சனி, 16 ஏப்ரல், 2011

ஒரு சோதனை முயற்சி.

                       
எங்கள் ப்ளாக் பதிவில் சென்ற ஆண்டு பதிவிடப்பட்ட, அதிக 'இன்ட்லி' வாக்குகள் பெற்ற, அதிக கருத்துரைகள் பெற்ற ஒரு பதிவு, பின்னூட்டங்களுடன் சேர்த்து.
     
மொத்த பக்கங்கள் : இருபது. (A4 அளவு. )
மொத்த அளவு : 147 KB only.
தரவிறக்கம் செய்து, எங்கள் ப்ளாக் படிக்காத உங்கள் நண்பர்களுக்கு - மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள்.

கீழே இருக்கின்ற சுட்டியில் கிளிக்கி, Download செய்துகொள்ளலாம்.

நன்றி.


சுட்டி: கீழே.\/
>>>>>படைப்பாற்றல் பயிற்சி - புதிய கோணம்.

                  

வெள்ளி, 18 மார்ச், 2011

Hannah வரைந்த மயில்.

angelin sundaram:
"இது எங்கள் 10 வயது மகள் Hannah, நீங்கள்
வரைந்த மயில் படம் பார்த்து வரைந்து,
வர்ணம் தீட்டுவதற்கு பதில்
paper quilling முறையில் decorate செய்தது."
 


எங்கள் கமெண்ட்: சூப்பர்! கீப் இட் அப்!

செவ்வாய், 15 மார்ச், 2011

மயில் வரையக் கற்றுக்கொள்ளுங்கள்

                          
மயில் வரைவது, மிகவும் எளிது!

முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் :



அதற்குப் பிறகு, சுற்றிலும், படத்தில் உள்ளது போல வரைந்து கொள்ளுங்கள்:

 

அதற்குப் பிறகு, கீழ்க் கண்ட வகையில், வரைந்து, படத்தை முடியுங்கள்.

 

மயிலின் கவர்ந்திழுக்கும் அம்சமே, அதன் வண்ண அமைப்புதான். நீங்கள் வரைந்து முடித்த படத்தை, வண்ணங்கள் தீட்டி, engalblog@gmail.com  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

எல்லாவற்றையும், ஒவ்வொன்றாகப் பதிவிடுகின்றோம்.

கம்பியூட்டர் திரையில் நாம் உருவாக்கிய, அல்லது காண்கின்ற படங்களை, அப்படியே ஒரு படமாக ஆக்க, Capture-A-ScreenShot என்கின்ற ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இது பற்றி மேல் விவரம் வேண்டுவோர், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு எழுதினால், விவரங்கள் அனுப்பி வைக்க, நாங்கள் தயார்.
      

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

சாய்ராம் வரைந்தது 2011 01

Sairam Gopalan to engalcreations:
ஆஹா அஹாஹா, என்னமா வரைஞ்சுருக்கே. ரவி வர்மா கேட்டார் போ !!
  
அரசியல் சேரும் நேரம் வந்துவிட்டதோ னக்கு !!
   

சனி, 29 ஜனவரி, 2011

படம் வரைதல் 2011 - 01 ஆகாஷ்

அநன்யா, 

இங்கே கீழே இருப்பது, ஆகாஷ் என்று ஒருவர் வரைந்த படம். நாங்க அவரிடம், அந்த இரண்டு வளை கோடுகள் மட்டும் வரைந்து, மவுசை அவர் கையில் கொடுத்தோம். அவர் மீதி எல்லாவற்றையும் வரைந்துவிட்டார்,  பெயிண்ட் உதவியால். (கே ஜெகன் எங்களை மன்னிப்பாராக. )  

ஏன் இதை எல்லாம் எழுதுகிறோம் என்றால், நீங்களும் என்ன வேண்டுமானாலும், வரையலாம், அனுப்பலாம், என்பதற்காகத்தான்.

அதையும் தவிர, அன்னபட்சி படம் நாங்கள் முழுவதுமாக வரைந்து, அதைப் போலவே வாசகர்களை வரைந்து அனுப்பி வைக்க சொல்லியிருந்தோம். கொடுக்கப்பட்டுள்ள இரண்டு கோடுகளிலிருந்து, யார், என்ன வரைந்து அனுப்பினாலும், ஏற்றுக்கொள்ளப்படும்.



(இந்தப் படத்திற்கு, யாராவது விளக்கம் பின்னூட்டத்தில் அளித்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம். படம் போட்டவர், இதற்கு விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.)
              

வெள்ளி, 28 ஜனவரி, 2011

வரைந்து பாருங்கள்.

ரொம்ப நாள் கட் அடிச்சுட்டு, ஊர் சுற்றிக் கொண்டிருந்த எங்கள் டிராயிங் மாஸ்டர், திரும்பி வந்துவிட்டார்.

அவர் அனுப்பி வைத்த படமும், க்ளு வும் இங்கே.

படம்:

                                                                        

க்ளூ: இதை வைத்து, ஒரு பழங்கால மிருகத்தின் படம் வரையவேண்டும்.

(பின் குறிப்பு: எங்கள் சித்திர ஆசிரியர் இப்படித்தான் பைத்தியக்காரத்தனமாக ஏதாவது க்ளூ கொடுப்பார். அதை எல்லாம் இலட்சியம் செய்யாமல், வாசகர்கள், இந்த இரண்டு கோடுகளைப் பயன்படுத்தி, எது வேண்டுமானாலும் வரைந்து அனுப்பலாம்.)