சனி, 10 ஜூன், 2017

க க க போ தெரியுமா?


தலைப்பைப் பார்த்து, யாரும் குழம்பாதீங்கோ ! 


விளக்கம் : கண்டிஷனல்  கருவுக்கு கதை போட தெரியுமா? 

அதாகப்பட்டது, நாங்க ஒரு கதைக்கரு இங்கே கொடுப்போம். சில கண்டிஷனும் போடுவோம். 

அந்தக் கருவை கண்டிஷனாக வளர்த்து, நீங்க ஒரு சிறுகதை எழுதவேண்டும். 

(என்னது தொடர்வதையா? சாரி தொடர்கதையா? ஊஹூம் - அதெல்லாம் கிடையாது. முடியாது. நஹீ. etc )

கரு இதுதான்: 

ஒரு விவாகரத்தான ஆண். ரயிலில் ரிசர்வ் செய்து, பத்துமணி நேரப் பயணம். அதே ரயிலில், விவாகரத்து செய்த / செய்யப்பட்ட  மனைவி புதிய கணவனுடன், புதிய கணவனுக்கு பழைய கணவரைத் தெரியாது. நீண்ட தூர, நேரப் பயணம் என்பதால், பயணிகள் எல்லோரும்  ஒருவருக்கொருவர் பெயர், ஊர், என்ன தொழில், ஏன் இந்தப் பயணம் போன்று விவரங்களுடன்  அறிமுகம் செய்துகொள்கிறார்கள். பிறகு பயணிகள் ஒருவருக்கொருவர் பேசியபடி பயணிக்கிறார்கள். விவாகரத்தான ஆணும், புதிய கணவனும்தான் அதிகம் பேசி, ஒருவரைப்பற்றி மற்றவர் அதிக விவரங்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். 
      


கண்டிஷன்: 

கதையின் கடைசி வரி இதுதான். " பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் அவர்கள்." 


============================

மற்றபடி, கதையின் தலைப்பு, பெயர்கள், வசனங்கள், இத்யாதி எல்லாம் உங்கள் இஷ்டம் போல். 

எழுதிய கதையை அவரவர் தளங்களில் வெளியிட்டு, சுட்டியை 

kggouthaman@gmail.com

and 

sri.esi89@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம். உங்கள் வலைப்பூவில் வெளியிடுவதாக இருந்தால், முன்னுரையில், இந்தப் பதிவிற்கு ஒரு சுட்டி கொடுங்கள். 

அல்லது கதையை இதே மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 


மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பின்னூட்டத்தில் கேளுங்கள். 

Start Music. 


22 கருத்துகள்:

  1. அஆவ் !!!தாங்க்யூ :) கமெண்ட் போடா முடியாம தவிச்சிட்டோம் :)
    கீதாக்கா வாங்க வாங்க அந்த பொற்கிழி உங்களுக்கே :)
    கமெண்ட் பெட்டி திறந்தாச்சு நமக்கு

    பதிலளிநீக்கு
  2. அதிரா :) பாடப்போறீங்களா இருங்க காதை மூடிக்கறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர் காதை நன்கு மூடுங்கோஓஓஓ கண்ணை நன்கு திறங்கோ என் கதை படிக்க:)

      நீக்கு
  3. // Start Music // அதைத்தான் யோசனை செய்து கொண்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. எங்கள் Blogல் தான் கதை கேட்பது என்றால் இங்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா.. இங்கே முதல் கதை எழுதி பொற்கிளியை தட்டிச் செல்லப்போகிறேன்ன்:)..

      நீக்கு
  5. இங்கே எழுதப்படும் கதைகள் அல்லது சுட்டிக்காட்டப்படும் கதைகள் இயன்றவரை உடனுக்குடன். அங்கே 'கேட்டு வாங்கிப் போடும் கதை'. இங்கே 'போட்டு வாங்க கேட்கும் கதை'! அம்புட்டுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இயன்றவரை உடனுக்குடன்.///
      இதனால்தான் உடனே எழுதிட மனம் துடிக்கிறது... வெயிட் பண்ணுவது என்பது.. எனையும் எழுத வெயிட் பண்ணி விடுகிறது..:(.

      //இங்கே 'போட்டு வாங்க கேட்கும் கதை'! அம்புட்டுதான்!//
      கர்ர்ர்ர்ர்ர்:).

      நீக்கு
  6. போடட்டாஆஆஆஆஅ போடட்டாஆஆஆஅ? கெளை அண்ணன் பொற்கிளி ரெடியாஆஆஆஆஅ?:) கதை ரெடியாக்கிட்டேன்ன்ன்ன்ன்.. இதோ ரெயின் புறப்பட இருக்கிறது இன்னும் சற்று நேரத்தில்...

    சற்று நேரம் = சில பல மணித்தியாலங்கள்:).

    பதிலளிநீக்கு
  7. வந்துவிட்டதூஊஊஊஊஊஊஉ

    http://gokisha.blogspot.com/2017/06/blog-post_11.html

    பதிலளிநீக்கு
  8. பொன் பொதி உங்களுக்கு தான் அதிரா ...ஹா ஹா

    பதிலளிநீக்கு
  9. அட? கமென்ட் பொட்டி திறந்ததே தெரியாமப் போச்சே!

    பதிலளிநீக்கு
  10. அருமையான முயட்ட்சி நண்பரே

    பதிலளிநீக்கு
  11. சிறுகதைக்கான கரு சூப்பரா இருக்கு. நானும் எழுதலாம் என்று யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. எழுதிவிட்டென் :)

    என் தளத்தில் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  13. இதென்ன தளம் புதுசா இருக்கு இன்றுதான் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  14. அனுப்பிச்சிட்டேன் கே ஜி ஜி சார்

    பதிலளிநீக்கு
  15. எனக்கு இந்த விவரத்தைப் பற்றி ஏஞ்சல் தான் சொன்னாங்க....அதிராவின் கதையை வாசித்தேன் ஆனால் இதற்கான கதை என்பது புரியவில்லை. பயண அவசரத்தில் இருந்ததால் கதையை மட்டும் வாசித்துவிட்டு வந்தேன். கேஜிஜி அங்கு வந்ததும் கூட ஆச்சரியம் தான் அப்போதும் இந்த மர மண்டைக்குப் புரியவில்லை ஹஹஹஹ்......இப்போது ஏஞ்சல் சொல்லிச் சுட்டி வந்ததும் தான் புரிந்தது....எழுதி அனுப்ப முயற்சி செய்கிறேன்..

    கீதா...

    பதிலளிநீக்கு
  16. நல்ல முயற்சி...எங்கள் ப்ளாக், எங்கள் ஏரியா எல்லாம் இப்போது பலரரது ஏரியாவாக திறமைகளை ஊக்குவிக்கும் வளர்க்கும் ஏரியாக்களாக உருவாகிவருவது செம !!! சரி உங்களுக்கும் மேடை போட்டு பாராட்டு விழா எடுத்திரலாம்...எப்படி??!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. நானும் ஒரு கதை ஆரம்பிச்சுட்டுப்பாதிலே முடிக்காம வைச்சிருக்கேன்! இன்னும் இரண்டு நாளைக்கு முடியாது! பார்ப்போம்! :)

    பதிலளிநீக்கு