ஞாயிறு, 11 நவம்பர், 2018

கதைக்கான கரு : பாசுமதி.


பாசுமதி !

இந்தக் கதையில் முக்கியமாக வரவேண்டிய நான்கு கதாபாத்திரங்கள் :
பா : பாசு என்கிற பாஸ்கரன் 'எங்கள் பாங்க்' மேனேஜர், சுமதி மீது ஒரு கண்.

சு : சுமதி , கதாநாயகி. பாங்கில் பணிபுரியும் அழகிய, இளம்பெண். 

ம : மதிவதனன் :  சுமதியை காதலிக்கும் பாங்க் அலுவலர்.
                                  
தி : தினேஷ்   பாங்குக்கு மாதம் ஒருமுறை மட்டும் வருகின்ற பணக்கார கஷ்டமர். இவர் முக சாயல், பாஸ்கரன் போலவே இருக்கும். கிட்டத்தட்ட பாஸ்கரன் டபிள் ஆக்ட் பண்ணுகிறாரோ என்ற சந்தேகம் வரலாம். அந்த அளவுக்கு உருவ ஒற்றுமை. 

மேற்கண்ட நான்கு பேருமே திருமணம் ஆகாதவர்கள்.    

பாசுவும் மதிவதனனும், தினேஷின் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, சுமதியைக் கவர திட்டம் இடுகிறார்கள். 

+++ அதாகப்பட்டது, பாஸ்கரனுக்கு மதிவதனன் வில்லன், மதிக்கு பாஸ்கரன் வில்லன். சுமதியை எப்படியாவது தன்னவள் ஆக்கிக்கொள்ள - ஒருவரை ஒருவர் குழிபறிக்க, தினேஷை உபயோகப்படுத்திக்கொள்ள திட்டம் இடுகிறார்கள்.

என்ன திட்டம்?

சுமதி யாரைக் கல்யாணம் செய்துகொள்கிறாள்? 

அதெல்லாம் நீங்க புனையவேண்டிய கதை.

தொடர்கதையோ / சிறுகதையோ,  

யார் யார் எழுதப்போகிறீர்கள் என்பதை, பின்னூட்டத்தில் பதிந்துவிடுங்கள். 

எல்லோரிடமுமிருந்தும் கதைகள் வந்து சேரும்வரை, நாங்க பொறுமையாகக் காத்திருப்போம்! 


===============================================

22 கருத்துகள்:

 1. ஆஹா.... பாசுமதி....

  வரப் போகும் கதைகள் படிக்க நானும் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. சொக்கா! சொக்கா! சொக்கா! நான் இல்லைப்பா, நான் இல்லை! நான் இல்லவே இல்லை!

  பதிலளிநீக்கு
 3. //பாசுவும் மதிவதனனும், தினேஷின் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, சுமதியைக் கவர திட்டம் இடுகிறார்கள். // ரெண்டு பேரும் சேர்ந்தா? அப்புறமா யார் விட்டுக் கொடுப்பாங்க? அல்லது தனித்தனியா ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி ஐடியா தோணிச்சா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனித் தனியாத்தான். சேர்ந்து திட்டம் போட்ட என்ன ஆகிறது!

   நீக்கு
 4. முக்கோணக்காதல் போல இது நாக்கோணகாதலோ...?

  பதிலளிநீக்கு
 5. பா சுமதி (பா....நான் இப்ப பெங்களூரு அதான் பா).. சுமதி வருவா.. பாசுமதியா கொஞ்சம் லேட்டா வருவா....பாஸ்கரனோ...தினேஷூ காத்திருப்பங்களா. ஹாஹாக

  கீதா

  பதிலளிநீக்கு
 6. அண்ணே நீங்க கிரேசி ஆகிட்டீங்க ஹாஹா கிரேசி ஸ்டைல் கரு.அவர் புகுந்து விளையாடுவார்..கு கு.. வும் எழுதிடுவார்....நமக்கு யோசிக்கோணும்...திட்டம் எல்லாம் தீட்டணுமே....ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 7. நான்கேக்க நினைச்சத்தை கீதாக்கா கேட்டுட்டாங்க...அண்ணா அதை கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதாகப்பட்டது, பாஸ்கரனுக்கு மதிவதனன் வில்லன், மதிக்கு பாஸ்கரன் வில்லன். சுமதியை எப்படியாவது தன்னவள் ஆக்கிக்கொள்ள - ஒருவரை ஒருவர் குழிபறிக்க, தினேஷை உபயோகப்படுத்திக்கொள்ள திட்டம் இடுகிறார்கள். ஓ கே?

   நீக்கு
  2. ஆஹா....டைரக்டர்ஸ் யாராச்சும் பாக்காம இருக்கணும்...ஹாஹாஹா...

   கீதா

   நீக்கு
 8. ஆஆஆஆஆஆஆ என்ன இது முதல்ல இருந்தா?:) கொஞ்சக்காலம் மறந்திருந்தாரெ கெள அண்ணன்...

  அது சரி பெயர் மாத்தியாச்சா? ஏன் பாங் எனில், மணி திரட்டும் ஐடியாவோ கர்ர்ர்ர்:))..

  பதிலளிநீக்கு
 9. ///பாசுவும் மதிவதனனும், தினேஷின் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, சுமதியைக் கவர திட்டம் இடுகிறார்கள். //
  இது புரியவில்லை.. ஏன் சுமதிக்கு தினேஷில் விருப்பமோ? எதுக்காக தினேஷின் உருவத்தைப் பயன்படுத்த நினைக்கிறார்கள்.. தம் அழகில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போச்சோ ஹா ஹா ஹா..

  இப்போ வாக்கு குடுக்க மாட்டேன்ன்.. குடுத்தால் செய்யோணும்.. எதுக்கும் கந்த சஷ்டி முடியோணும்..:) கிட்னி வேர்க் பண்ணுவது குறைவா இருக்குது இப்போ:).. மனதில் கதை உருவானால் வந்து சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினேஷ், பார்ப்பதற்கு பாஸ்கரன் போல இருப்பதால், அந்த உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, சுமதியை ஏதோ ஒருவகையில், பாஸ்கரன் / அல்லது மதிவதனன் மீது வெறுப்பு வரவைக்க திட்டம் தீட்டுகிறார்கள். உதாரணமாக, தினேஷை பாஸ்கரனாக நம்புவதற்கும், தினேஷை வேறு ஒரு பெண்ணோடு (சுமதிக்குக்) காட்ட மதி திட்டம் இடலாம். அதே நேரத்தில், பாஸ்கரன் - தினேஷை, தன் பொருட்டு மிகவும் நல்லவராக, வல்லவராக (சுமதிக்குக்) காட்ட திட்டம் தீட்டலாம். சுமதி, தினேஷைப் பார்த்தது இல்லை. கவுண்டரில் இருக்கும் மதியும், பாங்க் பணக்காரக் கஸ்டமர் என்ற வகையில், பாஸ்கரனும் தெரிந்து வைத்திருப்பார். ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா ! முழுக் கதையையும் நானே எழுதிவிடுவேன் போல இருக்கு!

   நீக்கு
  2. //சுமதி, தினேஷைப் பார்த்தது இல்லை//

   ஓ இப்படி ஒண்டும் இருக்கோ ஹா ஹா ஹா ஓகே நன்றி.

   நீக்கு
 10. @ ஞானி:)அதிரா...

  >>> ஓ இப்படி ஒண்டும் இருக்கோ ...<<<

  அப்படி ஒண்டு இருந்தாத்தானே கதை!?..

  பதிலளிநீக்கு
 11. ரெண்டு வருசத்துக்கு முன்னால பாசுமதி/பாகிஸ்தானி

  இப்போ - பாசுமதி/இந்தியன்...

  நான் அரிசியைச் சொன்னே..ங்க!...

  பதிலளிநீக்கு
 12. சுமதி, தினேஷைப் பார்த்தது இல்லை.//

  கௌ அண்ணா ஆஆஆஆன..இப்படியா.... ..கற்றற்றற்றற்றற்றற்றற்றற்றர்...ஹையோ..போச்சே. .சரி நான் எதுவும் சொல்லலை....

  கீதா

  கீதா

  பதிலளிநீக்கு
 13. எதிர்வினைகள் வினையாக முடியாவிட்டால் சரிதான்.

  யார் எல்லாம் கதை எழுத போகிறார்கள் எப்படி இருக்கும் கதை என்று ஆர்வமாய் காத்து இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கௌதமன் ஜி நீங்க திரைக் கதாசிரியராகப் போயிருக்க வேண்டியவர்.
   பார்க்கலாம். என் புத்தி தெளியும் போது யோசிக்கிறேன்.
   எழுதுபவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு