விவரம் அறியும் ஆர்வம் பகுதிக்கு ஒருவர் கேட்டிருக்கும் கேள்வி:
என்னுடைய செல்போனில் எடுக்கப்படும் வீடியோ, 3gp என்னும் எக்ஸ்டென்சன் பார்மட்டில் செல்போனில் சேமித்து வைக்கப் படுகிறது. இந்த 3gp கோப்புகளை - வேறு பார்மட்டில் மாற்றுவதற்கு என்ன வழி?
இந்த 3gp வகை கோப்புகளை, விண்டோஸ் மீடியா ப்ளேயர் அல்லது விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளின் மூலமாகத் திறக்கமுடியவில்லை. ரியல் பிளேயரால் மட்டுமே இந்த வகைக் கோப்புகளைத் திறக்க முடிகிறது. எடுத்த சில வீடியோக்களை - எப்படி எடிட் செய்வது என்று விவரமறிந்தவர்கள் கூறினால் உதவியாக இருக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், Video 0001.3gp என்று இருக்கும் ஒரு வீடியோ பைலை, எப்படி எடிட் செய்து, வேண்டிய பகுதிகளை மட்டும் இணைத்து, வேறொரு கோப்பாக (விண்டோஸ் மீடியா ப்ளேயரில் திறக்கும் வண்ணம்) செய்வது?