வியாழன், 22 ஜூன், 2017

மதியீனம் -- குரோம்பேட்டை குறும்பன்.


க க க போ
குரோம்பேட்டை குறும்பன் கதைக்கிறார்!



மதியீனம்
==========

யார் செய்த புண்ணியமோ (அல்லது பாவமோ!) சென்டிரலிலிருந்து  அன்று அரைமணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது நவஜீவன் எக்ஸ்பிரஸ்.


  Image result for navjeevan express


ஓடி வந்து, கைக்குக் கிடைத்த கம்பார்ட்மெண்டில் தொற்றிக்கொண்டான் மதி. முழுப் பெயர் மதிவாணன். தான் ஏறிய கம்பார்ட்மெண்ட் எது என்று அருகில் இருந்தவரைக் கேட்டுத் தெரிந்துகொண்டான். ரிசர்வ் செய்த பெட்டியை அடைய இன்னும் எவ்வளவோ பெட்டிகளைக் கடக்கவேண்டும்!

ஒன்றரை நாள் பயணம். தன் பெட்டியை அடைய என்ன அவசரம்? என்று எண்ணியபடி நடந்தான், நிதானமாக.


ரயில் கிளம்பியவுடன், அதற்காகவே காத்திருந்தது போல படை திரண்டது, ஒரு பறக்காவெட்டி குடும்பம். அவசரம் அவசரமாக டிபன் பாக்ஸ்களைத் திறந்து, டிங் டாங் என்கிற ஜலதரங்க சப்தங்களோடு, தட்டுகளை எடுத்து,மிளகாய்ப்பொடி, எண்ணெய்க் கலவையால்  செம்மண் காப்பு  இடப்பட்ட இட்லிகளைத் தட்டில் அடுக்கி,  குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் உஸ் புஸ் என்ற சத்தமிட்டபடி உள்ளே தள்ளத் தொடங்கினர்.


பத்து நிமிஷங்களுக்கு முன்பு, புடவை கட்டி, " பாத்தியோ! கேட்டியோ ..." என்றெல்லாம் வட்டாரத் தமிழில் உரத்த குரலில் பேசிய மாமிகள், ஆளுக்கொரு சுடிதார் போட்டுக்கொண்டு ஹிந்தியில் பேச ஆரம்பித்தார்கள்.


ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள  சேலை கட்டிய மாந்தரை மட்டும் கண்களால் மேய்ந்துகொண்டே வந்துகொண்டிருந்தான்  மதி. இதோ, அடுத்த பெட்டிதான் மதியின் பெட்டி.  தன் பெட்டியில் நுழைந்தவுடனேயே கண்களில் பட்டவள் கீதா! கீதாவா? ஆமாம் கீதாவேதான்!


அடக் கடவுளே! தன்னுடைய இருக்கை இருக்கின்ற பகுதியிலேயே இவளுமா! என்ன கொடுமை! கீதாவின் பக்கத்தில் ... யார் அவன்? ஓஹோ புதிய புருஷனா!  மதி ஒன்றும் தெரியாதவன் போல, கீதாவுக்கு எதிர் சீட்டில் இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டான்.


கீதா ஒரே ஒரு கணம் இவனைப் பார்த்து, திடுக்கிட்டது தெரிந்தது. பிறகு, அவள் பார்வையில், அந்நிய ஆடவனைப் பார்க்கின்ற சாதாரணப் பார்வை.

   
மதியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வேட்டி ஜிப்பா ஆள் பெரிய மீசையுடன் இருந்தார். மதியை ஓர் அலட்சியப் பார்வை பார்த்தார். 'ஹூம் இடம் காலியா இருக்குதே, கொஞ்சம் விசாலாமா உட்காரலாம் என்று பார்த்தால் இந்த சீட்டுக்கு உரியவன் வந்துவிட்டானே ' என்கிற ஆதங்கப் பார்வை.

      Image result for man wearing jibba with big moustache


அந்தப் பகுதியில் மேலும் இரண்டு பேர். அவர்கள் வயதான தம்பதியர். கீதாவுக்குப் பக்கத்தில் ஒரு பாட்டியும் . மதியின் மற்றொரு பக்கத்தில் ஒரு தாத்தாவும். சைடு பெர்த் சீட்டுகளில் எதிரெதிராக ஒரு வாலிபன், ஒரு வாலிபி. இருவருமே ஜீன்ஸ் பான்ட், டி ஷர்ட் அணிந்து மொபைல் போனை நிரடிக்கொண்டே இருந்தனர்.

கீதாவின் (புதிய) கணவன்தான் மதியிடம் முதலில் பேசியது. "வாங்க சார் ! உங்க பேரு மதிவதனனா? "


மதி திடுக்கிட்டான்! கீதா மூலமாக ஏதாவது விவரங்கள் தெரிந்திருக்குமோ?  " அ .....  இல்லை. என் பெயர் மதிவாணன். உங்க பெயர் என்ன?  மதிவதனன் என்ற பெயர்  யார் சொன்னது? "


   Image result for middle aged train traveler


கீதாவின் கணவர் சிரித்தபடி சொன்னார், "என் பெயர் ராமசாமி. டிக்கெட் செக்கர் வரும்பொழுது, எல்லோருடைய டிக்கெட்டையும் பார்த்த பிறகு, 'மதிவதனன், மதிவதனன் ... ' என்று கூப்பிட்டபடி சுற்றும் முற்றும் பார்த்தார். அப்புறம், 'இன்னும் வரவில்லையா?' என்று சொல்லியபடி அடுத்த பகுதிக்குச் சென்றார். அதனாலதான் கேட்டேன்."

"ஓ அப்படியா ! கிளாட் டு மீட் யு மிஸ்டர் ராமசாமி. " என்று சொன்னபடி அவரோடு கை குலுக்கினான் மதி.


" இவங்க உங்க ஒய்ஃபா?" என்று கேட்டான் மதி.


" ஆமாம் " என்றான் ராமசாமி.  கீதா வேண்டா வெறுப்பாக இரு கரங்களையும் கூப்பினாள்.  மதி அதைக் கண்டும் காணாதது போல சும்மா இருந்துவிட்டான்.


" எல்லோரும் என்ன பேசிக்கொண்டு வந்தீர்கள்? நான் வந்து உங்கள் எல்லோரையும் டிஸ்டர்ப் செய்துவிட்டேன். தொடர்ந்து என்ன பேசணுமோ பேசிகிட்டு வாங்க. "


மதியின் பக்கத்தில் இருந்த வேட்டி ஜிப்பா ஆசாமி, " என் பெயர் பெரியசாமி. இங்கே எல்லோரும் சுய அறிமுகம் செய்துகொண்டோம். மேலும் அவரவர்கள் தாம் எதற்காக இந்தப் பயணம் செய்கிறோம் என்றும் கூறி வந்தார்கள். நான் என்னைப் பற்றிக் கூறி முடிக்கும் சமயத்தில்தான் நீங்க வந்தீங்க... "


ராமசாமி, மதியைப் பார்த்து, " உங்களுக்குக் கல்யாணம் ஆயிடிச்சா? எவ்வளவு குழந்தைகள்? மனைவி எம்ப்ளாய்டா?  அன் எம்ப்ளாய்டா ? " என்று கேள்விகளை அடுக்கினார்.


கீதா, இதற்கு மதி என்ன சொல்லப்போகிறான் என்று ஆர்வத்தோடு கண்களை இவன் பக்கம் திருப்பாமல், காதை மட்டும் கூர்மையாக்கி, மெளனமாக இருந்தாள்.


மதி உடனே மனதிலே வேகமாக ஒரு கணக்குப் போட்டான். 'இதுதான் சந்தர்ப்பம். இந்தச்  சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கீதாவின் இமேஜை அப்படியே வெட்டிச் சாய்த்து, குத்தி, குற்றுயிரும் குலயுயிருமாகச் செய்துவிடவேண்டும். பிறகு அவள் ஏதேனும் தன்னுடைய முன்னாள் கணவன் பற்றிக் கூறினாள் என்றால், அதை யாரும் நம்பக்கூடாது' என்று முடிவெடுத்தான் மதி.


" சொல்கிறேன் சார், சொல்கிறேன். மிஸ்டர் ராமசாமி - அதுதானே உங்கள் பெயர்?


"ஆமாம்"


" எனக்குக் கல்யாணம் ஆயிடிச்சு. விவாகரத்தும் ஆயிடிச்சு."


எல்லா பயணிகளும் அவனையே ஆர்வத்தோடு பார்த்தார்கள்.


