//கீதா சாம்பசிவம் மேடம் - கான்வாசிங் உண்டு. நீங்க உங்கள் தரப்பு வாதங்களை, உங்களுக்கு வோட்டுப் போட்டால் வாக்காளப் பெருமக்களுக்கு என்ன இலவசம் கொடுப்பீர்கள் என்று எழுதி engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். ஜனவரி பதினான்காம் தேதி வரை வாக்குப் பதிவு இருக்கின்றது. ஒரு கை பார்த்துவிடலாம்!//
//ஒரு ஓட்டுக்கு ஒரு ஆடு, ஒரு ரெப்ரெஜிரேடர், ஏசி கார் இலவசம். இன்னும் நிறைய இலவசத் திட்டங்கள் வருகின்றன. சைனாவில் ஆர்டர் கொடுத்து செய்ய வேண்டியிருப்பதால் தாமதமாகிறது. அதற்காக ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டாம். அப்பாதுரை. //
ஹாஹா, மேலே இருப்பது எங்கள் ப்ளாக் எனக்குக் கான்வாசிங்குக்குக் கொடுத்த அனுமதி. என்னடா தானைத் தலைவியா இருந்துட்டு அனுமதி எல்லாம் கேட்கறேன்னு பார்க்கறீங்களா? தேர்தல்னு வந்தால் எலக்ஷன் கமிஷனின் உத்தரவுகளை மதிக்கணுமே! அதான்! எலக்ஷன் கோட் அறிவிச்சுட்டாங்க. அதற்கு உட்பட்டு நானும் சில, பல பதிவுகளில் போய்க் கான்வாசிங் செய்திருக்கேன். மிச்சத்துக்குத் தேடிக் கண்டு பிடிச்சுட்டுப் போகணும். ஹிஹி, ஆனால் கான்வாசிங் செய்யாமலேயே கீதா சந்தானத்திற்கு மதிப்பெண்கள், சே,சே, வாக்குகள் கூடுதலாய் இருக்கிறதைப் பார்த்து கண், காது, மூக்கு, வாய்னு எல்லாத்திலேயும் புகை வந்துட்டு இருக்கு. (இங்கே மெம்பிஸில் உறைநிலைக்குப் போயிடுது ராத்திரி எல்லாம், வாயைத் திறந்தால் புகை வராமல் என்ன பண்ணும்?) சரி, சரி, இலவசம் அறிவிக்கச் சொல்லித் தேர்தல் கமிஷனே உத்தரவு கொடுத்து அதையும் எழுத்து வடிவத்தில் (ஒரு ஜாக்கிரதைக்குத் தான்) வாங்கி வச்சுட்டிருக்கிறதாலே நான் எனக்கு ஓட்டுப் போடறவங்களுக்கு என்னவெல்லாம் கொடுப்பேன் என்பதை இங்கே அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
யாருங்க அது, உங்களுக்கு வாங்கித்தான் பழக்கம்னு முணுமுணுக்கிறது? வாங்கினதை பத்திரமா வச்சுப்போம் இல்ல? அதைப் பாருங்க! வழக்கமா நான் முப்பெரும் விழா நடத்தறச்சே தொண்டர்கள் தான் எடைக்கு எடை தங்கம், வெள்ளி, வைரம்னு கொடுப்பாங்க. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்ணறது? நேரம், ஏழரைச் சனி இப்போ எனக்கு. கையை விட்டுச் செலவு பண்ண வேண்டி இருக்கு . இதோ பட்டியல் தயார்.
நோட் புக்
எல்லாத்தையும் பார்த்துக்குங்க. பார்த்துட்டு எங்கள் ப்ளாக் சைடு பாரில் உள்ள வாக்குச் சாவடியில், உங்கள் ஓட்டை எனக்கே போடுங்க! எனக்கே எனக்கு.
கீதா சாம்பசிவம்.
கீதா சாம்பசிவம் அவர்களுக்கு ஆதரவாக, நான் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறேன். எனக்கு ஆதரவாக விழுந்த ஓட்டுகளை, அவர்களுக்கு ஆதரவாக எடுத்துக் கொள்ளலாம். கீதா மேடம் இலவசங்கள் ஒரு செட் பார்சேல்.....
பதிலளிநீக்குவழக்கமா நான் முப்பெரும் விழா நடத்தறச்சே தொண்டர்கள் தான் எடைக்கு எடை தங்கம், வெள்ளி, வைரம்னு கொடுப்பாங்க.
பதிலளிநீக்குவாழ்த்துகள்..
ஆஹா,கு.கு. உங்களோட தியாகம் என்னை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.
பதிலளிநீக்குஆனாப் பாருங்க உங்க ஓட்டு மட்டும் பத்தாது. எல்லாரோட ஓட்டும் சேர்ந்தால் தான் மீனாக்ஷி அக்காவை ஜெயிக்க முடியும். :)))))) என்ன சொல்றீங்க???
ராஜராஜேஸ்வரி, ஓட்டுப் போட்டாச்சா? :))))
பதிலளிநீக்கு