சனி, 3 டிசம்பர், 2011

தவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)


(எழுதியவர் மீனாக்ஷி. )

."..காப்பாற்ற வேண்டும்.  தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்!"  என்று அவள் சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கி, குரல் தழுதழுத்தது.  

அவள் சொன்னதை கேட்டு புங்கவர்மன் மனம் இறங்கினாலும் தன்னுடைய நிலைமையை நினைத்துப் பார்த்தான்.  பின் அவளிடம் "இளவரசி.. நான் மீளமுடியாத பணப் பிரச்சனையில் இருக்கிறேன்.  இந்த நிலைமையை எப்படி சீர்செய்வது என்பதறியாமல் நானே பெருங்குழப்பத்தில் இருக்கிறேன்.  அதனால்தான் நாட்டில் இருக்க இயலாமல் அடிக்கடி வேட்டையாட காட்டுக்கு வந்து விடுகிறேன்.  இந்த நிலையில் நான் எப்படி உங்களுக்கு..." என்றான். 

அவன் முடிக்கும் முன்னமே அவள், "..உங்கள் ஒருவரால்தான் அவரை காப்பாற்ற முடியும்... நீங்கள் என் கணவரை மீட்டு வந்து என்னிடம் ஒப்படையுங்கள்.   நான் உங்களுக்கு வேண்டிய பொன்னும், பொருளும் அளிக்கிறேன்.  நீங்கள் மறுக்காமல் இந்த உதவியை எனக்கு செய்தே ஆகவேண்டும், ஏனென்றால் உங்கள் ஒருவரால்தான் அவரை, அவரை.." என்று சொல்லியபடியே மயங்கி சரிந்தாள்.

அவளுக்கு என்ன ஆயிற்று என்று அவள் அருகே செல்ல ஓரடி எடுத்து வைத்தான் புங்கவர்மன். 
      
எதிர்பாரால் அடித்த பலத்த காற்றினால் மேகங்கள் விலகி நிலவின் ஒளி மயங்கி விழுந்த அவள் மேல் பட, அவள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தவளை ஆனாள்.  மயக்கம் இன்னும் தெளியாத நிலையில் தவளை அப்படியே அசையாமல் படுத்திருந்தது.
    
பொன்னும், பொருளும் வேண்டிய அளவிற்கு கிடைக்க போகிறது என்பதினாலேயே புங்கவர்மன் உடனேயே செயலில் இறங்கினான்.  புறப்படும்முன் தன் நம்பிக்கைக்கு பாத்திரமான காவலாளியை அழைத்து நடந்த அனைத்தையும் சொல்லி, தவளை உருவில் இருக்கும் அந்த இளவரசியை பாதுகாக்கும்படி ஆணையிட்டான்.   எப்படியாவது ஏழு கடல், ஏழு மலையை கடந்து இந்த சாதனையை செய்தே ஆகவேண்டும் என்று உறுதியுடன் தங்கள் குல தெய்வமான புங்கனாதரை வேண்டிக் கொண்டு மேற்கு திசையை நோக்கி புறப்பட்டான்.
   
பாதையில் கவனம் வைத்து பயணத்தை செலுத்தி கொண்டிருந்தவனின் பாதையில் ஒரு மிகப் பெரிய மலைபாம்பு குறுக்கிட்டது.   புங்கவர்மன் சிறிதும் அஞ்சாமல் அதனுடன் போராடி, வென்று தன் பயணத்தை தொடர்ந்தான்.  இரவு நேரத்தில் தனிமையில் காட்டில் பயணிக்கும்போது ஓய்வெடுக்க வேண்டாம் என்ற தீர்மானத்துடன் பயணத்தை தொடர்ந்தவன், விடிந்ததும் சற்று இளைப்பாறிவிட்டு மீண்டும் புறப்படலானான்.  பகல் நேரம் முழுவதும் வழியில் ஏற்பட்ட இடர்களை களைந்து,  தன் பயணத்தை தொடர்ந்தான்.  அந்தி நேரமும் வந்தது, அவன் பயணத்தின் முதல் கட்டமாக பரந்து விரிந்து கடலும் தென்பட்டது.  சூரியன் மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்க தொடங்கினான்.  இருள் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது.  முற்றிலும் இருள் பரவுவதற்கு முன், எப்படியாவது இந்த கடலை கடந்து விட வேண்டும் என்ற உறுதியுடன் கடலை கடக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டான் புங்கவர்மன்.
  
"என்ன இது? என்ன பண்ணிண்டு இருக்க?" என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.

"இருட்டுறதுக்குள்ள கடலைக் கடந்தாகணும்" என்றான்.

"என்னடா உளறிட்டிருக்கே? கரண்ட் போறதுக்குள்ள ஹோம் வொர்க் முடிக்காம, இந்த புது வீடியோ கேமை  விளையாட ஆரம்பிச்சுட்டயா!  ஹோம் வொர்க்கை முதல்ல  முடிச்சுட்டு அப்பறமா விளையாடுனு உனக்கு எத்தனை தடவ சொல்றது?".  அம்மா அவனை கடிந்து கொண்டாள்.
   
'அம்மாக்கு எங்கேந்து புரிய போறது, ஹோம் வொர்காவது எமர்ஜென்சி லாம்ப் வெச்சுண்டு பண்ணிடலாம், வீடியோ கேம் ஆட முடியுமா?  யுபிஎஸ் ஒண்ணு வாங்குப்பான்னு ஒரு தடவ அப்பாகிட்ட கேட்டதுக்கு  எனக்கெல்லாம் அந்த காலத்துல....னு தன் பழைய ராமாயணத்தை பாட ஆரம்பிச்சவர்தான்.  நிறுத்தறதுக்கு ஒரு வாரம் ஆச்சு.  

இப்போ இந்த பாழாப்போன லாப் டாப்ல அப்பர் ஏரோ கீ சரியாவே வேலை செய்யல.  இதுல நான் எப்படி இந்த கடலை தாண்டறது.  அப்பாகிட்ட ஒரு புது லாப்டாப் வாங்கி தரயான்னு தப்பி தவறி கூட கேக்க முடியாது.  யுபிஎஸ் கேட்டதுக்கே ஒரு வாரம் ராமாயணம் பாடினவர், லாப்டாப் கேட்டா, யம்மா!   

இவங்களுக்கெல்லாம் என் நிலைமையை எப்படி புரிய வைக்கறது?  வகுப்புல பாதி பேர் இந்த கேம் முழுக்க முடிச்சாச்சு.  அவங்கள் எல்லாரையும் விட வேகமா நான் இதை முடிச்சு காமிக்கறேன்னு பெட் வேற கட்டி இருக்கேன்.  என் லாப் டாப் இருக்கற அழகுக்கு இந்த பெட் எல்லாம் நான் போட்டிருக்கணுமா?' என்று தன்னை தானே நொந்தபடி மீண்டும் மீண்டும் ஏரோ கீயை விரல் தேஞ்சு போற அளவுக்கு அழுத்தினான். 
  
பக்கத்துல இருந்து இவன் படற பாட்டை எல்லாம் பாத்து இவன் தம்பி சிரிச்சுண்டு இருந்தான்.  வர்ற ஆத்திரத்துக்கு.. 'அவ்வ்வன்ன்னை ஒண்ணும் பண்ண முடியாது.   ஏன்னா, அவன் ஏற்கெனவே இந்த கேமை இவனுக்கு முன்னாடி முடிச்சாச்சு' என்று நொந்தவனுக்கு தம்பியோட இளிப்பு வெறுப்பா இருந்துது.  
  
'தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பிசாசே தேவலாம்னு எப்பவும் அம்மா சொல்லுவா.  இப்ப இந்த குட்டி பிசாசோட தயவு தேவை' நெனச்சு,  "ஏய், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா"னு கெஞ்சலா கேட்டான்.
  
