திங்கள், 19 ஜூன், 2017

குற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்


அன்புடன்
நெல்லைத் தமிழன்

கண்டிஷனல்  கருவுக்கு கதை போட தெரியுமா?

சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேசுவதற்கு நான் 1 மணி நேரம் பேச்சைத் தயாரித்தால், அதே சப்ஜெக்டை ½ மணி நேரம் பேச 2 மணி நேரத்துக்குமேல தயாரிக்கறதுல செலவழிக்கணும். 10 நிமிடம்தான் பேசப்போறேன்னா, அதுக்கு இன்னும் நிறைய நேரமாகும் என்ற பொருள் வரும்படி சொல்லியிருக்கிறார். சிறுகதைக்கும் அதுதான் அளவுகோல் என்று நினைக்கிறேன். 20 வரிக்குள்ள சிறுகதை எழுதணும், அதுவும் கொடுத்த தீம்ல எழுதணும்னா அதுக்கு ரொம்பத் திறமை வேணும். நானோ, கதை எழுதறது கம்ப சூத்திரமா என்று எண்ணி எழுத முயல்கிறவன். எழுதும்போதுதான் தோணுது, நெடுங்கதை எழுதறது கொஞ்சம் சுலபம், 20 வரி (ஒரு பதிவுல அடங்கறமாதிரி) சிறுகதை எழுதறதுக்கு ரொம்பத் திறமை வேணும்னு. “நம்ம ஏரியா” சொன்ன கண்டிஷன்லதான் கதை எழுதியிருக்கேன். கொஞ்சம் (‘நிறையவே?) வள வளன்னுதான் எழுதியிருக்கேன். படம் இல்லைனா படிக்க சுகப்படாதுன்னு ஒரு படத்தையும் போட்டிருக்கேன் (எல்லாம் ஏதோ பத்திரிகையில் பார்த்த படம்தான்). அதுக்காக, இந்தப் படம் எந்த இடத்திற்காகப் போட்டிருக்கிறார்னு ஆராய்ச்சியெல்லாம் பண்ணாதீங்க. உண்மையாகவே 80கள்ல நல்ல படம் வரையும் திறமை இருந்தது. இப்போது பொறுமையே இல்லை. இதை வரைய 8 நிமிடங்கள் எடுத்துக்கொண்டேன்.


குற்றம் பார்க்கில் ... 

ஏம்பா.. என்ன பண்ணிண்டிருக்க. அம்மா கடைக்குப் போன்னு காலைலேர்ந்து கத்திண்டிருக்கா. நீயானா இங்க உட்கார்ந்து என்னவோ எழுதிண்டிருக்கயே.

டே.. இன்னைக்குள்ள ஒரு போட்டிக்கு கதை எழுதணும்டா. அதை எழுதிமுடிச்சுட்டேன்னா,கடைக்குப் போம்போது போஸ்ட் பண்ணிட்டு வந்துடுவேன். ரெண்டு நாளைக்குள்ள போய்ச் சேர்ந்துடும். இல்லைனா அப்புறம் டயம் கிடைக்காதுடா.

“இன்னுமா எழுதிண்டிருக்க”

“இல்லைடா. ஒரு வழியா கதையை எழுதிமுடிச்சுட்டேன். ஆனா ஒண்ணுமட்டும் நெரடறது”

என்ன கதை எழுதியிருக்க. வாசிச்சுப் பார்க்கவா?

‘பாரேன்’.

---

காலையில் கண்முழித்த ராமமூர்த்திக்கு, மேல்பெர்த்தில் படுத்துக்கொண்டிருந்தவரைப் பார்த்துத் திடுக்கிட்டது. பார்க்க கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தார். நாம படுத்துண்ட கீழ்பெர்த்துக்கு உரிய விசுவனாதன் அவராக இருக்குமோ என்ற சந்தேகம். இன்னும் பலர் தூங்கிக்கொண்டிருந்தார்கள். நேரம் 5 மணி என்று கெடிகாரத்தில் ஒளிர்ந்தது. எழுந்து விரைவாக பக்கெட்டுடன் கழிவறை நோக்கிச் சென்றார். அவருக்கு தூர ரயில் பிரயாணமானாலும் சரி, தினமும் காலையில் குளிக்கவில்லையானால் ஓடாது. காலைக்கடனை முடித்துவிட்டு, குளித்து நெற்றி நிறைய விபூதி பூசி, தன் இடத்துக்கு வரவும், கம்பார்ட்மென்டில் ஒவ்வொருவராக எழுந்திருக்கவும் சரியாக இருந்தது.

என்ன டாக்டர் சார்… சிவப்பழமா இருக்கேள். எனக்கு, பல் தேய்க்கிறேனோ இல்லையோ, முதலில் காபி வயித்துக்குள் போனால்தான் மற்ற வேலையெல்லாம் ஓடும். பக்கத்து சீட் பத்மனாபன் கொட்டாவி விட்டுக்கொண்டே சொன்னார்.

‘காபி, டீ’ ரெண்டும் வரப்போறது. அவா அவா டம்ளர் எடுத்துண்டு ரெடியா இருங்கோ. டூர் ஆபரேடர் உதவியாளர் ஒவ்வொரு பகுதியிலும் உரத்துச் சொல்லிக்கொண்டே சென்றார். கட்டையான அந்தக் காண்டாமணி குரலைக் கேட்டு, எல்லோரும் எழுந்து அவரவர் பைகளில் டம்ளரைத் தேட ஆரம்பித்தனர்.

சுவாமினாதனும் மெதுவாக இறங்கி, அவரது பையைத் துழாவ ஆரம்பித்தார்.

“சார்.. நீங்கதான் சுவாமினாதன் சாரா?”  “ஆமாம்”

“நான் டாக்டர் ராமமூர்த்தி. நீங்க நடு ராத்திரிதான் ரயில்ல ஏறப்போறதாச் சொன்னா. கொஞ்சம் உடம்பு அயர்ச்சியா இருந்தது. என்னைவிட சின்னவர்தானே என்று நினைச்சு உங்களோட கீழ் பெர்த்துல படுத்துண்டுட்டேன். வந்தபோது எழுப்பியிருந்தேள்னா, மேல் பெர்த்ல போய்ப் படுத்துண்டிருப்பேன். சாரி”

“அதுனால என்ன சார். இந்த முதுகெலும்பு பிரச்சனையாலதான் மேல ஏறிப் படுத்துக்க சிரமமாயிருந்தது. அதுக்காக தூங்கறவாளை எழுப்பலாமா? காசிக்கு, பாவத்தைத் தொலைக்கப் போறவன், கூடக் கொஞ்சம் பாவத்தை ஏன் சேத்துக்கணும்?”

காபி, டீ வினியோகம் ஆனதும், டூர் உதவியாளரிடம், எப்போது டிபன் வரும்னு சுவாமினாதன் கேட்டார். “இப்பவே ரெடியாயிருக்கு. எல்லாரும் பல் தேய்ச்சு ரெடியாகிடட்டும். பதினைஞ்சு நிமிஷத்துல கொண்டுவந்திடறேன்”

எல்லோரும் தட்டில் சுடச்சுட பொங்கலும், சட்டினியும் வாங்கினபின், பெட்டியில் கலகலப்பு திரும்பியது.

“சுவாமி சார்.. நேத்து நைட் எங்களோட இருந்துருந்தேள்னா, ராத்திரி 11 மணி வரைல ஒரே சிரிப்பும் கும்மாளமுமாப் போயிருக்கும். நீங்க மிஸ் பண்ணிட்டேளே. சீட்டுக்கச்சேரிலயும் சேர்ந்திருக்கலாம். என்ன ஒரு கை குறைஞ்சுடுத்து” கோண்டு என்கிற கோவிந்தன் அங்கலாய்த்தார். சுவாமினாதனிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே வெளிப்பட்டது.

‘டாக்டர் சார்.. என்ன தட்டைத் தூக்கிண்டு கிளம்பிட்டேள்” கோண்டு வம்புக்கிழுத்தார்.

‘அம்மாவும் வொய்ஃபும் சாப்டாச்சான்னு பார்த்துட்டு வந்துடறேன்’

கம்பார்ட்மென்டில் ஒரு பகுதியில் பெண்களுக்குத் தனியிடம் ஒதுக்கியிருந்தார்கள். அவாளுக்குள்ள பேசிண்டிருக்கவும், சட்டுனு அமைதியா தூங்கறதுக்கும் அது வசதிதான். டூர் ஆபரேட்டருக்குத்  தெரியும். எப்போதும் ஆண்கள் சைடுல இரயில் பிரயாணம்னா சீட்டு, கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது. எப்படியும் கோவில், மற்ற இடங்களெல்லாம் பார்க்கப்போகும்போது அவா அவா பெண்டுகளோட சேர்ந்துதான் போவா. பிரயாண சமயத்திலாவது கொஞ்சம் எஞ்சாய் செய்கிறவர்கள் எஞ்சாய் செய்யட்டுமே என்று இப்படி அரேஞ்ச்மென்ட். பெரும்பாலும் எல்லோருக்கும் இதில் சந்தோஷம்தான்.

திரும்பி வந்தபின், ராமமூர்த்தி, தனக்கு எதிரே உட்கார்ந்திருந்த சுவாமினாதனைப் பார்த்தார். “என்ன சார்.. சோர்வா இருக்கறமாதிரி தெரியறது. நீங்க மட்டும்தான் வந்திருக்கேளா.. அல்லது ஆத்திலயும் வந்திருக்காளா?”

“இல்லை டாக்டர் சார். நான் மட்டும்தான்.”.

“என்ன சார்… கயா யாத்திரைனா சும்மாவா. ஆத்திலயும் கூட்டிண்டு வந்திருக்கலாமே”

“சார்.. நான் ஒரு டிவோர்சி. என் அம்மா சமீபத்துல பரகதி அடைஞ்சுட்டா. என்னோட உடம்பு கொஞ்சம் சரியா இருக்கறச்சேயே அவளுக்கு கயா ஸ்ராத்தம் பண்ணிடலாம்னு இதுல ஜாயின் பண்ணினேன்”

“அடடா சின்ன வயசுலேவா உங்காத்து மாமியைப் பிரிஞ்சுட்டேள்? குழந்தைகள்லாம் இருக்கோ?” கோண்டு பேச்சில் நுழைந்துகொண்டார்.

“என்னோடது கொஞ்சம் வித்தியாசமான கதை. ரொம்பப் பேர் சொந்த வாழ்க்கையின் அவலத்தை வெளில சொல்லமாட்டா. நான் பண்ணினது தவறுன்னு எனக்குத் தோன்றினதுனால, அதைச் சொல்றதுக்கு நான் வெட்கப்படலை. தவறை, தவறுன்னு புரிஞ்சுண்டு அதை வெளிய வெட்கப்படாமல் சொல்றதுதான், அதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறதுக்கான முதல்படின்னு நான் நம்பறேன்”

ஏதோ சுவாரசியமான கதை கேட்கற ஆவல் எல்லோருக்கும் வந்தது. சுவாமினாதன் தொடர்ந்தார்.

‘நான் அம்மாவுக்கு ஒரே மகன். ரொம்ப நாள் கழிச்சுப் பொறந்தவன். எங்க அம்மா ஜாதி விட்டு ஒரு செட்டியாரைக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுண்டா. ஜாதி விட்டு கல்யாணம் செஞ்சுண்டதுனால, எங்க அம்மாவை அவா உறவினர்களெல்லாம் விலக்கிட்டா. அப்பா பணக்காரானாலும் அவருக்குள்ள சொத்தைப் பிரிச்சுக் கொடுத்துட்டு உறவை அத்துண்டுட்டா. எனக்கு 6 வயதா இருக்கும்போதே எங்கப்பா இறந்துட்டா. அப்போலேர்ந்து எங்க அம்மாவுக்கு நானும், எனக்கு அவளுமா இருந்தோம். நானும் நல்லாப் படிச்சு ஆடிட்டரானேன். எங்கம்மா கொஞ்சம் கண்டிப்பானவ. எதுவும் ஒரு ஒழுங்கோடதான் நடக்கணும்னு அவளுக்கு. அதை மீறினா ரொம்ப கோபப்படுவா. நானும் அம்மா மனம் கோணாம எப்போதும் எங்கம்மாவுக்கு விட்டுக்கொடுத்துடுவேன்.  அவ செய்யறது தவறுன்னு மனசுக்குத் தோணினாலும் அதை வெளிப்படையா சொல்லவே மாட்டேன். சரி. சரி.. பெரியவங்க.. வாழ்க்கையிலே தனிமையாவே ரொம்பவருஷமா கஷ்டப்படறாளேங்கற எண்ணம்தான் என் மனசுல இருக்கும். அப்படி இருந்தது என் வாழ்க்கையைப் புரட்டிப் போடும்னு நான் நினைக்கவேயில்லை”. சுவாமினாதன், பெருமூச்செறிந்து ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தார்.

“யாருக்கேனும் இன்னும் பொங்கல் வேணுமா? அடுத்து 10 மணிக்கு டீதான். மத்தியானம் அலஹாபாத் போன உடனே அங்கே ரெண்டு மணிக்கு லஞ்ச்” உதவியாளர் சொல்லிக்கொண்டே சென்றார். கதை கேட்கிற சுவாரசியத்துல யாருக்கும் பசியைப் பத்தின கவலை இல்லாமல் போயிடுத்து.

அப்படி என்ன ஆயிருக்கும். எல்லோர் மனதிலும் இந்தக் கேள்வி எழுந்தது. சட்டென்று எழுந்த அமைதியே சுவாமினாதனுக்கு மீதிக் கதையைச் சொல்லும் உத்வேகத்தைக் கொடுத்தது.

“அம்மா ஜாதிமாறி கல்யாணம் பண்ணிண்டதால, எனக்குக் கல்யாணம் பண்ணறது கொஞ்சம் தடை பட்டுண்டே போயித்தான் நடந்தது. என் ஆத்துக்காரி கல்யாணியோட எங்க அம்மாவுக்கு ஆரம்பத்துல நல்லா ஒத்துத்தான் போச்சு. ஆனா, அவளுக்கு எங்க அம்மா எல்லாத்துலயும் தலையிடறது பிடிக்காமல் போயிடுத்து. நான் சாப்பிடறதுகூட, எங்க அம்மாவோடதான் சாப்பிடணும்னு எதிர்பார்த்தா. மூச்சுக்கு முன்னூறு தடவை, சுவாமிக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது, அதப் பண்ணினயா, இது வேண்டாம்னு ரொம்ப மூக்கை நுழைச்சது கல்யாணிக்கு வெறுப்பு வர காரணமாயிடுத்து. எப்போப் பாத்தாலும் கல்யாணிகிட்ட சிடுசிடுன்னு இருப்பா. சாயந்திரம் நான் வந்தா கல்யாணியைப் பத்தி ஏதேனும் குறை சொல்லிண்டிருப்பா. கிட்டத்தட்ட கல்யாணி ஒரு மூணாம் மனுஷி மாதிரித்தான் வீட்டுல இருந்தா. நான் வீட்டுல இல்லாதபோது ரெண்டுபேரும் ரெண்டு துருவங்களாத்தான் இருந்தாங்க.  எனக்கு அம்மாவைக் கடிந்து சொல்ல மனமே இல்லை. கல்யாணிட்ட, எவ்வளவோ சொல்லிப்பாத்தேன், ‘அவ பெரியவ. புரிஞ்சிக்கறது கஷ்டம்னு’. ஒரு கட்டத்துல தனிக்குடித்தனம் வச்சால்தான் ஆச்சுன்னு கல்யாணி சொல்லிட்டா. அவள் சொன்னதுல தப்பில்லை. ஆனால் கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்குள்ள தனிக்குடித்தனமா, அம்மாவை எப்படி தனியா விடறது? என்னால அதை நினைச்சே பார்க்கமுடியல. என் நேரம்தான் சரியில்லைனு சொல்லணும். யாரோட சமாதானமும் கல்யாணி மனசுல ஏறவேயில்லை. எங்க அம்மாவும் தன்னை மாத்திக்கொள்ளவேயில்லை. ஒரு நாள், தன்னோட அம்மா வீட்டுக்கே போறேன்னு எழுதிவச்சுட்டு கல்யாணி போயிட்டா. அப்போ இருந்த மனநிலைல எனக்கும் கோபம் வந்துடுத்து. சமாதானப் படுத்த முயற்சி எடுக்கலை. அவ ஊருக்குப் போய் அவள்ட பேசி, அவளை வரச்சொல்ல எனக்குத் தன்மானம் இடம் கொடுக்கலை. கோபத்துல விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிட்டேன். 

“என்ன டைவர்சா?” ஏக காலத்தில் சத்தம் வந்தது. “ஐயையோ.. சமாதானப்படுத்தலையா நீங்க. இல்லை மத்தவா மத்யஸ்தம் பண்ணலையா”.

“அவளை சமாதானப்படுத்தலை. அம்மாவுக்கும் புரியவைக்க முடியல. தனிக்குடித்தனம்னா சரி.. நீங்க அம்மாவை விட்டுட்டு வரணும்கறதுதான் அவாளோட கண்டிஷனாக இருந்தது. அதுக்கு எனக்கு மனசு இல்லை. கடைசில விவாகரத்தாயிடுத்து”

“வேற கல்யாணம் பண்ணிண்டேளா? அப்புறம் என்னாச்சு”

“அதுக்குள்ள அம்மாவுக்கும் கொஞ்சம் முடியாம ஆயிடுத்து. அவ, தான் பண்ணினது தப்புன்னு நினைக்கலை. அவ குணம் அப்படி. கொஞ்ச வருஷம் கழிச்சு, அம்மா என்னை, கல்யாணியைப் போய் பாத்துட்டுவாடா. டைவர்ஸ் ஆச்சுன்னு நினைக்காதேன்னு சொன்னா. நானும் தயக்கத்தோட அவ ஊருக்குப் போனேன். அவளும் அவ பெற்றோரும் ஊரைக் காலிபண்ணிட்டுப் போயிட்டான்னு கேள்விப்பட்டேன். எங்க அம்மாவோடதான் என்னோட வாழ்க்கைன்னு ஆய்ப்போச்சு. அது ஆச்சு 20 வருஷத்துக்குமேல. ரெண்டு வருஷம் முன்னால்தான் அம்மா காலமாயிட்டா. அவளாவது நற்கதி அடையட்டும்னு கயா ஸ்ராத்தத்துக்காகப் போறேன்.. நம்பி வந்த பொண்ணோட வாழ்க்கையை அழிச்ச பாவத்துக்குத்தான் ப்ராயச்சித்தமே கிடையாதே”

குனிந்து கண்ணில் பெருகும் நீரைத் துடைத்துக்கொண்டார்.

“வருத்தப்படாதீங்கோ சார்.. உங்களைப் பார்த்தா என் சகோதரன் மாதிரிதான் எனக்கு எண்ணம் வருது. விதியை யாரால மாத்த முடியும்”  ராமமூர்த்தி சுவாமியின் கையைப் பிடித்துக்கொண்டார்.




‘ஏன்னா.. உங்களை அம்மா கூப்பிடறா” நித்ய கல்யாணி ராமமூர்த்தியைக் கூப்பிட்டாள்.  அவர் யாருடைய கையைப் பிடித்திருக்கிறார் என்று பார்த்த நித்யாவுக்கு சுரீர் என்று மனதில் தோன்றியது. “இதோ வர்றேன் ஏதேனும் பிரச்சனையா”  கேட்டுக்கொண்டபடி ராமமூர்த்தி மனைவியைத் தொடர்ந்தார்.

என்ன மாதிரியான பெண்ணை, மனைவியாக எனக்கு பகவான் கொடுத்திருக்கிறார். ராமமூர்த்தியின் மனதில் பெருமிதம் ஏற்பட்டது.

சிறுவயதிலிருந்தே அவருக்குபிறருக்கு உதவும் எண்ணம் இருந்தது. தந்தையில்லாமல் தன்னை வளர்த்த அம்மாவுக்கும் அதே எண்ணம்தான். எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பாள். ‘பகவான் கொடுத்த உயிர்அடுத்தவாளுக்கு உதவறதுக்குத்தாண்டா. ராமூ,நம்மகிட்ட இருக்கற பணம்லாம் நம்மோடது இல்லடா. நாம பகவானின் பணத்தைத்தான் கையாளறோம்னு எப்போயும் நினைக்கணும். அடுத்தவாளுக்கு உதவ முடியலைனா மனுஷ ஜன்மம் எடுத்து என்ன பயன்இல்லை பணத்தினால்தான் என்ன பயன்”

நன்றாகப் படித்த ராமுதனக்கு உகந்த தொழிலாகமருத்துவரானார். சிறிய கிளினிக்கை வைத்திருந்தாலும்அவர் கவனம் முழுக்க மேலே மேலே படிப்பதிலும்மற்றவர்களுக்கு எந்த எந்த வழிகளில் பயன்படலாம் என்பதிலுமே நேரம் கழிந்தது. அம்மா என்ன சொன்னாலும் தட்டாத ராமமூர்த்திஅம்மா கல்யாணப் பேச்சை எடுக்கும்போதெல்லாம் தட்டிக்கழித்துவிடுவார். லட்சுமிக்கு இது ரொம்ப வருத்தம் என்றாலும்பத்து ரூபாய் டாக்டர் என்று மகன் பெயர் பெற்றது அவளுக்கு சந்தோஷம்தான். அடுத்தவர்களுக்கு உதவணும்னு தான் சொல்லிக்கொண்டே இருந்தது இந்த அளவு அவன் மனசை ஆக்கிரமிக்கும் என்று அவள் நினைத்ததில்லை. வாரம் ஒரு நாள் எங்க இலவச மருத்துவ முகாம் அமைத்தாலும் தானும் போய் சேவை செய்யப் புறப்பட்டுவிடுவார். மனதில் எப்போதுமே திருமணம் செய்துகொள்ளும் எண்ணமோ அந்த ஆசையோ அவருக்கு ஏற்பட்டதில்லை. அம்மாவுக்கு உடம்பு முடியாவிட்டால் பார்த்துக்கறதுக்குக் கூட வீட்டில் ஒருத்தி இல்லையேடா என்று அம்மா சொல்லும்போதெல்லாம்அதுக்கென்னமாஒரு நர்ஸை ஏற்பாடு பண்ணிடுவேன்,கவலைப்படாதே என்று சொல்லிவிடுவார்.   ஒரு நாள்அம்மா, ‘ஏண்டா எனக்கு முடியாமப் போயிடுத்துனா யாரையோ விட்டுப் பார்த்துக்கச்சொல்வேன்னு சொல்றயே.. நீ கல்யாணம் பண்ணிண்டு உன் பொண்டாட்டி என்னப் பாத்துப்பான்னு சொல்ல மாட்டேங்கிறயே’ என்று கண்ணீர் விட்டபோதுதான்சரிஅம்மாவுக்காக திருமணம் செய்துகொள்ளலாம் என்று தோன்றியது. ஆதரவற்ற பெண்ணையோ அல்லது துணையை இழந்த பெண்ணையோதான் திருமணம் செய்யவேண்டும் என்றும் அவர் தீர்மானித்தார். இப்படித்தான் நித்யா அவர் மனைவியானார். தன்னுடைய லட்சியத்துக்குக் கிஞ்சித்தும் குறை வராமல்வீடுஅம்மாவின் சௌகரியம் போன்ற எதுவுமே அவருக்குக் குறுக்கே நில்லாமல்அவருக்கு மிகவும் உதவியாக இருந்தாள். அம்மாவுக்கோஅவள்அவரைவிட முக்கியமானவளாக ஆகிவிட்டாள். ஆச்சு.. பதினைஞ்சு வருஷம் ஓடினதே தெரியலை. குழந்தை இல்லை என்பதைத் தவிர,வேறு குறை எதுவும் இல்லை. அம்மாகாசி கயா போன்ற புண்ணிய ஷேத்திரத்துக்குப் போகவேண்டும் என்று சொன்னதால் மூன்றுபேரும் இந்தப் பயணத்தில் சேர்ந்திருந்தார்கள்.

என்னம்மா”... ‘. அம்மா இருந்த கேபினில்நித்யாவைத் தவிர பிறர் இல்லை. “ஏண்டா.. காசில 7 ராத்திரி தங்கி விசுவனாதருக்கு அபிஷேகம் செய்தா குழந்தை கண்டிப்பா பொறக்கும்னு இப்போ ஒருத்தர் சொன்னா. நாம அங்க இருந்துட்டு அப்புறமா திரும்பினா என்னடா”. “அம்மா.. ப்ராப்தம் இருந்தா குழந்தை பிறக்கும். அதுக்காக இதிலெல்லாம் எனக்கு விருப்பம் இல்லை. என்னை வற்புறுத்தாதே. பகவானுக்கேஎனக்குன்னு குடும்பம் இருந்தா அதுலதான் என் கவனம் போகும்இவன் மத்தவங்களுக்கு சேவை செய்யட்டும்னு குழந்தை பாக்கியம் கொடுக்கலையோ என்னவோ. இந்தத் தடவை இந்த யாத்திரைக்கு வந்தது உனக்கு உடம்பு நல்லா இருக்கும்போதேஇந்த இடங்களுக்கெல்லாம் கூட்டிண்டுபோணம்னுதான். நீ ஏன் எங்களைப் பத்தி விசாரப்படறே” என்றவாறே திரும்பினார் ராமமூர்த்தி.

......
யாத்திரையிலிருந்து திரும்பினபிறகு ரெண்டு நாள் கழித்துஒரு மத்தியான வேளையில் கல்யாணியிடம் லட்சுமி சொன்னாள். “சின்ன வெங்காயத்தை நான் உரிக்கறேன். சாயந்திரம் இட்லிக்கு வெங்காய சாம்பார் பண்ணிடு”.

“பாத்துப் பண்ணுங்கோ அம்மா. கத்தி கைல பட்டுடப்போறது. நீங்க ஏன் இதெல்லாம் பண்ணணும். நானே பண்ணிப்பேனோல்லியோ”.

“அலகாபாத் போய்ச் சேர்ந்த அன்னைக்கு நீங்க ரெண்டுபேரும் என்னடி தனியாப் பேசிண்டிருந்தேள். வரும்போது உன் கண் கலங்கி இருந்தது. குழந்தை விஷயமா காசில தங்கச்சொல்லிச் சொன்னதுக்கு ஏதேனும் சொன்னானாஉன்னை ஏதேனும் திட்டினானா?”

“இல்லம்மா. அவர் அதைப்பத்திலாம் ஒண்ணும் சொல்லலை. அவர் என்னைக்கு என்னைத் திட்டியிருக்கார்?.”

“அப்புறம் எதுக்குடி கண் கலங்கியிருந்ததுநான் அப்போவே கேட்கக்கூடாது மறுநாள் கேட்கணும்னு நினைச்சேன். அப்புறம் எல்லோரோடவும் யாத்திரைல இருக்கறச்சே கேட்கவே மறந்துடுத்து”

“உங்கட்ட சொல்லாததுக்கு மன்னிச்சுருங்கோம்மா. அன்னைக்கு ரயில்ல என்னோட முதல் கணவனும் வந்திருந்தார்”.

“யாரு. சுவாமினாதன்னு சொன்னேயே. அவரா?”

“ஆமாம். நீங்க கூப்பிட்டேள்னு நான் உங்க பிள்ளையைக் கூப்பிடப் போனப்ப இவர் இருந்த அதே பொட்டிலதான் அவரைப் பார்த்தேன். அவர்உங்க பிள்ளைட்ட தன்னோட கதையெல்லாம் சொன்னாராம்.. கதையைக் கேட்கும்போதே அவருக்கு சந்தேகம் வந்ததாம். நான் சட்டென்று முகம் மாறினதைப் பாத்து அவருக்குப் புரிஞ்சுடுத்தாம்”

“ராமு அதுக்கு என்னடி உங்கிட்டச் சொன்னான்?”

“உங்க பிள்ளை அன்னைக்கு எங்கிட்ட பேச வந்தப்போஎனக்கு ரொம்ப பட படப்பா இருந்தது. ஆனா அவர், ‘நித்யா.. எல்லாப் பொண்களும் நல்லவாதான். நாம அவா கிட்ட நடந்துக்கறதப் பொறுத்துத்தான் இருக்கு. நீ அதே பொண்ணுதான். அம்மாவுக்கு உன் மேல் எத்தனை அன்பு,பாசம். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னெல்லாம் அம்மாக்கு நான் எப்படா ஆத்துக்கு வரேன்னு இருக்கும். நீ ஆத்துல காலடி எடுத்துவச்சப்பறம் என்னைவிட உம்மேலதான் அவளுக்கு அத்தனை அன்பு. எனக்கும் வாழ்க்கைல ஒரு அர்த்தமும்அம்மா சந்தோஷத்தைப் பார்த்து நிம்மதியும் கிடைச்சது. எங்களுக்குக் கிடைச்ச தனமாத்தான் நீ இருக்க. அதே பொண்ணோட நல்ல குணம் அவாளுக்கு அப்போ சரியாத் தெரியலை. அத விதின்னுதான் சொல்லணும். இப்போ அவர் வருந்தி என்ன பிரயோசனம்நீ இதை நினைத்து விசாரப்படாதே. அம்மாட்டயும் சொல்ல வேண்டாம். பழைய அத்தியாயத்தை மீண்டும் புரட்டறதுல என்ன அர்த்தம் இருக்கு’ ன்னுட்டார். அவரோட அன்ப நெனைச்சு எனக்குக் கண் கலங்கித்து.

லட்சுமிக்கும் கண்களில் நீர் வந்தது. அது வெங்காயத்தாலா அல்லது பிள்ளையின் பண்பான குணத்தாலா என்று அவளுக்குத் தெரியவில்லை.
----

ஏம்பாஎன்ன தலைப்புல கதை எழுதச் சொன்னாஇல்லை ஏதேனும் தீம் கொடுத்திருக்காளா?

“ரயில் பிரயாணத்துல கதை நடக்கணுமாம். டைவர்ஸ் பண்ணின பெண், இன்னொருவன் மனைவியா, அவர் கணவரோட அதே டிரெயின்ல வரணுமாம். அவளோட பழைய கணவனும் புதுக் கணவனும் பேசி ஒருவரைப் பற்ரி மற்றொருவர் அதிக விவரங்கள் தெரிஞ்சுக்க ஆசைப்படறாங்களாம்”

அதுக்கு எதுக்கு, அப்புறம் கதையை வள வளன்னு நீட்டிருக்க? ராமமூர்த்தி வைஃப் சுவாமியைப் பாத்தாச்சோன்னோ. அதோடயே கதை முடிஞ்சதோல்யோ. அப்பவே. சண்டை போட்டா இல்லை, பயந்து பேசாமப் போயிட்டா இல்லை சுவாமி மன்னிப்புக் கேட்டார் அப்படின்னு முடிச்சிருக்கவேண்டியதுதானே. குழந்தை வரம், காசில தங்கறதுன்னுலாம் வள வளன்னு சப்ஜெக்டை விட்டுப் போறது.

‘டே.. கதை கடைசில அவா கொடுத்துருக்கற வரில முடியணுமாம்’.

“எந்த வரிலயாம்?’

 "பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் அவர்கள்." 

(கதை முடிந்துவிட்டது. இனி  நம்ம ஏரியா ஆசிரியர்  ஒருவரின் அதிகப்பிரசங்கம் :  "சர்ச்சில் சொல்லியிருக்கிறார்" என்று படிக்க ஆரம்பித்ததும், Church என்று நினைத்து, யார் சொன்னார், எந்த சர்ச்சுல  என்று கொஞ்சம் குழம்பினேன். அப்புறம் குற்றம் பார்க்கில் ... என்று படித்ததும், ஏதாவது ஒரு  Park ல நடந்த குற்றம் பற்றிய மர்மக்கதை என்று நினைத்தேன். நெல்லைத் தமிழன் ஆட்டோ அனுப்புவாரோ என்று இப்போ பயமா இருக்கு. மீண்டும் கட்டிலுக்கடியில் தஞ்சம் புக வேண்டி வரும் போலிருக்கு!)  



128 கருத்துகள்:

  1. ஆஆவ்வ் !!!நான்தான் first ..இதோ வரேன் முழுதும் படிச்சிட்டு

    பதிலளிநீக்கு
  2. நம்ம ஏரியாவில் யார் வேண்டுமானாலும் எழுதலாமா?

    ராமா, ஸ்ரீராமா என்ன ஆளையே காணோம். என் வலைத் தளத்துக்கு வருகலாகாதோ?

    நெல்லைத் தமிழரே
    நான் கொடுத்து விட்டேன் உங்களுக்கு போட்டியில் முதல் பரிசு.
    வித்தியாசமான கோணம் அருமையான கதைக்கரு.
    சரளமான நடை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ம்ம்ம்ம்ம்ம் நான் தான் firstன்னு நினைச்சேன். வடை போச்சே

    பதிலளிநீக்கு
  4. ஆஆஆஆவ்வ்வ்வ் வந்திட்டுது வந்திட்டுது நெல்லைத்தமிழனின் கதை வந்திட்டுதூஊஊஊ... இருங்கோ ஒண்ணொண்ணா ஆறுதலா அழகாப் படிக்கிறேன்.. கொஞ்ச நேரத்தால..

    இப்போ படத்துக்கு மட்டும் பதில்.. ரொம்ப அழகா வரைஞ்சிருக்கிறீங்க.. அது மாமியும் மருமகளுமாக இருக்குமோ?:).

    பதிலளிநீக்கு
  5. @ jayanthi akkaa :)


    வடையை சாப்பிடலானாலும் first வந்து தூக்கிட்டு ஓடறதில் ஒரு சந்தோசம் இங்கே முதல் கமெண்டை போட்டுட்டுதான் அங்கே லிங்க் தந்தேன்




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் உங்களுக்கு வடை போச்சுனா ஓகே!! தேம்ஸ்ல குதிச்சு எப்ப வேனாலும் உண்ணாவிரதம் இருக்க ரெடியா இருக்கும் பூசாருக்கு வடை கிடைக்கலைனா...போச்சே தானே!!!ஹிஹிஹி..

      கீதா

      நீக்கு
    2. அப்பூடிக் கேளுங்கோ கீதா:).. என் முதலாம் இடத்தை எல்லோரும் ஓடி ஓடிப் பிடிக்கினம் கர்ர்ர்ர்:)... நான் விட்டுக் குடுத்திட்டே வாறேன்ன்ன்ன்:)

      நீக்கு
  6. @நெல்லைத்தமிழன் சூப்பர் ..ஒவ்வொண்ணா ஹைலைட் செஞ்சி பின்னூட்டமிட்ட ஆசை எனக்கு ..கொஞ்சம் நேரத்தில் வருகிறேன்

    பதிலளிநீக்கு
  7. கயா பிரயாணத்தில் ரெயிலில் பயணம் செய்த மாதிரியே இருக்கு ..அடிக்கடி டிராவல் செய்ரதால் உங்களுக்கு இந்த காட்சிகள் அத்துப்படி இல்லையா :)

    பதிலளிநீக்கு
  8. கதை எழுதறார். சமையல் செய்கிறார். அதை அற்புதமாகப் படம் எடுக்கிறார். படம் போடுகிறார். எல்லா விஷயங்கள், எல்லா இடங்களை பற்றியும் தகவல்கள் விரல் நுனியில் வைத்திருக்கிறார். எல்லா தளங்களிலும் ரசித்துப் பின்னூட்டங்கள் இடுகிறார்.

    நெல்லைத்தமிழன் ஒரு சகலகலாவல்லவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் வழிமொழிகிறேன் :) அதுவும் எல்லா அரசியல் முதல் சினிமா அறிவியல் உலக நடப்பு என சகல விஷய ஞானம் இவருக்கு எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக இருக்கே .சில விஷயங்கள் பல வருஷமுமன் படித்திருப்போம் ஆனா அதன் லேட்டஸ்ட் நிலவரம் எனக்கு தெரியாதது ஆனால் நெல்லைத்தமிழன் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார் ..

      நீக்கு
    2. யெஸ் மீயும் வழி மொழிகிறேன்!! எக்ஸ்டாராடினரி மூளைதான் பா....

      கீதா

      நீக்கு
  9. //இனி நம்ம ஏரியா ஆசிரியர் ஒருவரின் அதிகப்பிரசங்கம் //

    நானும் 'குற்றம் பார்க்கில்' என்று உப தலைப்பைக் கண்டவுடன் "நடந்தது என்ன?" என்று மர்மம் அறிய ஆர்வமுடன் படித்தபடி வந்தேன். Park ல எந்தக் குற்றமும் நடக்கவில்லை போலவே...!

    [கே ஜி ஜி கொஞ்சம் இடம் கொடுங்கள். நானும் கட்டிலுக்குக் கீழே ஒளிந்து கொள்ளவேண்டியதுதான்! ]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோ நோ ஸ்ரீராம் கெள அண்ணனே கஸ்டப்பட்டு உடம்பை மட்டும் கட்டிலுக்குக் கீழே ஒளிச்சிருக்கிறார்ர்ர்.. இதில நீங்க வேற பங்குக்கு வரலாமோ.. நீங்க ஓடிப்போய்ப் புகைக்கூட்டுக்கு கீழே ஒளிங்கோ:)..

      நீக்கு
    2. ஹஹஹஹ குற்றம் பார்க்கில்!!! அட! சூப்பர் இதுக்கும் கதை எழுதலாமோ...

      அதிரா ஹஹஹ நல்லா சொன்னீங்க....

      கீதா

      நீக்கு
  10. வரேன் வரேன்.. அப்புறம் வற்ற்ற்ரேன். இப்படி தமிழ்'நாட்டுல தமிழ் அழியுதே எண்ணி கண்ணுல தண்ணிவராத குறை. 'குற்றம் பார்க்கில்' என்று நான் படித்தால், 'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை' என்ற பழமொழிதான் என் நினைவுக்கு வரும். இங்க என்னன்னா, தங்கலீஷாப்போகுது.

    பதிலளிநீக்கு
  11. //Jayanthi JayaJune 19, 2017 at 12:19 PM
    நம்ம ஏரியாவில் யார் வேண்டுமானாலும் எழுதலாமா? //

    ஆமாம்! தலைப்பிலேயே அதைத்தான் சொல்லியிருக்கோம்!

    // எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.//

    பதிலளிநீக்கு
  12. //asha bhosle athiraJune 19, 2017 at 5:53 PM
    நோ நோ ஸ்ரீராம் கெள அண்ணனே கஸ்டப்பட்டு உடம்பை மட்டும் கட்டிலுக்குக் கீழே ஒளிச்சிருக்கிறார்ர்ர்.. இதில நீங்க வேற பங்குக்கு வரலாமோ.. நீங்க ஓடிப்போய்ப் புகைக்கூட்டுக்கு கீழே ஒளிங்கோ:)..//

    ஸ்ரீராம் இது கூட்டா உங்களுக்கு எதோ செய்ய சதி :) கவனம் அதி கவனம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயையோ அப்ப அந்த சதி வலைல நானும் சிக்கிட்டேனா...ஸ்ரீராம் எக்ஸ்க்யூஸ்மி!!ஹ்ஹஹ்ஹ

      கீதா

      நீக்கு
    2. ஆமாம் ஆமாம் சதிக்கூட்டம் வலையில் சிக்காமல் மேசைக்குக் கீழே ஓடிப்போயிட்டேன்!

      நீக்கு
    3. நானில்லை நானில்லை :)

      நீக்கு
    4. அதிரா கேஜிஜி அண்ணன் தப்பித்துவிட்டார்....அப்போ மாட்டிக்கிட்டது ஸ்ரீராம்தானா....ஹஹஹ்ஹ

      கீதா

      நீக்கு
  13. //கட்டையான அந்தக் காண்டாமணி //

    ஹாஹாஹா அது என்ன பெயர் காண்டா மணி :) போண்டா மணி கேள்விப்பட்டிருக்கேன்
    அப்புறம் கோண்டு ..இது கோவிந்துவின் செல்லப்பெயராக இருக்கும்னு நினைக்கிறேன் ..

    எனக்கு ரெயில் பயணம் அதுவும் நம்ம ஊர் அப்படியே அம்பத்தூர்திருவள்ளூர் அரக்கோணம் காஞ்சிபுரம் தாண்டும்போது வயல்வெளியா சில்லுனு காற்று அடிச்சி சடசடன்னு நியூஸ்பேப்பர் காற்றிலாட ரெயில்ல்பெ ட்டிகள் அசைந்து போகும் அனுபவம் மிக பிடிக்கும் ..கயா பிரயாணம் அதை நினைவுபடுத்தியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஒரு கை குறைஞ்சுடுத்து” கோண்டு என்கிற கோவிந்தன் அங்கலாய்த்தார்//

      சரியா கணித்தேன் :)

      நீக்கு
    2. ஆம் ஏஞ்சல் பொதுவா கோவிந்து வை கோண்டுனும்.....குண்டா இருந்து மணி நு பேரி இருந்தா காண்டாமணினும் சொல்லுவாங்க பசங்க.

      நானும் இதைக் கணித்தேன்...ஏஞ்சல்/நெல்லை... ஏஞ்சல்..ஹை ஃபைவ்...

      கீதா

      நீக்கு
  14. ஹா ஹா ஹா சூப்பர் கதை.. ஆனா ஒண்ணு பாருங்கோ.. எனக்கு இந்தப் பாஷையும்.. பெயர்களும் மனதில் நுழையவே இல்லை.. அதனால பெரீய சத்தமா கதையைப் படிச்சேனா.. அப்படியே மனதில பதிஞ்சிடுத்தூஊஊ:).. இங்கின ஒரு ரெக்கோடிங் வசதி இருக்குமாயிருந்தால், இக்கதையை வாசிக்கும்போதே ரெக்கொர்ட் பண்ணி இங்கு போட்டிருப்பேன்.

    கடசியில கண்ணீர் வந்தது.. வெங்காயத்தாலா என படிச்சபோது சிரிச்சுட்டேன்ன்ன்:).. ஆஹா எனக்கும் நெல்லைத்தமிழன் பாஷை வந்துடுத்தூஊ:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கவலையே இப்போ பாவம் நெல்லைத்தமிழனுக்கு உங்க பூஸ் பாஷை வந்துருமோன்னு தான் பயப்படறேன் :)

      நீக்கு
    2. ஹஹாஹ்ஹஹ் நெல்லைக்கு மட்டுமில்ல எல்லாருக்குமே பூஸார் பாஷை வந்துரும் இல்ல வந்துருச்சசூஊஊஊஊஊஊஉ!!

      கீதா

      நீக்கு
    3. ஹா ஹா ஹா நான் இல்லாட்டிலும் என் பாஷையாவது நிலைக்குமெல்லோ:)

      நீக்கு
  15. //எழுந்து விரைவாக பக்கெட்டுடன் கழிவறை நோக்கிச் சென்றார். //
    இதைப் படிச்சதும் குபீர் என ஆகிடுத்து நேக்கு...

    //எனக்கு, பல் தேய்க்கிறேனோ இல்லையோ, முதலில் காபி வயித்துக்குள் போனால்தான் மற்ற வேலையெல்லாம் ஓடும்///
    ஹா ஹா ஹா என்னைப்போல் ஒருவர்:).

    ///நான் பண்ணினது தவறுன்னு எனக்குத் தோன்றினதுனால, அதைச் சொல்றதுக்கு நான் வெட்கப்படலை. தவறை, தவறுன்னு புரிஞ்சுண்டு அதை வெளிய வெட்கப்படாமல் சொல்றதுதான், அதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறதுக்கான முதல்படின்னு நான் நம்பறேன்”///

    இது நிஜம்தான்... சிலர் தன் மனதுக்கு தாம் செய்தது தவறு என உணர்ந்தாலும் கூட, தன்னில் தவறில்லை என்றே வாதாடுவார்கள்... ஈகோ.. வால் அழிஞ்சு போனவர்களே உலகில் அதிகம்.. காலம் கடந்த சூரிய நமஸ்காரம் செய்கிறார் சுவாமிநாதன்.

    பதிலளிநீக்கு
  16. ///நித்யா.. எல்லாப் பொண்களும் நல்லவாதான். நாம அவா கிட்ட நடந்துக்கறதப் பொறுத்துத்தான் இருக்கு.///

    ஹா ஹா ஹா.... அதானே கரெக்ட்டாப் பொயிண்டை எடுத்து விட்டு நம்மிடம் இருந்து தப்பிட்டீங்க:) மாறிச் சொல்லியிருதா அவ்ளோதேன்ன்ன்ன்ன்:)...

    ///‘டே.. கதை கடைசில அவா கொடுத்துருக்கற வரில முடியணுமாம்’.

    “எந்த வரிலயாம்?’

    "பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் அவர்கள்." ///

    ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  17. எனக்கு 10 ரூபாய் மருத்துவர் ராமமூர்த்தியின் குணம் மிகவும் பிடித்திருக்கு ..பெருந்தன்மை என்பது சிலருக்கு மட்டுமே இறைவன் கொடுத்த வரம் ..வயதும் படிப்பும் தராத நல்ல குணங்கள் சிலருக்கு மட்டுமே வரப்பிரசாதம் ..
    வாழ்க்கையிழந்த ஒருவருக்கு துணையாய் இருப்பது அதைவிட மக்களுக்கு உதவுவது குற்றம் பாராமல் வாழ்க்கையை நடத்தி செல்வது என அழகான கேரக்டர் ..
    வெகு சிலரே இப்படி நிஜ வாழ்வில் இருக்க முடியும் ..


    பதிலளிநீக்கு
  18. // நெல்லைத்தமிழன் தன் பேச்சு வழக்கிலேயே கதை எழுதியிருக்கிறார், அதிரா மட்டும் என் பேச்சு வழக்கில எழுதினா அடிக்க வாறார்ர்.. கர்ர்ர்ர்ர்:) இதைத் தட்டிக் கேய்க்க இங்கின ஆருமே இல்லயாஆஆஆஆஆஆ.. கெள அண்ணன்.. கட்டிலுக்கு வெளியே கால் தெரியுதே:).. ஒளிச்சதுபோதும் வெளியே வந்து தட்டிக் கேளுங்கோ:)).. ஹா ஹா ஹா மீ அந்தாட்டிக்கா பிளேனில கால் வச்சுட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கர்ர் :) யாரும் பேச்சு வழக்கில் எழுதலாம் ஆனா நீங்க பூனை மொழியில் எழுதினா மனிதர்க்கு புரியுமா :))

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்:) இது என்ன புயு வம்பாக்கிடக்கூஊஊ:)

      நீக்கு
    3. // கெள அண்ணன்.. கட்டிலுக்கு வெளியே கால் தெரியுதே:)..// அது கட்டில் காலுங்கோ ! நான் இல்லே, நான் இல்லே சொன்னா நம்புங்க!

      நீக்கு
    4. ///அது கட்டில் காலுங்கோ ! நான் இல்லே, நான் இல்லே சொன்னா நம்புங்க!///
      ஹா ஹா ஹா அஞ்சூஊஊஊஊஊஊஉ கெள அண்ணன் சொல்றது கரீட்டோ என கன்ஃபோம் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:).


      http://4.bp.blogspot.com/_lwmLZvKDhXQ/TMUicub-WMI/AAAAAAAAAFA/5XyrBR6WyZ4/s1600/cat+with+binoculars.jpg

      நீக்கு
    5. ஹா ஹா நீங்க கண்ணாடி போட்டு பாருங்கள்

      நீக்கு
    6. அதிரா கேஜிஜி கட்டிலுக்கடியில் இல்லையே எப்பவோ மேசைக்குக் கீழெ போயாச்சு!! அது ஸ்ரீராமின் கால் போல...!!!!

      கீதா

      நீக்கு
  19. /நித்யா.. எல்லாப் பொண்களும் நல்லவாதான். நாம அவா கிட்ட நடந்துக்கறதப் பொறுத்துத்தான் இருக்கு//

    ஹாஹா :) ரசித்தேன்

    ஆனால் பாருங்க நித்யா சுவாமிநாதன் வீட்டில் இருந்ததற்கும் டாக்டர் ராமமூர்த்தி வீட்டில் இருப்பதற்கும் எத்தனை வித்யாசம்
    எல்லாத்துக்கும் காரணம் அந்த முதிய பெண்களே ..அன்பை கொடுத்தால் அன்பை பெறலாம் என்பதை புரிந்துகொண்டவர் டாக்டரின் அம்மா

    பதிலளிநீக்கு
  20. //அவ செய்யறது தவறுன்னு மனசுக்குத் தோணினாலும் அதை வெளிப்படையா சொல்லவே மாட்டேன். சரி. சரி.. பெரியவங்க.. வாழ்க்கையிலே தனிமையாவே ரொம்பவருஷமா கஷ்டப்படறாளேங்கற எண்ணம்தான் என் மனசுல இருக்கும்//

    இங்குதான் பெரும்பாலானோர் தவறு செய்றாங்க அம்மா முக்கியம்தான் ஆனா நம்பி வந்த பெண்ணும் முக்கியம் தானே .அம்மாவின் தவறை உணர்ந்தும் தெரிந்தும் அதை மீறி எதிர்பேச்சு பேசாத சுவாமிநாதன் தான்குற்றவாளி
    கோபத்தால் அவசரதாலும்தான் பல பிரிவினைகள் ஏற்படுகின்றன இங்கும் அதேதான் நடந்திருக்கு

    பதிலளிநீக்கு
  21. லட்சுமிக்கு வந்த கண்ணீர் மகனை நினைத்து பெருமிதத்தில் வந்த ஆனந்த கண்ணீர்

    பதிலளிநீக்கு
  22. வந்துட்டேன்ன்ன்ன்ன்... எங்கள் கிரியேஷன்ஸ் கேஜிஜி சார்... கதையைப் பற்றிய விமரிசனத்தை விட்டுட்டு, CHURCHILL கிட்ட CHRCHஐத் தேடியிருக்கீங்களே... நான் சொல்லணும்னு நினைச்சேன். நீங்க, க.க.க மாதிரியான கண்டிஷன் போடும்போது, உங்கள் தளத்தில் வெளியிட்டபின், அவர்கள் தளத்திலும் (இருந்தால்) வெளியிட்டுக்கொள்ளலாம் என்று சொல்லுங்கள். அழுகையில் முடியும் வரியைக் கொடுத்துவிட்டு, அதுக்கு சிரிப்பு விமரிசனம் எழுத எப்படித்தான் மனம் வருதோ. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோ ஹார்ட் ஃபீலிங்க்ஸ் ப்ளீஸ்!

      நீக்கு
    2. இப்போத்தான் சிபிஐக்குச் சொல்லி உதவி கேட்கலாமான்னு நினைச்சிட்டிருந்தேன். இந்த குரோம்பேட்டை குறும்பன் யாருன்னு. படம் நல்லாருந்ததுல்ல. பாராட்டவேண்டாம்?

      நீக்கு
    3. ஹா ஹா ஹா யேஸ்ஸ் யேஸ்ஸ் மீயும் கெள அண்ணனை வன்மையாக ஆதரிக்கிறேன்ன்..:)..

      நெ.தமிழன்... நோ ஹொட் பீலிங்ஸ் பிளீஸ்ஸ்ஸ் ஒன்லி கூல் பீலீங்ங்ங்ங்ங்ஸ்ஸ்ஸ்ஸ்:) ஹா ஹா ஹா:)..

      நீக்கு
  23. காலைல 7:45க்கே இடுகையைப் பார்த்துட்டீங்களே ஏஞ்சலின்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் :) இங்கே கொளுத்தி எரியும் வெயிலுடன் Allergic rhinitis வேறு எனக்கு
      தூங்க முடியாம எழும்பி வந்து எங்கள் பிளாக் பார்க்கும்போது ஓரத்தில் நியூ பதிவு காட்டினதும் வந்தேன்

      நீக்கு
    2. 30 டிகிரி கொளுத்தி எரியுதுன்னா, எங்க ஊர் 40 டிகிரி வெயில் (அடுத்த அதற்கடுத்த மாசம்லாம் சர்வ சாதாரணமா 45-50க்குப் போகும். இதுல ஹுமிடிட்டி வேற) என்னன்னு சொல்றது? (ஆனாலும், 90% நாங்க A/Cலயே இருக்கறவங்க. அதுனால, வெளில போகும்போதுதான் பிரச்சனையா இருக்கும்)

      நீக்கு
    3. ஜெர்மன் வீடுகளில் செல்லர் இருக்கும் நல்லா கூலா ..இங்கேயம் வீட்டுக்குள் சூடு தெரியாது ..நம்மூர் 50 டிகிரிக்கு சமம் இத 25 டிக்ரீஸ் ..அதோட வெளில சன்ஸ்க்ரீன் போடாம போனா சுட்டு வைக்கும் பாட்ச் பாட்சா

      நீங்க பாலைவனத்தில் இருப்பதால் கஷ்டம்தான்

      நீக்கு
    4. ////நெல்லைத் தமிழன்June 19, 2017 at 6:39 PM
      காலைல 7:45க்கே இடுகையைப் பார்த்துட்டீங்களே ஏஞ்சலின்.//// ஹா ஹா ஹா அதனாலதானே நான் என் செகரட்டறி ஆக்கி வச்சிருக்கிறேன்ன்:) விடுப்ஸ் மாமி:)... ஹையோ படிச்சதும் கிழிச்சு அந்த ரெயின் ஜன்னலால எறிஞ்சிடுங்கோ நெ.த:) பீஸ்ஸ்ஸ்:).

      நீக்கு
    5. செல்லர்னு நீங்க சொன்னா, எனக்கு உடனே ஞாபகம் வர்றது,

      கீழ்த்தளத்து அறை, கடா முடா சாமான்கள், அதன் நடுவே பழைய பொம்மை, அதற்குள் ஆவி. இல்லைனா, அந்த ரூமில் ஒளிந்திருக்கும் அந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சிறிய பெண்ணின் பழிவாங்கும் ஆவி..... அந்த ரூமிற்குச் செல்ல கீழிறங்கும் மரப் படிக்கட்டுக்கள், ஒவ்வொரு காலடிக்கும் 'கிறீச் கிறீச்' என்ற மரத்தின் சத்தம், திடும் என்று ரூமின் டெம்பெரேசர் மாறுகிறது, சில்லென்று குளிர் காற்று அடித்ததுபோல் தெரிகிறது, டக் என்ற சப்தத்தில் எரிந்துகொண்டிருந்த பல்பு அணைகிறது, மீண்டும் வோல்டேஜ் மாறுவதால் மெதுவாக எரிகிறது, அந்த பல்பு ஷேடு ஆடுகிறதே... அடித்த காற்றாலா? கூட வரும் ஹஸ்பண்டைப் பார்ப்பதற்குத் திரும்பினால், அவரைக் காணோம்... ஐயோ.....

      நீக்கு
    6. /// அவரைக் காணோம்... ஐயோ.....//

      ஹையோ நெ.தமிழனுக்கு என்னமோ ஆச்ச்ச்ச்ச்ச்ச்:)

      நீக்கு
    7. நம் ஊரிலயும் இருக்கா basement /செல்லர் ?? அப்புறம் என்ன ஆச்சு. ??

      நீக்கு
    8. @அதிரா, @ஏஞ்சலின் - ஒரு குட்டிக்கதை எழுதவிட மாட்டேன்றீங்களே. நான் எழுதியிருக்கறதைப் படிச்சுட்டு இனி செல்லார் போவீங்க?

      நீக்கு
    9. ஹா ஹா ஹா செல்லார் என்றால் பேஸ்மெண்ட்டா? எனக்கிது தெரியாதே.. எங்கள் வீட்டுக்கும் பேஸ்மெண்ட் உண்டு ஆனா கட்டி முடிக்கப்படவில்லை என்பதால இருட்டாக இருக்கும்..[கீழே இறங்கும் ஸ்ரெப்ஸ் ஐ மூடி வச்சிருக்கிறோம்.. கார்பெட் போட்டு] நான் இறங்கிப் பார்ப்பதே இல்லை:).. என்ன கொடுமை சாமீஈஈஈஈஈ:)

      நீக்கு
    10. ஆமாம் அதிரா இங்கேயும் இருந்ததாம் எங்க ஏரியாவில் ஆன்னா 1970 ல வெள்ளம் வந்த மக்கள் கஷ்டப்பட்டதால் நிறைய ஏரியாக்களில் மூடிட்டாய்ங்க ..ஜெர்மன்ல கெல்லர் என்று சொல்வாங்க அங்கே நாங்க பல பொருட்களை ஸ்டோர் செய்வோம்
      ஜெர்மன்காரங்க wine உருளை எல்லாம் வைப்பாங்க குளுமையா இருக்கும் எங்க வாஷிங் மெஷின் கெல்லரில் தான இருந்தது

      நீக்கு
    11. @நெல்லைத்தமிழன் ஒரு சின்ன சந்தேகம் வந்தது 5 வரியை கதை போலிருக்குமோன்னு ஆனா நீங்க பயந்தேன்னு சொன்னதும் ஹை ஜாலி உங்க ஹஸ்பண்ட் உங்களை தனியா செல்லரில் விட்டுட்டு பயங்காட்டினாங்கன்னு சந்தோஷத்தோட படிச்சோம் :)))

      நீக்கு
  24. அடுத்தது நெல்லைத்தமிழன் நீங்க வரைந்த படங்களை பார்த்ததும் ஒரு மீன் :) படம் வரைய யோசிக்கிறது :)
    எனக்கு ரெக்கார்ட் நோட்ல வரைந்த அனுபவம் இருக்கு இப்படி கதைக்கு வரைந்ததில்லை ட்ரை பண்ணப்போறேன் :) உங்க ஓவியங்களை பார்த்து எனக்கும் ஆசை வருது :)
    அந்த மாமியார் சர்காஸ்டிக் சிரிப்பு அப்புறம்
    (நித்யா) கல்யாணியின் கோபம் கொப்பளிக்கும் பார்வையும் மிக அருமையா வந்திருக்கு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த தடவை, ஓவியர் ஜெயராஜ் அவர்கள் வரைந்த படத்தோட வரேன். அதுக்கு கே.ஜி.ஜி சார் அனேகமாக வேறு வகையான (?) தலைப்புதான் தரணும்.

      நீக்கு
    2. அஞ்சூஊஊஊ பிளீஸ்ஸ் வெயிட் வெயிட் நான் பிளேனில் கால் வச்ச பின் வரையத் தொடங்குங்கோ:).... இன்னொன்று எங்கட கெள அண்ணன் கட்டிலுக்குக் கீழ ஒளிக்கிற மாதிரியும் ஒண்ணு வரைய......... சரி சரி முறைக்கக்கூடா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:)

      நீக்கு
  25. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி திருமதி ஜெயந்தி ஜெயா. அதைப் படித்தவுடன், தண்டபாணி தேசிகர் பாடிய, 'வருகலாமோ ஐயா' ( நந்தனார் படம்) பாடல்தான் ஞாபகம் வந்தது. என் பசங்க சின்னவங்களா இருக்கும்போது எம்.எஸ்.எஸ். அவர்களுடைய மீரா படமும், த.தேசிகரின் நந்தனார் படமும் போடுவேன் (பக்திப் படங்களாக)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்ப போட்டா??!!!! ஹஹஹஹ்

      கீதா

      நீக்கு
    2. எனக்கு ஒரே படத்தை 4-5 தடவை பார்த்தாலும் ஒண்ணுமில்லை (ஏன்னா ரொம்ப கான்சன்ட்'ரேட் பண்ணிப் பார்க்கமாட்டேன்). ஆனா பசங்க, ஒரு தடவை பாத்தாலும் நல்ல ஞாபகம் வச்சுக்குங்க. நீங்க சொன்னமாதிரி அவங்க இன்டெரெஸ்ட் வேற. அதுக்கு என்ன பண்ணறது... தலைமுறை இடைவெளின்னு நினைச்சுக்கலாம் என்னைமாதிரி. இல்லைனா என் ஹஸ்பண்ட் மாதிரி அதுலயும் இன்டெரெஸ்ட் காண்பிக்கலாம்.

      நீக்கு
  26. நிஜமாகவே இடையிடையே
    வந்து ஞாபகப்படுத்திப் போனதாலே தான்
    இது கண்டிசனுக்கான கதைன்னு தோணிச்சு
    இல்லையானா இந்தக் கதைக்கான கண்டிசன்தான்
    எல்லாம்னு அவசியம் தோணியிருக்கும்
    (சரியா சொல்லிட்டேனா குழப்பிட்டேனா )

    பதிலளிநீக்கு
  27. நன்றி ஏஞ்சலின் - நான் 2008ல ஒரு யாத்திரை போயிருக்கிறேன். அப்போதுதான் இப்படி ஆர்கனைஸ்டு யாத்திரை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிந்தது. அது 10 நாள் பிரயாணம் என்று ஞாபகம்.

    காண்டாமணி - CHURCHல இருக்கும்ல பெரிய வெங்கல மணி. அதுமாதிரி பெரிய மணி கோவில்களிலும் இருக்கும்ல. அதை காண்டாமணி என்று சொல்வார்கள். சத்தம் தெரு முழுக்க கேட்கணுமே.

    ரெயில் பிரயாணம், அதிலும் பாசஞ்சர் ரெயில் பிரயாணம்னா (எல்லா இரயிலிலும் பாசஞ்சர்தான் இருப்பாங்க. ஆனா பாசஞ்சர் ரெயில்னு சொன்னா மெதுவா போகிற ரெயில். அது பார்க்கும் ஸ்டேஷனிலெல்லாம் நின்னு நின்னு போகும்) ரொம்ப நல்லாயிருக்கும். தேவையோ தேவையில்லையோ, அந்த அந்த ஸ்டேஷன்ல கிடைக்கிறவைகளைச் சாப்பிட்டுக்கொண்டே போவது.... க்ரூஸ்ல இந்த அனுபவம் கிடைக்காது. ஏன்னா நாம வித விதமான பிரயாணிகளையோ அல்லது ஸ்டேஷன், கடைகள், இயற்கை போன்றவைகளையோ பார்க்கும் வாய்ப்பு இல்லை.

    எனக்கு உண்மையா, ஓவியர் ஜெ. படம் போடணும்னுதான் ஆசை (ஏன்னுதான் எல்லாருக்கும் தெரியுமே. அவர் படங்களை சின்ன வயதிலிருந்து எப்போதும் ரசிப்பேன். அதிரா பாஷைல 'கிளு கிளு'). சொன்னா நம்பமாட்டீங்க அதுக்காகவே ஒரு படத்தைப் பிடித்து, வரைய ஆரம்பித்தேன். பாதில, படமும் நிற்கிறது, கதையும் நிற்கிறது. அந்தக் கதை எங்கள் பிளாக்குக்கு.

    உங்கள் கருத்துக்களுக்கும் ENCOURAGEMENTக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பாசஞ்சர் ரெயில் பிரயாணம்னா (எல்லா இரயிலிலும் பாசஞ்சர்தான் இருப்பாங்க. ஆனா பாசஞ்சர் ரெயில்னு சொன்னா மெதுவா போகிற ரெயில். அது பார்க்கும் ஸ்டேஷனிலெல்லாம் நின்னு நின்னு போகும்) ரொம்ப நல்லாயிருக்கும். தேவையோ தேவையில்லையோ, அந்த அந்த ஸ்டேஷன்ல கிடைக்கிறவைகளைச் சாப்பிட்டுக்கொண்டே போவது.... // ஆஹா ஆஹா ! கரெக்ட்.

      நீக்கு
    2. என்ன அதோட நிறுத்திட்டீங்க கேஜிஜி சார்... நான் சிறுவனாக இருந்தபோது, எங்க அப்பா, அம்மா, ரயில் பிரயாணத்துக்கு, இட்லி மிளகாய்ப்பொடி, தயிர்சாதம் தேங்காய் தொகையல் எடுத்துவருவார்கள். அப்பாதான் கையில் சாதம் போடுவார். இப்போல்லாம், பிரயாணத்துக்கு கைல ஏதேனும் எடுத்துப்போகிறீர்களா?

      நீக்கு
    3. நாங்க எடுத்துப் போகிறோம்.

      நீக்கு
    4. நாங்க day ட்ரிப்க்கெ கொண்டு போகிறோம்..

      நீக்கு
    5. சப்பாத்தி ரோல் தயிர் சாதம் டைகர் சாதம் ,லைம் சாதம் சாலட் ')

      நீக்கு
    6. சப்பாத்தி ரோல் தயிர் சாதம் டைகர் சாதம் ,லைம் சாதம் சாலட் ')

      நீக்கு
    7. இத பாருங்க... மிளகாய்ப்பொடி (இட்லிப்பொடி) தடவின இட்லி கொண்டுபோறீங்களா? இல்லைனா 'செல்லாது செல்லாது'. புளியோதரை(புளிசாதம்), தயிர் சாதம் - ஏத்துக்கறேன். சப்பாத்தி ரோல், அதை ஏர்போர்ட்ல சாப்படறது (அல்லது பயணத்துக்கு வச்சுக்கறது) - இதெல்லாம் செல்லாது. ( நான் பிரயாணத்தின்போது சப்பாத்தியும், தனியா கார எலுமிச்சை ஊறுகாயும் கொண்டுபோவேன். என்ன... லண்டன்மாதிரி ஊருக்குப்போய்ச்சேரும்போது அது வெரச்சுப் போயிருக்கும்-குளிரினால்)

      நீக்கு
    8. யெஸ் யெஸ் :) இட்லிக்கு மிளகாய்ப்பொடியை மேக்கப் பவுன்டேஷன் மாதிரி பாக்கிங் செய்வேன் ஆனா day ட்ரிப்புக்கு அதிகம் தக்காளி தொக்கில் முங்கின இட்லிஸ் அப்புறம் சப்பாத்தி ரோல் வித் உருளை மசால் அப்புறம் உள்ளே சாலட் வைப்பேன் ..அலுமினியம் foil அப்படியே வைக்கும்... பிளைட்டில் கஷ்டம்தான்

      ஆரம்பத்தில் இப்படி கட்டுசாதம் பார்த்து அப்பாவும் பொண்ணும் முணுமுணுத்தாங்க :) சாண்ட்விச் தான் வேணும்னு அப்புறம் வேற வழியில்லை இப்போ அதைத்தான் விரும்பறாங்க ..போன வருஷம் படம் கூட இருக்கு

      மாங்காய் தொக்கு எலுமிச்சை தொக்கு ..இது மேனகா சொல்லித்தந்தது உப்பில்ஊறிய எலுமிச்சையை அரைத்து தாளிச்சு செய்வாங்க இதை கொண்டுபோவோம் .இப்போ அடுத்தமாதமுதல் நானா தயாராகணும் பிக்கினிக் பாக்கிங் எல்லாம் நான்தான் :)

      நீக்கு
    9. நெல்லை ஐயோ அந்த பாசஞ்சர் பிரயாணம் செமையா இருக்கும். இப்பவும் நான் மிளகாய்ப்பொடி தடவின இட்லி....புளியோதரை, தயிர்சாதம் (தாளித்தது), ஒரு நாள் என்றால் தேங்காய் துவையல்...ரெண்டு நாள் என்றால் ஊறுகாய்தான்....சப்பாத்தி (மிளகாய்ப்பொடி தடவி அதுவும் நன்றாக இருக்கும் நெல்லை..நீங்க சாப்பிட்டிருக்கீங்களா இந்தக் காம்பினேஷன்...எங்க வீட்டுல மிளகாய்ப் பொடி இல்லாம வேலைக்காவாது...வீட்டுல சாம்பார் பொடி அரைப்பது போல மிளகாய்ப்பொடியும் வைச்சுக்கணும்..) இப்ப தில்லி பயணத்துல கூட இட்லி, பு சா, தயிர் சா, சப்பாத்தி கொண்டு போனேன்...இட்லி அந்த மிளகாய்ப்பொடி நல்லெண்ணையில் ஊறி ஆஆஅ அந்தச் சுவை....ஸ்பாஅ...அப்புறம் இப்ப எங்க வீட்டுப் பக்கத்துல செக்கு எண்ணை நல்லெண்ணை கிடைக்குது சூப்பரா இருக்கு அருமையான மணம்....அதுலதான் புளிக்காய்ச்சல் செய்தேன் தங்கைக்கும் எடுத்துக் கொண்டு போனேன்...செம டேஸ்ட்...விலையும் ஒரு கிலோ 185 ரூ தான்...

      கீதா

      நீக்கு
    10. //சப்பாத்தி (மிளகாய்ப்பொடி தடவி அதுவும் நன்றாக இருக்கும் நெல்லை..நீங்க சாப்பிட்டிருக்கீங்களா இந்தக் காம்பினேஷன்//

      யெஸ்ஸ்ஸ்ஸ் எனக்கு பிடிக்கும் கீதா நேற்று எழுத யோசிச்சி அப்புறம் விட்டுட்டேன் நல்லா இருக்கும்

      நீக்கு
    11. @கீதா ரங்கன் - செக்கு எண்ணெய் கிலோ 185 ரூ. அங்க என்னடான்னா கீதா சாம்பசிவம் மேடம் 135 ரூ அப்படிங்கறாங்க. நான் ரெண்டு வாரத்துக்கு முந்தி தாம்பரத்துல 290 ரூக்கு 1 கிலோ செக்கு நல்லெண்ணெய் வாங்கினேன். ஒருவேளை கீதாங்கற பேருக்கு ஒரு சீட்டு எடுத்து குறைச்ச விலைல கொடுக்கறாங்களா? எங்க வாங்கினீங்கன்னு எழுதுங்களேன்.

      எனக்கும் மிளகாய்ப்பொடி நிறைய தேவைப்படும். இப்போதான் ரெண்டு தடவையா நானே மிளகாய்ப்பொடி பண்ணியிருக்கேன் (செய்முறை வரும்..... ). மோர் சாதம், இட்லிப் பொடி/எண்ணெயோட- இதுவும் சாப்பிடுவேன். சப்பாத்திக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டிருக்கேன். இனி, மிளகாய்ப்பொடி தடவின சப்பாத்தி டிரை பண்ணிப்பார்க்கிறேன். (என்ன... எண்ணெய் காரணமா, எனக்கு இன்னும் எவ்வளவு தூரம் நடந்து இந்தக் கலோரியைக் குறைக்கணுமோன்னு தோணும்)

      நீக்கு
  28. நன்றி ஸ்ரீராம். அப்பா, பையன் பேசுவதை எழுதும்போது, உங்கள் அப்பாதான் நினைவுக்கு வந்தார் (அவர், ஒரு வரியைக் கொடுத்துவிட்டு, அது கடைசியில் வருமாறு உங்களைக் கதை எழுதச் சொன்னதாக எழுதியிருந்தீர்களே). ஆனா கான்வர்சேஷன், ரொம்ப ஃப்ரெண்ட்லி அப்பா-பையனா இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சு எழுதினேன். நீங்க மற்றவர்களை சிறுகதை எழுதத் தூண்டுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி அதிரா. எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வந்திருக்கும். நான் இந்த பாஷைலதான் பேசுவேன் என்று. அப்படியல்ல. கதைல எடுத்த கான்செப்ட் யாத்திரை, பெரும்பாலும் பிராமணர்கள் செல்வதைப்போல. அதனால்தான் எழுதினேன். நிறைய கதைகள், கட்டுரைகள்லாம் படிக்கறதுனால, ஓரளவு அவங்க அவங்க பாஷை எழுதமுடியும்னு நினைக்கிறேன். இன்ஸ்பிரேஷன், எஸ்.வி.சேகர், கிரேசி மோகன் நகைச்சுவை நாடகங்கள் (தூக்கம் வராதபோது கேட்டுக்கிட்டிருப்பேன்). அதுல இந்தமாதிரி பாஷை சரளமா வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க அப்போ ........... இல்லையா?:) ஹையோஓஒ அஞ்சூஊஊ பீஸ் கிளியர் மை டவுட் பீஸ்ச்ச்ச்ச்ச்ச்:).... நான் தனியா இருக்கும் நேரங்களில்... சினிமாக் கொமெடிகள்தான் கேட்பேன்... :)

      நீக்கு
  30. @அதிரா - ஒண்ணு, நீங்க பாடினதைப் போடுங்க. இல்லை 'ஆஷா போஸ்லே'ன்னு பேரைப் போடறதை மாத்துங்க. இதுமாதிரித்தான் 1500 மி.மீட்டர்ல 2ஆவதா வந்தேன்னு சொன்னீங்க. அதைப்பத்தியும் இன்னும் எழுதலை.

    "மாறிச் சொல்லியிருதா அவ்ளோதேன்ன்ன்ன்ன்" - இதைப் பற்றி எழுதலாம். பொதுவெளி என்பதால் தயக்கம். சகோதரிகளோடு பிறக்காதவர்கள் Male Chauvinistஆக இருந்தாலும், தனக்கு ஒரு பெண் பிறக்கும்போது அது மாறும். இதுனாலதான் எல்லோரும் (அனேகமா) சொல்லுவாங்க, அப்பாவுக்கு பெண்பிள்ளையிடம்தான் பிரியம் ஜாஸ்தி இருக்கும்னு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உப்பூடி உடுப்பேத்தினால் பிறகு நான் பாடி விட்டிடுவேன்ன்ன், ஆனா அஞ்சு இன்னும் லைவ் இன்சூரன்ஸ் எடுக்கேல்லையாம்:) அதனால்தான் வெயிட் பண்றேன்:)

      ஆனாலும் என்னதான் சொல்லுங்கோ பெண்கள் செண்டிமெண்ட்டுக்கு அடிமையானவர்கள்... ஈசியா ஏமாத்திடலாம்....:).

      1500 மீட்டர்.... 2ம் இடம்.... யேஸ் யேஸ் மீ பொய் சொல்ல மாட்டேனெல்லோ:)... உண்மை சொல்ல விரும்பாட்டில் மெளனமாப் போயிடுவேன் .... ஹா ஹா ஹா ஹொலிடே முடிய வைரவரின் அனுக்கிரகம் நன்றாக இருப்பின்:) அந்த யொந்தக்கதை யோகக் கதையை டொல்றேன்:).

      நீக்கு
    2. "உண்மை சொல்ல விரும்பாட்டில் மெளனமாப் போயிடுவேன் ...." - சாரி அதிரா. நீங்க அதுனாலதான் 1500 மில்லி மீட்டரில் 2ஆவதா வந்த கதையை இதுவரை எழுதலைன்னு தோணாமப் போயிடுச்சு. சரி.. இனிமே இதைப்பத்தி நாங்க கேட்கமாட்டோம்.

      நீக்கு
    3. விடியக் கொஞ்சம் ஏழியா எழும்பினாலே எதையாவது சொல்லி வம்பில மாட்டுவதே எனக்கு தொழிலாப் போச்சூஊஊஊஊ.. இனிமேல் என்னை முன் ஜாமத்தில் முழிக்க வச்சிடாதே வயலூர் முருகாஆஆஆஆஆ:).

      http://www.cutecatcoverage.com/news/wp-content/uploads/2011/05/004.jpg

      நீக்கு
  31. வருகைக்கு நன்றி ரமணி. சரியா குழப்பிட்டீங்க.

    பதிலளிநீக்கு
  32. அருமையான கதை நெல்லைத்தமிழன் ஜீ. அந்நியன் படத்தில் அம்பி குடும்பத்தினர் திருவையாறு கச்சேரிக்குப் போவார்கள் இல்லையா? அந்தக் காட்சிகளை மனதில் வந்துபோயின - கதை படிக்கும் போது..!

    கதைக்குள் கதையை சொருகியவிதம் அருமை ஜீ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ராஜீவன். ஏன் சில இடங்களில் உங்களை 'றாஜீவன்' என்று எழுதுகிறார்கள்?

      நீக்கு
  33. பத்து ரூபாய் டாக்டர் ராமமூர்த்தி மாயிலாடுதுறையில் இருக்கிறார். நாராயணன் என்ற டாகடரும் 10 ரூபாய் தான் வாங்குவார். அவர் இறந்து விட்டார்.

    அப்பா மகன் உரையாடலுடன் தொடங்குவது அருமை. மகன் வாசித்துப்பார்த்தாரா? எப்படி இருக்கு கதை என்று சொன்னாரா?

    கதை மிக அருமை. கதைக்கு அவரே வரைந்த படம் நன்றாக இருக்கிறது.
    நெல்லை தமிழன் பன்முக வித்தகர் .

    சுவாமிநாதன் தன் கதை சொல்லும் போது தன் மனைவியின் பெயரை கல்யாணி என்றே சொன்னார்.
    நித்ய கல்யாணி ராமமூர்த்தியைக் கூப்பிட்டாள். என்றவுடன் கல்யாணி
    யார் என்று தெரிந்து விடுகிறது.


    //அம்மாவுக்காக திருமணம் செய்துகொள்ளலாம் என்று தோன்றியது. ஆதரவற்ற பெண்ணையோ அல்லது துணையை இழந்த பெண்ணையோதான் திருமணம் செய்யவேண்டும் என்றும் அவர் தீர்மானித்தார். இப்படித்தான் நித்யா அவர் மனைவியானார்.//

    ராமமூர்த்தி டாக்டரின் அம்மாவின் அன்பு ஒரு பெண்ணை வாழ வைத்தது.



    அன்பு வாழ வைக்கும். பாசம் தாழ வைக்கும் போலும்.

    சுவாமிநாதனின் தாய் தன் மகன் தனக்கு மட்டுமே ! என்ற அதிகபடியான பாசம் மகனின் வாழ்வை நாசம் செய்து விட்டது.
    ராமமூர்த்தி டாக்டரின் அம்மா தன் கனிவான அன்பால் மகனின் வாழ்க்கையை சொர்க்கமாக்கினார்.

    அருமையான கதை அருமையான தலைப்பு.

    வாழ்த்துக்கள் தொடர்ந்து கதை எழுத.



    .



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அரசு மேடம்.

      "அன்பு வாழ வைக்கும். பாசம் தாழ வைக்கும் போலும்." - இதை நான் ரசித்தேன். உண்மைதான். பாசம் என்பது வழுக்கக்கூடியது. அதில் நிதானம் வேண்டும். நம் JUDGEMENT தவறுவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. அன்பு என்பது பகிரக்கூடியது. அது பகிர பகிர இன்னும் வளரும். ஒரு செடியை இன்னொரு இடத்தில் நட்டுவிட்டால், அது அவருக்கு உரிமையாகிறது. அன்பால், அடிக்கடி பார்க்கலாம், தேவைனா தண்ணீர் ஊற்றலாம். ஆனால் நமக்கு உரிமையில்லை. மகன், மகளுக்கும் இதேதான். அவர்கள் வாழ்க்கை அவர்களோடது. நாம் பார்வையாளர்கள் மட்டுமே. தேவையானால், கேட்டால் உதவலாம். அதற்குமேல் நமக்கு உரிமையில்லை.

      உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

      நீக்கு
    2. ஆமாம், நாங்கள் அப்படித் தான் இருந்து வருகிறோம். கூடியவரை நாங்கள் தலையிடுவதில்லை! அவங்களுக்குத் தேவையானதைச் சொன்னால் செய்து தருவதைத் தவிர! மற்றபடி அவர்கள் விஷயத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கோம். இருப்போம். இருக்க வேண்டும்!

      நீக்கு
    3. @கீதா சாம்பசிவம் மேடம், கோமதி அரசு மேடம் - நீங்கள்ளாம் அனுபவசாலிகள். உங்களுக்குத் தெரியாதா? நான் நிறைய விஷயங்கள் படிக்கறதுனால, இப்படி இருந்தால்தான் நல்லதுன்னு நினைச்சுக்கிட்டிருக்கேன். வளரிளம் பருவத்துல இருக்கற (டீனேஜ்) என் பசங்க, அவங்களாத்தான் தங்களைப் பாத்துக்கணும்னு நினைக்கறாங்க. In case problemனா பெற்றோர் இருக்காங்க என்ற assurance மட்டும்தான் அவங்களுக்குத் தேவை. அறிவுரைகள் அல்ல.

      நீக்கு
  34. நெல்லை சூப்பர் கதை!! அப்படியே ரயில் பயணம் கண் முன் நின்றது அதுவும் அந்நியன் படம் அந்த ரயில்
    சீட்டுக் காட்ச்சி போல விரிந்தது...நீங்கள் முன்னரே இது போல ஏதேனும் காசி யாத்திரை போயிருக்கிறீர்களோ? அப்படியே வருதே அதான் இந்தக் கேள்வி....அப்புறம் எங்கள் ப்ளாக் பாசிட்டிவ் ந்யூஸ் 10 ரூபா டாக்டர் ...சூப்பர்!!! பல விஷயங்களின் உந்துதல் அனுபவம் என்று செம!

    ராமநாதன் பக்கெட் தூக்கிக் கொண்டு ஓடியது// ஹஹஹஹ் இப்படி சில முன்பெல்லாம் தில்லி ரயிலில் போவதைப் பார்த்திருக்கிறேன். எப்படி இப்படியான பாத்ரூமில் குளிக்கிறார்கள் என்று எண்ணியதுண்டு. அப்போது எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் ரயில் டாய்லெட்டுகள் இருக்கின்றன. சுத்தம் "சுத்தம்"!!! அதுவும் சமீபத்திய ரயில் பயணத்தில் டாய்லெட் ஐயோ! அதுவும் ஏசி கோச்....உவ்வே!!! நிர்வாகமும் சரி படிச்ச மக்களும் சரி மாஆஆஆஆஆஆறவே இல்லை! பாருங்க கதையிலிருந்து எங்கேயோ போய்ட்டேன்...



    ...கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எங்க ஊர் கீதா ரங்கன் (அப்படின்னு சொல்லலாம்னு பார்த்தா, இலங்கைங்கிறீங்க, பாலக்காடு/கேரளாங்கிறீங்க). 2008ல் நான் பிரயாணித்தபோது அவ்வளவு சங்கடமாக இல்லை. எனக்கு காலைல எழுந்தாச்சுன்னா, முதல்ல குளிக்கணும், என்னோட வேலையைப் பார்க்கணும், அதுக்கு அப்புறம்தான் மற்றதெல்லாம் ஓடும். இந்த விஷயத்துல நான் செல்ஃபிஷா இருப்பேன். அதேமாதிரி, குழுத் தலைவர், 5:30 மணிக்கு ரெடியா இருக்கணும்னு சொன்னா, 5 மணிக்கு முன்னாலயே ரெடியாயிடுவேன். தேவைனா, காலைல 2-3 மணிக்குன்னாலும் எழுந்துடுவேன்.

      நீக்கு
    2. //வாங்க எங்க ஊர் கீதா ரங்கன் (அப்படின்னு சொல்லலாம்னு பார்த்தா, இலங்கைங்கிறீங்க, பாலக்காடு/கேரளாங்கிறீங்க). // ஓ இதைத்தான் அதிரா எங்கள் ப்ளாக்ல சொல்லிருந்தாங்களா!!! பிடிக்கறேன் பூஸாரை...

      இந்த நதி மூலம் ரிஷி மூலம் சொல்ல ஆரம்பிச்சேன்னு வைங்க...அது போகும்.....என் அப்பா வழி....என் அம்மா வழி என்று..கடைசில பார்த்தீங்கனா ரெண்டு பேருமே உறவுக்காரங்க வேற...வேர்கள் கேரளத்திலிருந்து திருநெல்வேலி (கீழநத்தம், திறுக்குறுங்குடி) வரை வயா நாகர்கோவில் பரந்து விரிந்து......இதுல எந்த ஊரை சொல்லறது?!!! ஆனா வீட்டுல பெரியவங்க திருநெல்வேலி நு சொல்லிக்குவாங்க...

      கல்யாணத்திற்கு அப்புறம் பல ஊர்ல இருந்துருக்கேன்...இப்ப கடைசில சென்னைல..மூட்டை தூக்காம இருந்துக்கிட்டிருக்கேன்...யாதும் ஊரே யாவரும் கேளிர்...

      ஹை மீ டூ எந்தக் குழுவோடு நான் பிரயாணம் செய்தாலும் அரைம் மணி நேரம் முன்னாடியே ரெடியாகிடுவேன். ஆனா ரயிலில் குளித்தல் என்பது மட்டும் செய்ததில்லை...

      கீதா

      நீக்கு
  35. படம் சூப்பர்! நெல்லைத் தமிழன்! அதுவும் அந்த மாமியார் சிரிப்பு வடிவுக்கரசியை நினைவூட்டியது. வில்லத்தனத்தை ஒரு விதமாகக் காட்டும் ஒரு சிரிப்பு...

    அந்தப் பெண்ணும் அழகாக இருக்கிறாள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடிவுக்கரசியை ஞாபகப்படுத்திட்டீங்க. அவங்க மிகத் திறமைசாலி என்பதை நான் ராஜ் டிவியில் அவர் நடிப்பு சொல்லிக்கொடுத்த நிகழ்ச்சியைப் பார்த்தபோதே புரிந்துகொண்டிருக்கிறேன். திரையில் நிறையபேரை நாம் சாதாரண ஆட்கள் என்று நினைத்துவிடுகிறோம். அல்லது காமெடி நடிகர் கூட்டத்தில் ஒருவர் என்று நினைத்துவிடுவோம். ஆனால் மிகுந்த திறமை இல்லாமல் அந்த இடத்துக்கு அவர்கள் வரவில்லை.

      வடிவுக்கரசி, ரஜினியுடன் நடித்ததற்கு அப்புறம், ரயில் பிரயாணத்தின்போது கொஞ்சம் பயப்பட்டாங்களாம். அவருடைய வில்லத்தனத்தினால் ரசிகர்களுக்கு அவ்வளவு கோபமாம் அவர் மீது. நீங்கள் எழுதினபிறகு தோன்றுகிறது, பேசாமல் அந்த அந்த குணாதிசியங்களுக்குப் பொருத்தமான திரைக் கதாபாத்திரங்களையே வரைந்துவிடலாம் என்று.

      வருகைக்கு நன்றி கீதா ரங்கன்.

      நீக்கு
    2. ஆம்! நெல்லை!! வடிவுக்கரசி மிகத் திறமையான நடிகை!

      //திரையில் நிறையபேரை நாம் சாதாரண ஆட்கள் என்று நினைத்துவிடுகிறோம். அல்லது காமெடி நடிகர் கூட்டத்தில் ஒருவர் என்று நினைத்துவிடுவோம். ஆனால் மிகுந்த திறமை இல்லாமல் அந்த இடத்துக்கு அவர்கள் வரவில்லை. // உண்மை உண்மை...

      ஆமாம் அந்தப் படத்தில் வடிவுக்கரசியின் வில்லத்தனத்திற்கு அவரிடம் அத்தனைக் கோபம் இருந்தது ரசிகர்களுக்கு...//அந்த அந்த குணாதிசியங்களுக்குப் பொருத்தமான திரைக் கதாபாத்திரங்களையே வரைந்துவிடலாம் என்று.//

      ஆம் அப்படியே முயற்சி செய்யுங்கள் நெல்லை தமிழன்.....நல்லாருக்கும்..

      வாவ்!! 8 நிமிடத்துல வரைஞ்சீங்களா! க்ரேட்பா!! நீங்க!! சகலகலா வல்லவர்தான் நீங்க.....மேலே ஸ்ரீராம் சொல்ல ஏஞ்சல் மீ எல்லாம் வழி மொழிஞ்சுட்டோம் இதனை...

      கீதா

      நீக்கு
  36. நல்ல ரசனையோடு எழுதி இருக்கார்/ இம்மாதிரி நடந்திருக்கும் வாய்ப்புகள் உண்டு. அதிலும் ஒரு உரையாடல் போல ஆரம்பித்து சர்ச்சிலை எல்லாம் கொண்டு வந்து! நானும் சர்ச் அப்படினு முதலில் நினைச்சு! அப்புறமாச் சர்ச்சில்னு புரிஞ்சுண்டு! ஹிஹிஹி! முடிவு நன்றாக இருந்தது! எல்லாக் கதைகளும் அவர்கள் கண்களில் கண்ணீருடன் தானே முடியணும்! ம்ம்ம்ம்ம் நானும் எழுத ஆரம்பிச்சுப் பாதியிலே நிக்குது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜூன் எண்ட்டுக்குள்ள எழுதிடுங்க நாங்க ஜாலியா கும்மி அடிக்கணும் இங்கே அப்புரம் ஹாலிடேஸ் போனா போன்ல டைப்ப கஷ்டம் :)

      நீக்கு
    2. ம்ம்ம்ம் எழுத முயல்கிறேன். ஆரம்பிச்சாச்சு! எப்படி முடிக்கிறதுனு தெரியலை! சிரிப்புத் தான் வருது! ஆனால் இது சீரியஸ் கதை போல இருக்கே! :))))

      நீக்கு
  37. என்னடா திடீர்னு உங்களை "சகல கலா வல்லவர்"னு உல(க்)கை நாயகனோடு ஒப்பிட்டுப் பேசறாங்களேனு நினைச்சேன்! :) இங்கே வந்ததும் தான் புரிஞ்சது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா மேடம் - இப்படித்தான் 'சகலகலா வல்லவன்'னு ஆரம்பிச்சு, கலாய்ச்சு கதறவிட்டுடுவாங்க. இதுமாதிரி டைட்டில்லாம் நீங்க சொன்னபடி உலக நாயகனுக்குத்தான் பொருந்தும்.

      நீக்கு
  38. நாங்களும் கிட்டத்தட்ட 2008/2009 ஆம் ஆண்டிலே தான் ட்ராவல் டைம்ஸ் மூலம் ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்த பாரத் தர்ஷன் சுற்றுலாவில் போனோம். உண்மையிலேயே சிறப்பான ஏற்பாடுகள். வயிற்றுக்கு இதமான சாப்பாடு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி. நாங்க ஒருதடவை செல்கிறோம். (ஐஆர்சிடிசி மூலமா) - ஆனா அவங்க சாப்பாடெல்லாம் நல்லா இருந்ததா? சதாப்தில சாப்பிட்டது எனக்குப் பிடிக்கலை. 'தால்'-என்ற பெயருல பருப்பு ரசம் மாதிரி, போதாக்குறைக்கு 'நார்த் இண்டியன் சைட்டிஷ்' நல்லாவே இல்லை. சப்பாத்தியை உடைச்சுச் சாப்பிட முயற்சித்தேன். சூப்புக்கு அடிக்கற சைசுல ஒரு பிரெட் ஸ்டிக்.

      நீக்கு
    2. IRCTC மூலம் எப்படினு தெரியலை! ஆனால் என் மைத்துனரும் அவர் மனைவியும் அதிலே தான் போறாங்க! இப்போக் கூட ஶ்ரீலங்கா போகறதுக்குத் திட்டம் போட்டிருக்காங்க. நாங்க ட்ராவல் டைம்ஸ் ஸ்பான்ஸர் பண்ணினது மூலம் போனோம். சாப்பாடு நன்றாகவே இருந்தது. ஷதாப்தியில் சாப்பாடு நல்லா இருக்கணும்னா வடக்கே செல்லும் வண்டிகளில் பயணம் செய்யணும்! அதுவும் தில்லி--அமிர்தசரஸ், தில்லி--ஹரித்வார் தில்லி--சிம்லா இம்மாதிரிப் பயணங்களில் கொடுக்கப்படும் சாப்பாடு நன்றாகவே இருக்கிறது. முதல் வகுப்புன்னா கேட்கவே வேண்டாம்! :)

      நீக்கு
  39. //அவர்கள் வாழ்க்கை அவர்களோடது. நாம் பார்வையாளர்கள் மட்டுமே. தேவையானால், கேட்டால் உதவலாம். அதற்குமேல் நமக்கு உரிமையில்லை.//

    நாங்கள் அப்படித்தான் இருக்கிறோம் நெல்லை தமிழன்.
    அருமையாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கு நன்றி. பசங்க டீனேஜ் வந்துட்டாலே இப்படி ஆரம்பிச்சுடுது. அதுவும்தவிர, அவங்க ராஜ்யம் ஆள வந்தப்பறம் (அவங்க குடும்பம்னு ஆனப்பறம்), நாமும் அவங்க ராஜ்ஜியத்துல ஒரு குடிமகன்/ள் தானே.

      நீக்கு
    2. யெஸ் யெஸ்!!! சூப்பர் கருத்து....

      கீதா

      நீக்கு
  40. ஆஅவ்வ்வ்வ்வ் மீ தான் 100 ஆவதூஊஊஊஊஊஊஊஊ:) வாழ்க்கையில் முதல்தடவையா நம்ம ஏரியாவில் 100 கொமெண்ட்ஸ்கள் தொட்ட போஸ்ட்:).. எங்களுக்கு ரீட் ஏதும் இல்லயா?:)...

    http://3.bp.blogspot.com/-g7QErBjUTBo/T8xmOz6E7HI/AAAAAAAABwU/4-sWJkNWKag/s1600/cat%20with%20gun.jpg

    பதிலளிநீக்கு
  41. அதிரா... நீங்கள் நூற்றில் ஒருவர். வாழ்க. வயிரவருக்கு வேண்டிக்கொண்டபடி, வைர வேல் நீங்க காணிக்கை கொடுத்த உடனேயே, உங்களுக்காகவே ஸ்பெஷலா பஞ்சாமிருதம் செய்துதரச் சொல்லியிருக்கிறேன் கோவிலில். எப்போ வைரவேலோட அங்க போகப்போறீங்க என்பதை மட்டும் சொல்லிடுங்க. கூடவே ஒடியல் கூழும் எடுத்துட்டுப் போனீங்கன்னா, எல்லாப் பஞ்சாமிருதத்தையும் நீங்களே சாப்பிடலாம். திகட்டாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைர வேலாஆஆஆ???? அவ்வ்வ்வ்வ்வ் நான் நேரவே இல்லயே:) என் பேரில துண்டெழுதிப்போட்டு நேர்ந்திருப்பாரோ..... வைரவா பீஸ்ச்ச்ச்ச்ச் ஆரையும் நம்பாதீங்க... அதிராவை மட்டும் நம்புங்கோ.... வடை மாலை போடுவேன்ன்ன்ன்ன்:)

      நீக்கு
  42. ஹாஹா :) பூஸ் வாழ்க்கையில வள்ளிக்கு வைரவருக்கு இப்போ வயலூர் முருகனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினதா இல்லைன்னா சொன்ன சொல்படி குதித்ததா தேம்ஸில்சரித்திரமில்லை :) அதனால் அந்த பஞ்சாமிர்தத்தை எனக்கு பார்சல் பண்ணிடுங்க நெல்லை தமிழன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர் அஞ்சு பஞ்சாமிர்தம் எல்லாம் உங்களுக்கு ஒத்துக்காது... நிறைய தேன் விடச்சொல்லி வாங்கி வந்து எனக்கே தாங்கோ:)...

      வெளிநாட்டுக் கோயில்களில் அதிகம் ரின் பழங்கள்தான்ன்ன் .. பெரிதா சுவை வராது. ஊரில் எங்கட பிள்ளையார் கோயிலில் பஞ்சாமிர்தம் செய்ய மீயும் ஜெல்ப் பண்ணியிருக்கிறேன்ன்ன்ன் .. அதனாலோ என்னமோ அதன் சுவையே தனி:).

      நீக்கு
    2. பஞ்சாமிர்தம் செய்ய என்ன ஹெல்ப்? ஒருவேளை அப்போ அப்போ டேஸ்ட் பார்த்து சரியா கலந்துருக்கான்னு செக் பண்ணவா? பழங்களைக்கூட CUT செய்து போடமாட்டார்களே. சரி..சரி... உண்மையா இருந்தா அந்தக் கோவில் இருந்த ஊர் பெயர்லாம் போட்டிருப்பாங்களே. எந்த ஊர்ல பிள்ளையாருக்கு பஞ்சாமிர்தம் செய்கிறார்கள்? (அந்தக் காலத்தில் பழனியில், பெரிய தொட்டிகளில் பழங்களை எல்லாம் போட்டு காலால் மிதித்து பஞ்சாமிர்தம் செய்வார்கள். ரொம்ப நாள் வரை இந்த முறை இருந்தது)

      நீக்கு
  43. ஒருமாத காலம் ஓய்வெடுத்து விட்டேன் என்பது உண்மைதான். அதனால் என்னுடைய மனத்தில் இருப்பதை அப்படியே பெயர்த்துக்கொண்டு போய், உங்கள் பெயரில் கதையாக எழுதிக்கொள்வது நியாயமா நண்பரே?
    (எப்படி நம்ப பாராட்டு?)

