான்!  எலக்‌ஷன் கோட் அறிவிச்சுட்டாங்க.  அதற்கு உட்பட்டு நானும் சில, பல பதிவுகளில் போய்க் கான்வாசிங் செய்திருக்கேன்.  மிச்சத்துக்குத் தேடிக் கண்டு பிடிச்சுட்டுப் போகணும். ஹிஹி, ஆனால் கான்வாசிங் செய்யாமலேயே கீதா சந்தானத்திற்கு மதிப்பெண்கள், சே,சே, வாக்குகள் கூடுதலாய் இருக்கிறதைப் பார்த்து கண், காது, மூக்கு, வாய்னு எல்லாத்திலேயும் புகை வந்துட்டு இருக்கு.  (இங்கே மெம்பிஸில் உறைநிலைக்குப் போயிடுது ராத்திரி எல்லாம், வாயைத் திறந்தால் புகை வராமல் என்ன பண்ணும்?) சரி, சரி, இலவசம் அறிவிக்கச் சொல்லித் தேர்தல் கமிஷனே உத்தரவு கொடுத்து அதையும் எழுத்து வடிவத்தில் (ஒரு ஜாக்கிரதைக்குத் தான்) வாங்கி வச்சுட்டிருக்கிறதாலே நான் எனக்கு ஓட்டுப் போடறவங்களுக்கு என்னவெல்லாம் கொடுப்பேன் என்பதை இங்கே அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

யாருங்க அது, உங்களுக்கு வாங்கித்தான் பழக்கம்னு முணுமுணுக்கிறது?  வாங்கினதை பத்திரமா வச்சுப்போம் இல்ல? அதைப் பாருங்க! வழக்கமா நான் முப்பெரும் விழா நடத்தறச்சே தொண்டர்கள் தான் எடைக்கு எடை தங்கம், வெள்ளி, வைரம்னு கொடுப்பாங்க. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்ணறது? நேரம், ஏழரைச் சனி இப்போ எனக்கு. கையை விட்டுச் செலவு பண்ண வேண்டி இருக்கு .  இதோ பட்டியல் தயார்.


லேட்டஸ்ட் இன்டெல் கோர் லாப்டாப்


காரிலே வைச்சுட்டுப் போற சகலவசதிகளோடு கூடிய பிசி.அன்ட்ராய்ட் போன்
  
 ஆப்பிள் ஃபோன்

  

ஐ ஃபோன் 5ஜி
  
  ஐ பாட்

  

நோட் புக்

எல்லாத்தையும் பார்த்துக்குங்க.   பார்த்துட்டு எங்கள் ப்ளாக் சைடு பாரில் உள்ள வாக்குச் சாவடியில், உங்கள் ஓட்டை எனக்கே போடுங்க!  எனக்கே எனக்கு. 
      
கீதா சாம்பசிவம்.