செவ்வாய், 3 ஏப்ரல், 2012

நல்ல சகுனம் :: By மீனாக்ஷி.


                
அன்புள்ள எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு,
             
இந்த பகுதில குழந்தைகள் வரையறாங்களோ இல்லையோ நான் ரொம்ப மும்முரமா வரையறேன். :) நான் வரைஞ்ச இந்த கழுதை பேரு 'அபெல்' (Abel). எந்த கழுதை படத்தை பாத்தாலும் அதோட கண்கள் சோகமா, பாக்கவே பாவமா இருக்கா மாதிரி எனக்கு தோணும். இப்ப இந்த படத்தை பாக்கும்போதும் எனக்கு அப்படித்தான் தோணித்து.
                
சின்ன வயசுல எங்க சித்தப்பாவோட ஏதாவது கிண்டலா பேசும்போதெல்லாம் விளையாட்டா என்னை 'கழுதை, உன்னை உதைக்கணும்' ம்னு சொல்லுவார். 'கழுதை தானே உதைக்கும் சித்தப்பா' அப்டின்னு நான் பதிலுக்கு சொன்னா, 'இந்த கழுதையை நான்தான் உதைப்பேன்' அப்படின்னு சொல்லுவார். :)  இப்ப அவர் உயிரோட இல்லை. எனக்கு இந்த கழுதை படம் வரையும்போது அவர் கிண்டல் பண்ணினதுதான் ஞாபகம் வந்துது.
     
என்னோட நேரத்துல இந்த படம் வரைஞ்ச கொஞ்ச நேரம் ரொம்ப சுவாரசியமா இருந்துது. நன்றி உங்களுக்கு.

அன்புடன்
மீனாக்ஷி.20 கருத்துகள்:

 1. இந்தப் படத்தைப் பார்த்தால் ஜம்மியின் லிவர்க்யூர் ஞாபகம் வருகிறது!

  பதிலளிநீக்கு
 2. கழுதையின் கண்களில் தெரியும் சோகம்
  சொல்லியதும் அது தெரியும்படி படத்தில் வரைந்திருப்பதும்
  மனம் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
 3. கழுதையை கழுதையாவே வரைஞ்சிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 4. மீனும்மா...பூனையார் நல்ல வரைஞ்சிருந்தீங்களே.என்னமோ தப்பிருக்கு.கால் உயர்ந்துபோச்சோ !

  பதிலளிநீக்கு
 5. ரவிச்சந்திரன்4 ஏப்ரல், 2012 அன்று PM 3:16

  கழுதைக்கு சாப்பாடே போடலையா...வயிறு எப்படி ஒட்டியிருக்கு பாருங்க...அப்புறம் ஏங்க கண்ணுல ஒரு சோகம் தெரியாது...?!

  பதிலளிநீக்கு
 6. அனானி உங்கள் கமெண்ட் எனக்கு புரியவில்லை. ஆனாலும் நீங்கள் நான் வரைந்த படத்தை பார்த்ததற்கு என் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. நன்றி ரமணி சார். நீங்கள் வருகை தந்து பாராட்டியது மிகவும் நெகிழ்சியுட்டுகிறது.

  பதிலளிநீக்கு
 8. ராஜி, கழுதை கழுதையாவே இருக்கா! எங்க சித்தப்பாவோட கிண்டலை படிச்சீங்க இல்லை! கழுதை படத்தை கழுதையே வரைஞ்சா இருக்காத பின்னே. :)
  ரொம்ப நன்றி ராஜி. உங்க பாராட்டு சந்தோஷமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 9. சரியா சொன்னீங்க ஹேமா! எனக்கும் வரஞ்சு அனுப்பின அப்பறம் அப்படித்தான் தெரிஞ்சுது.
  ரொம்ப நன்றி ஹேமா. வந்து, பாத்து எனக்கு உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் தரதுக்கு.

  பதிலளிநீக்கு
 10. :))) நன்றி ரவிச்சந்திரன். உங்க கமெண்ட் படிச்சுட்டு நான் வரஞ்ச கழுதையை பாத்தபோது எனக்கு சிரிப்பை அடக்க முடியல.

  பதிலளிநீக்கு
 11. குரோம்பேட்டை குறும்பன்5 ஏப்ரல், 2012 அன்று AM 7:43

  கழுதைப் படம் நல்லா இருக்கு. அதைவிட கழுதை பற்றிய உங்கள் நினைவுகள் நல்லா சுவாரஸ்யமா இருக்கு!

  பதிலளிநீக்கு
 12. நன்றி கு.கு.! என் நினைவலைகளையும் ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி.

  பதிலளிநீக்கு
 13. ஃப்ரொபைல் பூ ரொம்ப அழகாயிருக்கு மீனும்மா !

  பதிலளிநீக்கு
 14. நன்றி ஹேமா! உங்களுக்கு பிடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 15. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. நன்றி ராஜராஜேஸ்வரி! உங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 17. அருமை, கழுதைக்கு பேரு ஏதும் வைக்க வில்லையா

  பதிலளிநீக்கு
 18. உங்க பாராட்டுக்கு மிகவும் நன்றி சீனு! கழுதையோட பேரு அபெல் (abel).

  பதிலளிநீக்கு
 19. எனக்கு சுத்தமா வரைய தெரியாது நீங்க சூப்பர்.

  பதிலளிநீக்கு
 20. உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க சசிகலா. நான் பத்தாம் வகுப்பு படிச்சபோது அறிவியல்ல சோதனை குழாய், அமீபா இப்படி போட்ட படம்தான் கடைசி. அதுக்கப்பறம் இப்ப நேரா இங்க வரையறதுதான். இது ஒண்ணும் பிரமாதம் இல்லைங்க. ஆர்வம் இருந்தா போதும். பாத்து அப்படியே வரைய வேண்டியதுதான். இங்க இல்லாமே எளிமையா வரயற மாதிரிதான் படங்கள் இருக்கும். எல்லாருமே வரையணும்ங்கற நல்ல எண்ணத்துலதான் இவங்க படங்களே போடுவாங்க. அதனால வரையறது ரொம்ப சுலபம்தான். நீங்களும் முயற்சி பண்ணி பாருங்களேன். நீங்களே ஆச்சரிய படற அளவுக்கு அழகா படம் வரும். அடுத்த முறை நீங்க வரையற படத்தையும் நான் இங்க எதிர்பாக்கறேன். :)

  பதிலளிநீக்கு