திங்கள், 1 ஏப்ரல், 2019

அது எதேச்சையாகத்தான் நடந்தது!


பத்தாண்டுகளுக்கு முன்னால் --- 

நண்பனோடு வைத்தீஸ்வரன் கோவில். 

நண்பன் நாடி ஜோசியம் பார்க்கலாமா என்று கேட்டான். 

" பணம் வேஸ்டு, டைம் வேஸ்டு, வேண்டாம். "

" உனக்கா பார்க்கப்போறேன்? எனக்குதானே. நீ சும்மா என் கூட வந்து வேடிக்கை பார். "

சென்றோம். 


அங்கே நண்பனிடத்தில் சில கேள்விகள் கேட்டார்கள். ஓலை தேடவேண்டுமாம். பெயர் என்ன? 

கொஞ்சம் யோசித்து அவன் என்னுடைய பெயரைக் கூறினான். 

'ஏன்?' என்று விழியால் கேட்ட என்னிடம் அவன் சும்மா இரு என்று ஜாடை செய்தான். 

ஆனால் மீதி தகவல்கள் எல்லாம் இஷ்டத்துக்கு இட்டுகட்டி கொடுத்தான். 

சரி - பார்ப்போம், என்னதான் நடக்கிறது என்று, சும்மா இருந்துவிட்டேன்.  

அரைமணி நேரம் சென்றபின், ஓலைச்சுவடி கிடைத்துவிட்டது என்று ஜோசியர் வந்தார். 

நீங்கள் சொன்ன உங்க பெயரை வைத்துத் தேடினோம், இந்த சுவடி கிடைத்தது. 

"அதுல என்ன எழுதியிருக்கு?"

'இன்று இங்கே நாடி வந்த இந்த நபர், பத்தாண்டு கழித்து, புத்தாண்டுக்கு முன்பு, மாத தேதி ஒன்று, பகல்  மணி ஒன்று, வெயிலில் வேண்டாம் வீண் அலைச்சல்; அக்கம் பக்கம் வோட்டு கேட்டு அல்லாடும் பூக்களும், கைகளும்! பேருந்தில் செல்லவேண்டாம் அந்நேரத்தில், சென்றாலும் எதிர் வரும் பேருந்துகளைக் காணவேண்டாம்! அப்படிக் கண்டாலும், எதிர்ப் பேருந்தில் உம்மைப் போன்ற உருவம், சாயல், தோற்றம் கொண்ட ஜெயராமனைக் காணவேண்டாம். இதுவே உமக்கு எச்சரிக்கை.' 

இதைப் படித்துக் கூறி, ஓலையையும் நண்பன் கையில் கொடுத்து, நூறு ரூபாய் பெற்று உள்ளே சென்றுவிட்டார் ஜோதிடர்.

திரும்ப வரும்பொழுது, 'டேய் இதுக்கு என்னடா அர்த்தம்?' என்று கேட்டான் நண்பன். 

" நீ போறது, வர்றது எல்லாமே காருலதான். நீ எங்கே பேருந்து பயணம் செய்யப்போகிறாய்? வெய்யிலில் நீ எங்கே அலையப்போறே? ஜெயராமன் யாரு? பெயரை நெற்றியில் எழுதிக்கொண்டா திரியப் போறார்? என் பெயர் ஜெயராமன் இல்லை. உன் பெயரும் ஜெயராமன் இல்லை. அப்புறம் என்ன கவலை. ஓலையை இப்படிக் கொடு" என்று வாங்கி, தூர வீசிவிட்டு, " வா வீட்டுக்குப் போகலாம் " என்றேன். 

==========================




பெங்களூர் வெய்யில். ஒரே புழுக்கம். லால் பாக் வரை செல்லலாம் என்று நிறுத்தத்தில் காலியாக இருந்த பேருந்தில் ஏறி ஜன்னலோரமாக உட்கார்ந்தேன்.

பேருந்து கிளம்பி சென்றுகொண்டிருந்தது. கண்டக்டர் அருகில் வந்ததும், பர்சை எடுத்து, ரூபாயைக் கொடுத்து, டிக்கெட் வாங்கி, மீதி ரூபாயை உள்ளே வைக்கும்போது பர்சிலிருந்து அலைபேசி எண் எழுதிய ஒரு சீட்டு கீழே விழுந்தது. 

