ஞாயிறு, 15 டிசம்பர், 2019

ராபர்ட், ராமுடு, சித்தப்பா !


எங்கள் ஆரம்பக் கதையை அற்புதமாக இணைத்து,  ஒரு கதையை நமக்கு அளித்துள்ளார், நெல்லைத்தமிழன். 

படித்து இரசியுங்கள். 





பார்க்

மாலை நேரம்.

அந்த ஊருக்கு  ஒரு வேலையாக  வந்திருந்த   அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான்

ஹூம்இன்று ஒருநாள்தான் இந்த பாஷை தெரியாத ஊரில் லோல் படணும்இன்று இரவு நிம்மதியாக ஊருக்கு வண்டி ஏறி நாளைக் காலை வீட்டுக்குப் போயிடலாம்ஆபீசுக்கு ஒருநாள் லீவு போட்டுவிட்டு அக்கடான்னு ஓய்வு எடுத்துத் தூங்கவேண்டும்..'

எப்பப்பாத்தாலும் வெஜிடேரியன் சாப்பாடுதானா” என்று மேரியின் சாப்பாட்டை அவ்வப்போது அலுத்துக்கொண்டதற்கு இயற்கையே பழிவாங்கிவிட்டதோ என்று நினைத்துக்கொண்டான். தென் தமிழ் நாட்டுக்காரனுக்கு, இந்த ஊரில் எதுவும் வாயில வைக்க வணங்கலை. தயிர் சாதத்திற்கு மட்டும்தான் இன்னும் வெல்லத்தைக் கரைச்சு ஊத்தலை. மத்தபடி எதைப் போட்டாலும் அதில் வெல்லத்தின் வாசனை இவனுக்கு வந்தது.  ப்ராஜக்டுக்கு வந்தாலும் வந்தது..இரண்டு வாரம் என்பது இரண்டு மாதமாக இழுத்துக்கொண்டே போய்விட்டது. இன்னும் வேலை முடிந்தபாடில்லை. உடம்பு முழுவதுமே மச மசன்னு எண்ணெய், நட்டு போல்ட் அழுக்கு ஒட்டிக்கொண்ட மாதிரியே நினைப்பா இருந்தது.

“சார்… இன்னும் இரண்டு மூணுவாரத்துல முடிஞ்சுடும். இருந்து முடிச்சுக்கொடுத்துட்டுப் போங்க”

“சாமி.. ஆளை விடுங்க. இங்க வந்த ரெண்டு மாசத்துல ஒரு சனி, ஞாயிறும் ஃப்ரீயாக இருந்தது கிடையாது. எப்போப் பார்த்தாலும் ஃபேக்டரி, ப்ராஜக்டுன்னு நேரம் போகுது. போதாக் குறைக்கு சாப்பாடும் பிடிக்கலை.  என் வீட்டுக்குப் போய் ரெண்டு வேளையாவது பொண்டாட்டி கையால சாப்பிட்டாத்தான் எனக்கு உசிர் வரும்.  போயிட்டு புதன் கிழமை வர்றேன். அப்புறம் மூணு வாரத்துல முடியலைனா நான் வேற யாரையாவதுதான் அனுப்புவேன். என்னால் இந்த ஊர்ல காலம் தள்ள முடியாது”

**
“சார்.. ராபர்ட் ரெண்டு நாள் ஊருக்குப் போறேன்னு கிளம்பறார். திரும்ப வந்து ரெண்டு மூணு வாரத்துல வேலையை முடிச்சுடலாம்னுட்டார்.  நானும் ரெண்டு நாள் லீவுல் எடுத்துக்கறேன். ப்ராஜக்ட் என்ன நிலைல இருக்குன்னு இதுல எழுதியிருக்கேன். ஜெயின் சார்ட்ட காண்பிச்சுடுங்க. அவர் ஏற்கனவே ரொம்ப டென்ஷன்ல இருக்கார். முதல்லயே சொல்லலைனா ரொம்பக் கத்துவார்”,  புட்டண்ணா, ஜி.எம். சுந்தரமூர்த்தியிடம் சொன்னார்.

“அவ்ளோதானே.. நானே ஹேளுத்தினி. ராபர்ட்டை இருந்து முடிச்சுக் கொடுத்துட்டுப் போக வைக்க முடியலையா? என்ன ஆளு நீங்க.  அந்த மிஷின் ரெடியானாத்தானே அப்புறம் டெஸ்ட் ப்ரொடக்‌ஷன், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் குவாலிட்டி செக்னு அதுக்கு ரெண்டு வாரம் இழுத்துடுமே.  ஜெயின்கிட்ட யாரு ஏச்சு வாங்கறது… யாரும் ப்ரொடக்‌ஷன் சீக்கிரம் நடக்கணும்னு நினைக்காம, அப்புறம் தீபாவளி போனஸ், சங்கராந்தி போனஸ்னு தலையைச் சொறிவாங்க.  சரி.சரி.. எப்போ போறாராம்?”

“நாளைக்கு நைட்டு பஸ்ஸு. மத்யானம் 2 மணிக்கே ரூமுக்குப் போயிடுவேன்னு சொல்லிட்டார்.  புதன் நைட்டு புறப்பட்டு விசாளக்கிளமை காலைல வந்துடுவேன்னார்.  என் வேலை விசாளக்கிளமைதான். நான் இன்னு நைட்டுக்கே கொள்ளேகால் மூணு நாள் லீவுல ஹோகுத்தினி”

“ஏனப்பா… ஜெயின் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு உனக்கு லீவு தர்றேன். அப்புறம் “இந்த விஷயம்கூட எனக்குச் சொல்லவேண்டாமா? மிஷின் ரெடியாயிடும் ரெடியாயிடும்னு தினம் டென்ஷன்ல இருக்கேன்”னு அவர் கத்துவார்.

**

பெட்டியை ரூமில் பேக் பண்ணி வைத்த பிறகு வாட்சைப் பார்த்தான் ராபர்ட். மாலை 5 மணிதான் ஆகியிருந்தது. பேருந்தோ இரவு 9 மணிக்குத்தான். மடிவாலா பஸ் ஸ்டாண்ட் போய்ச்சேர இந்த டிராபிக்கில் 1 மணி நேரம் ஆகிவிடும். அப்போதுதான், காலையில் நடைப்பயிற்சிக்குப் போன பார்க்கின் பக்கத்தில் புதிய அத்திப்பழங்கள் விற்றுக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. மேரிக்கு அத்திப் பழங்கள்னா உயிராச்சே. காயவைத்த பழத்துக்குப் பதில் புதிய பழங்கள் இங்க வாங்கிட்டுப் போலாமே என்று தோன்றியது. பார்க்கை நோக்கி நடந்தான் ராபர்ட்.

**

பார்க்கில் சில லோக்கல் தலை வெளுத்த ஆசாமிகள்சூடிதார் கிழவிகள்புரியாத பாஷையில் உரக்கக் கத்தும் சிறார்கள் எல்லோரும் இருந்தனர். 


கையில் வைத்திருந்த அத்திப்பழப் பை கொஞ்சம் கனமாக இருப்பதுபோல் தோன்றியது.  கால் கிலோ அல்லது அரைக்கிலோ வாங்காமல் குறைந்த விலை என்று இரண்டு கிலோ வாங்கியது தவறோ என்று  தோன்றியது.

ஊருக்குப் போக எல்லாம் ரெடி. 8 மணிக்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருந்தன.  கொஞ்சம் பார்க் பெஞ்சில் உட்கார்ந்துவிட்டுச் செல்வோம் என்று நினைத்தான்.

அப்போ ஒரு ஆள்பரபரப்பாக பார்க் நுழைவாயில் வழியாக நுழைந்துகையில் அலைபேசியுடன்ஒவ்வொருவராக என்னவோ கேட்டுக்கொண்டு வந்தான்

இவன் அவனை ஒருவித ஆர்வத்துடன் பார்த்தவாறு, 'என்ன கேட்டுக்கொண்டு வருகிறான்ஏன் எல்லோரும் உதட்டைப் பிதுக்கிதெரியாது என்று தலை ஆட்டுகிறார்கள்?' என்று நினைத்தான்

அவன்இவன் அருகே வரும்போது கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்தான்

இவன் அருகே அவன் வந்ததும்கையை என்னஎன்று கேட்கிற பாவனையில் ஆட்டி சைகையில் கேட்டான்

அவன்அவசரமாக, " தமிளுதமிளு ...... தமிளு கொத்தா? " என்று கேட்டான்

இவன் உடனே, "  தமிழ் தெரியும்என்ன விஷயம்?" என்று கேட்டான்

அவன் அலைபேசியை இவன் கையில் கொடுத்து, ' பேசுங்கபேசுங்க .... ' என்பதைப்போல சைகைக் காட்டினான்

மறுமுனையில் பேசியவர் " அப்பாடி ஒருவழியா தமிழ் பேசுகிறவரைக் கண்டுபிடித்துவிட்டானா அந்த ஆளுசரி நான் சொல்வதை கவனமாக கேட்டுக்குங்கஇந்த அலைபேசியை உங்களிடம் கொடுத்த நபரைஅடுத்த இருபத்துநான்கு மணிநேரத்துக்குள் கொல்லப்போகிறோம்ஏன்எதற்கு என்பதெல்லாம் அவனுக்கு நல்லாத் தெரியும்கொல்லப்போறோம் என்பதை மட்டும் அவனிடம் சொல்லுங்கஅவ்வளவுதான். " 

மறுமுனையில் பேசியவர் இணைப்பைத் துண்டித்துவிட்டார்

இவன் அவசரம் அவசரமாக அழைப்பு வந்த எண்ணைத் திரும்பத் தொடர்புகொள்ள முயன்றபோது மீண்டும் மீண்டும் ' ..... கரைய மாடின ..., . ..... கரைய மாடின ....... ' பதிவு செய்யப்பட்ட குரல். 

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு தொடர்பு கிடைத்ததுஅது ஏதோ ஒரு அபார்ட்மெண்ட் செக்யுரிட்டி எண்அங்கிருந்து ஃபோன் செய்தவன் - அங்கேயிருந்து ஒரு டூ வீலரில் ஏறிச் சென்றுவிட்டான்யார் என்று செக்யூரிடி ஆளுக்குத் தெரியவில்லைமுன்னே பின்னே பார்த்திராத ஆள்அவசரமாக ஃபோன் செய்யவேண்டும் என்று கேட்டு ஃபோன் செய்திருக்கிறான்

அலைபேசியைக் கையில் கொடுத்தவன், " ஏனுஏனு? " என்று கேட்டான்

இவன் தமிழில் சொன்னான்அவனுக்குத் தெரியவில்லை

இவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லைஇது என்னடா… பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறிவிட்டது என்று சொல்வதுபோல இருக்கு. பேசாம ஃபோனைக் கையில் கொடுத்துவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போயிடுவோமா? பார்க்கில் கொஞ்சம் உட்காரலாம் என்று நினைத்தது தப்பாயிடுச்சே என்று யோசித்தான்.

 

ஆங்கிலம் தெரிந்தவங்க யாராவது தென்படறாங்களான்னு பார்த்தான். ஓரிரண்டு பெண்கள் சிறிது தள்ளி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அறிமுகமில்லாதவரிடம் இந்த விஷயத்தைச் சொல்லி இவனுக்கு கன்னடத்தில் சொல்லிடுங்க என்று எப்படிச் சொல்வது?  பேசாம ‘தெரியாது… புரியலை’ என்று சொல்லி மொபைலைக் கொடுத்துவிடுவோமா என்று யோசித்தான்.  மேரி மனதில் வந்தாள். அவனுடைய குணம் உடனேயே அந்த எண்ணத்தைப் புறம் தள்ளியது. புட்டண்ணா நம்பரை முயற்சித்தான். அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.  என்ன பண்ணலாம்?  ஃபேக்டரியின் ஹெச்.ஆர் டிபார்ட்மெண்டைத் தொடர்பு கொண்டான்.  சுனந்தா லைனை உடனே எடுத்தவுடன் நடந்ததை விளக்கினான்.

“ராபர்ட் சார்… அவனிடம் போனைக் கொடுக்காதீங்க. நிமகே அர்ஜண்ட் ப்ராப்ளம். பேகனே பன்னி ன்னு அவன்கிட்ட சொல்லிட்டு உடனே பேக்டரிக்கு ஆட்டோல வாங்க”

“இல்லை சுனிதா.. நான்”  பேச ஆரம்பிக்கும் முன்னரே இடையில் வெட்டினாள் சுனிதா.

“எனக்குத் தெரியும் சார். 9 மணிக்குத்தானே வண்டி. தெரிஞ்சோ தெரியாமலோ அந்த மிரட்டல் கும்பல்ட பேசிட்டீங்க. அப்புறம் இது பெரிய பிரச்சனையாயிடும் சார். எல்லா இடத்திலும் சி.சி.டி.வி, சென்னை மாதிரி இங்கயும் வைக்க ஆரம்பிச்சிருப்பதைப் பார்த்திருப்பீங்க இல்ல?.  இங்க வர்றதுக்கு 20 நிமிஷம் கூட ஆகாது. ஆபீஸ் வண்டில உங்களை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய், லக்கேஜ் எடுத்துக்கிட்டு மடிவாலால விடறதுக்கு நான் பொறுப்பு. சீக்கிரம் வாங்க”

**
பேந்தப் பேந்த முழித்துக்கொண்டு வரும் அவனுடன் ஃபேக்டரிக்கு வந்து சேர்ந்தான் ராபர்ட். “ஹெச்.ஆர் டிபார்ட்மெண்ட்டுக்கு இவரைக் கூட்டிட்டுப் போறேன்”.  கேட் செக்யூரிட்டி ஒன்றும் சொல்லாமல் இருவரையும் உள்ளே அனுமதித்தான்.  வேகவேகமாக ஹெச்.ஆர் டிபார்ட்மெண்டுக்குப் போனால், அங்கு ஒரு மிடுக்கான போலீஸ்காரர் காத்திருந்தார்.

“சார்.. இவர் இந்த ஏரியா எஸ்.ஐ. சிdh(த்)dhaப்பா. இவர்ட்ட பிரச்சனையைச் சொல்லுங்க. நாந்தான் வரவழைத்தேன்” சுனிதா, ராபர்ட்டைப் பார்த்துச் சொன்னாள்.

ராபர்ட், விடு விடென ஆங்கிலத்தில் எஸ்.ஐ இடம் பிரச்சனையைச் சொல்லி, கூட வந்தவனைக் கை காண்பித்தான்.

“நான் இதைப் பார்த்துக்கறேன்.  நீங்க ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி கையெழுத்து போட்டு, ஆதார் கார்டு காப்பியும் சேர்த்து கொடுத்திடுங்க. நான் எஃப்.ஐ.ஆர் போட்டுட்டுச் சொல்றேன்”

“அப்போ நான் ஊருக்கு கிளம்பலாமா? மூணு நாளில் திரும்ப வந்திடுவேன்”

“சார்.. என்ன சர்வ சாதாரணமாச் சொல்றீங்க. இது மர்டர் கேஸ் மாதிரி டெவலப் ஆயிடும் சார்.. அவனோ 24 மணி நேரத்தில் கொலை செய்வான்னு மிரட்டினதாச் சொல்றீங்க. இவனை எந்த காரணம் காட்டி லாக்கப்லயோ இல்லை வேற எங்கயோ பாதுகாப்ப வைக்க முடியும்? இவன்’ட வேற கேட்கணும்… யாரு எதுக்கு மிரட்டியிருப்பாங்கன்னு.  Please cancel your trip. நாளை அல்லது நாளை மறுநாள் இந்த கேஸ் முடிவுக்கு வந்துடும். அப்புறம் போகலாம். நான் வேணும்னா எழுதித் தர்றேன், டிரிப் போஸ்ட்போன் பண்ணணும்னு”

ஐயோ… எவ்வளவு ஆவலா ஊருக்குப் போய் மேரியைப் பார்க்கலாம்னு இருந்தோம். அவளும் எவ்வளவு எதிர்பார்த்திருப்பா. வேலில போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டுக்கிட்ட மாதிரி ஆயிடுச்சே.  ராபர்ட்டின் மனது அலைபாய்ந்தது.

“ராபர்ட் சார்.. நான் டிராவல்ஸ்ல பேசி டிக்கெட்டை மாத்திடறேன். புதன் நைட்டு கிளம்பி, சனி காலைல வர்றதுக்குப் பதிலா, திங்கக் கிழமை வர்ற மாதிரி நாலு நாளா ஊர்ல இருக்கலாம்” சுனிதா, தன்னால் ராபர்ட்டின் பயணம் தாமதமாகிவிட்டதே என்ற மனச் சங்கடத்தை முகத்தில் காட்டிச் சொன்னாள்.

“இதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க சுனிதா. நீங்க சொல்றதும் சரிதான். புதன் நைட்டுக்கே டிக்கட்டை மாத்திடுங்க. இனி ரூமுக்குப் போய் என்ன பண்ணப்போறேன். இங்கயே காண்டீன்ல சாப்பிட்டுட்டு கொஞ்சம் வேலையவாவது பார்க்கிறேன்”

**

“மிஸ்டர் ராபர்ட்”  தெரியாத எண்ணிலிருந்து வரும் போன் அழைப்பை எடுத்தான். யார் தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது என்று யோசித்தான்.

“சொல்லுங்க. நீங்க யாரு?”

“ராமுடுவைக் காணலை.  உங்கள்ட வந்தானா  இல்லை காண்டாக்ட் பண்ணினானா?”

“எந்த ராமுடு? நீங்க தவறான நம்பரை அழுத்தியிருக்கீங்க. எனக்கு நீங்க சொல்ற ராமுடு தெரியாது”

“என்ன சார்..அதுக்குள்ள மறந்திட்டீங்களா? நாந்தான் என் நம்பரை உங்கள்ட கொடுக்கச் சொல்லி சுனிதாட்ட சொல்லியிருந்தேனே. சிdhத்dhaதப்பா எஸ்.ஐ பேசறேன். நீங்க கொண்டுவந்த ஆள் பேரு ராமுடு. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்னு நினைச்சேன்”

“அவனுக்கு என்னாச்சு”

“அவனைக் காணலை. ஃபோன்லயும் காண்டாக்ட் பண்ண முடியலை. நாங்க இப்போ ஒரு போலீஸ் குழுவை ஃபார்ம் பண்ணி அவனைத் தேடவும், அவனை மிரட்டிய ஆட்களைக் கண்டுபிடிக்கவும் ஆரம்பிச்சிருக்கோம். உங்க உதவி இந்தக் கேஸ்ல எங்களுக்கு வேணும். ஒருவேளை அவங்க பேச்சை நாங்க இண்டெர்செக்ட் பண்ணினாலோ இல்லை கண்டுபிடிச்சாலோ உங்க உதவியை நாடுவோம்”




**
“புட்டண்ணா… பேசாம இந்த கேஸ்லேர்ந்து காசு கொடுத்தாவது நான் விலகிடணும்னு பார்க்கிறேன். நாளைக்கு ஊருக்குப் போவோம், அடுத்த வாரம் போவோம்னு இப்போ ஒரு மாசமாயிடுச்சு. ஏதேனும் சாக்கு வச்சு மூணு நாளைக்கு ஒரு தடவை போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியதா இருக்கு. எவனையாவது பிடிச்சுட்டு வந்து இவன் குரலா நீங்க கேட்டது, இல்லை அன்னைக்கு ராமுடு வந்த பார்க்குல, இவனை மாதிரி ஆளைப் பார்த்தீங்களான்னு என்னைக் கூப்பிட்டுக் கேட்கறாங்க. ஏதோ.. இந்த ப்ராஜக்ட் வேலைல மூழ்கினா மட்டும் இந்தத் தொல்லையிலிருந்து மனசு விலகி இருக்கிறமாதிரி ஒரு ஃபீலிங். யார்ட்ட இதைப்பத்திப் பேசலாம் புட்டண்ணா?”

“சார்… இது ஃபேக்டரிக்கு வெளில நடந்த சம்பவம். உங்க நல்ல நேரம், ஃபேக்டரிக்கு வேண்டப்பட்ட எஸ்.ஐ இதை ஹேண்டில் பண்றார்.  போலீஸ் சகவாசம் எப்போதும் கூடாது சாரே”

“மெஷின் குவாலிட்டி செக்கிங்கும் ஓகே. ப்ரொடக்‌ஷனுக்கு நாளைக்கே ரெடியாயிடும். வீட்டுல மனைவி தனியா இருப்பா. போய்ப் பார்க்கணும். இதோட இந்த பெங்களூருக்கே ஒரு முழுக்கு போட்டுடலாம்னு இருக்கு புட்டண்ணா”

“நாளைக்கு ஜெயின் சார் பிரதர்ஸ்லாம் மெஷினை ஓட்டிப் பார்க்கும்போது வர்றாங்க. உங்க திறமைதான் இந்த ப்ராஜக்டை சக்ஸஸ்ஃபுல்லா முடிக்க வச்சிருக்குன்னு அவங்களுக்கு நிச்சயம் தெரியும். அவங்க சந்தோஷமா இருக்கும்போது டைரக்டா நீங்களே இந்த உதவியைக் கேட்டுருங்க. நிச்சயம் ஹெல்ப் பண்ணுவாங்க”

மனைவியின் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட முகம், அவளுக்கான ஆஸ்பத்திரிச் செலவுகள், கோர்வையாகப் பேச முடியாவிட்டாலும் அவள் தன்மீது கொண்டுள்ள அன்பு, தன்னுடைய காதல் எல்லாம் மின்னல்போல் ராபர்ட்டின் மனதில் வந்து போனது.

இந்த வேலைக்குத் தனக்குக் கிடைக்கும் பெரிய போனஸும், தன் கம்பெனிக்கு அதனால் வரும் பணமும் அவன் முகத்தில் தோன்றியது.  நிச்சயம் தங்கள் கம்பெனிக்கு இன்னும் இரண்டு ஆர்டர்கள் இந்த ஃபேக்டரியிலிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தது. தான் கஷ்டப்பட்டாலும் அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்பது அவனை மகிழ்ச்சிப்படுத்திற்று.

இந்தப் பிரச்சனையிலிருந்து மட்டும் தான் வெளியில் வந்தால் போதும். ஒருத்தனுக்கு உதவணும்னு நினைச்ச தன் குணம் தனக்குப் பெரிய பிரச்சனையை வேறு மாநிலத்தில் கொண்டுவந்துவிட்டதே!.

**

“ராபர்ட் சாஹிப். பகுத் அச்சா. பகுத் தன்யவாத்.  மூணு வாரம் அதிகமா எடுத்துக்கிட்டாலும் அவுட்புட் சக்‌ஸஸ்ஃபுல்லா வந்திருக்கு. இதுக்கு உங்க திறமையும் கடும் உழைப்பும்தான் காரணம்.  இது எங்க கம்பெனிக்கு நிறைய வருமானத்தைக் கொட்டப் போகுது. உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க. நாங்க தர்றோம்”

“தாங்க்ஸ் சார்.  ஃப்யூச்சர்ல எங்களுக்கு நிறைய ப்ராஜக்ட் தரணும் சார். “

“ஹா ஹா. ஆல்ரெடி உங்க கம்பெனிக்கு மூணு ப்ராஜக்டுக்கு ப்ரொபோசல் கேட்டு நேத்திக்கு லெட்டர் அனுப்பியாச்சு. உங்களுக்கு தனிப்பட்ட முறைல ஏதேனும் ஹெல்ப் வேணுமா? எங்க கம்பெனிலயே டெக்னிகல் ஜி.எம் ஆ ஜாயின் பண்ணிக்கிறீங்களா? எதுனாலும் கேளுங்க”

“சார்.. நல்லது செய்யப்போய் ஒரு போலீஸ் என்கொயரில மாட்டிக்கிட்டது எல்லாருக்கும் தெரியும் சார்… அதுல இருந்து என்னை விடுவிக்கணும் சார்.  அதுக்கு நீங்க கம்பெனி இன்ஃப்ளூயன்ஸை உபயோகிக்கணும்”

“அட… நீங்க ஏதோ பெருசா கேட்பீங்கன்னு நினைச்சால்….ச்சோட்டா பிரச்சனையைச் சொல்றீங்களே.. சரி. நான் ஆபீஸ்லேர்ந்து பேசச் சொல்றேன். நாளைக்கே சரியாயிடும்.  ஹெச்.ஆரைப் பாருங்க. அவங்க உங்களுக்கு நாங்க என்ன ஆஃபர் கொடுக்க நினைக்கறோம்னு சொல்வாங்க. உங்களுக்கு சம்மதம்னா நீங்க இங்க ஜாயின் பண்ணிக்கலாம். நாளைக்கு உங்களுக்கு ஃப்ளைட்ல புக் பண்ணச் சொல்லியிருக்கேன். ஊருக்குப் போயி ரெண்டு மூணு வாரம் எடுத்துக்கிட்டு யோசிச்சு முடிவைச் சொல்லுங்க. உங்க மனைவிக்கும் இங்கயே ட்ரீட்மெண்ட் கொடுக்க ஏற்பாடு பண்ணிடலாம். உங்களுக்கும் ஃபேக்டரி குவார்டர்ஸ்லயே தங்கறதுக்கு பெரிய வீடு அலாட் ஆயிடும். ஆல் த பெஸ்ட்”

**

“மேரீ… ரொம்ப உன்னை மிஸ் பண்ணிட்டேன். இரவும் பகலும் வேலையிலேயே கான்சண்ட்ரேட் பண்ணாம இருந்தேன்னா உடைஞ்சு போயிருப்பேன்”

“நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இவ்வளவு அன்பு என் மேல வைக்காதீங்கன்னு. எப்படி இருந்தாலும் எனக்கு மரணம் விரைவில்னு தெரியும். நான் இல்லாத வாழ்க்கைக்கு நீங்க இப்போவே உங்களைத் தயார் பண்ணிக்கணும்.”

“அது சரி.. ஏதோ போலீஸ் பிரச்சனைலாம் சொன்னீங்களே.. யார்கிட்டயும் பகிரக்கூடாது என்று போலீஸ் இன்ஸ்ட்ரக்ட் பண்ணியிருக்கு, என் மொபைலைக்கூட அவங்க கேட்டுக்கிட்டிருப்பாங்க. சந்திக்கும்போதுதான் சொல்லமுடியும்னு சொன்னீங்களே.. அது என்ன”

ஆதியோடு அந்தமுமாய் எல்லாவற்றையும் பொறுமையாகச் சொன்னான் ராபர்ட்.

“ஏங்க…..என்னங்க இப்படி அப்பாவியா இருந்திருக்கீங்க. அந்தக் கம்பெனில பிரச்சனையைச் சொன்னபோது ஏன் அவங்க உடனே ஒரு எஸ்.ஐ யை வரச்சொல்லணும்? யார் எவர்னு செக் பண்ணாம செக்யூரிட்டி எப்படி உங்கள் ஃபேக்டரிக்குள்ள அனுப்பினாரு? இன்னைக்கு ஒரே போன்ல உங்க பிரச்சனையைத் தீர்த்தவங்க, ஏன் இத்தனை நாள் போலீஸ் உங்களை என்கொயரி பண்ணிக்கிட்டு இருந்த போது ஹெல்ப் பண்ணலை? இதெல்லாமே செட்டப்னு புரியலையா?”

அட… ப்ராஜக்ட் முடியும் வரைல தன்னை அங்கேயிருந்து நகர விடாமல்   செய்ய ஜெயின் நடத்திய நாடகமா இது?  வாயைப் பிளந்தான் ராபர்ட்.

                                      ***              ***                ***  

32 கருத்துகள்:

  1. படங்கள் மிஸ்ஸிங். தனியா அட்டாச் பண்ணி அனுப்பவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை வெட்டி, மீண்டும் இணைத்துள்ளேன். இப்போ வருதா?

      நீக்கு
    2. கதைக்கு தலைப்பு வைக்க மறந்தே போய்விட்டேன். நீங்க கவர்ந்திழுக்கும் தலைப்பு வச்சிருக்கீங்க கேஜிஜி சார்.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. உண்மைதான். அவருடைய கற்பனை வித்தியாசமான ஒன்று! சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.

      நீக்கு
    2. தந்தி இலாகாவில் முன்பு வேலை பார்த்துக்கொண்டிருந்த பானுமதி வெங்கடேச்வரன் மேடத்தின் பின்னூட்டம் வெகு சூப்பர்.

      நீக்கு
  3. அடுக்கடுக்காக சிக்கல்களை உருவாக்கி அதை அழகாக விடுவித்தும் விட்டார் நெல்லைத் தமிழன். இது ஒருவேளை சொந்த அனுபவமோ?
    பாராட்டுகள் நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பின்னூட்டம் மிகுந்த உற்சாகமளிக்கிறது ரஞ்சனி நாராயணன் மேடம்...

      பெங்களூர் சாப்பாடு கொஞ்சம் சொந்த அனுபவம்தான். பொதுவா வெளில சாப்பிட மாட்டேன். இந்தத் தடவை 6 நாட்களில் 5 முறை வெளில சாப்பிட்டுவிட்டேன். (சாப்பாடு இல்லை. பெரும்பாலும் டிஃபன்... மற்றும் 40 ரூபாயிலேயே கிடைக்கும் கேரட் அல்வா, காசி அல்வா போன்றவற்றையும். காபியே சாப்பிடாத நான் 3 முறை இந்தத் தடவை காஃபி சாப்பிட்டுவிட்டேன் 10 ரூபாய்க்கு அட்டஹாசமான காஃபி என்றுதான் சொல்லணும்)

      நீக்கு
  4. எனக்கே புரிந்து போன ஒரு விஷயம் தெரியாத அளவு அம்புட்டு அப்பாவியா ராபர்ட்?   எனக்குத் தெரிந்து ஒரு கிரிமினல் இந்தப் பெயரில் இருப்பதால் என் மனதில் நல்ல கேரக்டருக்கு இந்தப்பெயர் ஒட்டவில்லை!  ஆனால் கோர்வையாகஅழகாக எழுதி இருக்கிறார் நெல்லை.  பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்.. நீங்க கதைல ட்விஸ்ட் என்னவாயிருக்கும்னே யோசிக்கறவர். அப்போ இதுவா அதுவான்னு மனசுல சந்தேகத்தோடயே படிப்பீங்க. ஆனா ராபர்ட்டும் அப்படி வாழ்க்கைல சந்தேகத்தோடயே எல்லாத்தையும் அணுகணுமா?

      ஆனா நான் எப்போதும் ஒருவித சந்தேகத்தோடயே எதையும் அணுகுவேன். அதுக்கு ஜாக்கிரதை உணர்வு காரணமாயிருக்கும்.

      நீக்கு
  5. மிக அருமையாக கதையை சொல்லி விட்டார்.
    //அட… ப்ராஜக்ட் முடியும் வரைல தன்னை அங்கேயிருந்து நகர விடாமல் செய்ய ஜெயின் நடத்திய நாடகமா இது? வாயைப் பிளந்தான் ராபர்ட்.//

    .
    மேரி அதி புத்திசாலியாக இருக்கிறார்.

    அதுதான் வீட்டுக்கு போன் செய்யவிடவில்லை

    ராபர்ட் மேரிக்கு ஆசையாக வாங்கிய அத்திப் பழத்தை கொடுக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... நான் மேரியைப் பற்றி விவரித்ததை வைத்தே ஒரு கதை எழுதிவிடலாம்.

      நீக்கு
  6. கோர்வையாகக் காதிலே பூ சுத்தி இருக்கீங்க! ப்ராஜெக்ட் முடியும்வரைக்கும் ராபர்ட் நகரக்கூடாது என்பது தெரிந்த விஷயமாய் இருக்கையிலே இப்படி எல்லாம் நடக்குதே, அதுவும் தனக்கு! கேட்டதெல்லாம் உடனே செய்து கொடுக்கறாங்களே என்பதை ஆராயாமல் அறியாமல் கொஞ்சமானும் பொது அறிவைப் பயன்படுத்தாத ராபர்ட் எல்லாம் பச்சைக்குழந்தையை விட மோசமாக இருக்கானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு புறம், குழந்தை மனசுன்னு 'நல்லவன்' சர்டிபிகேட்டுக்கு உபயோகிப்பீங்க. ஆளு அப்பாவியா இருந்தால், அதே 'பச்சைக் குழந்தையா' இருக்கானேன்னு திட்டுவீங்க. இது நியாயமாரே கீசா மேடம்?

      நீக்கு
    2. அப்படி ஒண்ணும் ராபர்ட் அப்பாவி எல்லாம் இல்லை; சிந்தனைகளைப் பார்க்கையில்! ஆனால் இப்படி எல்லாம் ஏன் நடக்கணும்னு கொஞ்சமானும் சிந்திச்சுப் பார்க்கணும் இல்லையோ?

      நீக்கு
    3. கீசா மேடம்... ராபர்ட் அப்பாவி இல்லை என்பதற்கு 3 உதாரணங்கள் சொல்லுங்களேன். நானே இந்த மாதிரி தவறா நினைத்துப்பார்க்காத சம்பவங்கள் ஏராளம். பிற்காலத்தில் நினைத்துக்கொள்வேன், எவ்வளவு அப்பாவியா அந்தச் சம்பவங்களை அணுகியிருக்கிறேன் என்று. இத்தனைக்கும் எனக்கு ஜாக்கிரதை உணர்வு அதிகம்.

      நீக்கு
  7. சந்தடி சாக்கிலே "பெண்"களூர் உங்களுக்குப் பிடிக்கலைனு சொல்லிட்டு இருக்கீங்க! ஆனால் இனிமேல் அங்கே தானே வாழ்க்கை! அதுக்கு மனசைத் தயார் செய்துக்கோங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்...
      இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாதே...

      பிடிக்கலைன்னு சொல்லமுடியாது. இங்குள்ள உணவுக்குத்தான் நான் இன்னும் தயார் ஆகலை. தயார் ஆவேன்னு நம்பிக்கையுமில்லை. ஆனா பாருங்க, நல்ல உணவு, நம்ம ஊர் விலைல பாதிதான்.

      நீக்கு
    2. ஒருதரம் மங்களூரிலே ஜனதா கஃபேயிலும், ஒரு முறை உடுப்பியில் உள்ள பிரபல ஓட்டல் (பேர் மறந்துட்டேன்) அங்கேயும் சாப்பிடுங்க! கர்நாடகாவின் ஓட்டல்களில் கொடுக்கும் உணவைக் குறை சொல்ல மாட்டீங்க! இரண்டு ஊரிலும் அருமையான டிஃபன். காஃபி என்றால் மங்களூரிலே சாப்பிட்டது தான் காஃபி! அதே போல் மங்களூர் ரயில் நிலையத்திலும் அருமையான தோசை சாம்பாருடன். மெத், மெத்தென்று அந்தக் காலத்து தோசை! அங்கே அப்போ இருந்த ரயில்வே உணவு நிலையத்திலும் நல்ல சாப்பாடு! நான் சொல்வது 2007- 2008 ஆம் ஆண்டுகளிலே!

      நீக்கு
    3. கீசா மேடம்... நானும் இன்றுகூட பிராமின்ஸ் கஃபேயில் இரண்டு இட்லி, வடை சாப்பிட்டேன். மிக அருமையா இருக்கு (வெறும் சட்னிதான். சாம்பார் கிடையாது). ஆனா திரும்ப நாளையும் சாப்பிட்டேன்னா அவ்ளோதான் அந்தக் கடையும் வெறுத்துடும். நம்ம ஊர் காகித தோசைக்கு மனம் ஏங்குது (சாதா தோசை).

      இருந்தாலும் நீங்க சொல்வதை நோட் பண்ணிக்கொள்கிறேன்.

      பொதுவா பெங்களூரில் காஃபி 10 ரூபாய்க்கு ரொம்ப நல்லாவே இருக்கு. நானே மூணு தரம் சாப்பிட்டுவிட்டு, இந்தக் கெட்ட பழக்கம் எனக்கெதற்கு என்று இன்றுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.

      நீக்கு
  8. பாதி படித்துக் கொண்டே வரும் பொழுது உங்களை மாதிரியே சடாரென்று இறுதிப் பகுதிக்கு வந்து முடிவைப் படித்து விட்டேன். கதை சொல்லலைக் கொஞ்சம் சிக்கென்று அமைத்திருந்தால் இப்படி முடிவைப் படிக்கத் தோன்றியிருக்காது தான். இது மாதிரி செய்வது எனக்கு இது தான் முதல் தடவை. இருந்தும் முடிவைப் படித்ததுமே முழுக் கதையும் துல்லியமாகப் புரிந்து போயிற்று. உங்களுக்குத் தான் இது விஷயத்தில் எவ்வளவு அனுபவம் என்று அசந்து போனேன்.

    யூகிக்க முடியாத முடிவுக்கு வாழ்த்துக்கள், நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்... நான் முதல் சேப்டர்ல ரெண்டு பக்கம் (அதாவது கதை ஆரம்பமாகணும்) படித்த உடனேயே கிளைமாக்ஸைப் படிக்கிற டைப். அதனாலத்தான் 'தொடரும்' டைப் கதைகளை அவை 'முற்றும்' ஆகிற வரைல படிக்கமாட்டேன்.

      இன்னும் டிங்கரிங் பண்ணியிருக்கலாம். கதை, கேஜிஜி சார் இடுகை போட்ட அன்றே எழுதிட்டேன். அப்புறம் பெர்சனல் பிராப்ளத்துனால இணையத்துக்கு அனேகமா 4 நாட்கள் வரலை. இனியும் தாமதிக்கவேண்டாம் என்று இன்று அனுப்பிவிட்டேன். இன்னும் ஓரிரு நாட்கள் பிஸி, ஒரு நாள் கொஞ்சம் ரிலாக்ஸ்ட், மீண்டும் பத்து நாட்கள் பயணம் என்று இந்த வருடம் ஓடப்போகிறது.

      நீக்கு
  9. நல்லவேளை....

    நெல்லை சுபம்..ந்னு போட்டுட்டார்...

    பதிலளிநீக்கு
  10. திரும்பவும் தொழிற்சாலைக்குள் வந்த பிறகு...

    அதுக்கப்புறம்
    பகூத் சுக்ரியா... தன்யவாத்... இதெல்லாம் வரும் போதே புரிந்து விட்டது...

    ஆனாலும் -
    HR டிபார்ட்மெண்ட்க்குப் போன் பண்ண வேண்டும் .. என்ற எண்ணம் தோன்றவில்லை என்றால்!?....

    நெல்லை என்றால் நெல்லை தான்!..

    (நமக்கெல்லாம் இப்படியான யோசனை கம்மி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு கோணம். எழுத்தாளர்கள், தங்கள் கோணங்களில் சிந்தித்து ஒரே காட்சிக்கு பல வகைக் கதைகள் எழுதலாம்.

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்... 25 வருட வெளிநாட்டு வாழ்க்கை எனக்கு இதைத்தான் கற்றுக் கொடுத்தது, மனதில் நிலைக்க வைத்தது.

      மத்தியக் கிழக்கில் எந்தப் பிரச்சனை எப்போது வந்தாலும் நமக்குச் சொல்லிக் கொடுத்திருப்பது ஆபீஸ் ஹெச்.ஆர் ஐ முதலில் தொடர்பு கொள்ளணும் என்பதுதான். அது போலீஸ்பிரச்சனை, ஆக்சிடன்ட் என்று எதுவானாலும்.

      அது என் மனதில் பதிந்து போயிருக்கிறது என்பதை கதையை அனுப்பியபிறகு எண்ணிப் பார்த்தேன்

      நீக்கு
  11. பிரமஆதமா எழுதி இருக்கீங்க. Muralimaa.என்னாலே இத்தனை யூகிக்க mudiyaathuu.திகில். கதை நல்ல படியா முடிச்சீங்க.மனம் நிறை பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா. நல்லவேளை நான் முந்திக்கொண்டேன். இல்லைனா மத்தவங்களும் இந்த ஆங்கிள்ல யோசித்திருப்பாங்க. நன்றி

      நீக்கு