திங்கள், 1 ஜூன், 2020

மன்னிக்க வேண்டுகிறேன். 1/2


'நம்ம ஏரியா' ஏப்ரல் 30 ஆம் தேதி பதிவாகிய தியாக துரோகம் 
 பதிவில் நெல்லைத்தமிழன் எழுதிய தீம் அடிப்படையில், திருமதி  கீதா ரெங்கன் அவர்கள் எழுதியுள்ள கதை  இது. 

கதை இரண்டு பகுதிகளாக வெளியாகும். இது முதல் பகுதி. இறுதிப் பகுதி அடுத்த பதிவில். 



ரகு, எனக்கும் உன் கசின் மாலினிக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகப் போகுது தெரியும்லியா?”

ம் தெரியும் ரமேஷ். கங்கிராட்ஸ்”

தாங்க்யூ, உங்க வீட்டுக்கு அடிக்கடி வரப்பவே மாலினியைப் பார்த்து, பிடிச்சுப் போச்சு. அப்புறம் இப்ப உன் தங்கை கல்யாணத்துக்கு என் பேரன்ட்ஸும் வந்து பார்த்து, அவ அப்பா அதான் உன் மாமாகிட்ட என் பேரன்ட்ஸ், ஜாதகம் அனுப்பச் சொல்லி அட்ரஸ் கொடுத்தாங்க.”

ரகுவுக்கு எல்லாமே தெரியும். ரமேஷுக்கும், மாலினிக்கும் நிச்சயம் ஆகப் போகிறது என்பதையே ரகுவால் ஜீரணிக்க முடியாத போது, அவளை, அவன் விரும்பியதால் ஜாதகம் பரிமாற்றம் என்று ரமேஷ் சொன்னதும் சுரத்தில்லாமல் போனது. இதைச் சற்றும் எதிர்பார்த்திராத ரகு தன் சாமான்களை எடுத்து வைப்பதில் மும்முரம் போல் காட்டிக் கொண்டான்.

நான் சொன்னது உனக்குப் பிடிக்கலை போல”

இல்ல. இல்ல” என்று மென்று முழுங்கியவன், மாலினியும் உன்னை விரும்பறாளா? எங்கிட்ட அவ சொல்லவே இல்லை அதான்…”

அவளுக்கும் என்னைப் பிடிச்சுருக்குன்னுதான் நினைக்கிறேன். நான் உன் தங்கை கல்யாணத்துக்கு வந்தப்ப அவ செய்கைகள் அப்படித்தான் இருந்துது. எங்க வீட்டுல ஜாதகம் பொருந்தியிருக்காம். இல்லேனாலும் மாலினிதான்னு என் பேரன்ட்ஸ் கிட்ட திட்டவட்டமா சொல்லிட்டேன்.”

!” சரி நான் கிளம்பறேன் ரமேஷ். திங்கள் பார்க்கலாம்”

எதுவும் சொல்லாம போறியேடா! ஒரு வேளை…உனக்கு….”

ஹேய் அதெல்லாம் இல்ல.” என்று மழுப்பிவிட்டுக் கிளம்பிவிட்டான்.

ரகுவும், ரமேஷும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள். ரமேஷ் வேறு ஊரைச் சேர்ந்தவன். ரகுவின் ஊரும் வேலை செய்யும் இடத்திலிருந்து 2 மணி நேரப் பயணம் என்பதால் இருவரும் ஒரே ரூமில் தங்கியிருந்தார்கள். ரமேஷ் ரகுவை விட 5 வயது பெரியவனாக இருந்தாலும் நல்ல நண்பர்கள். வார இறுதி நாட்கள், விடுமுறைகளில் ரகு தன் வீட்டிற்கு வந்துவிடுவான். ரமேஷும் அவ்வப்போது வருவதுண்டு. அன்றும் வார இறுதி என்பதால் வீட்டிற்குக் கிளம்பினான் ரகு. அவன் வீடு சேரும் முன் அந்தக் குடும்பம் பற்றி அறிமுகம்.

மாலினியின் அம்மா ஜெயா 4 சகோதரர்களுக்குப் பின் பிறந்த ஒரே பெண். பக்குவமில்லாத மிகச் சிறு வயதிலேயே கல்யாணம். மாலினியின் தந்தை மூர்த்தி எடுப்பார்க் கைப்பிள்ளை. மாலினியின் அம்மா தன் அண்ணன்களின் குழந்தைகளைப் போல தன் குழந்தைகளும் நல்ல பள்ளியில் படித்து வளர வேண்டும் என்ற பிடிவாதத்தில் தன் பிறந்த வீட்டோடு வந்து விட்டதால் கூட்டுக் குடும்பம். மாலினிக்கு ஒரு அண்ணா. ஒரு தங்கை. குடும்பம் சாதாரணக் குடும்பம்தான்.

வீட்டிற்கு வந்த ரகு யாருடனும் பேச வில்லை. ரமேஷ் சொன்ன விஷயம் அவன் மனதை அரித்துக் கொன்டே இருந்தது. அவனைப் பொருத்தவரை ரமேஷ், மாலினிக்குச் சற்றும் பொருந்தாதவன். மாலினி கஷ்ட்டப்படுவாள் ஆனால் இதை எப்படி வீட்டில் எடுத்துச் சொல்லுவது, தன் வார்த்தைக்கு மதிப்பு இருக்குமா? புரிந்து கொள்வார்களா என்று மனதைப் பிராண்டியது.

குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்ததால் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு எந்த ஒளிவு மறைவு இல்லாமல் ஜாலியாக இருப்பவர்கள். பெரிய மாமாக்களின் குழந்தைகள் எல்லோரும் வயதில் பெரியவர்கள் என்பதால் மாலினிக்கு அவர்களை விட கிட்டத்தட்ட ஒரே வயதில் இருந்த ரகு, மற்றும் அவன் சகோதரிகளான ராகினி, பாமினி ஆகியோருடன்தான்  நெருக்கம் அதிகம். இருவகை உறவும் கூட. ரகுவிற்கும் மாலினிக்கும் பேசுவதற்குப் பல விஷயங்கள், ஆர்வங்கள் ஒரே போன்று இருந்ததால் ஸ்னேகமும். உரிமைகளும் அதிகம்.

டேய் ரகு என்னடா கண்டுக்காம போறே” என்று மாலினி ரகுவிடம், தான் போட்டுக் கொண்ட ஃப்ரெஞ்ச் பின்னலைக் காட்டிச் சீண்டினாள்.

ரொம்ப முக்கியம். ஆனா முக்கியமானதை எங்கிட்ட சொல்ல மாட்டே”

டேய் என்னடா குத்திப் பேசற?” .

! என்னவோ ஒண்ணுமே தெரியாத மாதிரி நல்லா வேஷம் போடற. நீ மாறிட்டே. போ. போய் எக்கேடுக்ங் கெட்டுத் தொலை. எனக்கென்ன வந்தது”

ஏய் ரகு என்னடா? மாலினிகிட்ட நீயாட இப்படிப் பேசற?”

மாலினிக்கு ஒன்றும் புரியவில்லை. ரகுவின் வார்த்தைகள் அதிர்ச்சியாக இருந்தது. எதற்காக ரகு இத்தனைக் கோபப்படுகிறான். ரகு இப்படிக் கோபப்பட்டுப் பார்த்ததே இல்லையே இப்போது இவனுக்குத் தெரியாமல் என்ன நடந்துவிட்டது? ரகு ஏன் இப்படிச் சொல்லிவிட்டுப் போகிறான் என்று ராகினிக்கும் தோன்றியது.

பாமினிக்குச் சமீபத்தில்தான் மணமாகியிருந்ததால் வீடு இன்னும் கூட்டமாகக் கலகலவென்று இருந்தது. மாலினியால் ரகுவிடம் தனியாகச் சென்று பேச முடியவில்லை.

ரகு மாலினியிடம் ஸாரி சொல்லிவிட்டு, மெல்லிய குரலில், “உனக்கு ரமேஷைப் பிடிச்சிருக்கா” என்று நேரடியாகவே கேட்டான்.

மாலினி குழம்பினாள். ராகினி முந்திக் கொண்டு, “ரமேஷோட ஜாதகம் பொருந்தியிருக்காம். அவன் அம்மா அப்பா கல்யாணத்துக்கு வந்தப்ப பார்த்துட்டாங்கலியா. அவங்களுக்கும் பிடிச்சுப் போச்சாம். அதான் நிச்சயம் பண்ணப் போறாங்களாம். ஆனா மாலினி…..” என்று முடிக்காமல் இழுத்தாள்.

ஆனா மாலினி?…. என்ன மாலினிக்கு என்ன?” ரகுவின் ஆர்வம் அவள் ரமேஷைப் பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

ஓ இதுதான் விஷயமா இதுக்குத்தான் இவ்வளவு கோபமா ரகு? ராகினி சொல்ல வந்தது என்னன்னா நான் என் ஃப்ரென்ட் ஒருத்தனை விரும்பறேன்னு ராகினியும், பாமினியும் கற்பனை பண்ணினது….. அட போடா. ஒன்று என் விருப்பத்துக்கு ஏத்த பையனை கல்யாணம் செஞ்சுக்கணும் இல்லேனா எனக்குத் தனியா வாழணும்னு ஆசை. நடக்குமா? நோ சான்ஸ். ஸோ? அதான் நான் எதுவும் பேசாம ஓகே சொல்லிட்டேண்டா ரகு.”

மாலினியின் குரலில் விரக்தியோ என்று ரகுவிற்குத் தோன்றியது. “அப்போ என்ன சொல்ல வரே? பிடிச்சு பண்ணிக்கறியா? இல்லை பிடிக்காமலா?”

அதான் சொல்றேனே ரகு……நான் ஓகே சொல்லிட்டேண்டா” ரகு தன் சகோதரிகள் கல்யாணத்திற்குமே அவர்கள் விருப்பமில்லாமல் செய்யக் கூடாது என்று தன் அப்பாவுடன் சண்டை போட்டவன்.

கல்யாணப் பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்க, மாலினியின் அப்பாவிற்கு ரமேஷின் அப்பாவிடம் இருந்து கடிதம் வந்தது. அதில் தனக்கு வந்த அனானிமஸ் லெட்டரை நம்பவில்லை என்று சொல்லி அந்த அனானிமஸ் லெட்டரையும் இணைத்திருந்தார். கூடவே ரமேஷிற்கு மாலினியின் ஜாதகத்தையும் சேர்த்து 6 பெண்களின் ஜாதகம் வந்திருந்தது என்றும், அந்த 5 பெண்களும் பெரிய இடங்கள், பெண்களும் ரமேஷிற்கு இணையாகப் படித்தவர்கள். இந்த அனானிமஸ் லெட்டர் கண்டதும் மீண்டும் ஜோசியரிடம் சென்று 6 லும் எது பெஸ்ட் என்று கேட்டதாகவும் அதற்கு ஜோசியர் மாலினியின் ஜாதகம்தான் என்றும் சொன்னதால் இறையருளால்தான் இந்த சம்பந்தம் ஃபிக்ஸ் ஆகியுள்ளது என்ற நம்பிக்கையுடன், தான் கல்யாண வேலைகளைப் ப்ரொசீட் செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அனானிமஸ் லெட்டரில் மாலினியின் ஜாதகம் பொய்யான ஜாதகம் என்றும் அந்த அனானியின் மகனுக்கு மூன்று வழியில் மாலினியின் ஜாதகம் மூன்று வெவ்வெறு பிறந்த நேரம் குறிப்பிட்டு வந்ததாகவும் ஒவ்வொன்றின் படி அதன் கிரக நிலைகள் மாறும் என்றும் எனவே அவரது மகன் நலன் குறித்து யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் விரிவாக மூன்று வகை ஜாதக விளக்கங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாலினி இதை ரகுவிடம் சொல்ல, ரகு, “ஆமா மாலினி போனாவராம் இங்கு ஒரு கால் வந்தது அதை என் அப்பாதான் அட்டென்ட் செய்தார். அப்ப ஒருத்தர் இந்த விஷயத்தைச் சொல்லி கேட்டிருக்கார்.”

கல்யாணப் பேச்சுதான் நடந்திருக்கு. வாய் வார்த்தையாலதான் நிச்சயம், தேதி எல்லாம் குறிச்சிருக்காங்க. அதுக்குள்ள யாரோ ஒருத்தருக்கு எப்படி ரமேஷ் வீட்டு அட்ரஸ் தெரிஞ்சு லெட்டர் போடுவார்? இந்த வீட்டு ஃபோன் நம்பர் எல்லாம் அவருக்கு எப்படித் தெரிஞ்சிருக்கும்?”

எனக்குத் தெரியாது மாலினி.”

விட்டில் எல்லோருக்கும் அதிர்ச்சி. இதைச் செய்திருப்பவர் கண்டிப்பாக ரகுவின் அப்பாவும், ரகுவுமாகத்தான் இருக்கும் என்று பேசிக் கொண்டனர். மாலினிக்குக் குறிக்கப்பட்ட முகூர்த்த தேதி கூட அத்தனை நல்ல தேதி இல்லை என்று ரகுவின் அப்பா சொன்னதாகப் பேசிக் கொண்டார்கள். அதையும் புரோகிதரிடம் கேட்டார்கள். ஏதோ பரிகாரம் செய்து செய்யலாம் என்றும் பேசிக் கொண்டார்கள்.

நம்ம அம்மா இருந்தப்ப ரகுவுக்கு மாலினியைப் பண்ண ஆசைப்பட்டா. என் தம்பியும்தான். ஏன்னா அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருப்பாங்களாம்……இந்தக் குடும்பமும் நல்லாருக்குமாம். ஆனா ரகு மாலினியை விட கொஞ்சம் மாசம் சின்னவன்றதுனால நம்ம அம்மாவே அப்ப யோசிட்டுட்டு விட்டுட்டாங்களே” – பெரிய மாமா
அவனே ஜாதகத்தை பிரிச்சு மேயறவன். அப்படிப்பட்டவனுக்கே தன் பொண்ணுங்களுக்கு அமைஞ்ச இடத்தை விட இப்ப மாலினிக்கு ரொம்ப நல்ல இடம் அமைஞ்சுருக்குன்னதும் பொறாமை. அதான் அவ ஜாதகம் மூணு இருக்கறதா லெட்டர் போட்டிருக்கான். இப்ப முகூர்த்த நாள் நல்ல நாள் இல்லைனு சொல்லறான்…” என்று ரகுவின் அப்பாவைப் பற்றி பேச்சுக்கள் சுழன்றன.

தன் மாமாவா இதைச் செய்திருப்பார்? ரகுவும் உடைந்தையாக இருந்திருப்பானா? அவர்களுக்குத் தன் மேல் எத்தனை அன்பு, அதுவும் அத்தைக்கு தன் மீது ராகினி, பாமினியையும் விட பாசம் கூடுதலாச்சே என்றெல்லாம் மாலினி நினைத்தாலும் கூடவே அந்த அனானி எழுதியிருந்தவை சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஜாதகம் பற்றி விளக்கமா எழுதப்பட்டிருக்கு என்றால் கண்டிப்பாக மாமா. ரகுவின் அப்பாதான். அவர்தான் ஜாதகம் அக்கு வேறு ஆணி வேராகப் பிரிச்சு ஆராயும் வல்லமை படைத்தவர். ரகுவுக்கும் இதுல பங்கு இருக்குமோ என்று மாலினி நினைத்தாள்.

மாலினிக்கு அது ஒரு வகையில் சரியென்று தோன்றினாலும் தன் மாமாவையோ, ரகுவையோ குற்றப்படுத்திப் பார்க்க முடியவில்லை. எதோ ஒரு காரணம் இருக்கத்தான் இப்படிச் செய்கிறார்களோ. ஆனால் அவர்கள் ஏன் இதை வெளிப்படையாக வீட்டில் எல்லோரிடமும் பேசவில்லை இவர்கள் இப்படிச் சொல்ல என்ன காரணமாக இருக்கும்? ரமேஷிடம் என்ன குறை இருக்கும்?. என்றெல்லாம் தோன்றியது என்றாலும் வீட்டில் இதைப் பற்றி பெரியவர்கள் யாரிடமும் பேச முடியவில்லை. அத்தனை பயம் மாமாக்களிடம். பாட்டி இருந்திருந்தால் இத்தனைப் பிரச்சனைகள் எதுவுமே வந்திருக்காது.

ரகு நம்ம வீட்டுல என்ன பேசிக்கறாங்க தெரியுமா?”

தெரியாது மாலினி……..மாலினி தப்பா எடுத்துக்காத. நீ ரொம்ப ஜாலி டைப். பப்லி கேரக்டர். ஆனா ரமேஷ் உனக்கு அப்படியே ஆப்போசிட். ரொம்ப மூட் அவுட் ஆவான். பல சமயங்கள்ல சிரிக்கக் கூட மாட்டான். உனக்கும் அவனுக்கும் பொருத்தமே இல்லை. அதான் வருத்தம் எனக்கு…”

பொருத்தமில்லைன்னு யாரு சொன்னா? எல்லாம் நல்லா பொருந்திருக்கு” மாலினியின் அம்மாவை எதிர்பார்க்கவில்லை. “பாரு ரகு, கல்யாணம் திகைஞ்சு வர டைம்ல நீ இப்படி எதையாவது சொல்லி குழப்பத்தை உண்டு பண்ணாத தயவு செஞ்சு.”

அத்தை அது வந்து……..ரமேஷ் எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரென்ட் நல்லவன்தான்.. இல்லேனு சொல்லல ஆனா அத்தை இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்னா அது சரியா வராது…”

ரகு. பேசாம இரு. வீட்டுல பெரியவங்க செய்யறதுல தலையிடாத. உன் வாயை மூடிட்டு சும்மாரு.” என்று சொல்லியபடி வந்தார் ரகுவின் அம்மா - மாலினியின் அத்தை.

(தொடரும்) 


21 கருத்துகள்:

  1. ரமேஷிடம் என்ன குறை என்பதை வெளிப்படையாகச் சொல்லி இருக்கலாமோ? பெயரில்லாக் கடிதம் போட்டது யார் என்பதும் சஸ்பென்ஸா இருக்கு. சரி,ரகுவைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறாளோனு நினைச்சால் ரகு வயசில் சின்னவன் என்று சொல்லிட்டீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்னதான் நடக்கும்? அடுத்த பகுதிக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா அடுத்த பகுதில வரும்....குறையை லைட்டாகத்தான் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். அதுவே சொல்லிவிடும். அதிகம் அதைப்பற்றி பேசினால் கதை நீளும் அல்லாமல் இங்கு கதைக்குத் தேவையானது அந்தக் கருவைப் பற்றி. எனவே வெயிட் பண்ணுங்க நாளை தெரிந்துவிடுமே

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  2. ம்ம்ம்ம். என்ன நடக்கும். நாளை வரை காத்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்ஜி நாளை பார்த்துட்டுச் சொல்லுங்க

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  3. இரண்டு பகுதிகளும் முடிந்ததும் படித்துக் கருத்திடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிச்சுட்டு சொல்லுங்க நெல்லை

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  4. கீதாவோட இந்தக் கதையை படிச்சவுடனே எனக்கு மெரினா எழுதிய ஒரு கதை நினைவுக்கு வந்தது. கதையின் பெயர் காபியில் விஷம். வீட்டு எஜமானர் இறந்துவிடுவார். அவர் குடித்த காப்பியில் இருந்த விஷம் அவரை கொன்று விட்டது என்று தெரியவரும். காப்பியில் விஷத்தை கலந்தவர் யார் என்று சுற்றி சுற்றி சுற்றி சுற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருப்பார்கள். இது ஒரு நாடகமாக மேடையில் அரங்கேறிக் கொண்டிருக்கும். பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பொறுமையே போய்விடும். கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து வருவார் அட நான் தாங்க காப்பில விஷத்தை கலந்தது சீக்கிரம் கதையை முடிக்க 10 மணிக்கு கடைசி பஸ். அதை பிடிக்கிறதுக்கு நாங்க போகணும் என்று சொல்லுவார் கதை முடிந்துவிடும். ரகுசரகு தன் காதலை மாலினியிடம் சொல்லி கதையை முடித்து விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஞ்சனி அக்கா வாங்க...

      இது வேறு அக்கா. நெல்லை சொல்லியிருக்கும் கருவுக்கு ஏற்ப. சொல்லப் போனால் நெல்லை சொன்னது எனக்குப் புரியவில்லை. அப்புறம் கௌ அண்ணா அந்தப் பதிவில் கீழே பானு அக்காவிற்கு மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார். அப்புறம் புரிந்தது...

      மிக்க நன்றி ரஞ்சனி அக்கா

      கீதா...

      நீக்கு
  5. கதையை முடிங்க என்று படிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ரஞ்சனி அக்கா இங்கு என்ன டைப்போ வந்தாலும் நாங்க புரிந்து கொண்டுவிடுவோம்!!!!!!

      கீதா

      நீக்கு
  6. ஐயோ எத்தனை தவறுகள்! ரகு சட்டுபுட்டுனு தன் காதலை என்று படிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா இதெல்லாம் சகஜமக்கா!! ஹா ஹா ஹா ஹா நான் டைப்பும் போது நிறையவே டைப்போ வரும். தவறுகள் வரும் அதுவும் கருத்துப் பகுதியில். பதிவிலாவது மீண்டும் மீண்டும் வாசித்து திருத்துவேன் அப்படியும் கண்ணில் படாமல் தப்பும். கீ போர்ட் கீஸ் ஓடும் லூஸாக இருந்தால்.

      அதுவும் மொபைலில் தட்ட எனக்கு மிக மிகக் கஷ்டம்.

      கீதா

      நீக்கு
  7. இல்லை ரமேஷுக்கே ரகுவின் தவிப்பு புரிந்து அனானி கடிதம் எழுதி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளைக்குப் பாருங்க...

      இது அன்பானவர்களே நல்லது என்று நினைத்து தப்பாகச் செய்வதால் ஏற்படும் பிரச்சனை. இது நெல்லை சொல்லியிருப்பதன் கருத்தை பேஸ் செய்தது

      மிக்க நன்றி ரஞ்சனி அக்கா உங்கள் கருத்துகளுக்கு

      கீதா

      நீக்கு
    2. ரஞ்சனிக்கா அதான் ரகு மாலினியை விட கொஞ்சம் சிறியவன் என்று பாட்டி வேண்டாம் என்று சொல்லிவிட்டாங்களே...அதனால் அது ரூல்ட் அவுட்

      மிக்க நன்றி ரஞ்சனிக்கா

      கீதா

      நீக்கு
    3. ரகு மாதக் கணக்கில் சின்னவன் என்றால்
      மணமுடிப்பதில் என்ன தவறு.
      வெகு சுவாரஸ்யம் கீதா. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.
      அப்பாடி எத்தனை பெரிய குடும்பம்:)

      நீக்கு
    4. எங்க வீட்டிலும் இவ்வளவு கும்பல் உண்டு.
      என் இரண்டு பாட்டிகளும் என்னை விடப் பத்து வயது அதிகமானவர்களுக்கு என்னை
      மணமுடிக்க யோசனை செய்தார்கள்.
      சொத்து கையை விட்டுப் போகக் கூடாதென்று.
      என் அப்பா கண்டிப்பாக இருந்ததால்
      நான் தப்பித்தேன்:)

      நீக்கு
    5. வல்லிம்மா அது இந்தக்காலத்துல வயசு ஒரு வருஷம் ரெண்டுவருஷம் சின்னவனா இருந்தா கூட பசங்கள் கல்யாணம் செஞ்சுக்கறாங்க. இது கொஞ்சம் வருஷம் முன்ன ஸோ அந்த வீட்டுப் பாட்டியே வேண்டாம்னு விடுட்டுவிடுகிறார். செஞ்சா தன் மகள் குடும்பம் மகன் குடும்பம் ரெண்டுமெ நன்றாக இருக்கும் என்று நினைத்தாஅலும்.

      ஆஹா உங்களையும் பாட்டி பத்து வயது பெரியவருக்கு மணம் முடிக்க யோசனை செஞ்சாங்களா?

      என் பாட்டியும் கூட 20 வயசுதான் அப்ப எனக்கு 30 வயசு க்டந்தவரைப் பேச நினைத்தாங்க. நானோ நான் மேலே படிக்கணும் என்று விழுந்து அழுது புரண்டு நல்லகாலம் ஏதோ பையன் வீட்டிலேயே வேண்டாம்னு சொல்லிட்டாங்க...ஹா ஹா ஹா

      உங்க அப்பா சப்போர்ட்டிவாக இருந்தது ரொம்ப நல்ல விஷயம் அம்மா.

      மிக்க நன்றி வல்லிம்மா.

      கீதா

      நீக்கு
  8. //“தெரியாது மாலினி……..மாலினி தப்பா எடுத்துக்காத. நீ ரொம்ப ஜாலி டைப். பப்லி கேரக்டர். ஆனா ரமேஷ் உனக்கு அப்படியே ஆப்போசிட். ரொம்ப மூட் அவுட் ஆவான். பல சமயங்கள்ல சிரிக்கக் கூட மாட்டான். உனக்கும் அவனுக்கும் பொருத்தமே இல்லை. அதான் வருத்தம் எனக்கு…”//

    இப்படித்தான் இறைவன் சிலரை சேர்த்து வைத்து விடுகிறான்.

    முடிவை தெரிந்து கொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா அதே தான். இப்படி நிறைய முடிச்சு போடுகிறார்..

      அடுத்த பகுதி வாசிக்கும் போது தெரியும்

      மிக்க ந்னறி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  9. முடிவு எப்படியோ..... அடுத்து படித்திடுவோம்:)

    பதிலளிநீக்கு