வெள்ளி, 27 ஏப்ரல், 2012
செவ்வாய், 3 ஏப்ரல், 2012
நல்ல சகுனம் :: By மீனாக்ஷி.
அன்புள்ள எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு,
இந்த பகுதில குழந்தைகள் வரையறாங்களோ இல்லையோ நான் ரொம்ப மும்முரமா வரையறேன். :) நான் வரைஞ்ச இந்த கழுதை பேரு 'அபெல்' (Abel). எந்த கழுதை படத்தை பாத்தாலும் அதோட கண்கள் சோகமா, பாக்கவே பாவமா இருக்கா மாதிரி எனக்கு தோணும். இப்ப இந்த படத்தை பாக்கும்போதும் எனக்கு அப்படித்தான் தோணித்து.
சின்ன வயசுல எங்க சித்தப்பாவோட ஏதாவது கிண்டலா பேசும்போதெல்லாம் விளையாட்டா என்னை 'கழுதை, உன்னை உதைக்கணும்' ம்னு சொல்லுவார். 'கழுதை தானே உதைக்கும் சித்தப்பா' அப்டின்னு நான் பதிலுக்கு சொன்னா, 'இந்த கழுதையை நான்தான் உதைப்பேன்' அப்படின்னு சொல்லுவார். :) இப்ப அவர் உயிரோட இல்லை. எனக்கு இந்த கழுதை படம் வரையும்போது அவர் கிண்டல் பண்ணினதுதான் ஞாபகம் வந்துது.
என்னோட நேரத்துல இந்த படம் வரைஞ்ச கொஞ்ச நேரம் ரொம்ப சுவாரசியமா இருந்துது. நன்றி உங்களுக்கு.
அன்புடன்
மீனாக்ஷி.
திங்கள், 2 ஏப்ரல், 2012
செவ்வாய், 27 மார்ச், 2012
ஞாயிறு, 25 மார்ச், 2012
மியாவ் By மீனாக்ஷி!
அன்புள்ள எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு,
நான் மெயில் பண்ணின மியாவ் படம் கிடைச்சுதா? நான் கவனம் இல்லாம இந்த படத்தை engalcreations@gmail. com இந்த முகவரிக்கு அனுப்பிட்டேன். அதான் இப்போ திரும்ப இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பறேன்.
இது நான் வரைந்த பூனை குட்டி. பதிவுல வந்த பூனை துறு துறுன்னு ரொம்ப அழகா இருந்துது. அதனால அச்சா அதே மாதிரி வரைய ரொம்ப முயற்சி பண்ணினேன். ஆனாலும் ஓரளவுதான் அதே மாதிரி வந்திருக்கு. கொஞ்சம் உர்ருன்னு கூட இருக்கு. :) இதோட பேரு 'cutie'. வரைய ரொம்ப சுவாரசியமா இருந்துது. நன்றி உங்களுக்கு.
அன்புடன்
மீனாக்ஷி
திங்கள், 19 மார்ச், 2012
சனி, 17 மார்ச், 2012
மியாவ்! மியாவ்!!
கோடை வந்துவிட்டது.
குழந்தைகளுக்குக் கோடை விடுமுறையும் வந்திருக்கும் அல்லது விரைவில் வந்துவிடும்.
குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மீண்டும் படம் வரையும் ஆர்வத்தைக் கிளறிவிடலாம் என்று நினைத்ததால், இந்தப் பதிவு.
ஒரு A5 அளவு பேப்பர் எடுத்துக் கொள்ளவும். (210 mm X 149 mm - என்று நினைக்கின்றோம். சரிதானா ஹுசைனம்மா?)
அதில் கீழ்க்கண்ட வகையில், படிப்படியாக பென்சில் ஸ்கெட்ச் செய்யவும்.
இறுதியில் வருகின்ற உருவத்தை, தேவையானால், வர்ணம் அடித்து அல்லது கருப்பு வெள்ளைப் படமாக, JPG or BMP ஃபார்மட்டில், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
படம் வரையத் தெரியாதவர்கள் பூனை பற்றிய கவிதை, கதை, விவரங்கள், வியாசம் - என்று எதையாவது பதியுங்கள், அனுப்புங்கள்.
பதிவிடுகின்றோம் உங்கள் கலக்கல்களை / கிறுக்கல்களை!
தயக்கமில்லாம அனுப்புங்க.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















