புதன், 6 மே, 2020

ரகு வம்ச சுதா !


அப்பாதுரை அவர்கள் ஏப்ரல் பன்னிரெண்டாம் தேதி, தான் பார்த்ததையும், கேட்டதையும் எழுதியிருந்தார். 

அதை வைத்து புனையப்பட்ட கதையின் முதல் பகுதி இது.   இறுதிப் பகுதி அடுத்த பதிவில்.





பெண் பார்க்க போகலாம் என்று ஒரு திட்டம் போடப்பட்டது. 
இல்லை - நீங்க நினைப்பது போல சொஜ்ஜி பஜ்ஜி கேசரி காபி விவகாரமில்லை. 

இது அயல் நாட்டு சூழ்நிலை. 

பெண்ணை பையனும், பையனை பெண்ணும் சந்தித்துப் பேச வைக்க ஒரு பொது இடத்தில் ஏற்பாடு. 

ரகு, சுதா இருவரின் பெற்றோர்களும் ஒருவருக்கொருவர் அந்த ஊர் தமிழ் மன்றத்தில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பார்த்துப் பேசி முடிவு எடுத்திருந்தார்கள். 

"நமக்குப் பிடித்திருந்தால் போதுமா? அவர்கள் இருவரும் ஒருவர்க்கொருவர் பார்த்துப் பேசி ஒரு முடிவு எடுக்கட்டுமே!" 

"ஆம், அதுவும் சரிதான். இந்தக் காலத்தில் ஸ்கைப், ஜூம், பீம், என்று ஏதேதோ இருக்கின்றதே அதில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாமே?" 

"அப்படி நான் ஏதாவது சொன்னால், என்னுடைய பெண் - அவன் யாராக இருந்தாலும் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிடுவாள். ஏன் என்று கேட்டால், போனில் பேசுவது எல்லாம் நம்ப முடியாது. ஒரிஜினல் மக்கு கூட போனில் பேசும்போது போனுக்குப் பின்னே ஒரு பிராம்ப்டர் சொல்வதைப் பார்த்து ஆக்ட் பண்ணி சமாளித்திடுவான் என்று சொல்வாள்"

"அட ! என்ன ஆச்சரியம் ! என் பையனும் கிட்டத்தட்ட இதே போலத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறான். யாராக இருந்தாலும் நேரில் பார்த்துப் பேசித்தான் என் அபிப்பிராயத்தைச் சொல்வேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறான்"

தேதி, இடம், நேரம் எல்லாம் குறிக்கப்பட்டது. 

===========

"அம்மா - என்னுடைய கார் சர்வீசுக்காக வொர்க்ஷாப் ஆளுங்க வந்து ஓட்டிச் சென்றுவிட்டார்கள். நாம் வாடகைக்காரில் செல்வோம். "

"சரி. "

வந்தது - 

கறுப்பு நிற கார்



"என்னடா - ரகு! ஆரம்பமே சகுனம் சரியில்லையே ! கறுப்பு நிறம் அபசகுனம்டா!" 

"அம்மா - இங்கே பாரும்மா - சகுனம் சூன்யம் எல்லாம் பார்க்கிறதா இருந்தா நான் வரவில்லை."

"சரிடா - நீ சொல்றாப்லயே எல்லாம் நடக்கட்டும்." 

" எக்ஸ்க்யூஸ் மி" என்றான் ரகு அந்தக் கறுப்புக் கலர் காரின் டிரைவரிடம். 

" என்ன" 

" இந்தக் கார் அழகாக இருக்கிறது. ரொம்ப நாளாக எனக்கு இந்த மாடல் கார் ஓட்ட வேண்டும் என்று ஆசையாக உள்ளது. நீங்க பின்னாடி சீட்டுல என் அப்பாவோடு உட்கார்ந்து வாங்க. அம்மா முன்னாடி சீட்டுல உட்காரட்டும். நான் காரை ஓட்டுகிறேன். "

" நீங்க ஓட்டும்போது ஆக்சிடண்ட் ஆகி, காருக்கு ஏதாவது டாமேஜ் ஆச்சுன்னா?"

எல்லாம் ஆங்கிலத்தில் நடந்த உரையாடல்கள். 

ரகுவின் அம்மா தூய தமிழில் " பாழாப்போறவன் - வாயில நல்ல வார்த்தையே வராதா இவனுக்கு?"

ரகு : "அப்படி ஏதாவது நடந்தா, ரிபேர் சார்ஜ் எல்லாவற்றையும் நானே உங்கள் கம்பெனிக்குக் கொடுத்துவிடுகிறேன்." 

டிரைவர் இதற்கு ஒத்துக்கொண்டார்.  

பின் சீட்டில் டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து, 

" கடம்பா போற்றி கந்தா"  என்று அரற்றிக்கொண்டே வந்தார், ரகுவின் அப்பா! 

மீட்டிங் ப்ளேஸ் வந்தது. 

"டேய் ரகு காரை இங்கே நிறுத்து. அதோ அங்கே சுதாவின் அம்மா அப்பா ஒரு டேபிள் பக்கத்தில் சேர்ல உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்" 

"சரி அம்மா, நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் காரிலேயே இருந்து நான் சொல்வதைக் கேளுங்க. இன்னும் சுதா இங்கே வந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை நாம முன்னாடிப் போய் அசடு வழிந்தால் அதைப் பார்த்து கேலி செய்கின்ற பெண்ணாக இருப்பாள் போலிருக்கு. அதனால்,  நீயும் அப்பாவும் முதலில் போய் அங்கே அவர்களோடு பேசிக்கொண்டிருங்கள். என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு எனக்கு சிக்னல் கொடுங்க. நான் சுதா வந்த அப்புறமா அங்கே வரேன்"  

ரகுவின் அம்மாவும் அப்பாவும் காரிலிருந்து இறங்கி சுதாவின் பெற்றோர் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி நடந்தார்கள். 

" நமஸ்காரம் ! எங்கே மாப்பிள்ளை? உங்களோடு வரவில்லையா? " 

" நமஸ்காரம். சுதா எங்கே? இன்னும் வரவில்லையா?" 

" அந்தக் கூத்தை ஏன் கேட்கிறீர்கள். நாங்க இங்கே வந்து அரைமணி நேரம் ஆயிடுச்சு. சுதா எங்களை அழைத்து வந்து இங்கே விட்டுவிட்டு, ரகு & co வந்ததும் எனக்கு போன் பண்ணுங்க - அப்புறம் நடப்பதை எல்லாம் ஒன்றும் பேசாமல் வேடிக்கை பாருங்க என்று சொல்லி காரை எடுத்துக்கொண்டு எங்கேயோ போயிட்டா. " 

" ரகு எங்களோட வந்தான். அதோ அந்த கறுப்புக்கலர் கார்ல உட்கார்ந்திருக்கான். சுதா வந்ததும் வருகின்றேன் என்று எங்களிடம் சொன்னான். " 

" இருங்க. நான் சுதாவுக்கு  நீங்க வந்ததையும், மாப்பிள்ளை காரிலேயே வெயிட் செய்வதையும் போன்ல கூப்பிட்டு சொல்கிறேன்" என்று சொல்லி போனை எடுத்தார் சுதாவின் அப்பா. 

'எக்ஸ்க்யூஸ் மி' 

என்றான், ரகு, பின் சீட்டில் அமர்ந்து இருந்த டிரைவரிடம். 

" என்ன?" 

" இன்னும் கொஞ்ச நேரத்திற்கு நாந்தான் டிரைவர். நீங்க என்னுடைய அம்மா அப்பாவுக்கு பையன் என்று வைத்துக்கொள்வோம். நான் சொல்லும்போது, காரிலிருந்து இறங்கி, என்னுடைய அம்மா அப்பாவைப் பார்த்து நடந்து செல்லுங்கள். நீங்க அவர்கள் அருகே போனதும் நான் காரிலிருந்து இறங்கி அங்கே வருவேன். உடனே நீங்க காருக்குத் திரும்பி வந்துவிடலாம்"

" மிஸ்டர் - இது என்ன பிளான்? No foul plays ... " 

" மிஸ்டர் ரோனி , நோ டெபநட்லி நாட். இது ஒரு ப்ராக்டிகல் ஜோக். உங்களுக்கு எந்த ட்ரபிளும் வராது. அதற்கு நான் காரண்டீ . இதற்காக உங்களுக்கு ஐம்பது டாலர் அதிகம் தருகிறேன். இந்தாருங்கள்." 

(தொடரும்) 

19 கருத்துகள்:

  1. ''தான் பார்த்ததையும், கேட்டதையும் எழுதியிருந்தார். //

    பார்த்ததையும் பார்த்தாச்சு; கேட்டதையும் கேட்டாச்சு..

    இதையும் படிச்ச்சாச்சு.

    கறுப்புக் கார் ஏன் இங்கேயே நிக்கறது?.. டிரைவர் இறங்கியதும் ரகு அதை ஸ்டார்ட் பண்ணலை?..

    பதிலளிநீக்கு
  2. ஓ.. கதை இப்படிப் போகிறதா!..
    மர்மயோகி யார் என்று தெரியலையே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மர்மயோகியா ! நான் அப்படி யாரையும் பார்க்கவில்லையே!

      நீக்கு
  3. தலைப்பு முடிவு நல்லமுடிவாக இருக்கும்னு சொல்லி விட்டது. ஆனால் இந்த ரோனியோ அம்பேரிக்கனா? வெள்ளையனா? அவனைப் பார்த்து சுதா எப்படி ஏமாந்து போவாள்? அவள் பார்க்க வந்திருப்பதோ அமெரிக்க இந்திய மாப்பிள்ளை! அது அவளுக்குத் தெரியும் தானே? அப்புறமும் ரகுவுக்கு ஏன் இந்த விளையாட்டு? என்ன விதத்தில் சுதாவை சோதிக்கப் போகிறான்? அறிய ஆவலுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் புதன் கேள்விகளா? (அதாவது புதன் கிழமையில் நீங்க கேட்கிற கேள்விகளா!)

      நீக்கு
  4. கற்பனைக்குதிரையைத் தட்டி விட்டதிலே அது ஓட்டமாய் ஓடுகிறது போல!

    பதிலளிநீக்கு
  5. இது என்ன விபரீத விளையாட்டு?

    வைதேகி காத்திருந்தாள், தனுஷோட இன்னொரு படம் - இரண்டையும் பார்த்துவிட்டு, இப்படி விபரீதமாக யோசித்திருப்பானோ ரகு?

    முடிவு சுபமாகத்தான் இருக்கும். இருந்தாலும், சுதா, அந்த டிரைவரைப் பார்த்து ஒரு ஒபினியன் ஏற்படுத்திக்கொண்டு, பிறகு ரகு விளக்கினாலும் அவள் மனது ஏற்றுக்கொள்ளுமா? இல்லை இன்னும் விபரீதமாக, சுதா ஒரு 'சதா'வை தன் முன்னால் அனுப்பி, அந்த 'சதா'வும் டிரைவரும், அப்புறம் ரகுவும் சுதாவும் ஒரே மண்டபத்தில் திருமணம் செய்துகொள்வார்களா (அந்தச் சூழலில் ஒரே நாளில் மோதிரம் மாற்றிக்கொள்வார்களா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்விகள். அப்பாதுரை சார் பட்டியல் இட்டிருந்த அதே ஆர்டரில் செல்கிறது கதை.

      நீக்கு
  6. ரகு, சுதா இரண்டு பேருக்கும் குணம் ஒரே மாதிரி இருக்கும் போலவே!

    பதிலளிநீக்கு
  7. ரகு சுதா இரண்டு பேருமே ஒரே நோக்கத்துடன் இருக்காங்க போல. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு.

    பதிலளிநீக்கு
  8. பெயர்கள் கூட இசையாக சுதா ரகுன்னு வரதே.
    விளையாட்டுத் தனமா ஆரம்பிக்கிற உறவு சுபமாக முடியும்னு எதிர்பார்ப்போம்.

    பதிலளிநீக்கு