அலேக் அனுபவங்கள் என்னும் தலைப்பில் என் அசோக் லேலண்டு அனுபவங்களை, ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் ப்ளாக் வலைப்பதிவில் அவ்வப்போது எழுதிவந்தேன்.
அது வாராவாரம் என்று தொடங்கி, மாதம் ஒன்று என்று ஆகி, பிறகு எப்பவாவது என்று தேய்ந்து போனதால், வாசகர்கள் பலரும் அதைத் தொடர்ந்து படிக்க இயலாமல் போனது. மேலும் ஆரம்பகால வாசகர்கள் போய், இடைக்கால வாசகர்கள் வந்து, தற்போதைய வாசகர்கள் பலர் புதியவர்களாக உள்ளனர்.