வெள்ளி, 27 ஏப்ரல், 2012
செவ்வாய், 3 ஏப்ரல், 2012
நல்ல சகுனம் :: By மீனாக்ஷி.
அன்புள்ள எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு,
இந்த பகுதில குழந்தைகள் வரையறாங்களோ இல்லையோ நான் ரொம்ப மும்முரமா வரையறேன். :) நான் வரைஞ்ச இந்த கழுதை பேரு 'அபெல்' (Abel). எந்த கழுதை படத்தை பாத்தாலும் அதோட கண்கள் சோகமா, பாக்கவே பாவமா இருக்கா மாதிரி எனக்கு தோணும். இப்ப இந்த படத்தை பாக்கும்போதும் எனக்கு அப்படித்தான் தோணித்து.
சின்ன வயசுல எங்க சித்தப்பாவோட ஏதாவது கிண்டலா பேசும்போதெல்லாம் விளையாட்டா என்னை 'கழுதை, உன்னை உதைக்கணும்' ம்னு சொல்லுவார். 'கழுதை தானே உதைக்கும் சித்தப்பா' அப்டின்னு நான் பதிலுக்கு சொன்னா, 'இந்த கழுதையை நான்தான் உதைப்பேன்' அப்படின்னு சொல்லுவார். :) இப்ப அவர் உயிரோட இல்லை. எனக்கு இந்த கழுதை படம் வரையும்போது அவர் கிண்டல் பண்ணினதுதான் ஞாபகம் வந்துது.
என்னோட நேரத்துல இந்த படம் வரைஞ்ச கொஞ்ச நேரம் ரொம்ப சுவாரசியமா இருந்துது. நன்றி உங்களுக்கு.
அன்புடன்
மீனாக்ஷி.
திங்கள், 2 ஏப்ரல், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)