வியாழன், 7 மே, 2020

ரகு வம்ச சுதா (நிறைவுப் பகுதி)


முந்தைய பகுதியின் சுட்டி 



அப்பாதுரை எழுதி அனுப்பிய பா கே : 

முதல் நான்கு, போன பகுதியில் வந்தது. 
இனி மீதி : 
=======================

" என்னம்மா சுதா ? எங்கே இருக்கே? ரகுவின் அம்மா அப்பா இங்கே வந்து வெயிட் பண்றாங்க. உடனே வாம்மா "

" அப்பா, நான் கொஞ்ச தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ரகு எங்கே? " 

" ரகு காரிலேயே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காராம். நீ வந்ததும் இங்கே வருவாராம். " 

" என்னப்பா இது சொதப்பிட்டியே! சரி எந்தக் கார் என்று அடையாளம் சொல்லு. நான் பார்த்துக்கொள்கிறேன். " 

காரின் அடையாளம், ரகுவின் அப்பாவிடம் கேட்டு சொன்னார், சுதாவின் அப்பா. 

=====

மாலை நேரம் கடந்து நன்கு இருட்ட ஆரம்பித்துவிட்டது.  

கார்க் கண்ணாடியின் வழியாக  கருஞ்சிவப்பு வானத்தைப் பார்ப்பதும், பிறகு தன் அம்மா அப்பாவை சிக்னலுக்காகப்  பார்ப்பதுமாக இருந்த ரகு பொறுமை இழந்தான். 

காரின் பின் சீட்டில் இருந்த ரோனியைப் பார்த்துத்  திரும்பி, " மிஸ்டர் ரோனி ... " என்று அழைக்கும்போது, 

ஓர் உருவம் காரின் முன்பகுதியைக் கடந்து, பின் பக்கப் பகுதியை  நோக்கி முன்னேறியது. 

அது யார், என்ன என்று பார்ப்பதற்குள் அது கடந்து காரின் பின்பக்கம் போய் விட்டது. 

போதாததற்கு அப்போது அங்கே க்ராஸ் செய்த கார் ஒளி கண்ணைக் கூசவைத்தது. 

ரகு தன்னை அழைத்ததைக் கேட்ட ரோனி, 'சரி, இதுதான் நமக்கு ரகு கொடுக்கின்ற சிக்னல் போலிருக்கு ' என்று நினைத்து, காரின் கதவைத் திறந்துகொண்டு, கீழே இறங்கி .....

ரோனிக்கு மிக அருகே ஒரு பெண்ணுருவம் வந்து, 

எக்ஸ்க்யூஸ் மீ 
பஸ்ஸுக்கு காசில்லை 
மூணு டாலர் தரமுடியுமா 
என்று ஆங்கிலத்தில் கேட்டது. முதலில் திகைத்துப்போன ரோனி, பிறகு கேட்பது ஒரு பெண் என்று தெரிந்தவுடன் .....  

" ஹாய் ஸ்வீட் பேபி !! ஒய் த்ரீ டாலர்ஸ்? கமான் ஐ வில் கிவ் யு தர்ட்டி டாலர்ஸ்! லெட் அஸ் கோ .... " என்று சொல்லி அந்தப் பெண்ணின் கையைப் பிடிக்கப்போக, அந்தப் பெண் அவசரமாக ரோனியைக் காருக்குள் தள்ளிவிட்டு ஓடிவிட்டாள். 

கிளின்க்  கிளின்க் என்ற சத்தத்துடன் மீண்டும் திறந்த கார்க்கதவையும்,  காருக்குள் தள்ளப்பட்ட ரோனியையும் பார்த்த ரகு, " வாட் ஹாப்பன்ட் ?" என்று கேட்டான். 

அரண்டு போயிருந்த ரோனி " a bitch asked me some bucks and when I offered more, she pushed me back into the car. Is it part of your practical joke?" என்று கேட்டான். 

ரகு. " No, no. This is not any of my plan. " என்று சொன்ன ரகு, நடந்த எல்லாவற்றையும் ரோனியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டான். பிறகு ரோனியிடம், " OK. you wait here. Be safe and remain inside the car. I will go and see what is happening" என்று சொல்லி, காரிலிருந்து இறங்கி, தன் பெற்றோர் இருக்குமிடம் நோக்கி நடந்தான் ரகு. 

==================

அருகே சென்றதும், ரகுவின் அம்மா, " டேய் ரகு - கார் டிரைவரை யாரோ  காருக்குள்ள தள்ளிவிட்டு ஓடினதைப் பார்த்தோமே, அது யாரு? என்ன நடந்தது? " என்று கேட்டாள்.

" அது யாருன்னு தெரியவில்லை அம்மா. ரோனியிடம்  ஏதோ பணம் கேட்டதாம். அவர் அதிகமாக கொடுக்கிறேன் என்றதும் பயந்து, அவரைத் தள்ளிவிட்டு ஓடிப்போயிட்டாள் என்று சொன்னார்.  பாவம் ரோனி ரொம்ப பயந்துட்டார். அவரை ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்லிட்டு வந்தேன். இவங்க தான் சுதாவின் அம்மா அப்பாவா? நமஸ்காரம் " என்றான், அவர்களிடம். 

" ஆமாம் மாப்பிள்ளை ! நாங்கதான். சுதா இங்கேதான் இருக்கா, இப்போ வந்துடுவா. அநேகமாக நீங்க காரிலேயிருந்து இறங்கி இங்கே வந்ததைப் பார்த்திருப்பா" என்றார் சுதாவின் அப்பா. 

சற்று நேரம் கழித்து அங்கே வந்தாள், சுதா. பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின், இருவரின் பெற்றோரும், " நீங்க ரெண்டு பேரும் பேசிக்கொண்டிருங்க. நாங்க நாலு பேரும் கொஞ்சம் காலாற நடந்துவிட்டு வருகிறோம்" என்று சொல்லி சென்றனர். 

==================

சுதாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான், ரகு. 
சுதா எதுவும் பேசாமல் வேறு எங்கோ பார்ப்பதும், ரகுவின் பக்கம் பார்ப்பதுமாக இருந்தாள்.

இரண்டு நிமிடங்கள் கழித்து ரகு குறும்பாக " மிஸ், பஸ்ஸுக்கு காசில்லையா? மூணு டாலர் தரட்டுமா? " என்று கேட்டான். 

திடுக்கிட்டுப் போன சுதா ரகுவைப் பார்த்து ..... " அ.... அ .... அது நாந்தான் என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? " 

ரகு : " மேக் அப் எல்லாம் சுலபமாக மாற்றிவிடலாம். ஆனால், போட்டிருக்கின்ற செண்ட் வாசனையை அவ்வளவு சுலபமாக மாற்ற முடியாது அல்லவா! காரின் பின் கதவு திறந்ததும் வந்த அதே செண்ட் வாசனை உன் கிட்ட வருதே!" 

சுதா: " அவலட்சணமான மேக்கப்புடன் வந்து  உங்களை ஏதாவது சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்து, அலறவைத்து, பிறகு நாந்தான் சுதா என்று தெரிந்ததும் நீங்க என்ன செய்கிறீர்கள் என்று பார்க்க ஆசைப்பட்டேன். சொதப்பிட்டேன். காரிலிருந்து இறங்கி வந்த அந்த ஆள் யார்? "

ரகு: " அவர் ரெண்டட் காரின் டிரைவர். மிஸ்டர் ரோனி. பாவம். நீ முரட்டுத்தனமாக தள்ளியதில் பயந்துவிட்டார்.  ஒரிஜினலா நீ என்ன பிளான் பண்ணினே? 

சுதா : " என்னுடைய ஒரிஜினல் பிளான் படி, என் அப்பாவிடம் போனில் சொல்லி உங்களைத் தனியாக இங்கே விட்டுவிட்டு உங்க அம்மா அப்பாவை அழைத்துக்கொண்டு  வாக்கிங் போகச் சொல்லியிருப்பேன். அப்புறம் அவலடசண மேக்கப்புடன் இங்கே வந்து, உங்களிடம், " ஏய் மிஸ்டர் - உன்னைப் பார்த்தால் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. என்னைக் கல்யாணம் செஞ்சிக்குவியா ... என்று கேட்டிருப்பேன். அப்படி நடந்திருந்தால், நீ என்ன சொல்லியிருப்பே?"

ரகு : "அம்மணீ. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. நான் இங்கே வேறு ஒரு பெண்ணைப் பார்ப்பதற்கு வந்திருக்கிறேன். கொஞ்சம் அந்த மரத்தடியில் வெயிட் பண்ணுங்க. நான் பார்க்க வந்திருக்கிற பெண் உங்களைவிட அழகா இல்லை என்றால், உங்களையே கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லியிருப்பேன்."

சுதா : " இப்போ யாரு அழகா இருக்காங்க?" 

ரகு : " நான் இன்னும் அந்த அவலட்சணப் பெண்ணை சரியா பார்க்கவில்லை. அதனால், இப்போதைக்கு no choice. " 

சுதா : " ஓஹோ ! அப்படியா சேதி? கல்யாணத்துக்கு அப்புறம் என்னுடைய அவலட்சண முகம், அகோர முகம், ருத்ர தாண்டவம் எல்லாம் பார்க்கத்தானே போறீங்க!" 

இருவரும் சந்தோஷமாக சிரித்தனர்.

=================================================

33 கருத்துகள்:

  1. ஆஹா! நல்ல கோர்வையாக ஒரு கதை சொல்லிவிட்டீர்கள். கொடுத்த ஒரு வார்த்தைகளை வைத்துக்கொண்டு அருமையான காதல் கதை! மூணு டாலர் கேட்கும்போதே சுதா தான் ரகுவைச் சோதிக்க வந்திருக்காள் என்பது புரிந்து விடுகிறது. ஆனாலும் பின்னர் என்ன ஆச்சுனு சுவாரசியம் குறையாமல் சொல்லி இருக்கீங்க! கதை தொடர்ந்து படித்தாலும் விறுவிறு. விட்டு விட்டுப் படிச்சும் விறுவிறு. அப்பாதுரை கொடுத்த வார்த்தைகள் அருமை. பொருத்தமான இடங்களில் அந்த வார்த்தைகள் வந்து விழுந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. "கொடுத்த ஓரிரு வார்த்தைகள்" என வந்திருக்கணும்.

    பதிலளிநீக்கு
  3. திறமையான பின்னல். அபார கற்பனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே!

      நீக்கு
    2. அப்படியே திரும்பி பின்னால் பாருங்க..!!

      நீக்கு
    3. ஆ .... இப்படி பயம் காட்டினால் நான் என்ன செய்வது!

      நீக்கு
  4. ஓ... இது கொடுத்த வார்த்தைகளுக்கான கதையா? இது எனக்குத் தெரியவில்லையே.

    கதை நல்லா வந்திருக்கு. மேணு டாலர் என்பதால் வெளிநாட்டில் நடப்பதைப் போல பின்னியிருக்கிறாரா... பாராட்டுகள்.

    புதன் கேள்வி - எழுதுவதில் திறமையான ப்ளாகர்கள் ஏன் சோம்பேறித்தனத்தில் ஆசை கொண்டு ப்ளாகில் எழுதாமலே, அதற்கு ஏதாவது சாக்குச் சொல்லிக்கொண்டு இருந்துவிடுகிறார்கள்? ஒருவேளை இவர்கள் வீட்டின் அருகில் நாம் வசித்தால், முதல் பத்து நாட்களுக்கு நிறையப் பேசிவிட்டு அப்புறம் மௌனமாகவிடுவார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா! நல்ல comparison! அதென்னவோ சிலச் சமாச்சாரங்கள், 'என்னை எழுது, என்னை எழுது' என்று கனவிலும் நினைவிலும் வந்து திரும்பத் திரும்பச் சொல்லும். இங்கே பிரசவம் --- சாரி பிரசுரம் ஆனவுடன் குறும்புத்தனக் குழந்தை ஓடி ஒளிந்துகொள்வதைப் போல எங்கோ ஓடிவிடும்!

      நீக்கு
  5. முதல் பகுதியையும் படித்து விட்டு வருகிறேன்.அப்பாதுரையின் கதை!

    பதிலளிநீக்கு
  6. ஆஹா. நல்ல விதத்தில் கதை பூர்த்தியானது மகிழ்ச்சி.

    துரைக்கு வாழ்த்துகள்.சஸ்பென்ஸ் உடன் பெண் பார்க்கும் கதை கூட துரையால்
    தான் எழுத முடியும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி ஹி !! அப்பாதுரை சார் எழுதியிருந்த 'பார்த்ததும் கேட்டதும்' குறிப்புகளுக்கு அடியேன் எழுதிய கதை!

      நீக்கு
  7. இப்படித்தான் ஆகப்போகுது..ன்னு தெரிஞ்சதும் இன்னும் கொஞ்சம் ஆவல்...

    எப்படியோ ரகுவும் சுதாவும் சந்தோஷமாகச் சிரித்து விட்டார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேர்த்து வைக்காமல் இருந்திருந்தால் அந்தக் கல்யாணப்பரிசு கதாசிரியரை இப்போ எத்தனைப் பேருங்க துரத்திகிட்டு இருப்பாங்க!

      நீக்கு
  8. கதை விறுவிறு. பொருத்தமான இடங்களில் அந்த வார்த்தைகள் வந்து விழுந்திருக்கின்றன.Super.

    பதிலளிநீக்கு
  9. கதையின் ஓட்டத்தை யூகிக்க முடிந்தாலும் படிக்க சுவாரஸ்யமாகவே இருந்தது. பாராட்டுகள். 

    பதிலளிநீக்கு
  10. கௌதமன் ஜி மனம் நிறை பாராட்டுகள். நல்ல தாக எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டு வாங்கிப் போட்டுக்கொண்ட பாராட்டு. நன்றி!

      நீக்கு
  11. படிக்க சுவாரஸ்யம். முடிவு சுபம்

    பதிலளிநீக்கு
  12. ஏன் இவ்வளவு சீக்கிரமாக முடித்து விட்டீர்கள்?..

    பதினோரு குறிப்புகளுக்கு பதினோரு பகுதிகளாவது வந்திருக்க வேண்டாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப் படிப்பதற்கே. ஆளில்லை. பதினொரு பதிவுகளில் இழுத்திருந்தால் வர வர குறைந்து கடைசியில் நான் மட்டும் படிக்கவேண்டியதாகியிருக்கும்.

      நீக்கு
  13. கெளதமன் சார் கதை அருமை.

    //" ஓஹோ ! அப்படியா சேதி? கல்யாணத்துக்கு அப்புறம் என்னுடைய அவலட்சண முகம், அகோர முகம், ருத்ர தாண்டவம் எல்லாம் பார்க்கத்தானே போறீங்க!" //

    குரோம் பேட்டை குறும்பு இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா சுதாவின் பெற்றோர் குரோம்பேட்டை ஆளுங்க போலிருக்கு!

      நீக்கு
  14. கொடுத்த வாரத்தைகள் வைத்து மிகச் சிறப்பாக கதையைச் செதுக்கி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  15. இரு பகுதியையும் வாசித்தேன். நல்ல கற்பனை, நகைச்சுவை என்று மிளிர்கிறது. வாழ்த்துகள் கேஜிஜி சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  16. கௌ அண்ணா முதல் பகுதி மட்டும் அப்போவே நான் வலைப்பக்கம் வராதப்ப மொபைலில் வாசித்து அப்புறம் இரண்டாவது பகுதி இதோ இப்ப வாசித்துவிட்டுஏன். சூப்பர். நல்ல ஸ்வாரஸ்யம். அழகா அப்பாதுரை ஜி கொடுத்த குறிப்புகள் அந்த வார்த்தைகளைக் கோர்த்து நல்லா வழக்கமான ஸ்டைல்ல அசத்திட்டீங்க.

    ரசித்தேன் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு