வியாழன், 16 ஏப்ரல், 2020

கண்டதும், கேட்டதும் கதைக் கரு ஆகுமே!


 கீழ்க்கண்ட செய்தி நான், 'எங்கள் ப்ளாக் வாசகர்கள் & ஆசிரியர்கள்' வாட்ஸ் அப் குழுவில் 12/4/2020 ஞாயிறு அன்று அனுப்பியது. 





இங்கே உள்ள எழுத்தார்வம் கொண்ட எல்லோருக்கும் ஒரு சிறிய பயிற்சி. 

இன்றைக்கு இதை முயன்று பார்க்கவும். 

இன்றைக்கு ஏதாவது ஒரு ஐந்து நிமிடங்கள் ஒதுக்குங்கள். 

ஒரு பேப்பர் + 
ஒரு பேனாவோ பென்சிலோ அல்லது கம்ப்யூட்டர் / போன் கீ போர்டோ தயாராக இருக்கட்டும். 

பயிற்சி : 

சுற்றிலும் உங்கள் கண்களில் படும் காட்சிகள், காதில் விழுகின்ற ஒலிகள் இவற்றை மட்டும் (உங்கள் கற்பனைகள் அல்லது எண்ணங்களைக் கலக்காமல்) எழுதுங்கள். 
நீங்கள் எழுதியவை ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருக்கலாம். அது பற்றி கவலை வேண்டாம். 

அப்படி எழுதியதை, என்னுடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள். 

தெளிவான கையெழுத்து என்றால், எழுதியதை போட்டோ எடுத்தும் அனுப்பலாம். 

இது போட்டி அல்ல. ஒரு பயிற்சி. 

இதை நம்ம ஏரியா வலைப்பதிவில் உபயோகித்துக் கொள்ளலாம் என்று ஒரு எண்ணமும் உள்ளது. 

சந்தேகம் எதுவும் இருப்பவர்கள், எனக்கு வாட்ஸ் அப் செய்தி அனுப்பவும். 

நன்றி. 
கௌதமன். 
வாட்ஸ்அப்: 9902281582. (No voice calls please!) 


பின்குறிப்பு : மேற்கண்ட செய்தியை உங்கள் எழுத்தார்வம் மிக்க நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

==============================

இதை நான் அனுப்பிய பத்தே நிமிட நேரத்தில் நமது நண்பர் அப்பாதுரை அவர்கள் முதல் செய்தி அனுப்பினார். 


கறுப்பு நிற கார்
எக்ஸ்க்யூஸ் மி
கடம்பா போற்றி கந்தா
எக்ஸ்க்யூஸ் மி
உருவம்
கருஞ்சிவப்பு வானம்
கார் ஒளி கண்ணைக்
எக்ஸ்க்யூஸ் மி
பஸ்ஸுக்கு காசில்லை
மூணு டாலர் தர முடியுமா
க்ளின்க் க்ளின்க்


☝🏽உண்மை நிகழ்வு பத்து நிமிடம் முன்னால்.

(இதற்கு அவர் பிறகு கீழ்க்கண்ட விளக்கமும் அனுப்பி வைத்தார்.)

குப்பையை கொட்டிட்டு வரப்போனேன் - கொரானாவால இப்போ குப்பையை தள்ளி போய் இன்சினிரேடர்ல போட வேண்டியிருக்குது..
திரும்பி வரப்ப மாலை நேர வானத்தைப் பார்த்துகிட்டே பக்கத்து வீட்டு முருக பக்தருக்கு ஹாய்னு கையசைச்சுட்டு வரப்ப உருவம் மாதிரி தெரியுது.. 


பார்க் பண்ண வந்த கார் வெளிச்சத்துல கண் தெரியாம நிக்கறப்ப இந்த உருவம் சட்டுனு பக்கத்துல வந்து பஸ்ஸுக்கு காசில்லை மூணு டாலர் தரமுடியுமானு அழுது.. ஆளை விடுமா தாயே பக்கத்துல வராதேனு மூணு டாலரை விசிறிட்டு அலறி அடிச்சுட்டு வீட்டுக்குள்ள வந்தனா.. உங்க மெஸெஜ்.. கண்ல பட்டதை காதுல கேட்டதை எழுதுங்கனு. 

==================================

அதன் பின் வந்த மற்றவர்களின் செய்தியை ஒவ்வொன்றாக, பிறகு பார்ப்போம். 

இப்போ இதைப் படிப்பவர்களுக்கு ஒரு challenge. திரு அப்பாதுரை அனுப்பிய விவரங்களைப் படியுங்கள். திரும்பத் திரும்பப் படியுங்கள். 

கண்களை மூடி, இதனை உங்கள் மனக்கண்ணால், ஒரு சினிமா அல்லது குறும்படம் போல ஓட்டுங்கள். 

இவற்றோடு, உங்கள் கற்பனையைச் சேர்த்து, ஒரு கதை அல்லது கவிதை எழுத முடியுமா என்று பாருங்கள். 

குறிப்பு : இது போட்டி இல்லை. என்னைப்போன்ற கற்றுக்குட்டி எழுத்தாளர்களுக்கு ஒரு சிறிய பயிற்சி. பெயர் பெற்ற எழுத்தாளர்களும் எழுதினால், அது மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டல். 

முயன்று பார்ப்போமா? 

=============================================

15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாங்க, வாங்க! நல்வரவு. உங்க facebook messenger பார்த்தீர்களா?

      நீக்கு
  2. ஆஹா.... அப்பாதுரை அவர்களின் அனுபவம் வைத்து யார் யார் கதை எழுதப் போகிறார்களோ? காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. சூப்பர் துரைஜியின் அனுபவக் குறிப்புகள். பார்த்ததும் ஒரு கதை மனதில் தோன்றியது. பார்ப்போம் எழுதி முடிக்க முடிகிறதா என்று...

    என் குறிப்புகளுடனும் கதை ஒன்று தோன்றியிருக்கு கௌ அண்ணா அதுவும் எழுதி முடிக்கணும்னு நினைச்சுட்டுருக்கேன் பார்ப்போம்...

    நல்ல பயிற்சி. தொடருங்கள் அண்ணா இப்படிப் புதுசு புதுசா ..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு திகில் கதை உருவாகும் நினைக்கிறேன்.அட்வான்ஸ். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. யார் வீட்டிலோ பாத்திரம் தேய்க்கும் சப்தம்
    எங்க வீட்டு மின் விசிறி சுழலும் சப்தம்.
    பறவைகள் மெலிதாகப் பேசிக்கொள்கின்றன
    செம்போத்தின் குரல்
    யாரோ யாரையோ கூப்பிடுகின்றனர்.
    நடுவில் நாங்க இருவரும் பேசிக்கொண்ட ஒரு வார்த்தை
    மற்றபடி மௌனம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டது எல்லாம் பதிவு செய்திருக்கீங்க; ஆனால் பார்த்தவை ?

      நீக்கு
    2. பார்த்ததும் வேணுமா? இங்கேருந்து பார்த்தால் ரெண்டு மைனா கூடு கட்ட முயற்சிகள் செய்வது தான் தெரியுது. வேறே பால்கனியில் எங்க வீட்டுத் துணிகள்! :) எங்கே போறேன்?பார்க்க?

      நீக்கு
    3. ஆஹா! கதை ஏதோ கண்ணில் தெரியுது!

      நீக்கு
  6. வெளியே போனாலே போலீஸ்காரின் "டொப்" "டொப்" லத்தி சார்ஜ் சவுண்டும்... கொரானோ கொரானோங்குற புலம்பல் சத்தம் மட்டுமே கேக்குது சாரே ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு