வியாழன், 15 நவம்பர், 2018

கௌலாப் புட்டு.


ஆமாம், ஆமாம்!  என்னுடைய கண்டுபிடிப்பு. 

கௌலாப் புட்டு!   GOU LAB PUTTU.
==========================================

தேவையான பொருட்கள் :

பொட்டுக்கடலை  : 8  மேசைக்கரண்டி.(Fried gram.)

அரிசிமாவு : நான்கு மேசைக்கரண்டி. (Rice flour.)

துருவிய தேங்காய் : நான்கு மேசைக்கரண்டி. (Desiccated coconut.)

பாரீஸ் அம்ரித் பூரா சர்க்கரை : ஐந்து மேசைக்கரண்டி. (Bura sugar) 

Image result for fried gramImage result for rice flourImage result for desiccated coconutImage result for parrys amrit sugar

ஏலக்காய் : நான்கு அல்லது ஐந்து. உள்ளே உள்ள ஏல அரிசியை, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மிக்சியில் மாவாக அரைத்துக்கொள்ளவும். (தண்ணீர் சேர்க்கவேண்டாம். )

மேற்கண்ட நான்கு பொருட்களையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். Dry mix.

சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, கலக்கியவாறு, இட்லிமாவு பதத்திற்குக் கொண்டுவரவும். 

இட்லித்தட்டில் எண்ணெய் தடவி, கலவை மாவை இட்லிகளாக ஊற்றி, இட்லி குக்கரில், வேகவிடவும். வழக்கமான இட்லி வேகும் நேரம்தான். 

ஆறிய பின்பு, அந்த இட்லிகளை எடுத்து, அப்படியே விண்டு அல்லது உதிர்த்துச் சாப்பிடலாம். 

இது சுவையான காலை உணவு. 


செய்து, சுவைத்துப் பார்த்து, கருத்து கூறுங்கள். 

===========================================


17 கருத்துகள்:

  1. இதென்ன...
    புட்டு.... அப்படிந்னு ஆரம்பிச்சு
    இட்டலியில வந்து முடிச்சாச்சே!...

    சட்டினிக்கு குறிப்பு யார் தர்றதாம்!?...

    பதிலளிநீக்கு
  2. குலாப்புட்டு கேட்டதுண்டு கௌ'தமன்ஜி கண்டுபிடிப்பு என்பதால் கௌ'லாப்புட்டு போல...

    பதிலளிநீக்கு
  3. கொழுக்கட்டைபோன்ற சுவை இருக்கும்னு தோணுது. செய்துபார்க்கிறேன். சர்க்கரைக்குத் தடா என்பதால் (அதான்..தொடர்ந்து இனிப்பு வகைகளாக இருவாரங்களுக்கும் மேலாக சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்), வெல்லப்பொடி உபயோகப்படுத்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. புது மாதிரி உணவுகளை கண்டு பிடித்து செய்கிறீர்கள்.

    வீட்டில் என்ன சொன்னார்கள் நல்லா இருக்கு என்று சொன்னார்களா?

    பதிலளிநீக்கு
  5. ஹை கௌ அண்ணா என்ன கௌலாப்..னு புது பிராண்ட் தொடங்க போறீங்களா.. ஹாஹாஹா....செஞ்சு பாத்துடறேன்
    செய்துட்டு சொல்லறேன்...கௌ லாப் ஜாமூன்.... போ மாவு குறைவா போட்டா.. ஜாமூன் இன்னும் soft ஆ வருது.

    அது சரி. குழா புட்டு புதுசா கௌலாப் புட்டுனு அண்ணா சொல்லிருப்பார்னு வந்தா...இட்லி....கௌலாப் இனிப்பு இட்லினு சொல்லிருக்கலாம்...ஹிஹிஹி....

    நானும் இதே சுகர் தான் சென்னைல யூஸ்..பண்ணினேன்....இங்க பாரீஸ் பிராண்ட் பக்கத்து கடைகள் ல கிடைக்கல.....

    கீதா

    பதிலளிநீக்கு
  6. புதுசு புதுசா அழகா செய்யறீங்க அண்ணா...சூப்பர்....எனக்கும் வித்தியாசமா செய்ய எல்லாத்துலயும். பிடிக்கும்..

    இன்புட் பொருள் படம் எல்லாம் ஒகே. எங்கே அவுட்புட் படம்.. ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பொட்டுக்கடலையை மூட்டையா வாங்கி வைச்சிருக்கார் போல! அடுத்து என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... கேஜிஜி சாரோட செய்முறைகளை நல்லாக் கவனிச்சீங்கன்னா, மிகக் குறைந்த எஃபர்ட்டில் செய்பவைகளாக இருக்கிறது. அடுத்து அனேகமா அரிசிமாவு, வெல்லப்பொடி இவைகளை வைத்து ஏதேனும் செய்வாரோ?

      நீக்கு
    2. நான் ஒரு முழுச் சோம்பேறி. அதனால மாக்சிமம் ரெடிமேடு பொடிகள் வீட்டில் எப்பவும் இருக்கும். பொட்டுக்கடலை மாவு அப்பப்போ செஞ்சு வெச்சிடுவேன். பொரிச்ச குழம்புக்குக் கூட, அரிசிமாவுக்கு பதில் பொ க மா உபயோகிப்பேன். என்னைப்போன்ற சோம்பேறிகள்தான் highly creative ஆசாமிகள்!

      நீக்கு
  8. அட எளிமையா செய்து விட்டீர்களே.
    அதுவும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்தால் வாசனை நன்றாகத்தான் இருக்கும். செய்து பார்க்கிறேன். ப்ரண்ட் நேம் நல்லா இருக்கு. GAULAB. SUPER.

    பதிலளிநீக்கு
  9. கௌலாப் புட்டு என்று ஒன்றுண்டென
    இன்று தான் அறிகின்றேன். - ஆயினும்
    செய்முறை சிறப்பாக இருக்கிறதே!
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு