கடந்த நான்காம் தேதி.
அதிகாலை.
அலைபேசி .... குழலூதி மனமெங்கும் கொள்ளை கொண்டது.
யாரு என்று பார்த்தால் .....
கு. கு. கு. கு. என்று அறிவித்தது.
"யோவ் கு கு ! என்ன இந்த நேரத்துல ?"
" ரோஜா படம் வரைஞ்சிருக்கேன். வந்து வாங்கிக்க ! "
" மெயில் பண்ணு "
"முடியாது"
"ஏன்? "
"நெட் இல்ல. "
--------------------------
ஹூம் ..... பொடி நடையாக நடந்து குமரன் குன்றம் சென்று குரோம்பேட்டை குறும்பனை அலையில் அழைத்தேன்.
"அட்ரஸ் சொல்லு. "
" சொல்லமாட்டேன் "
" அப்போ நான் திரும்பிப் ...."
" போகாதே ! பக்கத்துல விவேகானந்தா வித்யாலயா இருக்குதா? "
" ஆமாம்."
" கேட்டுல தயிர் வடை தேசிகன் மாதிரி ஒரு செக்யூரிடி ஆள் இருக்காரா?"
" ஆமாம்."
" அவருகிட்ட போயி, அவர் காதுல ..... 'நம்ம ஏரியா கு கு ' ன்னு சொல்லு"
சொன்னேன்.
என்னை சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு ஒரு கவரை என் கையில் கொடுத்தார்.
கரகரத்த குரலில் " வீட்டுக்குப் போய்தான் பிரிச்சிப் பார்க்கணும் " என்றார்.
-----------------------------
வீட்டுக்கு வந்து, கவரைப் பிரித்தேன் .
அதில் இருந்த இரண்டு படங்களில் ஒன்று இது.
