Short story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Short story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 ஆகஸ்ட், 2017

கண்டிஷனல் கரு 03.








இது மூன்றாவது க க க . 

கண்டிஷன்கள் ரொம்ப சிம்பிள். கதையை எப்படி ஆரம்பிக்கவேண்டும், இடையில் என்ன வரவேண்டும், முடிவு வரிகள் என்ன என்று சொல்லிவிட்டோம். தலைப்பு, கதாபாத்திரங்கள், நடை, உடை, பாவனா (!) எல்லாம் உங்கள் கற்பனைக் குதிரைக்குச் சொந்தம்! 



ஆரம்பம் : 


பஸ் அந்த நிறுத்தத்திலிருந்து, நடத்துனர் விசில் சத்தம் கேட்டதும் கிளம்பியது. அவர்கள் அதில் இருந்தார்கள்.





நடுவே: 

ரயில்  வந்து அந்த ஸ்டேஷனில் நின்றது. அவர்கள் காத்திருந்தார்கள்.




முடிவில் : 


விமானம் ஓடு பாதையில் வேகமாக ஓடி நின்றது. அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! 
      

சனி, 10 ஜூன், 2017

க க க போ தெரியுமா?


தலைப்பைப் பார்த்து, யாரும் குழம்பாதீங்கோ ! 


விளக்கம் : கண்டிஷனல்  கருவுக்கு கதை போட தெரியுமா? 

அதாகப்பட்டது, நாங்க ஒரு கதைக்கரு இங்கே கொடுப்போம். சில கண்டிஷனும் போடுவோம். 

அந்தக் கருவை கண்டிஷனாக வளர்த்து, நீங்க ஒரு சிறுகதை எழுதவேண்டும். 

(என்னது தொடர்வதையா? சாரி தொடர்கதையா? ஊஹூம் - அதெல்லாம் கிடையாது. முடியாது. நஹீ. etc )

கரு இதுதான்: 

ஒரு விவாகரத்தான ஆண். ரயிலில் ரிசர்வ் செய்து, பத்துமணி நேரப் பயணம். அதே ரயிலில், விவாகரத்து செய்த / செய்யப்பட்ட  மனைவி புதிய கணவனுடன், புதிய கணவனுக்கு பழைய கணவரைத் தெரியாது. நீண்ட தூர, நேரப் பயணம் என்பதால், பயணிகள் எல்லோரும்  ஒருவருக்கொருவர் பெயர், ஊர், என்ன தொழில், ஏன் இந்தப் பயணம் போன்று விவரங்களுடன்  அறிமுகம் செய்துகொள்கிறார்கள். பிறகு பயணிகள் ஒருவருக்கொருவர் பேசியபடி பயணிக்கிறார்கள். விவாகரத்தான ஆணும், புதிய கணவனும்தான் அதிகம் பேசி, ஒருவரைப்பற்றி மற்றவர் அதிக விவரங்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். 
      


கண்டிஷன்: 

கதையின் கடைசி வரி இதுதான். " பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் அவர்கள்." 


============================

மற்றபடி, கதையின் தலைப்பு, பெயர்கள், வசனங்கள், இத்யாதி எல்லாம் உங்கள் இஷ்டம் போல். 

எழுதிய கதையை அவரவர் தளங்களில் வெளியிட்டு, சுட்டியை 

kggouthaman@gmail.com

and 

sri.esi89@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம். உங்கள் வலைப்பூவில் வெளியிடுவதாக இருந்தால், முன்னுரையில், இந்தப் பதிவிற்கு ஒரு சுட்டி கொடுங்கள். 

அல்லது கதையை இதே மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 


மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பின்னூட்டத்தில் கேளுங்கள். 

Start Music.