அதை எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர், எடுத்து என்னிடம் கொடுத்தார். 

' இது எதற்கு? ' என்று எண்ணி, அதைத் தூக்கிப் போடப்போனவன் -- அந்தத் துண்டுச் சீட்டைத் திருப்பிப் பார்த்தேன். 

அட! இது அந்த வைத்தீஸ்வரன்கோவில் ஜோசிய நிலைய விசிடிங் கார்ட் அல்லவா! 

திடீரென்று அன்று நடந்த நிகழ்வுகள் ஞாபகம் வந்தன. 

// நீங்கள் சொன்ன உங்க பெயரை வைத்துத் தேடினோம், இந்த சுவடி கிடைத்தது. //

// இன்று இங்கே நாடி வந்த இந்த நபர், பத்தாண்டு கழித்து, புத்தாண்டுக்கு முன்பு, மாத தேதி ஒன்று, பகல்  மணி ஒன்று, வெயிலில் வேண்டாம் வீண் அலைச்சல்; அக்கம் பக்கம் வோட்டு கேட்டு அல்லாடும் பூக்களும், கைகளும்! பேருந்தில் செல்லவேண்டாம் அந்நேரத்தில், சென்றாலும் எதிர் வரும் பேருந்துகளைக் காணவேண்டாம்! அப்படிக் கண்டாலும், எதிர்ப் பேருந்தில் உம்மைப் போன்ற உருவம், சாயல், தோற்றம் கொண்ட ஜெயராமனைக் காணவேண்டாம். இதுவே உமக்கு எச்சரிக்கை.' //

அட! இதுதான் யுகாதிக்கு மாத முதல் தேதி. மணி ஒன்று. வெயில். வெளியே தாமரைப்பூ சின்னங்கள், இன்னும் சற்று தூரத்தில் கை சின்னங்கள்! வோட்டு மாடி, வோட்டு மாடி என்று கத்தல்கள். 

கூட்டத்தை சமாளிக்க பேருந்து நின்று நின்று மெதுவே சென்றது. எதிரே மற்றொரு பேருந்து. அதுவும் மெதுவாக நின்று, நின்று வந்தது. அங்கே அது யாரு? 

என்னைப்போல ஒருவன். ஓ ! இவரைத்தான் பார்க்கக்கூடா  ....... 

திடீரென்று எல்லாமே இருண்டு போனது. 

================================================

38 கருத்துகள்:

  1. கௌ அண்ணா மதிய வணக்கம்.

    இன்னிக்கு காலைல லேட்டு. அப்புறம் எபி மாவடு, பூஸாரின் பிசுக்குத் தோசை எல்லாம் முடிச்சுட்டு வர...லேட்டாகிப் போச்சு ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஆ! அண்ணா இன்று பதிவு கதை போல! சிறு கதை போலவே இருக்கு. நெஜமாவே அனுபவமா? இல்லை கதையா?!...கதைத் தலைப்பே வைச்சுருக்கலாம்!!.கதைதான் என்று தோன்றுது ஆனா லேபல் நாடி ஜோசியம் நு மட்டும் போட்டுருக்கீங்க...சூப்பரா இருக்கு.

    நீங்களும் இப்பத்தான் போட்டுருக்கீங்க போல மதியம் போல..நான் லேட்டோனு நினைச்சேன்....ஓ அலேக் அனுபவங்கள் ஒரு மாதம் ஓவரோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. என்னைப் போல் ஒருவன் நு தலைப்பு வைச்சுருக்கலாம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதியவர் கிட்ட சொல்றேன்.

      நீக்கு
    2. அப்ப நீங்க இல்லையா இதை எழுதினது!! கு கு வா!! அதூவும் நீங்க தான்னு எங்களுக்குத் தெரியுமே!!

      கீதா

      நீக்கு
  4. ஆஹா, கொஞ்சம்முன்னாடி வாட்சப்பில் பார்த்தேன். உடனே வரதுக்கு நினைச்சா அப்போத் தான் இணையப் படுத்தல். இத்தனை நேரப்படுத்தலுக்கு அப்புறமா இப்போத் தான் வந்திருக்கு! இதுவும் நாடி ஜோஸ்யத்திலே வந்திருக்குமோ? அப்படித் தான் நினைக்கிறேன். நல்ல சுவாரசியம்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா எங்க ஏரியாவிலும் இன்று காலைல போன கரன்ட் மதியம் தான் வந்துச்சு. 4 மணிநேரம்

      கீதா

      நீக்கு
    2. கரன்ட் பிரச்னை ஏதும் இல்லை. இணையம் படுத்தல்!

      நீக்கு
  5. நல்லா இருக்கு கவுதமன் சார்... நான் கிட்டத்தட்ட இதே மாதிரி கதையை எழுத வச்சிருக்கேன்...

    நிஜமாவே நாடி ஜோசியத்துக்குப் போயிருக்கீங்களா? உங்கள் அனுபவம் என்ன?

    பதிலளிநீக்கு
  6. ஸ்வாரஸ்யம். இதுவரை நானும் நாடி ஜோதிடம் பார்த்ததில்லை. இங்கே தில்லியிலும் இந்த நாடி ஜோதிடர்கள் கடை திறந்து விட்டார்கள். ஹிந்திக் காரர்களுக்குக் கூட நாடி ஜோதிடம் பார்த்து தமிழில் சொல்கிறார்கள்! பரிகாரம் நிச்சயம் உண்டு! அப்படி எழுதப்பட்ட சில நோட்டுப் புத்தகங்களை தமிழில் இருப்பதால் என்னிடம் சில நண்பர்கள் காண்பித்து படித்து ஹிந்தியில் அர்த்தம் சொல்லச் சொல்லிக் கேட்டதுண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ! இப்படியும் ஒரு பிசினெஸ் ஆப்பர்சுனிட்டி !

      நீக்கு
  7. என்னாதூஊஊஊஊ பத்து வருடம் கழிச்சு ஜோஷியம் பலிச்சிட்டுதோ?:)

    பதிலளிநீக்கு
  8. இப்போதான் பார்க்கிறேன் நம்ம ஏரியா.. அதிராட பிங்கிக்கு மாறியிருக்கே:)) ஹா ஹா ஹா... கெள அண்ணன் இப்போ எங்கள்புளொக்குக்குப் போட்டியா நம்ம ஏரியாவை விடாக்கண்டனாக மெருகேற்றி வருகிறார்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எங்கள் ப்ளாக் வாசகர்களின் கருத்துகள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், கலக்ககளுக்காக ஆரம்பித்தோம். தூங்கிக் கொண்டிருக்கும் வலைப்பதிவை தூசித் தட்டி எழுப்ப ஒரு முயற்சி. அது சரி, குதிரை வாலி தெரியும், அது என்ன தோசை வாலி!

      நீக்கு
  9. நான் சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் என் நண்பர் சில வருடங்களுக்கு முன்னால் நாடிசோதிடம் பார்த்துள்ளார். CD யில் பதிவு செய்தும் கொடுத்துள்ளனர். அதில் சொல்லப்பட்டுள்ளது அப்படியே பின்னாளில் நடந்தது..... நாடி சோதிடத்தை நம்புவதா?...அல்லது நம்பாமல் விடுவதா?...ஒண்ணுமே புரியவில்லை சாமி!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடி ஜோதிடம் உண்மையான நாடி எனில்சொல்லுவது எல்லாம் சரியாக இருக்கும். அதிலும் ஜீவநாடி எனில் உங்கள் கைரேகையோ ஜாதகமோ எதுவுமே இல்லாமல் சரியாகச் சொல்லுவார்கள். கேட்கையில் ஆச்சரியமாக இருக்கும். எதிர்காலமும் சொல்லுகின்றனர். பரிகாரமும் சொல்லுவார்கள். ஆனால் வைத்தீஸ்வரன் கோயில்போல ஆயிரக்கணக்கில் எல்லாம் செலவு செய்யச் சொல்ல மாட்டார்கள். நம்மால் முடிந்த எளிய கோயில் பிரார்த்தனைகள், வழிபாடுகள் மட்டுமே!

      நீக்கு
    2. உண்மை ஜோதிடர்கள் குறைவு. பணம் பறிப்பவர்கள் அதிகம்.

      நீக்கு
    3. இது ஒரு பெரிய சப்ஜெக்ட். இதனையே வாசகர்களுக்கான கேள்வியாக எழுப்பிவிடலாம் கேஜிஜி சார்.

      கீசா மேடம் - யார் நல்ல ஜோதிடர்னு நீங்க பகிர்ந்துக்கோங்க

      நீக்கு
    4. சிலவற்றைச் சொல்ல முடியாது. ஆனால் என் அப்பா வீட்டு ஜோதிடர் எனக்குக் கல்யாணத்துக்கு மிகச் சரியாக நாள் பார்த்துச் சொன்னவர், இப்போது இல்லை. என் கல்யாணம் ஆன 3 வருடங்களிலேயே இறந்து விட்டார். அதன் பின்னர் ஓரிருவரைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் சொன்னதும் சரியாக இருந்திருக்கிறது. சிலர் இல்லை.

      நீக்கு
    5. என்னுடைய அப்பாவும் ஜோதிடம் சொல்வார். பல விஷயங்கள் அவர் சொன்னது போலவே நடந்துள்ளன.

      நீக்கு
  10. வைத்தீஸ்வரன் கோவிலில் உறவினர் நாடி ஜோதிடம் (பூஸமுத்து நாடி ஜோதிடம்) பார்த்தார்கள். நம்பிக்கை இல்லாமல் அவர்கள் சொன்ன கோவில் மட்டும் போய் விட்டு வந்தார்கள்.
    அவர்களுக்கு கஷ்டம் வந்த போது அந்த( ஓலைச்சுவடி குறிப்புகளை நோட்டில் எழுதி தருவார்கள்.) நோட்டை எடுத்துப் பார்த்த போது அந்த கஷ்டம் வரும் என்று அந்த நோட்டில் குறிபிட்டு இருக்கிறது.

    நம்பிக்கை இல்லை என்றால் போக கூடாது, போனால் சொன்னதை நம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும் அப்புறம் இறைவன் விட்ட வழி.

    எங்களுக்கு கஷ்டம் வந்த போது ஜாதகம் பார்த்து ஏதாவது பரிகாரம் செய்யுங்கள் என்றார்கள் நாங்கள் பார்க்கவில்லை. அந்த கஷ்டத்தை கொடுத்தவன் இறைவன், அதை தாங்கும் பலத்தையும் தருவான், எது நல்லதோ அதை செய்வான் என்று சொல்லி விட்டார்கள் என் கணவர்
    அதன் படி இருக்கிறோம்.

    ஜோதிடத்தை சரியாக சொல்பவர்களும், ஏமாற்று பேர்வழிகளும் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எங்களுக்கு கஷ்டம் வந்த போது ஜாதகம் பார்த்து ஏதாவது பரிகாரம் செய்யுங்கள் என்றார்கள் நாங்கள் பார்க்கவில்லை. அந்த கஷ்டத்தை கொடுத்தவன் இறைவன், அதை தாங்கும் பலத்தையும் தருவான், எது நல்லதோ அதை செய்வான் என்று சொல்லி விட்டார்கள் என் கணவர் அதன் படி இருக்கிறோம்.//
      சரியான நிலைப்பாடு.

      நீக்கு
    2. //நம்பிக்கை இல்லை என்றால் போக கூடாது, போனால் சொன்னதை நம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும் அப்புறம் இறைவன் விட்ட வழி.//
      மிகவும் சரி.

      நீக்கு
  11. ஏப்ரல் 1 சிறப்பு பதிவு! சிறப்பு!

    பதிலளிநீக்கு
  12. கதையை படிக்க ஆரம்பித்த பொழுதே தெரிந்து விட்டது இப்படித்தான் முடியும் என்று. சுஜாதா,ப.பிரபாகர் பாணி.

    பதிலளிநீக்கு
  13. நான் நாடி ஜோதிடம் பார்த்திருக்கிறேன். பரிகாரமும் செய்திருக்கிறேன்.

    சொன்னபடி எல்லாம் நடந்தது. அகத்தியர் ஜோதிடம்.
    நல்ல் திகில் கதை.

    பதிலளிநீக்கு