வியாழன், 8 ஜூன், 2017

ரோஜா ரோஜா ...! குரோம்பேட்டை குறும்பன்

 
கடந்த நான்காம் தேதி.
அதிகாலை.
அலைபேசி .... குழலூதி மனமெங்கும் கொள்ளை கொண்டது.
யாரு என்று பார்த்தால் .....  
கு. கு. கு. கு. என்று அறிவித்தது.

"யோவ் கு கு ! என்ன இந்த நேரத்துல ?"

" ரோஜா படம் வரைஞ்சிருக்கேன். வந்து வாங்கிக்க ! "

" மெயில் பண்ணு "

"முடியாது"

"ஏன்? "

"நெட் இல்ல. "

--------------------------
ஹூம் .....  பொடி நடையாக நடந்து குமரன் குன்றம் சென்று குரோம்பேட்டை குறும்பனை அலையில் அழைத்தேன்.

"அட்ரஸ் சொல்லு. "

" சொல்லமாட்டேன் "

" அப்போ நான் திரும்பிப் ...."

" போகாதே ! பக்கத்துல விவேகானந்தா வித்யாலயா இருக்குதா? "

" ஆமாம்."

" கேட்டுல தயிர் வடை தேசிகன் மாதிரி ஒரு செக்யூரிடி ஆள் இருக்காரா?" 

" ஆமாம்."

" அவருகிட்ட போயி, அவர் காதுல ..... 'நம்ம ஏரியா கு கு ' ன்னு சொல்லு"

சொன்னேன்.
என்னை சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு ஒரு கவரை என் கையில் கொடுத்தார்.
கரகரத்த குரலில் " வீட்டுக்குப் போய்தான் பிரிச்சிப் பார்க்கணும் " என்றார்.
-----------------------------
வீட்டுக்கு வந்து, கவரைப் பிரித்தேன் .

அதில் இருந்த இரண்டு படங்களில் ஒன்று இது.





இன்னொன்று? 



                     
      



8 கருத்துகள்:

  1. நானும் ரோஜா படம் வரையணும்னுதான் அவுட்லைன் போட்டுவச்சேன் (நடிகை). கலர் பென்சில்ல வண்ணம் சேர்க்காட்டா ரோஜா மாதிரி தெரியாதுன்னு (ஏன்னா.. நாங்க வரையற குவாலிட்டி அப்படித்தான்) கலர் பென்சிலுக்காகக் காத்திருந்தேன். அதுக்குள்ள இன்னொருவருக்கும் அந்த மாதிரி தோணியிருக்கு.

    படம் நல்லாருக்கு. ஆனால் ரோஜாவை நினைவுபடுத்தலை.

    பதிலளிநீக்கு
  2. ரோஜா மாதிரி தெரியது ஓவியம்

    பதிலளிநீக்கு
  3. ஆவ்வ்வ் இது இப்போதானே என் கண்ணில தெரிஞ்சுது... ஹா ஹா ஹா ரோஜா வா?:) இதுவும் சூப்பராத்தான் இருக்கு. நன்கு வரைஞ்சிருக்கிறார் கூனாக் கூனா:).

    பதிலளிநீக்கு
  4. நெல்லைத்தமிழனுக்குப் புகையுதே.. ரோசாவை மிஸ் பண்ணிட்டமே என:).. ஹா ஹா .. இதுக்குத்தான் சொல்றது சிலதை உடனுக்குடன் பண்ணிடோணும் என.

    எனக்கும் இப்படிப் பலதடவை ஆகியிருக்கு.. நாம் நினைச்சிட்டே இருப்போம்.. இன்னொருத்தர் முந்திடுவார் ஹாஅ ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு