சனி, 13 அக்டோபர், 2018

சு டோ கு : சுந்தரி நீயும் குணபதி நானும்…….



 சுந்தரி நீயும் குணபதி நானும்…….
கீதா ரெங்கன் 

“ஹலோ ஆம் ஐ ஸ்பீக்கிங்க் டு குண்பத்தி?”


“……………………………………அழகான பெயரை ஏதோ ஊதுபத்தி ப்ரான்ட் மாதிரி சொல்றது யாருங்க நீங்க?” என்று சிரித்த குணபதி கூல் டைப்.

“உங்க பேரு அப்படித்தான் இருக்கு. வெல்….நான் சன்ட்ரீ.”

“சன்ட்ரீ?” ஒரு நிமிடம் யோசித்த குணபதிக்குப் புரிந்துவிட்டது. “ஓ!! சுந்தரி?”

“ஹலோ!. சன் ட்ரீ….. எஸ் யு என் இதை சன் னு தானே சொல்றோம்…பெயரை மட்டும் ஏன் சுன் ங்கணும்…?”

“ஓ!....நீங்க ரொம்ப புத்திசாலிங்க. எதுக்குக் கூப்பிட்டீங்க?”

“பொண்ணு பாத்தமா, கேசரிய சப்புக் கொட்டிச் சாப்பிட்டமா, சூடான பஜ்ஜிய கடிச்சுட்டு ஃபூ ஃபூ நு ஊதி புகை வெளிய வர அசடு வழிஞ்சமா, யெஸ் ஆர் நோ சொல்லிட்டுப் போவோமானு இல்லாம உங்க அப்பா…… அதென்ன?...... நான் உங்க வீட்டுல ஒரு வாரமாம், நீங்க எங்க வீட்டுல ஒரு வாரம் தங்கணுமாம்……அப்புறம் ரெண்டு ஜோடி பெரிசுங்களும், ஓகே சொல்லணுமாம். ஒன்னு பெரியவங்க டிசைட் பண்ணனும். இல்லைனா நானும் நீங்களும் டிசைட் பண்ண வேண்டியது. இது என்ன அன்கன்வென்ஷனலா குட்டைய குழப்பணும்? நீங்க உங்க அப்பாகிட்ட இதெல்லாம் கேக்க மாட்டிங்களா?”

ஸ்டார்ட்டிங்கே சரியில்லையே. இந்த விரட்டு விரட்டுது…….“ஹலோ சுந்தரி! ஓ ஸாரி! சன்ட்ரீ இது கிமு இல்லை கிபி…..ஹைடெக் 2018…..எங்கப்பா அம்மா ரெண்டு பேருமே ஃபார்வேர்ட் திங்கிங்க். கல்யாணத்துக்கு அப்புறம் சப்போஸ் உங்களுக்கு எங்க வீடு பிடிக்காம ஒரே மாசத்துல….இல்லல்ல ஒரே நாள்னே வைச்சுக்குவோம் கோர்ட்டுக்குப் போனா ரெண்டு குடும்பத்துக்கும் கஷ்ட நஷ்டம்தானே?!!”

“ரெண்டு பேருக்குமா? மீனிங்? ஓ! அப்ப நீங்களும் ஈக்வல் ஷேர் கல்யாணச் செலவுல? அப்ப அந்த பாயின்ட்ல நீங்க பாஸ்! சரி அதெப்படி ஒரு வாரத்துல புரிஞ்சுக்க முடியும்? நீங்க அந்த ஒரு வாரத்துல நடிச்சு எங்கள ஏமாத்தலாம் இல்லியா?”

“அது உங்களுக்கும் பொருந்தும் இல்லையா? ஐ ஆம் பாஸிட்டிவ்”

“……………………………………………………. ஸோ நான் சம்மதம் இல்லைனு சொன்னா?”

“அது உங்க இஷ்டம். கண்டிஷன் போட்டவங்க கிட்ட சொல்ல வேண்டியது.”

“சினிமா மாதிரி நாம லவ்வர்ஸ் இல்ல…… ரெண்டு பேரன்ட்ஸையும் ஓகே சொல்ல வைக்கறதுக்காக மாறி மாறி போறதுக்கு….. அப்ப உங்களுக்கு ஓகேயா?”

“யெஸ்! ஐ ஆம் ஓபன் டு எவ்ரிதிங்க். சப்போஸ் இந்தக் கல்யாணம் நடக்கலைனாலும் நீங்க எங்களுக்கு ஃப்ரென்ட்ஸ் தான். ஓபன் மைண்டோட அப்ரோச் பண்ணித்தான் பாருங்களேன்”

“சரி உங்க பாயிண்டுக்கே வரேன்……..சப்போஸ் ஒரு வாரத்துக்கு அப்புறம் இந்தக் கல்யாணம் சரிப்படாதுனு தோணுதுனு வையுங்க. நீங்க இன்னொரு பொண்ணு பார்த்தா அந்த பொண்ணு உங்க வீட்டுக்கும் நீங்க அவங்க வீட்டுக்கும் இப்படித்தான் ஒரு வாரம் போய் இருக்கணும்னு உங்கப்பா சொல்லுவாரா? அப்படினா நான் எத்தனாவது?”

குணபதிக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை. சமாளித்தான். “இ..ல்..லை……இதுதான் எனக்கும் ஃபர்ஸ்ட் டைம். எங்கப்பாவுக்கு இந்த ஐடியா கொடுத்ததே அவரோட க்ளோஸ் ஃப்ரென்ட் கேஜிஜி அங்கிள். நாவல் ஐடியா! வித்தியாசமான அனுபவம்னு தோணிச்சு. ஸோ………… ஓகே சொல்லிட்டேன்.”

“ஒரு வருஷம், ரெண்டு வருஷம்னு லவ் பண்ணிக் கல்யாணம் பண்றவங்களே கூட கல்யாணத்துக்கு அப்புறம் ஒத்து வராம பிரியறாங்க. இந்த ஒரு வாரம் அப்படின்றது யோசிக்க வைக்குது. வாங்க பழகிப் பார்க்கலாம்னு சிவாஜி படத்துல வர டயலாக் மாதிரி இருக்குது. லிவிங்க் டு கெதர்னு ஏதோ எக்ஸ்பெரிமென்ட் எல்லாம் இப்ப பண்றாங்க. நல்ல காலம் உங்கப்பா அப்படி சொல்லலை! ம்ம்ம்ம் வெல் மீ டேக் த சாலஞ்ச்!”
“ஹா ஹா ஹா ஹா….”

“ஏன் சிரிக்கறீங்க?”

“இல்ல ஏதோ சவால் மாதிரி……ஜெயிக்கணும் அப்படின்ற மாதிரி பேசறீங்களே அதான்…..லைஃப் இஸ் நாட் எ கேம் டு ப்ளே. குடும்பத்துல யாரு ஜெயிக்கறது, தோக்கறதுன்றது கிடையாது. வி ஹேவ் டு லிவ் இட்.”

“ஐ அக்ரீ. ஆனா லைஃப் இஸ் ஃபுல் ஆஃப் சாலஞ்சஸ். டு யு அக்ரீ? அந்த சாலஞ்சஸ தைரியமா கடந்து வரதும் வெற்றிதானே? இதுவும் ஒரு சாலஞ்ச் தானே? அந்த அர்த்தத்துல சொன்னதுதான் அது.”

‘யம்மாடியோவ் இந்தப் பொண்ணு என்னா போடு போடுது!. எல்லாத்துக்கும் பதில் ரெடியா வைச்சுருக்கா. கொஞ்சம் சீரியஸ் டைப்போ? பட் இட்ஸ் கொயட் இன்ட்ரெஸ்டிங்க்’….. “ஓகே நாளைக்கு என் பேரன்ட்ஸ் உங்க பேரன்ட்ஸோட டிஸ்கஸ் பண்ணுவாங்க. ஸோ நாளை சந்திக்கலாம். பை ஃபார் நௌ.”


****************************************************


“கொஞ்சமாவது உங்களுக்கு அறிவு இருக்கா? யோசிக்க மாட்டீங்களா? சம்பந்திக்கிட்ட இதென்ன வழக்கத்தில இல்லாத புதுக்கதையா இருக்குனு கேக்க மாட்டீங்களா?” அடுக்களையிலிருந்து கோபத்தில் பொரிந்த வார்த்தைகள் டைனிங்க் டேபிளில் டங்கென்று வந்தது காபி வடிவத்தில்! இது சுந்தரியின் அம்மா புவனேஸ்வரி. புவனேஸ்வரிக்கு அன்று துர்கை பூஜை இருக்கும் டென்ஷன் வேறு.

“இன்னும் ஒரு பேச்சுவார்த்தை கூட ஆரம்பிக்கலை… அதுக்குள்ள சம்பந்தீன்ற?” டைனிங்க் டேபிளில் விரித்த அன்றைய செய்தித்தாளில் ஓடிய கண்களுடன்,  கையில் காபியை சிப்பிக் கொண்டே சுந்தரியின் அப்பா விச்சு எனும் விஸ்வநாதன்.

“சரி சம்பந்தம் நடக்கலை...சம்பந்தினு சொல்றதுக்கு..…சமபந்தினு சொல்லறேன்…ஓகே தானே? .விஷயத்துக்கு வரேன்… என்னதான் இது ஃபேஷன் உலகமா இருந்தாலும் இப்படி நம்ம பொண்ணை அவங்க வீட்டுல ஒரு வாரம் தங்க வைக்கறது எல்லாம் ஒத்து வருமா? நான் வீட்டுக்குள்ள அண்டவே விடாத நம்ம உறவுக் கூட்டம் எல்லாம் எங்கடானு காத்திட்டிருக்கும். தெரிய வந்துச்சுனா இந்தக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகலைனா, நாளைக்கு எப்படி வேற பையன் பார்க்க முடியும்? யோசிக்க மாட்டீங்களா….” ஜய ஜய ஹே மகிஷாசுர மர்த்தினி ரம்ய கபர்த்தினி சைல சுதே….

“என்னப்பா என் பெயர் எல்லாம் அடிபடுது?” குளிக்கப் போயிருந்த சுந்தரி கேட்டுக் கொண்டே வரவும்

“இன்னிக்கு சமையல் மாமி வரலை. குணபதி வீட்டுக்காரங்க வேற வராங்கலியா…..கடுகு வெடிக்குது!! சேம்பு வேற பொரிஞ்சு சிவப்பா ஆகுது பாரு. எதுக்கு இப்படி மல்டி டாஸ்கிங்க் டென்ஷன் உங்கம்மாவுக்கு? சாமிக்குப் பண்ணும் போது சாமிய மட்டும் கான்சன்ட்ரேட் பண்ண்ணாம.” விச்சு நடந்ததை ஷாட் ரீ கேப் கொடுத்தார்.

“இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சலில்லை. பாரு சுந்தரி அமைதியா இருந்த வீடு இப்ப எப்படி சத்தமா இருக்குதுனு”

“நான் சமைக்கறேன்னா உனக்குப் பிடிக்காது. இப்ப என்னன்ற? கொஞ்சம் பொறுமையா இரேன். இன்னும் எதுவும் பேசி நடக்காத போது எதுக்கு ஓவரா கற்பனை பண்ணிக்கிட்டு இப்படி டென்ஷன் ஆகுற? கீப் யுவர் மைன்ட் ஓபன். அவங்க என்ன ப்ளான் சொல்ல வராங்கனு பார்ப்போம். நம்ம பொண்ணுக்கும் 28 வயசு ஆயாச்சு. ஞாபகம் இருக்கட்டும். ஃப்ரிட்ஜ்ல கூலா தண்ணி இருக்கு பாரு எடுத்துக் குடி”

“அப்பா, அம்மா சொல்றதுல எந்தத் தப்புமில்லை. நானும் அம்மா சைடுதான். நான் நேராவே அவன் கிட்ட.. அது என்ன பத்தி…ஹான் குண்பத்திகிட்ட கேட்டுட்டேன். ஆனா அவன் செம கூல் பார்ட்டிப்பா. நைச்சியமா பேசுறான்…”

“ஹா அப்படிப் போடு! மை கெஸ் இஸ் ரைட்!!”

“என்ன கெஸ்”

“சஸ்பென்ஸ்”

“எஸ் விஸ்வநாதன் சஸ்பென்ஸேதான்” என்ற குரல் கேட்கவும் விச்சுவும் சுந்தரியும் ஒரு சின்ன அதிர்வில் வாசலைப் பார்க்க வாசலில் குணபதியின் பெற்றோர், தாத்தா, பாட்டி, பின்னால் குணபதி.

விச்சு அவர்களை வரவேற்க சுந்தரியின் அம்மா புவன்,  அவள் பெற்றோர் கொஞ்சம் டென்ஷனுடன்….

“நான் பெல் அடிச்சது உங்களுக்குக் கேட்கலை போல. அப்பத்தான் ஏதோ சஸ்பென்ஸ் னு வார்த்தை காதுல விழவும் சத்தமா சொன்னேன், பாருங்க உங்க காதுல விழுந்துருச்சு” – குணாவின் அப்பா.

ஃபார்மல் விசாரிப்புகள், உபசாரங்கள் முடிந்ததும், சுந்தரியின் பாட்டி, “அதென்ன உங்க பெயர்களே என்னவோ பதி வதினு..”

“ஓ! அதுவா எங்கம்மா அப்பா அந்தக் காலத்துலயே கொஞ்சம் ஜாலி பார்ட்டிங்க. நான் கணபதி, வைஃப் குணவதி. ஸோ ரெண்டு பேர்லருந்தும் எடுத்து குணபதினு…

குணபதி வீட்டார் நிறையவே சிரித்தார்கள். ஜாலியாய் பேசினார்கள். டேக் இட் ஈசி பாலிஸி.

“கொஞ்சம் லூசுக் குடும்பமா இருக்குமோ” என்று சுந்தரியின் அம்மா சுந்தரியின் காதில் கிசு கிசுத்தாள். விச்சு மிகவும் ஜாலியாக அவர்களோடு ஒன்றிப் போனார்.

“சரி அப்போ விச்சு என்ன சொல்றேள்? ஓகேதானே? நாளைலருந்து? மாமி, சுந்தரி எல்லாரையும் கேட்டுறலாம்.”

புவனா தன் பெற்றோரைப் பார்த்தாள்.

“மிஸ்டர் கணபதி உங்க அம்மா அப்பா இதுக்கு ஆட்சேபனை சொல்லலியா?”

“நாங்க எல்லாரும் கலந்து பேசிட்டுத்தான் சொல்றோம்”

“ஓகே அங்கிள் நான் இந்த சாலஞ்சை எடுத்துக்கறேன்”

புவனா சுந்தரியின் கையைக் கிள்ளினாள். சுந்தரி உள்ளே செல்வது போல் அம்மாவையும் அழைத்துச் சென்றாள்.

“அம்மா இப்பவே நான் கல்யாணத்துக்கு ஓகே ஒன்னும் சொல்லலியே. போய்த்தான் பார்க்கறேனே. பிடிக்கலைனா வேண்டாம்னு நானே சொல்லிடுவேன்மா. ஏன் பயப்படுற. இந்த லூசு கெக்கெபிக்கே குடும்பத்தோட எல்லாம் எனக்கு செட் ஆவாது.”

“ரொம்ப சாதாரணக் குடும்பமாத்தான் தெரியறது. அங்க வசதி எல்லாம் எப்படியோ? நீ அங்க போய் வேலை எதுவும் செஞ்சு மாட்டிக்காத.”


இடம் மாறினார்கள்.


================================================= 


தொடர்ச்சி நாளை... 

18 கருத்துகள்:

  1. கீதா ரங்கன்... நீங்களுமா 'தொடரும்'? சரி... இன்னும் நாலு நாளைக்கு நான் ரொம்ப பிஸி. அப்புறம்தான் படிக்கணும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி..நெல்லை....என்னநீங்களுமானு....என் கதை பேரீஈஈஈஸா தானே இருக்கும்....அதான் 2 பார்ட்டா....உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாசிச்சுக்கோங்க....இங்கதானே இருக்கும்.... நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  2. நல்ல ஆரம்பம். சந்தடி சாக்குல என் தலையையும் உருட்டறீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா...கௌ அண்ணே....காரணகர்த்தா உங்களையும் ஒரு கதாபாத்திரமா..ஆக்கிட்டேன்..பாருங்க..ஹிஹிஹி..ரெண்டாவத்திலும் வரீங்களே...

      மிக்க நன்றி அண்ணா...

      கீதா

      நீக்கு
  3. இன்று காலையிலிருந்து எல்லோருடைய தளமும் திறக்கிறது ஆனால் கருத்துப்பெட்டி திறக்கவில்லை.

    என்னுடையதும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லரஜி நீங்களும் இதுல மாட்டிக்கிட்டீங்களா. ஹாஹாஹாஹா..

      கீதா

      நீக்கு
  4. தொடர்கிறேன் முடிவை காண....
    ஒரு தலை உருட்டலை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  5. தங்கு தடை இல்லாமல் வேகமான நடையில் கதை போகுது.
    இயல்பான உரையாடல்.

    //அவரோட க்ளோஸ் ஃப்ரென்ட் கேஜிஜி அங்கிள். நாவல் ஐடியா! வித்தியாசமான அனுபவம்னு தோணிச்சு. ஸோ………… ஓகே சொல்லிட்டேன்.”//

    ரசித்தேன்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எக்ஸ்ப்ரஸ் வேகத்துல கதை போகிறதே.
      சுந்தரியை ரொம்பப் பிடித்திருக்கிறது கீதா மா.

      அடுத்த பாகத்தைப் படிக்கும் ஆவலுடன்.
      அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

      நீக்கு
    2. கோமதிக்கா மிக்க நன்றி அக்கா....ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
    3. வல்லிம்மா சுந்தரியைப் பிடித்தமைக்கு மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  6. தொடர்கிற கதையின் முன் பாதி நன்று,,,

    பதிலளிநீக்கு
  7. கௌ அண்ணா மிக்க நன்றி கதை கருவிற்கு. மிக மிக ஒரு வித்தியாசமான ஐடியா...சினிமாவில் வந்ததற்கும் இதற்கும் வித்தியாசம் கொஞ்சம் இருக்கு. யோசிக்க வைத்த கரு. குறு நாவல் எழுதும் அளவிற்கான கரு. ஆனால் இங்கு பல பாகங்கள் எழுதினால் போனியாவாது...ஹாஹாஹா...அதனால் எழுதிய 15 பக்கங்களுக்கும்ம் மேலானதை சுருக்கி....எழுதினேன்...ஹிஹிஹி..ரிஷபன் அண்ணா சொன்னது போல் அந்த ரகசியத்தை சொல்ல மாட்டேன் ஆக்கும்.....ஹிஹிஹி...

    எல்லோருக்கும் சொல்லிக் கொள்வது...பெரும்பான்மை எபி ஆசிரியர் குழு இருக்கும் ஊருக்கு மீ ஷிப்ட்டிங்கு....அதனால் பேக்கிங் என்று பிஸி..வலைத்தளம் கரா இயலவில்லை....இணையம் இல்லை...மொபைலில் இருந்து கருத்து அடிப்பதால்...இங்கு மட்டும் வந்து செல்கிறேன்...அங்கு சென்று செட்டில் ஆனதும் இணையம் வருகை, எங்கள் தளத்தில் பதிவுகள் என்று மீண்டும்...

    கௌ அண்ணா மற்றும் ஸ்ரீராம் கு மீண்டும் மீண்டும் நன்றிகள் பல.இப்படி கரு கொடுத்து கதை எழுத உற்சாகப்படித்தி எங்கள் எல்லோரையும் வளர்ப்பதற்கு...ஸ்ரீராம் உங்கள் வார்த்தையுடன்....தன்யள்ன் ஆனேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நல்ல கதை ஆரம்பமே! சுந்தரிதான் கடைசியில் கல்யாணத்துக்கு ஒத்துக்கறாளே! அதை முதல்லேயே படிச்சுட்டேனா, சஸ்பென்ஸே இல்லை! :)

    பதிலளிநீக்கு