ஞாயிறு, 25 மார்ச், 2012

மியாவ் By மீனாக்ஷி!


அன்புள்ள எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு,

நான் மெயில் பண்ணின மியாவ் படம் கிடைச்சுதா?   நான் கவனம் இல்லாம இந்த படத்தை  engalcreations@gmail.com  இந்த முகவரிக்கு அனுப்பிட்டேன்.  அதான் இப்போ திரும்ப இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பறேன்.   

இது நான் வரைந்த பூனை குட்டி.  பதிவுல வந்த பூனை துறு துறுன்னு ரொம்ப அழகா இருந்துது.  அதனால அச்சா அதே மாதிரி வரைய ரொம்ப முயற்சி பண்ணினேன்.  ஆனாலும் ஓரளவுதான் அதே மாதிரி வந்திருக்கு.  கொஞ்சம் உர்ருன்னு கூட இருக்கு. :)  இதோட பேரு 'cutie'.   வரைய ரொம்ப சுவாரசியமா இருந்துது.  நன்றி உங்களுக்கு.


அன்புடன் 
மீனாக்ஷி 


    

10 கருத்துகள்:

  1. அட, பூனை மாதிரியே இருக்குது குருவே!

    பதிலளிநீக்கு
  2. மீனும்மா..."Cutie" குட்டியார் அழகா இருக்கார்.எங்கேயோ எலியைக் கண்டிட்டார்போல.அதுதான் உர்ன்னு இப்பிடி ஒரு பார்வை !

    பதிலளிநீக்கு
  3. குரு... நான்லாம் பூனை வரைஞ்சா அது எலி மாதிரி வரும். அதனாலதான் அப்படி பாராட்டி கமெண்ட் போட்டேன். அப்புறம்... யோசி்ச்சுப் பாத்தப்ப நீங்க கேலின்னு நினைச்சிடுவீங்‌களோன்னு பயமாயிடுச்சு. நிஜமாவே நல்லாயிருக்குன்னுதான் சொல்ல வந்தேன். Okay!

    பதிலளிநீக்கு
  4. :)))) நன்றி கு.கு. (இந்த கு.கு. குரோம்பேட்டை குறும்பன் இல்லை, குருவின் குரு கு.கு.)

    பயப்பட எல்லாம் வேண்டாம் கணேஷ். நீங்க எலி மாதிரிதான் இருக்குன்னு நெனச்சாலும் அதை தயங்காம அப்படியே சொல்லுங்க. உள்ளதை உள்ளபடி சொல்றதுதானே நட்புக்கு அழகு.
    நான் சொல்றது சரிதானே! :)

    பதிலளிநீக்கு
  5. ஹேமா நீங்க சொன்ன அப்பறம் பாத்தா எனக்கும் அப்படிதான் தெரியறது. :) உங்க பாராட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அழகா இருக்குங்க. பூனைக் காது கத்தி போல கூர்மையா இருக்குதே?

    பதிலளிநீக்கு
  7. என் பூனை குட்டிக்கு sharp ears அப்பாதுரை. அதான்! :)

    நான் வரைஞ்சது அழகா இருக்குன்னு பாராட்டினதுக்கு ரொம்ப நன்றி, சந்தோஷம்!

    பதிலளிநீக்கு
  8. sharp ears? அரிவாள்மணை மாதிரி இருக்கு.. தேங்காய் திருவலாம் போங்க.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு