என்னோடு வா வீடு வரைக்கும்
பானுமதி வெங்கடேஸ்வரன்
இரண்டு வருடங்களை அமெரிக்காவில் கழித்து விட்டு ஊர் திரும்பும் குணா என்னும் குணபதியை வரவேற்க அவன் பெற்றோர், மற்றும் தாத்தா பாட்டி என்று குடும்பமே விமான நிலையத்திற்கு வந்து அறிவிப்பு பலகையை பார்த்த பொழுது, எமிரேட்ஸ் விமானம் அரை மணி தாமதம் என்று தெரிந்தது.
“சரி, டிக்கெட் வாங்கிகொண்டு உள்ளே போயிடலாம், எவ்ளோ நேரம் இங்கே நிக்க முடியும்?” குணாவின் தந்தை நுழைவு சீட்டு வாங்கச் சென்றார்.
அதே நேரம் இன்னொரு குடும்பமும் இவர்களைப் போலவே காரில் வந்து இறங்கி, இவர்களைப் போலவே எமிரேட்ஸ் விமானம் தாமதம் என்று பார்த்து, உள்ளே சென்று அமர முடிவு செய்து, நுழைவு சீட்டு பெற்று ஒருவர் பின் ஒருவராக உள்ளே சென்றார்கள்.
காத்திருக்கும் நேரத்தில் பெண்கள் பேசத் தொடங்கினர். பெண்களுக்கு புதியவர்களோடு பழகுவது கொஞ்சம் சுலபமாகத்தான் இருக்கிறது.
தன் மனைவி சுமதி, அந்தப் பெண்மணி தனக்கு தூரத்து சொந்தம் என்று சொல்லாமல் இருக்க வேண்டுமே என்று குணாவின் தந்தை ராமசேஷன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, சுமதி அவரை அருகே வரும்படி ஜாடை காட்டினாள்.
“உங்க அம்மா ஏதோ சொந்தம் பிடிச்சுட்டானு நினைக்கிறேன்” என்று மகளிடம் கூறிவிட்டு மனைவி அமர்ந்திருந்த இடம் நோக்கிச் சென்றார்.
“இவங்க, அக்காவும், எங்க மன்னியும் ஒண்ணா படிச்சாங்களாம், நன்னா தெரியும்னு சொல்றாங்க..”
“அப்படியா? உங்க மன்னியோடன்னா.. கோயம்புத்தூரா..?”
“ஆமாம்!”
“இப்போ யாருக்காக வெய்டிங்க்?”
“அவங்க பொண்ணு யு.எஸ்ஸில் வொர்க் பண்றாளாம்.. டி,ஸி,எஸ்தான்”
அங்க எங்க?
மொதல்ல மின்னோபொலிஸ்தான் சென்றாள். கடைசி ரெண்டு மாசம் நியுஜெர்சியில் இருந்தாள்.
“மின்னொபொலிஸ் என்றால் கனடாவிற்கு அருகில் வந்து விடும். குளிர் அதிகம்”
“ஆமாம், நாங்கள் கூட நயாகரா போய் விட்டு வந்தோம்.”
அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது, எமிரேட்ஸ் தரையிறங்கியதாக அறிவிப்பு வந்தது.
இவர்கள் தங்கள் உரையாடலை பாதியில் விட்டு விட்டு, கஸ்டம்ஸ் முடித்து வெளியே வரும் பிரயாணிகளில் தங்கள் மகனும், மகளும் வருகிறார்களா என்று பார்க்க ஆரம்பித்தார்கள்.
ட்ராலியைத் தள்ளிக்கொண்டு குணா வந்தான். அமெரிக்க வாசம் அவன் தேகத்தை இன்னும் சிவப்பாக்கியிருந்தது. ஒரு சுற்று பருத்திருந்தான், லேசாக தொந்தி விழ ஆரம்பிதிருந்தது. பியர் குடிக்கிறானோ? தலை முடி லேசாக பின்வாங்க தொடங்கியிருந்தது. வழுக்கை ஆவதற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும்.
அவனோடு பேசியபடியே கிட்டத்தட்ட அவன் உயரத்தில், சற்று கச்சலாக, மாநிறமாக ஒரு பெண்ணும் வந்தாள்.
அந்தப் பெண்ணைக் கண்டதும், “அனிதா..!” என்று தன்னோடு பேசிக் கொண்டிருந்த பெண்மணி வீரிட்டதில் அவளுடைய மகள்தான் என்று புரிந்தது. அவள் ஏன் குணாவோடு வருகிறாள்?
“ஷி இஸ் அனிதா, மை கலீக்..” என்று குணா தன் பெற்றோர்களுக்கு அவளை அறிமுகப்படுத்தியது போல, அனிதாவும் தன் பெற்றோர்களுக்கு குணாவை அறிமுகப்படுத்தினாள்.
இரண்டு குடும்பங்களும் “ஸந்தோஷம்”, “வீட்டிற்கு வாருங்கள்” போன்ற சம்பிராதயமான வார்தைகளை பரிமாறிக் கொண்டு பிரிந்து சென்றனர்.
------
மறு நாள் குணா ஜெட் லாகினால் தூங்கிக் கொண்டிருந்த பொழுது, அவனுக்காக பதிவு செய்து வைத்திருந்த திருமணத் தகவல் வெப் சைட்டை திறந்து பார்த்துக் கொண்டிருந்த அவன் தாய் சுமதி “ இங்க கொஞ்சம் வாங்கோ, நேத்திக்கு நம்ப பார்தோமே, அந்த பெண்தானே இது?” என்று சுட்டிக் காட்டிய பெண்ணின் விவரங்களை ராமசேஷனும் பார்த்தார்.
“அப்படித்தான் தெரியறது, ஆனா, பேர் சுந்தரினு இருக்கே?”
“ஒரு வேளை அஃபிஷியல் நேம் சுந்தரியாக இருக்கலாம், ஃபோன் பண்ணி பார்துடலாமா?”
“வெய்ட் பண்ணு, குணாவோட ஐடியாவும் கேட்டுக்கலாம்..”
“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஷி இஸ் ஸ்மார்ட், கம்பாடபில்..” என்று குணா பச்சை கொடி காட்ட, அனிதா என்னும் சுந்தரியின் பெற்றோர்களை தொலைபேசியில் அழைத்தாள். அவர்களுக்கும் இது ஒரு இனிய ஆச்சர்யமாக இருக்கவே, ஒரு நல்ல நாளில் குணாவின் வீட்டிற்கு வந்தார்கள். வரும்பொழுது கையோடு தங்கள் மகளின் ஜாதகத்தை கொண்டு வந்திருந்தர்கள்.
அதைப் பெற்றுக் கொண்ட ராமசேஷன், “நீங்கள் ஜாதகம் கொண்டு வந்திருக்கிறீர்களே என்பதால் வாங்கிக் கொள்கிறேன், ஆனால் ஜாதக பொருத்தமெல்லாம் பார்க்கப் போவதில்லை. ஜாதகப் பொருத்தத்தை விட மனப் பொருத்தம் முக்கியமானது. ஜாதகப் பொருத்தமெல்லாம் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிற எல்லாரும் நன்னா இருகறதா சொல்ல முடியுமா?
“ரொம்ப கரெக்ட்! உண்மையா சொல்லணும்னா, எங்களுக்கு ஜாதகமெல்லம் பார்க்காமல்தான் கல்யாணம் நடந்தது, சோ ஃபார், சோ குட்..” என்றார் அனிதாவின் தந்தை.
“ஒரு விஷயத்துக்கு நீங்க ஒப்புக் கொண்டால், நாம் மேல ப்ரோசீட் பண்ணலாம்” புதிராக ராமசேஷன் பேச, கையில் எடுத்த காபியை டம்ளரை கீழே வைத்தாள் அனிதாவின் தாய் சுஜாதா.
சங்கர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
காஃபியை குடிங்கோ, ஆறிடும். என்றவர், தானும் காஃபியை குடித்து விட்டு தொடர்ந்தார். லவ் மேரேஜாக இருந்தால் பொண்ணும், பையனும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொண்டு கல்யாணம் பண்ணிக்கிறாங்க, ஜாதகம் பார்க்கும் பொழுது, ஜாதகப் பொருத்தத்தை வைத்து, அவர்களுக்குள் ஒத்துப் போகுமென்று ஒரு நம்பிக்கையில் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க, நம்ம கேஸ் இரண்டுமே இல்லை. அதனால நான் என்ன நினைக்கிறேன்னா..” என்று ஒரு இடைவெளி விட்டு எல்லோரையும் பார்த்தார்.
