புதன், 31 அக்டோபர், 2018

வட்ட வட்ட தோசை சுட்டு ....


தோசை ஏன் வட்டமா இருக்கு ? யாரும் சதுர தோசை சுட முயற்சிக்கல்லியா ? கேள்வி கேட்டவர் ஏஞ்சல். 

பதிலும், கதையும் இங்கே!

=======================================

தோசை, முதலில் சதுர வடிவமாகத்தான் இருந்தது. 

காரணம் என்ன என்றால், தோசைக்கல் செய்கின்ற தொழிலாளி, இரும்பை செஞ்சூடு பதத்திற்குக் கொண்டுவந்து, தோசைக்கல் உருவாக்கும்பொழுது, எவ்வளவு முயன்றாலும் அதை ஒழுங்கான வட்ட வடிவிற்கு கொண்டுவர இயலாது. ஆனால், சதுர வடிவாக சுலபமாக, தட்டித் தட்டி உருவாக்க இயலும். 

Simple anvil and hammering work.

  








(சதுர தோசைக்கல்லில், சதுர தோசை வார்ப்பது சுலபம். )

=================

இது சம்பந்தமாக, இதோ ஒரு கற்பனைக் கதை! 

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ரஷ்யாவிலிருந்து அதிரானா மியாவ்ச்காவ் என்னும் ரஷ்ய உணவு விஞ்ஞானி, அங்கே விளைந்த உளுந்தாவ்ச்காவ் என்னும் தானியத்தை நிறைய எடுத்துக்கொண்டு, பெரும்பயணமாக, சோழ நாட்டில் உள்ள இட்டளியூர்  என்னும் ஊருக்கு வந்தார்.  இட்டளியூரில்  நெல் நிறைய விளையும். அந்த ஊர்,  இருந்த குறுநிலம் இட்லிபுரி. இட்லிபுரியை ஆண்டு வந்த மன்னனின் பெயர் சோற்று மாக்கான். 




அதிரானா மியாவ்ச்காவ், சோற்று மாக்கானைப் பார்த்து, தோசை (அப்போ அதற்கு, அதிரானா வைத்த பெயர் தோச்காவ் என்பதாகும்) செய்யும் முறை பற்றி எடுத்துக் கூறி, பரிசு பெற்றுச் செல்ல வந்திருந்தார்.   

அதற்கு முன்பு, தான் கண்டுபிடித்த பலகாரத்தை, sample production செய்து பார்க்க எண்ணி, இரும்பு வேலை செய்யும் தொழிலாளியிடம், தனக்கு வட்ட வடிவ இரும்புக் கல்  வேண்டும் என்று கேட்டிருக்கிறார். எதற்கு என்று கேட்ட இரும்புத் தொழிலாளியிடம், முழு விவரங்களையும் கூறினார் அதிரானா. 

அந்த இரும்புத் தொழிலாளி, அதிரானாவின்  காலில் விழுந்து, " ரஷ்ய விஞ்ஞானி அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள். உங்கள் கண்டுபிடிப்பான தோசை என்பதை, தயவுகூர்ந்து, சதுர வடிவமானது என்று மன்னருக்கு அறிமுகம் செய்யுங்கள். வட்ட வடிவில் ஆனது என சொல்லிவிட்டால், வட்ட தோசைக் கல்  வேண்டும் என்று அரண்மனை தொடங்கி, ஆண்டிகள் மடம் வரை எல்லோரும் ஆர்டர் தருவார்கள். தட்டிக் கொட்டி, ஒரு சரியான வட்டக் கல் உருவாக்கும் நேரத்தில், பன்னிரண்டு சதுர தோசைக்கல்  என்னால் சுலபமாக உருவாக்க முடியும். என்னுடைய புரோடக்டிவிடியை இம்ப்ருவ் செய்ய நீங்க உதவுங்க" என்று கேட்டுக்கொண்டார். அதோடு, அதிரானாவுக்கு ஒரு சதுர வடிவ தோசைக்கல்லை செய்து கொடுத்து, அதனுடைய அடிப்பக்கத்தை, (நெருப்புப்பக்கம்) அடையாளம் கண்டுபிடிக்க, சிவப்பு வர்ணம் அடித்துக் கொடுத்தாராம். 

(அதை ரஸ்யாவுக்குக் கொண்டுபோன அதிரானா, அதை வைத்த இடம்தான்  தற்காலத்தில் RED SQUARE - MOSCOW என்று அழைக்கப்படுகிறது.) 

அதிரானாவும் இதற்கு ஒப்புக்கொண்டு, சோற்று மாக்கானிடம் தோச்காவ் செய்முறை பற்றி விளக்கமளித்தபோது, சதுர வடிவாகவே செய்து காட்டினார். 

மிகவும் சந்தோஷமடைந்த சோற்று மாக்கான், அதிரானாவிடம், "ரஷ்ய விஞ்ஞானியே! உங்கள் கண்டுபிடிப்பு, அதி அற்புதமானது! நிறைய பரிசுகளை, படகில் ஏற்றி, தேம்ஸ் நதி வழியாக உங்க ஊருக்கு அனுப்புகிறேன். இனி வருகின்ற ஜன்மங்களில் எல்லாம், நீவிர் விஞ்ஞானி, செஃப், ஞானி என்று போற்றப்படுவீர்" என்று புகழ்ந்துரைத்தான். 

===========================

அது சரி, அப்புறம் சதுர வடிவ தோசை எப்போது வட்ட வடிவமானது?

சோற்று மாக்கான், தன் அரண்மனை சமையல்காரனான, அச்சுதனை அழைத்து, அதிரானா சொன்ன முறைப்படி, தோசைகள் வார்த்துக் கொடுக்கச் சொன்னான். அச்சுதன், அவ்வாறே அரிசி உளுந்து ஊறவைத்து, ஐந்து மணிநேரம் கழித்து அதனை அரைத்து, உப்புச் சேர்த்து, எண்ணெய் தடவி, முறுகலாக சதுர தோசைகள் செய்தான். 

அரசன் சாப்பிடுவதற்கு முன்பு, தோசை என்னும் அந்த வஸ்து சுவை எப்படி இருக்கின்றது என்று பார்க்க, அச்சுதன் சதுர தோசையின் ஒரு கார்னரைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டான். 'ஆஹா ! என்ன சுவை, என்ன சுவை.' இன்னும் ஒரு கார்னர், இன்னொரு கார்னர் என்று நான்கு கார்னர்களையும் சாப்பிட்டுவிட்டான். இப்போ தோசை கார்னர்கள் இழந்து, வட்டவடிவமாகி விட்டது. 

எல்லா தோசைகளின் கார்னர்களையும் கபளீகரம் செய்த அச்சுதன், வட்ட வடிவ தோசைகளை, மன்னனிடம் கொண்டு சென்று கொடுத்தான். 

சோற்று மாக்கான், "அச்சுதா ! ஏன் சதுரவடிவில் தோசை வார்க்கவில்லை? " என்று கேட்டான். 

அச்சுதன் அதற்கு, "மன்னர் மன்னா - இதுதான் வார்க்க சுலபமான வடிவம், சுவையும் அதிகமாக இருக்கும்" என்றான். 

சோதித்துப் பார்த்த சோற்று மாக்கான், " ஆம்! உண்மைதான்! என்ன சுவை, என்ன சுவை " என்று பாராட்டினான்! 

இனி தனக்கு அளிக்கப்படும் தோசைகள் வட்டவடிவிலேதான் இருக்கவேண்டும் என்று ஆணையிட்டான். 

அதோடு முடிந்துவிட்டதா கதை?

இல்லையே! 

அச்சுதனுக்கு, அஞ்சலி என்று ஒரு தங்கை. அச்சுதன் தோசை கார்னர்களைக் கபளீகரம் செய்ததைக் கண்ட அஞ்சலி, தனக்கும் சில கட்டிங் வேண்டும் என்று கேட்டாள். தரவில்லை அச்சுதன். அப்புறம் என்ன? சோற்று மாக்கானிடம் போட்டுக்கொடுத்துவிட்டாள் அஞ்சலி. 

சோற்று மாக்கான் அச்சுதனை இழுத்து வரச் சொல்லி, விசாரணை செய்தான். அச்சுதன் உண்மையை ஒப்புக்கொண்டான். 

அச்சுதனை மன்னித்து அனுப்பிய சோற்று மாக்கான், அன்று முதல், தோசைகள் வட்ட வடிவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். வட்ட வடிவில் இருக்கும் தோசையின் எந்த ஓரத்திலும், யாரும் ஒரு துளி தோசை கூட, தடயம் இல்லாமல் பிய்த்துத் தின்றுவிடமுடியாது என்பதால்தான் சோற்று மாக்கான் இந்த சட்டம் போட்டான். 

அந்தக் காலத்தில் தோசைக்கல் சதுர வடிவில் இருந்தாலும், தோசைகள் வட்ட வடிவில் இருந்ததற்கு இதுவே காரணம்! 

============================================
                        

35 கருத்துகள்:

  1. அட சுவையான வடிவான கருத்து...இன்னும் வரேன் அப்புறமா

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அதிரானாவும் இதற்கு ஒப்புக்கொண்டு, சோற்று மாக்கானிடம் தோச்காவ் செய்முறை பற்றி விளக்கமளித்தபோது, சதுர வடிவாகவே செய்து காட்டினார். //

    அதிரானா பாராட்டபட வேண்டியவர்.

    இனி வருகின்ற ஜன்மங்களில் எல்லாம், நீவிர் விஞ்ஞானி, செஃப், ஞானி என்று போற்றப்படுவீர்" என்று புகழ்ந்துரைத்தான்.

    வாழ்த்துக்கள்.

    வட்ட வடிவில் இருக்கும் தோசையின் எந்த ஓரத்திலும், யாரும் ஒரு துளி தோசை கூட, தடயம் இல்லாமல் பிய்த்துத் தின்றுவிடமுடியாது என்பதால்தான் வட்ட வடிவ தோசைக்கல்.

    அஞ்சலியால் இது வந்து இருக்கிறது.
    எப்படி எல்லாம் யோசித்து பதிவு.



    பதிலளிநீக்கு
  3. >>> அந்தக் காலத்தில் தோசைக்கல் சதுர வடிவில் இருந்தாலும்.. <<<

    அந்த நாட்டின் இல்லத்தரசிகள் எல்லாரும் ஒன்று கூடி
    வட்ட வடிவ தோசைக் கல்லையும் செய்து கொடுக்க வேண்டும் என்று போராடி கோரிக்கை வைத்தனர்...

    அதை ஏற்றுக் கொண்ட தோசை மாக்கான்
    ராஜாங்க விஷயமாக இருந்த சதுரக் கல்லை வட்ட வடிவமாக ஆக்கி
    பொதுமக்களும் புழங்குவதற்கு உத்தரவிட்டான்...

    எல்லாருக்கும் மகிழ்ச்சி.. ஆனாலும்,

    இல்லத்தரசிகள் எல்லாரும் ஒன்று கூடி
    வட்ட வடிவ தோசைக் கல்லைக் கேட்டது ஏன்!?...

    எல்லாரும் ஒன்று கூடி போராடியதன் பின்னணி என்ன?...

    அங்கே தானே இருக்கு ரகசியம்!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை எழுதி அனுப்புங்க துரை சார்!

      நீக்கு
    2. அந்தக் காலத்தில் இல்ல இபப்வும் சதுர வடிவம் செவ்வக வடிவத்தில் தோசைக் கல் இருக்கே

      கீதா

      நீக்கு
    3. ஆஆஆஆஆ துரை அண்ணனின் அடுத்த கதையும் ரெடியாஆஆஆஆஆஆ ஹா ஹா ஹா

      நீக்கு
  4. சரித்திர நிகழ்வின் உண்மைநிலை இன்றே அறிந்தேன் அதிராவ்ஜி.

    அதுசரி வட்ட வடிவமாக வரும் புரோட்டாவை சதுரக்கல்லில் சுடுவதின் பின்னணி என்ன ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது அதிராவ்ஜி ஆஆஆஆஅ ஹா ஹ ஹா கில்லர்ஜிக்கு என்னமோ ஆச்ச்சு:) அது கெளதமன் ஜி என வந்திருக்கோணுமாக்கும்:)..

      நீக்கு
  5. ஹா ஹா ஹா ஹா தோசைக் கதை செம ரசித்தேன்...

    இப்பவும் கூட தோசைக்கல் சதுரமாக இருக்கே....ரத்னா ஸ்டோரில் பார்த்தேன் சதுரம் செவ்வகம் என்று பெரிதாகவும் இருக்கு அழகா இருந்துச்சு....அதில் வட்டமும் வார்க்கலாமே...அப்ப சோத்துமாக்கான்?..


    கீதா

    பதிலளிநீக்கு
  6. அதிரா உங்க சதுர தோசை வட்டமானதுக்கு அஞ்சலியும் காரணமாக்கும்.....கர் சத்தமே கேட்கலை....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. iப்போதான் எட்டிப் பார்த்தேன்... சே..சே.. யாருமே கண்டுக்கவே இல்லை அதிராவை:)).. ஒருவேளை பயத்திலதான்போல.. [நெ.தமிழன் சொல்லியிருக்கிறார்.. எப்பவும் பொஸிடிவாத்தான் திங் பண்ணோணுமாம்:)))] இன்ன்னும் கதை படிக்கேல்லை.. விரைவில் பின்பு வாறேன்ன்..

      //அதிரானா மியாவ்ச்காவ்//

      இதை ஆராவது ஒலி வலிவத்தில உச்சரிச்சு இங்கு இணைச்சு விடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்.. நாக்கு பல்லுக்குள் செருகிடப் பார்க்குது எனக்கு:). கெள அண்ணன் எப்படித்தான் எழுதினானோ இப்பெயரை:)..

      நீக்கு
    2. ஹா ஹா ஹா இல்ல அதுகூடக் கொப்பி பேஸ்ட் தான் பண்ணினேன்ன்.. கீழே பாருங்கோ வல்லிம்மாவும் தப்பா மியாஸ்கான் என்பதுபோல எழுதியிருக்கிறா ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    3. //கெள அண்ணன் எப்படித்தான் எழுதினானோ இப்பெயரை:)..//
      ஐயையோ இப்போதான் கவனிச்சேன் அவசரத்தில ரயேட்டில கவனிக்காமல் எழுத்துப் பிழை ஆகிட்டுது மன்னிச்சுக் கொள்ளுங்கோ கெள அண்ணன்... இனி அழிக்கவும் முடியாதே..

      நீக்கு
    4. அண்ணன் சொன்னான் என்பது சரிதான். கவலை வேண்டாம்! அண்ணர் என்றால்தான் சொன்னார் என்று சொல்லவேண்டும்!

      நீக்கு
  7. கல்லி என்ன இருக்கிறது சார்,தோசை சுடுகிறவரின்
    கைப்பக்குவமும் மனோ நிலையுமே காரணம்,,,/

    பதிலளிநீக்கு
  8. அப்போ இவ்ளோ குழப்பத்துக்கு காரணம் அந்த ரஷ்யன் பூஸார் தானா :)))
    ஆனா சதுரக்கல்லில் சதுர தோசை எப்படி ??யாரவது டெமோ காட்டினாதான் புரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லோ மிஸ்டர் கஸ்டப்பட்டு.. பூனை ஆனை டெமோ எல்லாம் காட்டியிருக்கிறேன்.. இனி நீங்க சுட்டுக் காட்டுங்கோ இப்பூடி:)..

      நீக்கு
    2. இது கள்ளாட்டம் :) எனக்கு தோசை வேணும் not egg

      நீக்கு
    3. அல்லோ முதலாவதில பூஸூ ஆனை எல்லாம் வருதே:)..

      நீக்கு
    4. ஹாஹாஆ :) அந்த தோசைக்காரம்மாவுக்கு உங்க வால் மேலே எனா பாசம் தட்டோ தட்டுன்னு தட்டறாங்க

      நீக்கு
    5. ஹச்ச் வ்வ்வ் ஹச்ச்வ்வ்வ்வ் ஜ்ஹாவ்வ்வ்வ் இது ரஷ்யன் சிரிப்பூஊஊஊ:)).

      நீக்கு
  9. ஆஹா. சதுரக்கல், வட்டக்கல்,செவ்வகக் கல் எல்லாவற்றுக்கும் அதிரா
    மியாஸ்காவ் தான் காரணமா. அதில் அஞ்சலியும் கூட்டாளியா.
    ரஷ்ய விஞ்ஞானி ஆனதெப்போ.
    கதையின் புலம் மலைதாண்டிப் போனது எவ்விதம்.
    வளமான தோசை வரலாறு சூப்பர் கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
  10. ஆஆஆஆஆவ்வ்வ் முதலில் என் பெயருக்கு ரோயல்ட்டி வேணும்ம்ம்ம்ம்:)).. வ்.. ச் எல்லாம் போட்டு பல்லில நுழையாத ரஷ்யன் பாசையில பேசினால் மட்டும் விட்டிடுவோமா?:))..

    //அதிரானாவின் காலில் விழுந்து, " ரஷ்ய விஞ்ஞானி அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள். உங்கள் கண்டுபிடிப்பான தோசை என்பதை, தயவுகூர்ந்து, சதுர வடிவமானது என்று மன்னருக்கு அறிமுகம் செய்யுங்கள்///

    ஹா ஹா ஹா ஞானி ஆனதன் பலனாக இருக்குமோ:) அப்பூடியே தேம்ஸ்கரைக் காற்றுப் பட்டதைப்போல குளிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ந்து போனேன்ன்:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சு அந்த ஓசை சே சே தோசை அடுப்பில போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றிரவு அதிரானா மியாவ்ச்கி என் கனவில் வந்தார். "
      Скажите госпоже Атире, что она только должна платить роялти за использование моего имени.
      (Skazhite gospozhe Atire, chto ona tol'ko dolzhna platit' royalti za ispol'zovaniye moyego imeni.) எனக்கு ரஷ்யன் பாஷை தெரியாது ஐயா என்று நான் சொல்வதற்குள் மறைந்துவிட்டார்! இதுக்கு என்ன பொருள் என்று யாராவது சொல்லுங்க!

      நீக்கு
    2. /மகா மாட்சிமை நிறைந்த பெருமதிப்பிற்குரிய திருமிகு கௌதமன் அவர்களே ..நான் மோட்சமடைந்து 3000 ஆண்டுகளாகிறது .பல ஆண்டுகள் முன் இலங்கை பயணத்தில் தொலைத்த மகள் வழி பேத்தி அச்வனாவ் அதிராவ் என்ற ரஷ்யன் ப்ளூ பூனையின் கொள்ளுப்பேத்தி தான் இபோது வலையுலகில் வாலாட்டிவரும் ஞாநிமீயாவ் :) ஆனால் இந்த கொள்ளு பேத்திக்கு ழ ல ள வரவில்லை மேலும் சமையல் குறிப்புகளும் எங்கள் ரஷ்ய பாரம்பரியத்தில் இல்லை நீங்கள் ஒரு பெரிய கம்பெடுத்து நன்கு அடித்து பிழையின்றி எழுத தமிழ் சொல்லித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் அப்படியே மியாவை இன்டர்நெஷனல் ரெசிப்பி ஸ்பெஷலிஸ்ட் அஞ்சுவாகிய ஏஞ்சலிடம் அனுப்பி உலக சமையலையும் கற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன் .குறிப்பாக அதிரா,, ஏஞ்சல் சொல்லுவதை கைகட்டி வாய்பொத்தி எதிர்பேச்சு பேசாது கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கவேண்டும் என்பதை சொல்லிவிடுங்கள் ///


      இதான் சார் ட்ரான்ஸ்லேட் பண்ணி பார்த்தப்போ வந்தது

      நீக்கு
    3. ஆவ்வ்வ்வ்வ் கெள அண்ணனுக்கு கனவு கூட வரத் தொடங்கிட்டுதோ?:) அப்போ கனவில ரஷ்ய அஞ்ஞானி.. சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே விஞ்ஞானி ஜொன்னது கரீட்டுத்தேன்ன்:)).. பாருங்கோ அஞ்சு சொன்னது ~அப்பம்சுருட்டி:)~ கரீட்டு:))... ஆனா ஒரு சின்ன திருத்தம்..

      அடுத்த பிறப்பில அதிரானாமியாவ்ச்காவ் ஸ்கொட்லாந்து மலையடிவாரத்தில பிறப்பாராம்:).. அவருக்கு செக்காக கெள அண்ணனையும் மெயின் செஃப் ஆக அஞ்சுவையும் இருந்து கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிச் சென்றிருக்கிறார்:)..

      நீக்கு
  11. //நீவிர் விஞ்ஞானி, செஃப், ஞானி என்று போற்றப்படுவீர்" என்று புகழ்ந்துரைத்தான்.
    //

    ஆவ்வ்வ் அப்போ அண்டைக்கு அந்த சோற்று மக்கான் அப்பூடி வாழ்த்தியமையாலதான் இன்று நான் அப்பட்டங்கள் பெற்று வாழ்கிறேனோ?:).. ஹையோ போன பிறவி பொய் என இப்போதானே போஸ்ட் போட்டேன்ன்ன் ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  12. ஓ தோசைக்கதை அருமை.. அந்த போட்டுக்கொடுத்த:) அஞ்சலி என்பது நம்மட “அஞ்சு” இல்லையோ?:) ஹையோ என் வாய்தேன் நேக்கு எடிரியாக்கும்:)) ஹா ஹா ஹா..

    அப்போ இட்டிலி ஏன் குண்டாக வந்துது? அதன் வாழ்க்கை வரலாறும் எனக்கு வேணும்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை குண்டு மியாவ்ச்சேன் சொன்னாதான் சரியா இருக்கும் :) அடுத்த ஸ்டோரி இட்லி என் குண்டா இருக்கு அதன் மூதாதையர் மியாவாதிச்சென் விளக்க வரார் பராக் பராக்

      நீக்கு
    2. இவர் சைனாவிலிருந்து வாறாரோ?:)

      நீக்கு