செவ்வாய், 2 ஜூன், 2020

மன்னிக்க வேண்டுகிறேன் 2 / 2(மன்னிக்க வேண்டுகிறேன் கதை இறுதிப் பகுதி. )

எழுதியவர் : கீதா ரெங்கன்.

முதல் பகுதி சுட்டி 


அப்பாவைப் பொருத்தவரை இவங்க ரெண்டு பேர் ஜாதகமும் சேரலை. மாலினி கஷ்டப்படுவா……அதை என்னால தாங்கிக்க முடியலைமா அதான் சொல்றேன்மா…” என்று தன் அத்தை ஜெயா நகர்ந்ததும் தன் அம்மாவிடம் சொன்னான் ரகு.


இதப்பாரு ரகு, என்ன நடக்கணுமோ அதான் நடக்கும். அப்பாவே இதைப் பத்தி தன் தங்கை ஜெயாகிட்டயோ இல்ல என் அண்ணா மூர்த்திகிட்டயோ எதுவும் பேசலை. மத்த அண்ணன்கள் கிட்ட கூடப் பேசலை. ஏன், உங்க அத்தை ஜெயாவும் அவ அண்ணாகிட்ட ஜாதகம் கொடுத்துக் கேட்கலை. அப்பாதான் தன் தங்கை மேல, மருமகள் மேல இருக்கற பாசத்துல அவ ஜாதகத்தையும் ரமேஷ் ஜாதகத்தையும் பார்த்தார். நீ ஏதாவது சொன்னா குடும்பத்துல குழப்பம் வரும். வேண்டாத மன வருத்தங்கள் வரும். இத்தோட விட்டுரு.”

ரகுவின் மனசு ஆறவில்லை. அவனுக்கு ஜாதகம் குறித்துக் கூடக் கவலை இல்லை. ரமேஷ் இவளுக்குச் சரியானவன் இல்லை என்பதே அவன் எண்ணம். வருத்தம் எல்லாம். கண்டிப்பாக மாலினி வேறு வழியில்லாமத்தான் அட்ஜஸ்ட் செய்துகொள்வாளே தவிர சந்தோஷமாக இருக்க மாட்டாள் என்று அவனுக்கு ரொம்பவே தோன்றியது.

கல்யாணமும் நடந்துவிட்டது. பிறந்த வீட்டினர் குடித்தனம் வைக்க வந்த போது ரமேஷ் கடு கடுவென்றிருந்தான் எல்லோரிடமும்.
உன் மாமாவும், ரகுவும் இனிமே அவங்க குடும்பமே இந்த வீட்டுப் பக்கம் வரக் கூடாது. ரகு இஸ் எ டெர்ட்டி ஃபெல்லோ. ஒன் மாமன் சீப்” என்று சொல்லி இன்னும் சில குடும்பங்களையும் வீட்டுக்கு வரக் கூடாது என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பிறந்த வீட்டினரின் வருகையைக் குறைத்தான்.

மாலினியால் எதுவும் பேச இயலவில்லை. கல்யாணம் ஆன புதிது. அந்த வருடங்கள்தான் ஒரு குடும்பம் அமைவதற்கான அடித்தளம். ஃபர்ஸ்ட் இம்ப்ரஷனே மாலினிக்கு நல்லதாகப்படவில்லை.

ரகுவை ஏதேச்சையாகச் சந்திக்க நேர்ந்த போது, ரகு, ரமேஷின் கையைப் பிடித்தபடி 'ஸாரி டா' என்று சொன்னதும் ரமேஷ் பேசாமல் கையை உதறிவிட்டுச் செல்லவும், கண்ணில் நீருடன் மாலினியைப் பார்த்தான்.

ஸாரி மாலினி.”

என் கல்யாணத்தை நிறுத்த முடியலைன்றதுக்கா இல்லை, கல்யாணம் முடிஞ்சு மாலினி நல்லாத்தானே இருக்கானு நீங்களாக நினைச்சு, ஸோ நாம நினைச்சது, செஞ்சது தப்புன்னு நினைச்சா’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

இட்ஸ் டூ லேட் ரகு” என்று சொல்லிவிட்டு, தன் அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

இட்ஸ் டூ லேட்’ மாலினி எதைச் சொல்லுகிறாள்? அவள் கல்யாணம் நடந்துவிட்டது குறித்தா அல்லது நாங்க எமோஷனல் மொமென்டில் செய்த ஸ்டுப்பிடிட்டுக்கு அன்று சொல்ல வேண்டிய ஸாரியை இன்று சொல்கிறேன் என்றா? செய்துவிட்டு சாரி என்கிறானே என்றா?’ என்று ரகுவிற்குள் கேள்விகள்.

ரகு மேல்படிப்பு படிக்க வெளிநாடு சென்று அங்கேயே வேலையும் தேடிக் கொண்டதாக மாலினி அறிந்தாள். அடுத்து ரகுவிற்குக் கல்யாணம் என்றும் அறிந்தாள். மாமாவும் அத்தையும் பத்திரிகை கொடுக்க வந்தார்கள் ஆனால் ரமேஷ் அனுமதிக்கவில்லை. கல்யாணத்திற்கும் செல்ல முடியவில்லை.

எத்தனையோ பிரச்சனைகள் மாலினிக்கு. ஒன்றா ரெண்டா. ரமேஷிடம் என்னவோ ஒரு குறை மனரீதியாக இருப்பதாகப்பட்டது. ஆனால் யாரிடம் சொல்ல? கேட்க? புகுந்த வீட்டினரின் ஆதரவும் ஒன்றும் பெரிதாக இல்லை. வருடங்கள் ஓடியது. இரு குழந்தைகள்.

ஓரிரு பிறந்த வீட்டு நிகழ்வுகளுக்கு மட்டும் ரமேஷ் மாலினியை அனுமதித்தான். ஆனால் அவன் எந்த நிகழ்வுக்கும் வர மாட்டான். மாலினி, இடையில் கிடைத்த அனுமதிகளில் ராகினி, பாமினியை தன் குடும்பத்தாரை சந்தித்திருந்தாலும், ரகுவை 15 வருடங்கள் கழித்து அவன் அப்பா சம்பத்தின் மரண நிகழ்வில் சந்திக்க நேர்ந்தது. உணர்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடினர். அதற்கும் ரமேஷ் வந்திருக்கவில்லை. ஆனால் எப்படியோ மாலினியை மட்டும் அனுமதித்துவிட்டான்.

ரகுவிற்கு மாலினியைப் பார்த்ததில் சந்தோஷம் ஆனால் சூழல்தான் சரியாக இல்லை. “மாலினி எப்படி இருக்க? நீ அவ்வளவு சந்தோஷமா இல்லையோன்னு ராகியும், பாமியும் ரொம்ப வருத்தப்படுவா எங்கிட்ட பேசறப்ப…..”

அப்படியெல்லாம் இல்லை ரகு. மொதல்ல கஷ்டமாத்தான் இருந்தது. சந்தோஷம்ன்றது நம்ம மனசுலனு பக்குவப்படுத்தி இப்ப பழகிப் போச்சு…..”

ஆனா நீ எல்லாத்தையும் சமாளிச்சு, அட்ஜஸ்ட் செஞ்சு, மனசுல வைச்சுக்காம எப்பவுமே சிரிச்சுட்டே போயிடுவன்றது தெரியும்தான். அப்படிப் போறதால யாருக்கும் தெரிய வாய்ப்பில்லைதான். ஆனா அத்தையும் மாமாவும் ரொம்ப ஃபீல் பண்ணினாங்க. நீ எதுவும் அவங்ககிட்ட கூடச் சொல்றதில்லையாம்.”

ம் விடு ரகு. இனி பேசிப் பயனில்லை. சில விஷயங்கள் அந்தந்த சமயத்துல நடந்தாதான் நல்லது. இல்லேனா டூ லேட்னு ஆகிடும். வாழ்க்கைன்றது மிஸ்ட்ரி. அதை அப்படியே ஏத்துக்கிட்டு எஞ்சாய் பண்ணனும். இல்லியா, அது ஒளிச்சு வைச்சுருக்கற விஷயங்களை நாமதான் புரிஞ்சு பக்குவப்படுத்திக்கணும். அது சில சமயம் நமக்குத் தெளிவா காட்டும் ஆனா நாம அதைப் புரிஞ்சுக்காம மிஸ் பண்ணிடறோம்.”

உன் டாட்டர்ஸ்? ரமேஷ் எப்படி இருக்கான்? அவனோடு பல முறை பேச ட்ரை செஞ்சேன்.”

““தே ஆர் ஃபைன். ரமேஷ்க்கு உன் மேல, மாமா மேல உள்ள வெறுப்பு மாறலை. அஃப்கோர்ஸ் நம்ம வீட்டுல எல்லார் மேலயும். இப்ப மாமாவே இல்லை.”

ம்ம்ம்”

மாமாவும், நீயும் எனக்கு நல்லதுதான் செய்ய நினைச்சீங்க. அதை வெளிப்படையா எல்லார்க்கிட்டயும் சொல்லி டிஸ்கஸ் செஞ்சிருக்கலாம். ரிசல்ட் பத்தி கவலைப்படாம. ஒரு வேளை கல்யாணம் நின்னுருக்கலாம். ஆனா நீங்க செஞ்ச விதம் தப்பா போயிடுச்சு.”

பெரிப்பா, பெரிம்மா எல்லாருக்கும் எங்கப்பா மேல நல்ல அபிப்ராயமே இல்லையே. ஸோ எங்கப்பா எடுத்துச் சொல்லியிருந்தாலும் கண்டிப்பா யாரும் நம்பிருக்கமாட்டங்கன்னு கொஞ்சம் இம்மெசூரா ஸ்டுப்பிடா நடந்திருச்சுதான். ஆனா, கண்டிப்பா அப்பா நல்லதுதான் நினைச்சார். அதையும் மீறி ஜாதகப் பொருத்தம்னு சொல்லி நடந்திருக்கே…..”

ஹா ஹா ஹா ஜாதகப் பொருத்தமா? ஐ நெவர் பிலிவ் இட். ரகு நீ ஒண்ணு யோசிச்சுப் பார்த்ததுண்டா? ஜாதகம் பார்க்கறப்ப எல்லாரும் தாலி பாக்கியம், கடைசி வரை சேர்ந்து இருப்பாங்களா, இதெல்லாம் தான் பார்க்கறாங்க. அந்தப் பெண்ணும் ஆணும் சந்தோஷமா இருப்பாங்களான்றத பார்க்கறாங்களா? குறிப்பா பெண் ஆங்கிள்ல. மனப் பொருத்தம் பார்க்கறாங்களா? தாலி பாக்கியம்னு ஹஸ்பன்ட் ஆயுள்தான் பார்க்குறாங்க. மனைவியோட ஆயுள்? ஏன்? ஆண் திரும்பக் கல்யாணம் பண்ணிக்கலாம்னா?”

யோசிச்சதுண்டு மாலினி. இன்ஃபேக்ட் அப்பா உன் சந்தோஷத்த ஜாதக ரீதியா பார்த்தார், நான் யதார்த்தத்துல தெரிஞ்சதுனால உன்கிட்ட சொன்னேன்.”

தெரியும் ரகு. என் மாமனார் எழுதியிருந்தார்ல, 6 ஜாதகத்துல என்னோடது பெஸ்ட்னு ஜோசியர் சொன்னார்னு……..எல்லாமே காரியமாத்தாண்டா ரகு. கல்யாணத்துக்கு அப்புறம்தானே புரிஞ்சது. அந்த 5 பேரும் பெரிய இடம். நல்ல படிப்பு…..பொருந்தியிருந்தாலும் ரமேஷோட குறைக்கு, அந்தப் பெண்கள் உடனே பிரிஞ்சிட்டாங்கனா? ஆனா நான் சாதாரண குடும்பம். விட்டுட்டுப் போகமாட்டேன்னுதான் ஜோசியர் பல கால்குலேஷன்ஸ் போட்டு…ம்ம்ம்ம்ம்……….ஆனா நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சு நீங்க செஞ்சதும் தப்பாயிடுச்சே.”
ம்.. எனக்கும் அப்புறம் தோணிச்சு மாலினி. பட் நீ சொல்ற அதே டூ லேட்…….

இப்படி யோசிச்சுப் பார்த்திருக்கியா? நீங்க நல்லதுனு நினைச்சத அப்படிச் செய்யாம நம்ம வீட்டுல மட்டும் டிஸ்கஸ் செஞ்சிருந்தா, ஒன்னு கல்யாணம் தடைபட்டிருக்கலாம். இல்லைனாலும் ரமேஷ் உங்கிட்ட, மாமாகிட்ட நம்ம வீட்டவங்ககிட்ட நல்ல உறவு மெயிண்டைன் செஞ்சிருக்கலாம் இல்லையா..”

எல்லாத்துக்குமே நான் ஃபீல் பண்ணிருக்கேன் மாலினி. அதான் ரமேஷோடு பல முறை பேச முயற்சி செஞ்சேன். அப்பா செஞ்சது எங்களைப் பொருத்தவரை சரின்னு நினைச்சாலும் நான் ரமேஷ்கிட்ட மன்னிப்பு கேட்க அன்னிலருந்தே முயற்சி செய்யறேன். இப்பவும் ரெடி.. அப்பா சார்பிலும்”

ரகு அமைதியாய் இருக்க, ரகுவைக் கண்டதில் அவனிடம் எல்லாம் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பில் மாலினி மீண்டும் தொடர்ந்தாள்.

ரமேஷ் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு இருந்தாராம். என்னைப் பார்த்து ஃபிக்ஸ் ஆனப்புறம் அவங்க வீட்டுல எல்லாரும் பயந்தாங்களாம். மண மேடைல உட்காருவாரானு டென்ஷனாம். ஜோஸ்யர்தான் தைரியம் கொடுத்தாராம். எல்லாரும் நினைச்சாங்களாம், கல்யாணம் ஆனா சரியாகிடும்னு. பாத்தியா ரகு, அப்ப கூட ஒரு பொண்ணொட நிலைல யாரும் யோசிக்கலை.”

ம்ம். ஆனா யோசிச்சவங்களையும் யாரும் நம்பலையே”

கல்யாணம் ஆன உடனேயே ரமேஷுக்கு இருந்த பிரச்சனைகள் மீண்டும் வர எங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் எடுத்துட்டு ஓடினாங்க. இது வேற ஜோசியர். அப்போ அந்த ஜோசியர் என்ன கேட்டார் தெரியுமா? இந்த ரெண்டு ஜாதகத்தையும் சேர்த்து வைச்சது யாரு? கொஞ்சம் கூட சேரவே சேராது. கல்யாணம் பண்ணின தேதியும் சரியான நாள் இல்லைனு. ஹூம் என்ன கேட்டு என்ன யூஸ்? மாமா அப்ப சொன்னதும் இதைத்தானே? ஆனா? நடந்தது வேற”

அப்பாவை அப்ப யாரும் நம்பலை. அதனாலதான் ஸ்டுப்பிடா நடந்தது. அதுக்கு அப்புறம் இப்ப எல்லாரும் ஃபீல் செஞ்சு ம்ம்ம்” ரகு ஒரு பெருமூச்சுடன்..”விதி மாலினி. அந்த கால்குலேஷன் இஸ் டிஃப்ரென்ட்.. கான் இஸ் கான். உன் குழந்தைங்க உனக்கு ஆறுதல். ஸோ நல்லது நடக்கும் கண்டிப்பா…”

““ஹூம்! அதுதான் இருக்கவே இருக்கே. எதுக்கானாலும் விதி மேல பழிய போட்டுறலாம் இல்லை நம்ம மனசை சமாதானப்படுத்திக்க யூஸ் பண்ணிக்கலாம்…. அட போடா எனக்கு கடவுள் கிட்ட கூட கோபம் வரும். ஆனா என்னையே என்ன சமாதானப்படுத்தி ஹேப்பியா வைச்சுக்க இப்படி நினைச்சுக்குவேன், ரமேஷுக்கு வேற யாராவது மனைவியா இருந்தா பிரிஞ்சுருப்பாங்க. ஆனா ரமேஷ் நிலை? இட்ஸ் காட்’ஸ் கால்குலேஷன். ஸோ அன்னிக்கு நீ ரமேஷுக்குத் துரோகம் செய்ய நினைச்சனு எல்லாரும் நினைச்சா, என் வாழ்க்கைய தியாகம்னு சொல்லுவாங்களா?”

மாமா படுக்கைல இருந்தப்ப இங்கதானே ஹாஸ்பிட்டல். ரமேஷ் பார்க்க அலவ் பண்ணல. இவ்வளவு நாள் பொறுத்தது மாதிரி இந்த விஷயத்துல என்னால பொறுக்க முடியலை. ஸோ டக்குனு ரமேஷுக்குக் கூடத் தெரியாமத்தான் போய் பார்த்தேன். மாமாவும் ஸாரி ன்னு எழுதிக் காட்டினார். எனக்கு அழுகை வந்திருச்சு.”

‘”! நீ என்ன சொன்ன?”

இட்ஸ் டூ லேட் நு சொல்ல வந்தது ஆனா சொல்லலை. எதுக்கு ஸாரி? பாவம் அவர். அவரை நான் என்னிக்குமே தப்பா நினைக்க மாட்டேன். எங்கள படிக்க வைச்சதே மாமாதானேடா. ஸோ அவர்கிட்ட அன்பா பேசி சமாதானப்படுத்தினேன். அவர் ரமேஷிற்கும் ஸாரினு எழுதிக் காட்டினார்.”

இந்த ஸாரிக்கும், இட்ஸ் டூ லேட் றதுக்கும் அர்த்தம் எனக்குப் புரியுது மாலினி. வேற யாரு நினைக்கறதைப் பத்தியும் நான் வருத்தப்பட மாட்டேன். என்னையும் எங்கப்பாவையும் நீ தப்பா நினைக்கலைதானே?”

நெவர் ரகு. என்னால முடியாது”

தாங்க்யு. தாங்க்ஸ் எ லாட். ஸாரி அகெய்ன்”

தேவையில்லாம எனக்கு நிறைய “ஸாரி” கிஃப்டா கொடுத்துட்ட. ஹையோ போதும்டா, ரகு. பி இன் டச் வித் மீ….!”

எல்லோரையும் சாப்பிட அழைத்தார்கள். மாலை போடப்பட்டு, சம்பத் மாமா கையைக் கூப்பிக்கொண்டு இருக்கும் அந்த ஃபோட்டோவில் மாமா “மன்னிப்பாயா” என்று கேட்கிறாரோ என்று தோன்றியது மாலினிக்கு.

(நிறைவு) 
============================================


37 கருத்துகள்:

 1. கதை எதிர்பார்த்த திருப்பத்தில் போகலைனதுமே கதையின் பின்னணி ஓரளவுக்குப் புரிந்தது. என்ன செய்ய முடியும் மாலினியைப் பார்த்துப் பார்த்து அனுதாபம் கொள்வதைத் தவிர. இம்மாதிரி ஒரு ஜோடி இப்போவும் இருக்காங்க. திருமணத்தின் போது அந்தப் பெண்ணால் தான் பையருக்குக் கல்யாணமே ஆகுதுனு சொன்ன ஜோசியர் எல்லாம், யார் சேர்த்தாங்க இவங்களைனு இப்போக் கேட்கிறாங்க. விதி என்பதைத் தவிர வேறே என்ன சொல்ல முடியும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்கு.

   கண்டிப்பாக. இக்கதையில் மாலினிக்கும் கூட அவள் பிறந்த வீட்டில் அவள் பெற்ரோர் பார்த்த ஜோசியர் பொருத்தம் என்று சொன்னவர் அதே ஜோசியர் கல்யாணத்திற்குப் பிறகு அதே ஜாதகங்களை யார் சேர்த்தார்கள் என்று கேட்டாராம்.

   இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருக்கும் போது சொல்வதற்கு ஒன்றுமில்லை.

   கீதா

   நீக்கு
 2. //இதப்பாரு ரகு, என்ன நடக்கணுமோ அதான் நடக்கும்.//


  ரகுவின் அம்மா சொன்னது சரிதான்.
  என் அம்மா சொல்வது "அன்று எழுதிய எழுத்தை அழிச்சா எழுத முடியும்"
  பெரியவர்கள் எல்லாவற்றையும் மிக எளிமையாக சொல்லி விட்டார்கள்.
  நாம் இன்னும் உணர்ந்து கொள்ளாமல் கவலை படுவது கோபபடுவது என்று இருக்கிறோம்.

  //கட்ந்தகால்ம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எல்லாம் வல்ல , எல்லாம் அறிந்த எங்கும் நிறைந்த பரம்பொருளின் அருளால் இப்படித்தான் நிகழ வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சிகள் எவ்வாறு ங்கழ வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றனவொ அவ்வாறு நிகழ்கின்றன. அவன் கண்க்குப்படியே அனைத்தும் நிகழும். கடவுளின் விருப்பத்தை மாற்ற எந்த மனிதனாலும் இயலாது. நிகழ்வதுநிகழ்ந்தே தீரும் என்பது பிரபஞ்சமெங்கும் உள்ள ஒரு உண்மையாகும்.//

  - சுவாமி சிவானந்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே கோமதிக்கா. அருமையான கருத்து. இப்படித்தான் நடக்க வேண்டும் என்றிருந்தால் அதிய யாராலும் ஒன்றும் அசைக்க முடியாது. ஆனாலும் நாம் ஒவ்வொருவரையும் குற்றம் சொல்லிக்க் கொண்டு இருக்கிறோம். இதுவும் வாழ்க்கை முரண் தான்

   மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
 3. //ஹா ஹா ஹா ஜாதகப் பொருத்தமா? ஐ நெவர் பிலிவ் இட். ரகு நீ ஒண்ணு யோசிச்சுப் பார்த்ததுண்டா? ஜாதகம் பார்க்கறப்ப எல்லாரும் தாலி பாக்கியம், கடைசி வரை சேர்ந்து இருப்பாங்களா, இதெல்லாம் தான் பார்க்கறாங்க. அந்தப் பெண்ணும் ஆணும் சந்தோஷமா இருப்பாங்களான்றத பார்க்கறாங்களா? குறிப்பா பெண் ஆங்கிள்ல. மனப் பொருத்தம் பார்க்கறாங்களா? தாலி பாக்கியம்னு ஹஸ்பன்ட் ஆயுள்தான் பார்க்குறாங்க. மனைவியோட ஆயுள்? ஏன்? ஆண் திரும்பக் கல்யாணம் பண்ணிக்கலாம்னா?”//

  நல்ல கேள்வி.
  பெண்டாட்டி செத்தா புதுமாப்பிள்ளை என்ற பழமொழி உண்டே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பெண்டாட்டி செத்தா புதுமாப்பிள்ளை// - பொதுவா பழைய காலத்தில், கொடுத்த பெண் இறந்துவிட்டால், அவளுக்குத் தங்கை திருமணமாகாமல் இருந்தால், முதல் ஃப்ரிஃபெரன்ஸ் அந்த மாப்பிள்ளைக்குத்தான். இதுல அர்த்தம் இருக்கு. (மாப்பிள்ளை யோக்கியமானவனாக இருக்கணும்).

   எனக்குத் தெரிந்தே, கணவனை டைவர்ஸ் பண்ணிட்டு இன்னொருவனை பெற்றோர் சம்மதத்துடன் மணந்துகொண்டவர்கள், பெற்றோரே இன்னொருவனை மணமுடித்துவைத்தது எல்லாம் உண்டு.

   அதனால பெண்ணைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்பதெல்லாம் தவறான எண்ணம். அந்த அந்தப் பெற்றோருக்கு அவர்களோடு மகன்/மகள்தான் முக்கியம்.

   நீக்கு
  2. மிக்க நன்றி கோமதிக்கா கருத்திற்கு

   கீதா

   நீக்கு
  3. நெல்லை உங்கள் கருத்திற்கு கீழே பதில் சொல்கிறேன்

   கீதா

   நீக்கு
 4. //“கல்யாணம் ஆன உடனேயே ரமேஷுக்கு இருந்த பிரச்சனைகள் மீண்டும் வர எங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் எடுத்துட்டு ஓடினாங்க. இது வேற ஜோசியர். அப்போ அந்த ஜோசியர் என்ன கேட்டார் தெரியுமா? இந்த ரெண்டு ஜாதகத்தையும் சேர்த்து வைச்சது யாரு? கொஞ்சம் கூட சேரவே சேராது. கல்யாணம் பண்ணின தேதியும் சரியான நாள் இல்லைனு. ஹூம் என்ன கேட்டு என்ன யூஸ்? மாமா அப்ப சொன்னதும் இதைத்தானே? ஆனா? நடந்தது வேற”//

  எல்லாம் முன்பே முடிவு செய்யபட்டது என்பதை உறுதி செய்கிறது. விதி வலியது.

  கதை நன்றாக எழுத வருகிறது கீதா உங்களுக்கு .
  பாராட்டுக்கள்.
  மாலினி தியாகிதான்.

  பதிலளிநீக்கு
 5. கதை நல்லா வந்திருக்கு. ரகு செய்தவை கொஞ்சம் இம்மெச்சூர்டா தெரிந்தாலும், இந்த மாதிரி கல்யாண விஷயத்தில் உண்மை தெரிந்தாலும் தலையிட முடியாது, தலையிடக் கூடாது. நாம் கண்ணால் பார்த்தால் மட்டும்தான் ஆதாரத்தோடு சொல்ல முயலலாமே தவிர. அப்போதுமே, நாம் சொல்வதை நம்புவாங்களா, நமக்கு நல்ல க்ரெடிபிலிட்டி உண்டா என்றெல்லாம் யோசிக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நெல்லை. அந்த இம்மெச்சூரிட்டிக்குக் காரணம் ரகு இல்லை. அவன் தந்தை. ஆனால் அவரும் நல்லவர்தான். ரகுவும்....அது ஒரு எமோஷனல் ஃப்ரான்டிக் மொமென்ட்...இந்தக் குடும்பம் எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள். டெசிஷன் மேக்கர்ஸ் மாமாக்கள்தான் அதனால் தான் அவர் சொல்ல நினைத்தும் அவரை நம்பாத காரணத்தால் சொல்லவில்லை என்ற ரீதியில்...

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
 6. என் நண்பன் எனக்குத் தெரிந்தவருடைய பெண்ணை லவ் பண்ணினான். ஏதோ காரணத்தால் அந்தப் பெண் வெளியே வராததால், என்னுடைய உதவியை நாடினான். நான் அவங்க வீட்டுக்குப் போனபோது, அவங்க அப்பா, சிலவற்றை என்னிடம் கேட்ட பிறகு, 'நீங்க உங்க சகோதரியை உங்க நண்பனுக்கு திருமணம் செய்துவைப்பீங்களா' என்று கேட்டார். நான் அதற்கு, சாதி விட்டு சாதி திருமணம் பண்ணிவைக்க மாட்டேன் என்றேன்.

  நான் போனது என் நண்பன் சார்பா. ஆனால், தெரிந்தவர்கள் குடும்ப நலன் என்று நான் பார்த்திருந்தால், முதலிலேயே அவங்க வீட்டுல இதைப்பற்றிச் சொல்லியிருக்கணும். அந்தப் பெண்ணும் எனக்குத் தெரிந்தவள்தான். அவளிடம் சொன்னால், என் நண்பனிடம் சொல்லிவிட்டால் நட்பு போய்விடும். எனக்கு நட்பு ரொம்ப முக்கியம்.

  இதனால் நான் அமைதியாக இருந்துவிட்டேன். (கடைசியில் அந்தத் திருமணமும் நடக்கலை. அவங்க வீட்டுத் தொடர்பும்/நட்பும் எனக்கு இல்லாமல் போய்விட்டது. ஹா ஹா)

  இந்த மாதிரி சிச்சுவேஷன்ல, நல்லது செய்ய நினைப்பதே நமக்குக் கெடுதலாக முடிந்துவிடும் என்பது என் எண்ணம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில சமையம் அப்படித்தான் நெல்லை/. நல்லது என்று நினைச்சு செய்யறது தவறாக முடியும் வாய்ப்பு உண்டு. செய்யாவிட்டாலும் கூட!!!!!!

   கீதா

   நீக்கு
 7. நீங்க நிறைய சம்பவங்களை அடக்கியிருக்கீங்க. கொஞ்சம் கன்ஃப்யூஷன் வந்தாலும் ஓவர் ஆல் நல்ல கதையா வந்திருக்கு. பாராட்டுகள் கீதா ரங்கன்.

  கதையில் நீங்க சொல்லியிருக்கும் கருத்துகளில் உடன்பாடு இல்லை. ஆனால் பெண் தன் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதெல்லாம் ஆணுக்குப் புரியாது என்பதால், இது பெண்ணின் வியூ பாயிண்ட் என்று கடந்து போகிறேன். இருந்தாலும் அதைப் பற்றிச் சொல்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய சம்பவங்கள் இல்லையே....ஒன்றே ஒன்றுதான் அது ஜாதகம் அதை வைத்து திருமணம் ஏன் தடுக்க நினைப்பது அக்க்டும்பத்தில் ஏற்படும் சில மன வருத்தங்கள். விளைவுகள் அதுதானே வேறு ஏது சம்பவமும் இல்லையே...

   மற்றொன்று....எல்லாக் கதைகளிலும் கேரக்டர்கள் பேசுவது கதை எழுதுபவரின் கருத்து என்று நாம் நினைப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது நெல்லை. அந்தக் கேரக்டர்கள் விரக்தியில் யதார்த்தத்தில் பேசுவது.

   நம்பியார் பேசும் டயலாக்கை வைத்து அவரை எடை பொடுவோமா? அப்படியும் சிலர் இருந்தனர் மக்கள்...

   இதிலும் அந்தக் கேரக்டர் பேசுவது விரக்தி...உறவுகள் இடையே ஏற்பட்ட வருத்தங்கள் அதைச் சரி செய்ய முடியாத நிலை....

   நெல்லை, ஃபேமிலி கோர்ட், ஃபேமிலி கவுன்சலிங்க், சைக்காலஜி கவுன்சலிங்க் இங்கு போய்ப் பார்த்தால் நிறைய வசனங்கள் கிடைக்கும். நான் ஒரு கவுன்சலிங்க் ப்ரொஃபொஷனல் கப்பிளுக்கு உதவியிருப்பதால்...நிறைய உரையாடல்கள் ப்ரிச்சயம் உண்டு

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
 8. //அந்தப் பெண்ணும் ஆணும் சந்தோஷமா இருப்பாங்களான்றத பார்க்கறாங்களா? குறிப்பா பெண் ஆங்கிள்ல. மனப் பொருத்தம் பார்க்கறாங்களா? தாலி பாக்கியம்னு ஹஸ்பன்ட் ஆயுள்தான் பார்க்குறாங்க. மனைவியோட ஆயுள்?//

  இதெல்லாம் உண்மை என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு தகப்பனுக்கு அவன் பெண் மிக முக்கியம். (கணவனாகப் போகிறவன் முக்கியம் இல்லை). அதனால் அவன் ஆயுள், மனப் பொருத்தம் இதெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்துகொடுக்க மாட்டார்கள். வாழப் போவது பெண், தகப்பன் இல்லை. அதனால் நிச்சயம் இதெல்லாம் பார்ப்பார்.

  ஆனால் விதி கண்ணை மறைத்தால் ஒன்றும் செய்ய முடியாது.

  இன்னொன்று, 'எண்ணித் துணிக கருமம்' என்பது போல, எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து முடிவு மேற்கொண்ட பிறகு ஒருவர் சொன்னார் என்பதற்காக எல்லாவற்றையும் எப்படி ரீ விசிட் செய்ய இயலும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜாதகம் பார்க்கையிலேயே குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்குமா என்று பார்த்துவிடுவார்கள். அதோடு குழந்தை பாக்கியம் உண்டான்னும் பார்ப்பார்கள். சில ஜாதகங்கள் பொருந்தும். ஆனால் சஷ்டாஷ்டகம் என்ற ஒன்றுவரும். அப்படி இருந்தால் துணிந்து இறங்க மாட்டார்கள். இதிலே அஷ்ட சஷ்டகம் என்னும் ஒன்றும் உண்டு. இப்படி எல்லாப் பொருத்தங்களும் பார்த்தாலும் சமயங்களில் கண்களை மறைத்துவிடும். விதியின் விளையாட்டு!

   நீக்கு
  2. இதெல்லாம் உண்மை என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு தகப்பனுக்கு அவன் பெண் மிக முக்கியம். (கணவனாகப் போகிறவன் முக்கியம் இல்லை). அதனால் அவன் ஆயுள், மனப் பொருத்தம் இதெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்துகொடுக்க மாட்டார்கள். வாழப் போவது பெண், தகப்பன் இல்லை. அதனால் நிச்சயம் இதெல்லாம் பார்ப்பார்.//

   நெல்லை இதில் மாலினியின் அப்பா அப்படின்னு சொல்லவே இல்லையே. அவர் பார்த்த ஜோசியரும் பொருத்தம் என்று சொல்லிவிட்டு கல்யாணம் முடிந்த பின் பிரச்சனைக்கு காட்டிய பொது அவரே பொருத்தமில்லை என்று சொன்னதும்....மாலினியின் அப்பா பல ஜோச்யரிடம் காட்டி பொருத்தம் பார்க்கவில்லை. ஒரே ஒரு ஜோசியர். ஆனால் வீட்டில் அவர் மைத்துனர் துல்லியமாகச் சொல்பவர் அவர் சொல்ல நினைத்ததைச் சொல்ல இயலாமல் வீட்டில் ஊள்ளவர்களுக்கு அவர் மேல் நல்ல அபிப்ராயம் இல்லை என்பதால்.

   ஆனால் உங்கள் கருத்து பார்த்து சிரித்துவிட்டேன் நெல்லை. எதுக்குனா எந்த அப்பாவும்னு சொல்லிருக்கீங்களே அதுக்கு...

   தங்கள் மூத்த பெண் சம்பாதிப்பில் வாழ்பவர்கள் தங்கள் பெண்ணின் பணம் போய்விடக் கூடாது என்பதற்காகவே கல்யாணமே செய்ய நினைக்காமல் இருக்கும் பெற்றோர்களும் உண்டு.

   அப்பா (குடிகாரன் இல்லை_ கான்ஷியஸாக இருக்கும் போதே தன் பெண்ணை பலாத்காரம் செய்யும் அப்பாவும் உண்டு.

   நமக்கு நடக்கவில்லை, அனுபவம் இல்லை என்பதால் மற்றதெல்லாம் பொய் என்ரோ தப்பு என்றோ, உண்மை அல்ல என்றோ சொல்ல முடியாது.

   ஒவ்வொருவரின் அனுபவமும் பல. பொதுவாகவே மனிதன் தனக்கு அனுபவம் இல்லை என்றால் மற்றவை எல்லாம் சுத்த ஹம்பக் என்று நினைப்பது உண்டு. அதனால்தான் சொல்லுவது ஒவ்வொருவரும் மற்றவர் ஷூஸில் இருந்து பார்க்கணும் என்பது.

   கீதாக்கா ஒரு அழகான கதை சொல்லியிருந்தார். எபி யில் அப்போது நான் வலைப்பக்கம் வர இயலாத நிலை. மூத்த பையனின் கடமை பணம் என்று அவருக்குக் கல்யாணம் செய்யாமல், அவரது கல்யாணமே மண மேடையில் முறிந்து போவது என்று.....அது ஆண். அதனால் யதார்த்தம். அதே போன்று பெண்ணின் வருமானத்தில் வாழும் பெற்றோரும் உள்ளனர் என்றால் பொய்யா?

   எத்தனி அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசுகிறார்கள்? எத்தனை அப்பாக்கள் தங்கள் குழ்னதைகளிலேயே பேதம் பார்க்கிறார்கள் பணம் அடிப்படையில். பெண் குழந்தை என்றால் தாழ்த்தி என்று நினைக்கும் பெற்றோரும் உள்ளனர்.

   பொதுவாக தன் பெண் என்பதை விட மாப்பிள்ளையைத்தான் சீராட்டும் குடும்பங்களைப் பார்க்கிறேன். குறிப்பாக எங்கள் வீட்டில். எங்கள் வீட்டில் பெண்கள் எங்களுக்குப் பிறந்த வீட்டில் கிடைத்த சப்போர்ட் துளியும் கிடையாது. பிறந்த வீட்டு ஆதரவு. ஆனால் எங்கள் பெற்றோர் அவர்கள் மாப்பிள்ளைக்குத்தான் சப்போர்ட். எங்கள் பாட்டி முதல். ஆனால் வந்த பெண்களுக்கு அவர்கள் வீட்டுப் பெற்றோர் சப்போர்ட். புகுந்த வீட்டிலும் என் மாமியார் தன் மாப்பிள்ளைகளுக்குத்தான் மதிப்பு செய்தாரே தவிர தன் மகள்களுக்கு அவ்வளவாக இல்லை.

   ஆனால் இதை வைத்து நான் பொதுவாக எதுவும் ஜட்ஜ் செய்ய மாட்டேன். அவரவர் அனுபவங்கள்.

   ஒரு கணவர் தன் மனைவியிடம், "நீ உங்கப்பனை வைச்சுருக்க உங்கப்பன் உன்னை வைச்சுருக்கான் அதான் நீ அவனுக்கு சப்போர்ட் செய்யற" அப்படினு சொன்னதாக ஒரு உரையாடல் கதையில் நான் எழுதினால் நீங்கள் அது உண்மையல்ல என்று நினைக்கலாம். இப்படி எல்லாமா என்று. ஆனால் அது உண்மை.

   நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
  3. ஆமாம் கீதா ரங்கன். உண்மைதான். நமக்கு அந்த அனுபவம் இல்லைனா, அதாவது இப்படி நடப்பதையெல்லாம் கேட்ட அனுபவம், 'இப்படி நடக்குமா..ஒரே கதையாவுல்ல இருக்கு' என்று தோன்றும். பெரும்பாலும் கதை என்பது எங்கோ நிகழும் ஒரு நிகழ்வு அல்லது பல நிகழ்வுகளைக் கலந்தது.

   ஆனா பாருங்க..இந்த மாதிரி நெகடிவ் செய்திகளைக் கேட்காமல்/தெரியாமல் இருப்பதே பெட்டர். நான் சில சமயம் சில சந்தேகங்களை எழுப்பும்போது (உறவுகளைப் பற்றி) என் பெண், இப்படீல்லாம் நினைக்கக்கூடாது என்று சொல்லிடுவா. பையனும், முடிந்த அளவு ஹெல்ப் பண்ணணும் என்பான்.

   குழந்தைகளிலேயே பேதம் பார்ப்பது - இது உண்டு. இதில் அனுபவமும் உண்டு. ஆனால் அதனையெல்லாம் நினைத்தால் மனசு கசக்கும்.

   நீக்கு
 9. பார்ட் 1க்குப் போக முயன்றால் பிளாகர் பக்கத்துக்குச் செல்கிறது. நான் வேறு வழியில்தான் முந்தைய பகுதியை இன்று படித்தேன்

  பதிலளிநீக்கு
 10. இந்த மாதிரி உளவியல் பிரச்னை உள்ளவர்கள் பொதுவாகப் படிப்பில் மிகவும் சூட்டிகையாக இருப்பார்கள். மிக மிக அதிகமான படிப்பும் இருக்கும். சிலர் எம்.எஸ்., பிஎச்டி அளவில் கூடப் படிச்சிருப்பாங்க.ஆனால் நெருங்கிப் பழகுபவர்களுக்குத் தான் அவர்கள் பிரச்னையே புரியும். பெற்றோர் எப்படியானும் கல்யாணம் ஆனாலாவது சரியாகலாம்னு கல்யாணம் பண்ணி வைச்சுடுவாங்க. அதிலும் மேலே தி/கீதா குறிப்பிட்ட மாதிரி சாதாரண இடமாகப் பார்த்து. அப்புறம் அந்தப் பெண்ணால் விட்டுக் கொடுக்கவும் முடியாது. சகித்துக் கொண்டு வாழ வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா டிட்டோ. மிகச் சரியாகச் சொல்லியிருக்கீன. நான் கவுன்சலிங்கில் நிறைய பார்த்திருக்கிறேன். அத்தனை வரிகளையும் டிட்டோ செய்கிறேன். க்தையின் போக்கும் அதே.

   மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
 11. இதே போல் பெண்களும் உண்டு. பார்க்க சாதாரணமாகத் தான் இருப்பார்கள். ஆனால் திருமணம் ஆன பின்னால் கணவன் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் சகித்துக்கொண்டு இருக்கும் கணவன்மார்களும் உண்டு. ஆனால் பொதுவாக இப்போதெல்லாம் சகிப்புத் தன்மை என்பது அறவே இல்லை. தன் கணவனோ/மனைவியோ தவறு செய்தால் அதைப் பெரிசு பண்ணாமல் இருப்பது என்பது இல்லை. இன்னும் சொல்லப் போனால் பெண்கள் அளவில் கணவன் ஒழுங்காகவும், எல்லாவற்றிலும் கட்டுப்பாடுடனும், சரியான நேரம் பின்பற்றுவதும் கூட எரிச்சலைக் கொடுக்கிறது. எந்த விஷயத்திலாவது கொஞ்சம் தவறமாட்டானா என்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அப்படிஎதுவும் மாட்டவில்லை எனில் அவனுடைய பெர்ஃபெக்‌ஷனே ஓர் தவறாகச் சுட்டிக்காட்டப்படும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பெண்கள் அளவில் கணவன் ஒழுங்காகவும், எல்லாவற்றிலும் கட்டுப்பாடுடனும், சரியான நேரம் பின்பற்றுவதும் கூட எரிச்சலைக் கொடுக்கிறது.// - ஹா ஹா ஹா.... நல்ல பாயிண்ட். ஆனா நீங்க சொன்ன மாதிரி ஒழு/கட்/நேரம் - இப்படி இருப்பவர்களை யாருக்குமே பிடிக்காதே.

   நீக்கு
  2. யெஸ் கீதாக்கா இதுவும் அபப்டியே டிட்டோ...

   அப்படியும் பார்த்திருக்கிறேன். பார்க்கிறேன் கீதாக்கா

   கீதா

   நீக்கு
  3. உண்மை நெல்லைத்தமிழரே, இதுக்கு வெளிப்படையான பதில் கொடுக்கத்தான் ஆசை. ஆனால் முடியாது. பெண்கள் ஒழுங்காக எல்லா வேலைகளையும் சரியாகச் செய்து கொண்டு இருந்தால் மாமியார், மாமனார்களே வெறுப்பார்கள். அனுபவம்.

   நீக்கு
  4. ஹா ஹா ஹா.... நல்ல பாயிண்ட். ஆனா நீங்க சொன்ன மாதிரி ஒழு/கட்/நேரம் - இப்படி இருப்பவர்களை யாருக்குமே பிடிக்காதே//

   நினைச்சேன் இதுக்கு நீங்க இப்படிச் சொல்லுவீங்கனு...ஹா ஹா ஹா ஹா ஹா

   ஆனால் அப்படி மனைவி கட்டுப்பாடு, நேரம் எல்லாம் கடைப்பிடித்தால் அவர்களை ஓசிடி என்று (அப்செசிவ் கம்பல்சிவ் டிஸ் ஆர்டர் ) என்று சொல்லும் கணவன்மார்களும் உண்டு என்பதை இங்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  5. பெண்கள் ஒழுங்காக எல்லா வேலைகளையும் சரியாகச் செய்து கொண்டு இருந்தால் மாமியார், மாமனார்களே வெறுப்பார்கள். அனுபவம்.//

   கீதாக்கா கை கொடுங்கோ!!! ஹைஃபைவ்! மற்றவர்களும்னும் சொல்லுங்க. கூட இருப்பவர்களும் அதாவது கோ சிஸ்டர்ஸ் சேர்த்துக்கோங்க. ஹா ஹா ஹா ஹா

   அது வீட்டில் பல பிரிவுகளை கூட ஏற்படுத்தும் என்பதையும் அறிவேன் கீதாக்கா

   அதான் மேலே நெல்லைக்குச் சொன்னது.

   நெல்லை ஃபேமிலி கவுன்சலிங்க், சைக்காலஜி கிளினிக் எல்லாம் போனா நிறைய நிறைய தெரியவரும். இவ்வுலகில் என்னவெல்லாம் நம்மைச் சுற்றி நடக்கிறது என்று.

   நாம் சும்ம ஒரு சின்ன சர்க்கிளுக்குள் உட்கார்ந்து கொண்டு பேசுவது சரியல்ல என்றும் எனக்குத் தோன்றியதுண்டு.

   நான் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்ற ஒரு சைக்காலிஜிஸ்டை பாண்டிச்சேரியில் இருந்தப்ப சந்திச்சிருக்கேன். அப்புறம் சென்னைக்கு வந்தும்.

   என்னிடம் நிறைய கதைகள் கேஸ் அனுபவங்கள் உள்ளன. ஆனால் எழுத முடிய வில்லை. அதற்கான மூட் செட் ஆவதில்லை

   கீதா

   நீக்கு
  6. கீசா மேடம் சொன்ன மாதிரி, வெளிப்படையாக எழுதவும் முடியாது. ஆனால் ஒருத்தன் ஒரு ஒழுங்கைக் கடைபிடித்தா, மற்றவர்களுக்குப் பிடிப்பதில்லை. அதுதான் உலகம்.

   நீக்கு
 12. மிக்க நன்றி கௌ அண்ணா. கதை வெளியிட்டமைக்கும், மன்னிப்பாயா/மறப்போம் மன்னிப்போம் என்ற தலைப்பை நான் யோசித்த வேளையில் மன்னிக்க வேண்டுகிறேன் என்ற தலைப்பு கொடுத்தமைக்கும், சஜ்ஷனுக்கும் மிக்க மிக்க நன்றி கௌ அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் என் பங்களிப்பு, நூறு ரூபாயில் ஒரு பைசா அளவுதான். உங்க கதையையும், பின்னூட்டங்களில் குடும்ப உறவுகள் சிக்கல்கள் குறித்து உங்கள் ஆணித்தரமான கருத்துகளையும் படித்து பெரிதும் வியக்கின்றேன். பாராட்டுகள்.

   நீக்கு
 13. ஏகப்பட்ட அனுபவங்கள் வெளிப்படுகிறது இந்தப் பதிவில்.
  ஜாதகம் சரியாக இருந்தாலும்,
  அதைப் புரிந்து கொள்ளும் திறமை சில ஜோசியர்களுக்கே உண்டு. எங்கள் வீட்டுத் திருமணம் ஒன்று சரியில்லாமல் நடந்து விவாகரத்தில் முடிந்தது.
  இன்னும் கன்னி கழியாமல் அந்தக் குழந்தையும் வாழ்க்கையில் முன்னேறிவிட்டாள்.
  யாரை நோவது. அவள் வாழ்வைக் கெடுத்தவன்
  இரண்டாவது திருமணம் செய்து குழந்தைகளோடு நன்றாகவே இருக்கிறான்.

  நல்ல அலசலும் உண்மைகளும் பொதிந்த கதை.

  பதிலளிநீக்கு
 14. நல்ல கதை. சோதனைகள் மிகுந்த வாழ்க்கை.

  கதையும் கதைக்கான பின்னூட்டங்களும், உரையாடல்களும் நன்று.

  கதாசிரியருக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 15. நிஜத்தில் சிலரின் வாழ்க்கை இதுபோலவே அமைந்து விடுகிறது.

  பதிலளிநீக்கு