செவ்வாய், 10 டிசம்பர், 2019

ஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க! 191210


பார்க். 

மாலை நேரம்.

அந்த ஊருக்கு  ஒரு வேலையாக  வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். 




' ஹூம்! இன்று ஒருநாள்தான் இந்த பாஷை தெரியாத ஊரில் லோல் படணும். இன்று இரவு நிம்மதியாக ஊருக்கு வண்டி ஏறி நாளைக் காலை வீட்டுக்குப் போயிடலாம். ஆபீசுக்கு ஒருநாள் லீவு போட்டுவிட்டு அக்கடான்னு ஓய்வு எடுத்துத் தூங்கவேண்டும்' என்று நினைத்துக்கொண்டான். 

பார்க்கில் சில லோக்கல் தலை வெளுத்த ஆசாமிகள், சூடிதார் கிழவிகள், புரியாத பாஷையில் உரக்கக் கத்தும் சிறார்கள் எல்லோரும் இருந்தனர். 


அப்போ ஒரு ஆள், பரபரப்பாக பார்க் நுழைவாயில் வழியாக நுழைந்து, கையில் அலைபேசியுடன், ஒவ்வொருவராக என்னவோ கேட்டுக்கொண்டு வந்தான். 

இவன் அவனை ஒருவித ஆர்வத்துடன் பார்த்தவாறு, 'என்ன கேட்டுக்கொண்டு வருகிறான்? ஏன் எல்லோரும் உதட்டைப் பிதுக்கி, தெரியாது என்று தலை ஆட்டுகிறார்கள்?' என்று நினைத்தான். 

அவன், இவன் அருகே வரும்போது கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்தான். 

இவன் அருகே அவன் வந்ததும், கையை என்ன? என்று கேட்கிற பாவனையில் ஆட்டி சைகையில் கேட்டான். 

அவன், அவசரமாக, " தமிளு, தமிளு ...... தமிளு கொத்தா? " என்று கேட்டான். 

இவன் உடனே, " ஓ தமிழ் தெரியும். என்ன விஷயம்?" என்று கேட்டான். 

அவன் அலைபேசியை இவன் கையில் கொடுத்து, ' பேசுங்க, பேசுங்க .... ' என்பதைப்போல சைகைக் காட்டினான். 

மறுமுனையில் பேசியவர் " அப்பாடி ஒருவழியா தமிழ் பேசுகிறவரைக் கண்டுபிடித்துவிட்டானா அந்த ஆளு! சரி நான் சொல்வதை கவனமாக கேட்டுக்குங்க. இந்த அலைபேசியை உங்களிடம் கொடுத்த நபரை, அடுத்த இருபத்துநான்கு மணிநேரத்துக்குள் கொல்லப்போகிறோம். ஏன், எதற்கு என்பதெல்லாம் அவனுக்கு நல்லாத் தெரியும். கொல்லப்போறோம் என்பதை மட்டும் அவனிடம் சொல்லுங்க. அவ்வளவுதான். " 

மறுமுனையில் பேசியவர் இணைப்பைத் துண்டித்துவிட்டார். 

இவன் அவசரம் அவசரமாக அழைப்பு வந்த எண்ணைத் திரும்பத் தொடர்புகொள்ள முயன்றபோது மீண்டும் மீண்டும் ' ..... கரைய மாடின ..., 
. ..... கரைய மாடின ....... ' பதிவு செய்யப்பட்ட குரல். 

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு தொடர்பு கிடைத்தது. அது ஏதோ ஒரு அபார்ட்மெண்ட் செக்யுரிட்டி எண். அங்கிருந்து ஃபோன் செய்தவன் - அங்கேயிருந்து ஒரு டூ வீலரில் ஏறிச் சென்றுவிட்டான். யார் என்று செக்யூரிடி ஆளுக்குத் தெரியவில்லை. முன்னே பின்னே பார்த்திராத ஆள். அவசரமாக ஃபோன் செய்யவேண்டும் என்று கேட்டு ஃபோன் செய்திருக்கிறான். 

அலைபேசியைக் கையில் கொடுத்தவன், " ஏனு? ஏனு? " என்று கேட்டான். 

இவன் தமிழில் சொன்னான். அவனுக்குத் தெரியவில்லை. 

இவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 

அப்புறம்?

நீங்களே எழுதுங்க! 




24 கருத்துகள்:

  1. சரி..முயற்சி பண்ணலாம்னு பார்த்தால் நெடுங்கதையா இழுத்துக்கிட்டே போகுது. பேசாம அப்படியே நிறுத்தி, உங்களை வெளியிடச் சொல்லி, மீதியை யாராவது எழுதுங்கன்னு சொல்லிட வேண்டியதுதான்.

    இல்லை கதை நல்லா வந்தா எ.பிக்கு அனுப்பிட வேண்டியதுதான்..ஹா ஹா

    பதிலளிநீக்கு
  2. இவன் ஒரு காகிதத்தை எடுத்து ஆங்கிலத்தில் விஷயத்தை எழுதி அவன் கையில் கொடுக்கலாம் என்று எழுதத் தொடங்கியபோது அவன் இரண்டு மூன்று பேர்களால் சூழப்பட்டான். ஓரக்கண்களால் அதை உணர்ந்த அவன்  கலவரத்துடன் நிமிர்ந்தபோது ஒருபெண், இரண்டு ஆண்கள், இருக்க ஒருவன் கையில் கேமிரா...

    "ஹா...  ஹா....  ஹா...   அல்லி நோடி...    நம்ம டிவி... கேண்டிட் ப்ரோக்ராம்...    இது மாதிரி சமயங்களில் நம் மக்களின் உதவும் மனப்பான்மை எப்படி இருக்கிறது என்று ஒரு கான்செப்ட்....   யு ஆர் அ வெரிகுட் பெர்சன்..."என்று கையைப் பிடித்துக்குலுக்கி கேமிராவை காட்ட, கேமிராமேன் இவனை ஜூம் செய்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அந்த அவனுக்கு ஆங்கிலமும் தெரியாதே!

      நீக்கு
    2. இது போங்கு. முன்னாலேயே அவனுக்கு ஆங்கிலமும் தெரியாது என்று ஏன் சொல்லவில்லை?

      நீக்கு

  3. கடைசியாக அவர் மனதை திடப்படுத்ததி கொண்டு ஆங்கிலத்தில் நீ லண்டன் போய் அதிராவை ஆசைஆசையாய் சமைச்சி போட சொல்லி அதை சந்தோஷமாக சாப்பிடு என்று அந்த ஆள் தமிழில் சொன்னான் என்று சொன்னார்.


    அதைக் கேட்ட அவன் அதற்கு பதில் நான் இங்கேயே தற்கொலை செய்துகொள்வேனே என்று இவன் பதிலுக்கு சொன்னான்

    உன்னை இனிமேல் எம்தரமனு கூட காப்பாற்ற முஇயாது என்று தமிழில் சொன்னவாரே பார்க்கில் வாக் போகத் தொடங்கினார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா இங்கே எப்போதாவதுதான் வருவார்!

      நீக்கு
    2. ஆஆஆ இப்போதான் எங்கள் புளொக் சைட்பார் பார்த்து உள்ளே வந்தேன்... இது என்ன புதுவருடம் வரப்போகுதே அதுக்கு முன்னம் தூசு தட்டுவமே எனும் போஸ்ட்டோ?

      கதை ஆரம்பம் நல்லாத்தொடங்கி, பின்பு ஏதோ மர்மத் தொடர்போல ஆக்கிட்டீங்களே கெள அண்ணன்..:)).. என்னால தொடர முடியுமோ தெரியவில்லை.. எதுக்கும் உற்சாகம் வருகுதிலை, இந்தக் காலநிலைதான் காரணம், இப்போ இங்கு குளிர், கும்மிருட்டு.. பகலெல்லாம் லைட் போட வேண்டி இருக்கு. அத்தோடு தொடர் மழை..

      வீட்டில் இருந்து சமைச்சு சாப்பிட்டு நித்திரை, மூவி.. இப்படி இருப்பதுதான் இந்த வெதருக்கு ஆசையாக இருக்குது ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. //கடைசியாக அவர் மனதை திடப்படுத்ததி கொண்டு ஆங்கிலத்தில் நீ லண்டன் போய் அதிராவை ஆசைஆசையாய் சமைச்சி போட சொல்லி அதை சந்தோஷமாக சாப்பிடு என்று அந்த ஆள் தமிழில் சொன்னான் என்று சொன்னார்.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)), நான் வேணுமெண்டால் சரவணபவானுக்கு கூட்டிப்போகிறேன்:))

      நீக்கு
  4. திகில் கதை.
    தமிழ் கொத்தினாலும் கன்னடம்
    கொத்தலையே.
    சுஜாதாவாக இருந்தால் கச்சிதமாக முடித்திருப்பார்.
    ஸ்ரீராம் சொன்னதுதான் சரி.
    இனிமை.
    நமக்கு இதெல்லாம் வராது சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமாக எதையாவது யோசித்துப் பாருங்கள் - உங்களால் முடியும்.

      நீக்கு
  5. இப்போத் தான் படிக்கிறேன். மண்டை காயும் போல இருக்கு! அதோட எனக்குக் கற்பனை வளமே சுத்தமாக் கிடையாது. வல்லி, நெ.த. ஸ்ரீராம், துரை, கில்லர்ஜி, பானுமதி, தி/கீதா போன்றவர்களால் உடனே எழுத முடியும். கமலாவும் முயற்சி செய்யலாம். கோமதிக்கும் கொஞ்சம் என்னைப் போல் கஷ்டமா இருக்கும்னு நினைக்கிறேன். அதிரடி, தியாகத் திலகம் இங்கே வராது! ஏஞ்சல் வேலைகளில் மும்முரம். ஆனாலும் அவங்க கற்பனையில் இந்த மாதிரிக் கொலை எல்லாம் நடக்காது. எல்லோரையும் கவுன்சலிங் கொடுத்துச் சரி பண்ணிட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கதையும், அதை தொடர்ந்த ஸ்ரீராம் குட்டி கதையும் நல்லா இருக்கிறது.

    இந்த ஆள் இப்படி தமிளு பேசி கொன்றதால் அவன் மிக வெறுப்பு அடைந்து இதற்கு மேல் தாங்க முடியாது என்று நாள் குறித்து விட்டானோ! கொல்ல.

    பதிலளிநீக்கு
  7. அந்தப் பக்கம் - பாவம் அவனுக்கு தமிளு தெரியாது...

    இந்தப் பக்கம் இவனுக்கு தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாது...

    எழுத்தாளருக்கோ கிடுக்கிக்குள் அகப்பட்ட எலி மாதிரி...

    என்னாகும்?..

    எவருக்குமே தெரியாது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அந்தப் பக்கம் - பாவம் அவனுக்கு தமிளு தெரியாது...

      இந்தப் பக்கம் இவனுக்கு தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாது...//

      அதுதானே சிக்கலுக்கு முக்கிய காரணம்!

      நீக்கு
  8. பேசாம ஜீவி ஐயா அவுங்க பக்கம் தள்ளி விடுங்கோ!...

    இல்லேன்னா இருக்கவே இருக்கார் - பன்மொழி வித்தகர் தேவகோட்டை( கில்லர் ) ஜி!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுபவருக்கு பல மொழிகள் தெரிந்திருக்கலாம்; ஆனால் கதையில் வருபவருக்கு ?

      நீக்கு
  9. ஒரே மாதிரி..ன்னு சொல்லிட்டதால

    இப்பதான் நகத்தால கீறிக் கிழிச்சிட்டு...

    சுண்ணாம்புக் கரண்டியை (கத்தி) கையில் எடுத்திருக்கிறேன்!...

    அதுக்குள்ளே இது வேறயா!...

    பதிலளிநீக்கு