வியாழன், 18 அக்டோபர், 2018

சு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன்.


(ஆசிரியருக்கு ! 

நெ த சொல்லியிருந்தது சரிதான் - அது, நான் போட்டு, சொதப்பிய சு டோ கு.  இதோ இருக்கு, குணா கண்ட சுந்தரி சு டோ கு. 


இதை வெளியிட்டு, சுந்தரியிடமிருந்தும், நெல்லைத்தமிழனிடமிருந்தும்  தப்பிச்சுடுங்க! 'குரோ குறு')

================================================================

குணா சீற்றமாக பேசினான். " ஏன் அப்பா, ஏன்? எதுக்கு என்னை வேலை மெனக்கெட்டு ஒரு வாரம் ஓசிச் சோறு சாப்பிட அனுப்பினே? சுந்தரியை ஏன் உங்களுக்கெல்லாம் பிடிக்கலை? அவளுக்கென்ன குறைச்சல்?" 

மூர்த்தி கூறினார். "குறிப்பாக இதுதான் காரணம், அதுதான் காரணம் என்றெல்லாம் சொல்லமுடியாது. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அதிருப்தி இருக்கு. ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேள். சுந்தரி இங்கே வந்த முதல் நாளே ... "

தொலைபேசி மணி அடித்தது. மூர்த்தி அதை எடுத்தார். " ஹலோ - ஆமாம் குணா வீடுதான். நீங்க? ஓ நீங்களா? சொல்லுங்க சார்! அட! அப்படியா! சுந்தரிக்கு எங்கள் எல்லோரையும் பிடித்திருக்கிறதா! சந்தோஷம். நான் வந்து ..... அது ..... சொல்கிறேன் கேளுங்க ...... சுந்தரியை எங்களுக்குப் ... " 

அவசரமாக அருகே ஓடிவந்த குணா, மூர்த்தி கையிலிருந்த ரிசீவரை வெடுக்கெனப் பறித்து, "பிடிச்சுருக்கு" என்றான். தொலைபேசி மறுமுனையில் சத்தம் எதுவும் வரவில்லை. 

"தாங்க்ஸ் மாப்பிள்ளே " என்று சொல்லியபடி கையில் உள்ள மொபைலை உயரே தூக்கிப் பிடித்தவாறு வாசல் பக்கத்திலிருந்து உள்ளே வந்தார் சுந்தரி அப்பா. 

குணா வீட்டில் உள்ள எல்லோரும் சிரித்தபடி, "வாங்க சம்பந்தி!" என்றார்கள். 

குணா, மூர்த்தியிடம், "இது என்னப்பா டிராமா? " என்று கேட்டான். 

மூர்த்தி: "நடந்ததை எல்லாம் சுருக்கமாச் சொல்றேன் கேட்டுக்கோ. உன்னுடைய பாட்டியும், சுந்தரியின் பாட்டியும் பள்ளித்தோழிகள். ஒருநாள் எதேச்சையாக கோவிலில் சந்தித்திருக்கிறார்கள். ஒருவர்க்கொருவர் அவர்களின் குடும்பம் பற்றிப் பேசிக்கொள்கையில் அவர்களுக்கு உங்க ரெண்டு பேருக்கும் முடிச்சுப்போட ஐடியா வந்துருக்கு. நீ ஆபீஸ் சார்பில் திருநெல்வேலி டூர் போயிருந்தபோது, அவர்கள் எல்லோரும் நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க. எங்களுக்கு அவர்கள் எல்லோரையும் பார்த்தவுடனே பிடித்துப் போயிற்று. ஜாதகம், நியுமராலஜி என்று எல்லாவற்றிலும் பொருத்தம் அபாரமாக இருந்தது."

"அப்புறம்?" 

"எல்லாம் பொருந்தியிருந்தாலும், எங்களுக்குத் தெரியும், நீ ஒரு கொனஷ்டை, நாங்கள் பிடித்திருக்கு என்றால், நீ பிடிக்கவில்லை என்பாய், நாங்க அழகு என்று சொன்னால், நீ இல்லை என்று வாதாடுவாய். கன்னி ராசி ஆம்பிள்ளை அப்படித்தான் இருப்பான் என்று உன் தாத்தா சொல்லுவார். அதனால, இந்த நாடகம் ஏற்பாடு செய்தோம். இப்போ உன் வாயாலேயே பிடிச்சிருக்குன்னு சொல்ல வெச்சுட்டோம் " 

"சமையல், சு டோ கு உட்பட, உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று சுந்தரியிடம் சொன்னோம். 'கவலைப்படாதீங்க மாமா, நான் பாத்துக்கறேன் என்று சொன்னாள்" 

" அப்போ சமையல் சமாச்சாரம் எல்லாம் நாடகமா? " 

"இல்லைடா அது மட்டும் நாடகம் கிடையாது. அவர்கள் வீட்டில் எல்லோருமே நன்றாகச் சமைப்பார்கள்." 

"இந்த நாடகத்தில் சுந்தரிக்கு எவ்வளவு தெரியும்? "

"இதுக்கு கதை, வசனம், டைரக்ஷன் எல்லாமே சுந்தரிதான்!"

" அட ராக்ஷஷி!" என்றான் குணா .

==================================
டும் டும் டும் டும் ..... 

==================================

கல்யாணத்திற்குப் பிறகு, மறுநாள், சமையலறையில் வேலையாக இருந்த சுந்தரியிடம், ஞாயிறு ஹிந்து பேப்பரை எடுத்துக்கொண்டு ஓடிவந்தான் குணா. 

" சுந்தரி, சுந்தரி ... நீ சு டோ கு சால்வ் செய்வதில் கெட்டிக்காரி என்பதை உன் பீரோவில் இருந்த பேப்பர்களைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். இந்தா ஹிந்து பேப்பர். நாம ரெண்டு பேரும் இதை சால்வ் செய்யலாம் வா !"

"எண்பத்து ஒரு கட்டங்களில், அவர்கள் எவ்வளவு கட்டம் எண்கள் கொடுத்திருக்கிறார்கள்? "

" இருபத்தேழு. "

" நீங்க எவ்வளவு பூர்த்தி செய்தீர்கள்? "

" எட்டு. "

" அட! அவ்வளவா ! " 

" என்ன சுந்தரி இவ்வளவு ஆச்சரியப்படுகிறாய் நீ மீதி இருக்கின்ற கட்டங்கள் எல்லாவற்றையும் அழகாக பூர்த்தி செய்வாயே!!" 

" சேச்சே இதிலெல்லாம் டைம் வேஸ்ட் செய்யமாட்டேன். சுலபமாகத் தெரிந்த மூன்று நான்கு எண்களைப் பூர்த்தி செய்வேன். பிறகு, மறுநாள் பேப்பரில் வருகின்ற விடையைப் பார்த்துப் பூர்த்தி செய்வேன். "

"அடிப்பாவி! இதுவும் உன் டுபாக்கூர் வேலைதானா! சு டோ கு இன் சுமேரியன் கல்ச்சர்னு உன் பீரோவுல புத்தகம் பார்த்தவுடனேயே நான் செக் செஞ்சிருக்கணும்!  சமையல் எல்லாம் அப்படித்தானா? அதில் என்ன டுபாக்கூர் டெக்னிக் சொல்லிடு. "

" அது மட்டும் டுபாக்கூர் இல்லை. எங்க வீட்டுல எல்லோரும் நல்லா சமைப்பாங்க. எனக்கும் தெரியும். மேலும் நான், எங்கள் ப்ளாக் வலைப்பதிவில், திங்கக்கிழமைப் பதிவில், நெல்லைத்தமிழன் என்று ஒரு அங்கிள் ........."

" ஸ்டாப், ஸ்டாப், ஸ்டாப் ! இது நம்ம ஏரியா. இங்கே எங்கள் ப்ளாக் பத்தி எல்லாம் சொல்லி வெறுப்பேற்றாதே " என்று சொல்லியபடி அருகே வந்த குணபதி, சுந்தரியைக் ....................

(முற்றும்) 
                              

22 கருத்துகள்:

  1. சுந்தரி நெல்லைத்தமிழரை அங்கிள் என்று சொல்லவும், அதிரா ட்றம்ப் அவர்களை அங்கிள்'னு சொன்னது ஞாபகம் வந்துட்டுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி.. என் படம்லாம் வெளியிடாதபோதே ஒரு பெண் என்னை அங்கிள்னு இந்த வயசிலேயே சொல்லிடுச்சே... ம்ம் கிட்டத்தட்ட 29 வருஷம் முன்னால என் ஆபீஸ் பாஸ் பையன், 7வது படித்தவன் என்னை அங்கிள்னு சொன்னப்போ ஏற்பட்ட திடுக்கிடல் இப்போதும் ஏற்பட்டது

      நீக்கு
    2. 29 வருசத்துக்கு முன்பு "திடுக்கிடல்" சரி ஏற்றுக்கொள்வோம் "இப்போதும்" இது டூட்டு மச்சு.

      நீக்கு
    3. //என் படம்லாம் வெளியிடாதபோதே ஒரு பெண் என்னை அங்கிள்னு இந்த வயசிலேயே சொல்லிடுச்சே//
      ஹாஹாஆ நேரில் பார்த்திடிச்சே அதான் அங்கிள்னு கூப்பிட்டிருக்கு

      நீக்கு
    4. அதிராவுக்கு இப்போ காரணம் புரிஞ்சிருக்கும், ஏன் என் படத்தை வெளியிடறதில்லைனு

      நீக்கு
  2. ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு தாலியைக்கட்டு என்று ஒரு வசனம் உண்டு.ஸாமர்த்தியமான பொய்கள். பலே கில்லாடி ஸுந்தரி. நல்ல நாடகம். நல்ல கதை. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கு கு, தன் சார்பில் நன்றி தெரிவிக்கச்சொல்கிறார்.

      நீக்கு
  3. கேஜிஜி சார்.. கதை நல்லா இருந்தது உண்மையிலேயே. இரண்டாம் பகுதிதான் கொஞ்சம் ஜவ்வு. மற்றபடி நல்ல முடிவு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கு கு வைப் பாராட்டுங்க! நான் பப்ளிஷர் மட்டும்தான்!

      நீக்கு
  4. ஆகா..

    சுபம்.. சுப மங்கலம்...

    சரி..
    இப்போ கொண்டாட்டம் யாருக்கு?..
    குறும்பனுக்கா.. குறும்பிக்கா!?..

    அது மொதல்ல தெரிஞ்சாகணும்!..

    பதிலளிநீக்கு
  5. அஆவ் :) தாமதத்துக்கு மன்னிக்கவும் ..
    இருங்க படிச்சிட்டு வர்ர்ர்ரென்

    பதிலளிநீக்கு
  6. //நீ ஒரு கொனஷ்டை, நாங்கள் பிடித்திருக்கு என்றால், நீ பிடிக்கவில்லை //

    ஹாஹாஆ :) இதுதான் ரீஸனா :) என் வகுப்பில் ஒரு மாணவன் இருந்தான் அது ஒரு ஈகோ மாதிரி ..இப்படித்தான் மாஞ்சு மாஞ்சு 5 பக்கத்துக்கு பெரிய பதிலா எழுதினாலும் ஆன்சர் ஷீட்டை மேலே தூக்கி பார்த்து ப்ச் ஒண்ணுமேயில்லை கன்டென்ட் என்பான் அப்படியே கல் எடுத்து அடிக்க தோணும் :)

    பதிலளிநீக்கு
  7. //மேலும் நான், எங்கள் ப்ளாக் வலைப்பதிவில், திங்கக்கிழமைப் பதிவில், நெல்லைத்தமிழன் என்று ஒரு அங்கிள் ........."//

    haaaaaa haaaa ROFL :)

    https://i.gifer.com/2vuf.gif

    பதிலளிநீக்கு
  8. நல்லவேளை நம்ம ரெசிப்பி ஒன்னரெண்டுதான் எங்கள் பிளாகில் இருக்கு இல்லனா சுண்டரிப்பொண்ணு என்னையும் ஆன்ட்டி ஆக்கியிருப்பா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த கதையில உங்க ரெசிப்பியைக் கொண்டுவரச்சொல்லி சொல்லிவிடுகிறேன், கு கு விடம்.

      நீக்கு
  9. //கன்னி ராசி ஆம்பிள்ளை அப்படித்தான் இருப்பான் என்று உன் தாத்தா சொல்லுவார்//

    இப்படி இருக்கா உண்மையில்?

    நல்லபடியாக முடித்ததற்கு நன்றி, மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  10. காமாட்சி அம்மா சொன்னதுதான் எனக்கும் தோன்றுகிறது. 'ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணாத்தை பண்ணு'.. சுந்தரி ஒரு பொய்தானே அல்லது இரண்டா? சொல்லியிருக்கிறாள்..? திருமணத்திற்கு முன்பே கணவனை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து கொண்டு விட்ட அவளின் திறமை செம!

    பதிலளிநீக்கு
  11. கதை எழுதிக் கலக்கி இருப்பது கு.கு.வா? அவருக்கே நெல்லைத் தமிழர் அங்கிளா? அப்போ எனக்கெல்லாம் தாத்தானு சொல்லுங்க! :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மனுசனுக்கு, மனசில் கள்ளமில்லாதவனுக்கு, அதனால சாப்பிட்ட சாப்பாடு உடம்பில் ஒட்டி கொஞ்சம் குண்டா இருந்தா ஆளாளுக்கு அங்கிள்னு சொல்றீங்களே. இப்போதான் ஒரு மாத்த்துக்கு முன்பு பிறந்தேன் என்று சர்டிபிகேட் வாங்க கியூவில் நின்னுக்கிட்டிருக்கேன். அதையும் எபில வெளியிட்டுடறேன்.

      கொஞ்சம் ஏமாந்தா சென்ற நூற்றாண்டுல கயிலாய யாத்திரை போனவுங்கள்லாம் என்னை அங்கிள்னு சொல்றீங்களே.. இது தொடர்ந்தால் ‘மணமகள் தேவை’னு நான் கொடுத்துள்ள விளம்பரத்துக்கு ஒரு ரெஸ்பான்சும் வராதே

      நீக்கு
  12. அது என்ன இங்கேயும் சமையல் பதிவுகள் பத்தியே பேச்சு? :))))

    பதிலளிநீக்கு