" ஆமாம் . நான் கல்யாணம் செய்துகொண்டது ஒரு பெண்ணை அல்ல! ஒரு பிசாசை. ஒரு சந்தேகப் பிசாசை! "


பெரியசாமி மதியை விசித்திரமாகப் பார்த்தார். " பொசசிவ் பெண்ணா ?"


மதி சொன்னான். "பொசசிவா  .... அதெல்லாம் சின்ன வார்த்தை சார். இந்தப் பிசாசைப் பற்றிச் சொல்வதாயிருந்தால். .."


மேலும் சொன்னான், " காலையில் எழுந்தவுடன், என்னுடைய மொபைலை எடுத்து, யாரோடெல்லாம் பேசினேன், யாருக்கு என்ன மெசேஜ் அனுப்பியிருக்கேன் என்று பார்க்கும் அந்தப் பிசாசு. அதோடு அவ யாரு, இவ யாரு, என்றெல்லாம் கேள்விகள் வேறு. எதிர் வீட்டுப் பெண் வாசலில் நிற்கும்போது நான் போனால் அவள் லேசாகப் புன்னகை செய்துவிட்டால் போதும், உடனே அவளையும் என்னையும் இணைத்து ஏதாவது கிண்டல் சொற்கள் சொல்வாள். ஆபீசுக்குப் போயிட்டு வந்தவுடன், என்னுடைய ஆடைகளில் தலைமுடி தென்படுகிறதா, என்ன செண்டு வாசனை வருது போன்ற துப்பறியும் வேலைகள். தப்பித் தவறி அப்படி ஏதாவது தடயம் கிடைத்தது என்றால், உடனே அர்ச்சனை ஆரம்பம்."


பெரியசாமி, மதியை விசித்திரமாகப் பார்த்தார்.


" சார், உங்க மனைவி சிகரெட் பிடிப்பாங்களா? "


மதி சற்று திடுக்கிட்டு ... " அந்தப் பிசாசுக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். ஏன் கேட்கிறீர்கள்? " என்றான்.


பெரியசாமி சிரிப்போடு சொன்னார், " அந்தப் பிசாசுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்திருந்தா ஒருவேளை உங்க கையில சுட்டிருக்குமோ என்ற சந்தேகம்தான்!"


மதி கேட்டான் , " ஏன்?"


இப்போ ரயிலின் பக்கத்துப் பகுதியில் இருந்தவர்களும் சிலர், இவர்களின் உரையாடல்களை கவனிக்கத் தொடங்கினர்.


பெரியசாமி சொன்னார். " ஏன் என்றால், இதுக்கு முன்னாடி நாங்க எல்லோரும் ஒரு பேய்க் கதை கேட்டோம். நீங்க ஒரு சந்தேகப் பிசாசு பற்றி சொன்னீங்க. இங்கே ஒருத்தங்க சந்தேகப் பேய் பற்றி சொன்னாங்க. "


"நீங்க சொன்ன பெண்பால் விஷயங்கள் எல்லாவற்றிற்கும் ஆண்பால் வைத்து அவங்க கதை சொன்னாங்க. (கீதாவைக் காட்டி) இதோ இவங்கதான். அவங்களும்  ஏற்கெனவே கல்யாணமாகி டிவோர்ஸ் ஆனவங்கதான். "


"அவங்க முழங்கையில பல இடங்களில் அவங்களுடைய  பழைய புருஷன், அவங்க பாஷையில ' சந்தேகப் பேய்' சிகரெட்டால சுட்டிருக்குது.  அவங்க முழங்கையில இருந்த தழும்புகளைப் பார்த்து, இந்தப் பெரியவர் கேட்டார், " என்னம்மா முழங்கையில இவ்வளவு தழும்பு "என்று. "


"அவங்க உடனே கண்ணுல கண்ணீரோட, சொன்னாங்க. .. ' நான் இதுக்கு முன்னாடி இவர் கிட்ட கூட என்னுடைய பழைய புருஷனைப் பற்றி சொன்னது இல்ல. இவர் கேட்கும்பொழுதெல்லாம் அதை எல்லாம் ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துட விரும்பறேன் , அதனால ஒன்றும் கேட்காதீர்கள் என்று சொல்வேன். இப்போ உங்களை எல்லாம் பார்த்ததும் என்னுடைய சகோதரன், தாத்தா இவர்கள் ஞாபகம் வந்துடிச்சு. உங்ககிட்ட அந்த சந்தேகப்பேய் பற்றி சொல்கிறேன்' என்று சொல்லி, அவங்களுடைய முன்னாள் புருஷன் பத்தி சொல்லி அழுதாங்க. நீங்க சொன்ன கதையேதான். நீங்க உங்க முன்னாள் மனைவி பற்றிக் கூறிய எல்லா விஷயங்களும் அப்படியே பெண்பால் - ஆண்பால் மாற்றினால், அதே கதைதான் இங்கும். ஆனால் என்ன - இவங்க முழங்கையில இருக்கின்ற தழும்புகளைப் பார்த்ததால் , அந்த மிருகம் பற்றி நாங்க எல்லோரும் நன்றாகத் தெரிந்துகொண்டோம். " என்றார் பெரியசாமி.


மதிக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்றே தெரியவில்லை.


பெரியசாமி, கீதாவையும் மதியையும் பார்த்தவாறு, ஒரு சுருட்டை எடுத்துப் பற்றவைத்தார். "எனக்கு ஒரு யோசனை தோணுது" என்றார்.


பயணிகள், பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து "என்ன?" என்று கேட்டார்கள்.


மதியும், பெரியசாமியை என்ன என்பது போலப் பார்த்தான்.


பெரியசாமி, சுருட்டைப் பற்றவைத்து, ஆழமாக இழுத்து, புகைவிட்டபடி, " நீங்க சொன்ன சந்தேகப் பிசாசும், இவங்க சொன்ன சந்தேகப் பேயும் இந்த சென்னை மாநகரத்துல எங்கேயாவது ஒன்றையொன்று மீட் செய்து, கல்யாணம் பண்ணிகிட்டாங்க என்றால், சோடிப் பொருத்தம் பிரமாதமா அமைஞ்சிடும்! "  என்று சொல்லி உரத்த குரலில் சிரித்தார்.


அவர் விட்ட சுருட்டுப் புகை பயணிகள் எல்லோர் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது! 


 " பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் அவர்கள்." 

60 கருத்துகள்:

  1. ஆஹா இன்னிக்கு ரோஜா புகழ் கு குவா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோவ் கு கு இங்கன வந்து பாரைய்யா ... வேட்டை ஆரம்பம் ஆயிடிச்சு!

      நீக்கு
    2. குரோம்பேட்டை குறும்பன்22 ஜூன், 2017 அன்று PM 10:37

      என்னை மாட்டிவிட்டாச்சா ? இப்ப சந்தோஷமா ?

      நீக்கு
    3. இருங்க எங்க தலைவி சொர்ணக்காவையும் கூட்டிட்டு வரேன் :)

      நீக்கு
    4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதாரைச் சொல்றீங்க:).. எதுக்கும் ஹீல்ஸ் ஐக் கழட்டிப்போட்டு வாங்கோ நாளைக்கு:).. இல்லையெனில் தப்பி ஓட முடியாது.. தேம்ஸ்ல தள்ளிடுவேன்ன் ஜாஆஆஆக்க்க்க்ர்ர்தை:)..

      நீக்கு
    5. ///குரோம்பேட்டை குறும்பன்June 22, 2017 at 10:37 PM
      என்னை மாட்டிவிட்டாச்சா ? இப்ப சந்தோஷமா ?//

      உங்களை ஆரும் மாட்டி விடல்ல:) பொற்கிளி குடுக்கத் தேடுறோம்ம்.. கெதியா வெளில வாண்டோ:)..

      நீக்கு
    6. உங்களை சொல்வெனா மியாவ் நீங்கள் அதுக்கும் மேலே ஹ ஹெச் ஹா

      நீக்கு
    7. உங்களை சொல்வெனா மியாவ் நீங்கள் அதுக்கும் மேலே ஹ ஹெச் ஹா

      நீக்கு
    8. ///AngelinJune 23, 2017 at 3:00 AM
      உங்களை சொல்வெனா மியாவ் நீங்கள் அதுக்கும் மேலே ஹ ஹெச் ஹா///

      http://www.likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg

      நீக்கு
    9. ஹஹஹஹ் ரோஜா புகழ்!!??கு கு!! ஓ ஃபேஸ்புக் கலாட்டாவா??!! மீ அதிரா உங்களோடு...சரி அதிரா ஏன் லண்டன் பூனைய விரட்டறீங்க....நீங்க தேம்ஸ்லதான் இருக்கீங்க!!! ஜாக்கிரதை...!!ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  2. ஹாஹா :) செம ட்விஸ்ட் ..மதிவாணன் மதியீனன்தான்

    பதிலளிநீக்கு
  3. //இதுதான் சந்தர்ப்பம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கீதாவின் இமேஜை அப்படியே வெட்டிச் சாய்த்து, குத்தி, குற்றுயிரும் குலயுயிருமாகச் செய்துவிடவேண்டும். //

    என்னாவொரு சாடிஸ்ட் ..தனக்கு இல்லைனா இப்படியா பிரிந்தபின்பும் சாகடிக்க நினைக்கும் அந்த மட்டி ஈனன் மட்டி வாணன் என்கையில் கிடைத்தால் அவ்ளோதான்

    பதிலளிநீக்கு
  4. இயல்பாக நடையில் சொல்லப்பட்ட
    அருமையான கதை
    யதார்த்தமாய் மனோ விகாரங்களை
    சொல்லிச் சென்றது அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  5. ஆனா மனதுக்கு கஷ்டமா இருக்கு சமைக்கும்போது லேசா சூடு பட்டாலே தாங்கமுடியலை.. நல்லது கீதா மாதிரிப்பெண்கள் இந்தமாதிரி ஆண்களை தூக்கியடிச்சிட்டு பரந்த மனப்பான்மையுள்ள ராமசாமி போன்றோரை தேர்ந்தெடுக்கணும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஐடியாக் குடுங்கஞ்சு:)... அப்படி இலேசில விடக்குடா:) திரும்பி சூடு போட்டிடோணும் ஹா ஹா ஹா.. இல்லை எனில் பெண்ணீயம் என்னவாகும்:).. ஹையோ மீ ஓடிடுறேன்ன்ன்ன்:).. மீ ரொம்ப நல்ல பொண்ணு:).

      நீக்கு
    2. உங்களை நம்பி நான் லைட்டரொட வந்த்ந்ன் கர்ர்ர்ர்ர் மியாவ்

      நீக்கு
    3. ஹையோ லைட்டரைக் கொழுத்தி மேசைக்குக் கீழ எறிஞ்சிடாதீங்க:) அங்கு கெள அண்ணன் இருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      நீக்கு
    4. ஹி ஹி அந்த மேஜை இல்லை. நான் டொக் டொக் ... டேபிள் மேட்டுக்குக் கீழே ஒளிஞ்சிகிட்டு இருந்தேன். இப்போ வேற இடத்துக்கு ஓடிப்போயிட்டேன்!

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. மதிவாணன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்றை நடத்தி காட்டிவிட்டது கெடுவான் கேடு நினைப்பான் :)

    பதிலளிநீக்கு
  8. மிஸ்டர் குரோம்பேட் குறும்பன் கதை அருமை நல்லா இருக்கு ..
    ஐ லைக் தட் செம்மண் காப்பு இட்ட இட்லிஸ் :) போன நெல்லை தமிழன் கதையில்தான் நாங்க இட்லி மிளகாய்ப்பொடி பற்றி பேசினோம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சமையல் ராணி மட்டுமில்ல சாப்பாட்டு ராணியும் தான் என்பதனை ஒவ்வொரு தடவையும் நிரூபிக்கிறீங்க:)... ஹையோ இதுக்கு மேலயும் மீ இங்கின இருக்க மாட்டேன்ன்ன்ன்:).. அண்டாட்டிக்கா பயணமாகிறேன்ன்ன்ன் என்னைத் தேட வாணாம்ம்ம்ம்ம்ம்:).

      நீக்கு
    2. நாங்க பிரிஞ்சுர்றோம்னு ஓட்டுப்போடுவானேன். இப்போ லண்டன் போக முடியாம விடுமுறைக்கு அந்தாட்டிக்கா போவானேன். தப்பா வாக்களிச்சிட்டேன்னு ஏஞ்சலின் மூலமா மன்னிப்பு கடுதாசி எழுதுங்க. லண்டன் வர குவீனை அலோ பண்ணச் சொல்றேன்.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா நாங்க யூரோப் ல இருந்து பிரிய வாணாம் எனத்தான் வோட் போட்டோம்ம்.. ஆனா இப்போ யூரோப் பிரிஞ்சபின், நம்மை பிரிச்சிடுங்கோ எனத்தான் வோட் போடப்போறோம்ம்.. ஆனா இங்கிலண்ட் சனம் கால்ல விழுந்து கதறுது:) பிரிஞ்சிடாதீங்க என:).. ஏனெனில் முக்கியமா பிரித்தானியாவின் நியூக்கிளியர் பொம் இன் மறைவிடமே நம்ம கையில்தேன் இருக்கு:).. ஹா ஹா ஹா அத்தோடு இங்கிலாந்துக்கு தண்ணிகூட பைப் மூலம் இங்கிருந்து போகுதூஊஊஊஉ:).. ஹையோ ஹையோ அங்கு அவர்கள் ரீசைக்கிள் வோட்டர் சிஸ்டத்தில் எல்லோ இருக்கினம்.. தெரியுமோ இது நெ.த?:).. ஹா ஹா ஹா ஒண்ணும் புரியாமல் இங்கின ஒருவர் ஓடுவந்து பொயிங்கப்போறா.. மீ ரன்னிங்ங்ங்ங்ங்ங்:).

      நீக்கு
    4. @நெல்லை தமிழன் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா அவங்க நாட்டு தலைவி நிக்கோலா சொல்லியிருக்காங்க எல்லா ஐரோப்பிய யூனியன் மெம்பர்ஸ் அங்கே வரலாமாம் :) இங்கே இன்னிக்கு 5 வருஷம் தொடர்ந்து இலலாதவங்க அங்கே தான் போக போறாங்க :)
      அங்கே இடமே இல்லை அந்த கடலை மூடி அதுலே வீடு வரப்போது அப்போ அந்த கப்பலெல்லாம் எங்கே போகுமாம் :)

      இன்னது தண்ணி நாங்க செவேர்ன் ட்ரெண்ட் தண்ணி தானே குடிக்கிறோம் சும்மா பில்டப் பைப்ல வருதுன்னு :)

      போங்க தனியா போங்க ஆனா பிரிட்டிஷ் காரங்க ராணி இனிமே உங்க அம்மம்மா என்று எங்காச்சும் சொன்னிங்க அவ்ளோதான் :)
      அடுத்தது லண்டனுக்கு வரகூட நீங்க விசா எடுக்கணும் மேட்டாம் சொல்லிட்டேன் :)

      நீக்கு
  9. கூனாக் கூனாக்கு குசும்பு அதிகம் போல:)..ஹா ஹா ஹா:)..

    கெள அண்ணன் ஏன் அவரை மறைவிடமாகவே வச்சிருக்கிறீங்க:) கூட்டி வாங்கோ இங்கின:).. நம்புங்கோ நாம் அவரை ஒண்ணும் பண்ணிட மாட்டோம்ம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ஆமா :) அவருக்கு ரோஜா வின் ராஜா பட்டம் கூட தருவொம் .வெளியே வர சொல்லுங்கள்

      நீக்கு
    2. குரோம்பேட்டை குறும்பன் வந்தா கேஜிஜி சார் வரமுடியாது. கேஜிஜி சார் இருந்தா கு.கு. வரமுடியாது. அவர் ஏற்கனவே ரோஜாவின் ராஜான்னு சமீபத்துல காட்டினாரே.

      நீக்கு
    3. ////நெல்லைத் தமிழன்June 23, 2017 at 12:03 PM
      குரோம்பேட்டை குறும்பன் வந்தா கேஜிஜி சார் வரமுடியாது. கேஜிஜி சார் இருந்தா கு.கு. வரமுடியாது///

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எங்கயோ இடிக்குதே ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ.. மீ பெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்ன் நேக்கு ஆராவது சுட்டாறிய தண்ணி தெளிச்சு எழுப்புங்கோ:).. கோல்ட் வோட்டர் ஒத்துக்காது:) தடினமாக்கிடும்:)

      நீக்கு
    4. குரோம்பேட்டை குறும்பன்23 ஜூன், 2017 அன்று PM 9:09

      இதோ வந்திட்டேனே !!

      நீக்கு
    5. இதோ நானும் இருக்கேன்!

      நீக்கு
  10. ஆஹா வித்தியாசமான கோணத்தில யோசிச்சிட்டார் குறும்பன்... :).. அழகான அறிவான சூப்பர் தம்பதிகள் அவர்கள்... :) அவர்கள் பிரிந்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் என நினைச்சேன்ன்ன் சிரிச்சேன்ன்ன்ன்:)..

    //அவர் விட்ட சுருட்டுப் புகை பயணிகள் எல்லோர் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது! ///
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..
    பொற்கிளி கூனாக்கூனாக்கே:). கதையை ரசிச்சேன்.

    பதிலளிநீக்கு
  11. @ குரோ குறு //பத்து நிமிஷங்களுக்கு முன்பு, புடவை கட்டி, " பாத்தியோ! கேட்டியோ ..." என்றெல்லாம் வட்டாரத் தமிழில் உரத்த குரலில் பேசிய மாமிகள், ஆளுக்கொரு சுடிதார் போட்டுக்கொண்டு /...எவ்லொ கவனிச்சி இருக்கார் உங்கள் கதை ஹீரோ கர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கொரு டவுட்டூஊஊஊஉ அதெப்படி 10 நிமிடத்தில் சேலையிலிருந்து சுடிதாருக்கு ட்ரான்ஃபர் ஆனாங்க:).. எனக்கு சாறியின் ஊசிகளைக் கழட்டவே 10 நிமிடம் போதாதே கர்ர்ர்ர்:). அஞ்சு உங்களுக்கு?:) ஹா ஹா ஹா:).

      நீக்கு
    2. ஹாஹாஆ :) எனக்கு சாரியை எடுத்து பிரிக்கவே 1/2 மணிநேரமாகும் :)

      நீக்கு
  12. @ குரோ குறு //பத்து நிமிஷங்களுக்கு முன்பு, புடவை கட்டி, " பாத்தியோ! கேட்டியோ ..." என்றெல்லாம் வட்டாரத் தமிழில் உரத்த குரலில் பேசிய மாமிகள், ஆளுக்கொரு சுடிதார் போட்டுக்கொண்டு /...எவ்லொ கவனிச்சி இருக்கார் உங்கள் கதை ஹீரோ கர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  13. குரோம்பேட்டை குறும்பன் என்ற பெயரில் யாராக்கும் அது? நல்லாவே கதைச்சிருக்கார்! :)

    பதிலளிநீக்கு
  14. கதை அருமை.
    சொல்லி சென்ற விதம் நன்றாக இருக்கிறது.

    //'இதுதான் சந்தர்ப்பம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கீதாவின் இமேஜை அப்படியே வெட்டிச் சாய்த்து, குத்தி, குற்றுயிரும் குலயுயிருமாகச் செய்துவிடவேண்டும். பிறகு அவள் ஏதேனும் தன்னுடைய முன்னாள் கணவன் பற்றிக் கூறினாள் என்றால், அதை யாரும் நம்பக்கூடாது' என்று முடிவெடுத்தான் மதி.//

    பயங்கரம். எவ்வளவு கொடுமையான மனிதர் கீதா தப்பித்தாள்.

    பதிலளிநீக்கு
  15. ஆமா இந்தக் கதைல ஏன் சீதை ராமனை மன்னிக்கலை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனென்றால் இந்த ராமனும் சீதையை நெருப்பில் சுட்டிருக்கிறான்!!!

      நீக்கு
    2. குரோம்பேட்டை குறும்பன்கிட்ட கேள்விகேட்டா நுங்கம்பாக்கம் நூர்முகமது பதில் சொல்றார்.

      நீக்கு
    3. குரோம்பேட்டை குறும்பன்23 ஜூன், 2017 அன்று PM 9:11

      அதானே!

      நீக்கு
    4. நெல்லை செம கேள்வி அதுக்கு ஸ்ரீராமின் பதிலும் செம.....ஹலோ யார் வேணா பதில் சொல்லலாம்...கருத்துரிமை கருத்துரிமை ஹஹஹஹ்...நெல்லை பேர் சொல்லிக் கேக்கலையே ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  16. //கைக்குக் கிடைத்த கம்பார்ட்மெண்டில் தொற்றிக்கொண்டான் மதி//

    கதைக்கு கரு கிடைத்தது. மதி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ஆமா இக்கதையின் ஆரம்பமே என் கதையைக் கொப்பி அடிச்சிட்டார்ர் கூனாக்கூனா கர்:).. பெயரைக்கூட விட்டு வைக்கல்லா... எனக்கு ரோயல்டி.. ராயல்ட்டி வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்:)

      நீக்கு
    2. குரோம்பேட்டை குறும்பன்23 ஜூன், 2017 அன்று PM 9:14

      அதிரா உங்க கதையில மதி + வசு பெண். என் கதையில மதி ஆண். நான் காபி அடிக்கலை!

      நீக்கு
  17. //பெண்பால் விஷயங்கள் எல்லாவற்றிற்கும் ஆண்பால் வைத்து //

    அன்பால் இல்லாமல் ஆண்பால் பெண்பால் என்ன மாற்றிச் சொன்னாலும் பலிக்காது என்பதுதான் கதையின் நீதியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா இருக்கலாம்ம்.. இல்லாமலும் இருக்கலாம்ம்ம்:)

      நீக்கு
    2. ஹஹஹ்... ஹை ஸ்ரீராம் நல்லாருக்கே இது....

      கீதா

      நீக்கு
  18. குரோம்பேட்டை குறும்பன்23 ஜூன், 2017 அன்று PM 9:16

    பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு என் நன்றி. பப்ளிஷ் செய்த ஆசிரியருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. யார் இந்த குரோம்பேட்டை குறும்பன்? எங்கள் பிளாக் ஆசாமிகளில் ஒருவர்தானே? (2) இது மாதிரிதான் கதை நடக்கவேண்டும். பிரிந்துபோகும்போது இருவரின் மனதிலும் தீவிரமாக என்னென்ன ஆத்திரங்கள் இருந்தனவோ அவை நிச்சயமாக ஒருநாள் வெளிப்பட்டே தீரவேண்டும். இதுதான் மனிதர்களின் மனோதத்துவம். அதன்படியே இக்கதையைக் குறும்பனார் எழுதியிருக்கிறார். வாழ்த்துக்கள்! (குரும்பனாரின் புகைப்படம் தேவை!)

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கு கு எங்கே இருந்தாலும் மேடைக்கு வரவும்.

      நீக்கு
    2. ஹிஹிஹி, கேஜிஜி வந்துட்டாரே! அப்புறமாக் குறும்பன் எப்படி வருவார்?

      நீக்கு
    3. ஓ அப்ப கௌ அண்ணா தான் கு குவுமா??!!!! பரவால்ல கீதாக்கா.....செபி சார் கூட வேற வேற ப்ரொஃபைல் போட்டோல வரலியா..... சினிமாலயும் வர மாதிரி...வரலாமே!!!! அதிரா ஆஷா போஸ்லே போல ஹிஹிஹிஹி...அதிரா அடிக்க வராங்க...மீ எஸ்கேப்...

      கீதா

      நீக்கு
  20. மதிக்கு செம பல்பு!!! அவன் ப்ளானுக்குச் சொன்னேன்....வேணும் வேணும் நல்லா வேணும்...

    செம!! கதை...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. ஓ சுருட்டுப் புகையினாலும் பொங்கி அழலாமா இது தெரியாமப் போச்சே!!! பொங்கி அழறதுனா அந்தப் பெண்ணும் பையனும் பொங்கி அழோனும்னு நினைச்சுட்டேன்...ஹஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ஹஹஹ மாமிகள் ஸாரி டு சுடிதார்!!! கு கு ரொம்பவே நோட்டம் விட்டுருக்கீங்க தான்...அது சரி கூலிங்க்ளாஸ் போட்டுட்டுத்தானே!!! ஹ்ஹஹஹ இல்லைனா சுடிதார் மாமிகள் அடிக்க வந்துருப்பாங்களேனு ஹஹஹ்ஹ

    கீதா

    பதிலளிநீக்கு
  23. கு கு எப்படி அந்த மாமிகள் டக்குனு சுடிதார்க்கு மாறினாங்க..செம ஸ்மார்ட்தான்..ஹஹஹ்..ரயில் பாத்ரூம் நல்லாவே இருக்காதே....

    கீதா

    பதிலளிநீக்கு
  24. பொங்கிவரும் கண்ணீர் சுருட்டால் என்பதுபோல் முடித்து இருக்கின்றீர்கள் புகை வண்டி கதை அருமை.கணவன் மனைவிமீதோ அல்லது மனைவி கணவன் மீதோ வீணாக சந்தேகிப்பவர்களை பொஸசிவ் என்று நினைக்கக்கூடாது அவர்கள் பிசா(சு)சிவ்.

    வாழ்த்துக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு