சனி, 26 ஆகஸ்ட், 2017

கண்டிஷனல் கரு 03.








இது மூன்றாவது க க க . 

கண்டிஷன்கள் ரொம்ப சிம்பிள். கதையை எப்படி ஆரம்பிக்கவேண்டும், இடையில் என்ன வரவேண்டும், முடிவு வரிகள் என்ன என்று சொல்லிவிட்டோம். தலைப்பு, கதாபாத்திரங்கள், நடை, உடை, பாவனா (!) எல்லாம் உங்கள் கற்பனைக் குதிரைக்குச் சொந்தம்! 



ஆரம்பம் : 


பஸ் அந்த நிறுத்தத்திலிருந்து, நடத்துனர் விசில் சத்தம் கேட்டதும் கிளம்பியது. அவர்கள் அதில் இருந்தார்கள்.





நடுவே: 

ரயில்  வந்து அந்த ஸ்டேஷனில் நின்றது. அவர்கள் காத்திருந்தார்கள்.




முடிவில் : 


விமானம் ஓடு பாதையில் வேகமாக ஓடி நின்றது. அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! 
      

25 கருத்துகள்:

  1. கௌதம் அண்ணா சும்மா இங்க நீங்க கொடுத்ததும் மனசுல ஓடிச்சுஇதோ...

    இது வரை விமான நிலையம் பார்த்த்தே இல்லை அவர்கள். விமானத்தையும் அருகில் பார்த்தததில்லை..விமான நிலையத்திலிருந்து வீடு வெகு தூரம். பேருந்து, ரயில் என்று மாறி வர வேண்டும். .அதைப் பார்க்கும் ஆசையில் அவர்கள் அவர்களது ஊரிலிருந்து புறப்படுகிறார்கள் பேருந்தில். கண்டக்டர் விசில் ஊதவும் பேருந்து புறப்படுகிறது. நகரத்திற்கு வந்ததும் விமான நிலையம் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருக்கும் செயின்ட்தாமஸ் மௌன்டில் ஏறுகிறார்கள். ரயிலும் வந்தது. இவர்கள் காத்திருக்கிறார்கள். அங்கிருந்து விமான நிலையம் அருகில் இருப்பது போன்று அப்படியெ எல்லாம் தெரிய பார்த்துவ் வியது போகிறார்கள். அப்போது பெரிய விமானம் ஒன்று இவர்களின் அருகே பறந்து சென்றதைப் பார்த்ததும் அதிசயித்துப் போனார்கள் எம்மாம் பெரிசு என்று... விமானம் ஓடு பாதையில் வேகமாக ஓடி நின்றது. அது மெதுவாகப் பறந்து வந்து ஓடி நின்றதைப் பார்த்த்தும், இது வரை விமானம் என்று கேள்விப்பட்டதை, நேரில் பார்க்க ஆசைப்பட்டதை நேரில் பார்த்ததும் காணாததைக் கண்டது போல் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!!!

    ஹிஹிஹிஹிஹிஹி...பார்த்ததும் டக்கென்று சும்மா தோன்றியது....விரிவாகக் கதை எழுத முயற்சி செய்கிறேன்.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌதம் அண்ணா அதான் சொல்லிட்டேனே இது சும்மாதான்னு...சரி கண்டிஷன்ஸ் னாட் ஃபுல்லி மெட்? ரயிலுக்குக் காத்திருத்தலா? உங்க வாக்கியம் ரயில் வந்து அந்த ஸ்டேஷனில் நின்றது. காத்திருந்தார்கள்னுதானே இருக்கு.. ஹிஹிஹி....அவர்கள் ரயில்லுக்காகவா காத்திருந்தார்கள்?? ஓ அவர்கள் ரயில் வருவது வரை காத்திருந்தார்களா?

      புரியலையே!!!

      கீதா

      நீக்கு
    2. ஆரம்ப வரிகள் நாங்க கொடுத்தது வரவில்லை என்று சொன்னேன்!

      நீக்கு
    3. கீதா ஸ்ராட் மூசிக்க்க்க்:) நனும் பின்னால ஹொங்குறேன்ன்ன்:) தொங்குறேன்ன்:)

      நீக்கு
  2. ஸ்ரீராம் ஜி எல்லாம் சரி கப்பல் வேண்டாமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கப்பலை விட்டுட்டேனே!

      நீக்கு
    2. கில்லர்ஜி போங்க ஜி நடைவண்டிலருந்து ஆரம்பிக்கணும்....என்ன கௌதம் அண்ணா சரிதானே!!

      கீதா

      நீக்கு
  3. இந்த வலைப்பக்கம் திறக்குது. எங்கள் ப்ளாக் திறக்கவே அடம் பிடிக்குதே! என்ன ஆச்சு?

    பதிலளிநீக்கு
  4. கீதாக்கா.... சமயங்களில் இப்படி ஆகும். வேறு ப்ரௌஸரில் முயற்சி செய்து பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கொரு டவுட்டூஊஊஊஊஊஊஉ எந்த சமயத்தில?:) இந்து சமயமோ இல்ல?..... ??? ஹா ஹா ஹா

      //சமயங்களில்///

      நீக்கு
  5. கில்லர்ஜியின் கப்பல் கேள்வி ஸ்வாரஸ்யம்.

    அனைவருடைய முயற்சியும் எப்படி இருக்கப் போகிறது எனப் பார்க்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. யார் முதலில் எழுத போகிறார்கள் ? கீதா பின்னூட்டத்தில் குட்டி கதை சொல்லி விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட் குவெஷன் கோமதி அக்கா:).. இம்முறை சத்தியமா நான் இலை:) ஐ மீன்..... முதலாவது இல்லை:)

      நீக்கு
  7. கதையை பின்னூட்டத்திலேயே எழுத வேண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தளத்தில் வெளியிடலாம் இந்தப் பதிவிற்கு அந்தக் கதையில் சுட்டி கொடுக்கலாம். வலைத்தளம் இல்லாதவர்கள் இந்த வலைப்பக்கத்தின் செயல் ஆசிரியர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம். விவரங்கள் நம்ம ஏரியா க.க.க.போ முதல் பதிவில் உள்ளன.

      நீக்கு
    2. இதை இப்போதான் கவனிக்கிறேன் கெள அண்ண்... பழையபடி முருங்கியில்:) ஏறி நின்று பதில் போட்டிருக்கிறீங்கள்போல இருக்கே?? மறந்து விட்டீங்களோ? இதுபற்றி நெல்லைத்தமிழன் ஒரு ஆலோசனை கூறி அதை நானும் படுபயங்கரமாக:) வழிமொழிந்து பின்னர் அனைவரும் கதை எழுதி இங்குதான் அனுப்ப வேண்டும் என முடிவெடுத்து.. கதைகள் இங்கு பகிரப்பட்டிருக்கிறதே....

      எதுக்கும் உங்கள் அந்த “எங்கள்புளொக்” ஒபிஸின்:) அபாயமணியை அவசரமாக அடித்து.. அவசர மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்து.. முடிவை மீண்டும் தெளிவாகச் சொல்லிட்டால்ல்ல் நல்லது என்பது என் அபிப்பிராயம்ம்ம்:).

      நீக்கு
  8. ஆவ்வ்வ்வ் கெள அண்ணன் தூசு தட்டிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஒரு நாள் இங்கின எட்டிப்பார்க்காமல் விட்டதுக்கே இவ்ளோ அசம்பாவிதம் நடந்திடுச்சாஆஆஆஆஆ?:)..

    பதிலளிநீக்கு
  9. இம்முறைக் முட்டையின் கரு ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே.. கதையின் கரு என் அடி மனதை டச்சு பண்ணவில்லை... இனிமேல் கன்னாபின்னா என பயங்கர கற்பனை பண்ணியே டச்சு பண்ண வச்சு எழுதி வர வேண்டும்... ஆனா எல்லோர் கதையிலும் இம்முறை சோகம் தழும்பாது என்றே நினைக்கிறேன்ன்ன்ன்.. அவர்கள் பிளேனில பறக்கினமெல்லோ...

    பறந்தாலும் விடமாட்டேன்ன்ன்ன்ன்ன்... அவர்களைப் பற்றிய ஊர் வம்புடன் விரைவில் வருகிறேன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
  10. ///நடை, உடை, பாவனா (!) எல்லாம் உங்கள் கற்பனைக் குதிரைக்குச் சொந்தம்! //

    என்னாதூஊஊஊஊஊ பாவனாவாஆஆஆஆஆ?:) இது ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்ன் கெளை அண்ணன்:)).. கேமாமாலினி என்றால் ஒகே:)... கற்பனைப்பூனை தான் உண்டு:) குதிரைக்கு எங்கின போவேன் ஜாமீஈஈஈஈஈ:)..

    பதிலளிநீக்கு
  11. நெல்லைத் தமிழனை இன்னும் இங்கின காணல்லே:) படம் கீறத் தொடங்கிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பின்புதான் கதை எழுதுவார்ர்.. நானும் இம்முறை ட்றை பண்ணலாம் என நினைக்கிறேன்ன் ஆனா அது நாட்டுக்கு நல்லதில்லயே எனப் பயம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊ:).

    பதிலளிநீக்கு
  12. யாராவது கெள அண்ணனைக் கண்டுபிடிச்சுத்தூக்கி வாங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்... கதையை ஒரு ஃபுளோல எழுத முடியாமல் அவரைத்தேட வச்சிட்டியே கதிரமலைக் கந்தா:)..

    பதிலளிநீக்கு
  13. என் கதை படிக்க இங்கே வாங்கோ..

    http://gokisha.blogspot.com/2017/09/blog-post.html

    பதிலளிநீக்கு