செவ்வாய், 16 அக்டோபர், 2018

சு டோ கு 1 -- குரோம்பேட்டை குறும்பன்.

     
குணபதிக்கு, கோபம் கோபமாக வந்தது! 

சுந்தரி, தமன்னா ஜாடையில் இருந்தது, நெல்லைத்தமிழனுக்கு வேண்டும்னா பிடிக்கலாம்! தன்னுடைய கற்பனைக் கதாநாயகி போல அவளால் ஆக முடியாது. 
அவளுடைய அம்மா ஐம்பது வயதானால் அனுஷ்கா எப்படி இருப்பாளோ அந்த மாதிரி இருக்காங்க. அவள் புருஷன் பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி இருக்கார். அவங்களுக்கு என்னவோ இந்த விசித்திர புத்தி, விபரீத புத்தி!


              
(அடேய் யாரங்கே? இந்த கு கு அட்ரஸுக்கு ஒரு ஆட்டோ அனுப்புடா !)

ஆனாலும், இந்த அப்பா அம்மாவுக்கு புத்தி எங்கே போயிற்று? அவங்க சொன்ன கண்டிஷனை, அப்படியே பின்பற்றுவோம் என்று சொல்லி, என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்களே!

"போய் தங்கிவிட்டு சொல்வதை, இப்பவே சொல்லிடறேனே, எனக்கு சுந்தரியைப் ...."

" டேய் என்ன சொல்வதாக இருந்தாலும், ஒரு வாரம் கழிச்சு சொன்னால்தான் நாங்க ஏற்றுக்கொள்வோம். உடனே மூட்டையைக் கட்டிகிட்டுப் போ" என்று சொன்னார் மூர்த்தி. "அப்புறம், இன்னொரு சமாச்சாரம். நீ அங்கேயும், சுந்தரி இங்கேயும் இருக்கின்ற இந்த ஒருவாரத்துக்கு, அங்கிருந்து இங்கேயும், இங்கிருந்து அங்கேயும், No phone / mobile calls. பெரியவங்க நாங்க இந்தக் கண்டிஷனையும் கே ஜி ஜி க்குத் தெரியாம போட்டிருக்கோம். இந்த வீட்டிலும், அந்த வீட்டிலும் நடக்கின்றவைகளை அவசரப்பட்டு மற்றவர்க்கு சொல்லி, அதனால அவர்களின் இயல்பான நடத்தை மாறிவிடக்கூடாது என்பதால்தான் இந்தக் கண்டிஷன். புரிஞ்சதா?" 

"நீ எல்லாம் ஒரு அப்பனா ?" என்று மனதுக்குள் பழிப்புக் காட்டியவாறு, சூட்கேசில், ஒரு வாரத்துக்கான உடை, மற்றப் பொருள்களை எல்லாம் அடைத்து எடுத்துகொண்டான் குணபதி.

======================
ஞாயிறு.

" வாங்க மாப்பிளே! இதுதான் சுந்தரியின் ரூம். இங்கேதான் நீங்க ஒருவாரம் தங்க வேண்டும். " பூ வி, வாயெல்லாம் பல்லாக ஒரு ரூமைக் காட்டினார்.

அந்த ரூமில் உலவிய செண்ட் வாசனையே குணபதிக்குப் பற்றிக்கொண்டு வந்தது. 'இது என்ன.  கந்தூரி உற்சவ கடைவீதியில் நுழைந்ததுபோல அப்படி ஒரு ஸ்ட்ராங் வாசனை! மைல்ட் செண்ட் எதுவும் பிடிக்காதா சுந்தரிக்கு?' என்று நினைத்துக்கொண்டான்.

அறையில் மூன்று கண்ணாடி பீரோக்கள். ஒன்றில் புடவை பிளவுஸ் எல்லாம் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இரண்டாவது பீரோவில் நவீன உடைகள்.

மூன்றாவது பீரோவில் மேலே உள்ள இரண்டு தட்டுகளில், புத்தகங்கள். புத்தகங்களின் தலைப்புகளை  மேலோட்டமாகப் பார்வையிட்டான்.

Test your IQ.
Brain Teasers.
Creativity.
Party Jokes.
Unsolved murders in history.
Forgotten celebrities of nineteenth century.
How to say no.
I am OK you are OK.
You are the universe.
Theory of Relativity.
Su Do Ku in Sumarian culture.

இன்னும் பலதரப்பட்ட  தலைப்புகள் கொண்ட புத்தகங்களை, பிரமிப்போடு பார்த்தான். இதெல்லாம் இவளே வாங்கி படித்தவையா அல்லது எங்காவது சுட்டவையாக இருக்குமா என்று யோசித்தான்.

பீரோவின் கீழ்த்தட்டில் ஹிந்து பேப்பர்கள் கிட்டத்தட்ட ஒரு மாத பேப்பர்கள் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

ஒருகணம் தன்னுடைய வீட்டில், தன் அறையில், புத்தகங்களும் பேப்பர்களும் எப்படி தாறுமாறாக பெட்டி மேல், பீரோவில், கட்டில் மேல் என்று இறைந்துகிடக்கும் என்று நினைத்துப் பார்த்தான்.

காலை உணவு உண்ண, டைனிங் டேபிள் அருகே சுந்தரியின் பெற்றோர் மற்றும் அவர்களின் பெற்றோர் என எல்லோரும் காத்திருந்தனர். குணபதி, அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான். அவர்களோடு அமர்ந்து, நடுவில் ஒரு பெரிய பாத்திரத்தில் இருந்த இட்லிகளை நோட்டம் விட்டான். சுற்றிலும் சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெய் என்று வகை வகையான விஷயங்கள்.

" என்ன, எவ்வளவு வேண்டுமோ அதை சங்கோஜப்படாம எடுத்துப் போட்டுக்குங்கோ மாப்பிளே!"

முதலில், தயக்கமாக இரண்டு இட்லிகளை எடுத்துப்போட்டுக் கொண்டான் குணா. கொஞ்சம் சட்னி, கொஞ்சம் சாம்பார் என்று போட்டுக்கொண்டான்.

மிருதுவான இட்லியும், சுவையான சட்னியும், சாம்பாரும் மிகவும் சுவையாக இருந்தன. அப்புறம் இரண்டு இட்லி, மிளகாய்ப்பொடி. இன்னும் இரண்டு... யாராவது தன்னை நோட்டமிடுகிறார்களா என்று பார்த்தான் குணா.

சுந்தரியின் தாத்தாக்கள் இருவரும் அந்தக்காலத்து ஹோட்டல்கள் பற்றி பேசியபடி இட்லிகளை காலி செய்துகொண்டிருந்தார்கள். சுந்தரியின் அப்பா குணபதியிடம், தன் அலுவலகப் பிரதாபங்களை கொட்டிக்கொண்டிருந்தார். நடுநடுவே குணபதியின் வேலை, அலுவலகம் பற்றி சின்னச்சின்ன விசாரணைகள். பாட்டிகளும், சுந்தரியின் அம்மாவும் இட்லிக்கு எந்தக்கடை அரிசி, பருப்பு எல்லாம் உகந்தது என்றும், என்ன விகிதத்தில் எவ்வளவு நேரம் ஊறப்போட்டால் நன்றாக இருக்கும், வெந்தயம் எவ்வளவு போடலாம் என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

காலை உணவுக்குப் பின் தாத்தாக்கள் இருவரும் ஹாலில் அமர்ந்து டிரம்ப் முதல் தெலுங்கானா தேர்தல் வரை தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.

பாட்டிகளும், சுந்தரியின் அம்மாவும், சமையல் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர். சுந்தரியின் அப்பா, அவர்களுக்கு வேண்டிய காய்கறி நறுக்குதல், தேங்காய் உடைத்தல், துருவுதல் போன்ற வேலைகளை செய்துகொண்டே, ஹால் கிழவர்கள் பேச்சிலும் அவ்வப்போது கமெண்ட் சொல்லிக்கொண்டிருந்தார்.

குணா தன்(?) ரூமுக்கு வந்து அன்றைய ஹிந்து பேப்பரைப் படித்தவாறு தூங்கிப் போனான்.

" மாப்ளே .. எழுந்திருங்கோ. சாப்பாடு தயார் ! " என்ற சு அப்பா குரலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான்.

காலை உணவு போன்றே மதிய உணவும் பிரமாதமான சுவை. எல்லாவற்றிலும் வேண்டிய அளவுக்கு மேலாகவே ஒரு பிடி பிடித்தான் குணா.

ஆஹா! சுந்தரியைக் கல்யாணம் செய்துகொண்டால், வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல் சாப்பிடலாம் என்று நினைத்துக்கொண்டான். கூடவே இன்னும் ஒரு சந்தேகமும் வந்தது. 'சுந்தரிக்கு சமைக்கத் தெரியுமா' என்பதுதான் அது. அதைப் பிறகு கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டான்.  

மாலையில், நண்பன் ஒருவன் அவர்கள் வீட்டு நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி ஒன்றுக்குக் கூப்பிட்டிருந்ததால், சுந்தரி வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு, இரவு எட்டு மணிக்குள் திரும்பிவிடுவதாகக் கூறிக் கிளம்பினான், குணா. 

இரவு திரும்பி வந்த குணா தனக்காக எல்லோரும் சாப்பிடாமல் காத்திருந்ததைப் பார்த்து மனம் சங்கடப்பட்டான். அவர்களோடு சேர்ந்து இரண்டு சப்பாத்தி, பருப்பு சாப்பிட்டான். 'இவர்களுக்கு எப்படி சப்பாத்தி இவ்வளவு மிருதுவாகவும், சுவையாகவும் செய்யத் தெரிகிறது!' என்று வியந்தான். 
   


அதையும்விடப் பேராச்சர்யம் ஒன்று அங்கே அவனுக்காகக் காத்திருந்தது. 

==========================

குணா வீட்டில் சுந்தரி. 

டி வி சீரியல் எதையும் அவள் பார்க்கவில்லை. " வேஸ்ட் ஆஃப் டைம்" என்றாள். ஆங்கில சேனலில் செய்திகள் மட்டும் இருபது நிமிடங்கள் பார்த்தாள். ஒரே செய்தி திரும்பவும் வந்த நேரத்தில், டி வியிடமிருந்து விடுபட்டு, வேறு வேலை பார்க்கப் போனாள். குணா அறையில் தாறு மாறாகக் கிடந்த புத்தகங்கள், மற்றப் பொருட்கள் எல்லாவற்றையும் ஒழுங்காக அடுக்கிவைத்தாள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சில புத்தகங்களைப் படித்தாள்.  

சுந்தரியை ஏகத்துக்குப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள், குணாவின் பெற்றோரும், அப்பாவின் பெற்றோரும். 

" இவ்வளவு படிச்ச பொண்ணு, பெரிய வேலையில் உள்ளவள், இவ்வளவு மரியாதையாகப் பழகுகிறாளே! " 

" சமையலறையில் என்னை ஒரு வேலையும் செய்யவிடவில்லை! பம்பரமாட்டமா சுழன்று கிடு கிடுவென எல்லாம் செய்கிறாள்! கேட்டாக்க இந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் எல்லாம் என் பொறுப்பு என்று சொல்லி சுறுசுறுவென சமைத்து, எல்லோரையும் டைனிங் டேபிளுக்கு அழைத்து, தானும் சரிசமமாக அமர்ந்து, சாப்பிட்டாள் !"

" ஒவ்வொரு பதார்த்தமும் பிரமாதமாக இருந்தது. அவங்க வீட்டில் எல்லோருக்குமே நன்றாகச் சமைக்கத் தெரியுமாம்!"

இதை எல்லாம், சுந்தரி, பக்கத்தில் உள்ள ஸ்டோருக்குச் சென்றிருந்த சமயம், அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். 

சுந்தரி பக்கத்தில் உள்ள ஸ்டோரிலிருந்து, தானே தேர்ந்தெடுத்த சில பொருட்களை வாங்கி வந்திருந்தாள். தான் வாங்கி வந்திருந்த அரிசியையும் பருப்பையும் மறுநாள் இட்லிக்காக ஊறப்போட்டுக்கொண்டிருந்தாள் சுந்தரி.

மூர்த்தி தன் சந்தேகத்தை சுந்தரியிடமே கேட்டுவிட்டார். 

" எப்பிடி அம்மா இவ்வளவு பிரமாதமாக சமைக்கிறாய்? "

" மாமா, எங்க வீட்டில் அம்மா, அம்மாவின் அம்மா எல்லோருக்கும் நன்றாக சமைக்கத் தெரியும். அப்புறம் நான், 'எங்கள் ப்ளாக்' வலைப்பதிவில் திங்கட்கிழமைகளில் வரும் சமையல் பகுதியையும் விடாமல் படித்து, காப்பி செய்து என் கணினியில் போட்டுவைத்துள்ளேன். நெல்லைத்தமிழன் என்று ஒருவர் பலதரப்பட்ட சமையல் குறிப்புகளை அள்ளி வீசுகிறார். ஆஹா - மனுஷன் பிச்சு உதறிடுவார்! அதை எல்லாம்தான் நான் சமைக்கிறேன்." 
   
சனிக்கிழமை ஹிந்து பேப்பரில் இருந்த சு டோ கு பகுதியில், குணா அரையும் குறையுமாய் விட்டு வைத்திருந்த எண்களை, அழகாக பூர்த்தி செய்தாள். 

திங்கட்கிழமைக் காலையில், சுந்தரி போட்டுக்கொடுத்த காபியைக் குடித்த குணா வீட்டு மக்கள் சொக்கிப்போய்விட்டார்கள்! 

இட்லியும் சட்னியும் மிகவும் பிரமாதம்! காலை உணவுக்குப் பின், தன்னுடைய அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றாள் சுந்தரி.

(மீதி அடுத்த பதிவில்!)
                 

24 கருத்துகள்:

 1. >>> மீதி அடுத்த பதிவில்..<<<

  கதையா!..
  இட்லி சட்னியா?...

  பதிலளிநீக்கு
 2. இயல்பான நகைச்சுவையுடன்
  இதுவரைக்கும் - அழகு.. அருமை!..

  பதிலளிநீக்கு
 3. >>> ஐம்பது வயதானால் அனுஷ்கா எப்படி இருப்பாளோ?... <<<

  ஐம்பது வயசா!...
  ஏன் இத்தனைக் கொடூரம் மகராஜா!?...

  பதிலளிநீக்கு
 4. நம்ம ஏரியா - ந்னு ஒரு தளம் இருக்கிறது
  ரொம்ப பேருக்கு மற்ந்து போச்சு..ன்னு நெனைக்கிறேன்!...

  பதிலளிநீக்கு
 5. குறும்பன் அடுத்த வாரத்துக்குள்ள - இரும்பன் ஆகிடாம
  கரும்பனா ஆகியிருக்கோணும்.. முருகா!...

  இடும்பன் ஆகிடாம குடும்பன் ஆகி
  உங்கோயிலுக்கு காவடி எடுக்கோணும் .. முருகா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கு கு நல்லாப் பாத்துக்குங்க! இரும்பா கரும்பா குறும்பா என்று யோசிச்சு வையுங்க.

   நீக்கு
 6. ஒரே சாப்பாட்டு பிரசங்கமாக இருக்கிறதே தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 7. இதென்ன... இப்படி ஐடியலாக ஒரு பெண் இருக்க வாய்ப்பே இல்லையே.. மிகுதிக்கு பிறகு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கு கு .... நீங்க என்ன சொல்றீங்க? நெ த சொல்வது சரிதானா?

   நீக்கு
 8. 50 வயதான அனுஷ்கா, எபி திபதிவைச் செய்துமார்த்து சமையலில் எக்ஸ்பர்ட் — என்ன உள்குத்து பலம்மா இருக்கு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! ஆமாம் இப்போதான் பார்த்தேன்! நெல்லைத்தமிழன் ரெசிப்பியாமே! தமன்னா போல இருக்கறவங்க எல்லாம் நெ த ரசிகர்கள் போலிருக்கு!

   நீக்கு
 9. சிலசமயம் நிஜத்தின் கசப்புகளை மறக்க கற்பனை உலகில் சஞ்சரிப்பதுபோல் உள்ளது. அடுத்த வாரம் பார்ப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கு கு .. உங்களுக்கு நிஜவாழ்க்கை கசப்பா? நெ த சொல்கிறாரே?

   நீக்கு
  2. என் நிஜ வாழ்க்கை கசப்பு இல்லை. அது எப்பவும் ரவா கேசரி (நெல்லைத்தமிழன் ரெசிப்பி)
   குரோம்பேட்டை குறும்பன்.

   நீக்கு
 10. //அவளுடைய அம்மா ஐம்பது வயதானால் அனுஷ்கா எப்படி இருப்பாளோ அந்த மாதிரி இருக்காங்க. //

  ஹஆஹாஆ :) இதையெல்லாம் ஸ்ரீராம் பார்த்தாரா இல்லையா :)

  பதிலளிநீக்கு
 11. நெல்லைத்தமிழன் என்று ஒருவர் பலதரப்பட்ட சமையல் குறிப்புகளை அள்ளி வீசுகிறார். ஆஹா - மனுஷன் பிச்சு உதறிடுவார்! அதை எல்லாம்தான் நான் சமைக்கிறேன்///

  நானும் வழி மொழிகிறேன் :) நெல்லைத்தமிழனின் இரண்டு ரெசிப்பிக்கள் ஸ்வீட் போளி அப்புறம் இனிப்பு தோசை இதை இங்கே ஒரு பிரிட்டிஷ் பெரியம்மாக்கு குடுத்தேன் .செம பாராட்டு .நெய் மட்டும் சேர்களை பிக்காஸ் அவங்க வீகன் .
  அப்புறம் சுந்தரிக்கண்ணில் அந்த குழாய் சாதமும் பட்டதான்னு சொல்லுங்க குரோ குரு :)

  பதிலளிநீக்கு
 12. நல்லவேளை எங்க கல்யாணத்தப்போ இப்படிலாம் ரிஸ்க் எடுக்கலை :)

  பதிலளிநீக்கு
 13. எங்கள் ப்ளாக் திங்கள் சமையல் பகுதியைப் பார்த்து சமைக்க கற்றுக் கொண்டால் சிறப்புதான். அதுவும் நெல்லை சமையல் என்றால் மேலும் சிறப்பு.
  கதை நன்றாக போகிறது.

  பதிலளிநீக்கு
 14. நாங்க எல்லோரும் சமையல் குறிப்புப் போடும்போது நெ.த.வுக்கு மட்டும் சிறப்பா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அநியாயமா இல்லையோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோவ் கீதாக்கா நம்ம ரெசிப்பீஸ் நினைவு வராம இருக்கறது பெட்டர்க்கா இல்லின்னா சுந்தரி உங்களை என்னை எல்லாரையும் ஆன்ட்டி னு கூப்பிட்ட்டுவா

   நீக்கு
 15. சு டோ கு கதையில், எல்லோரும் இப்படி சமையல் பேச்சு மட்டும் பேசுகிறீர்களே! இது நியாயமா!
  பாராட்டியவர்களுக்கு நன்றி! குரோம்பேட்டை குறும்பன்.

  பதிலளிநீக்கு