வியாழன், 14 செப்டம்பர், 2017

இனியெல்லாம்.... சுகமே - கீதா சாம்பசிவம்

     கண்டிஷனல் கருவுக்கு கீதா அக்கா கதை எழுதி அனுப்பியிருக்கிறார்.  இதில் ஒரு சின்ன விசேஷம் இருக்கிறது.  அது என்னவென்று யார் கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்க்கலாமா?!

====================================================================


அந்தப் பூங்காவின் சிமென்ட் மேடையில் அமர்ந்திருந்த வசுமதிக்கு நினைவுகள் எங்கோ போயின! அன்று காலையில் தான் குமாரின் திருமணம் நடந்திருந்தது. அந்தத் திருமணம் இதோ எதிரே உள்ள இந்தக் கல்யாணச் சத்திரத்தில் தான் நடந்தது. 


அதற்குத் தான் வந்திருந்தாள் வசுமதி! குமார் அவள் மாமா பிள்ளை. சொந்த மாமா இல்லை என்றாலும் அவள் அம்மாவின் பெரியப்பாவின் பேரன். அந்தக் குடும்பத்தில் எல்லோரும் உறவுகளை விடாமல் அனுசரித்துப் பழகிக் கொண்டிருந்ததால். சிறு வயதிலிருந்து வசுமதிக்கு அவர்களோடு நல்ல பழக்கம் தான்.


அவள் பிறந்த போது அந்த மாமாவுக்குக் குமார் நான்கு வயது மகன். அவள் பிறந்ததுமே குமாருக்குப் பெண்டாட்டி பிறந்து விட்டாள் என்றே எல்லோரும் பேசிக் கொண்டார்களாம். அன்றிலிருந்து எல்லோரும் சொல்லிச் சொல்லிக்குமார் அவளைத் தன் மனைவி என்றே நினைக்க ஆரம்பித்திருந்தான். 


சிறு வயதிலிருந்தே அந்த உரிமையை எடுத்துக் கொள்ளவும் ஆரம்பித்தான். இதற்குப் பெரியவர்கள் ஒத்துழைப்பும் இருந்தது. ஆனால் வசுமதிக்கோ இது சுத்தமாய்ப் பிடிக்கவே இல்லை. அவள் மனதுக்குள் குமாரைக் கணவன் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க விரும்பவில்லை.

ஆகவே திருமணம் என்ற பேச்சு எடுத்தவுடனேயே குமாரைத் திருமணம் செய்துக்கப் போவதில்லை என்ற தன் முடிவைத் தீர்மானமாகச் சொல்லி விட்டாள். இதில் பலருக்கும் வருத்தம் தான். அவளுக்கு வெளியில் வேறே இடத்தில் பிள்ளை பார்க்க ஆரம்பித்து நல்ல இடம், தெரிந்த மனிதர்கள் என்றெல்லாம் சொல்லி  அவளுக்குப் பார்த்த பிள்ளையைப் பெண் பார்க்க வரச் சொல்லிப் பெண் பார்த்து இரு வீட்டினருக்கும் பிடித்துப் போய்த் திருமணமும் ஆனது!  


ஆனால்! 


பெருமூச்சு விட்டாள் வசுமதி! ஒருவேளை குமாரைத் திருமணம் செய்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காதோ! அப்போது எங்கிருந்தோ ஒரு பாட்டுக் கேட்டது! "என்ன கல்யாணமடி கல்யாணம்! உங்க கல்யாணமடி கல்யாணம்!" என்று நிச்சயம் செய்த கல்யாணங்களைக் குறித்த கேலியும், கிண்டலும் கலந்த பாடல். அவள் கல்யாணமும் ஒரு பொம்மைக் கல்யாணமா? தன்னிரு கரங்களால் முகத்தை மூடிக் கொண்டு விம்மினாள் வசுமதி! அவள் தோளில் அப்போது யாரோ மென்மையாகத் தன் கைகளை வைத்தனர். தான் யாரிடமும் சொல்லாமல் இங்கே வந்திருக்கையில் யாராக இருக்கும்?  கைகளை விலக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்த்த வசுமதி திகைத்தாள். அடுத்த கணம் கோபமும், வெறுப்பும் போட்டி போட, "எங்கே வந்தீங்க? உங்க அம்மாவோட அனுமதி கிடைத்ததா?" என்று கேட்டாள்.


அவனோ சிரித்தான். அவள் கோபத்தை ஓர் சிறு பிள்ளையின் கோபமாக நினைக்கிறானோ! "இங்கே நீங்க வந்தால் உடனே உங்க அம்மாவுக்குப் பயம் வந்திருக்கணுமே! உங்களைப் போகாதேனு தடுக்கலையா?"


"என் அம்மாவுக்கு நான் இங்கே வந்திருப்பது நன்றாகத் தெரியும்! சொல்லிட்டுத் தான் வந்தேன்!"


"அப்புறம் எப்படி?"


"இதோ பார் வசு!" என அவன் ஆரம்பிக்க, "ப்ளீஸ், நமக்குள்ளே இன்னும் ஒண்ணுமே நடக்கலை! நீங்க என்னோட சேர்ந்து வாழப் போறீங்களா இல்லையானு எதுவும் எனக்குத் தெரியலை! அதுக்குள்ளே இப்படி எல்லாம் கொஞ்சலாகப் பேசி என் மனதைச் சலனம் அடைய வைக்க வேண்டாம். நான் உங்களையும் உங்களோடு நடந்த அந்த பொம்மைக் கல்யாணத்தையும் மறக்க முயல்கிறேன்!சீக்கிரம் உங்களுக்கு என்னிடமிருந்து விடுதலை கிடைக்கும். அப்புறமாய் அம்மா பிள்ளையாகவே இருக்கலாம்!" என்று நக்கலாகச் சொன்னாள்.     


அவன் தீவிரமாக அவளைப் பார்த்தான். இவளுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது என நினைத்தானோ என்னமோ! பின்னர் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக, "வா, சத்திரத்துக்கு! அங்கே அம்மா உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள்!" என்றான். வெறுப்பிலும் ஆத்திரத்திலும் முகம் மாற அவள், "எனக்குப் பார்க்கப்பிடிக்கலை!" என்று சொன்னாள்.


"வசு, வசு, நான் அம்மாவிடம் எடுத்துச் சொல்லி விட்டேன். அவள் செய்தது தப்பு என்பதை எல்லோருமே அம்மாவிடம் சொல்லிப் புரிய வைச்சாச்சு! அவள் தப்புச் செய்தேன் என்பதை ஒத்துக்கத் தயாராக இருக்கிறாள்."


"வேண்டாம், வேண்டாம், எனக்கு ஆசை காட்டி மோசம் செய்யாதீர்கள். மறுபடி முதலிரவு அறைக்குப் போய் உங்களுக்காகக் காத்திருந்து விட்டுப் பின்னர் உடனே உங்களை உங்க அம்மா மறுபடி அழைத்தால்! நீங்களும் உடனே ஓடுவீங்க! அப்புறமா மறுபடி உள்ளே வரக்கூடாதுனு சொல்வாங்க! முதலிரவு அறையிலிருந்து வெளியேறிட்டால் மறுபடி போக நாளும், நேரமும் பார்க்கணும்னு சொல்லிட்டு உங்களை வரவிடாமல் தடுப்பாங்க! நீங்களும் அதைத் தானே கேட்டாகணும்! போதும், எனக்கு இந்த வாழ்க்கை! ஏன் கல்யாணம் பண்ணிக் கொண்டோம்னு இருக்கு! அதிலும் உங்களைப் போன்ற ஒரு கோழையை!" 

"இல்லை வசு! நான் உன் மேல் ஆணையாகச் சொல்கிறேன். மறுபடி அப்படி நடக்காது! அவ்வளவு ஏன்? நீ ஊருக்கே இப்போ வர வேண்டாம். உன் மனசுக் கலக்கமெல்லாம் தெளிந்து நீயாக எப்போ ஊருக்குப் போகச் சம்மதிக்கிறாயோ அப்போத் தான் கூட்டிப் போவேன். இதோ பார்! உனக்கும் எனக்கும் மும்பை போக டிக்கெட் கூட எடுத்துட்டேன். இங்கிருந்தே நாம கிளம்பறோம். நாம ரெண்டு பேர் மட்டும் தான்! போதுமா!" என்றான்.


அரை மனதோடு அவனைப் பார்த்தாள் வசுமதி. அப்போது சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த அவள் அப்பா அங்கே வந்தார். அவள் இவ்வளவு நேரம் அவரைக் கவனிக்கவே இல்லை. 


அவரும் சொன்னார். "மாப்பிள்ளை சொல்றதைக் கேள் அம்மா! அவருக்கு உன் மேல் ஆசை, பாசம் எல்லாம் இருக்கு! அன்னிக்கு நடந்ததுக்கு ரொம்ப வருத்தப்படறார். நிஜம்மாவே அம்மா சீரியஸ்னு நினைச்சு வெளியே வந்திருக்கார். வெளியே வந்தப்புறமாத் தான் விஷயம் புரிஞ்சிருக்கு! அந்த மாமி ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு ஏதோ முட்டாள் தனமாப் பண்ணிட்டா! இப்போ வருத்தப்படறா! நீ எதுவும்  மனசிலே வைச்சுக்காதே!" என்றார்.


"எப்படிப்பா! நல்ல நேரம் பார்த்து எங்களோட முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு! நாங்க உள்ளே போன அரைமணிக்கெல்லாம் அவங்க மயக்கம் வந்த மாதிரி நடிச்சு, "என் பிள்ளையை எங்கிட்டே இருந்து பிரிக்கிறாங்களேனு கத்தி ஆர்ப்பாட்டம் செய்து, நான் இனிமே உயிரோடு இருக்கப் போறதில்லை. கூப்பிடுங்க என் பிள்ளையை, நான் சத்தியம் வாங்கிக்கணும். அதுக்கப்புறமாச் செத்துடுவேன்னெல்லாம் சொல்லி நாடகம் போட்டு!" குமுறினாள் வசுமதி!


அவளைச் சமாதானம் செய்வது கடினமாகவே இருந்தது. இருவரும் செய்வதறியாது திகைத்தனர். அவர்கள் முகத்தைக் கூடப்பார்க்க விரும்பாமல் பதில் ஏதும் சொல்லாமல் கோபமாகத் திருமண மண்டபத்திற்குச் சென்ற வசுமதி அங்கே இருந்த எவரையும் கவனிக்காமல் தான் கொண்டு வந்திருந்த துணிகளைப் பையில் வைத்துக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பினாள். 


பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றவள் காதுகளில் பஸ் நிறுத்தத்திலிருந்து ஒரு பஸ் நடத்துநர் விசில் சப்தம் கேட்டதும் கிளம்பியது என்பதைக் கவனித்தாள். அந்த பஸ்ஸுக்குள் இருந்தவர்கள் அவர்கள் தானா? ஆம் அவர்கள் அதில் இருந்தார்கள்.ஆகவே  சற்றே பொறுத்த வசுமதி ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு ரயில் நிலையம் சென்றாள். அங்கே டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் வாங்கிக் கொண்டு நடைமேடைக்கு வந்தாள். ஏதோ ஒரு ரயில் வந்து அந்த ஸ்டேஷனில் நின்றது. ஆனால் வசுமதி செல்ல வேண்டிய ரயில் அல்ல. அவர்களும் காத்திருந்தார்கள். அதை முதலில் வசுமதி கவனிக்கவே இல்லை. 


அப்போது அவளைக் கண்ட அவன் மெல்லத் தன்னுடன் இருந்தவர்களுக்கு ஜாடை காட்டிவிட்டு வசுமதியின் அருகில் வந்தான். அவள் தோளைத் தொட்டான். திகைப்புடன் திரும்பிய வசுமதி அவனைக் கண்டதும் மீண்டும் அவனா என முகத்தைச் சுளிக்க, அவனோ பதிலே பேசாமல் அவள் கையிலிருந்த பையைக் கிட்டத்தட்டப் பிடுங்கிக் கொண்டு அவளையும் இன்னொரு கையால் இழுத்துக் கொண்டு அப்போது வந்து நின்ற இன்னொரு ரயிலில் ஏறிக் கொண்டான். அவளையும் ஏற்றி விட்டான். 


செய்வதறியாது எதிர்க்கவும் தோன்றாமல் நின்றிருந்த வசுமதியைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே சென்றவன் ஓர் கம்பார்ட்மென்டில் இருந்த இரண்டு இருக்கைகள் ஒன்றின் மேல் வசுமதியின் பையை வைத்து விட்டு அவளை உட்கார வைத்துத் தானும் அமர்ந்தான்.


வசுமதிக்கு அவள் கல்யாணம் ஆகி முதல் முதல் புக்ககம் போனபோது நடந்தவை நினைவில் வந்தது. அப்போது அவள் பெற்றோரும் இருந்தனர். கூடவே அவள் இளைய நாத்தனார் ஒருத்தியும். பெட்டியில் நல்ல கூட்டம். அவர்கள் முன்பதிவு செய்திருக்கவில்லை. ஆகவே உட்கார இடம் இல்லை. எப்படியோ சமாளித்து வந்தார்கள். 


அப்போது ஓர் இடம் காலியாக அந்த இடத்தைத் தட்டிக் கொட்டிச் சுத்தம் செய்த அவள் கணவன் அவளை அங்கே வந்து உட்கார அழைக்க அவள் யோசனையுடன் பார்க்கும்போதே அவள் நாத்தனார் அங்கே போய் உட்கார்ந்து விட்டாள். கொஞ்சம் திகைத்தாலும் அவள் கணவன் சமாளித்துக் கொண்டு தன் தங்கை காலி செய்த இடத்தில் தான் வந்து அமர்ந்து கொண்டான். மெல்லிய குரலில் அவளிடம், "இப்படியா அசடு போல இருப்பது? கூப்பிட்டால் உடனே வர வேண்டாமா?" என்றும் கேட்டான். அவளுக்குத் தான் என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.  மௌனமாக இருந்தாள். 


அப்புறம் ஊருக்குப் போனதும் அவள் நாத்தனார் அந்தக் கதையையே மாற்றித் திரித்துச் சொன்னதும் அவளை அவள் மாமியார் கேட்ட கேள்விகளும் அவள் நெஞ்சில் வந்து மோதின. ஆனாலும் தன் கணவன் தன்னைத் தான் அழைத்திருக்கிறான் என்பது தெரிந்து அவளுக்குக் கொஞ்சம் ஆறுதல் என்பதையும் மறுக்க முடியாது! அவன் மனதில் அவள் இருக்கிறாள் தானே!

இப்போதும் அதையே நினைத்திருந்த அவள் கைகளை இறுகப் பற்றிய அவள் கணவன் வசுமதியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவனாக , "இப்போ அவள் இல்லை; நாம் இரண்டு பேர் மட்டும் தான்! எனக்கு நான், உனக்கு நீ!" என்றான். 


அவனை நிமிர்ந்து பார்த்த அவள், "நான் அப்படி எல்லாம் நாம் இருவர் மட்டும் தனியாக இருக்கணும்னு எல்லாம் நினைக்கலை!" என்று ஆரம்பித்தாள். 


அவள் வாயைப் பொத்திய அவன், "எனக்குத் தெரியும்! நீ கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்திருக்கிறாய். அது தான் பிடிக்கும் என்றும் தெரியும். நீயே சொன்னாய்! ஆனால் இப்போது கொஞ்ச நாட்கள் நாம் தனியாகத் தான் இருக்கப் போகிறோம். நம்முடைய முதல் இரவு அம்மாவோட முட்டாள் தனத்தால் நடக்கவில்லை! அம்மா வீண் கலவரம் செய்து விட்டாள்! அநாவசிய பயம்! பிள்ளை கைவிட்டு விடுவான் என்றெல்லாம் நினைத்திருக்கிறாள். போகட்டும் விடு! அதனால் என்ன? நாமே நடத்திப்போம். எனக்கு மும்பைக்கு மாற்றல் ஆகி விட்டது! அங்கேயே அலுவலகக் குடியிருப்பில் ஒரு வீடும் கிடைத்திருக்கு! கொஞ்ச நாட்கள் நாம் தனியாக இருந்து ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சுப்போம். மெல்ல மெல்ல நம் குடும்பத்தினரை வரவைச்சுக்கலாம். அதான் தீபாவளி, கார்த்திகை, பொங்கல்னு வருதே! இல்லைனாலும் ஏதானும் கல்யாணங்கள் வரும். அப்போப் பார்த்துக்கலாம்." என்றான்.
அவளுள் குற்ற உணர்வு தலை தூக்கியது. திருமணம் ஆனதும் பெற்றோரிடமிருந்து அவனைப் பிரித்து விட்டதாகச் சொல்வார்களோ என்று எண்ணித் தயங்கினாள். 


அப்போது அவன், "உனக்கு சந்தேகமா இருந்தாலோ அல்லது வர யோசித்தாலோ அடுத்த கம்பார்ட்மென்டில் என் அம்மா உட்கார்ந்திருக்கிறாள். அவளிடம் கேட்டுக்கோ!" என்றான். 


"எப்படி, இப்படி மாறினாங்க?" என்று கேட்ட அவளிடம், "நான் தான் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தேன். முதல்லே நிஜம்மாவே அவங்களுக்கு உடம்பு சரியில்லைனு வெளியே வந்துட்டேன். ஆனால் அப்புறமாப் புரிஞ்சது! எல்லாம் நாடகம்னு! இத்தனை வருஷம் அவங்க பிள்ளையா இருந்தவனை இன்னொரு பெண்ணுக்குத் தூக்கிக் கொடுத்துட்டோமேனு அவங்க நினைப்பு! நான் கேட்டேன்! இதுவே நம்ம கௌரிக்கு நடந்திருந்தா நீ என்ன செய்வே? என்று கேட்டேன். அம்மா உடனே பொங்கினாள். அது எப்படிடா முடியும்? நம்ம பெண் அங்கே போய் வாழணும்னு தானே கொடுக்கிறோம் என்றாள். அதே தானே அவங்க பெற்றோருக்கும், அவளுக்கும்! அவங்களுக்கு வேறே நியாயமானு கேட்டேன். அம்மாவும் புரிந்து கொண்டார்கள்!" என்றான். 


மெல்ல தன் நிலைக்கு வந்த வசுமதி தான் ரயிலில் இருந்து இறங்கும்போது மாமியாரிடம் பேசுவதாகக் கூறினாள். அவனும் அவள் விருப்பப்படியே விட்டு விட்டான். அதே போல் ரயிலில் இருந்து இறங்கிய வசுமதி அங்கேயே மாமியாரிடம் விடைபெற்றுக் கொண்டாள். 


ரயிலில் இருந்து இறங்கியதும் இருவரும் நேரே விமானநிலையம் நோக்கிச் சென்றார்கள். விமானத்தில் ஏறுவதற்காக அங்கே காத்திருக்கையில் அவங்க செல்ல வேண்டிய விமானம் ஓடுபாதையில் வேகமாக ஓடி வந்து நின்றது! அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! படங்கள் :  நன்றியுடன் இணையத்திலிருந்து.

72 கருத்துகள்:

 1. இதில் ஒரு சின்ன விசேஷம் இருக்கிறது.//

  கண்டிஷனல் கருவுக்கான வாசகங்கள் செகண்ட் HALF ல தான் வருது :) இதுவா விசேஷம் சீக்கிரம் சொல்லிடுங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்கு ஒருத்தர் வந்து :)கு -கு னு சொல்வாங்க பாருங்க என்னைய

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கு.கு:)
   கு கு என்றால் குரோம்பேட்டைக் குசும்பன் எனவும் நினைக்க வாய்ப்பிருக்குது அஞ்சு:) அதுக்குத்தான் என்னைப்போல தெளிவா சொல்லோணும் என்பது.. குறைமாதக்.... கு:)

   நீக்கு
  3. வாங்க ஏஞ்சலின், கதையை எழுதின எனக்கே தெரியலை என்ன விசேஷம்னு! ஶ்ரீராம் சொல்லட்டும் பார்க்கலாம். :)

   நீக்கு
  4. ஹாஹாஹா அதிரா, பின்னூட்டங்களுக்குச் சுவை கூட்டுவதே நீங்களும் ஏஞ்சலினும் போட்டுக்கொள்ளும் செல்லச் சண்டைகள் தான்! :)

   நீக்கு
 2. நல்லா இருக்கு கீதாக்கா .. குடும்பங்களில் நடக்கும் விஷயம்தான் ..பாவம் அந்த மாமியார்களும் எதோ ஒரு இன்செக்யூரிட்டியில் செஞ்சிடறாங்க சில மருமகள்கள் பொறுத்திருப்பாங்க இல்லைனா இப்படி
  shock ட்ரீட்மெண்ட்தான் வேற வழி இல்லை .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சலின், இன்னும் சொல்லி இருக்கணும். அந்தப் பெண்ணை மறுநாள் காலையே பெற்றோரை அழைத்துப் போகச் சொல்லிட்டாங்க! அதுக்கப்புறமா பிள்ளையோட அம்மா தன்னுடைய மற்றக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, பொருளாதார ரீதியாக இல்லாமல் போயிடும்னு இப்படிப் பண்ணினாங்கனு பிள்ளைக்கே புரிந்தது. பெற்றோருக்குத் தெரியாமலேயே தன் மனைவியை அழைத்துச் சென்று குடித்தனம் வைக்க முனைந்து பின்னர் பெற்றோருக்குத் தெரிந்து மறுபடியும் சண்டை! அவங்களுக்குக் குழந்தை பிறந்ததும் இன்னும் அதிகம் ஆனது. ஆனால் ஆரம்பத்தில் வாய்மூடியாக இருந்த அவள் கணவன் கடைசிவரை மனைவியைக் கைவிடவில்லை! குழந்தைகளையும். அதுக்காகப் பெற்றோரிடமும் சண்டை போட்டுக் கொள்ளவில்லை! :)

   நீக்கு
 3. மீண்டும் வருவேன் :) இன்னும் கருத்துக்கள் இருக்கு எழுத

  பதிலளிநீக்கு
 4. ஏங்க... இதைக் கூட கண்டுபிடிக்கமுடியாதா? சொல்லிடவா? இது முதல் கரு (பூங்கா, பெஞ்ச், ஜுஜீலா பாட்டு)வைத் தொட்டிருக்கு. மூன்றாம் கருவின்படி, அதன் முதல் வாசகங்களை கீதா சாம்பசிவம் மேடம் ஃபாலோ செய்யவில்லை.

  ஸ்ரீராம் - கதையை ஆழ்ந்து படிக்க விடாமல், குற்றம் கண்டுபிடிப்பதை முதல் டாஸ்கா எடுத்துக்க வச்சுட்டீங்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /(பூங்கா, பெஞ்ச், ஜுஜீலா பாட்டு//

   @நெல்லைத்தமிழன் ஆமால்ல ..ஆனா அந்த நேரம் நான் மகளோட எக்ஸாம்ஸ் அப்புறம் பிசியில் இருந்தேன் அதான் ரொம்ப சீரியஸா கவனிக்கலை :) நான் இந்த கதையை மட்டுமே உற்று கவனிச்சேன் :)
   இன்னொரு விஷயமாயிருக்குமோன்னும் யோசிச்சேன் //தீபாவளி கார்த்திகை பொங்கல் எல்லாம் விசேஷமாச்சே அதை சொல்லலாமான்னும் யோசிச்சி விட்டேன் :)கிக்கிக்கீ .விசேஷம்னாலே நமக்கு பண்டிகைதானே நினைவுக்கு வ்ரும்

   நீக்கு
  2. ///அந்தப் பூங்காவின் சிமென்ட் மேடையில் அமர்ந்திருந்த வசுமதிக்கு நினைவுகள் எங்கோ போயின! //
   இந்த வரி படித்த அடுத்த செக்கண்ட்டே பழைய கருத்தான் எனக்கும் நினைவுக்கு வந்தது[நெ.தமிழனைப்போல].. சரி இன்னும் ஏதும் இருக்கோ என கதையைப் படிச்சிட்டு வாறேன்ன்..:)..

   //AngelinSeptember 14, 2017 at 9:06 PM
   /(பூங்கா, பெஞ்ச், ஜுஜீலா பாட்டு//

   @நெல்லைத்தமிழன் ஆமால்ல ..ஆனா அந்த நேரம் நான் மகளோட எக்ஸாம்ஸ் அப்புறம் பிசியில் இருந்தேன் அதான் ரொம்ப சீரியஸா கவனிக்கலை :) நான் இந்த கதையை மட்டுமே உற்று கவனிச்சேன் :)//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இப்போ எதுக்கு இந்தப் பூச்சு மெழுக்கு எல்லாம் :)) கீழ விழுந்தாலும்... சரி வாணாம் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

   நீக்கு
  3. //ஸ்ரீராம் - கதையை ஆழ்ந்து படிக்க விடாமல், குற்றம் கண்டுபிடிப்பதை முதல் டாஸ்கா எடுத்துக்க வச்சுட்டீங்களே.//

   இல்லைன்னா மட்டும்.... !!

   :P

   நீக்கு
  4. ஜிவாஜிக்கு பழிக்குப்பழி ஜூஜிலாவா??!!

   நீக்கு
  5. எல்லோரும் மண்டையைக் குடைந்து கொண்டு யோசிங்க! ஶ்ரீராம் சொல்றவரைக்கும் காத்திருக்கேன்.

   நீக்கு
 5. பூங்கா, பேருந்து, இரயில், ஆகாயவிமானம் சரியிருந்தா சந்தோஷப்படுங்க தப்பா இருந்தா விட்டுத் தள்ளுங்க

  பதிலளிநீக்கு
 6. சம்பந்தப்பட்ட கதைக்கான கண்டிஷன் என்ன என்பதையும் ஒவ்வொரு கதையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டால் அதற்கேற்ப எழுதும் கதையை வாசிப்பதில் இன்னும் சுவையேற்படும்.

  பூங்கா, பேருந்து, இரயில், ஆகாய விமானம் இதெல்லாம் வருகிற மாதிரி எழுத வேண்டிய கதையா இது?.. இல்லே, வேறெதானுமா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் கதையைப் போஸ்ட் பண்ணும்போது, இக்கதைக்கான கண்டிஷன்ஸ் எங்கிருக்கு என்பதை லிங் இணைச்சு விடுங்கோ ஒவ்வொரு தடவையும்.. அப்போதான் புதிதாகப் படிப்போருக்கு இலகுவாக இருக்கும்..

   நீக்கு
  2. இந்த லிங்கில் இருக்கிறது விபரம்..

   https://engalcreations.blogspot.co.uk/2017_08_20_archive.html

   நீக்கு
  3. //சம்பந்தப்பட்ட கதைக்கான கண்டிஷன் என்ன என்பதையும் ஒவ்வொரு கதையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டால்//

   நல்ல யோசனை. ஜீவி ஸார். செயல் படுத்தி விடுவோம்.

   நீக்கு
  4. //ஸ்ரீராம் கதையைப் போஸ்ட் பண்ணும்போது, இக்கதைக்கான கண்டிஷன்ஸ் எங்கிருக்கு என்பதை லிங் இணைச்சு விடுங்கோ //

   நன்றி அதிரா, லிங்க் இங்கு கொடுத்தமைக்கு. கீதா அக்காவின் இந்தக் கதைக்கு நான் ரெண்டு லிங்க் கொடுக்கணுமாக்கும்!

   நீக்கு
  5. ஜீவி சாரோட அகுடியாவும் நல்லாத் தான் இருக்கு! அதிரா சொல்லி இருப்பதும் சரியே! இல்லைனா எனக்குமே மண்டை குழம்பிடும், எதுக்கு எழுதினோம்னு!

   நீக்கு
 7. ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:).. கீதாக்கா கண்டிஷன்ஸ் ஐ மீறி விட்டா.. பொற்கிளி அதிராவுக்கே:)..

  //இதில் ஒரு சின்ன விசேஷம் இருக்கிறது. அது என்னவென்று யார் கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்க்கலாமா?!///

  கரு ஒன்றையும் கரு 3 ஐயும் ஜொயின் பண்ணிக் கதை எழுதியிருக்கிறா இதுதான் விஷேசம்.. அடுத்து இன்னொரு களவும் நடந்திருக்கு அதுக்கு எனக்கு நஷ்ட ஈடு “நம்ம ஏரியா” விலிருந்து தரோணும்.. இல்லை எனில் நான் உண்ணாவிதம் ஆரம்பிப்பேன்ன் சொட்டுத் தண்ணிகூடக் குடிக்காமல்:).. என் முதலாவது கதைக் கருவின் கதாநாயகியின் பெயரைக் கீதாக்கா களவாடிண்ட்டா:)).. வசு.. வசு..:) வசுமதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வசுமதி என்கிற என் சித்தியின் பெயரைக் களவாடியதற்கு நான் உங்களிடம் நஷ்ட ஈடு கேட்கவேண்டும் ன்று நினைத்தேன்.

   நீக்கு
  2. ஹை, அஸ்கு புஸ்கு, ஆசை, தோசை,அப்பளம், வடை! பொற்கிழி உங்களுக்கா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வசுமதிங்கற பேரிலே உங்க கதாநாயகி தான் இருக்கணுமா என்ன? ஶ்ரீராமோட சித்தி பெயரிலேயும் இருக்கக் கூடாதா? :))

   நீக்கு
  3. எனக்குத் தெரியும்.. எனக்குத் தெரியும்.. ஏதாவது பழியை என்மீது அபாண்டமாச் சுமத்தி எனக்குப் பொற்கிளி கிடைக்காமல் பண்ணுவதற்கான சதி இது கர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
 8. இப்படியெல்லாம் நடந்து கொண்டு இருக்கின்றது.. நல்ல எண்ணங்கள் நம்மை சுற்றி இருப்பதற்கு என்ன தவம் செய்ய வேண்டுமோ!..

  வசுமதி வாழ்வில் வசந்தம் அரும்புவதாக..

  பதிலளிநீக்கு
 9. மாமியார்.. மருமகள் இடையிலே தள்ளாடும் மருமகன்/கணவன்... பிரச்சனை எப்போதான் முடிவுக்கு வருமோ?.. கதை நன்றாக நகர்த்தப்பட்டிருக்கு கீதாக்கா வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போல்லாம் அப்படி இல்லை. ஆனால் மருமகள்கள் இப்போது மாமனார், மாமியாரை எக்ஸ்ட்ரா லகேஜ் எனச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆங்காங்கே ஒரு சில நல்ல பெண்களும் இருக்காங்க தான்! :)

   நீக்கு
 10. நல்ல கதை. கரு கதை புரியவில்லை. ரொம்ப நாளா நடக்கிறதா::) என்னன்னு சொன்னால் நானும் முயற்சிக்கிறேன். இதே போல ஒரு சினிமா வந்ததே. கொடூரம்.:(.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா... கௌதமன் சில கரு, அல்லது வரிகள் கொடுத்து அதை கதையில் "ஊஸ்" பண்ணவேண்டும் என்று சொல்லியிருப்பார். சில நாட்களாக நடந்து வருகிறது. முந்தைய பதிவுகளில் இருக்கிறது. நீங்களும் அனுப்புங்கள் அம்மா. முன்னரே நீங்கள் இங்கு பாடி இருக்கிறீர்கள் நினைவு இருக்கிறதுதானே?

   நீக்கு
  2. வாங்க வல்லி, சினிமா வந்தது தெரியாது! ஆனால் இது உண்மை நிகழ்ச்சி! மூத்த பிள்ளைக்குக் கல்யாணம் என்றதும் அந்தத் தாயும் அவர் பெற்ற கடைசி மகளும் சேர்ந்து நிகழ்த்திய நாடகம். :) கடைசியில் அவங்க சொந்தக்காரங்களுக்கே விஷயம் புரிஞ்சு போச்சு!

   நீக்கு
  3. ஶ்ரீராம் சொல்றாப்போல் நீங்களும் எழுதுங்க. சரளமாக நடையில் உங்க எழுத்து வரும்.

   நீக்கு
  4. ஆமாம், வல்லிம்மா ஞாபகம் சரியே. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் படமோ?..

   நீக்கு
 11. வாழ்ததுகள் கீதா. அருமையாகப் பதிவு செயதிருக்கிறீர்கள.

  பதிலளிநீக்கு
 12. ஹாஹாஹா, இந்தக்கதை முதலில் "சீதை ராமனை மன்னித்தாள்!" என்பதற்கு எழுதப்பட்டுப் பின்னர் கண்டிஷனல் கரு இரண்டுக்காக மாற்றப்பட்டு இப்போக் கண்டிஷனல் கரு 3க்காக வெளியிடப்பட்டிருக்கு! நடு நடுவில் சில, பல மாற்றங்களைச் செய்து எழுதின சீதை ராமனை மன்னித்தாள் கதையும், கண்டிஷனல் கரு 2க்கான கதையும் தனி! இது அதிலே கொஞ்சம், இதிலே கொஞ்சம்னு பிச்சு எடுத்து நடுவில் கேஜிஜியோட கண்டிஷன்களைப் போட்டு எழுதினதாகச் சொல்லி இருக்கேன். உண்மையில் கதையோடு பொருந்துகிறதானு எனக்கே ஜந்தேகம்! ஆனாலும் தைரியமாக வெளியிட்ட ஶ்ரீராமுக்கும் அதைப் படித்து விட்டு ஆராய்ச்சியில் இறங்கி இருக்கும் அதிரா, நெ.த. ஆகியோருக்கும் என் நன்றி. கதையின் முக்கியக் கரு (பிள்ளையை முதலிரவு அறையிலிருந்து வெளியேற்றியது) மட்டும் நிஜமான சம்பவம்.

  பதிலளிநீக்கு
 13. இன்னொண்ணு சொல்லணுமே! தலைப்பு,படங்கள் ஶ்ரீராமுக்குச் சொந்தம். வசுமதி மனம் மாறும் நிகழ்வு இன்னும் அழுத்தமாகப் பதிவு செய்யப்படவில்லை! :)

  பதிலளிநீக்கு
 14. போணி அநேகமா நானும் அதிராவும் பண்ணினால் உண்டு! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போணி ஆ????? அஞ்சூஊஊஊஊ கமோன்ன் வியக்கம் பிளீஸ்ஸ்ஸ்:).

   நீக்கு
  2. போணின்னா தெரியாதா? கர்த்த்த்த்தூச் சொல்றது தான்! அநேகமா என் பெயரிலே எங்கள் ப்ளாகிலே வந்தால் அதுக்குக் கர்த்த்த்தூக் குறைச்சலா வரும்! அதான்! :)

   நீக்கு
  3. போணி ஆவுது என்றால் செல்லுவது...அதாவது நீங்களும் அக்காவுமே கமென்ட்டுகள் போட்டுக் கதையை போணியாக்கி விடுவது ஹாஹாஹாஹாஹா...இங்கு காலையில் முதலில் ஒரு சாமான் விற்பதை முதல் போணி என்பார்கள் அதிரா...நல்ல வியாபாரம் ஆச்சானு...போணியாச்சானு...அதான்...ஹிஹிஹிஹி

   அக்கா கமென்ட்டுகள் வந்துருக்கே அப்புறம் என்ன போணியாயிருக்கு!!!!

   கீதா

   நீக்கு
 15. கீதா சாம்பசிவம் மேடம், கதையைப் படித்தேன் (ஶ்ரீராம்... நில்லுங்க அதிர்ச்சி அடையாதீங்க. வெறும்ன ஆரம்பம் முடிவு வரிகள் படித்து ரசித்தேன்னு எழுதப்போறதில்லை)

  இந்தமாதிரி உண்மைச் சம்பவத்தை கதையாகச் சொல்லும்போது, கண்டிஷன்ஸ் ஒரு குறுகிய வேலியாக அமைந்துவிடுகிறது, கதை கொஞ்சம் நாடகத் தன்மையைக் கொண்டுவிடுகிறது. அது ஒண்ணுதான் கொஞ்சம் நெருடறது.

  வசுமதியின் கணவனுக்கு மறுநாளே தன் அம்மாவின் கெட்ட எண்ணத்தை வசுமதியிடம் விளக்கி இருவரும் சேர்ந்தே இதற்கு வழி கண்டுபிடித்து இருக்கலாமே? அப்போ அவன், வசுமதியின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்திருக்கலாமே? வசுமதி அதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் பெறாதிருந்தால், இருவரும் ஏதேனும் ஒரு சாக்கு வைத்துக்கொண்டு வசுமதியின் அப்பாவைச் சந்தித்து இதற்கு அவர் முன்னிலையில் திட்டமிட்டிருக்கலாமே? பெண்ணின் நல்வாழ்க்கையை யோசிக்காத அப்பா யாருண்டு?

  இதில் வசமதியின் கணவன் சென்சிபிளா இருந்தாலும் உடனே செயல்பட்டமாதிரித் தெரியவில்லை. இருந்தாலும் நிலைமை உடைந்த கண்ணாடிபோல் ஆகவில்லை என்பதைச் சொல்லியுள்ளீர்கள்.

  அடுத்த வீட்டில் செட்டிலாவதுவரை பெண்கள்பாடு கஷ்டம்தான்.

  பாராட்டுகள். அவ்வப்போது கதை எழுதுங்கள். அதில் நீங்கள் பார்த்த, கேள்விப்பட்ட சம்பவங்களையும் இணையுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெ.த. நான் பதில் சொல்லற அழகைப் பார்த்துட்டு கூகிளார், நீ ரோபோவானு கேட்கிறார். :) கதை கொஞ்சம் இல்லை நிறையவே நாடகத் தன்மை உள்ளதாகப் போய் விட்டது. அதான் அனுப்பலாமா வேண்டாமானு யோசனை! ஶ்ரீராமிடம் கூட நல்லா இருக்குன்னா வெளியிடுங்க, வெளியிடாட்டியும் பரவாயில்லைனு சொல்லி இருந்தேன்.

   நீக்கு
  2. உண்மையில் நிகழ்ந்தபடி மறுநாள் தம்பதிகளைச் சந்திக்கவே விடவில்லை. பெண்ணை அவள் பெற்றோர் வருத்தத்துடன் அழைத்துச் செல்லும்படி ஆயிற்று. இனி விவாகரத்து தான் என நினைக்கையில் தான் தற்செயலாகப் பிள்ளைக்கு விஷயம் தெரிந்து தன் மனைவியை மீட்டெடுத்தார். அதை எல்லாம் விவரித்தால் நீளமாகப் போய்விடும் என்பதோடு சில, பல சம்பவங்கள் அதிர்ச்சியாகவும் இருக்கும். :(

   நீக்கு
  3. இப்படில்லாம் மாமியார்கள் (பெரும்பாலான) வந்த புதிய பெண்ணை நடத்திவிட்டு, இந்தக் காலத்துல, எக்ச்ட்ரா லக்கேஜ்னு குறைப்பட்டுக்கிட்டா எப்படி? என்ன யாரோ செய்தவைகளுக்கு யாரோ அனுபவிப்பதுபோல. இது தமிழ்நாட்டுக்குப் புதுசா என்ன.

   நீக்கு


  4. நெல்லைத் தமிழன்September 15, 2017 at 12:20 P
   ///இதில் வசமதியின் கணவன் சென்சிபிளா இருந்தாலும் உடனே செயல்பட்டமாதிரித் தெரியவில்லை. //

   வசுமதி எனும் அயகான பெயரை:) வசமதி எனத்திட்டிய நெ.தமிழனுக்கு என் வன்மையான கண்டனங்கள்:).

   நீக்கு
  5. எனக்குக் கொஞ்சம் சீரியல் தன்மை தெரிந்தது...ஆனால் உண்மைக் கதை என்று அக்கா சொல்லியிருப்பதால்....ஓகே!! பரவாயில்லைக்கா நல்லாத்தான் இருக்கு

   கீதா

   நீக்கு
  6. ஹாஹா, நம்ம எழுத்துத் திறமை அப்படி தில்லையகத்து/கீதா! சீரியல் மாதிரிப் போயிடுச்சு போல! :)

   நீக்கு
  7. நெ.த. இந்தக்காலத்து மாமியார்கள் பெரும்பாலும் மருமகள்களுக்கு உதவியாகவே இருக்கிறார்கள். என்றாலும் சில பெண்கள் சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் ஊதிப் பெரிசாக்கி மாமியாரைக் குற்றம் சொல்கின்றனர்! என்ன சொல்ல முடியும்! பெண்களுக்கு இப்போதெல்லாம் சகிப்புத் தன்மை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது!

   நீக்கு
 16. அதிரா- எழுத்துப் பிழை, ஐபேட்ல டைப் பண்ணும்போது வந்துவிடுகிறது. Sorry. வசுமதிதான். பெயர்ல ரொம்ப carefulஆ இருக்கணும்தான். அதுல மிஸ்டேக் விட்டா ரொம்பத் தப்பாயிரும். (அப்பா... கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுக்கிட்டுத்தான் சிலர் படிக்கறாங்க போலிருக்கு)

  பதிலளிநீக்கு
 17. அன்பு ஜிவி சார், ஆமாம், கே எஸ் கோபாலகிருஷ்ணன், சிவாஜி,
  கே.ஆர் விஜயா படம்னு நினைக்கிறேன்.
  செல்வமா அதன் பெயர். கூகிள் செய்கிறேன்.
  அனேகமா அந்த மாமியார் எம் வி ராஜம்மாவா இருக்கச் சான்ஸ்.
  ஸஹஸ்ர நாமம் தன் பெண்ணிற்கு சிவாஜியைத் திருமணம் செய்ய நினைத்திருப்பார். யப்பாடி இதுவே பெரிய கதையாகிட்டது.

  பதிலளிநீக்கு
 18. அன்பு கீதா.
  கககபோ இதுதானா. கரு,கதை,போட்டோ வா.
  சுருக்கெழுத்து புரியவில்லை....
  எப்பொழுது கௌதமன் கரு சொல்வார். எப்போ அனுப்பணும்.
  நன்றாக நினைவிருக்கிறது ஸ்ரீராம்.
  இதெல்லாம் மறக்கக் கூடிய விஷயமா.
  இப்பவும் இருக்கா என்ன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிஷனல் கதைக் கரு தான்க.க.க.போவின் விரிவாக்கம் வல்லி! க.க.க. போ மூன்று இது!

   நீக்கு
 19. நினைவு சரிதான். இது போல இன்னோரு படத்தில் வரலக்ஷ்மி,
  குய்யோ முறையோ என்று கத்தி கலைத்து விடுவார்.
  ஏதாக இருந்தால் என்ன.. கீதா சொல்வது நிஜத்தில் நடந்த சம்பவம். அதுதான் வருத்தப் படவைக்கிறது. எனக்கு இன்னோரு மாமியாரையும் தெரியும்.
  சபையில் சொல்வது அநாகரீகம்.
  எல்லாம் மாறட்டும். மாமியார் எக்ஸ்ட் ரா பாகேஜ் ஆவது சமீபத்தில் நடக்கும்
  கதை.
  கீதா சொல்வது போல நல்ல மருமகள்கள் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 20. துளசி: கதை மிகவும் இயல்பாக பக்கத்துவீட்டவர் சொல்லுவது போன்று ஒரு நடையில் அழகாக இருக்கிறது சகோதரி! வாழ்த்துகள்!

  கீதா: கீதாக்கா கதை ரொம்ப நல்லாருக்கு....டிப்பிக்கல் மாமியார் மருமகள் மகன் திருமணம்...புரிதல் இல்லாமல் என்று....நடைமுறை அப்படியே...

  ம்ம்ம் பூங்கா கண்டிஷன்......அப்புறம் இப்போதைய லேட்டஸ்ட் கண்டிஷனும் வருது...ஆனால் கௌதம் அண்ணா சொன்ன வரிசையில் இல்லை அவ்வளவே! அப்புறம் சீ ரா ம????? வும் வருதோ??!! வேறு என்ன யோசிக்கிறேன்...தெரியவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி துளசிதரன்.

   நன்றி கீதா! இது கககபோ கரு இரண்டுக்கு ஆரம்பிச்சுப் பின்னர் 3க்கு மாறிடுச்சு. ஒரிஜினல் கதை சீதை ராமனை மன்னித்ததுக்கு எழுதப் பட்டது! ஆக மொத்தம் 3 கதைகளில் இருந்து அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் பிடுங்கி ஒரு கதையாக ஆக்கிட்டேன். இன்னும் விரிவாக முதலிரவு சம்பவத்தை எழுதி இருந்தேன். இதில் ஃப்ளாஷ் பாக்கில் கொண்டு வந்து விட்டேன்! :)

   நீக்கு
 21. சமீபத்தில் கேள்விப்பட்ட நிகழ்வு.
  ஹைதராவில் இருக்கும் நண்பரின் மகனுக்கு நீண்ட நாட்களாக வரன் பார்த்தும் கிடைக்கவில்லை
  (அத்தனை படித்து மும்பையில் பெரிய வேலையில் இருந்தும் வரன் சேரவில்லை.. பெண்கள் ரொம்ப எதிர்பார்க்கிறாங்க என்று வருந்திக் கொண்டே இருப்பார்.. எனக்கு ஆச்சரியமாக இருக்கும்).. எப்படியோ அதிசயமாக (அவருடைய சொல்) வரன் சேர்ந்து பெண் பார்க்கப் போனார்களாம்.. புனேயில் பெண் வீடு.. போனதும் பேச்சு வாக்கில் இரண்டு பெற்றோர்களும் உடன் இருக்கும் பொழுதே அந்தப் பெண் இவர்களிடம் "நாம் கொஞ்ச நாளைக்கு பார்ட்னர்களாக இருப்போம்.. ஒத்து வந்தால் கல்யாணம் செய்து கொள்ளலாம்" என்றாளாம். நண்பர் ஷாஆஆக்காயிட்டதாகச் சொல்லிப் புலம்பிக் கொண்டே இருந்தார். அவரை விட அவருடைய மகன் இன்னும் ஷாஆஆஆக்காயிட்டாராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது இப்போ சகஜமாகிக் கொண்டு வருகிறது அப்பாதுரை. வெளிநாட்டில் இருந்து எது தேவையோ அதை விட்டு விட்டு எது தேவை இல்லையோ அதை மட்டும் எடுத்துப்பதில் நம்மவர் வல்லவர்கள் ஆச்சே! கெட் டு கெதர் வாழ்க்கை இப்போ சகஜமாகிக் கொண்டு வருது!

   நீக்கு
 22. கதை அருமை.
  உண்மை கதை என்று வேறு சொல்லி விட்டீர்கள்.
  மாமியார், மருமகள் கதை என்றுமே சுவாரஸ்யம் தான்.
  மகன் தன் தாய் சகோதரிகளையும் அரவணைத்து, மனைவியை கைவிடாமல் இருப்பது மகிழ்ச்சி.
  முதல் நாள் நிகழவை வாழ்நாள் முழுமையும் மறக்க முடியாது வசுமதியால்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி அரசு! பொதுவாகத் தாய் தன் மூத்த மகனை லேசில் விட்டுக் கொடுப்பதில்லை! கூடியவரைக்கும் தனியாகத் தன் கண்காணிப்பிலேயே வைத்திருக்க முயல்கிறாள். இப்போதெல்லாம் ஒரே பிள்ளை, அல்லது பெண்ணாகப் போய் விட்டபடியாலும் இப்போதைய பெற்றோர் 40 வருடங்களுக்கு முன்னர் இருந்தவர்களை விட மன முதிர்ச்சியும் அனுசரணையும் பெற்றிருப்பதாலும் சமாளிக்கின்றனர். இம்மாதிரி 40 வருடத்துக்கு முன்னர் அனுசரித்துச் செல்லும் மாமியார், மாமனார் ரொம்பவே அபூர்வம்!

   நீக்கு