செவ்வாய், 12 செப்டம்பர், 2017

மாறியது நெஞ்சம்... மாற்றியது யாரோ... - ஏஞ்சலின்
கௌதமன் சார் அன்ட் ஸ்ரீராம்!   இது கண்டிஷனல் கருவுக்கான எனது முயற்சி ஒரு குட்டி கதை :) 


 கதைக்கான படத்தை நானே வரையணும்னு நினைச்சேன் நேரமில்லை. ஒரு கிளிப் ஆர்ட்டை எடிட் செஞ்சி இணைச்சிருக்கேன். 

சீதை இராமனை மன்னித்தாள் தலைப்பிற்கு எழுத  வைத்திருந்த கருவை அப்படியே கண்டிஷனல் கருவிற்கு மாற்றி விட்டேன். 

 கதைக்கான காலகட்டம் டிஷ் ஆன்டென்னா செட் டாப் பாக்ஸ் எல்லாம் கிராமங்களில் நுழையாத காலகட்டம்.


வாங்க பஸ்ஸில் ஏறுவோம் :) 

பஸ் அந்த நிறுத்தத்திலிருந்து, நடத்துனர் விசில் சத்தம் கேட்டதும் கிளம்பியது. அவர்கள் அதில் இருந்தார்கள்.சென்னைக்கு செல்லும் ரெயில் ஏற இரயில் நிலையம் நோக்கி பேருந்து புறப்பட்டது 


அது கிராமப்புறங்களில் இருந்து டவுன் நோக்கி செல்லும் பஸ்.  குண்டும் குழியுமான மண் சாலையில் பயணித்தது.  ஜன்னலோர இருக்கையில் மைதிலியும் அவள் அருகில் அவளது தம்பி ரங்கனும் வெவ்வேறு மன சிந்தனையில் ஒன்றும் பேசாமல்  அமைதியாக பயணித்தனர்.


கொஞ்சம் தூரம் சென்றதும் ரங்கன்    மைதிலியிடம் " நீ சாப்பிட்டாயா அக்கா?  பஸ் புறப்படுமுன்னேயே கேட்டிருக்கணும். ஏதோ யோசனையில் மறந்துட்டேன்.  சாரி மன்னிச்சுடு"  என்றான்.


"வேண்டாம்.  பசியில்லை நான் கொஞ்சம் கண் மூடி தூங்கறேன்"  என்று மெதுவாக இருக்கையில் சாய்ந்து விழிகளை மூடினாள் மைதிலி.  அவளுக்குத் தெரியும் தம்பிக்கு தன்  மீது மிகுந்த கோபம், வேண்டுமென்றேதான் பசியில் இருப்பது தெரிந்தும் கேட்கவில்லை  என்று. 


கண்ணை மூடி ஜன்னலில் ஒருக்களித்து சாய்ந்தவளின் மனக்கண்   முன் எப்பவும் மாறாத அதே ட்ரேட் மார்க்  சிரித்த முகத்துடன் சிவராமன்.  'இப்போ பகல் நேரமாச்சே?  சாப்பிட்டிருப்பாரா? பசி தாங்க மாட்டாரே...   அட  இதென்ன, பிரிவது என்று முடிவெடுத்த பின் யார் சாப்பிட்டா என்ன,  சாப்பிடலைன்னா என்ன?   யாருக்கு பசிச்சா நமக்கென்ன?'  என்று தன்னைத்தானே சமாதானம் செய்துக்கொண்டாள்.

ஆனாலும் மனம் சமாதானத்தை ஏற்க மறுத்தது.  


' கிட்டத்தட்ட 1 வருடம் ஒரே வீட்டில் வாழ்ந்தோம்.  அதனால் இந்த அனுசரணை ஏற்படுவது நியாயம்தானே?  புறப்படும்போது கூட என்னிடம் எதோ சொல்ல வந்தார்... நான்தான் முகம் கொடுத்தும் பேச இடம் தரவில்லையே' என  மனதில் பல குழப்பங்கள்.   


'ஒருவேளை அவசரப்பட்டுவிட்டேனோ?  கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாமோ?'  என்றெண்ணிய மறு  நொடியே குறுக்குப்புத்தி எட்டிப்பார்த்து  'இல்லை,  இதில் என் பக்கமே நியாயம் இருக்கு.  வீட்டில் அம்மாவும் அப்பாவும் எனக்கே ஆதரவாக இருப்பார்கள்.  நான் செய்ததில் தவறொன்றுமில்லை.  பின் என்னவாம்?   எவ்வளவுதான் பொறுப்பது?  பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு' என்று நினைத்தவாறே கண்களை மூடி நினைவலைகளை ஒரு வருடமுன்   பின்னோக்கி  ஓட  விட்டாள்  மைதிலி.

அன்று சிவராமன் குடும்பத்தினர்  மைதிலியை பெண் பார்க்க சேலத்திலிருந்து வருகிறார்கள் என வீடே அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது.  மைதிலிக்கு இது மூன்றாவதாக பெண் பார்க்க வரும் வரன்.  முதல் இரண்டும் ஜாதகம் உயரம், படிப்பு காரணமாக தட்டிப்போயின.  ரங்கன் சிரித்தவாறே ஓடி வந்து சொன்னான்...

"டீ மைதிலி!   உன்னை பெண் பார்க்க வரவர் கருத்தம்மா படத்தில் வர நடிகர் ராஜா மாதிரி வெட்னரி    டாக்டராம்  :)   உனக்கு ஜுரம் வந்தா மாட்டு ஊசிதான் :)   அப்போதே மைதிலிக்கு 'சுர்ரெ'ரென்றது.  பின்னே சேலம் என்றாலும் அது சேலத்துக்கும்  தாண்டி உள்செல்லும்  குக்கிராமம் என்று கேள்விப்பட்டபோது நகரத்தில் வளர்ந்த  மைதிலிக்கு சற்றே  தயக்கத்தை ஏற்படுத்தியது .  


ஆனால் அத்தனை தயக்கமும்  சிவராமனை பார்த்ததில்  காணாமற்போனது.  பொறுமையாக அப்பா கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த விதம், அவரது புன்சிரிப்பு,  அடர்ந்த  கேசம், அழகாக  அயர்ன் செய்து இன்  செய்த பீட்டர் இங்கிலன்ட்  கரும்பச்சை முழுக்கை ஷர்ட்,  இப்படி எல்லாமே பிடித்தது.  அவர்களது திருமணமும் இனிதே முடிந்து இருவரும் சிவராமனின் ஊருக்கு இரயிலில் சேலம் நோக்கி புறப்பட்டனர்.  பல மணிநேர பிரயாணத்துக்குப்பின்....

ரயில்  வந்து அந்த ஸ்டேஷனில் நின்றது.  அவர்கள் காத்திருந்தார்கள்


ரெயில் நிலையத்திலிருந்து ஊருக்குள் செல்ல ஞாயிற்று கிழமை பேருந்து சர்வீஸ் ஏதுமில்லாததால் சிவராமனின்  அசிஸ்ட்டண்ட்  முன்னேற்பாடாக ஒரு ஜீப்பை எடுத்து வருவதாக சொல்லியிருந்தார்.  அவருக்காக ரெயில் நிலையத்திலேயே  அவர்கள்  காத்திருந்தார்கள்.


மைதிலி சுற்றுமுற்றும் பார்த்தாள்.  வெறும் பச்சை பசேலென வயல்வெளிகளும், தக்காளி தோட்டமும்,  கரும்பு தோட்டமும் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை தென்பட்டது.  அவர்களுக்கு வந்த ஜீப்பில் ஏறி அமர்ந்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள் மைதிலி.  நிறைய ஒட்டு வீடுகள் சிலவற்றில்  மட்டும்  ஆன்டென்னாக்கள்.  மற்ற வீடுகளில் டிவி எல்லாம் இல்லையோ என்று யோசித்தவாறே  அமர்ந்திருந்தாள்  மைதிலி.  வீடு வந்ததும் இறங்கி உள்ளே சென்றார்கள்.  நகர வாழ்க்கைக்கு முற்றிலும் மாற்றான கிராமத்து வீடு.  ஊர் பெண்மணிகள்  இருவர் வந்து சமைத்து வைத்திருந்தனர் .