என்ன சொல்ல வருகிறார் என்பதை யூகிக்க முடியாமல் சங்கரும், சுஜாதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சுமதி கொஞ்சம் தர்மசங்கடமான இந்த விஷயத்தை கணவர் எப்படி சொல்லப் போகிறாரோ என்று அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உங்க பொண்ணு எங்க வீட்டுக்கும், எங்க பையன் உங்க வீட்டுக்கும் சரியா வருவாங்களானு எப்படி தெரிஞ்சுகறது? குணா உங்க வீட்டில் ஒரு வாரம் தங்குவான், அதே போல அனிதா எங்க வீட்டில் வந்து ஒரு வாரம் தங்கட்டும், அவங்களுக்கு இந்த சூழல் பிடிச்சு, காலம் தள்ள முடியும்னு நினைத்தால், லெட் அஸ் ப்ரொசீட் ஃபர்தர்..”
தான் சொல்ல நினைத்ததை சொல்லி முடித்து விட்ட திருப்தியில் ஸோஃபாவிலிருந்து எழுந்து, பாண்ட் பாக்கெட்டில் கை விட்டபடி நடந்து, டைனிங் டேபிள் வரை நடந்து, மீண்டும் வந்து ஸோஃபாவில் உட்கார்ந்தார்.
சங்கருக்கும், சுஜாதாவிற்க்கும் ராமசேஷன் சொன்னதின் முழு பொருளையும் உணர்ந்து கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது.
“சாரி, இதை என்னால் ஒத்துக்க முடியாது. திஸ் இஸ் நாட் ரைட்..”
ரைட், ராங்க் இதெல்லாம் மாறிக்கொண்டே இருக்கும். நம்ம அம்மாவெல்லாம் ஹஸ்பெண்ட் கூட பேசவே ரொம்ப நாளாகும். நம்ம காலத்துல ரிசப்ஷன் சமயத்துல பேசினால், “அப்படி என்ன பேச இருக்கும்?” என்று கமெண்ட் வரும். எண்பதுகளில் திருமணம் நிச்சயமானதும் சேர்ந்து சினிமாவுக்கு செல்ல அனுமதித்தார்கள், இப்போ திருமணம் நிச்சயதார்த்தமே ஒரு கல்யாணம் போல க்ராண்டாக நடக்கிறது. திருமணம் நிச்சயமான ஆணும், பெண்ணும் ஃபேஸ்புக்கில் போடும் படங்களை பார்திருப்பீர்களே..? கல்யாணத்திற்கு முன்பே ஆல்பத்தில் போடுவதற்காக வெளியிடங்களுக்குப் போய் ஃபோட்டோ ஷூட் எடுக்கிறார்கள். ஏன் வீடியோ டீசர் கூட வெளியிடுகிறார்கள். இதையெல்லாம் யாரும் தப்பு என்று சொல்லவில்லையே?
“யாரும் சொல்லாததால் அது சரியாகிவிடாது.” என்று மனதில் தோன்றினாலும் மரியாதை நிமித்தம் சங்கர் எதுவும் சொல்லாமல் மௌனம் சாதித்தார்.
“நீங்க உடனே ஒப்புக்கொள்ளணும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. டேக் யுவர் ஓன் டைம். உங்கள் பெண்ணோடும் டிஸ்கஸ் பண்ணிவிட்டு சொல்லுங்கள்” ராமசேஷன் பேசி முடித்து விட்டு ஸோஃபாவில் நிம்மதியாக சாய்ந்து அமர்ந்தார்.
சங்கருக்கும், சுஜாதாவுக்கும் எதுவும் பேச தோன்றவில்லை, மரியாதை நிமித்தம் சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டுக் கிளம்பினர். காரில் வரும் பொழுதே சுஜாதா புலம்ப ஆரம்பித்து விட்டாள். “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் இவர்? இவர் வீட்டில் போய் ஒரு வாரம் தங்க வேண்டுமாம், பிடிக்காவிட்டால் வந்து விடலாமாம், பார்க்கும் வீட்டிலெல்லாம் போய் ஒரு வாரம் தங்க முடியுமா? தவிர, ஒரு வாரத்தில் என்ன ஜட்ஜ் பண்ண முடியும்?..அப்ஸ்ர்ட்..” என்று பொரிந்து கொட்டினாள்.
- தொடரும் -
சுஜாதா சங்கர் ஏன் காபி குடிக்கிறார்கள்? ஹார்லிக்ஸ் அல்லவா குடிக்கவேண்டும்?!!
பதிலளிநீக்குஏதோ கருத்து சொல்லப் போகிறீர்கள் என்று எதிர்பார்த்தால், கலாய்க்கிறீர்கள்...(கீதா அக்கா உங்கள் கர்ர்ர் ஐ கொஞ்சம் கடன் கொடுங்கள், இதற்கு மாற்று வார்த்தை கண்டுபிடித்தவுடன் திருப்த்தி தந்து விடுகிறேன்)கர்ர்ர்ர்!
நீக்குஇன்னொரு விஷயம் சுஜாதா,சங்கர் காஃபி குடிக்கலாம், சுசித்ரா, சங்கர்தான் காஃபி குடிக்கக்கூடாது.
சுசித்ரா சங்கர் ராஜு ரவி சுஜாதா என்றும் சுறுசுறுப்புடனிருக்க ஆரோக்யம் பொங்கும் நல்லதொரு குடும்பம் அது ஹார்லிக்ஸ் குடும்பமாக்கும்!
நீக்குஅழகான கதை...
பதிலளிநீக்கு- தொடரும்...
காத்திருக்கிறேன்...
வாழ்க நலம்...
நன்றி!
நீக்குஆஹா நல்ல பிகினிங்! சூப்பர்! தொடருங்கள்!
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஇதோ வர்றேன்...
பதிலளிநீக்குஇது புதுக்கோணமாக இருக்கிறதே... சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் போல...
நீக்குகாலம் கலிகாலமாயிடுத்து காளி கோலமாக இருக்கோணும் தொடர்கிறேன்...
வாங்க ஜி! // இது புதுக்கோணமாக இருக்கிறதே...//
நீக்குஇதுதானே சேலஞ்? நம்ம ஏரியாகாரர்கள் கொடுத்தது.
இதுவும் சரிதான். என்னைக் கேட்டால் மாமியாருக்கும் மாட்டுப்பெண்ணுக்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்திருக்கலாமோ? இஃகி, இஃகி!
பதிலளிநீக்குநல்லாக் கதை சொல்ல வந்திருக்கு. சிக்கென்று சிக்கனமான வார்த்தைப் பிரயோகம். சஸ்பென்ஸ் வைச்சிருக்கீங்க. முடிக்கக் காத்திருக்கேன். என்னிக்கு முடிவு வரும்?
பதிலளிநீக்குஅப்புறம் என்ன ஆச்சு? சுருக்கச் சொல்லுங்கோ. அன்புடன்
பதிலளிநீக்குஅடுத்த சுவாரஸ்யத்தை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...
பதிலளிநீக்குநன்றி டி.டி. சார். ஸ்ரீராம் அதிக நாட்கள் காத்திருக்க வைக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
நீக்குதொடர்ச்சியை நாளை மதியம் நேரம் வெளியிட்டு விடலாமா?
நீக்குOK!
நீக்குசுஜாதா என்று பெயர் இருந்துமா அந்தப் பெண்ணுக்கு அவ்வளவு கோபம் வருகிறது!!
பதிலளிநீக்குஇந்த மாதிரி விஷயத்திற்கு கூட கோபம் வரவில்லையென்றால், அந்த அம்மா ஒரு அசமஞ்சம்.
நீக்குஆரம்பமே அமர்க்களம் பாராட்டுகள்
பதிலளிநீக்குநன்றி சார்.
நீக்கு//என்னிக்கு முடிவு வரும்?//
பதிலளிநீக்கு//அப்புறம் என்ன ஆச்சு? சுருக்கச் சொல்லுங்கோ.//
இதற்கெல்லாம் ஸ்ரீராம்தான் பதில் சொல்ல வேண்டும். நான் முழுவதும் அனுப்பி விட்டேன்.
கதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅடுத்த பதிவை தொடர்கிறேன்.
மிக சுவாரஸ்யம் பானு மா. வித்தியாசமான ஆரம்பம்.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநான் சுஜாதாவாக இல்லாவிட்டாலும் எனக்கும் ஒரு கோபம் வரத்தான் செய்தது.