செவ்வாய், 10 ஜூலை, 2018

சு டோ கு

இது ஒரு புதிய கரு.

நீங்க எழுத வேண்டிய கதையின் கரு:
சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண்.(ஹி ஹி ! இது சுந்தரியின் அம்மா)

அதே போல, குணபதி அவனுடைய அம்மா அப்பாவுக்கு ஒரே பையன். மீதி காரெக்டர்கள் (தாத்தா, பாட்டி etc) அவர்கள் பெயர்கள் எல்லாம் உங்கள் கற்பனைக்கு.


              (குணபதியின் அம்மா, அப்பா)

கதைக் கரு என்ன என்றால், சுந்தரிக்கும், குணபதிக்கும் திருமண முயற்சி. பெண் பார்த்தல், சொஜ்ஜி, பஜ்ஜி சமாச்சாரம் எல்லாம் இல்லாமல், இரு வீட்டாரும் வேறு ஒரு முடிவு எடுக்கிறார்கள்.

ஒரு வாரம், சுந்தரி, குணபதியின் வீட்டிலும், அதே வாரத்தில், ( சு To கு வாரத்தில்) குணபதி, சுந்தரியின் வீட்டிலும் தங்கி அந்தந்த  வீட்டில் ஒரு அங்கத்தினராக இருந்து, தங்கள் வேலைகளைப் பார்ப்பது.

இருவீட்டாரின் பெரும்பான்மை அபிப்பிராயம்  ஓ கே என்றால், (அதாவது, தன் மகன் / மகளுக்கு ஏற்ற ஜோடி இவள் / இவன்தான் என்ற கருத்து ஒற்றுமை) ஏற்பட்டால் திருமணம் நடக்கும். இல்லையேல் வேண்டாம் என்று முடிவு எடுக்கப்படும்.சுந்தரிக்கும், குணபதிக்கும் கல்யாணமா, இல்லையா? கதையும் முடிவும் உங்கள் கைகளில்!


சிறுகதையோ, குறுந்தொடரோ என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள்.

Start music ! 

22 கருத்துகள்:

 1. புதுமையான முயற்சி. பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 2. ////ஹி ஹி ! இது சுந்தரியின் அம்மா)////

  ஹா ஹா ஹா ஐ ரோட்டலி புரூட்டலி அக்றி வித் ஊஊஊஊ கெள அண்ணன் ஹா ஹா ஹா:)..

  பதிலளிநீக்கு
 3. சூர்யா ஜோதிகா படம் ஒன்றில் இப்படி வருமே - of course காதலுக்காக இப்படி இருப்பார்கள். கதை எழுதப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. ரொம்ப சினிமாட்டிக்காக இருக்கிறதே

  பதிலளிநீக்கு
 5. ஆஹா! இவ்வளவு அழகான மாமியாரா? அதற்காகவே சுந்தரி சரி என்று சொல்லி விடுவாள்.

  பதிலளிநீக்கு
 6. சுந்தரி, குணபதி என்ன பெயர்கள் இவையெல்லாம்? கல்யாண வயதில் இருக்கும் பெண், பிள்ளைகளுக்கு இந்த மாதிரி பெயர்கள் இப்போது இருக்கிறதா? நாட்டாமை பெயரை மாத்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்!..
   நாட்டாமே!... பேரை மாத்துங்க!...

   நீக்கு
  2. சு டோ கு சரியா வரணும் இல்லியா ! அதனால்தான் சுந்தரி & குணபதி. நீங்க வேணும்னா சுனந்தா, குருதத் என்று பெயர் வெச்சுக்குங்க!

   நீக்கு
 7. //ஒரு வாரம், சுந்தரி, குணபதியின் வீட்டிலும், அதே வாரத்தில், ( சு To கு வாரத்தில்) குணபதி, சுந்தரியின் வீட்டிலும் தங்கி அந்தந்த வீட்டில் ஒரு அங்கத்தினராக இருந்து, தங்கள் வேலைகளைப் பார்ப்பது.//

  கதை கரு சினிமாவில் வருவது போல் இருக்கிறது.
  உண்மையில் இப்படி நடக்குமா?

  இனி வரும் காலத்தில் நடந்தாலும் நடக்கும்.
  கதை எழுத போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பாவம் கல்யாணம் ஆகாத அனுஷ்காவை இப்படி அம்மாவாக்கி விட்டீர்கள்.
  ஸ்ரீராம் கோபித்து கொள்ள போகிறார்.

  பதிலளிநீக்கு
 8. அட, லிவிங்க் டுகெதெர் வேறு வழியிலா.
  ஹாஹா. எழுதிட்டாப் போச்சு.
  மாமியார் இவ்வளவு அழகா.

  பதிலளிநீக்கு
 9. சந்தோஷ் சுப்ரமணியன் மாதிரி இருக்கே!...

  பதிலளிநீக்கு
 10. த்ரிஷாவுக்காக
  ஜெயம் ரவி - எருமைச் சாணி கூட அள்ளுவாரே! - அந்த மாதிரியா!?..

  அடக் கஷ்டமே!..

  பதிலளிநீக்கு
 11. “அண்ணே அண்ணே கௌ அண்ணே இந்தக் கரு ஏற்கனவே சினிமால வந்தாச்சுண்ணே”
  சரி சரி பரவால்ல கௌ அண்ணா……சினிமால வந்தது எல்லாம் காதலிச்சு ரெண்டு பேரன்ட்ஸையும் சம்மதிக்க வைக்க இப்படி…ஆனா உங்க கரு பேரன்ட்ஸ் பார்த்து வைக்கிற ஒன்னு……..ஸோ அதுல கொஞ்சம் வித்தியாசம் இருக்குதான்……கரு பார்த்ததும் உடனே மனதில் தோன்றியதை எழுதிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் அப்படியே நிக்குது கதை. தொடர நினைத்தேன் ஆனால் இப்போது ஃப்ளோ வரும் அளவு மனம் இல்லை. ஸோ இங்க எழுதியிருக்கற வரை கொடுத்துருக்கேன் யாராவது இதைத் தொடரலாம்னா தொடரலாம் இல்லை…இதை அடுத்து யாரேனும் கொஞ்சம் எழுதி அதுக்கு அப்புறம் அதைத் தொடர இன்னொருவர் வரலாம் அப்படியும் எழுதலாமே என்று நினைத்து இங்கு தருகிறேன்…….
  மீதி நம்ம தோழமைகளின் மனத்திரையில் !!! ஹிஹிஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 12. “அண்ணே அண்ணே கௌ அண்ணே இந்தக் கரு ஏற்கனவே சினிமால வந்தாச்சுண்ணே”

  சரி சரி பரவால்ல கௌ அண்ணா……சினிமால வந்தது எல்லாம் காதலிச்சு ரெண்டு பேரன்ட்ஸையும் சம்மதிக்க வைக்க இப்படி…ஆனா உங்க கரு பேரன்ட்ஸ் பார்த்து வைக்கிற ஒன்னு……..ஸோ அதுல கொஞ்சம் வித்தியாசம் இருக்குதான்……கரு பார்த்ததும் உடனே மனதில் தோன்றியதை எழுதிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் அப்படியே நிக்குது கதை. தொடர நினைத்தேன் ஆனால் இப்போது ஃப்ளோ வரும் அளவு மனம் இல்லை. ஸோ இங்க எழுதியிருக்கற வரை கொடுத்துருக்கேன் யாராவது இதைத் தொடரலாம்னா தொடரலாம் இல்லை…இதை அடுத்து யாரேனும் கொஞ்சம் எழுதி அதுக்கு அப்புறம் அதைத் தொடர இன்னொருவர் வரலாம் அப்படியும் எழுதலாமே என்று நினைத்து இங்கு தருகிறேன்…….

  மீதி நம்ம தோழமைகளின் மனத்திரையில் !!! ஹிஹிஹிஹிஹிஹி
  கீதா


  பதிலளிநீக்கு
 13. “ஹலோ ஆம் ஐ ஸ்பீக்கிங்க் டு குண்பத்தி?”

  “……………………………………அழகான பெயரை ஏதோ ஊதுபத்தி ப்ரான்ட் மாதிரி சொல்றது யாருங்க நீங்க?”

  “உங்க பேரு அப்படித்தான் இருக்கு. வெல்….நான் சன்ட்ரீ.”

  “சன்ட்ரீ?” ஒரு நிமிடம் யோசித்த குணபதிக்குப் புரிந்துவிட்டது. “ஓ!! சுந்தரி?”

  “ஹலோ!. சன் ட்ரீ….. S u n இதை சன் னு தானே சொல்றோம்…பெயரை மட்டும் ஏன் சுன் ங்கணும்…அதான்”

  “ஓ!....நீங்க ரொம்ப புத்திசாலிங்க. எதுக்குக் கூப்பிட்டீங்க?”

  “பொண்ணு பாத்தமா, கேசரிய சப்புக் கொட்டிச் சாப்பிட்டமா, சூடான பஜ்ஜிய கடிச்சுட்டு ஃபூ ஃபூ நு ஊதி புகை வெளிய வர அசடு வழிஞ்சமா, யெஸ் ஆர் நோ சொல்லிட்டுப் போவோமானு இல்லாம உங்க அப்பா அதென்ன நான் உங்க வீட்டுல ஒரு வாரமாம், நீங்க எங்க வீட்டுல ஒரு வாரம் தங்கணுமாம்……அப்புறம் ரெண்டு ஜோடி பெரிசுங்களும் ஓகே சொல்லணுமாம். நானும் நீங்களும் டிசைட் பண்ண வேண்டியதுல எதுக்குப் பெரிசுங்க இடைல வந்து குட்டைய குழப்பணும்? நீங்க உங்க அப்பாகிட்ட இதெல்லாம் கேக்க மாட்டிங்களா?”

  ஸ்டார்ட்டிங்கே சரியில்லையே. இந்த விரட்டு விரட்டுது…….“ஹலோ சுன்ட்ரீ! ஓ ஸாரி! சன்ட்ரீ இது கிமு இல்லை கிபி…..ஹைடெக் 2018…..எங்கப்பா அம்மா ரெண்டு பேருமே ரொம்ப ஃபார்வேர்ட் திங்கிங்க். கல்யாணத்துக்கு அப்புறம் சப்போஸ் உங்களுக்கு எங்க வீடு பிடிக்காம ஒரே மாசத்துல கோர்ட்டுக்குப் போனா ரெண்டு குடும்பத்துக்கும் கஷ்ட நஷ்டம்தானே அதான்…”

  “ரெண்டு பேருக்குமா? ஓ! அப்ப நீங்களும் ஈக்வல் ஷேர் கல்யாணச் செலவுல. அதானே மீனிங்க்? ஓகே அப்ப அந்த பாயின்ட்ல நீங்க பாஸ்! சரி அதெப்படி ஒரு வாரத்துல புரிஞ்சுக்க முடியும்? நீங்க அந்த ஒரு வாரத்துல நடிச்சு எங்கள ஏமாத்தலாம் இல்லியா?”

  “அது உங்களுக்கும் பொருந்தும் இல்லையா? ஐ ஆம் பாஸிட்டிவ்”

  “……………………………………………………. ஸோ நான் சம்மதம் இல்லைனு சொன்னா?”

  “அது உங்க இஷ்டம். கண்டிஷன் போட்டவங்க கிட்ட சொல்ல வேண்டியது.”

  பதிலளிநீக்கு
 14. “சினிமா மாதிரி நாம லவ்வர்ஸ் இல்ல ரெண்டு பேரன்ட்ஸையும் ஓகே சொல்ல வைக்கறதுக்கு மாறி மாறி போறதுக்கு….. அதான்…….அப்ப உங்களுக்கு ஓகேயா?”

  “யெஸ்! நான் உங்களையும் சரி உங்க பேரன்ட்ஸையும் சரி எந்த உறவு ஃப்ரேமுக்குள்ளயும் போடலை. ஐ ஆம் ஓபன் டு எவ்ரிதிங்க். சப்போஸ் இந்தக் கல்யாணம் நடக்கலைனாலும் நீங்க உங்க பேரன்ட்ஸ் எங்களுக்கு ஃப்ரென்ட்ஸ் தான். ஓபன் மைண்டோட அப்ரோச் பண்ணிப் பாருங்க”

  “சரி உங்க பாயிண்டுக்கே வரேன்……..சப்போஸ் ஒரு வாரத்துக்கு அப்புறம் இந்தக் கல்யாணம் சரிப்படாதுனு தோணுதுனு வையுங்க. நீங்க இன்னொரு பொண்ணு பார்த்தா அந்த பொண்ணு உங்க வீட்டுக்கும் நீங்க அவங்க வீட்டுக்கும் இப்படித்தான் ஒரு வாரம் போய் இருக்கணும்னு உங்கப்பா சொல்லுவாரா? அப்படினா நான் எத்தனாவது?”

  குணபதிக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை. சமாளித்தான். “இ..ல்..லை……இதுதான் எனக்கும் ஃபர்ஸ்ட் டைம். அப்பா சொன்னது நாவல் ஐடியாவா, வித்தியாசமான அனுபவம்னு தோணிச்சு. ஸோ………… ஓகே சொல்லிட்டேன்.”

  “ஒரு வருஷம், ரெண்டு வருஷம்னு லவ் பண்ணிக் கல்யாணம் பண்றவங்களே கூட கல்யாணத்துக்கு அப்புறம் ஒத்து வராம பிரியறாங்க. ஸோ…..இந்த ஒரு வாரம் அப்படின்றது யோசிக்க வைக்குது. வாங்க பழகிப் பார்க்கலாம்னு சிவாஜி படத்துல வர டயலாக் மாதிரி இருக்குது. லிவிங்க் டு கெதர்னு ஏதோ எக்ஸ்பெரிமென்ட் எல்லாம் இப்ப பண்றாங்க. நல்ல காலம் உங்கப்பா அப்படி சொல்லலை! ம்ம்ம்ம் வெல் மீ டேக் த சாலஞ்ச்!”

  “ஹா ஹா ஹா ஹா….”

  பதிலளிநீக்கு
 15. “ஏன் சிரிக்கறீங்க?”

  “இல்ல ஏதோ சவால் மாதிரி……ஜெயிக்கணும் அப்படின்ற மாதிரி பேசறீங்களே அதான்…..லைஃப் இஸ் நாட் எ கேம் டு ப்ளே. குடும்பத்துல யாரு ஜெயிக்கறது, தோக்கறதுன்றது கிடையாது. வி ஹேவ் டு லிவ் இட்.”

  “ஐ அக்ரீ. ஆனா லைஃப் இஸ் ஃபுல் ஆஃப் சாலஞ்சஸ். டு யு அக்ரீ? அந்த சாலஞ்சஸ தைரியமா கடந்து வரதும் வெற்றிதானே? அந்த அர்த்தத்துல சொன்னதுதான் அது.”

  ‘இவ நல்ல விவரமான ஆளுதான் போல. எல்லாத்துக்கும் பதில் ரெடியா வைச்சுருக்கா’ ஓகே நாளைக்கு என் பேரன்ட்ஸ் உங்க வீட்டுக்கு வந்து உங்க பேரன்ட்ஸோட டிஸ்கஸ் பண்ணுவாங்க. எப்பலருந்து, எப்படினு. ஸோ நாளை சந்திக்கலாம். பை ஃபார் நௌ.”

  ****************************************************

  “கொஞ்சமாவது உங்களுக்கு அறிவு இருக்கா? யோசிக்க மாட்டீங்களா? சம்பந்திக்கிட்ட இதென்ன வழக்கத்தில இல்லாத புதுக்கதையா இருக்குனு கேக்க மாட்டீங்களா?” அடுக்களையில் கோபத்தில் பொரிந்து கொண்டே சமையலில் ஈடுபட்டிருந்தாள் சன்ட்ரீயின்…இல்லை இல்லை சுந்தரியின் அம்மா புவனேஸ்வரி.

  “இன்னும் ஒரு பேச்சுவார்த்தையே ஆரம்பிக்கலை… அதுக்குள்ள சம்பந்தீன்ற?” அருகில் டைனிங்க் டேபிளில் விரித்த அன்றைய செய்தித்தாளில் ஓடிய வரிகளில் மேயும் கண்களுடன், கையில் காபியை சிப்பிக் கொண்டே சுந்தரியின் அப்பா விச்சு எனும் விஸ்வநாதன்.

  “சரி சம்பந்தம் நடக்கலை...சம்பந்தினு சொல்றதுக்கு..ஓகே…சமபந்தினு சொல்லறேன்….விஷயத்துக்கு வரேன்…நாம பொண்ண பெத்தவங்க. என்னதான் இது ஃபேஷன் உலகமா இருந்தாலும் இப்படி நம்ம பொண்ணை அவங்க வீட்டுல ஒரு வாரம் தங்க வைக்கறது எல்லாம் ஒத்து வருமா? நம்ம உறவுக் கூட்டம் எல்லாம் எங்கடானு காத்திட்டிருக்கும். யாருக்கேனும் தெரிய வந்துச்சுனா, இந்தக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகலைனா, நாளைக்கு எப்படி வேற பையன் பார்க்க முடியும்? ஒரு அப்பாவா யோசிக்க மாட்டீங்களா….”

  “கடுகு வெடிக்குது! பாரு! அடுத்தாபுல சேம்பு வேற பொரிஞ்சு சிவப்பா ஆகுது பாரு”
  “இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.”

  “இப்ப என்னன்ற? கொஞ்சம் பொறுமையா இரேன். இன்னும் எதுவும் பேசி நடக்காத போது எதுக்கு ஓவரா என்னவோ நடக்கப் போகுதுனு கற்பனை பண்ணிக்கிட்டு இப்படி டென்ஷன் ஆகுற? கீப் யுவர் மைன்ட் ஓபன். அவங்க என்ன ப்ளான் சொல்ல வராங்கனு பார்ப்போம். நம்ம பொண்ணுக்கும் 28 வயசு ஆயாச்சு. ஞாபகம் இருக்கட்டும். ஃப்ரிட்ஜ்ல கூலா தண்ணி இருக்கு பாரு எடுத்துக் குடி”

  “ம்க்கும். இந்த மனுஷன் கிட்ட பேசி ஒரு ப்ரயோசனம் இல்லை”


  கீதா

  நான் முதலில் எழுதியதை கொஞ்சம் மாற்றி எடிட் பண்ணி கொஞ்சம் சேர்த்து என்று இவ்வளவுதான் செய்ய முடிந்தது. இதை முடிக்க கொஞ்ச நாள் எடுக்கும்...எனவே தொடர விரும்புபவர்கள் தொடரலாம்...

  என்ன சொல்றீங்க கௌ அண்ணா?

  கீதா

  பதிலளிநீக்கு
 16. கௌ அண்ணா, ஸ்ரீராம் கருத்து வந்துச்சா?!!

  கீதா

  பதிலளிநீக்கு