அக்கம்பக்கம் யாருமில்லா வீடு அது.  அங்கிருந்த ஒரு பெண்மணி சொன்னார்,  "டாக்டர் வர லேட்டானா கதவை மூடி இரும்மா.  யாராச்சும் தட்டுற சத்தம் கேட்டா கதவை திறக்காதே.  ஒண்ணுமில்லை பக்கத்து மலை காட்டிலிருந்து புலி, அப்புறம்  நரிங்க இரவில் நடமாடும்"  என்றார்.  இப்படி சில காலம் கழிந்தது.  தொலைக்காட்சிப்பெட்டி இருந்தும் அதில் பெரிதாக தெளிவாக ஒளிபரப்பு வராது. ரேடியோ மட்டும் அவ்வப்போது கேட்பாள் . நள்ளிரவில் ஆட்கள் கத்தி கூப்டிட்டு அலறலுடன் ஓடி வருவர் .  தேள் கடி பூச்சி கடி  சிலசமயம் பங்காளி சண்டையில் உடைந்த மண்டை இதற்கெல்லாம் டவுன் பக்கம் இரவில் வண்டி கட்டி செல்ல நேரமாகுமாதலால் சிவராமன்தான் விஷ முறிவு ஊசி, காயத்திற்கு மருந்திட்டு கட்டு  போடுவார். அதற்கு அடுத்தநாள் அன்பின்,   நன்றியின்  வெளிப்பாடாக  மூட்டை வேர்க்கடலையும், கரும்பும், தக்காளியும் வீட்டில் இறங்கும்.  இதெல்லாம் விட பெரிய காமெடி ஊருக்கு ஒதுக்குப்புறமா சாராயம்/கள்ளு  காய்ச்சுவோர் ரகசியமாக அவர்கள் தொழிலை செய்து வந்தனர்.   அந்த  சாராய/கள் பானை மேல் உள்ள மூடு தட்டு மீது வேக வைத்த  சுட்ட சோள கதிர்கள் இருக்கும். (பக்க உணவு) அவ்வழியே சென்ற மூன்று எருமை மாடுகள் சோளக்கதிரை உண்ணும் ஆர்வத்தில் காய்ச்சி வைத்த சோம பானத்தையும் ருசிக்க,  அங்கே ஒரே களேபரம்.   கடைசியில் அவற்றை அடக்கவும் சிவராமன் நட்ட நடு இரவில் செல்ல வேண்டியிருந்தது!!!  ஆனால் இந்த உதவிகள் அனைத்தையும் சிவராமன் முழு மனதுடன் ஆர்வமுடன் செய்தார்.  மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் கால்நடை மருத்துவத்தை விரும்பி தேர்வுசெய்தவர் அல்லவா?ஆனால் நாளடைவில் மைதிலிக்கு  இந்த கிராமத்து வாழ்க்கை மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது.  சினிமா தியேட்டர் கூட போகணும்னா அடுத்த டவுனுக்கு போக வேண்டும்.  இப்படி சின்ன சின்ன விஷயங்களை ஊதி பெரிதாக்கி அம்மாவுக்கு கடிதம் வாயிலாகவும், தொலைபேசி வழியாகவும் புலம்பினாள். அவளது புலம்பல்களை தாயாரும் ஊக்குவிக்க மைதிலியின் பிடிவாத குணம் வேர் பிடித்து வளர்ந்தது.

                                

அப்படி ஒரு நாள் மைதிலியின் ஆஸ்தான கதாநாயகன் நடித்த புது படத்தின் முதல்நாள்  மாலைக் காட்சிக்கு பக்கத்து டவுனுக்கு செல்ல  தயாராகி உடுத்தி  புறப்படும் நேரம் ஊரில்  பானை செய்யும் செம்மலை ஓடி வந்து அழுதுகொண்டே ஏதோ சொல்லவும்,  சிவராமனும் சினிமா டிக்கட், மைதிலி எல்லாம் மறந்து அவன் பின்னே சென்றான்.   திரும்பி வரும்போது 12 மணி இருக்கும்.  


கோபத்தில் மைதிலி பேசவில்லை.   பிறகு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வேலை முடிந்து தாமதமாகவே வீட்டுக்கு வந்தான் சிவராமன். மைதிலி ஏற்கனவே கோபத்தில் இருந்ததால் சிவராமனின் போக்கு இன்னும் வெந்த புண்ணில் எண்ணெய் பாய்ச்சியது.  இயல்பிலேயே மைதிலி பிடிவாத குணமுடையவள்.   படிப்பு, விரும்பிய பொருள் எதுவென்றாலும் அவள் நினைத்தது நடக்கவில்லை என்றால் பூகம்பம்தான் வீட்டில்.  உடனடியாக பெற்றோர் வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து தம்பியிடம் தன்னை வந்து அழைத்து செல்லுமாறு கூறினாள்.  அவளது பெற்றோருக்கும் மகளின்  பிடிவாத குணம் தெரியும்.   அதனால் எப்படியும் பேசி சமாளித்துக்கொள்ளலாம் என்றே ரங்கனை ஊருக்கு அனுப்பி வைத்தனர்.  

புறப்படுமுன் கூட சிவராமன் மைதிலியிடம் எவ்வளவோ  கெஞ்சினான்.  அன்று சினிமா போக முடியாத நாள் இரவிலிருந்தே ஏதோ சொல்ல வரும்போதெல்லாம் மைதிலி எதையும் காது  கொடுத்து கேட்க விருப்பமில்லைஎன வெறுப்புடன் விலகினாள்.


பேருந்து புறப்பட்டு அரை மணி நேரமாகியிருக்கும்.  ஒரு நிறுத்தத்தில் நின்றது.  ரங்கன் அங்கு  இறங்கி பெட்டிக்கடை ஒன்றில் புத்தகம் ஒன்றினையும், ஒரு பிஸ்கட் பாக்கெட்டையும் வாங்கி வந்தான். பிஸ்கட்டை வேண்டாமென்று சொல்லி புத்தகத்தை பிரித்தாள் மைதிலி.  பார்வையை ஓடவிட்டவள், அப்படியே அதில் 10 வது  பக்கமிருந்த 4 வது கதையை வாசிக்கத் துவங்கினாள்.  திடீரென  மனதில் என்ன நினைத்தாளோ, நடத்துனரிடம் சொல்லி உடனே தங்களை  பாதி வழியில்இறக்கி விடுமாறு கேட்டாள்.  ரங்கனுக்கு எதோ புரிந்தது .  அது ஒரு பொட்டல் காடு.  ஓட்டுனரும் நடத்துனரும் திட்டியவாறே ரங்கனையும் மைதிலியையும் இறக்கி விட்டனர்.  ஒருவாறு இருவரும் குதிரை வண்டி பிடித்து சிவராமன் வீட்டை  வந்து சேர்ந்தனர்.  வீட்டில் இருந்த சிவராமனுக்கு மைதிலியை கண்டதும்  பெரும்  மகிழ்ச்சி.  "மைதிலி ஒரே ஒருமுறை என்னுடன் செம்மலை வீட்டுக்கு வா அப்போ உனக்கு புரியும்"  என்றான்.  அதற்கு செவிமடுத்து மைதிலி உடன் சென்றாள்.  தூரத்தில்அவர்கள் தலை கண்டதும் செம்மலையின் மாடு உற்சாகத்துடன் "மா" என்று கத்தியது.  மைதிலிக்கு விளங்கவில்லை. அப்போது அங்கு வந்த செம்மலையின் மனைவி. "தாயீ..  டாக்டர் இல்லைன்னா லட்சுமி அன்னிக்கு  வைக்கோல் போர்  எரிஞ்ச தீ நெருப்பு புண்ணில் செத்து போயிருக்கும்.  தினமும் மருந்து போட்டு காப்பாத்தினது டாக்டர்தான்.  அதான் அவரை பார்த்ததும் நன்றியில்  "மா" ன்னு  கத்துது" என்றாள்  .

 மைதிலிக்கு தன் மேலே வெறுப்பு ஏற்பட்டது.  குற்ற உணர்வுடன் வீடு திரும்பினாள்.  "என்னை மன்னிச்சிருங்க" என்ற  மைதிலியிடம் சிவராமன் அவளை அணைத்தவாறு, "பரவாயில்லை மைதிலி!  உன்மேல் தப்பொன்றுமில்லை.  நானும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அன்று புறப்பட்டது என் தவறு.  நீ எத்தனை மகிழ்ச்சியுடன் இருந்தாய் ரொம்ப நாள் கழித்து சினிமா பார்க்க போகிறோம்னு....  நீயும் என்னை மன்னிச்சுடு.  நாம் இருவரும்  உங்க அப்பா வீட்டுக்கு சேர்ந்தே சென்னைக்கு ஒரு வாரம்  சென்று வருவோம்"  எனவும் சந்தோஷத்துடன் புறப்பட்டாள் மைதிலி.  இப்போதும் பேருந்தில் அவள் கையில் ரங்கன் வாங்கி கொடுத்த புத்தகம்.
அது :) 


 """ எங்கள் பிளாக் வெளியீடு  //சீதை இராமனை மன்னித்தாள் // எனும் புத்தகம் 


அன்று அவள் மனம் மாறி வீடு திரும்ப காரணமாயிருந்ததும் இத்தொகுப்பில் உள்ள ஒரு கதைதான் .


மீனம்பாக்கத்தில் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து மைதிலியும்  சிவராமனும்  சந்தோஷமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் அப்போது விமான நிலையத்தில் வானிலிருந்து கீழிறங்கிய ஒரு  பெரிய விமானம் ஓடு பாதையில் வேகமாக ஓடி நின்றது. அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!                                                                                                                            சுபம் _/\_ 
                                                                                                                      =========

93 கருத்துகள்:

 1. ஜன்னல் வழியாப் பார்த்ததில் ஒண்டும் வெளங்கலை.. அவுங்கள்..பிளேன்..ல எந்தப் பக்கம் இருக்காங்களாம்!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஆ ஹாஅ ஹா அப்பூடித்தான் விடாதீங்கோ கீப் இற் மேலே... மீ யும் கொஞ்ச நேரத்தில வந்திடுவேன்:)

   நீக்கு
  2. ஹாஹா அவங்க மொட்டை மாடியில் இருந்து பிளேனை பார்க்கிறாங்க :) நாணலாம் கதைக்கு கூட ஜன்னல் ஓரம் உக்கார மாட்டேனே :)

   நீக்கு
  3. துரை சகோவும் செட் ஆயாச்சா!! ஹை!! இல்லை அதிரா ஜன்னல் பக்கம் உட்கார பயம் என்பதைச் சொல்ல நாணம்!! அப்படித்தானே ஏஞ்சல்!!! ஹாஹாஹாஹா

   கீதா

   நீக்கு
 2. ஓஓஓஓ மை கடவுளேஏஏஏ அஞ்டு கதை எழுதிட்டாவோஓ.... மீ பெயிண்ட் ஆகிறேஏஏஏன்ன்ன் நேக்கு ஆராவது சுட்டாறின தண்ணி அடிச்சு எழுப்புங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதுக்கு ஆறனும் சூடு தண்ணியே ஊத்தறேன் :)

   நீக்கு
  2. குழை சோறு ஆகிப் போட்ட வாசம் (!) இன்னும் தீரலை.. அதுக்குள்ள சுடு தண்ணியா!..

   நீக்கு
  3. துரை அண்ணன்.. ஒரு பால் மணம் மாறாத சுவீட் 16 ஐப் பார்த்து[அது நாந்தேன்ன்:)] சுடுதண்ணி ஊத்துவேன் எனச் சொல்ல அஞ்சுவுக்கு எப்பூடித்தான் மனம் வருதோ:)...

   //எதுக்கு ஆறனும் சூடு தண்ணியே ஊத்தறேன் :)///

   பெண்ண்ண் மனது மென்ன்ன்ன்ன்ன்மையாம்ம்ம்ம்ம் பூவினதூஊஊஊ தன்மையாம்ம்ம்ம்ம்ம்ம்.. என்று சொன்ன யாவரும் இங்கு வந்து பாருங்கோஓஓஓஓஓஓ:)).. ஹா ஹா ஹா அது பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுதூஊஊஊஊஊ:))

   நீக்கு
  4. ஹையோ ஏஞ்சல் சுடுதண்ணியா ஊத்தினீங்க...வெந்துருக்குமே சரி சரி வேப்பிலை குழை அடிங்கப்பா....

   கீதா

   நீக்கு
  5. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வேப்பிலை ஸ்ரீராமுக்கு மட்டுமே ஜொந்தமானது:)..

   நீக்கு
 3. ஆவ்வ் !!! இன்னிக்கே வெளியிட்டாச்சா .மிக்க நன்றி ஸ்ரீராம் அண்ட் கௌதமன் சார்.

  ஸ்ரீராமுக்கு ஸ்பெஷல் நன்றிகள் :) எடிட் செய்ய ரொம்ப கஷ்டப்பட்டிருப்பிங்க :) thanks a bunch

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர் வெறும் டாங்ஸ்ஸு சொன்னாப் போதாது, அவர் தன் போனைக் கீழே எறிஞ்சுட்டாராம்ம்ம் ச்ச்ச்சோ உங்க போனை அனுப்பித் தாங்ஸ் சொல்லிங்கோ:).

   நீக்கு
  2. ஆமாம் அவருக்கு நல்லதாவே கொடுக்கணும் என்னுது ஆன்றாயிட் ஸ்மார்ட் போன் உங்களது ஆப்பிள் கண் போன் உங்களதை எடுத்து அவருக்கு பரிசளிக்கறேன்

   நீக்கு
  3. 'நம்மளை இப்படி காமெடி பீஸ் ஆக்கிட்டாய்ங்களே... இப்போ யாரோட ஃபோன் எனக்கு வரும்னு மாற்றி மாற்றி பார்க்க வைத்து விட்டார்களே...'

   நீக்கு
  4. என்னாதூஊஊஊ அதிராட eye ஆஆஆஆஆஆ... அதை வச்சுத்தான் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்ன்.. அதைக் கொடுத்திட்டு இனி எப்பூடிக் கண்ணால பேசுவேன்.. நோ மாட்டேன்ன்ன்...:).. ஹா ஹா ஹா..:)

   நீக்கு
 4. சம்பவக் கோர்வை அருமை! மிக அழகாக எழுதி இருக்கிறார் ஏஞ்சலின்! இரண்டு பேரும் பின்னூட்டங்களில் மட்டுமில்லாமல் கதை எழுதுவதிலும் போட்டி போடுவதால் நமக்குத் தான் நல்ல விருந்து! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா மிக்க நன்றிக்கா ..ரொம்ப சந்தோஷமாயிருக்கு :) இதே mode ல ஓடிப்போய் இன்னும் நாலு கதை எழுத உற்சாகம் வருது :)
   ஹாலிடேஸ் முடிஞ்சி ஒருவித சோர்வு சோம்பேறித்தனம் இருந்தது அது இப்போ ஓடியே போச்சு எனக்கு ரொம்ப தாங்க்ஸ்க்கா

   நீக்கு
  2. ஸ்ஸ்ஸ்ஸ் கீதாக்கா ஆழம் அறியாமல் காலை விட்டிட்டீங்க பாருங்கோ ஹா ஹா ஹா ஹையோ இனி சமையல் குறிப்பை நிறுத்திப் போட்டு கதை கதையா எழுதித்தள்ளப்போறாவே... ஓ மை கடவுளே!!! பீஸ் எனக்கு அண்டாட்டிக்காவுக்கு ஒரு ரிக்கெட் தாங்கோ:).. நிம்மதியைத் தேடிப் போகப்போறேன்ன்ன்:))

   நீக்கு
  3. ஹாஹாஹா, அதிரா, உங்களோட கதையும் நல்லா இருக்குனு தானே சொன்னேன்! :) சரி, சரி அன்டார்டிகாவிலேயே இருங்க, பத்திரமா இருக்கலாம். :)

   நீக்கு
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கீதாக்கா சட்டுப்புட்டெனக் கட்சி மாறிட்டீங்களே.... கையைப் பிடிச்சுக் கொண்டு.. போகாதே போகாதே.. பொல்லாத சொர்ப்பனம் நானும் கண்டேன்ன்ன்.. எனப் பாடுவீங்க எண்டெல்லோ நினைச்சிருந்தேன்ன்:)).. விடுங்கோ மீ தேம்ஸ் க்குப் போறேன்ன்:)

   நீக்கு
  5. என்னாது?, காசிக்குப் போயிருவேன்னு சொல்ற பூசார் இப்ப அண்டார்ட்டிக்காவா!! ஏஞ்சல் பூஸார் அங்க பனிச்சிலையா இருக்கப் போறாங்களாமா??!!! ஹாஹாஹா.....சூப்பர் சூப்பர்!!!! கொஞ்ச நாள் தேம்ஸ் அமைதியா இருக்கும்!!

   கீதா

   நீக்கு
  6. கீதா... மீ ஞானியாகிட்டேன்ன்ன்ன்:) அதனால எனக்கு காசியும் ஒண்டுதான்.. அந்தாட்டிக்காவும் ஒண்ணுதேன்ன்:)

   நீக்கு
  7. அதிரா, பரம ஞானியாயிட்டீங்க போல! காசியும், தேம்ஸ் நதியும் அன்டார்டிகாவும் ஒண்ணாயிடுச்சே உங்களுக்கு! :) ஹெஹெஹெஹெ

   நீக்கு
 5. ஏஞ்சல்... நன்றாய் எழுதி இருக்கிறீர்கள். சீ ரா ம கதைக்கருவை இங்கு எஹுதி விட்டீர்கள் என்கிறீர்கள். ஆனால், அதற்கும் உங்களிடமிருந்து கட்டாயம் கதை எதிர்பார்க்கிறேன். அதிரா இதுவரை எத்தனை பாரா எழுதி வைத்திருக்கிறார் என்றும் அறிய ஆவல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஸ்ரீராம் :) போன வருஷம் மல்ட்டி கதையில் துவங்கிய எனது வலையுலக மறு பிரவேசத்துக்கு எங்கள் பிளாக் மற்றும் நீங்கள் கதை எழுத உற்சாகமூட்டியதே ஊக்குவித்ததே முக்கிய காரணம் :) நிச்சயம் முயல்கிறேன் .

   நீக்கு
  2. ///ஏஞ்சல்... நன்றாய் எழுதி இருக்கிறீர்கள். சீ ரா ம கதைக்கருவை இங்கு எஹுதி விட்டீர்கள் என்கிறீர்கள். ஆனால், அதற்கும் உங்களிடமிருந்து கட்டாயம் கதை எதிர்பார்க்கிறேன்.//

   மீயும் மீயும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்ன்...:) வெடி வைக்க:) ஹையோ ஐ மீன்... கதை படிக்க.. எழுதுங்கோ அஞ்சு.

   ///அதிரா இதுவரை எத்தனை பாரா எழுதி வைத்திருக்கிறார் என்றும் அறிய ஆவல்!///

   சிவனே என என்பாட்டில வாலாட்டிக்கொண்டு.. வெரி சோரி காலாட்டிக்கொண்டு தேம்ஸ் கரையிலிருக்கும் என்னைப் போய் உப்பூடி உசுப்பி விட்டால்ல்ல் பிறகு நான் கதை கதையா எழுதத் தொடங்கிடுவேன் கஸ்டப்படுவது நீங்கதான்.. இப்போ என் சமையல் ரெசிப்பியைப்போல:) எதுக்கும் உங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கோ ஸ்ரீராம்:) ஹா ஹா ஹா..:).

   நீக்கு
  3. /// போன வருஷம் மல்ட்டி கதையில் துவங்கிய எனது வலையுலக மறு பிரவேசத்துக்கு எங்கள் பிளாக் மற்றும் நீங்கள் கதை எழுத உற்சாகமூட்டியதே ஊக்குவித்ததே முக்கிய காரணம் :) நிச்சயம் முயல்கிறேன் .//

   நானும் இதை படு வன்மையாக ஆமோதிக்கிறேன்... யாராவது கொஞ்சம் தட்டி விட்டால்தான் ஆர்வம் அதிகமாகுது இல்லை எனில் எதுக்கும் மனம் வருவதில்லை..

   நானும் அப்படித்தான், ஆரம்பம் என் புளொக்கில் சில கதைகள் எழுதினேன், பின்பு வேண்டாம் படிப்போருக்கு பிடிக்குமோ தெரியாது என நிறுத்தியிருந்தேன்... எங்கள் புளொக் கதை கேட்டு உற்சாகப் படுத்துவதாலும்.. நெல்லைத்தமிழன் என்னிடம் தொடர்ந்து எழுதும்படி சொன்னதாலும்.. இவர்களுக்காகவாவது எழுதோணும் எனும் எண்ணம் உற்சாகம் கொடுத்தது.. கொடுக்கிறது.... நன்றி.

   நீக்கு
  4. ஆமாம் எங்களுக்கு எங்கள் பிளாக் ஒரு family மாதிரி :) குடும்பத்தில்தான் பெரியவங்க மற்றவர்களை உற்சாகப்படுத்துவங்க ..
   ஆங் அப்புறம் நெல்லைத்தமிழன் முகவரி மட்டும் யாராச்சும் தெரிஞ்ச எனக்குஅனுப்பி விடுங்க :)//நெல்லைத்தமிழன் என்னிடம் தொடர்ந்து எழுதும்படி சொன்னதாலும்.. இவர்களுக்காகவாவது எழுதோணும்/// இதுக்குதான் :)

   நீக்கு
  5. ///குடும்பத்தில்தான் பெரியவங்க மற்றவர்களை உற்சாகப்படுத்துவங்க ..//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சந்தடி சாக்கில எல்லோரையும் பெரியாக்களாக்கி தான் குட்டிப் பெண்ணாகிடலாம் எனும் நினைப்பாக்கும்:).. மீ தான்... :))நனனி... “கடைக்குட்டி ஜூலி:).. ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்ச்சு.. அதிரா:)..

   ///ஆங் அப்புறம் நெல்லைத்தமிழன் முகவரி மட்டும் யாராச்சும் தெரிஞ்ச எனக்குஅனுப்பி விடுங்க/// பெரிய பெரிய புள்ளிகளோடெல்லாம் எனக்கு மெயில் தொடர்பு.. ஃபோன் தொடர்பெல்லாம் இருக்குதென அறிஞ்சால்ல்ல் அஞ்சுவுக்கு நித்திரை வராதே கர்ர்ர்:))...

   அவர், என்னைப்போல:) பிரபல்யங்களுக்கு மட்டும்தான் அதெல்லாம் கொடுப்பார்ர்ர்:)... ஹையோ முருகா இம்முறை ஏமாத்தாமல் வள்ளிக்கு வைர நெக்லெஸ் போடுவேன்ன்[துரை அண்ணன் தந்திடுவார் என்ற நம்பிக்கையில் நேர்த்தி வைக்கிறேன்ன்:)] என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்:).. ஹா ஹா ஹா முடியல்ல முருகா:)

   நீக்கு
  6. அதிரா வாங்க எங்கள் பிளாக் போலாம் கம் கம் சூன்

   நீக்கு
  7. நான் கதை கதையா எழுதத் தொடங்கிடுவேன் கஸ்டப்படுவது நீங்கதான்.. இப்போ என் சமையல் ரெசிப்பியைப்போல:)// எழுதுங்க அதிரா!! ஆனா குழைந்த சாதம் போல கதையு குழைச்சுராமா எழுதோணும் ஒகேயா...ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  8. ஆமாம் எங்களுக்கு எங்கள் பிளாக் ஒரு family மாதிரி :) குடும்பத்தில்தான் பெரியவங்க மற்றவர்களை உற்சாகப்படுத்துவங்க ..// யெஸ் யெஸ்..... ஏஞ்சல் என்னையும் உங்க லிஸ்டுல சேர்த்துக்கங்க,,,,நானும் இதை வழி மொழிவேன்!!! நானும் எழுதுவது என்பது இப்படித்தான்...எங்கள் ப்ளாக் ரொம்பவே உற்சாகம் அளித்தல்!!! அப்புறம் துளசி அவர் எழுதறாரோ இல்லையோ என்னை எழுது எழுதுனு சொல்லிக்கிட்டே இருப்பார்....இப்போ எ பி...யும் தொடர்ந்து என்கரேஜ் பண்ணுவதால் கொஞ்சம் எழுதறேன் அப்படியும் சுணக்கம் வருது...ஹாஹாஹா...

   கீதா

   நீக்கு
  9. //எழுதுங்க அதிரா!! ஆனா குழைந்த சாதம் போல கதையு குழைச்சுராமா எழுதோணும் ஒகேயா...ஹிஹிஹி

   கீதா///

   நான் எழுதப்போகும் என் அடுத்த கதையோடு எனக்கு அநேகமா... “கதை மாமணி” ப்பட்டமும் பொன்னாடையும்.. என்வலப்பும்:) கிடைக்கும் என நம்புகிறேன் கீதா:).

   நீக்கு
 6. ஏஞ்சல்.. மைதிலியே சீ ரா ம கதை படித்து மனம் மாறும்போது, நீங்கள் எழுதும் வாய்ப்பை தட்டிக்கழிக்கலாமா? மைதிலி வருத்தப்படுவாள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா :) ஆமாம் கதை நாயகி பேரெல்லாம் மைதிலி என்று செலெக்ட் செய்து வைத்து தான் இங்கே கண்டிஷனல் கருவுக்கு ஏற்றாற்போல மாற்றினேன் :) எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு மைதிலி கட்டாயம் இருப்பாள் :)

   நீக்கு
  2. யாரந்த மைதிலி? எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகோணும்..:) ஒருவேளை மைதிலிக்கும் ஸ்ரீராமுக்கும் ஏதும்.. ஹையோ மீ அந்த சீதையின் ஸ்ரீ ராமனைச் சொன்னேன்.. ஹையோ மீ வாய் திறந்தாலே தப்பாகிடும்போல இருக்கே முருகா:).. ஹா ஹா ஹா சரி அடுத்த கொப்புக்குத் தாவிடலாம்:)..

   நீக்கு
  3. /// மைதிலி வருத்தப்படுவாள்!///

   ஆடு நனையுதே என ஓநாய் அழுத கதையாவெல்லோ இருக்குதூஊஊஊ இக்கதை:).. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு... அஞ்சு .. கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கோ அதிரா ரொம்ப நல்ல பொண்ணு என்பதை:)..

   நீக்கு
  4. ஆக்சுவலி @) இந்த மைதிலி //நான் காலையே பார்த்தேன் ஆனா என்னை விட நீங்க தான் நல்லா கலாய்ப்பீங்கன்னு உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தேன் அதிராவ் :)))

   நீக்கு
 7. இந்தக் கதை 'சீதை ராமனை மன்னித்தாள்'க்கு ரொம்பப் பொருத்தமாயிருந்திருக்கும். மாட்டு டாக்டரின் தொழில், அதனால் அவருக்கு உள்ள மதிப்பு (வெறும் டாக்டரைவிட, கிராமங்களில் மாட்டு டாக்டருக்குத்தான் மதிப்பு. அவர்தானே குடும்பத்தின் செல்வத்தைக் காப்பாற்றுபவர்) இதையெல்லாம் மைதிலி கண்டு.... என்று நீட்டி...

  கொடுத்துள்ள வரிகளை நன்றாக இந்தக் கதையில் கொண்டுசேர்த்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  நல்லவேளை, 'கப்பல்' பற்றி கேஜிஜி சார் கொடுக்கலை. அப்படிக் கொடுத்திருந்தா, பஸ் ஏறுவதற்கு முன்பு அவர்கள் பூம்புகார் சென்று கப்பலில் ஏறி காயல்பட்டினம் சென்று அங்கு பஸ் பிடித்தார்கள் என்று எழுதியிருக்கவேண்டியிருக்கும்.

  அதிரா, நான் என்ன என்ன குறைகளைக் கண்டுபிடிக்கப்போகிறேன் என்று ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பார். அந்தக் 'குறை கண்டுபிடிக்கும் கண்ணாடி', அவர் இடுகைகளைப் படிக்கும்போதுதான் அணிந்துகொள்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///நல்லவேளை, 'கப்பல்' பற்றி கேஜிஜி சார் கொடுக்கலை. அப்படிக் கொடுத்திருந்தா, பஸ் ஏறுவதற்கு முன்பு அவர்கள் பூம்புகார் சென்று கப்பலில் ஏறி காயல்பட்டினம் சென்று அங்கு பஸ் பிடித்தார்கள் என்று எழுதியிருக்கவேண்டியிருக்கும்.//

   ஹா ஹா ஹா அதுமட்டுமில்ல நெல்லைத்தமிழன்.. இதுதான் சாட்டென.. ஆடு, மாடு, கோழி, வாத்தை எல்லாம் கப்பலில் ஏத்தியிருப்பா.. நல்லவேளை நாம் தப்பிச்சோம்ம்:).

   நீக்கு
  2. ///அதிரா, நான் என்ன என்ன குறைகளைக் கண்டுபிடிக்கப்போகிறேன் என்று ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்.//

   சே..சே..சே எப்பவும் அடிராவை.. சே..சே டங்கு ஸ்லிப் ஆகத் தொடங்குதே கர்ர்ர்ர்ர்ர்ர்:) அதிராவைத் தப்புப் தப்பா நினைப்பதிலேயே எல்லோருக்கும் ஒரு சொகம்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

   ஆனா நான் தான் கண்டுபிடிச்சுக் குதிக்கிறேனே வானத்துக்கும் பூமிக்கும்...
   //இந்தக் கதை 'சீதை ராமனை மன்னித்தாள்'க்கு ரொம்பப் பொருத்தமாயிருந்திருக்கும்./// ஹா ஹா அப்போ இங்கின இது பொருத்தமில்லை என்பதை கண்ணாடி போடாமலேயே கண்டு பிடிச்சுட்டார்ர்ர்ர்ர்:).. ஹையோ அஞ்சு எதுக்கு என்னைப் பார்த்து முறைக்கிறீங்க:).. மீ ரொம்ப நல்ல பொண்ணு:).. அஞ்சூஊ ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோங்க:)..நெல்லைத்தமிழன் கண்ணாடி போட்டால்தான் நமக்கு நல்லது.. இடைக்கிடைதான் குறை பிடிப்பார்ர்...:) கண்ணாடி போடாட்டில்.. ரோட்டலி ஃபுரூட்டலி குறையேதான் என்றிடுவார்ர்... இதுதான் லொஜிக்:) ஹா ஹா ஹா:)..

   ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடாஆஆஆஆ:)) இப்பத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு:).

   நீக்கு
  3. @நெல்லைத்தமிழன் ..உண்மைதான் இது சீதை ராமனைமன்னித்தாள் கதைக்கரு அதற்கென பிப்ரவரி லருந்து எழுத நினைத்து அப்படியே அங்கே வந்த கதைகளை பார்த்து மலைத்து என்னால் அது போல இயலுமானெல்லாம் யோசிச்சி தயங்கினேன் ஏனென்றால் அங்கு வந்த அனைத்துமே முத்தான கதைகள் ..இப்போகூட விடுமுறை முடிஞ்சி எதோ தோணிச்சி சட்டுன்னு எழுதி அனுப்பினேன் ..
   உங்களை மட்டகிரி படம் வரைய கிராமத்து சீன்ஸ் எல்லாம் எடுத்து வச்சேன் :) பார்ப்போம் அடுத்த கதைக்கு எனது ஓவியம் வரலாம்:)
   மிக்க நன்றி நெல்லைத்தமிழன் .

   //கிராமங்களில் மாட்டு டாக்டருக்குத்தான் மதிப்பு. அவர்தானே குடும்பத்தின் செல்வத்தைக் காப்பாற்றுபவர்) //

   அதேதான் இந்த மாடுகள் குட்டி போடும்போது ஓனர்ஸ்குடும்பமா நிப்பாங்களாம் வீட்டில் அவர்களும் ஒரு அங்கத்தினர் மாதிரி

   நீக்கு
  4. /நல்லவேளை, 'கப்பல்' பற்றி கேஜிஜி சார் கொடுக்கலை. அப்படிக் கொடுத்திருந்தா, பஸ் ஏறுவதற்கு முன்பு அவர்கள் பூம்புகார் சென்று கப்பலில் ஏறி காயல்பட்டினம் சென்று அங்கு பஸ் பிடித்தார்கள் என்று எழுதியிருக்கவேண்டியிருக்கும்.//

   ஹாஹா :)

   @நெல்லைத்தமிழன் கீழே பாருங்க என் மைண்ட் வாய்ஸ் அப்டியே பூனை வெளிப்படுத்திட்டாங்க :)

   கப்பலா இருந்தா நான் நாய் பூனை கோழி எல்லாத்தையும் கப்பலில் ஏற்றி அந்தமான் நிக்கோபார் இல்லைனா மால்டிவ்ஸ் லக்ஷதீப் னு மாத்தியிருப்பேன் :)

   ஹையோ இங்கே வந்ததும் கற்பனை விண் வரைக்கும் தாவுதே :)

   நீக்கு
  5. //ஆனா நான் தான் கண்டுபிடிச்சுக் குதிக்கிறேனே வானத்துக்கும் பூமிக்கும்...
   //இந்தக் கதை 'சீதை ராமனை மன்னித்தாள்'க்கு ரொம்பப் பொருத்தமாயிருந்திருக்கும்./// ஹா ஹா அப்போ இங்கின இது பொருத்தமில்லை என்பதை கண்ணாடி போடாமலேயே கண்டு பிடிச்சுட்டார்ர்ர்ர்ர்:)..//
   @miyaav

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) பிக் பாஸ் effect :) நெல்லைத்தமிழன் என்னை பாராட்டினார்னு தானே :)

   நீக்கு
 8. அருமையான கதை ஏஞ்சலின்.

  பஸ், ரயில் , விமானம் எல்லாவற்றையும் இணைத்தவிதம் அருமை.

  //எங்கள் பிளாக் வெளியீடு //சீதை இராமனை மன்னித்தாள் // எனும் புத்தகம் //

  மைதிலியின் மனமாற்றத்திற்கு சீதை இராமனை மன்னித்தாள் எனும் புத்தகம் ! அருமை. கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமான புத்தகம் மிக அருமை.


  சீதை இராமனை மன்னித்தாள் புத்தகமாய் வர இப்போதே வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன்.

  //அவ்வழியே சென்ற மூன்று எருமை மாடுகள் சோளக்கதிரை உண்ணும் ஆர்வத்தில் காய்ச்சி வைத்த சோம பானத்தையும் ருசிக்க, அங்கே ஒரே களேபரம்.//

  நல்ல களேபரம்.

  சிவராமன் ஊர் சேலம் பக்கம் என்பதால் மைதிலியின் அப்பாவீட்டுக்கு மீனம்பாக்கத்திற்கு வந்து விமானத்தைப் பார்ப்பதாய் அருமையான கற்பனைவளம்.
  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ஏஞ்சலின்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அக்கா :)மிக்க நன்றிக்கா
   கிராமத்தில் இப்படி பல களேபரங்கள் நடக்கும் :) அங்கெல்லாம் கள்ளு காய்ச்சி மூடி வச்சிடுவாங்க இந்த மாடுங்க தண்ணி தாகத்தில் சோளத்தோடு குடிச்சிட்டு அங்கே ஆட்டம் போட்டிருக்காங்க ..

   இந்த கதைக்கு நானே படம் வரைய சில மாதிரி படங்களையெல்லாம் எடுத்து வைத்தேன் ..டைம் கிடைக்கலை
   மிக்க நன்றிக்கா ..இன்னும் நிறைய எழுத முயல்கிறேன்

   நீக்கு
  2. ஐயோ ஏஞ்சல் மாடு இந்தக் கள்ளைக் குடிச்சுட்டு பாவம் அல்லாடும்....அதுங்க ஆட்டம் அடக்கவே முடியாது...கிட்டத்தட்ட ஜல்லிக்கட்டு மாதிரி....வெட் நால ரொம்பவே ரசித்துப் படித்தேன்...

   கீதா

   நீக்கு
 9. ஆவ்வ்வ்வ்வ்வ் மீயும் களத்தில குதிக்கிறேன்ன்ன்.. 2 வது பாரதம் ஆரம்பம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)).. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீ.. இந்தக் கதையை எழுதியது அஞ்சுவா? ஆஆஆஆ? நான் நெம்பவே மாய்ட்டேன்ன்ன்ன்:) எனக்கு ஃபுரூவ் காட்டோணும்... அஞ்சுவால இப்பூடியும் சிந்திக்க முடியுமா?:).. யூப்பர்... முதல் தடவை படிக்கும்போது கொஞ்சம் குழப்பமாகிட்டேன்ன்.. 2ம் தடவை படிக்கும்போதுதான் தெளிவாகிச்சுது.. கற்பனை அருமை.. நல்லமுடிவும் அஞ்சு வாழ்த்துக்கள்...தேம்ஸ் கரையில் இன்னொரு கதாசிரியர் உருவாகிறார்ர்.. இன்னொரு செயார் போடுங்கோ... ஆங்ங்ங் இருக்கட்டும் இருக்கட்டும்.. ஒரு 4 அடி தள்ளிப் போட்டாப்போதும்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தாங்க ஒரு கப் வல்லாரை மோர் :) ரிலாக்ஸ் பண்ணிட்டு குடிங்க :) நானேதான் எழுதினேன் :)
   அந்த சேரை நாலடி தள்ளி இன்னும் உயரமான இடத்தில போட சொல்லுங்க :)))))) அப்பத்தான் உங்களை உதைச்சி தேம்ஸ்ல தள்ளிடலாம் ஈஸியா :)

   நீக்கு
  2. வேண்டாம் விட்டுருவம் ஏஞ்சல் பூஸாரை...ஏற்கனவே தேம்ஸ்ல குதிச்சு குதிச்சு ரொம்பவே குள்ளமாகிட்டாங்க!!! குள்ளமானா என்னாகும் ஏஞ்சல் சொல்லுங்க....அவங்க ஒரு பூனை படம் போட்டு நீ குண்டு எல்லாம் இல்லை....கொழு கொழுனு....ஹாஹாஹா அப்படி ...!!!

   கீதா

   நீக்கு
  3. ஸ்ஸ்ஸ் அதாரது குழு..குழு(ஹையோ இது வேற குளு).. என இருக்கும் என் குழு:) மீது கண்போடுறது கர்ர்ர்ர்ர்:)..

   நீக்கு
 10. இருங்க எல்லாருக்கும் ரிவர்ஸ் ஆர்டரில் பதில் அளிக்க வந்திட்டிருக்கேன் :)

  பதிலளிநீக்கு
 11. இங்கேயுமா..
  ரசிக்கும்படியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அப்பாதுரை .மிக்க நன்றி ரசித்தமைக்கு

   இங்கேயுமா //அது இந்த பூனை மியாவைதானே சொன்னீங்க :)
   அதிரா மெதுவா நடங்க இங்கே நம்ம ஏரியா பிளாக் ஆடுதாம் :)

   நீக்கு
  2. சிவனே எண்டு ஒரு ஓரமா ஒதுங்கி நிண்டு கதை படிக்கும் என்னைப்போய் வம்ம்ம்ம்ம்ம்ம்புக்கு இழுத்து:)) கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நான் தான் இன்று முழுக்க வாயே திறக்கலியே:)

   நீக்கு
 12. அதிரா... கதையை நீங்க ஒழுங்காப் படிக்கலைனு நினைக்கிறேன்.

  "ரங்கன் அங்கு இறங்கி பெட்டிக்கடை ஒன்றில் புத்தகம்" - மைதிலியும் ரங்கனும் வீட்டைவிட்டுப் போனாங்களா? பாதில ரெண்டுபேரும் திரும்பிவந்தாங்களா? அப்புறம் ரங்கன் என்ன ஆனான்? ரங்கனை வீட்டுக்குக் காவல் வச்சுட்டு, அவங்க ரெண்டுபேரும் சென்னை போனாங்களா? இல்லை, பஸ்லேர்ந்து திரும்பி வந்தபின், 'ரங்கன்' கதைக்குத் தேவையில்லைனு, ஆசிரியர் அவனை விரட்டிட்டாரா?

  கொஞ்சம் ஆராய்ந்து சொல்லுங்க. (ரொம்ப ஓட்டினேன்னா, அப்புறம் நீங்க என்னை ஓட்டும்போது, ஆதரவுக் குரல் கிடைக்காது. அதுனாலதான் இதை மட்டும் எழுதினேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @நெல்லைத்தமிழன் :)))))) ஹாஹா நானே நேற்றே நினைச்சேன் ரெங்கனை அம்போனு விடறோமேன்னு அப்புறம் ஒவ்வொண்ணையும் விளக்கப்போனா பாராபாராவா எழுத வேண்டிவரும்னு அங்கேயே விட்டுட்டேன் :)

   நீக்கு
  2. கதை எழுதினது ஏஞ்சலின் தானே! அதிராவுக்கு எப்படித் தெரியும் இந்த விஷயமெல்லாம். ஏஞ்சலின் தான் சொல்லணும். எனக்கென்னமோ அவனை அங்கேயே விட்டுட்டு வந்துட்டாங்களோனு தோணுது! :) பாவம் இல்லையோ!

   நீக்கு
  3. ஆமாம்க்கா :) ரெண்டு பேரும் னு சொல்லும் போது ரெங்கன் வரலை கணவன் மனைவி மட்டுமே வராங்க :) ..மூவருமே என்றால் அதாவது மூணு பேருமே போகலாம்னு சொன்னா லாஜிக் வருமான்னு ரங்கன்யோ சென்னைலருந்து அக்காவை பார்ர்க்க வரார் அதனால் ரங்கனை அங்கேயே அப்ராப்ட்டா விட்டுட்டேன் :)

   நீக்கு
  4. ஹாஹா :) அவங்க இளஞ்சோடிகள் இல்லையா :) பிரிந்தவர் சந்தோஷமாயிருக்கட்டுமேன்னு அதான் ரங்கன் போகலை ..

   நானே பதில் சொல்லிட்டேன் அதனால் நெல்லைத்தமிழன் அந்த அதிரா பூனையை இந்த பக்கம் வர விடாதீங்க :) விளக்கெண்ணெய் பாட்டிலோட திரியறாங்கன்னு ஸ்நாப் சாட்டில் படம் காட்டுது

   நீக்கு
  5. ஹாஹாஆ :) அது கீதாக்கா ..நெல்லைத்தமிழன் பாயிண்ட்எடுத்து கொடுக்கிறாராம் அதிராக்கு :) நல்லவேளை எதோ வேலையா பிஸின்னு நினைக்கிறேன் பூனை காணோம் :)

   நீக்கு
  6. அப்புறம் @நெல்லைத்தமிழன் @கீதாக்கா @அதிரா மியாவ் இன்னோர் உண்மையும் சொல்லியாகணும் ..நான் அவசரவசரமா கதையை கண்டிஷனல் கருவுக்கு எழுதி அனுப்பிட்டேன் தலைப்பு கொடுக்க மறந்துட்டேன் :) ஸ்ரீராம் தான் அப்புறம் ஐடியாஸ் கொடுத்தார் அதில் ஒன்றை தேர்வு செஞ்சேன் ..

   நீக்கு
  7. //நெல்லைத் தமிழன்September 12, 2017 at 5:57 PM
   அதிரா... கதையை நீங்க ஒழுங்காப் படிக்கலைனு நினைக்கிறேன்.//
   கொஞ்சம் ஆராய்ந்து சொல்லுங்க. ///

   சே.சே..சே.. நான் கண்ணாடி போடாமல் படிச்சமையால் இந்த ரங்கன்:) என் கண்ணில படல்ல:) பட்டிருந்தால் அவ்ளோதேன்ன்.. அஞ்சு இப்போ தேம்ஸ்க்கடியில்:)).. சத்து நில்லுங்கோ வாறேன்ன்ன்:)..

   அதானே ரங்கன் என்ன ஆனார்ர்.. பாதியிலயே இப்பூடிக் கை கழுவி விடலாமோ? கதாசிரியர் எங்கே... வெளில வாங்கோ.. எனக்கு இப்போ ரங்கன் என்ன ஆனார் என்பது தெரியோணும் இல்லை எனில்.. மைதிலி வீட்டு வாசலில் நாங்க உண்ணா விரதம் இருப்போம்ம்ம்ம்ம்ம்ம்.. இது கீதாக்காவின்.. முறுக்குப் பிளிஞ்ச அந்த முறுக்குரல் மேல்ல் சத்தியம்ம்ம்:)..

   ///
   (ரொம்ப ஓட்டினேன்னா, அப்புறம் நீங்க என்னை ஓட்டும்போது, ஆதரவுக் குரல் கிடைக்காது. அதுனாலதான் இதை மட்டும் எழுதினேன்)///

   ஹா ஹா ஹா ரொம்ப விபரமாத்தான் மூவ் பண்றீங்க இப்போ:).. எனக்கென்னமோ.. உங்களுக்கு இனி ஆதரவுக்குக்குரல் கிடைக்காதென்றே நம்புறேன்ன்..ஹா ஹா ஹா:).., மூடி மறைச்சு வச்ச ரங்கன் மட்டரை ஓபின் பண்ணி விட்டிட்டீங்களே:))...இப்போ ரங்கன் என்ன ஆனார் என கதாசிரியருக்கே தெரியல்ல... பொலிஸ் க்கு ஃபோன் போட்டுட்டு வீட்டு ஹோலில் குறுக்கும் நெடுக்குமா நடந்துகொண்டிருக்கிறா:)).. ஹையோ ஹையோ:)

   நீக்கு
  8. //பொலிஸ் க்கு ஃபோன் போட்டுட்டு வீட்டு ஹோலில் குறுக்கும் நெடுக்குமா நடந்துகொண்டிருக்கிறா:)).. ஹையோ ஹையோ:)//

   கர்ர்ர்ர் :) ஹஆஹாஆ :) இங்கே என்ன செய்றீங்க ஸ்ரீராம் குடுத்த ஹோம் வொர்க்கை முடிக்காம இந்தப்பக்கம் எட்டிப்பார்க்க கூடாது மியாவ் :)

   நீக்கு
 13. ஆஹா வாகனங்கள் அனைத்தும் வந்து விட்டதே கப்பலைத்தவிர.......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா :) வாங்க வாங்க ..கௌதமன் சார் அடுத்த ககக ஸ்டோர்ல கப்பலையும் சேர்த்திடுவார் :) நாமும் கப்பலுக்கு ஒரு இடத்தை குடுத்திருவோம்

   நீக்கு
 14. அருமையான கதை புனைவு அஞ்சு. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க !காமாட்சியம்மா நலமா இருக்கீங்களா ..மிக்க நன்றிம்மா வருகைக்கும் பாராட்டுக்கும்

   நீக்கு
 15. ஹப்பா அதுக்குள்ள இத்தனை கமென்டுகள் வந்துருச்சா....நான் ரொம்ப லேட்டு நெட்டு இப்பத்தான் கொஞ்ச நேரம் முன்னாடி வந்து டேஷ் போர்ட் பாத்தப்ப கதை...

  ஏஞ்சல் செமையா எழுதியிருக்கீங்க அதுவும் கதாநாயகன் நம்ம ஆளாச்சே!!! வெட்!!! ரொம்ப ரசித்தேன்....சூப்பரோ சூப்பர் சீ ரா ம வை இங்கு க க க போ வுக்கு கொ அண்ணாவின் வரிகளுடன் பொருத்திக் கொண்டு சென்ற விதம் அருமை...

  ஒரே ஒரு கேள்வி அந்த ரங்கன் தம்பி என்ன ஆனார்?!! மைதிலி டபார்னு எ பி யோட கதைய படிச்சு மாறின உடனே தன் ஹஸ்பண்டை பார்க்க போற வேகத்துல ரங்கனை அம்போனு விட்டுட்டாளோ??!!! பாவம் பா ரங்கன்!!! சரி கும்மி அடிக்க போறேன்....ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /ஒரே ஒரு கேள்வி அந்த ரங்கன் தம்பி என்ன ஆனார்?!! மைதிலி டபார்னு எ பி யோட கதைய படிச்சு மாறின உடனே தன் ஹஸ்பண்டை பார்க்க போற வேகத்துல ரங்கனை அம்போனு விட்டுட்டாளோ??!!! பாவம் பா ரங்கன்!!! //

   haahaa :) வாங்க கீதா :) இளஞ்சோடிகள் போகட்டும்னு ரங்கன் வீட்லயே இருந்திருப்பார் இல்லைனா சிவராமனும் mythiliyum புறப்படுமுன்னே தனியே ஊருக்கு போய் சேர்ந்திருப்பார் :) அது என்னன்னா கீதா ரொம்ப நாள் கழிச்சி பிளாக் போஸ்ட் எழுதியதில் ரங்கன் பற்றி விரிவா விவரிக்கல :)

   நீக்கு
  2. ஹாஹாஹா ம்ம்ம்ம் ரங்கன் என்ன சின்ன புள்ளையா என்ன? அவங்க பாதில இறங்கினதும் ரங்கனுக்குத்தான் புரிஞ்சுருதே அக்கா மாறிட்டாங்கனு...ஸோ சரி அக்கா உன்னை கொண்டுவிட்டுட்டு நான் ஊரைப் பார்த்துப் போயிடறேனு போயிருப்பானு விட்டுருவோம்...ஹிஹஹிஹி...

   நெட் போயிட்டு போயிட்டு வருது...ஸோ உடனே உடனே கும்மி அடிக்க முடியலை....கமென்ட் போட்டு என்டர் அடிக்க முன்னே னெட் போயிரும்.....

   கீதா

   நீக்கு
  3. ரொம்ப நாள் கழிச்சி பிளாக் போஸ்ட் எழுதியதில் ரங்கன் பற்றி விரிவா விவரிக்கல :)// போனா போகுது விடுங்க நாங்க எங்க கற்பனையில எடுத்துக்கறோம்...அதான் ரங்கன் என்ன சின்னப் புள்ளையா என்னனு சொல்லியாச்சே ஹாஹாஹா..

   கீதா

   நீக்கு
  4. தலைப்பு ரொம்ப நல்லாருக்கு ஏஞ்சல்!

   அப்புறம் கப்பல் சொல்லலைனு....கொ அண்ணன் கண்டிப்பா அப்ப அடுத்த கரு கப்பல் பேஸ்டாதான் இருக்கப் போவுது...ஹாஹாஹா

   கீதா

   நீக்கு
  5. கீதா அன்ட் துளசி அண்ணா :) ஒரு சம்பவம் நினைவுக்கு வருது ..யாரோஆஞ்சநேயர் படம் வரைய சொன்னப்போ வானத்தை வரைஞ்சி அதில் கயிறுபோல் வால் மட்டும் வரைஞ்சங்களாம் அப்போ எங்கே ஆஞ்சனேயர்னு கேட்டதுக்கு அவர் வானத்தில் மேகங்களூடே பறக்கிறார் எனக்கு வால் மட்டும்தான் கண்ணுக்கு தெரிஞ்சதுன்னு சொன்னார்களாம் :) அது மாதிரி ரெங்கனுக்கு என்னாச்சோன்னு எல்லாரும் அவரவர் கற்பனைக்கு விட்டுட்டேன் :)

   மிக்க நன்றி கீதா இது நம்ம ஏரியா அதாவது நாலு கால் டாப்பிக் நமக்கு ஹல்வா:) சாப்பிடற மாதிரியாச்சே :)

   நீக்கு
  6. ஹாஹா ஹா:) ஆமா கீதா வெட்ஸ் கிட்ட இதுமாதிரி நிறைய ரசனையான நெகிழ்வான சம்பவங்கள் இருக்கும் .

   நீக்கு
  7. //தலைப்பு ரொம்ப நல்லாருக்கு ஏஞ்சல்!//

   @ geetha
   தலைப்பை நானும் ஸ்ரீராமும் கூட்டணியா செஞ்சோம்
   மாறியது நெஞ்சம்னு நான் சொல்ல ஸ்ரீராம் மாற்றியது யாரோன்னு இன்னும் எடுத்து கொடுத்தார் :)
   ஆகவே ஸ்ரீராமுக்கே பாராட்டுக்கள் சேரனும்

   நீக்கு
  8. ///கொ //// அண்ணன்//

   ஹையோ கீதா.. இது ஆரூஊஊஉ எனக்குத் தெரியாமல் புதிசா ஒருவர்:) ஹா ஹா ஹா:)

   நீக்கு
 16. //AngelinSeptember 12, 2017 at 8:09 PM
  அப்புறம் @நெல்லைத்தமிழன் @கீதாக்கா @அதிரா மியாவ் இன்னோர் உண்மையும் சொல்லியாகணும் ..நான் அவசரவசரமா கதையை கண்டிஷனல் கருவுக்கு எழுதி அனுப்பிட்டேன் தலைப்பு கொடுக்க மறந்துட்டேன் :) ஸ்ரீராம் தான் அப்புறம் ஐடியாஸ் கொடுத்தார் அதில் ஒன்றை தேர்வு செஞ்சேன் ../// தலைப்பை நானும் ஸ்ரீராமும் கூட்டணியா செஞ்சோம் ///

  ஆவ்வ்வ்வ்வ் கூட்டணி வேறு அமைச்சிட்டீங்களோ?:)) இது நல்லதுக்கில்லையே:)).. இருங்கோ வானத்தைப் பார்த்து யோசிச்சு இதுக்கு ஏதும் வெடி வைக்கிறேன்ன்ன்.. கூட்டணியாம் கூட்டணி கர்ர்ர்ர்ர்:))ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
 17. சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் ஏஞ்சலின். ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் போல, ஒரு கருவைக் கொண்டு கே.வா.போ.க., மற்றும் க.க.க. எழுதி விட்டீர்களே..! சபாஷ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானுமதி அக்கா :) மிக்க நன்றி வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் ..

   ஆமா :) அங்கே வரவேண்டிய மைதிலி சிவராமனை இங்கே பஸ் ட்ரெயின் ஏறி பிளேனையும் பார்க்க வைச்சிட்டேன் :)

   நீக்கு
 18. நல்ல வேளை பாதி வழியில அந்த கதை புத்தகம் கிடைச்சுதே.. இல்லேன்னா சிவராமனோட வாழ்க்கை என்ன கதி ஆகியிருக்கும்? அருமை.. நல்ல கதை. வாழ்த்துகள்.

  என்னோட வலைப்பூவில் ,
  போட்டோ பிக்சல் அளவை 400 மடங்கு அதிகரிக்க உதவும் அருமையான மென்பொருள்

  பதிலளிநீக்கு
 19. @ தங்கம் பழனி //வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிங்க :)

  பதிலளிநீக்கு