திங்கள், 13 டிசம்பர், 2010

சென்னை இசைவிழா கச்சேரிகள்

எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு: 

சென்னை இசைவிழா கச்சேரிகள், ஒவ்வொரு தேதியிலும், எந்தெந்த நேரத்தில், என்னென்ன கச்சேரிகள், எங்கெங்கு நடக்கின்றன; அவைகள் காசுக் கச்சேரியா அல்லது ஓசிக் கச்சேரியா? கச்சேரிகள் நடக்கும் சபா விலாசம் என்ன போன்ற விவரங்களை, ஒரு பி டி எஃப் கோப்பாக வெளியிட்டுள்ளோம். 

அதைக் காண, தரவிறக்க,  >>>>இங்கே     சொடுக்கவும். 

நம் வாசகர்களுக்கு, மேலும் ஒரு வேண்டுகோள். 
இந்த சீசனில், நீங்கள் ஏதாவது கச்சேரிக்குச் சென்று வந்தால், உங்கள் கச்சேரி விமரிசனத்தை, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ, எழுதி, 
engalblog@gmail.com   மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். 

கச்சேரி விமரிசனம் எழுதுபவர்கள், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி எழுதலாம்.

கச்சேரி நடந்த தேதி: 

கச்சேரி நடந்த இடம்.

யார் பாட்டு?

பக்க வாத்தியங்கள் வாசித்தவர்கள் யார்?  

நினைவிருக்கின்ற பாடல்கள் / ராகம்.

எந்தப் பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்தது.

கச்சேரியின் சிறப்பம்சம் என்று எதையாவது சொல்ல விரும்புகின்றீர்களா?

பாடகரின் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஏதாவது சொல்ல விரும்பினால், என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

இந்த விவரங்கள் + உங்கள் எழுத்துத் திறமை ஆகியவற்றுடன், எழுதி அனுப்புங்கள். இயன்ற வரையில், வளரும் இளம் கலைஞர்களை, உற்சாகப் படுத்தும் வகையில் எழுதப் படுகின்ற விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பாடகர், உங்கள் சொந்த பந்தமாக அல்லது நண்பராக இருந்தாலும் ஆட்சேபணையில்லை! 
                         

4 கருத்துகள்:

  1. மார்கழி மகோற்சுவத்தைப் பற்றியும் எழுதலாமா?

    பதிலளிநீக்கு
  2. தாராளாமாக எழுதலாம், ஆதிரா! எழுதியனுப்புங்க, to engalblog@gmail.com

    பதிலளிநீக்கு
  3. ஆதிரா உங்கள் பிளாகர் ப்ரோபைல் பக்கத்தில் உள்ள ஆடியோ கிளிப் வேலை செய்யவில்லை. லொகேஷன் விவரத்திற்கு, நீங்கள் கொடுத்திருக்கும் குறிப்பை வெகுவாக ரசித்தோம்.

    பதிலளிநீக்கு