திங்கள், 7 செப்டம்பர், 2020

நாடி ஜோதிடம் வல்லிசிம்ஹன்

(1)

நாடி ஜோதிடம் எங்கள் வாழ்வில் வந்தது மிக நூதனமான முறையில் தான்.

1990 ஆண்டு சில பல தொழில் முறை மாற்றங்களைச் சந்திக்க வேண்டி
வந்தது

பசங்களின் படிப்பு சம்பந்தமாக சில முடிவுகளை அதாவது அவர்கள் எடுத்த முடிவுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்கள் தான். என்னைப் பொறுத்தவரை என் தந்தை காட்டிய வழியில் ஒரு ஜோதிடர் சில பூஜா வழிகளைச் சொல்லிக் கொடுத்து அதைப் பின்பற்றியதில்,இராமாயணம் தொடர்ந்து படிப்பது,விளக்கு பூஜை செய்வது ,கந்த சஷ்டி கவசம் சொல்வதுஅதாவது மனதை நேர்மறை வழியில் திருப்ப உதவி செய்தது.
எனக்கு வெற்றியே.

சிங்கத்துக்கு ஒரு நல்ல தோழர் இருந்தார். அவருக்கு  ஜோதிட சாஸ்திரம் தெரியும்கிண்டி தொழில் பேட்டையில் இருந்த பட்டறையை  இடம் சரியில்லை, மாற்றிவிடு என்றார்காஞ்சீபுரம் போய்   நாடி ஜோதிடம் பார்க்கிறியா என்றார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

 நாடியை வைத்தியர் அல்லவா பார்ப்பார்? ஏண்டா  அவரை  இழுக்கறே”  என்றதும் அவர் சிரித்து விட்டார்.

இல்ல நாடி என்பது  சில பேருக்குத்தான் கிடைக்கும். பழைய காலங்களில் 
எழுதிவைத்தது என்றார்.அவரிடம் விவரம் விசாரித்துக் கொண்டு அவர் சொன்ன காஞ்சிபுரம் அகஸ்திய நாடி என்ற இடத்தைத் தேடிச்சென்றோம்

ஸ்ரீ வரதராஜர் கோவில் வாசலில் வந்தனம் சொல்லி அந்த மதிலோடு போனால் ஒரு புற நகர் குடியிருப்பு. விசாரித்துக் கொண்டு சென்றோம். ஒரு சிறிய வீடு. வாசலில் போர்டு. உரிமையாளர் பெயர்.

 

அதை ஒட்டி ஒரு பந்தல். உள்ளே இருட்டாக இருந்தது.
நாங்கள் தயங்கி நிற்பதைப் பார்த்து உள்ளிருந்த இளைஞர் வெளியே வந்து விசாரித்தார்.

நாடி பார்க்க வந்திருப்பதாகச் சொன்னோம். அங்கே இருந்த பெஞ்சில் அமரச் சொன்னார். முன்பு இது போல ஜோதிடம் பார்த்ததுண்டா என்று கேட்டார்,

எப்படிப் பார்ப்பீர்கள் என்று கேட்டதற்கு உங்கள் கை ரேகை எடுத்துக் கொள்வோம். பிறகு உங்களுக்குச் சொல்வதற்கான வேளை இருந்தால்
ஓலை கிடைக்கும். படித்து சொல்வோம். உங்கள் பெயரை இந்த சீட்டில் அடையாளமாக எழுதிக் கொடுங்கள் என்றார்எங்கள் கட்டைவிரல் ரேகைகளை எடுத்துக் கொண்டார்.என் பெயரைக் கேட்கவில்லை.
 நீங்கள் கோவில்கள் சென்று வழிபட்டு,உணவை முடித்துக் கொண்டு வாருங்கள். எங்களுக்கு, ஓலை தேட இரண்டு மணி நேரம் தேவை” என்றார். நாங்களும் அந்த இடத்தை விட்டு எங்கள் ஃபியட் வண்டியில் ஏறி வரதராஜர் கோவிலுக்கு வந்து வழிபட்டுவிட்டு சரவணபவன் சென்று மதிய உணவை முடித்துக் கொண்டோம்.

(தொடரும்) 





13 கருத்துகள்:

  1. இதென்னது முதல் பாகம்?
    நான் நாலு எழுதியாச்சே. நன்றி கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
  2. மின் நிலா வலைப்பதிவில் வரும் படங்கள் மிக அழகு.
    அரளிப்பூ இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேன் சிந்தும் மொட்டுகளைச் சொல்கிறீர்களா? நன்றி.

      நீக்கு
  3. இங்கேயும் போட்டிருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்நிலாவில் மட்டும் போடப்படும் சிலவற்றை இங்கே போட்டால் படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  4. சும்மா எப்படி வருதுன்னு பார்க்க. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மிச்சம் உள்ள பகுதிகளைப் போட்டு முடிச்சுடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேஜிஜ் சார்... உங்க முயற்சிகளைப் பாராட்டறேன்.

      மின்னிலாவில் முதலில் புதிய பகுதிகள் வந்தபோது அதனைப் படிக்கணும் என்பதற்காகத்தான் மின்னிலாவைப் படிக்க ஆரம்பித்தேன். தொடர் எபி வாசகன் என்பதால், மின்னிலாவில் ஒரு சில பக்கங்களைப் படிப்பதற்காக மீண்டும் புரட்டுவது சிரமமாக இருந்தது.

      அதன் ஸ்பெஷல் பகுதிகளை இங்கு போடுவதை வரவேற்கிறேன். இப்பவும் இந்தப் பகுதிகளெல்லாம் படித்துவிட்டதால் மீண்டும் கருத்திட மாட்டேன். ஆனால் in future கருத்திடுவேன்.

      நீக்கு
  5. நாடி ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வமுண்டு...
    வைத்தீஸ்வரன் கோயிலில் நண்பர்கள் பலருக்கும் பார்த்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. நாடி ஜோதிடம் மற்ற பாகங்கள் பிறகு தொடர்கிறேன். இப்போ கூகிள் லிங்க் embed செய்து சிறிய சோதனை நடத்துகிறேன். இன்றைய பதிவு பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  7. இங்கேயும் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு