வியாழன், 28 பிப்ரவரி, 2019

என் அசோக் லேலண்ட் அனுபவங்கள் :: முன்னுரைஅலேக் அனுபவங்கள் என்னும் தலைப்பில் என் அசோக் லேலண்டு அனுபவங்களை, ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் ப்ளாக் வலைப்பதிவில் அவ்வப்போது எழுதிவந்தேன். 


அது வாராவாரம் என்று தொடங்கி, மாதம் ஒன்று என்று ஆகி, பிறகு எப்பவாவது என்று தேய்ந்து போனதால், வாசகர்கள் பலரும் அதைத் தொடர்ந்து படிக்க இயலாமல் போனது. மேலும் ஆரம்பகால வாசகர்கள் போய், இடைக்கால வாசகர்கள் வந்து, தற்போதைய வாசகர்கள் பலர் புதியவர்களாக உள்ளனர். அந்தக் கட்டுரைகளை, தேதி வாரியாகத் தொகுத்து மொத்தம் முப்பத்து ஒரு கட்டுரைகள் இருக்கின்றன என்று தெரிந்துகொண்டேன். 

எல்லாவற்றையும் வரிசையாக ஒவ்வொரு நாளும் வெளியிட்டால், படிக்கின்ற புதிய வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால், இந்த 'நம்ம ஏரியா ' வலைப்பதிவில் மார்ச் ஒன்று முதல், மார்ச் முப்பத்து ஒன்றாம் தேதி வரை தொடர்ந்து வெளியிடப்போகிறேன். 

மார்ச் மாதம் முழுவதும் ஒவ்வொருநாளும், இந்தத் தொடர்பதிவு, இந்திய நேரப்படி காலை ஐந்து முப்பதுக்கு வெளியாகும். 

நன்றி,
வணக்கம்! 


மீண்டும் பகிர்வோம்! எங்கள் ப்ளாக் வலைப்பதிவில் நான் எழுதிய, கட்டுரைகளின் தொகுப்பு. (மே 2012 முதல் ஆகஸ்ட் 2014 வரை )K G Gouthaman.

My experiences in Ashok Leyaland (1971 to 2006) 
Reprints of blogs published in engalblog 6 years back.அலேக் அனுபவங்கள் 00 ::முன்னுரை

அசோக் லேலண்ட் என்னும் சமுத்திரத்தில் ஓர் ஓரத்தில் நின்று சுமார் முப்பத்தைந்து வருடங்கள் காக்காய் குளியல் செய்த என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல், இந்த ப்ளாக் ஆரம்பித்த நாள் முதல் எனக்கு இருந்து வந்தது.

இதை தொடர் போல எல்லாம் எழுதி, உங்கள் பொறுமையை சோதிக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. இந்தத் தலைப்பில், வாரம் ஒரு பதிவு போடலாம் என்ற எண்ணம மட்டும் இருக்கின்றது. ஒவ்வொரு பதிவும், ஒவ்வொரு தனி அங்கமாக இருக்கும் ( என்று நம்புகின்றேன்!)


முஸ்கி (அதாவது 'டிஸ்கி' க்கு ஆப்போசிட்!) இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே ....... இல்லை. சில இடங்களில் பெயர் குறிப்பிட்டிருப்பேன். சில இடங்களில் பெயர்கள் கற்பனையாக இருக்கக் கூடும். சில இடங்களில் பெயர் குறிப்பிடாமல் நழுவி விடுவேன். சில இடங்களில் பெயர்களை மாற்றிக் கொடுத்திருப்பேன். பெயர்களா முக்கியம்? (என்ன மோ சி பாலன்....? சரிதானா? )


முஸ்கி இரண்டு: இதில் காணப்படும் கருத்துகள், என்னுடைய பார்வை, என்னுடைய அனுபவம், என்னுடைய புரிதல். உடன் பணிபுரிந்தவர்கள் யாரையும் குறை காண்பதோ / குற்றம் சுமத்துவதோ என்னுடைய எண்ணமோ அல்லது விழைவோ இல்லை. அப்படி ஏதேனும் த்வனி தெரிந்தால், அவ்வப்போது அங்கங்கே கருத்துரைத்து உங்கள் ஐயங்களை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.


அன்புடன் (அம்புடன்)

கௌதமன்.


*****************************


கி பி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்றாம் ஆண்டு வந்த சனிப் பெயர்ச்சி, மிகவும் முக்கியமானது (எனக்கு!). புலியூர் பாலுவோ அல்லது காழியூர் நாராயணனோ யாரோ ஒருவர் என்னுடைய தனுசு ராசிக்கு அந்த சனிப் பெயர்ச்சி பெரிய நன்மைகளைக் கொடுக்கும் என்று எழுதியிருந்தார்கள். அதைப் படித்து, என்னுடைய அப்பாவும் நானும் ரொம்ப அகமகிழ்ந்து போனோம்.


அந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள், அசோக் லேலண்டுக்கு அப்ரெண்டிஸ் ஆக சேருவதற்கு (ஹிந்து பேப்பர் விளம்பரம் பார்த்து) மனு செய்திருந்த எனக்கு, எழுத்துத் தேர்வு ஒன்றுக்காக சென்னை வந்து சேரும்படி அழைப்பு அனுப்பி இருந்தார்கள்.


உடனடியாக, சென்னை வருவதற்கு, ஒரு ரயில் டிக்கெட் பதிவு செய்தார், அப்பா. முதன் முறையாக, தனி ஆளாக அதிக தூரம் (நாகப்பட்டினத்திலிருந்து, சென்னை வரை)பயணம் செய்தது அப்பொழுதுதான் என்று நினைக்கின்றேன்.


அந்தப் பயணத்தின் போது ஒரு திடுக்கிடும் அனுபவம் ஏற்பட்டது.


மீதி அடுத்த பதிவில்...

20 கருத்துகள்:

 1. இந்தத் தொடரின் சிறப்பு பற்றி நான் அறிவேன், கேஜிஜி. தொடருங்கள். புது உற்சாகத்துடன் இன்றைய அனுபவங்களோடு தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. நானும் படிக்க வரேன். அன்புடன்

  பதிலளிநீக்கு
 3. படித்திருக்கிறேன். மீண்டும் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. தனிக்குடித்தனம் ஆரம்பிச்சுட்டீங்க போல! ஹாஹாஹா, வெற்றி நமதே! (சேச்சே) வெற்றி உங்களுக்கே! :)))))

  பதிலளிநீக்கு
 5. 1971 ஆம் வருடம் என் வாழ்க்கையிலும் முக்கியமான வருடம். உங்களோட இந்தப் பதிவில் அப்போதே பதில் சொல்லி இருப்பேன். கொஞ்சம் கொஞ்சம் நினைவில் இருக்கு!

  பதிலளிநீக்கு
 6. கௌ அண்ணே நாளை முதல் 5.30க்கு நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊனு வந்துருவேன்ல...ஹா ஹா ஹா

  பதிவு வாசிச்சுட்டு வரேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 7. ஆரம்பமே திடுக்!!! தொடர்..

  இதோ அடுத்த பதிவுக்குப் போறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 8. சனிப்பெயர்ச்சி!! ஹா ஹா ஹா ஹா உங்களை நாகப்பட்டினத்தில்ரிந்து சென்னைக்கு இடப்பெயர்ச்சி செய்துருச்சுனு நினைக்கிறேன்!!!!! ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்! மேலும் Ashok Leyland Limited என்ற பெயருக்கும் நியூமராலாஜி 8, அங்கு என்னுடைய பிரபலமான பெயர் KGG என்பதற்கும் நியூமராலாஜி 8, அங்கு நான் பணியாற்றிய கடைசி சில ஆண்டுகளுக்கு எனக்கு பாஸ் ஆக இருந்தவர்களின் பிறந்த தேதி 26 கூட்டுத் தொகை 8. எட்டு என்பது சனிபகவானின் எண்!

   நீக்கு
 9. மீள் பதிவு அருமை.முன்பே படித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
  மீண்டும் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு