இது என்னுடைய கண்டுபிடிப்பு. Gou_Lab Jamoon.
நீங்களும் செய்து, சுவைத்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
பொட்டுக்கடலை: 100 கிராம்.
(Nestle Everyday போன்ற ) பால் பவுடர் : 100 கிராம்.
ஏலக்காய் : பத்து எண்ணிக்கைகள்.
தயிர் : ஆறு தேக்கரண்டி.
சர்க்கரை : ஒரு கப்.
சுத்தமான தண்ணீர் : ஒரு கப்.
நல்லெண்ணெய் : 100 மி லி +
தயார் செய்யும் நேரம் : அதிகபட்சம் முக்கால் மணி நேரம்.
==================================
முதலில், ஏலக்காய்களை உரித்து, அதன் உள்ள கருப்பு நிற அரிசிகளை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.
பொட்டுக்கடலையை, ஏல அரிசி சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பொட்டுக்கடலை மாவு ஒரு கப், பால் பவுடர் ஒன்றேகால் கப் (NOTE : BY VOLUME is mentioned here. So take the powders accordingly, from the powders you have.) என்ற அளவில் இரண்டு மாவையும் சேர்த்து, நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கக்கூடாது.
நன்றாகக் கலந்த கலவையை, சிறிது சிறிதாக தயிர் சேர்த்து, பிசையுங்கள். எச்சரிக்கை : தயிரை சிறிது சிறிதாகக் கலக்கவேண்டும். இல்லையேல் கலவை தோசைமாவு பதத்திற்குப் போய்விடும். நமக்கு வேண்டியது, சப்பாத்தி மாவு பதம்.
இந்தப் பதம் வந்ததும், மாவுக் கலவை, கை விரல்களில் ஒட்டிக்கொள்ளும். கவலைப் படவேண்டாம். கலவையை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போ இரும்புச் சட்டியை காஸ் ஸ்டவ் சிறிய பர்னர் மேல் ஏற்றி, ஸ்டவ்வைப் பற்றவைத்து, இரும்புச் சட்டியில், நல்லெண்ணெய் ஊற்றவும்.
எச்சரிக்கை : எண்ணெய் அதிகம் சூடாகிவிடக்கூடாது. காஸ் ஸ்டவ்வை சிம்மர் நிலையிலேயே எரியவிடுதல் அவசியம்.
எண்ணெய் பொரிக்கின்ற அளவுக்கு சூடானதும், அதில் பொ.க.மா + பா ப + த கலவையை, கையில், சூடு இல்லாத (!) சாதாரண நல்லெண்ணையை (மாவு கையில் ஒட்டாமல் இருப்பதற்காக ) விரல்களில் தொட்டுக்கொண்டு, மொழு மொழுவென்று சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் ஒவ்வொன்றாக சிவக்கப் பொரித்து எடுக்கவும்.
எச்சரிக்கை : உருண்டைகள் கிட்டத்தட்ட பத்து நொடிகளுக்குள் வெந்து உப்புச் சீடை கலருக்கு வந்துவிடும். (அதிக நேரம் எண்ணெயில் பொரிந்தால், சீடை கலர் போய், சிவந்து, அதற்கப்புறம் பழுப்பு நிறம், பின் கருப்பு நிறம் ஆகிவிடும். அந்தக் கருப்பு வண்ண கௌலாப் ஜாமூன்களை அப்பாவிக் கணவர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள் என்பதை அறியவும்)
எண்ணெய் அதிகம் சூடாகிவிட்டால், அவ்வப்போது, ஸ்டவ்வை ஆஃப் செய்து பொரிக்கும் வேலையைத் தொடரவும்.
******
ஊசிக் குறிப்பு :
====> தயிர் சேர்த்து மாவு பிசைதலும், கலவை உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுப்பதும் மிகவும் கவனமாகச் செய்யவேண்டிய விஷயங்கள்.
******
அப்புறம் ஜீரா ரெடி செய்வது உங்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விஷயம்
ஒரு பங்கு (By Volume - not by weight) தண்ணீர் - உதாரணமாக நூறு மி லி தண்ணீரில் நூறு மி லி சர்க்கரை சேர்த்து, அடுப்பில் குறைந்த தீயில், சூடாக்கவும். சர்க்கரை எல்லாம் கரைந்தவுடன், ஜீராவை அடுப்பிலிருந்து இறக்கவும், (எச்சரிக்கை : ஜீராவை அதிக நேரம் அடுப்பில் வைக்கக்கூடாது. கம்பிப்பதம், பாகுபதம் எல்லாம் தேவை இல்லை. ) சூடாக இருக்கும்போதே அதில், பொரித்து வைத்துள்ள உருண்டைகளைப் போடவும்.
அவ்வளவுதான். மேட்டர் ஓவர்.
அந்த கௌலாப் உருண்டைகள், ஆறு / ஏழு மணி நேரமாவது ஜீராவில் ஊறட்டும்.
நீங்க போய் சீரியல் பாருங்க.
பிறகு கௌலாப் ஜாமூன் எப்படிச் சாப்பிடுவது என்று உங்களுக்கு எல்லாம் சொல்லாமலே தெரியுமே!
செய்து பார்த்து, சுவைத்துப் பார்த்து எழுதி அருளியவர் : கௌதமன்.
நன்றி!
இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!
=============================================
தீபாவளி வாழ்த்தை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் கவுதமன் சார். எல்லாம் நன்றாக நடக்கட்டும் இப்போதிலிருந்து.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎங்க குலாப்ஜாமூன் என்று சொன்னால், ஏன் உருண்டையா வரலை, ஏன் நல்ல பிரவுன் நிறத்தில் இல்லை, ஏன் பளபளன்னு இல்லை, ஜீராவில் குங்குமப்பூ மிஸ்ஸிங் என்று ஏகப்பட்ட கேள்விகள் என்னிடமிருந்து வந்துவிடுமோ என்பதற்காக இதை 'கெளதமன்' 'லாபில்' செய்த ஜாமூன் என்று 'கெளலாப் ஜாமூன்' என்று எழுதிட்டீங்க.
பதிலளிநீக்குஉங்கள் ஆர்வத்தைப் பாராட்டறேன். அங்கே நான் நாளை இருப்பேன்... ஜாமூன் டேஸ்டுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கா?
இருக்கு!
நீக்குநல்லெண்ணெய் உபயோகித்திருக்கீங்களே.... பொங்காதா? நெய் வேண்டாம்னா, ரிஃபைண்ட் ஆயில்ல பொரிக்கக்கூடாதா?
பதிலளிநீக்குபொங்கவில்லை. சிறிய அளவில் எல்லாம் செய்தேன். Any vegetable oil is ok. I am against the use of Dalda and Maida.
நீக்குநாங்களும் டால்டா பயன்படுத்துவதில்லை....நெய்யில் பொரிப்பதுண்டு. நல்லெண்ணைக்குப் பதிலா நெய்யில் செஞ்சு பார்க்கறேன். இதுவரை ஸ்வீட் பலகாரம் எதுவும் செய்யலை...சென்னைனா செஞ்சுருப்பேன். அங்கு கூட்டம் உண்டு...
நீக்குகீதா
கௌ அண்ணா இனிய தீபஒளி வாழ்த்துகள்! முதலில் வாழ்த்தைச் சொல்லிபோட்டேன்..
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குஅண்ணே நீங்க எங்கேயோ போய்ட்டீங்க!! ஹா ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குகிச்சன் விஞ்ஞானி! சூப்பர் சூப்பட்! நாங்க என் பையன் எல்லாத்துலயும் பால் வாசனை அடிச்சா ரொம்ப லைக் பண்ணுவான்னு இப்படி பொட்டுக்கலடை மாவு பால்பௌடர் எல்லாம் போட்டு பர்ஃபி மாதிரி செஞ்சதுண்டு....குலாப்ஜாமூன் ட்ரை பண்ணலை. கோதுமை மாவுல செஞ்சுருக்கேன்..நல்லாருக்கும். கோதுமை மாவு பால்பவுடர் போட்டு பால் பவுடர் நிறைய...மாவு கொஞ்சம்....நானும் மைதா சேர்ப்பதில்லை.
உங்க குறிப்புகள் குறித்துக் கொண்டாயிற்று. செஞ்சுபார்த்துட்டு சொல்லிடறேன் இங்க....
கீதா
ஓ கே.
நீக்குகௌ அண்ணா...குலாப்ஜாமூன் கருப்பா வந்தா என்ன...காலா ஜாமூன்னு சொல்லிக் கொடுத்துட வேண்டியதுதான்....சிரப் எல்லாம் உறிஞ்சப்பட்டு பத்தாம போயிருச்சா ட்ரை ஜாமூன்னு சொல்லி மேல கொஞ்சம் ஏதேனும் நட்ஸ் சீவி அலங்கரிச்சுக் கொடுத்துட வேண்டியதுதான்..சரியான கோல்டன் நிறம் வரலையா...நோ ப்ராப்ளம்..ஹாஃப் ஃப்ரைட் ஜாமூன்னு சொல்லிடலாம்..(ஹாஃப் வெந்த முருக்கு சாப்பிடுவதில்லையா அப்படித்தான்...).தக்கினிக்கி....ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குகீதா
நல்ல யோசனை!
நீக்குவாவ் !! கௌ லாப் ஜாமூன் சூப்பரா இருக்கே ..எனக்கு இனிப்பில் நாட்டமில்லைனாலும் வீட்டில் இருக்கறவங்களுக்கு செய்து கொடுப்பேன் ..
பதிலளிநீக்குஎங்க அப்பா அம்மாவும் நிறைய பட்சணங்கள் செய்ய நல்லெண்ணெய் தான சேர்ப்பாங்க கசப்பு தெரியாது .
பாராட்டுக்கு நன்றி.
நீக்குஓ இப்பத்தான் உரைச்சிச்சு...ஹிஹிஹி....கு ஏன் கௌ ஆனதுனு...கரீயீயீயீயீயீக்டுதானே..கௌ அண்ணாவின் கண்டுபிடிப்பு!! கௌலாப்ஜாம்னூ...அண்ணே கலக்கறீங்க!!! சூப்பரோ சூப்பர்!!!...
நீக்குகீதா
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா.. ரியூப்ப்ப்ப்ப் லைட்டூஊஊஊஊஉ:) ஹெடிங் பார்த்ததுமே புரிஞ்சிடுச்சே:)) ஹா ஹா ஹா:))
நீக்குரஷ்ய விஞ்ஞானிக்குப் போட்டியாக கௌ அண்ணா களம் இறங்கிட்டார்...அதிரா கமான் இங்க...உங்களுக்குப் போட்டி...
பதிலளிநீக்குகீதா
☺️
நீக்குஹையோ அவசரத்துக்கு ரஷ்ய விஞ்ஞானி பெயரில வரலாம் எனில் முடியல்லியே மொபைல்ல பெயர் மாத்த கர்ர்ர்ர்ர்:) ஸ்கூல்ல இருக்கிறேன்:) கீதா...
நீக்குகௌ அண்ணா உங்க ஜாமூன் ரெசிப்பி செஞ்சாச்சு!! ஹிப் ஹிப் ஹூரே!!! சக்ஸஸ் சக்ஸஸ்!!! அண்ணே நான் பாசாயிட்டேன்!!! ஹா ஹா ஹா
பதிலளிநீக்குநல்லா வந்துருக்கு...டேஸ்டும்...
கருத்துல ஃபோட்டோ போட முடியலையே....ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் அண்ணா...நான் இம்முறை ஒன்றும் இதுவரை செய்யலை. உங்க ரெசிப்பி பார்த்ததும் செஞ்சுப் பார்த்துருவோம்னு களத்துல குதிச்சுட்டேன்...(ரஷ்ய விஞ்ஞானிக்கு காதுல புகை வருமோ...!ஹா ஹா ஹா)...சூப்பர் அண்ணா உங்க கண்டுபிடிப்பு!!! கௌலாப்ஜாமூன்!!!! ப்ரான்ட் தொடங்கிடுங்கண்ணா....நல்லா போடும்னு தோணுது...
நன்றி நன்றி அண்ணா
கீதா
ஆஆஆஆவ்வ்வ்வ்வ் இதென்ன இதூஊஊ எங்கள் புளொக்குக்கு சின்ன வீடா வரப்போகுதோ?...
பதிலளிநீக்குஅதிரா அது எபி - நம்ம வீடு ...அப்படித்தான் அதுல சொல்லப்பட்டிருக்கும் பாருங்க...அந்த நம்ம வீட்டுல இருக்கற நம்ம ஏரியா...இல்லைனா நம்ம ஏரியாவுல இருக்கற நம்ம வீடு...ஹிஹிஹி
நீக்குகீதா
அருமை சார்!
பதிலளிநீக்குரிசப்பிய சொன்ன விதம்!
குடும்பமே எழுதுவதில் கில்லாடிகள்!
நளனரங்கமா...மாத்திட்டீங்க!
ரெண்டு பீஸ்...பார்சல்!
நன்றி இளங்கோ சார்.
நீக்குஇனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்,,,/
பதிலளிநீக்குகுலோப் ஜாமுன் செய்து பார்த்து விடலாம்
என்கிற ஐடியா தோணுகிறது,,,,/
நன்றி.
நீக்குகௌலாப் ஜாமூன் புதுமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குபார்க்கவே அருமை.
இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
சகோதரி கீதா ரெங்கன் செய்துபார்த்து, படம் எடுத்து, வாட்ஸ் அப் மூலமாக அனுப்பியுள்ளார். சுவையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
நீக்குபுதுமை.... இனிமை....
பதிலளிநீக்குஇனிய தீபாவளி வாழ்த்துகள் 🎊.
நன்றி. இனிய தீபாவளி வாழ்த்துகள்!
நீக்குமைனஸ் மைதா என்பதே புதுமை . நல்லாயிருக்கும் என்று தெரிகிறது
பதிலளிநீக்குசெய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
அவசியம் செய்துபாருங்கள். நல்லா இருக்கும். வாழ்த்துகள் !
நீக்குஸூப்பர் ஐயிட்டம் தீபாவளி வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குகௌதமன் ஜி.
நீக்குஎன்ன அருமையான செய்முறை. மனம் நிறை பாராட்டுகள்.
நன்றாக இருக்கும் எதையும் செய்து பார்க்க ஆர்வம் தான்.
இந்த நாள் போல என்னாளும் க்ரியேட்டிவாக
இயங்க நம்ம ஏரியாவுக்கு வாழ்த்துகள்.
இங்கே வருகை தரும் அனைவருக்கும் என் இனிய தீப ஒளித் திரு நாள் வாழ்த்துகள்.
நன்றி கில்லர்ஜீ !
நீக்குஅனைவருக்கும்
பதிலளிநீக்குஅன்பின் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...
கௌ லாப் ஜாமூன் தந்த கோமகன்!..
பதிலளிநீக்கு- என்று, அனைவராலும் அழைக்கப்படுவீர்களாக!..
கௌலாப் ஜாமூன் அளித்த கோமாளி என்று சொல்லாமல் இருந்தால் சரி!
நீக்குசெம. ஒரு நாளைக்கு செஞ்சி பாத்துட வேண்டியதுதான்
பதிலளிநீக்குசெய்யுங்க சார்!
பதிலளிநீக்குஅட! சிபி எல்லாம் வந்து பார்த்துப் பாராட்டி இருக்காரே, கௌலாப்ஜாமூனை! எனக்கு அந்த நல்லெண்ணெய் தான் இடிக்குது! நெய்யில் செய்து பார்க்கணும்.
பதிலளிநீக்கு