"நீ நேரா லெவல் அஞ்சுக்கு போ.  அங்க அந்த இளவரசியோட கணவன் இருப்பான்.  அவன் மேல கிளிக் பண்ணினா அவனுக்கு மயக்கம் தெளிஞ்சுடும்.  அதுக்கப்பறம் லெவல் ஆறு விண்டோ தானே ஓபன் ஆயிடும்.  அது ரொம்ப ரொம்ப ஈசி.  லெவெல் ஆரோட கேம் ஓவர்" என்றான் தெரிந்த பிசாசு.  

"டேய், ரொம்ப தேங்க்ஸ்டா!  கரண்ட் போறதுக்கு முன்னாடி இந்த கேமை முடிக்கறேன்".  அஞ்சாவது லெவலுக்குத் தாவினான். 

விண்டோ ஓபன் ஆகாமல்  திரும்ப டென்ஷன் ஆகி தம்பியிடம், ""என்னடா இதுக்கு கோட் வோர்ட் இருக்கா? க்ளிக் செஞ்சா ஒண்ணும் ஆகலியே? என்ன கோட் வோர்ட்? சொல்லித்தொலை" என்றான். 
  
"அதாண்டா.. அந்த இளவரசி மயக்கமாறதுக்கு முன்னாடி சொன்ன கடைசி வார்த்தை, அதான் கோட்" என்று தம்பி சொன்ன ஸ்பெல்லிங்கை வாய் விட்டு அழுத்தமாக சொல்லிக் கொண்டே டைப் செய்ய ஆரம்பித்தான்.....

அ வ ரை.     

48 கருத்துகள்:

  1. நல்ல முயற்சி மீனாக்ஷி. வாழ்த்துக்கள். விடியோ கேமை சாமர்த்தியமாக நுழைத்திருக்கிறீர்கள். படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கீதா! படங்கள் உபயம் எங்கள் ப்ளாக்தான். ரொம்ப அழகா இருக்கு. நல்ல தேர்வு. எனக்கும் ரொம்ப பிடிச்சுது. கதையே இந்த படங்களால ரொம்ப எடுப்பா இருக்கு.

    மிகவும் சந்தோஷம்! நன்றி எங்கள் ப்ளாக்!

    பதிலளிநீக்கு
  3. பிரமாதம்! வித்தியாசமான கதை.

    படங்கள் கதைக்கு மெருகு சேர்ப்பது உண்மை.
    வாழ்த்துக்கள்.

    குல தெய்வமான எம்எஸ்வினு சொல்வீங்கனு பார்த்தேன் :)

    பதிலளிநீக்கு
  4. நல்லா வந்திருக்கு. இன்றைய சூழலுக்குத் தகுந்தாற் போல வீடியோ கேமைப் பத்திச் சொல்லி அசத்தியிருக்கீங்க. நான் கொஞ்சநாளா எங்கள் ப்ளாக் பக்கம் வராததால இந்தப் படைப்பை இப்பதான் பாக்கறேன். அருமை. வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. நன்றி அப்பாதுரை! வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் வாங்கின மாதிரியே இருக்கு. :)
    எனக்குதாங்க எம்.எஸ்.வீ. குலதெய்வம், நடமாடும் இசை கடவுள். புங்கவர்மனுக்கு இல்லேங்கோ! :)
    எப்பேர்பட்ட பாட்டெல்லாம் போட்டு அசத்தியிருக்காங்க எங்கள் ப்ளாக்-ல. நீங்க பாக்கலியா? இந்த பதிவுக்கு உங்களோட கமெண்ட் எதிர்பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
  6. மிகவும் நன்றி கணேஷ். என்னோட முதல் கதைக்கு இப்படி ஒரு விமர்சனமா! ரொம்ப சந்தோஷமாவும், மனசுக்கு நிறைவாகவும் இருக்கு. உங்கள் வாழ்த்துக்கும் என் நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  7. வெற்றி கிடைக்க வாழ்த்துகள் மீனாக்ஷி. உண்மையாகவே அருமையான கற்பனை வளம்.

    பதிலளிநீக்கு
  8. அது சரி, இரண்டே இரண்டு கதைகள் மட்டும் நம்ம ஏரியாவிலே வந்திருக்கிறதைப்பார்த்தா..........???????? ஹிஹிஹி எனிவே, மொத்தமே ஐந்து கதை தான் வந்திருக்கு. ஆகவே எல்லாத்துக்கும் பரிசு கொடுத்தே ஆகணுமே! ஹையா ஜாலி!

    பதிலளிநீக்கு
  9. உங்கள் பாராட்டு சந்தோஷமா இருக்கு. நன்றி கீதா!
    //ஹிஹிஹி எனிவே, மொத்தமே ஐந்து கதை தான் வந்திருக்கு. ஆகவே எல்லாத்துக்கும் பரிசு கொடுத்தே ஆகணுமே! ஹையா ஜாலி!//
    நானும் இததான் இதையேதான் நெனச்சேன். ஹிஹிஹிஹிஹி!

    பதிலளிநீக்கு
  10. இதுவரை கதை எழுதி வெளியிட்டவர்கள் ஆறு பேர்.
    நாச்சியார் (வல்லிசிம்ஹன்)
    கீதா சாம்பசிவம்
    கணேஷ்
    கீதா சந்தானம்
    குரோம்பேட்டைக் குறும்பன்
    மீனாக்ஷி
    இன்னும் கொஞ்சம் பேர் நிச்சயம் எழுதுவோம் என்று வாக்குக் கொடுத்திருக்கின்றார்கள். இன்னும் இருபத்தாறு நாட்கள் மீதி இருக்கின்றன. பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  11. அசத்திட்டீங்க மீனாக்ஷி.
    ஆஹா வீடியோ கேம் கம்பனிக்கு அனுப்பலாம் போல இருக்கு.
    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. இதுவரை கதை எழுதி வெளியிட்டவர்கள் ஆறு பேர்.//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அநியாயமா இருக்கே. :))))

    காலங்கார்த்தாலே எழுந்த உடனே என் மூடை அப்செட் பண்ணின எங்கள் ப்ளாகை என்ன செய்தால் தகும்? :)))))))

    பதிலளிநீக்கு
  13. அஞ்சோ ஆறோ... இன்னொரு புது ரூல் போடாத வரைக்கும் சரி. திடீர்னு ரூல் போட்டாலும் போடுவோம்னு முதலிலேயே சொல்லிட்டதால .. எதுக்கு சொல்றேன்னா ஒரு ரூல் சந்தேகம் வந்துச்சு.. அஞ்சு முதல் பரிசுன்னாங்களே, அது அஞ்சு தனித்தனி கதைகளுக்கு முதல் பரிசா இல்லை, அஞ்சு ஆ'சிரி'யரும் பேரும் சேந்து ஒரே கதைக்கு முதல் பரிசு தருவாங்களா?

    வார்த்தைங்களை எண்ணுறதுக்கு ஆள் போட்டிருக்காங்க, கதைகளை எண்ணாமலா இருப்பாங்க கர்ர்ர்ர்ர்ர்ர்?

    பதிலளிநீக்கு
  14. ஹையோ, ஹையோ, வயித்தைக்கலக்குதே! எதுக்கும் இன்னொரு கதையும் எழுதி அனுப்பி வைச்சுடலாமானு தோணுதே! :)))))

    ஹெல்லோ,எங்கள் ப்ளாக், எங்கே ஓடறீங்க?? ஓடாதீங்க, இன்னும் கதைக்கான கருத்தையே முடிவு பண்ணலை! :))))

    பதிலளிநீக்கு
  15. ஒருவரே எவ்வளவு கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.

    ஐந்து முதல் பரிசுகள். ஐந்து கதாசிரியர்களுக்கு. எங்கள் ஐந்து ஆசிரியர்களும் தலா ஒவ்வொரு கதையை / கதாசிரியரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

    அவரவர்கள் வலைப்பதிவில் வெளியிட்டு, எங்கள் ப்ளாக் மின்னஞ்சலுக்கு சுட்டி அனுப்பப் படுகின்ற பதிவும், வலை இல்லாத வாசகர்கள் எழுதியனுப்புகின்ற கதைகள் - நம்ம ஏரியா வலைப் பதிவில் வெளியானவைகளும் போட்டியில் கலந்து கொள்கின்றன.

    ஜனவரி மாத முதல் + இரண்டாவது வாரத்தில் போட்டிக்கு கலந்து கொண்ட எல்லா கதைகளையும் வரிசைப் படுத்தி, வாசகர்களிடம் வோட்டெடுப்பு நடத்தலாம் என்றும் ஒரு யோசனை உள்ளது. அந்த நேரத்தில் நல்ல வோட்டுப் போடுபவர்கள், கள்ள வோட்டுப் போடுபவர்கள், காசுக்கு வோட்டுப் போடுபவர்கள் எல்லோரும் தயாராக இருங்கள்.

    பதிலளிநீக்கு
  16. ஆஹா, அப்படியுமா? ஒருத்தரே எத்தனை வோட்டு வேணாலும் போட்டுக்கலாம் இல்லை. என்னோட அத்தனை ஓட்டுக்களும் எனக்கே எனக்கு.

    பதிலளிநீக்கு
  17. //வாசகர்களிடம் வோட்டெடுப்பு நடத்தலாம் என்றும் ஒரு யோசனை உள்ளது.

    அதானே பார்த்தேன்!? என்னடா ரூலைக் காணோமே..

    பதிலளிநீக்கு
  18. //அசத்திட்டீங்க மீனாக்ஷி.// நிஜமாவேவா! ;)

    நன்றி வல்லிசிம்மன்! எல்லாம் எங்கள் ப்ளாக் கொடுக்கற ஊக்கம்தான். உண்மையிலேயே இது நம்ப ப்ளாக்தான்.

    பதிலளிநீக்கு
  19. இந்தமாதிரியெல்லாம் புது ரூல் போடாதீங்க. எனக்கு என் அண்ணாவைவிட்டால் ஓட்டு போட ஆள் கிடையாது. anyway, கதை எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. ஐயா.. அம்மா.. ஒரு ஓட்டு போடுங்க தாயே..

    பதிலளிநீக்கு
  21. //உண்மையிலேயே இது நம்ப ப்ளாக்தான்.

    ice maha ice.

    பதிலளிநீக்கு
  22. மாமா... கதையெழுதினவங்க வேணும்னா அண்ணன் கிட்டே ஓட்டு கேட்டு முறையிடுவாங்க.. அந்த அண்ணனே கதையெழுதி ஓட்டு கேட்டா யார் கிட்டே முறையிட முடியும்? ....தானாடவில்லையம்மா கதையாடுது.....

    பதிலளிநீக்கு
  23. @அப்பாதுரை,

    சூப்பரப்பு!

    @கீதா சந்தானம்,

    யாரு உங்க அண்ணா? ஹிஹிஹி, பெயரிலே சர்நேம் தான் மாறுதல்; தட்டுக்கெட்டுப் போய் உங்க அண்ணா ஓட்டை எனக்கே போடச் சொல்லுங்க.

    ஹும், எங்க அண்ணாவையும் எழுதச் சொன்னா மாட்டேங்கறார். இப்போ யார் கிட்டே ஓட்டுக் கேட்கறதுனே தெரியலை! திடீர்னு இடியைத் தூக்கிப் போட்டுட்டாங்க. :)))))))

    பதிலளிநீக்கு
  24. உங்களுக்கு யாரும் ஓட்டு போடணும்னு அவசியமே இல்லை அப்பாதுரை! நீங்க கதை எழுதறதுக்கு முன்னாடியே, நீங்க எழுதினா முதல் அஞ்சு பரிசுல ஒண்ணு உங்களுக்கு நிச்சயமா கிடைக்கும்னு பரிசு குடுக்கபோற ஆசிரியர்களே சொல்லிட்டாங்க. அப்பறம் எதுக்கு உங்களுக்கு ஓட்டெல்லாம். நீங்க பேசாம எங்க எல்லாருக்கும் ஒவ்வொரு ஓட்டு போட்டுடுங்க.
    ஒருத்தர் ஒரு ஓட்டுதான் போடணும்னு எதாவது ரூல் இருக்கா என்ன?

    பதிலளிநீக்கு
  25. நாங்க எங்கள் ப்ளாக் நடத்தும் சைடு பார் வோட்டெடுப்புகளில் நிறைய வோட்டுகள் போட முயற்சி செய்திருக்கின்றோம். ஆனால் ஒரு கம்பியூட்டரிலிருந்து ஒரு வோட்டுதான் போடமுடிகிறது. அதனால், வீட்டில், அலுவலகத்தில், லாப் டாப், டெஸ்க் டாப், உறவினர் வீட்டுக் கம்பியூட்டர்கள் என்று பல கம்பியூட்டர்களிலிருந்து சகட்டு மேனிக்கு வோட்டுப் போட்டு ஆனந்தப் பட்டிருக்கின்றோம். அதனால்தான் நல்ல வோட்டு, கள்ள வோட்டு, காசுக்கு வோட்டு எல்லாம் ரெடி செய்து வைத்துக் கொள்ளச் சொன்னோம்..!
    முடிந்தால் ஒருவரே எவ்வளவு வோட்டு வேண்டுமானாலும் போடலாம்!

    பதிலளிநீக்கு
  26. ஹையா, ஜாலி, ஜாலி, ஜாலிலோ ஜிம்கானா!

    எங்க வீட்டிலே இருக்கும் நாலு லாப்டாப்பிலே இருந்தும் என்னோட ஓட்டு மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் எல்லாரோட ஓட்டையும் பதிவு செய்துவிடுகிறேன். :))))))))

    நல்ல வழியைக் காட்டிய குருவே வணக்கம்.

    ஶ்ரீகுருப்யோ தேவோ நம:

    பதிலளிநீக்கு
  27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  28. அருமை...நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

    பதிலளிநீக்கு
  29. நன்றி ரிஷ்வன். உங்கள் வலைப்பூவை படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. நன்றி ரிஷ்வன். உங்கள் வலைப்பூவை படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  31. அடடா, அருமை. அரசர் காலக்கதையை அழகா நிகழ்காலத்துக்கு வீடியோகேமாகக் கொண்டுவந்து கோட் வொர்டாக அ வ ரை ஆக்கிய விதம் சூப்பர்.

    வெற்றிக்கு வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு
  32. மிகவும் நன்றி ராமலக்ஷ்மி. உங்கள் பாராட்டு எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
    உங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  33. நிச்சயமா இங்கே ஏதோ தில்லுமுல்லு நடக்குது. எலக்சன் கமிசன் ஆசாமிங்க யாரும் இல்லையா?

    பதிலளிநீக்கு
  34. ஆனால் ஒரு கம்பியூட்டரிலிருந்து ஒரு வோட்டுதான் போடமுடிகிறது. அதனால், வீட்டில், அலுவலகத்தில், லாப் டாப், டெஸ்க் டாப், உறவினர் வீட்டு//

    ஹூஸ்டன்லே இருந்திருந்தா இருக்கிற 5 லாப்டாப்பிலே இருந்தும் எல்லாரையும் வோட்டுப் போட வைச்சிருப்பேனே. போச்சே, போச்சே, என்ன பண்ணுவேன், ஏது பண்ணுவேன், தங்கிலிஷிலே கொடுக்கிற கமென்ட் கூடக் காணாமப் போகுதே! :)))))

    இங்கே ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுனு என்னோட லாப்டாப் மட்டுமே இருக்கு! பிள்ளையாரே, என்ன செய்வேன், நாராயணா, ஈஸ்வரா, அம்பிகே, பராசக்தி,எல்லாரும் வாங்கப்பா உதவிக்கு.

    பதிலளிநீக்கு
  35. அப்பாதுரை, சரியாச் சொல்லி இருக்கீங்க. ஏதோ தில்லுமுல்லு தான் நிச்சயமா. எல்லாரையும் கூப்பிடுங்க, மறு வாக்குப்பதிவு கேட்போம்.

    தேர்தல் கமிஷன் அராஜகம்! ஓட்டுப் பெட்டியைத் தொட்டாலே எல்லா ஓட்டும் மீனாக்ஷிக்குப் போறாப்போல் செட்டப் பண்ணிட்டாங்க டோய்!

    :)))))))))))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  36. கீதா மேடம், நான் பண்ணின ஒரே ஒரு தில்லு முல்லை உங்களுக்கு சொல்றேன். ஒருத்தரே எவ்வளவு ஓட்டு வேணும்னாலும் போடலாம்னு இருக்கறதால நீங்க உங்க laptop -la Google chrome, Mozilla firefox, Internet explorer எல்லா விண்டோவையும் ஓபன் பண்ணி நீங்களே உங்களுக்கு ஓட்டு போட்டுக்கலாம். மேலும் guest account -la log in பண்ணி இதே மாதிரி ஓட்டு போட்டுக்கலாம்.
    நான் இங்க இருக்கற சில நண்பர்களுக்கு மட்டும்தான் லிங்க் அனுப்பி வெச்சேன். எனக்கு நான் எதிர்பார்த்த அதிக பட்ச ஓட்டு நாற்பதுதான். அதுக்கு மேல வந்துது எல்லாம் எங்கேந்துன்னு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. சர்தான் வந்தவரை லாபம்னு நெனச்சுண்டு நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் பாக்கல. :)

    பதிலளிநீக்கு
  37. பார்த்தீங்களா மீனாக்ஷி, உங்க வாயாலேயே சொல்ல வைச்சுட்டேனே! இது எப்படி இருக்கு! இது எப்படீ இருக்கு! இது எப்பூடீ டீ டீ இருக்கு? ஹாஹாஹா,

    எங்கேப்பா ஜெய் சாய்ராம்னு சொன்ன எலக்‌ஷன் கமிஷனின் பிரதம கமிஷனர்?? சீக்கிரம் ஆக்‌ஷன் எடுங்க. இந்தத் தேர்தலை ரத்து பண்ணுங்க.

    முற்றுகை, போராட்டம், வெளியே விடமாட்டோம். குழந்தைகள் நாங்கள் கூடிவிட்டோம். தெய்வத்தின் பெயரால் ஆணை யிட்டோம், வெளியே விடமாட்டோம், டோம், டோம்.

    சே, அது ஏதோ சினிமாப் பாட்டு இல்ல?? ம்ம்ம்ம்ம் எந்த சினிமா?? ஏதோ பாலச்சந்தர் படம்! என்னனு நினைவிலே இல்லை! :(

    பதிலளிநீக்கு
  38. எங்கள் ப்ளாக்12 ஜனவரி, 2012 அன்று PM 9:51

    முற்றுகை, போராட்டம், வெளியே விடமாட்டோம். குழந்தைகள் நாங்கள் கூடிவிட்டோம். தெய்வத்தின் பெயரால் ஆணை யிட்டோம், வெளியே விடமாட்டோம், டோம், டோம்.

    சே, அது ஏதோ சினிமாப் பாட்டு இல்ல?? ம்ம்ம்ம்ம் எந்த சினிமா?? ஏதோ பாலச்சந்தர் படம்! என்னனு நினைவிலே இல்லை! :(

    படம் : தாமரை நெஞ்சம்.

    பதிலளிநீக்கு
  39. அட???? உடனே பதில் வந்திருக்கே??

    பதிலளிநீக்கு
  40. அது சரி, தேர்தலை ரத்து பண்ணறது பத்தி என்ன முடிவு எடுத்தீங்க???

    பதிலளிநீக்கு
  41. கீதா மேடம், இந்த கதையை நான் எழுதியதற்கான பலனை, கதை எழுதிய நாளன்றே பரிபூரணமாக, மனநிறைவுடன் அனுபவித்து விட்டேன். அதனால் எனக்கு விழுந்த அனைத்து ஓட்டையும் உங்களுக்கே மனபூர்வமாக கொடுத்து விடுகிறேன். தற்போது உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து உங்கள் விசிறி ஆகிவிட்டேன். என் ஓட்டுக்களை எல்லாம் உங்களுக்கு கொடுப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷமே. அதனால தேர்தலை எல்லாம் ரத்து பண்ண வேண்டாம். நானே இப்போ உங்க கட்சியில சேந்தாச்சு. :)

    பதிலளிநீக்கு
  42. குடுக்குறதோ குடுக்கறீங்க meenakshi.. ஆளுக்குப் பத்தா பிரிச்சுக் கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க? அவங்க புதுசா எதுனா ரூல் போடுறதுக்கு முன்னே சட்டுனு நீங்களே பிரிச்சுக் கொடுத்துடுங்க..

    பதிலளிநீக்கு
  43. போட்டிக்கு வராதீங்க அப்பாதுரை! :)))))))

    பதிலளிநீக்கு
  44. உங்களுக்கு எதுக்கு இதெல்லாம் வீணா அப்பாதுரை! நீங்க கதை எழுதறதுக்கு முன்னாடியேதான் உங்களுக்கான முதல் பரிசு ரெடியா இருக்கு. மேலும் நீங்க எழுதின கதையை படிச்ச அப்பறம், உங்க கதைக்கு முதல் பரிசு குடுக்காம வேற எந்த கதைக்கு குடுக்க முடியும்ங்கற மாதிரி மிக அருமையா, அட்டகாசமா கதையை எழுதி இருக்கீங்க. உங்க கதைல வர சட்ட கிளிக்கு சிறந்த நகைசுவை கதாபாத்திர விருதே குடுக்கலாம். இதுக்கு நானே சிபாரிசு பண்றேன். :)
    அதனால என்னோட ஓட்டெல்லாம் உங்களுக்கு அவசியமே இல்லை, அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  45. holy c! டபுளுக்கு மேலே ஓட்டு வாங்கியிருக்கீங்களே meenakshi.. பரவாயில்லை விடுங்க.. (சே சே கண்ணெல்லாம் போடலீங்க)

    பதிலளிநீக்கு
  46. பரவாயில்லையே. நல்ல முயற்சி (வோட்டு வாங்க செய்த யுக்தி உங்களை அரசியல் சேர்ந்தால் அமோக வெற்றி செய்ய செய்யும் !)

    பிள்ளைகளின் அப்பன் பற்றி மேல்கொள்காட்டிய பகுதி - என்னை போல் ஒரு "சுப்பனை" நினைத்து எழுதியதோ !!

    அது என்னவோ பிள்ளைகளுக்கு ஆறு வயதில் லேப்டாப் வாங்கி கொடுத்தபோது உலகத்தில் உள்ள அனைத்து அப்பன்களுக்கும் கிடைக்காத ஒரு நல்ல பெயர் அதை கெடுத்த பிறகு சொல்லிக்காட்டினால் "சுப்பன்" என்று !!

    பதிலளிநீக்கு
  47. வாழ்த்தியதற்கு மிக்க நன்றி அண்ணாமலை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தாமதமாக நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு