வியாழன், 30 ஏப்ரல், 2020

தியாக துரோகம்! (நெல்லைத்தமிழன் விளக்கம். )எங்கள் ப்ளாக் புதன்கிழமை (29/4/2020) பதிவில். பின்னூட்டத்தில் 'நெல்லைத்தமிழன்' கொடுத்துள்ள விளக்கம் :  
ஒருத்தன் ஒரு பெண்ணைக் காதலிப்பான். அவனுடைய நெருங்கிய நண்பன், 'காதல் பைத்தியம்' முற்றிவிட்ட தன் நண்பனிடம் சொன்னால் அவன் காதில் ஏறாது. ஆனால், அந்தப் பெண் இவனுக்குப் பொருத்தமானவனில்லை என்று கட் பண்ணிவிட்டுவிட்டாலோ அல்லது அவளுக்கு நெருங்கியவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, காதலைக் கலைத்துவிட்டாலோ, என்ன ஆகும்? 

நண்பன் அதனை துரோகம் என்று எண்ணிக்கொள்வான். இவனோ நண்பனுக்கு நன்மை செய்தவனாவான். 

இன்னொரு விதத்தில் இந்த நண்பன் (நண்பனாக இருந்த போதிலும், அவன் உள் விஷயங்கள் குணங்கள் தெரிந்திருப்பதால்) அவளுக்குப் பொருத்தமானவன் இல்லை என்பதனால், தனக்கு மிகவும் தெரிந்த அந்தப் பெண்ணைக் காக்க வேண்டி, அவள் வீட்டாரிடம் சொல்லி, காதலுக்கு முடிவுரை எழுத வைத்திருப்பான். 

நண்பனுக்கு இவன் துரோகியாகத் தெரிந்தாலும், தன் மனதுக்கு இவன் சரியானதைத்தான் செய்திருக்கிறான்.

======================

இந்த தீமில் உங்களுக்கு ஏதாவது கதை தோன்றுகிறதா? நம்ம ஏரியா வுக்கு அனுப்புங்கள். 

(எல்லோரும் இதற்கு என்ன கதை எழுதப்போகிறார்கள் என்று படிக்க ஆவலாக உள்ளேன் - என்று யார் இதற்கு பின்னூட்டம் எழுதுவார் தெரியுமா ?  == 'வம்பன்' )  

13 கருத்துகள்:

 1. வம்பன் - மஹா வம்பராக இருக்கிறாரே! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா புரிஞ்சிகிட்டீங்களா!

   நீக்கு
  2. ஹாஹா... நான் புரிஞ்சிக்கிட்டேன்னு நீங்களும் தெரிஞ்சிக்கிட்டீங்களா! :)

   நீக்கு
 2. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வரும் போல இருக்கே.. அரா போகும் கதைகளை படிக்க ஆவலோடு ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ வாங்கோ !! சௌக்கியமா!

   நீக்கு
  2. கொஞ்சம் காம்ப்ளிகேட்டடா இருக்கும் போல இருக்கே.:)

   நீக்கு
  3. ரொம்ப சிம்பிள். ஒருவர் தன நண்பனின் செயலை, துரோகமாகப் பார்க்கிறார்; ஆனால் அந்த நண்பன் செய்தது உதவி. துரோகமாகப் பார்க்கும் அவருக்கோ அல்லது வேறு யாருக்கோ அது உதவி.

   நீக்கு
  4. பழைய சிவாஜி படக்கதை போலிருக்கிறதே.

   நீக்கு
 3. காத்திருக்கேன், யார் எந்தப்பெண்ணைக் காதலித்துக் கைவிடப் போகிறார்கள் அல்லது பெண்ணால் வெறுத்து ஒதுக்கப்படப் போகிறான் என்பதை! ஆனால் நான் சொல்லும் துரோகமே வேறு வகை! ஒருவரை அவரது நற்பெயரைத் திட்டமிட்டுக் கெடுப்பது. இத்தனைக்கும் அவரால் தான் சம்பந்தப்பட்ட துரோகிக்கு வாழ்க்கையே கிடைத்திருக்கும். ஆனாலும் அதை மறந்து தனக்காக உழைத்தவரின் நற்பெயரைக் கெடுப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரோகங்கள் பலவகை! நெ த சொல்லியிருப்பது தியாக துரோகம்!

   நீக்கு
  2. //அதை மறந்து தனக்காக உழைத்தவரின் நற்பெயரைக் கெடுப்பார்.// - இதுக்கு காரணகர்த்தா, 'வாழ்க்கை கொடுத்த' அந்த நபராகத்தான் நிச்சயமாக இருக்கும். "இதோ..இன்னைக்கு பெரிய மனுஷனா இருக்கானே..அது என்னால்தான்', 'நான் இல்லைனா அவனுக்கு எங்க இந்த வாழ்வு' என்று எதுக்கெடுத்தாலும் அவனை மட்டம் தட்டியிருப்பார், இல்லை அவன் காதுக்கு வரும்படி மற்றவரிடம் பழித்துப் பேசியிருப்பார். பதிலுக்கு அவரது நற்பெயரை திட்டமிட்டுக் கெடுத்திருப்பார். மனித மனம்தானே. வேறு எப்படிச் செயல்படும் கீசா மேடம்?

   நீக்கு
 4. காதல் கதைதான் எழுத வேண்டுமா? நண்பனின்  திருமண  வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் கதையாக இருக்கக்  கூடாதா? 

  பதிலளிநீக்கு