புதன், 17 அக்டோபர், 2018

சு டோ கு 2 -- குரோம்பேட்டை குறும்பன்.


சு வீ 

குணா ஞாயிறு பேப்பரில், சு டோ கு பகுதி உள்ள பக்கத்திற்கு வந்தவுடன், அவனுக்கு, தன் வீட்டில் நேற்று, சனிக்கிழமைப் பேப்பரில், சு டோ கு பகுதியில், தான் தடுமாறிய கட்டங்கள் ஞாபகம் வந்தது. இன்றைய பேப்பரில், சனிக்கிழமை சு டோ குவின் சரியான எண்கள் கொடுக்கப்பட்டிருந்ததும், அதையும், தான் தடுமாறிய இடங்களையும் சரிபார்க்க, சுந்தரியின் புத்தக பீரோவில் இருந்த சனிக்கிழமைப் பேப்பரை எடுத்தான். சு டோ கு பக்கத்தை எடுத்து பார்வையிட்டவன், திடுக்கிட்டான். 


எல்லா எண்களும் அழகாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தது! இது என்னடா அதிசயம்! வெள்ளிக்கிழமைப் பேப்பரை எடுத்துப் பார்த்தான்! அதே அதே! எண்பத்தொரு எண்களும் அவனைப்பார்த்துச் சிரித்தன!

நடுவிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துப்பார்த்தால், அங்கும் அதே நிலை! 

அட! இந்த சுந்தரி, சூப்பர் சுந்தரிதான் போலிருக்கு! தான் எவ்வளவுதான் முயன்றாலும், சு டோ குவில் நாலு ஸ்டார் / அஞ்சு ஸ்டார் டிஃபிகல்டி தினங்களில், எங்காவது ஓரிடத்தில் முட்டிக்கொண்டு நின்றுவிடும். இவள் இப்படி சிக்சர் அடிக்கும் சுந்தரியா இருக்காளே! 

குணா சு டோ கு சுந்தரியை, குண(ணா)சுந்தரியாக்கிக் கொள்ள அநேகமாக முடிவுசெய்துவிட்டான்! 

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமைவரை, காலை உணவு, அலுவலகம், மாலையில் சூப்பர் காபி, அறுசுவை இரவு உணவு என்று ராஜபோகமாகக் கடத்தினான். மதிய உணவு மட்டும் அலுவலகக் கேண்டீனில். எல்லா நாட்களிலும், வீட்டில் உள்ள எல்லோருமே அவனுடன் சகஜமாக, இயல்பாகப் பேசினார்கள். அவன் பேசியவைகளை ரசித்தார்கள்.

===============================

கு வீ 

குணா வீட்டில், சுந்தரியிடம் வீட்டில் உள்ள பெரியவர்கள் மிகவும் சினேகபாவத்துடன் நடந்துகொண்டார்கள். சுந்தரி காலை உணவு தயாரித்து, மற்றவர்களோடு சேர்ந்து சாப்பிட்டு, அலுவலகம் சென்று வந்தாள். சமைப்பது, காபி போடுவது எல்லாவற்றிலும் அவளுடைய நுணுக்கங்களை, குணாவின் அம்மாவுக்கும், பாட்டிக்கும் சொல்லிக்கொடுத்தாள்! அவர்கள் செய்ததை சாப்பிட்டு புகழவும் செய்தாள். 

இரவு தூக்கம் வராத நேரங்களில், புத்தகம் படிப்பது, சு டோ கு போடுவது என்று பொழுது போயிற்று. 

==================================

அடுத்த ஞாயிறு காலையில், அவரவர்கள் வீட்டில் அவரவர்கள் வந்து சேர்ந்தார்கள். 

மூர்த்தி, குணாவிடம் கேட்டார். " இப்ப சொல்லுடா உன் அபிப்பிராயத்தை" 

" அப்பா எனக்கு சுந்தரி வீட்டாரைப் பிடித்திருக்கு. அவர்கள் சமையல் பிரமாதமாக இருக்கு. அங்கே இருந்த ஒருவாரமும், என்னை மாப்பிளே மாப்பிளே என்று கூப்பிட்டு, எனக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று பார்த்துப் பார்த்து அவர்கள் நடந்துகொண்டதில், அவர்களுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே சுந்தரி கதை என்ன? உங்கள் எல்லோருக்கும் சுந்தரியைப் பிடித்திருந்ததா? நீங்க சொல்லுங்க! "

மூர்த்தி, " எங்களுக்கு, சுந்தரியைப் பிடிக்கவில்லை " என்றார். 

(தொடரும்) 
=====================================

(அடுத்த பதிவுல, நிச்சயமா முடிக்கணும்! எவ்வளவுதான் இழுக்கறது! கு கு )

14 கருத்துகள்:

  1. குணாவுக்கு ஷாக் ஆகி இருக்குமே...

    பதிலளிநீக்கு
  2. குணாவுக்கு சுடோகு தெரியாதா ல்லை உங்களுக்குத் தெரியாதா? 40,50, 45னு இஷ்டத்துக்கு வருது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே 45 தான்! சு டோ கு புதிர் எல்லாவற்றிலுமே 1 முதல் ஒன்பது வரை எண்கள்தான். கூட்டுத் தொகை நாற்பத்தைந்துதான் எப்பவும் வரும். ஆனால், அதை கொடுக்கப்பட்டுள்ள எண்களை வைத்து எப்படி அமைப்பது என்பதுதான் புதிர்.

      நீக்கு
    2. நீங்க சுந்தரி ஃபில்லப் பண்ணினதாக் கொடுத்திருக்கிற சுடோகுல, ஒரு லைன், 50, அடுத்தது 40, பல 45னு வருதே... அதை நீங்க கவனிக்கலையா? 5வது, 6வது வெர்டிகல் லைன் பாருங்க

      நீக்கு
    3. ஹி ஹி அது சுந்தரி போட்ட சு டோ கு இல்லை! கு கு போட்டது! கு கு வுக்கு சு டோ கு நஹி மாலும்.

      நீக்கு
  3. நல்லவேளை அவளுக்கு கேசரி நல்லா செய்யத்தெரியும்னு சொல்லி, கேசரி செய்முறை, படங்கள்னு இன்னும் இரண்டு வாங்களுக்கு இழுக்கவுல்லை (னு நினைக்கிறேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையின் தலைப்பு சு டோ கு -- அதைக் கொண்டு வரவேண்டும் இல்லையா!

      நீக்கு
  4. மூர்த்தி, சுந்தரியை உனக்குத் திருமணம் செய்யப் போவதில்லை என்று சொல்லியிருந்தால், ஒருவேளை அவருக்கே அவ்வளவு பிடிச்சுப் போச்சோ என்ற சந்தேகம் வந்திருக்கும். ஆனால், பிடிக்கவில்லைனு சொல்றாரே.. ஒருவேளை மனைவிக்கு தாழ்வு மனப்பான்மையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்லங்கமா எதையாவது யோசிக்காதீங்க! அடுத்த பதிவில் கு கு என்ன எழுதுகிறார் என்று பார்ப்போம்.

      நீக்கு
  5. @ நெல்லைத்தமிழன் said..

    >>> நல்லவேளை அவளுக்கு கேசரி நல்லா செய்யத் தெரியும்னு சொல்லி, கேசரி செய்முறை, படங்கள்னு இன்னும் இரண்டு வாங்களுக்கு இழுக்கவில்லை..<<<

    அப்போ ஜவ்வு மிட்டாய் தப்பித்தது..ன்னு சொல்லுங்க!...

    பதிலளிநீக்கு
  6. கர்ர்ர்ர் :) மூர்த்தி அங்கிளுக்கு என்னாச்சி ? எதுக்கு இவருக்கு சுந்தரியை பிடிக்கலை ?

    பதிலளிநீக்கு
  7. மூர்த்தி, " எங்களுக்கு, சுந்தரியைப் பிடிக்கவில்லை " என்றார். //
    என்ன காரணம் இப்படி எல்லாவிதத்திலும் சிறந்த பெண்ணை பிடிக்கவில்லையாம்?

    பதிலளிநீக்கு
  8. ஓஹோ இப்படி ஆரம்பித்ததா கதை. கு.குவுக்கு இந்தி தெரியாதா. என்ன அஸ்ஸ்ஸ்ஸ்ச்ச்சர்யம்.
    அழகா அருமையா ,சகஜbhaவத்தில் எழுதி இருக்கிறார். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. பின்னாடி இருந்து படிச்சுண்டு போறேன். :)

    பதிலளிநீக்கு