    -இராய செல்லப்பா (இப்போது) சென்னையில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் இருவர் மனமும் ஒன்றிவிட்டது என்பதை இதைவிடச் சிறப்பாகச் சொல்லமுடியாது

      நீக்கு
  44. நானும் உங்க தளத்தைப் பார்ப்பேன். என்ன பதிலும் காணோம் இடுகையும் காணோம்னு. இப்போதான் புரிஞ்சது, 'காலி கபாலி' படத்துக்கான தலைப்பையும் கதையையும் உரிமைகொண்டாடி யாரோ ஒருவர் வழக்கு போட்டிருப்பதாக (காலி கபாலி, ரஜினியோட அடுத்த படம், ரஞ்சித் டைரக்ஷனில்) படித்தேன். அது நீங்கதானா? அதனால்தான் உங்களைக் காணலியா? எனக்குக்கூட, நியூயார்க்கிலிருந்து நடந்து வந்திருந்தாலே இதுக்குள்ள வந்திருக்கணுமேன்னு தோணித்து. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  45. வை.கோபாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து மெயிலில் வந்த பின்னூட்டம்

    குற்றம் பார்க்கில் ... படித்தேன். நல்லா எழுதியிருக்கீங்க ! பாராட்டுகள். வாழ்த்துகள்.

    நம்ம ஏரியா ! என்று ஒரு வலைப்பதிவு உள்ளதே எனக்கு இதுவரை தெரியாது. இன்றுதான் பார்த்து, அதில் ஃபாலோயராக இணைந்துள்ளேன்.

    அப்போ அந்த அதிரா எழுதியிருந்த கதையும் இதற்காக மட்டுமே போலிருக்கிறது. அது தெரியாமலேயே அவங்களுக்கு நிறைய பின்னூட்டங்கள் கொடுத்திருந்தேன்.

    oooooooooooooooooooooo

    //“உங்கட்ட சொல்லாததுக்கு மன்னிச்சுருங்கோம்மா. அன்னைக்கு ரயில்ல என்னோட முதல் கணவனும் வந்திருந்தார்”.

    “யாரு. சுவாமினாதன்னு சொன்னேயே. அவரா?”

    “ஆமாம். நீங்க கூப்பிட்டேள்னு நான் உங்க பிள்ளையைக் கூப்பிடப் போனப்ப இவர் இருந்த அதே பொட்டிலதான் அவரைப் பார்த்தேன். அவர், உங்க பிள்ளைட்ட தன்னோட கதையெல்லாம் சொன்னாராம்.. கதையைக் கேட்கும்போதே அவருக்கு சந்தேகம் வந்ததாம். நான் சட்டென்று முகம் மாறினதைப் பாத்து அவருக்குப் புரிஞ்சுடுத்தாம்”

    “ராமு அதுக்கு என்னடி உங்கிட்டச் சொன்னான்?”

    “உங்க பிள்ளை அன்னைக்கு எங்கிட்ட பேச வந்தப்போ, எனக்கு ரொம்ப பட படப்பா இருந்தது. ஆனா அவர், ‘நித்யா.. எல்லாப் பொண்களும் நல்லவாதான். நாம அவா கிட்ட நடந்துக்கறதப் பொறுத்துத்தான் இருக்கு. நீ அதே பொண்ணுதான். அம்மாவுக்கு உன் மேல் எத்தனை அன்பு,பாசம். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னெல்லாம் அம்மாக்கு நான் எப்படா ஆத்துக்கு வரேன்னு இருக்கும். நீ ஆத்துல காலடி எடுத்துவச்சப்பறம் என்னைவிட உம்மேலதான் அவளுக்கு அத்தனை அன்பு. எனக்கும் வாழ்க்கைல ஒரு அர்த்தமும், அம்மா சந்தோஷத்தைப் பார்த்து நிம்மதியும் கிடைச்சது. எங்களுக்குக் கிடைச்ச தனமாத்தான் நீ இருக்க. அதே பொண்ணோட நல்ல குணம் அவாளுக்கு அப்போ சரியாத் தெரியலை. அத விதின்னுதான் சொல்லணும். இப்போ அவர் வருந்தி என்ன பிரயோசனம்? நீ இதை நினைத்து விசாரப்படாதே. அம்மாட்டயும் சொல்ல வேண்டாம். பழைய அத்தியாயத்தை மீண்டும் புரட்டறதுல என்ன அர்த்தம் இருக்கு’ ன்னுட்டார். அவரோட அன்ப நெனைச்சு எனக்குக் கண் கலங்கித்து.

    லட்சுமிக்கும் கண்களில் நீர் வந்தது. அது வெங்காயத்தாலா அல்லது பிள்ளையின் பண்பான குணத்தாலா என்று அவளுக்குத் தெரியவில்லை.//

    oooooooooooooooooooooo

    அழகாக எழுதி அருமையாக முடித்துள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுகள். தொடர்ந்து கதைகள் எழுதுங்கோ. கலக்குங்கோ.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு சார்... உங்கள் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி.

      தெளிந்த நீர்போல் இருக்கும் பதிவுலகத்தைக் கலக்கச் சொல்றீங்களா (கலக்கி குழப்பியடிக்க). இல்லை.. படிப்பவர் மனதைக் கலக்கும் சோகக் கதைகளையே எழுதச் சொல்றீங்களா?

      எனக்கு எப்போதும் சோகக் கதைகள் பிடிக்கும் (ஆனால் இப்போதில்லை).

      உங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. நெல்லைத் தமிழன் June 26, 2017 at 9:25 PM

      //கோபு சார்... உங்கள் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி.//

      மிக்க மகிழ்ச்சி.

      //தெளிந்த நீர்போல் இருக்கும் பதிவுலகத்தைக் கலக்கச் சொல்றீங்களா (கலக்கி குழப்பியடிக்க).//

      பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான (தர்மர்) யுதிஷ்டிரர் பார்வைக்கு, உலகில் எல்லாமே நல்லதாக மட்டுமே தெரியுமாம். துரியோதனன் பார்வைக்கு, உலகில் எல்லாமே கெட்டதாகவே தெரியுமாம்.

      அதுபோல ‘தெளிந்த நீர் போல இருக்கும் பதிவுலகம்’ என்று சொல்லியுள்ளீர்கள் ...... ’தர்மர்’ போன்ற தர்மத்தின் தலைவனான நீங்களும் ..... உங்களின் பார்வையில் ..... சபாஷ்! :)

      //இல்லை.. படிப்பவர் மனதைக் கலக்கும் சோகக் கதைகளையே எழுதச் சொல்றீங்களா?//

      நான் அதுபோலச் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டேன். அதற்கு ஓர் மிக முக்கியமான காரணமும் உள்ளது. சொல்கிறேன் ......

      நான் ‘அழைப்பு’ என்ற தலைப்பில் ஓர் சிறுகதையை இரு பகுதிகளாக எழுதி அதன் முதல்பகுதியை 12.09.2011 என் வலைத்தளத்தினில் வெளியிட்டு விட்டேன். http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_11.html

      அதன் இரண்டாம் பகுதியை சோக முடிவுடன் எழுதி 14.09.2011 அன்று இரவு 10 மணி சுமாருக்கு வெளியிட்டும் விட்டேன். அந்த ’அழைப்பு’ என்ற கதையின் இரண்டாம் பகுதியைப் படிக்க வருமாறு என் வழக்கப்படி ’அழைப்பு’ம் அனுப்பி விட்டேன் .... நான் என் அம்பாளாக நினைத்து வழிபட்டுக்கொண்டிருந்த என்னுடைய பரம விசிறி ஒருவருக்கு.

      அவரும் என் அழைப்பினை ஏற்று, அவர்கள் வழக்கம்போல, முதன் முதலில் வருகை தந்து வரிசையாக ஆறு பின்னூட்டங்களும் கொடுத்துவிட்டு, எனக்கு தனியே ஒரு மெயில் அனுப்பி, இந்த சோக முடிவு என்னை மிகவும் கலங்கச் செய்துவிட்டது. இதைப்படிக்க நீங்கள் எனக்கு ’அழைப்பு’த் தந்திருக்காமலேயே இருந்திருக்கலாம் என சற்றே வருத்தத்துடன் சொல்லி விட்டார்கள்.

      அது என்னை மிகவும் பாதித்து விட்டதால், நான் உடனடியாக அந்தப் பதிவினை WITHDRAW செய்துவிட்டு, அன்று இரவு முழுவதும் சுத்தமாகத் தூங்கவே தூங்காமல், கதையின் இரண்டாம் பகுதியை மிகவும் கஷ்டப்பட்டு அப்படியே முற்றிலும் மாற்றி எழுதி சுப முடிவாகக் கொடுத்து 15.09.2011 விடியற்காலமே வெளியிட்டும் விட்டேன்.

      அதற்கான அழைப்பு மீண்டும் அவர்களுக்குக் கொடுத்திருந்தேன். அதற்கும் மகிழ்ச்சியுடன், சற்றே தாமதமாக வருகை தந்து வரிசையாக நான்கு பின்னூட்டங்கள் அளித்து மகிழ்வித்திருந்தார்கள். நான் இப்படி இரவோடு இரவாகத் தூக்கமின்றி கதையையே மாற்றியிருப்பேன் என அவர்களும் எதிர்பார்க்காமல் ..... வியந்து மகிழ்ந்து என்னை இன்னொரு மெயில் மூலம் மிகவும் பாராட்டியிருந்தார்கள். :)

      அந்த 'REVISED PART-2 WITH HAPPY ENDING' பெரும்பாலான பெண்களால் பாராட்டப்பட்டு உள்ளது. அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/09/2-of-2_14.html


      இதே கதையினை 2014-ம் ஆண்டு நான் என் வலைத்தளத்தினில் நடத்திய சிறுகதை விமர்சனப்போட்டியிலும் ஒரே பகுதியாக வெளியிட்டிருந்தேன். http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html அதிலும் அந்த என் ஆத்மார்த்தமான பரம விசிறி அவர்களின் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகியுள்ளது என்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

      //எனக்கு எப்போதும் சோகக் கதைகள் பிடிக்கும் (ஆனால் இப்போதில்லை).//

      இந்த மேற்படி ஒரு சிறு நிகழ்வுக்குப் பிறகு, நான் என் பெரும்பாலான கதைகளில் சோகமான முடிவுகளையே கொண்டுவருவது இல்லை. சுபமான முடிவுகள் மட்டுமே கொடுப்பதை என் வழக்கமாகக் கொண்டுள்ளேன். அது என் அந்த அம்பாளின் உத்தரவாகவே என் மனதில் அன்று முதல் இன்றுவரை ஏற்றுக்கொண்டு விட்டேன்.

      //உங்கள் வருகைக்கு நன்றி.//

      மிக்க நன்றி, ஸ்வாமீ.

      அன்புடன் கோபு

      நீக்கு
    3. இது மறைந்த பதிவாளர் இராஜேஸ்வரி மேடமாக இருக்கலாமோ? பார்த்துவிட்டு எழுதுகிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  46. ///நான் பண்ணினது தவறுன்னு எனக்குத் தோன்றினதுனால, அதைச் சொல்றதுக்கு நான் வெட்கப்படலை. தவறை, தவறுன்னு புரிஞ்சுண்டு அதை வெளிய வெட்கப்படாமல் சொல்றதுதான், அதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறதுக்கான முதல்படின்னு நான் நம்பறேன்///

    அருமை நண்பரே எனது கொள்கையும் இதுவே....

    ///பகவான் கொடுத்த உயிர், அடுத்தவாளுக்கு உதவறதுக்குத்தாண்டா///

    இதை எல்லா மனிதனும் உணர்ந்தான் என்றால் உலகம் அமைதியாக செல்லும் தெளிந்த நீரோடைபோல் தெளிவு பெறாத மனித மனங்களால் எவ்வளவு குழறுபடிகள் ?

    ///லட்சுமிக்கும் கண்களில் நீர் வந்தது. அது வெங்காயத்தாலா ? அல்லது பிள்ளையின் பண்பான குணத்தாலா ? என்று அவளுக்குத் தெரியவில்லை///

    இதில் சிறிய அளவில் நகைச்சுவையை புகுத்தியது(ம்) அருமை நண்பரே....

    வாழ்த்துகளுடன் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  47. கில்லர்ஜி.. உங்கள் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி. வெளியில் கொடுவாள் மீசையோடு உள்ளத்தில் கனிந்த நல் எண்ணங்களோடு இருக்கும் உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  48. நல்லதொரு யாத்திரை. விறுவிறு நடை.

    ஆனால், சில பெண்கள் மாறுவதே இல்லை - அவர்கள் அம்மாவாகவோ, மனைவியாகவோ - எந்த ரோலில் இருந்தாலும் சரி..மாற்றம் என்பது அவர்களில் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் சார். தாமதமாகத்தான் இந்தப் பின்னூட்டம் பார்த்தேன்.

      சில பெண்கள் மாறுவதில்லை என்று சொல்லியிருக்கீங்க. அதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கமுடியும். ஆண்கள், வேலைக்குச் செல்கிறார்கள், நிறைய படித்தவர்களோடு அல்லது பலவித அனுபவம் உள்ளவர்களோடு பழகுறாங்க. அதுனால அவங்க தங்கள் கருத்தையோ செய்கைகளையோ மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கு. பெண்கள் வீட்டோடு இருப்பதால் (சில பல), அவங்க மாறுவது கொஞ்சம் கடினம்.

      நீக்கு