திங்கள், 26 ஜூன், 2017

அவள் என்ன செய்யட்டும்?






நெல்லைத்தமிழனின் முன்குறிப்பு  :

அன்புள்ள கேஜிஜி சார்,

     க க க போ 2க்கான கதை எழுதியிருக்கிறேன். நான் கதையெல்லாம் எழுத முயற்சி செய்வேன் என்றே நினைத்துப்பார்த்ததில்லை. எங்கள் பிளாக் ஸ்ரீராமுக்குத்தான் (வெறும் ஸ்ரீராம்) நன்றி சொல்லவேண்டும். கதையின் போக்கு நன்றாக இருந்தால் பப்ளிஷ் செய்யவும். படத்தை இணைத்துள்ளேன்.

     இன்னொன்று. கதைக்கான கருவோ அல்லது பாயிண்ட்ஸோ கொடுத்து உங்கள் தளத்தில் கதை எழுதச் சொல்லும்போது, கதை உங்கள் தளத்தில் வெளியிட்டபிறகு, அவர்களது தளத்தில் (இருந்தால்) வெளியிட்டுக்கொள்ளலாம் என்று சொல்லுங்கள். EngalCreationsதானே இன்ஸ்பிரேஷன். இல்லைனா, EngalCreationsல அந்த அந்த தலைப்புல எல்லாக் கதையையும் வெளியிடமுடியாது. வெறும் லிங்க் கொடுப்பது என்பது அவ்வளவு Attractive ஆக இல்லை.
   

==================================================================================



                          அவள் என்ன செய்யட்டும்?

                            நெல்லைத்தமிழன் 





சில்லென்று தவழும் காற்று. மரங்களின் மெல்லிய அசைந்தாடும் ஒலி. மாலை நேரம். பறவைகள் கீச் கீச் என்று தம் தம் இருப்பிடங்களுக்குத் திரும்பும் சப்தம். தூரத்தில் உட்கார்ந்திருந்த குடும்பத்தின் டேப் ரெகார்டரிலிருந்து பாடல்கள், நன்றாகக் கேட்டன. அனுஷா உட்கார்ந்திருந்த பெஞ்சிலிருந்து நேர் எதிரே சிறிது சலசலத்தோடும் நீரோடை. அந்த ரம்யமான மாலையில், பாடல்கள் அவளின் நினைவுகளைத் தூண்டிவிட்டன.

எத்திராஜ் கல்லூரி Srushti கலை இரவில்தான் அவனை முதலில் சந்தித்தது. அது கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டாடும் இரவு. எங்கு பார்த்தாலும் கல்லூரி மாணவ மாணவிகளின் உற்சாகக் குரல். ஆடிட்டோரியத்திலோ.. கேட்கவே வேண்டாம். மேடையில் பாட்டுப்போட்டியின் கடைசி ரவுண்டு.  அவளுக்கு மிகுந்த நம்பிக்கை. இந்தத் தடவையும் தான் ரொம்ப நல்லாப் பாடின மகிழ்ச்சி. அதுவும் அவளது ஃபேவரைட்டான பி.சுசிலாவின் குரலில், ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு” இன்றைக்கு நல்லா வந்திருந்தது. அவளுக்கு அருமையான குரல். சென்னையில் எந்தக் கல்லூரியில் போட்டி நடந்தாலும் அவளுக்குத்தான் முதல் பரிசு. கடந்த இரண்டு வருடமாக Srushti கலை இரவில், அவளுக்குத்தான் பாட்டுப்போட்டியில் முதல் பரிசு. B.Com முடிக்கும் இந்த வருடமும் முதற் பரிசு கிடைத்தால் அது ஒரு புதிய சாதனையாகும். பரிசுக் கோப்பையையும் அவளுக்கே நினைவுக்காகக் கொடுத்துவிடுவார்கள். அவள் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு அவளை மிகவும் மகிழ்ச்சிப்படுத்திற்று.

“இறுதியாக அண்ணா பொறியியல் கல்லூரி மாணவர் அகமது பாடுவார்” என்ற குரல் கேட்டு அவளுக்கு இன்னும் சற்று நேரத்தில் தனக்கு முதல் பரிசை சொல்லிவிடுவார்கள் என்ற எண்ணமே அவளுக்குக் கிளர்ச்சியாக இருந்தது. டென்ஷனை மறைப்பதற்கு பேச்சுத்துணைக்கு ரஸியா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாடகர்களை மட்டும் முன்வரிசையில் அமரச் சொன்னதால், பக்கத்திலிருந்த வேறு கல்லூரி மாணவியிடம் பேசுவதற்கு அவளுக்கு ஒன்றும் இருந்திருக்கவில்லை. அவளின் நினைவுகளைக் கலைப்பதுபோல், ‘விடைகொடு எங்கள் நாடே கடல் வாசல் தெறிக்கும் வீடே’ என்ற பாடலைக் கேட்டவுடன் மேடையைப் பார்த்தாள். குரலும் பாடிய விதமும் நன்றாகத்தான் இருந்தது. பொதுவாக இரைச்சலாக இருக்கும் ஆடிட்டோரியம் சத்தம் இல்லாமல் சட் என்று அமைதியாகிவிட்டதான பிரமை. பாடல் முடியவும், புயல்தான் வந்துவிட்டதோ என்று எண்ணும்படி அனைவரின் கைதட்டுக்கள், பாடகரின் திறமையைப் பறைசாற்றுவதுபோல் இருந்தது. அகமதுக்கு முதல் பரிசு அளிக்கப்பட்டபோது அவளுக்கு ஏமாற்றம் இருந்தது. இருந்தாலும் இலங்கைத் தமிழர்களின் கஷ்டத்தினை நினைத்து சமீபகாலமாக, நிறைய கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் சென்றிருந்ததும், மக்கள் அனேகமாகத் துடைத்தழிக்கப்பட்ட செய்திகளும், இந்தப் பாடலைக் கேட்டவுடன் எல்லோருடைய உணர்ச்சியையும் தூண்டிவிடப்பட்டதுபோல் ஆயிற்று. அப்போது அவளுக்கு, ‘யாரிவன்’ என்று தோன்றியது.

நிகழ்ச்சி முடிவில் ரஸியா, அகமது தன்னோட அண்ணன் என்று சொன்னபோதுதான் அவளுக்கு நினைவு வந்தது. ஏற்கனவே ரஸியா சொல்லியிருந்தாள், அவள் அண்ணனும் இந்தத் தடவை பாடல் போட்டியில் கலந்துகொள்வான் என்று. ரஸியாவுக்குத்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அண்ணன் வெற்றி பெற்ற மகிழ்ச்சியைவிட, தன் சினேகிதி சாதனை செய்யமுடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் மேலோங்கியது.

அடுத்த ஒரு மாதத்தில் இறுதி வருடம் என்பதால், அவளின் வகுப்பில் உள்ள எல்லோரும் சோழாவில் பார்ட்டி வைத்தார்கள். பார்ட்டி முடியும் சமயம் ரஸியாவை பிக் அப் பண்ண அகமது வந்திருந்தான். அப்போதுதான் ரஸியா, அகமதை அனுவுக்கு அறிமுகப்படுத்தினாள்.

“உனக்கு பரிசு கிடைச்சதுல அனுவுக்கு 3வது தடவையும் தொடர்ந்து பரிசு பெறும் வாய்ப்பு போச்சுன்னு சொன்னேனில்ல, அவள்தான். என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்”

“ஸாரி.. நான் எந்தப் போட்டியிலும் கலந்துக்கமாட்டேன். எப்போவும் ஸ்டடீஸ்தான் என் ப்ரையாரிட்டி. இந்தத் தடவை என் ஃப்ரெண்ட்ஸ்லாம் கல்லூரியில் கடைசி வருஷம், கண்டிப்பா கலந்துக்கணும்னு வற்புறுத்தினாங்க. அதை சேலஞ்சாக எடுத்துக்கிட்டுதான் கலந்துக்கிட்டேன். என்னால உங்களுக்கு ஏமாற்றமாயிடுத்துன்னு ரஸி அன்னைக்குச் சொன்னபோது கொஞ்சம் சங்கடப்பட்டேன். எப்பயாவது பார்த்தால் ஸாரி சொல்லணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்” அகமது அனுவை நோக்கி வருத்தமான முகத்தோடு சொன்னான்.

“அதுனால என்ன. அன்னைக்கு ரொம்ப நல்லாப் பாடினீங்க. ஆடியன்ஸை அசர வச்சுட்டீங்க. உங்க பாட்டு செலெக்ஷனும் ரொம்ப அப்பீலிங்கா இருந்தது” அனு உற்சாக முகத்தோடு சொன்னாள்.

“அனு.. வர்றேன். அகமத் சீக்கிரம் வண்டியை விடு” 

“ஏய்.. உன் ஃப்ரெண்ட் எப்படி வீட்டுக்குப்போவா?” அகமது ரஸியாவை நோக்கிக் கேட்டான்.

“அவ அப்பா வருவார்”

“நாம வேணும்னா அவங்க வர்ற வரைல வெயிட் பண்ணுவோமா” அகமது கேள்வியோடு அனுஷாவைப் பார்த்தான்.

“வேண்டாம். இப்போ வந்துடுவேன்னு ஃபோன்ல சொன்னார். நீங்க போய்ட்டுவாங்க. தாங்க்ஸ்”. அனு பதில் சொல்லும்போது, அவள் மனசில் அகமதுவின் நல்ல குணம் பதிந்தது.

அதுக்கு அப்புறம் அகமதை அவள் பார்க்கும் சந்தர்ப்பம் ஃபைனல் எக்சாம் முடிந்த அன்றுதான் கிடைத்தது. ஸ்டடி ஹாலிடேஸ்ல வாரம் 4 நாளாவது ரஸியா அவள் வீட்டுக்குப் படிக்க வந்துடுவாள். அவளே ஸ்கூட்டில வந்துடறதுனால, அகமதைப் பார்க்கும் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. அவனும் படிப்புல பிஸி, கடைசி செமெஸ்டர் தேர்வுக்கு படிச்சிட்டிருக்கான். இந்தத் தடவையும் நல்ல ஸ்கோர் எடுத்தான்னா யூனிவர்சிட்டி கோல்ட் மெடல் அவனுக்குத்தான் கிடைக்கும்னு ரஸியாதான் சொன்னா.

“அனு.. நான் போய் ப்ரொஃபசர்கள்ட சொல்லிட்டு வந்துர்றேன். அகமது வந்தான்னா இருக்கச் சொல்லு”  அவள் கிளம்பிய நிமிஷம் அகமது பைக்கில் வந்தான். அவனைப் பார்த்ததும் அவளுக்கு வயிற்றுக்குள் கலவரம் வந்தது.

“ஹாய்.. உங்க ஃப்ரெண்ட் எங்க போனா?” அகமது அவளைக் கேட்டான்.

“இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடுவா. உங்களுக்கு எப்போ ஃபைனல் எக்சாம்”  குரல் பதட்டமாவதை அனுவால் உணர முடிந்தது.

“இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. நீங்க ரெண்டுபேரும் அடுத்தது என்ன பண்ணப்போறீங்க. என்ன பண்ணினாலும் ஒரு மாசமாவது ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் ஆரம்பிங்க” அகமது சிரித்துக்கொண்டே சொன்னான்.

“அவளுக்கு கேட்கவேண்டிய கேள்விகள் இருக்க, அவன் கேள்விகேட்கிறானே’ என்பதை நினைக்கும்போது, ‘கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதே’ என்று அவள் மனதின் குரல் கேட்டது. “நான் உங்கள்ட கொஞ்சம் பேசணும்’. அனு சொல்லிக்கொண்டிருக்கும்போது, “ஏய்.. அதுக்குள்ள வந்திட்டயா” என்ற குரலோடு ரஸியா வந்தாள்.

“என்ன என் ஃப்ரெண்டுட்ட எப்படி எக்ஸாம் எழுதியிருக்கானு கேட்டு பயமுறுத்திட்டயா இல்லை நான் எப்படிப் பண்ணியிருக்கேன்னு அவள்கிட்ட கேட்டியா” ரஸியா அவள் அண்ணனை நோக்கி சிரித்துக்கொண்டே கேட்டாள்.


“எனக்கு நேரமாகுது. நான் லைப்ரரிக்குப் போகணும். வா சட்டுனு கிளம்பலாம்’ என்று சொல்லிக்கொண்டே அகமது ரஸியாவை ஏற்றிக்கொண்டு கிளம்பினான். “ஏய்.. அனு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தப்பறம் வீட்டுக்கு வரேண்டி”..ரஸியா சொல்லிக்கொண்டிருக்கும்போதே பைக் விர்ரென்று கிளம்பி மறைந்தது.

இரண்டுமாதம் கழித்து CITY நூலகத்தில் அவள் சி.ஏ சம்பந்தமான புத்தகங்கள் எடுக்கப்போயிருந்தபோதுதான் யதேச்சையாக அகமதைப் பார்த்தாள்.

“நீங்க எப்படி எக்சாம்லாம் எழுதினீங்க?” அனுதான் ஆரம்பித்தாள்.

“நல்லாப் பண்ணியிருக்கேன். ரிசல்டுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு. ஆமாம் ரெண்டுபேரும் சி.ஏ சேர்றதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?” அகமதின் சிரித்த முகம் அவளுக்கு தைரியத்தை வரவழைத்தது.

“ஆமாம். உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும். பக்கத்துல காஃபி ஷாப்புக்கு வர்றீங்களா” அனு அவனைக் கேட்டாள்.

“ஷ்யூர். ஒரு நிமிஷம், இந்த கார்டைக் கொடுத்துட்டு வந்துர்றேன்”

‘உங்களுக்கு கேப்பசினோ பிடிக்குமா?’ அவன்’தான் கேட்டான்.

‘வேண்டாம் கோல்ட் காஃபியே சொல்லிடுங்க’ அனு சொன்னாள்.

“என்னமோ பேசணும்னு சொன்னீங்களே… சொல்லுங்க” காஃபி ஆர்டர் செய்துவிட்டு கேட்டான்.

“எனக்கு உங்களோட பழகணும், வாழ்க்கைல ஒண்ணு சேரணும்’ சொல்லுவதற்குள் அவளுக்கு பட பட வென்று மனதில் வந்தாலும், சொல்லவந்ததைச் சொல்லிவிட்டோம் என்ற திருப்தி ஏற்பட்டது. இருந்தாலும் மனதின் படபடப்பு நீங்கவில்லை.

 “அனுஷா.. உங்களைப் பத்தி ரஸி சொல்லியிருக்கு. அவளும் என்னைப் பத்தி உங்கள்ட சொல்லியிருப்பா. எனக்கு லட்சியம் ராணுவத்துல சேரணும்கறதுதான். வாப்பா பத்து வருஷம் முன்னால எல்லைல மவுத் ஆயிட்டார். அப்போலேர்ந்து எனக்கு நல்லா படிச்சு ராணுவத்துல பெரிய போஸ்டுல வரணும், நாட்டுக்கு என்னோட பங்களிப்பும் இருக்கணும்கறதைத்தான் லட்சியமா வச்சுக்கிட்டேன். எங்க அத்தா அப்பா போனதைப் பெருசா நினைக்கலை. நாட்டுக்கு சேவை செய்யும்போது அவர் உயிர் போச்சேன்னுதான் பெருமையா நினைச்சாங்க. நானும் ராணுவத்துல சேரணும்னு சொல்லும்போதெல்லாம், அல்லா அப்படி உனக்கு திட்டம் வச்சிருந்தான்னா தாராளமா போ. வாப்பாவுக்கு பெருமை சேருன்னுதான் சொல்லுவாங்க. ஃபேமிலின்னு ஆயிட்டா லட்சியத்துல நிற்கமுடியாது. நானும் சாதாரணமா கல்யாணம் செஞ்சுக்கிட்டு பெரிய வேலைல இருக்கணும்னு நினைச்சிருந்தேன்னா, நிச்சயம் உங்க காதலை ஏத்துட்டிருப்பேன். இதக் கேட்டுருவீங்களோன்னு சந்தேகத்துலதான் நான் ரெண்டுதடவை உங்க வீட்டுக்கு ரஸியோட வரதை அவாய்ட் பண்ணிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க. என்னை சகோதரனா ஏத்துக்குங்கன்னு சொல்லமாட்டேன். நல்ல நண்பனா உங்க மனசுல வச்சுக்குங்க. எப்போ ப்ரே பண்ணும்போதும் என் லட்சியம் நிறைவேறணும்னு துஆ செய்ய மறந்துடாதீங்க. நீங்க எப்போதும் ரஸிக்கு நல்ல தோழியா இருக்கணும்” அகமது சொல்லும்போது ஒரு நெருங்கிய நண்பன் பேசுவதுபோல்தான் அவளுக்குத் தோன்றியது.



சில வருடங்கள் கழித்து, அவன் ராணுவத்தில் ஆபீசராக சேர்ந்துவிட்டதையும் காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் அவனுக்கு போஸ்டிங் என்றும் ரஸியா சொன்னாள்.

அப்புறம் நாலு வருஷம் கழித்துத்தான் அகமதை ரஸியாவின் கல்யாணத்தின்போது அவள் பார்த்தாள். ரஸியாவுடன் கூடவே திருமணத்தின்போது இருந்தாலும் அகமதிடம் பேசும் சந்தர்ப்பமே அமையவில்லை. மறுவீட்டுக்காக ரஸி காரில் ஏறும்போது அகமதும் அவளுடன் செல்வதைப் பார்த்தாள். அவனிடம் மீண்டும் பேசும் சந்தர்ப்பம் கிடைக்காதது அவளுக்கு ஏமாற்றம்தான். ரஸியா திருமணத்துக்குப்பின் படிப்பை முடிக்காமலேயே துபாய் சென்றுவிட்டாள். அவ்வப்போது ஸ்கைப்பில் chat செய்வதோடு சரி. துபாய் போனாலும் அவளுடன் கூடிய சினேகபாவம் ரஸியிடம் மாறவேயில்லை.

திருமணமே வேண்டாம் என்றுதான் அனுவுக்கு எண்ணம். அவள் மாமன் மகன் சுரேந்தரைத் திருமணம் செய்துகொள்ள வீட்டில் சொல்கிறார்கள். அவளால் அகமதை மறக்க முடியவில்லை. என்றேனும் ஒரு நாள் திருமணம் செய்யும் சந்தர்ப்பம் வராதா என்ற ஆசை மனதின் ஒரு புறத்தில். அது நடக்க வாய்ப்பே இல்லை என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. சுரேந்திரனும் நல்ல ஃப்ரெண்ட்லிதான். எல்லாருக்கும் எல்லாமுமா வாழ்க்கையில் கிடைத்துவிடுகிறது? புதிய வாழ்க்கையைத் தொடங்கினால் என்ன என்பது மனதின் இன்னொரு புறத்தில். ரொம்ப மனதில் சிந்தித்த பிறகு, அப்பாவிடம் அனுஷா ரெண்டு வாரம் முன்பு திருமணத்துக்கு சரி என்று சொன்னாள். அம்மாவுக்கும் கரை புரண்ட மகிழ்ச்சி. எங்க… வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிடப்போகுதே என்று உடனே நிச்சயதார்த்தமும் செய்துவிட்டார்கள். ஆச்சு ரெண்டு நாள் முன்புதான் நிச்சயதார்த்தம் முடிந்தது. அவளுக்கு ரஸியாவிடம் இதை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றவில்லை.  

நேற்றுதான் ரஸியா அவளிடம் அவள் அண்ணன் பேசுவதற்காக அவள் நம்பரைக் கேட்டான் என்று சொன்னாள். என்ன காரணம்னு சொல்லலையாம்.

பழைய கதைகளெல்லாம் அனுவின் மனதில் அலையடித்தன. அகமதுக்கு அவளது நம்பரைக் கொடுக்கச் சொல்வதா அல்லது வேண்டாம் என்று சொல்வதா? அவள் என்ன செய்யட்டும்?

தூரத்தில் அவளின் ஃபேவரைட்டான பாடல் காற்றில் தவழ்ந்துவந்தது.

“நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா”

100 கருத்துகள்:

  1. உங்களுக்கு கதை எழுத தெரியாது என்று முதலில் கதையை விட்டு விட்டு விட்டீர்களே நண்பரே

    முடிவு தீர்மானிக்க முடியாத விடயமாக இருக்கிறதே.... அனுவும், சுரேந்தரை திருமணம் செய்து நலமுடன் வாழ இறையருள் கிடைக்கட்டும்.
    காரணம் அஹமது - அனு பெயரில்தான் பொருந்தும் நடைமுறைக்கு கஷ்டமே...

    வாழ்த்துகள் நண்பரே - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியமும் நீங்கள் வரைந்தது போலவே.... வாழ்த்துகள்.

      நீக்கு
    2. கில்லர்ஜி... உங்கள் முதல் வருகைக்கு நன்றி. எப்போதும் தான் என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே வெளிப்படுத்துகிறீர்கள். 'இதுதான் என் கருத்து' என்று. இந்த போலித்தனமில்லாத எண்ணங்களைப் பிரதிபலிக்கும் உங்கள் குணம் எனக்குப் பிடித்திருக்கிறது. வருகைக்கு நன்றி.

      படமும் நான் வரைந்ததுதான். (ஜெ.வின் ஒரு ஓவியத்தைப் பார்த்து. புலியைப் பார்த்து பூனை..)

      நீக்கு
    3. நண்பரே எனக்கு அந்தர் ஏக் வைத்து, பார் ஏக் வைத்து பேசுவது பிடிக்காது உள்ளதை உள்ளபடி பேசிவிடுவேன்.

      ஒருமுறை பஞ்சாயத்துக்கு என்னை அழைத்துப்போக எதிரணிக்கு சாதகமாக பேசிவிட்டேன் காரணம் அதுவே எனது மனசாட்சிக்கு நியாயமாக பட்டது இதனால் பலருக்கும் என்னைப் பிடிக்காது தாங்கள் என்னைப் பிடித்து இருப்பது என்று சொன்னது உலக அழகி கிளியோ பாட்ராவே சொன்னதைப்போல் உணர்கிறேன் நன்றி நண்பரே - கில்லர்ஜி

      நீக்கு
    4. கில்லர்ஜி.. நான் உலக அழகியுமில்லை. உள்ளூர் கிழவியுமில்லை. ஒவ்வொருத்தரிடமும் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோ கற்றுக்கொள்ள இருக்கும் என நம்புபவன்.

      பஞ்சாயத்து சம்பவம் உங்கள் நண்பர்களுக்கு ஒரு படிப்பினை. நாம வெளிப்படையா நியாயம், உண்மை பேசினால் நமக்கு memory அவசியமே இல்லை. எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள கஷ்டப்படவேண்டாம். வாழ்த்துகள்.

      நீக்கு
    5. 'அந்தர் ஏக்', 'பார் ஏக்' - சொல்லாடல் நல்லா இருக்கு கில்லர்ஜி. இது எனக்கு, 'தங்கச் சங்கிலியை' நீங்கள் மீட்டுக்கொடுத்த சம்பவத்தையும் நினைவுபடுத்திற்று (அபுதாபியில் இருந்தபோது)

      நீக்கு
  2. அதானே நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா. என்ன செய்வது மறந்துதான் ஆகணும். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் காமாட்சி அம்மா. நல்லன அல்லாதவற்றை மறந்தால்தான் வாழ்க்கை எப்போதும் நிம்மதியாக இருக்கும். நான் எப்போதும் எனக்குச் சொல்லிக்கொள்வேன். More information more headache. கூடுதல் தகவல்கள் நமக்குத் தலைவலியைத்தான் கொண்டுவரும். மற்றவர்கள் நினைப்பது, நாமில்லாதபோது பேசுவது நமக்குக் கேட்கும்படியான திறமை இருப்பது நமக்கு வரமா சாபமா? வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. அஆவ்வ்வ்வ் மீ லாண்டட் நல்லவேளை இன்னிக்குனாலே படிச்சு கமெண்ட முடியுது ..thanks sriram

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே ஜி ஜி சார் டக் என்று வெளியிட்டுவிட்டார். ஸ்ரீராமும் 'எங்கள் பிளாக்கில்' இது குறித்து எழுதிவிட்டார். இருவருக்கும் எனது நன்றிகள்.

      நீக்கு
  4. அழகான அந்த ஓவியத்துக்கு முதலில் வாழ்த்துக்கள் நெல்லையாரே..!

    விறுவிறுப்பான கதை..! Tram இல் 4 Haltes போவதற்குள் படித்து முடித்துவிட்டேன். 4 வருஷம் ஏதும் சொல்லாமல் இருந்துவிட்டு, கடைசியில் என்கேட்ஜ் முடிந்தவுடன் போன் பண்ணப் போகிறாரா அஹமது? ஒருவேளை வாழ்த்துச் சொல்லவோ?

    ‘விடைகொடு எங்கள் நாடே’ பாடல் வரிகளைப் பார்த்ததும் ஒரு கணம் கண்கள் கலங்கின. அந்த ஒற்றை வரிகளுக்குப் பின்னால் எத்தனை வலிகள்? சரி அதை விட்டுவிடுவோம். சந்தோஷமாகப் பேசுவோம்..!

    அஹமது இராணுவத்தில் சேருகிறார் என்றவுடன் நான் கொஞ்சம் பயந்து போனேன். முடிவில் ஏதும் துன்பமான நிகழ்வு நடந்துவிடுமோ என்று.. நல்லவேளை அப்படி ஏதும் இல்லை.

    நினக்கத் தெரிந்த மனமே அருமையான பாடல்..! ஆம் அனு மறப்பாளா? இல்லையா?

    வாழ்த்துக்கள் நெல்லை ஜீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி ராஜீவன்.

      எனக்கு 'விடைகொடு எங்கள் நாடே' பாடல், எப்போதும் 'புலம் பெயர்ந்து-வேறு வழியில்லாததால் பிற நாட்டை தங்கள் நாடாக ஏற்றுக்கொண்டு வாழும் இலங்கைத் தமிழர்களை' நினைவுபடுத்தும்.

      அகமது இப்போதுதான் செட்டில் ஆகி தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கலாமா என்று எண்ணுகிறாரோ என்னவோ. அல்லது தன் சகோதரியின் நண்பியை ஒரு நல்ல நாளில் நினைவுவந்து எப்படி இருக்கிறாள் என்று கேட்பதற்கோ? யாருக்குத் தெரியும்?

      சில சமயம் நமக்கே தோன்றும் இல்லையா? அன்றைக்கு அந்த முடிவு எடுக்காமல் வேறு மாதிரி முடிவு எடுத்திருக்கக்கூடாதா என்று. அனுவுக்கும் அப்படி ஒரு நிகழ்வு பிற்கால வாழ்க்கையில் நேருமோ?

      வருகைக்கு நன்றி. நெல்லைத் தமிழன். (..யாரே, ஜி வேண்டாமே)

      நீக்கு
  5. ஆஹா !! மிகவும் அருமையா எழுதியிருக்கீங்க நெல்லை தமிழன் ....இம்மாதிரி சம்பவங்கள் நானும் கேள்விப்பட்டிருக்கேன் ..சில வெற்றியில் சில தோல்வியில் ...அனுஷாவின் லவ் infatuation போல தோன்றினாலும் ..அஹ்மதின் போன் கால் வராமலிருந்தால் அனுஷாவுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்காது .. இன்னும் சில மாதங்கள் கழித்து வந்திருந்தால் கூட கடினமே ..
    என்னைப்பொருத்தவரை அகமத் தனது எதிர்க்காலம் குறித்து தெளிவாக இருந்திருக்கிறார்

    //அகமதுக்கு அவளது நம்பரைக் கொடுக்கச் சொல்வதா அல்லது வேண்டாம் என்று சொல்வதா? அவள் என்ன செய்யட்டும்?

    தூரத்தில் அவளின் ஃபேவரைட்டான பாடல் காற்றில் தவழ்ந்துவந்தது.

    “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா”//

    அனுஷாவின் பேவரைட் பாடலே சொல்லி விட்டது அனுஷா சுரேந்திரனுடன் மணவாழ்வில் சந்தோஷமாக இணைந்திருப்பார் ..பழையவற்றை மறந்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோஹம், ஈர்ப்பு - இது பார்வையாளர்களுக்குத் தெரியாது. அவங்க அவங்க மனசுக்குத்தான் புரியும். எது சரி, நியாயம் என்பது பார்வையாளர்களுக்குத் தான் சரியாகத் தெரியும். பாத்திரதாரர்களுக்குத் தெரியாது.

      நீங்கள், நான் நன்றாக எழுதியிருப்பதாக பாராட்டுக்குச் சொன்னாலும், மனம் மகிழ்வடைகிறது. கருத்துக்கு நன்றி.

      படத்தைப் பற்றி ஒன்றும் சொல்லலையே. (உங்களுக்காகச் சொல்லுகிறேன். இது வேறு கதைக்கு வரைய அவுட்லைன் போட்ட படம். என்னிடம் ஜெ.வரைந்த படங்கள் இல்லை. ஒரு மின்னூலில் (குமுதம் பத்திரிகையிலிருந்து தொடர்கதையை பைண்ட் செய்தது) இருக்கும் படங்கள் எல்லாம் ரொம்ப ஆபாசமாக வரைந்திருந்தார். அது பொருத்தமல்ல (பார்க்க கிளு கிளு-எங்கேயிருந்து அதிரா இந்த வார்த்தையைக் கண்டுபிடித்தாரோ- இருந்தாலும் பொருத்தமாயில்லை). சரி என்று என்னிடம் இருந்த குமுதம் இதழிலிருந்து தமன்னா படத்தை வரைய முயற்சித்தேன். குமுதம் பத்திரிகையில் அப்படித் தெரியாதது நான் வரைந்தபோது ரொம்ப ஆபாசமாக இருந்தது. அதனால் அதனையும் தொடராமல் இந்தப் படத்தையே போட்டுவிட்டேன்.

      நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.

      நீக்கு
    2. நான் ஜிமெயில் இல் எழதி காப்பி ஒட்டுவென் அதில் இப்பொ எங்கு ஒட்டினெனொ ஹா ஹா... படம் அழகா இருக்கு அடுத்த எனது கதைக்கு நான் வரைய ட்ரை பன்னுவென் .இல்லெனா நீங்கள் ஒரு sketch போட்டு தாங்க

      நீக்கு
    3. அனேகமாக யாராவது நல்ல கவிதை எழுதியிருப்பார்கள். அங்க போய், 'உங்கள் படம் நல்லா இருந்தது. அதுவும் அந்தப் பெண் உடை டீசன்டாக இருந்தது'ன்னு பின்னூட்டமிட்டிருக்கப்போறீங்க. அவங்க இப்போ தலையைப் பிச்சிக்கிட்டு உட்கார்ந்திருப்பாங்க.

      நீங்க பண்ணுகிற கைவேலைகள் (கிரீட்டிங்ஸ், வரையறது) உங்கள் திறமையைப் பறைசாற்றுகிறது. எனக்கே, வரைவதைக் கற்றுக்கொள்ளணும்னு ஆசை. அதுதான் ஓய்வு காலங்களில் உயிர்ப்புடன் வைத்திருக்கும். உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    4. இன்னிக்கு 3 இடம்தான் கமெண்ட் பண்ணின்னேன் ஒன்று இங்கே அப்பறம் கோமதி அக்கா தென் எங்கள் பிளாக் மூன்றிலும் இல்லை :) அநேகமா அங்கியும் இஞ்சியும் ஜம்பினதில் கமெண்ட் போடாமலே விடுபட்டிருக்கு :)

      நீக்கு
    5. அங்கேயும் இங்கேயும் // கடவுளே ஒரே ஸ்பெல்லிங் மிஸ்டேக்காகுது

      நீக்கு
  6. நெல்லையாருக்கு பல திறமைகள் இருந்தும், இந்தப் பணிவு மிகவும் பிடிக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும் - பாடலில் சல்லிசா சொல்லிட்டுப்போயிட்டார் கவிஞர். அந்தப் பணிவு வருமா? வரணும்னுதான் ஆசை.

      பிளாக்கர்கள் எல்லோருக்கும் டிடி என்றால் திவ்யதர்சினி ஞாபகம் வராமல் திண்டுக்கல் தனபாலன் தான் ஞாபகம் வரும். அது உங்களின் உதவும் குணத்தாலும் நட்பு மனத்தாலும். அதுல நூற்றிலொரு பங்கு எனக்கு வந்தாப் போதாதா?

      வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன். விரைவில் நீங்கள் எவ்வளவு ஸ்வீட் வேண்டுமானாலும் சாப்பிடும்படியாக உடல் மாறட்டும்.

      நீக்கு
  7. கதையை மிகவும் அருமையாகவும், மிகவும் அழகாகவும், அசத்தலாகவும் எழுதி முடிவில்லாமல் யூகித்துக்கொள்ளும்படி முடித்துள்ளீர்கள்.

    பாடல் வரிகளுக்கு மிகவும் பொருத்தமான சம்பவங்களாகவும் உள்ளன.

    நேரில் நெருங்காத அவர்கள் படத்தில் நெருங்கியுள்ளார்கள்.

    (ஒருவேளை அது அவர்கள் இருவரின் மனத்தினைப் பிரதிபலிக்கும் படமாகவும் இருக்கலாம் .... சபாஷ் !)

    தங்களிடம் மிகச்சிறப்பாக இதுபோலக் கதைகள் எழுதும் ஆற்றல் ஒளிந்துள்ளதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. :)

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோபு சார். முதன் முதலா இந்தத் தளத்துல உங்களைப் பார்க்கிறேன். போனவாரம் இங்கு எழுதியிருந்த கதைக்கே உங்களை எதிர்பார்த்தேன்.

      உங்களை மாதிரி அனுபவசாலிகள், தங்கள் பாராட்டுகள் மூலமாகவே அடுத்த தலைமுறையை, மற்றவர்களை வளர்த்துவிடுகிறீர்கள். உங்கள் பாராட்டுக்கு நன்றி. பிறரை வளர்க்கும் உங்கள் நல்ல சொற்கள் எப்போதும் பலிக்கட்டும்.

      அனுஷாவின் மனதைப் பிரதிபலிக்கும் படம்தான். நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லையே.

      நீக்கு
    2. //நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லையே.//

      நினைக்காதவைகள், நினைத்துப்பார்க்கவே முடியாதவைகள்கூட இப்போது நடந்துகொண்டுதான் உள்ளது. இதுபற்றி எனக்குத் தெரிந்த சில உண்மைக் கதைகளை + அனுபவங்களை உங்களுக்குத் தனியே மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன்.

      அவை உங்களாலும் நம்பவே முடியாததாக மட்டுமே இருக்கக் கூடும்.

      தங்களின் இந்தக்கதையைப் படித்ததும் எனக்கு அவைதான் உடனே ஞாபகத்துக்கு வந்தன.

      நீக்கு
    3. நெல்லைத் தமிழன் June 26, 2017 at 8:25 PM

      //வாங்க கோபு சார். முதன் முதலா இந்தத் தளத்துல உங்களைப் பார்க்கிறேன். போனவாரம் இங்கு எழுதியிருந்த கதைக்கே உங்களை எதிர்பார்த்தேன்.//

      இதுபோல ஒரு தளம் இருப்பதே எனக்கு இதுவரை தெரியாது. தாங்கள் அதன் இணைப்பினை (லிங்க்) எனக்கு மெயில் மூலம் அனுப்பியிருந்தால் கட்டாயமாக நான் வருகை தந்திருப்பேன். - அன்புடன் கோபு

      நீக்கு
    4. மீள் வருகைக்கு நன்றி கோபு சார். எனக்கு எப்போது பெண் நிச்சயமாகும்னு கனவுல வந்து சொன்னார் ஒருவர். அந்தத் தேதியில்தான் நிச்சயமாச்சு (I was not part of that event) இதுபோன்று நடந்தவைகளை என் பசங்கட்ட சொன்னாலும், அவங்ககூட நம்ப மாட்டாங்க. எங்கப்பாவும் ஒரு தடவை சொன்னார். அவர் எப்போதும் கன்சல்ட் செய்யும் திருச்சி ஜோசியருக்கு நடந்த ஒன்றை (அவரது மகள் திருமணம் செய்த குறைந்த காலத்தில் கணவனை இழந்ததை. அதற்கப்புறம் ஜோசியர் தன் தொழிலைத் துறந்தார் என்று). அந்த ஜோசியர் எனக்குக்கூட ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

      பரமாச்சாரியார் பற்றி எழுதியுள்ள அனேகமா எல்லா நிகழ்ச்சிகளும் நம்மாலே நம்பவே முடியாது. ஆனாலும் அவைகள் நடந்தவைகள்.

      கண்டிப்பாக மெயிலில் அனுப்புங்கள் நேரம் கிடைக்கும்போது.

      இந்தத் தளத்திலேயே உள்ள அந்தக் கதையையும் படித்துவிடுங்கள். உங்கள் கருத்தையும் பதிந்துவிடுங்கள்.

      நீக்கு
    5. தாங்கள் எனக்கு அந்தக்கதையின் லிங்கினை 19.07.2017 அன்று மெயிலில் அனுப்பியிருந்தீர்கள். உனடியாக நானும் படித்துவிட்டு தங்களுக்கு மெயில் மூலமே அதே 19.07.2017 அன்று கருத்தளித்துள்ளேன். தாங்கள் ஒருவேளை அதனை கவனிக்கவில்லையோ என்னவோ? மீண்டும் அதனை அப்படியே கீழே REPRODUCE செய்துள்ளேன். படித்துப்பாருங்கோ, ப்ளீஸ்.

      -=-=-=-=-

      குற்றம் பார்க்கில் ... படித்தேன். நல்லா எழுதியிருக்கீங்க ! பாராட்டுகள். வாழ்த்துகள்.

      நம்ம ஏரியா ! என்று ஒரு வலைப்பதிவு உள்ளதே எனக்கு இதுவரை தெரியாது. இன்றுதான் பார்த்து, அதில் ஃபாலோயராக இணைந்துள்ளேன்.

      அப்போ அந்த அதிரா எழுதியிருந்த கதையும் இதற்காக மட்டுமே போலிருக்கிறது. அது தெரியாமலேயே அவங்களுக்கு நிறைய பின்னூட்டங்கள் கொடுத்திருந்தேன்.

      oooooooooooooooooooooo

      //“உங்கட்ட சொல்லாததுக்கு மன்னிச்சுருங்கோம்மா. அன்னைக்கு ரயில்ல என்னோட முதல் கணவனும் வந்திருந்தார்”.

      “யாரு. சுவாமினாதன்னு சொன்னேயே. அவரா?”

      “ஆமாம். நீங்க கூப்பிட்டேள்னு நான் உங்க பிள்ளையைக் கூப்பிடப் போனப்ப இவர் இருந்த அதே பொட்டிலதான் அவரைப் பார்த்தேன். அவர், உங்க பிள்ளைட்ட தன்னோட கதையெல்லாம் சொன்னாராம்.. கதையைக் கேட்கும்போதே அவருக்கு சந்தேகம் வந்ததாம். நான் சட்டென்று முகம் மாறினதைப் பாத்து அவருக்குப் புரிஞ்சுடுத்தாம்”

      “ராமு அதுக்கு என்னடி உங்கிட்டச் சொன்னான்?”

      “உங்க பிள்ளை அன்னைக்கு எங்கிட்ட பேச வந்தப்போ, எனக்கு ரொம்ப பட படப்பா இருந்தது. ஆனா அவர், ‘நித்யா.. எல்லாப் பொண்களும் நல்லவாதான். நாம அவா கிட்ட நடந்துக்கறதப் பொறுத்துத்தான் இருக்கு. நீ அதே பொண்ணுதான். அம்மாவுக்கு உன் மேல் எத்தனை அன்பு,பாசம். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னெல்லாம் அம்மாக்கு நான் எப்படா ஆத்துக்கு வரேன்னு இருக்கும். நீ ஆத்துல காலடி எடுத்துவச்சப்பறம் என்னைவிட உம்மேலதான் அவளுக்கு அத்தனை அன்பு. எனக்கும் வாழ்க்கைல ஒரு அர்த்தமும், அம்மா சந்தோஷத்தைப் பார்த்து நிம்மதியும் கிடைச்சது. எங்களுக்குக் கிடைச்ச தனமாத்தான் நீ இருக்க. அதே பொண்ணோட நல்ல குணம் அவாளுக்கு அப்போ சரியாத் தெரியலை. அத விதின்னுதான் சொல்லணும். இப்போ அவர் வருந்தி என்ன பிரயோசனம்? நீ இதை நினைத்து விசாரப்படாதே. அம்மாட்டயும் சொல்ல வேண்டாம். பழைய அத்தியாயத்தை மீண்டும் புரட்டறதுல என்ன அர்த்தம் இருக்கு’ ன்னுட்டார். அவரோட அன்ப நெனைச்சு எனக்குக் கண் கலங்கித்து.

      லட்சுமிக்கும் கண்களில் நீர் வந்தது. அது வெங்காயத்தாலா அல்லது பிள்ளையின் பண்பான குணத்தாலா என்று அவளுக்குத் தெரியவில்லை.//

      oooooooooooooooooooooo

      அழகாக எழுதி அருமையாக முடித்துள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுகள். தொடர்ந்து கதைகள் எழுதுங்கோ. கலக்குங்கோ.

      அன்புடன் கோபு

      நீக்கு
    6. //அவர் எப்போதும் கன்சல்ட் செய்யும் திருச்சி ஜோசியருக்கு நடந்த ஒன்றை (அவரது மகள் திருமணம் செய்த குறைந்த காலத்தில் கணவனை இழந்ததை. அதற்கப்புறம் ஜோசியர் தன் தொழிலைத் துறந்தார் என்று).//

      அவரை எனக்கு பெர்சனலாகத் தெரியும். அவர் என்னுடைய தூரத்து உறவினரும்கூட சமீபத்தில் இரண்டு ஆண்டுகள் முன்புதான் தன் 96+ வயதில் காலமானார். அவர் மனைவி 90+ இன்னும் இருக்கிறார்கள். சமீபத்தில் நான் அவர்களை நமஸ்கரித்து விட்டு வந்தேன். பொதுவாக இது போன்ற பிரபல ஜோஸ்யர்கள் சொல்வது நம்மைப்போன்ற மற்றவர்களுக்கு மட்டுமே பலிக்கும். அவர்களுக்குப் பலிக்காது.

      என் பிரார்த்தனைகளும் அதுபோலவே. மற்றவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்யும் போது அவை உடனே பலித்து விடும். எனக்காக நான் பிரார்த்தனை செய்வதும் இல்லை. அப்படியே நான் செய்தாலும் அவை பலிப்பதும் இல்லை.

      நீக்கு
    7. ///நம்ம ஏரியா ! என்று ஒரு வலைப்பதிவு உள்ளதே எனக்கு இதுவரை தெரியாது. இன்றுதான் பார்த்து///

      ஹா ஹா ஹா இதுதான் சங்கதியோ?:) நாம்:) ஏன் கோபு அண்ணனைக் காணல்ல இங்கின.. அதுவும் நெல்லைத்தமிழனின் கதைக்கு வராமல் விடமாட்டாரே என எண்ணி.. ஏதேதோ எல்லாம் கன்னாபின்னா எனக் கற்பனை பண்ணிட்டோம்ம்ம்(பன்மை.. பன்மை:)) ஹா ஹா ஹா.. இப்பூடி எனில் தகவல் சொல்லியிருப்போமே:)..

      அப்போ என் போஸ்ட்டை ஒயுங்காப் படிக்காமல்தானா.. லெவ்ட்டூ றைட்டூஊஊஊஊ எனக் கொமெண்ட்ஸ் போடுறனீங்க கர்ர்ர்ர்.. இருங்கோ இனிமேல் குறொஸ் குவெஷன்ஸ் கேட்டு கண்டு பிடிக்கிறேன்:).

      நீக்கு
    8. //பரமாச்சாரியார் பற்றி எழுதியுள்ள அனேகமா எல்லா நிகழ்ச்சிகளும் நம்மாலே நம்பவே முடியாது. ஆனாலும் அவைகள் நடந்தவைகள்.//

      அவர் மிகப்பெரிய மஹான். அவதார புருஷர். நடமாடும் தெய்வமாக இருந்தவர். உண்மையான துறவி என்றால் அவரை மட்டுமே நான் ஏற்றுக்கொள்வது உண்டு. இன்றும் என்னையும் என் குடும்பத்தையும் அவர் மட்டுமே வழி நடத்தி வருகிறார். அது என் பாக்யம்.

      அவரால் எதுவும் செய்ய முடியும் என்றாலும் கூட, அவர் தன்னைப்பற்றி பிறர் அறிய சித்து வேலைகள் எதுவுமே செய்யாதவர். அவர் மஹிமையை தங்கள் அனுபவத்தில் உணர்ந்தவர்கள் மட்டுமே உணர்ந்தார்கள். தன்னால் செய்யப்பட்ட ஒருசில க்ருபைகளைக்கூட அம்பாள் காமாக்ஷி செய்திருக்கிறாள் என்றுதான் அவர் சொல்வது வழக்கம்.

      //கண்டிப்பாக மெயிலில் அனுப்புங்கள் நேரம் கிடைக்கும்போது.//

      அதில் ஒரு பெண் பதிவர் பற்றிய உண்மைகள் இருப்பதால், இங்கு ஓபனாக என்னால் அதனைச் சொல்ல இயலவில்லை. தங்களிடமும் மெயிலில் அந்தப்பதிவரின் பெயரினை என்னால் சொல்ல இயலாது. அபூர்வ நிகழ்வுகளை மட்டுமே சொல்வதாக உள்ளேன்.

      நீக்கு
    9. திருச்சி ஜோசியர் எனக்கு நான் மேட்டூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது 1989ல் கடிதம் எழுதினார். அவர்தான் என்னை, செவ்வாயில் பிறந்துள்ளதால் (சஷ்டி நாளில்) கந்த சஷ்டி கவசம் சொல்லுங்கள் என்று அறிவுரை கூறியவர். எங்க வீட்டுல எல்லா ஜாதகமும் (பெண் ஜாதகத்தை கம்பேர் செய்து எவ்வளவு % பொருத்தம் என்று பார்த்து எழுத) அவரிடம்தான் சென்றது.

      உங்கள் பின்னூட்டத்தை அந்தக் கதையில் சேர்த்துவிட்டேன் நன்றி.

      மீள்வருகைக்கு நன்றி.

      நீக்கு
    10. //உங்கள் பின்னூட்டத்தை அந்தக் கதையில் சேர்த்துவிட்டேன் நன்றி.//

      பார்த்தேன். மிக்க நன்றி. அங்கும் நான் தங்களுக்கு ஒரு மிகப்பெரிய பதில் எழுதியுள்ளேன்.

      அபூர்வப்பிறவிகளான சிலரையும், அந்த சிலருடனான என் இனிய தொடர்புகளையும் என்னால் ஒருபோதும் மறக்கவே முடியவில்லை.
      :( :(

      நீக்கு
    11. "எனக்காகப் ப்ரார்த்தனை செய்ததில்லை. செய்தாலும் நடப்பதில்லை" - பிறருக்காகப் ப்ரார்த்திக்கும்போது ஏற்றுக்கொள்ளும் இறைவன் ஏன் உங்களுக்கான ப்ரார்த்தனையை ஏற்றுக்கொள்வதில்லை? 'நீ கேட்பதைவிட உனக்கு நடக்கப்போவது நல்லது. அது உனக்குப் புரியாது" என்பதனால் இருக்குமோ?

      காரணமில்லாமல் காரியமில்லை. முன்வினைத் தொடர்பு இல்லாமல் இப்பிறவியில் யாரையும் நாம் தாண்டிப்போவதில்லை. வாழ்த்துக்கள். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

      நீக்கு
  8. நொ ஒ நான் படம் பற்றி கமெந்ட் பொட்டென்.காணோம் கர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //AngelinJune 26, 2017 at 8:32 PM
      நொ ஒ நான் படம் பற்றி கமெந்ட் பொட்டென்.காணோம் கர்ர்ர்ர்ர்//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ///கமெந் ட்// பொட்டால்:) காணாமல்தான் போகும்:) கொமெண்ட் போடுங்கோ :)

      நீக்கு
    2. பதட்டப்படாதீங்க. உங்க கமெண்ட்ஸ் படிச்சாச்சு. வெகேஷனை நல்லா எஞ்சாய் பண்ணிவிட்டுத் திரும்புங்கள். வந்தபிறகு சுசீலா ஆஷா ஜானகி அதீஈஈஈஈரா கச்சேரியைத் தொடரலாம் ஏஞ்சலின்.

      நீக்கு
  9. ஆஆஆஆஆஆஆவ்வ் சுடச்சுடக் கதை எழுதி சுடச்சுட வெளியாகிவிட்டதே... வர வர எல்லோரும் சுறு சுறுப்பாக .. விறு விறுப்பாகவே இருக்கினம்:).. இருங்கோ படிச்சுப்பார்ப்போம் கதையும் விறு விறுப்போ என... ஆனா இது நெல்லைத்தமிழனின் கன்னிகதை இல்லைத்தானே?:) ஹா ஹா ஹா கன்னிக்கு அடுத்த கதை:) அதாவது 2 வது கதை.. ..:)

    //அவள் என்ன செய்யட்டும்?

    நெல்லைத்தமிழன் //
    அச்சச்சோ தலைப்பிலயே எங்கோ இடிக்குதே?:).. நெல்லைத்தமிழனை யாரோ கேள்வி கேட்பதுபோல இருக்கே:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் உங்கள்ட இந்தக் கேள்வி கேட்கயில்லை. அந்தப் பெண்தான் கேட்கிறாள்.

      உடனே, எனக்கு இப்போ நேரமில்லை, பாக்கிங், வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலை இருக்கிறது என்று காணாமல் போகாதீங்க. பதில் சொல்லிட்டுப் போங்க.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அப்படியெல்லாம் உங்களை கிளவி.. சே..சே.. கேய்வி கேட்காமல் ஈசியா றெஸ்ட் எடுக்க விட்டிட மாட்டேன்ன்ன்:).. பிளேன் படியில் கால் எடுத்து வைக்கும்வரை கேள்வி கேட்கும் பற:)ம்பரையாக்கும் மீ:)..

      இல்ல நெல்லைத்தமிழனை யாரோ கேட்கினம் எனத்தான் சொன்னேன்:).. அது கெள அண்ணன் வேணுமென்றே:) தலைப்பின் கீழ நெல்லைத்தமிழன் எனப்போட்டு கொன்ஃபியூஸ்ட் ஆக்குறார்ர்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  10. அடடா ஓவியம் மிக அழகாக வரைஞ்சிருக்கிறீங்க.. boy இன் முகம்தான் கொஞ்சம் வாய் சரியாக வரவில்லை:).. அது உண்மையும்தானே யாருக்குத்தான் வாய் ஒழுங்காக இருக்கு:) ஹையோ நான் மனதில் நினைப்பதை எல்லாம் வெளியே சொல்லிடுறேன் போல இருக்கே முருகா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பெண்ணும் அதைத்தான் சொன்னா. நான், அந்தப் பெண் கொஞ்சம் அதிகமாகவே தன் முகத்தை அழுத்திவிட்டாள் போலிருக்கிறது என்று சொன்னேன். வந்திருக்கும் ஆடவர்கள், எங்க பையனைப் பார்ப்பார்கள் என்று நினைத்தேன். பெண்களைப்பற்றி அப்படி எண்ணத் தோன்றவில்லை :)

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமாக்கும்:)..

      நீக்கு
    3. //அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமாக்கும்:)..//

      நான் என்ன கலர் ஐ ஷாடோ போட்டிருக்கேன்னு சொல்லுங்க :)

      நீக்கு
    4. ஹா ஹா ஹா நீங்க?.... ஐ ஷடோ?.. அதுவும் கண்ணில... ? போடுவீங்க?.... இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன் ஜாமீஈஈஈஈஈ:) இன்று இரவைக்கு தாராளமா ஐ ஷடோ போடுங்கோ:) ஏனெனில் என் ரெசிப்பியும் வெளியாச்சு:) நெ.தமிழனின் கதையும் வெளியாச்சூஉ:) ஹா ஹா ஹா:)

      நீக்கு
  11. // இன்னொன்று. கதைக்கான கருவோ அல்லது பாயிண்ட்ஸோ கொடுத்து உங்கள் தளத்தில் கதை எழுதச் சொல்லும்போது, கதை உங்கள் தளத்தில் வெளியிட்டபிறகு, அவர்களது தளத்தில் (இருந்தால்) வெளியிட்டுக்கொள்ளலாம் என்று சொல்லுங்கள். EngalCreationsதானே இன்ஸ்பிரேஷன். இல்லைனா, EngalCreationsல அந்த அந்த தலைப்புல எல்லாக் கதையையும் வெளியிடமுடியாது. வெறும் லிங்க் கொடுப்பது என்பது அவ்வளவு Attractive ஆக இல்லை.//

    நானும் இதை படு பயங்கரமாக வழிமொழிகிறேன்ன்.. நானும் இதை நினைச்சேன்ன்.. ஆனா ஒண்ணு எழுதி அனுப்பிப்போட்டு.. கெள அண்ணன் எப்போ மேசைக்குக் கீழ இருந்து வருவார்.. எப்போ போஸ்ட் போடுவார் என வெயிட் பண்ணோனும் அதுதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கும்.. மற்றும்படி நெ.தமிழன் சொன்னதுதேன் கரீட்டூஊஊஊ:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தளத்தில் அந்தப் பிரச்சனை இல்லை. எங்கள் பிளாக்குலதான், கதைனா, செவ்வாய், சாப்பாடுன்னா திங்கள், (ஞாயிறு என்றால் டார்ஜிலிங்) என்று வைத்திருக்கிறார்கள். அதனால் அங்கு காத்திருக்கும் நேரம் அதிகம். இங்க உடனே போட்டுவிடுவார்கள் (Provided கே ஜி ஜி சார் உறக்கம் கலையணும், நெட் சரியா இருக்கணும்) ரெண்டு பிளாக்கிலயும், வெளியிடும்போதே அவங்க கருத்தையும் பதிஞ்சுடுவாங்க. அது ஒரு நல்ல பழக்கம்.

      நீக்கு
    2. /// ரெண்டு பிளாக்கிலயும், வெளியிடும்போதே அவங்க கருத்தையும் பதிஞ்சுடுவாங்க. அது ஒரு நல்ல பழக்கம்.////

      நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்:) அதுதானே இன்று நான் ஸ்ரீராமுடன் கோபம் போட்டேன்ன்ன்:).. பாருங்கோ அந்த வழக்கத்தை இன்று ஸ்ரீராம் மாத்திட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. கரெக்ட்டா இன்று பார்த்து இக்கருத்தைச் சொல்லிட்டீங்க.. இல்லை எனில், ஏன் மீ கோபம் என யாருமே கேய்க்கல்லியே என :) இன்னும் ......... ஹா ஹா ஹா முடிவை படிப்போரிடம் விட்டிடறேன்ன்:).

      நீக்கு
    3. நீங்க சொல்றது சரிதான். பிடிக்கும், பிடிக்கலை போன்று ஏதேனும் கமென்ட் ஶ்ரீராம் எழுதணும்னு நானும் நினைப்பேன். அவருக்கும் நேரமிருக்கணும், பதில்போடும் சூழ்நிலை இருக்கணும். அதனால சமயத்துல சொல்லமாட்டேன்.

      நீக்கு
    4. கதைகளுக்கு எங்கள் கருத்தை மின் அஞ்சலில் கதையைப் படித்ததும் பெரும்பாலும் ஒன் டு ஒன் மெயிலிலேயே கருத்தைப் பகிர்ந்துவிடுவதால் இங்கு சொல்வதில்லை. இனி சொல்லத் தொடங்குகிறேன்.

      :))

      நீக்கு
  12. //எங்கள் பிளாக் ஸ்ரீராமுக்குத்தான் (வெறும் ஸ்ரீராம்) நன்றி சொல்லவேண்டும்.//
    ஹா ஹா ஹா நன்றி சொல்லும் விதமாகத்தானே.. அனுஷ்கா வைத்தானே அனுஷா:) எனப்போட்டு.. மறைமுகமாக இக்கதையை ஸ்ரீராமுக்கு டெடிகேட் பண்ணுறீங்க எனப் புரியுது:).. ஹா ஹா ஹா சரி சரி.. மிகுதிக் கதை.. படிச்சிட்டு வாறேன்ன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு நுண்ணறிவு (எதேச்சயாகக்கூட இருக்கலாம்). அவங்க படத்தையே வரைந்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் பிள்ளையார் பிடிக்கப் போனால் அது குரங்காக ஆகிவிடும், நம் வரையும் திறமை அப்படி. அதனால், அனுஷா வுடன் நிறுத்திக்கொண்டேன். அனுஷ்கா என்று எழுதி அசடுவழியாமல்.

      நீக்கு
    2. அதிராவின் நுண்ணறிவு - ஆமோதிக்கிறேன். மிக நுணுக்கமாக நண்பர்களைக் கணிப்பதில் வல்லவர். மேலுக்கு சிரிக்கச் சிரிக்க 'கொமென்ட்ஸ்' இட்டாலும் ஆழமான சிந்தனைகள் உடையவர்.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. ///ஸ்ரீராம்.June 26, 2017 at 9:55 PM
      அதிராவின் நுண்ணறிவு - ஆமோதிக்கிறேன். மிக நுணுக்கமாக நண்பர்களைக் கணிப்பதில் வல்லவர். மேலுக்கு சிரிக்கச் சிரிக்க 'கொமென்ட்ஸ்' இட்டாலும் ஆழமான சிந்தனைகள் உடையவர்.//

      ஆவ்வ்வ்வ் மின்னல் வேகத்தில் ஸ்ரீராமின் கொமெண்ட்ஸ் பார்த்து புல்லரிச்சிட்டேன்ன்ன்ன்... மிக்க நன்றி மிக்க நன்றி:).. ஹையோ இப்போ ஊரெல்லாம் புகைப்புகையா வரப்போகுதே:)..

      நீக்கு
    5. யெஸ் எஸ் :) அனுஷ்க்கா வித் ஆட்டுக்குட்டி அன்ட் அம்ப்ரெல்லா :) அடுத்த படம் வரைஞ்சி அதுக்கு கதை எழுதுங்க என்ன படம்னு தெரில அந்த படத்தை fb ல பார்த்தேன் கியூட் :)

      நீக்கு
    6. //ஹா ஹா ஹா:) எனக்கு அனுஷா எனப் பார்த்ததும் முதலில் வந்தது அனுஷ்காவும் ஸ்ரீராமும்தான்:)..//

      ஹா ஹா ஹா மேலே அவசரப்பட்டு., ஸ்ரீராமை வரைய வெளிக்கிட்டிருக்கிறார் நெ.தமிழன் என நினைச்சுக் கொமெண்ட் போட்டு, இப்போ ப்திரும்பப் படிச்சுப் புரிஞ்சு:) டிலீட் பண்ணிட்டேஎன்ன்ன்ன் ஹையோ ஆண்டவா எனக்கு என்னமோ ஆச்சூஊஊஊஊஊ:).

      நீக்கு
    7. நோஓஓஓஓஓஒ அதெல்லாம் இல்ல அஞ்சு இந்தப் படம்தான் வரையோணும் சொல்லிட்டேன்ன்..

      //
      http://eluthu.com/images/data/vimarsanam/f0/219/eswvb219.jpg

      நீக்கு
    8. ஶ்ரீராம் மேல உள்ள கோபத்தை இப்படிக் காண்பித்தால், (இந்தப் படத்தலைப்பு போட்டு) அதற்காக அவர் ரசிகர் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிடுவாரா? நெவர். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வீட்டிலேயே இன்று பாகுபலி 2-படத்தை மீண்டும் காண்பார் (அதுவும் பிரபாசின் கை,தோள்கள் மேல் நடந்து அன்னப்பறவை வள்ளத்தில் ஏறுவதை மீண்டும் மீண்டும் காண்பார்

      நீக்கு
  13. பிரமாதமாக கதை சொல்கிறீர்கள்
    ஆயினும் காதல் வருவதற்கான ஒரு நல்ல
    நிகழ்வு அல்லது காரணம்
    ஏதும் இருந்திருப்பின் நன்றாக
    இருந்திருக்குமோ என்கிற எண்ணம்
    வருவதைத் தவிர்க்க இயலவில்லை

    இயல்பாகச் சொல்லிச் சென்றவிதம்
    முதல் முதலாகக் கதை எழுதுவதாகச்
    சொல்வதை நமப முடியாமல் செய்து
    போகிறது

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கு நன்றி ரமணி சார்.காதலும் நேசமும் வருவதற்குக் காரணம் வேண்டுமா? தோழியின் மூலமாக அவனைப்பற்றி நிறைய அறிந்துகொண்டிருக்கலாம். பெண்கள் என்ன ஆண்களா? கண்டவுடன் காதல் கொள்ள? வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  14. //“நாம வேணும்னா அவங்க வர்ற வரைல வெயிட் பண்ணுவோமா” அகமது கேள்வியோடு அனுஷாவைப் பார்த்தான்.

    “வேண்டாம். இப்போ வந்துடுவேன்னு ஃபோன்ல சொன்னார். நீங்க போய்ட்டுவாங்க. தாங்க்ஸ்”. அனு பதில் சொல்லும்போது, அவள் மனசில் அகமதுவின் நல்ல குணம் பதிந்தது.//

    ஆஹா இப்படித்தானே ரொம்ப நல்லபிள்ளையா ஆரம்பிப்பாங்க:) இதெல்லாம் உண்மை என நம்பி கவிண்டிடுவாங்க கேள்ஸ்:) ஹையோ ஹையோ.. சரி சரி ஒரு வேளை அகமது உண்மையிலேயே நல்லபிள்ளையாக இருக்கக்கூடும்.. எதுக்கும் இருங்கோ வாறேன்ன் மிகுதி படிச்சிட்டு:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. வலிந்து பேச, பார்க்க ஆண்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டால் நீங்கள் நினைப்பதுபோல் சந்தேகப்படலாம். ரொம்ப நல்லவன்போல் எப்போதும் தோன்றினாலும் நிச்சயம் சந்தேகப்படலாம்.

      என் நேசத்திற்கு உரியவர் என்னிடம் சொன்னது. வீட்டின் ஆண் எப்போதும் மனைவியிடம் அடங்கிப்போகும் குணம் இருந்தாலும், குரலே உயர்த்தாமல் என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போட்டால் நிச்சயம் அவன் பெரிய தப்பை மறைக்கிறான் என்பதே உண்மையாயிருக்கும் என்பார்.

      நீக்கு
  15. ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ் மிக வித்தியாசமான முறையில சிந்திச்சு எழுதியிருக்கிறீங்க.. அல்லது இப்படி ஏதும் உண்மைச் சம்பவங்கள் கூட நிகழ்ந்து அது உங்கள் காதுக்கு எட்டியிருக்குமோ?... மிக அருமையாக நகர்த்தி, நல்ல நிலையில் முடிச்சிருக்கிறீங்க கதையை:).. இனி என்னைப்போன்ற:) அனுபவசாலிகள்:).. சிந்தனையாளர்களின்:).. முடிவைக் கேட்டு.., அனு முடிவெடுக்கலாம் ஹா ஹா ஹா:)..

    நம்பரை அகமது கேட்கிறார் என்றதுமே.. எனக்கு திக்கு திக்கென ஆச்சூஊ.... அனுவுக்கு நிட்சயார்த்தம் தானே முடிஞ்சிருக்கு, அதுவரை நிம்மதியா இருக்கு.

    ///பழைய கதைகளெல்லாம் அனுவின் மனதில் அலையடித்தன. அகமதுக்கு அவளது நம்பரைக் கொடுக்கச் சொல்வதா அல்லது வேண்டாம் என்று சொல்வதா? அவள் என்ன செய்யட்டும்? ///

    தாராளமாக நம்பரைக் கொடுக்கலாம்... ஆனா எங்கட கண்ணதாசன் அங்கிள் இப்போ ஓடிவாறார்ர்ர்ர்ர்...:)

    “நல்லதே நடக்குமென நம்பு... ஆனா
    மிக மோசமான நிலைமையை
    எதிர்கொள்ளவும் தயாராக இரு”... இது அனுவுக்கான அறிவுரை.. அவசரப்பட்டு எதையும் நினைச்சுத் தொலைச்சிடக்கூடாது.

    போன தடவைக் கதையை விட இம்முறை உங்கள் கதை மிக அருமை நெல்லைத்தமிழன்... இன்னொன்று இம்முறை உங்கள் பாசையில் கதை எழுதியிருக்கிறீங்க இல்லயா?:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகுந்த வேலை இருந்தபோதும் வந்து கருத்துக்கள் பல இட்டதற்கு நன்றி. கேஜிஜி சாரும் இருவர் வெகேஷன் போவதால் தாமதமின்றி வெளியிட்டுவிட்டார் என நினைக்கிறேன். அவருக்கும் நன்றி.

      ஒரு சம்பவத்தைக் கடந்த பிறகு மீண்டும் அதனை நாடுவது. பொதுவாக சரியாக இருக்காது. "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவோம் என்பது இழுக்கு"

      கதை மாந்தர்கள்தானே பேச்சு வழக்கை நிர்ணயிக்க முடியும்? கதாநாயகன் இலங்கைத் தமிழன் என்று எழுதிவிட்டு உங்க பாஷையை நம்பி எழுதினால் சரியாகவராதுதானே (பூசார் பாசை எந்த நாட்டு பாஷையோடும் சேராது என்று யாரோ மனதில் நினைப்பது ரொம்ப சத்தமா எனக்குக் கேட்குது)

      உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி. நிதானமாக விடுமுறைப் பயணத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.

      நீக்கு
    2. (பூசார் பாசை எந்த நாட்டு பாஷையோடும் சேராது என்று யாரோ மனதில் நினைப்பது ரொம்ப சத்தமா எனக்குக் கேட்குது)// ஹஹஹஹ் ஏஞ்சல் ஹாலிடேல போறாங்களே! கேட்டிருக்காதா இருக்கும்...இல்லைனா பூஸாரை விரட்டியிருப்பார்....பூஸார் ஹை ஹீல்ஸ் போட்டு தடுக்கி தேம்ஸில் குதித்திருப்பார்...அவர்தான் நீச்சலில் இரண்டாவதாக வந்தாரே!!!

      கீதா

      நீக்கு
    3. அவங்க ஊர்ல இல்லாதபோது ஓட்ட மாட்டேன். பாவம்.

      "அவர்தான் நீச்சலில் இரண்டாவதாக வந்தாரே!!! " - நீச்சல் போட்டியைப் பார்ப்பதற்கு இரண்டாவதாக வந்தார்.

      நீக்கு
  16. யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு புது வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனோபலம் அனுஷாவுக்குக் கிடைக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யதார்த்தம் வளரிளம் பருவத்தில் பெரும்பான்மையினருக்குப் புரியுமா? வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம் மேடம்.

      நீக்கு
  17. நல்ல நண்பனா உங்க மனசுல வச்சுக்குங்க. எப்போ ப்ரே பண்ணும்போதும் என் லட்சியம் நிறைவேறணும்னு துஆ செய்ய மறந்துடாதீங்க. நீங்க எப்போதும் ரஸிக்கு நல்ல தோழியா இருக்கணும்” அகமது சொல்லும்போது ஒரு நெருங்கிய நண்பன் பேசுவதுபோல்தான் அவளுக்குத் தோன்றியது.//

    அப்படியே நண்பராக நலம் விசாரித்து போன் செய்யட்டும். வேறு மாதிரி முடிவு எடுத்து பேசினால் குழப்பங்கள், சலனங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    //“நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா”//
    தெரியனும் இல்லையென்றால் வாழ்க்கை நன்றாக இருக்காது.
    நினைக்க தெரிந்த மனதுக்கு மறப்பது கடினம், தன் மனதை சுரேந்தரை நோக்கி திருப்பி சுகமாய் வாழ வேண்டும்.
    வாழ்க்கையை சுமையாக்கி கொள்ள வேண்டாம் என்பதே என் விருப்பம்.

    “எனக்கு உங்களோட பழகணும், வாழ்க்கைல ஒண்ணு சேரணும்’ என்ற அனுஷாவின் விருப்பத்திற்கு ஏற்ற படமோ?
    கதை நன்றாக இருக்கிறது. படமும் நன்றாக இருக்கிறது.

    படம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கு நன்றி கோமதி அரசு மேடம். பெண்ணின் மனதின் சிறிய சலனமும் வாழ்க்கைக் குளத்தைக் கலங்கச் செய்துவிடும் அல்லவா? படத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. படம் வேறு (இது வேறு கதைக்கு வரைய அவுட்லைன் போட்ட படம்.) ஓ!

    பதிலளிநீக்கு
  19. நண்பரே தங்களது ;;குற்றம் பார்க்கில்;; கதையை படித்து கருத்துரை இட்டு இருக்கிறேன் - கில்லர்ஜி
    நண்பர் ஸ்ரீராம் ஜியின் இந்த தளம் இருப்பது இப்பொழுதே எனக்கு தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துரையை அங்கே பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  20. வணக்கம்
    வாழ்க்கையின் தத்துவத்தை புரிய வைத்தீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  21. வாழ்க்கை என்றால் என்ன ? கதையின் வாயிலாக விளக்கி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கை என்பது வியாபாரம். இதில் ஜன்னம் என்பது வரவாகும். உங்கள் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  22. சென்ற கதைக்கும் இந்தக் கதைக்கும் சொல்லும் முறையில் கம்ப்ளீட் மாற்றம். அது எழுத்தாளரின் திறமையைக் காட்டுகிறது. ஒரே மாதிரி இல்லாமல் வித்தியாசமாய் எழுதும் திறமை தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஶ்ரீராம். பிராமண சமூகச் சூழலை விட்டு விலகி வேற சமூகத்தை முயற்சித்தேன். அதுனாலதான் அனுவின் குடும்பத்தை ரொம்பவும் கொண்டுவரவில்லை.

      நீக்கு
    2. யெஸ் ஸ்ரீராம்!!! எனக்கும் தோன்றியது. நெல்லை கலக்குகிறார்....

      கீதா

      நீக்கு
  23. நினைக்கத் தெரிந்த மனமே பாடலைவிடப் பொருத்தமான வேறு பாட்டு சொல்லலாமோ என்று கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தேன். ஏனென்றால் அகமது அனுஷ்க்காவின் மன்னிக்கவும், அனுவின் அலைபேசி எண் கேட்டிருக்கிறான் என்பதால் ஒரு கதவு திறக்கும் வாய்ப்பு. இல்லாமலும் போகலாம். அது வேறு. ஆனால் இந்த சஸ்பென்ஸ் சூழலுக்குத் தக்க வேறு பாடல் கிடைக்கிறதா என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தெரிந்துகொள்ள ஆசை. சுசீலா பாடலாக இருக்கவேண்டும்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் மீ டூ! ஹைஃபைவ்!!! இந்தப் பாடலும் நன்றாக இருக்கு என்றாலும் சுசீலா லிஸ்டை நெட்டில் எடுத்து வைத்துள்ளேன். பார்த்துக் கொண்டிருக்கிறேன்...நானும் கதை எழுத நினைத்துள்ளேன்...முடிகிறதா பார்ப்போம்...

      கீதா

      நீக்கு
  24. மதம் மாறி திருமணம் செய்து கஷ்டப்படுவதை விட, சுரேந்தரையே அனு திருமணம் செய்வது நல்லது என்னும் கில்லர்ஜி ப்ராக்டிகலாய் யோசித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஶ்ரீராம். நான் நம்புவது, வாழ்க்கைல தேவையில்லாமல் எப்போதும் ரிஸ்க் எடுக்கக்கூடாது. என் பையன் சொல்றது, ரிஸ்க் கூடக் கூட ரிவார்டும் அதிகம்னு. Actual திருமண வாழ்க்கை 3-5 வருடம்தான். அதற்கப்புறம் 20 வருடங்களுக்கு மேல் குழந்தைகளும், அதற்குப்பிறகு அவர்கள் வாழ்க்கையும்தான். 4 வருஷத்துக்காக மேஜர் ரிஸ்க் எடுக்கணுமா? இது என் கருத்து.

      நீக்கு
    2. //திருமண வாழ்க்கை 3-5 வருடம்தான்.//

      அது ஹார்மோன்களின் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும் வயதில் தெரி / புரிவதில்லை!

      நீக்கு
    3. ஸ்ரீராம் ஜியின் புரிதலுக்கு நன்றி.

      ஜாதியில்லை, மதமில்லை என்று பேசுவது மேடையில் வேண்டுமானால் அழகாக இருக்கும்.

      நடைமுறையில் மதம் கடந்து காதலின் வேகத்தில் செய்தவர்கள் மறுவருடம் குழந்தைக்கு பெயர் வைப்பதில் பிரச்சனை வருகிறது சரி மனைவியின் மதமான டொபேட் மதப்பெயரை வைத்தோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
      ஸ்கூலுக்கு போனவுடன் தந்தையின் பெயர் சல்பேட் மதம் இது எப்படி ? என்று வாத்தியார் கேட்கிறார் என்ன செய்வது ?

      நீக்கு
    4. யெஸ் உண்மைதான் ஜி! ப்ராக்டிக்கலாக...

      என் குடும்பத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த, வேறு ஜாதியைச் சேர்ந்த திருமணங்கள் நடந்துள்ளன. எங்கள் குடும்பத்துப் பெண்களும் சரி, ஆண்களும் சரி. எல்லோருமே இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மகிழ்வாக இருந்து வருகிறார்கள். அப்படித் திருமணம் செய்தவர்களில் இரு குடும்பத்தாரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் வாழ்வது வெளிநாட்டில். அனு அகம்மது கேசும் உண்டு. இங்கு வாழும் இரு குடும்பத்தாரில், ஆணின் மனைவி ஆணின் குடும்பத்து வழக்கங்களைப் பின்பற்றுகிறார் என்றாலும் ஆணும் அவர்கள் குடும்பத்து வழக்கங்களையும் மதிக்கிறார். குழந்தையைப் பள்ளியில் தந்தையின் ஜாதி/மத அடிப்படையில்தான் சேர்த்திருக்கிறார்கள். பெண்ணின் குடும்பத்தார் மறுக்கவில்லை. இத்தனைக்கும் பணக்காரரும் இல்லை. அடுத்த கேஸ் பெண். பெண் வேறு ஒரு சாதிப் பையனை மணந்து கொண்டாலும், நல்ல காலம் ஆணின் குடும்பத்தார் எதுவும் சொல்லவில்லை. பெண்ணின் குடும்பம் ஏழ்மைதான். மதம் ஒரே மதம் தான். ஆணின் குடும்பத்தார் கொஞ்சம் வசதி படைத்தவர்கள். இரு பெற்றோர்களையும் பார்த்தும் கொள்கிறார்கள். குழந்தை ஒன்று அது தந்தை சாதியில் சேர்க்கப்பட்டது. எங்கள் குடும்பத்து அடுத்த தலைமுறைகள் எல்லாம் நேஷனல் இன்டெக்ரேஷன் அடிப்படையில் அமைந்துவிட்டது. தென்னிந்திய வட இந்தியக் கலப்பு உட்பட....எங்கள் குடும்பத்தில் கிட்டத்தட்ட இந்திய பாப்புலர் மொழிகளில் எல்லா மொழிகளும் பேசுபவர்கள் வேறு வேறு கலாச்சாரம் என்று ....ஒரு சில குடும்ப நிகழ்வுகள் கலகலப்பாக இருக்கும்...ஹான் இன்னுனு சொல்ல மறந்துட்டேனேன...யாருமே உணவுப் பழக்கத்தைக் கூட அதாவது சைவம், அசைவம் விட்டுக் கொடுக்கவில்லை.

      ஆனால் நீங்கள் சொல்லுவது போல் பிரச்சனைகள் பெரும்பான்மைதான்....

      கீதா

      நீக்கு
    5. விதி விலக்குகள் விதியாக முடியுமா கீதா ரங்கன்? உங்கள் குடும்பத்தின்/சொந்தத்தின் விசால மனம் எனக்குப் புரிகிறது.

      வெளிநாட்டுக்கோ அல்லது இருக்கும் இடத்தைவிட்டு மற்ற மாநிலத்துக்கோ சென்றுவிட்டால், இத்தகைய திருமணங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது. அல்லது பொதுவாக குடும்பத்தின் மனநிலை மாறிவிட்டாலும் (திருமண விஷயத்தைப் பெரிதாகக் கருதாதது) தாக்கம் இருக்காது. இல்லையென்றால், அத்தகைய திருமணங்கள், காலில் குத்திய முள்தான்.

      திருமணம் என்பது இரு குடும்பங்களின் சங்கமமாக இருக்கும்வரை, நெருடல் இருக்கும். அது தனிப்பட்ட இருவரின் நிகழ்வாக எப்போது மாறுகிறதோ (அதற்கு நிறைய வருடங்கள் பிடிக்கும் தமிழ்'நாட்டில்) அப்போது நெருடல் அவ்வளவாக இருக்காது. இதனை ஏற்றுக்கொள்கிறவர்கள்கூட, எங்கே தான் ஏற்றுக்கொண்டதாகக் காட்டிக்கொண்டால், தன் குடும்பத்திலும் இது நடக்க ஏதுவாகிடுமோ என்ற தயக்கம்/பயத்தினால், ஏற்றுக்கொண்டதாகக் காட்டமாட்டார்கள்.

      நீக்கு
  25. லேட்டாகிப் போச்சு!!! மிக அருமையாக எழுதியிருக்கிறிரீர்கள் நெல்லைத்தமிழன்!

    முடிவு எங்கள் யூகத்தில்! இப்படி ஒரு யுக்தியை எழுத்தாளர்கள் கையாள்வது உண்டு அந்த லிஸ்டில் நீங்களும்...சூப்பர்!!!

    பாவம் அனு....காத்திருந்த போது அகமது வேறு எண்ணத்தில் அனுவிற்குக் கல்யாணம் நிச்சயமான போது அகமது என்ட்ரி....தர்மசங்கடமான சூழல்...அனு என்ன முடிவு எடுத்திருப்பாள்? எனக்கு 12 பி சினிமா கதை போல அனு அகமதை மணந்திருந்தாள் கதை எப்படிச் செல்லும்....அனு தன் கசினை மணந்தால் கதை எப்படி நகர்த்தலாம் என்று தோன்றுகிறது....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி கீதா ரங்கன். துளசி ரொம்ப பிஸிபோலிருக்கிறது (வெகேஷனாகத்தானே இப்போது இருக்கும்?)

      உங்கள் கருத்தைப் பார்த்து இந்தக் கதையின் முடிவிலிருந்தே, அடுத்த கதை தொடரலாம் என்று தோன்றுகிறது. ஒரு முடிவு எடுத்தபின் அதை மாற்றுவது சரிப்படுமா? அது வாழ்க்கையின் ஒவ்வொரு சங்கடத்தின்போதும், அடடா அப்படியே தொடர்ந்திருக்கலாமே என்று மனதை சஞ்சலப்படுத்துமல்லவா?

      நீக்கு
  26. நெல்லைதமிழன் உங்களின் இந்தக் கதை போன கதையை விட வேறு விதத்தில் அமைந்துள்ளது தெரிகிறது....வித்தியாசமாகவும் எழுதுகிறீர்கள். உங்கள் திறமை வியக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. நெல்லைத்தமிழன் படம் அருமை!!! அகமதுவும் அனுவும்!!! எப்படி இப்படி வரைகிறீர்கள். பல திறமைகள் உங்களிடம்!!!பிரமிக்கிறேன்....
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன். ஒவ்வொரு தடவையும், பழைய காலத்தில்-16-20 வயதுகளில்) இருந்த திறமையை வளர்த்துக்கொள்ளவில்லையே என்ற வருத்தம் தோன்றுகிறது. சித்திரமும் கைப்பழக்கம்தானே. ஒரு நாள் அது என் வசப்படும். உங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி.

      நீக்கு
  28. அனுவுக்கு நிச்சயமாகும் இந்த சமயத்தில் முடிவை மாற்றுவது சரியல்ல என்றே தோன்றுகிறது. அது பலரது மனதினை வேதனைப்படுத்தும். யதார்த்தமாக அனு போவது நல்லது...அனு என்ன முடிவு செய்கிறாளோ??!! கதாசிரியரும் அதைத்தான் விரும்புவார் இல்லையா....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பவர்கள், கதை மாந்தராயினும், அவர்களும் கஷ்டப்படுவதை விரும்புவதில்லை. இந்தக் கதையே கொஞ்சம் நெடுங்கதையாகி, சுரேந்திரனின் பின்புலம் கொஞ்சம் ஏடாகூடமாக இருந்து, அகமதுவின் நல்ல குணம் இன்னும் மேலோங்கியிருப்பதுபோல பின்னப்பட்டு, ரஸியாவின் அம்மாவோடு அனுவின் பாசமும் காண்பிக்கப்பட்டிருந்தால், வாசகர்கள், 'நிச்சயம் ஆனா என்ன. தான் எண்ணியபடி ஒரு வாய்ப்பு வரும்போல் தெரிகிறதே.. அதை முயற்சித்தால் என்ன' என்ற எண்ணம் வருமல்லவா?

      இப்படித்தானே அந்தக்காலத்தில், கல்கி, லக்ஷ்மி, சிவசங்கரி போன்ற பலப் பல லெஜெண்ட்ஸ் எழுத்தில்கொண்டுவந்து எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தார்கள் அதைப்போன்றே பலப் பல இணைய எழுததாளர்களும் ரொம்ப நல்லா கதைகள் படைக்கறாங்க, உங்களையும் சேர்த்து. (ஆனாலும் கதை எழுதிப்பார்க்கும் என்னையும் உற்சாகப்படுத்துவதற்கு நன்றி)

      இப்போதும் கதையோ தொடர்கதையோ படிக்கும் மனம் வாசகர்களிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ, பெரும்பாலான பத்திரிகைகள் அரைப்பக்க அளவுக்கு சிறுகதைகளைச் சுருக்கிவிட்டன.

      நீக்கு
  29. பதில்கள்
    1. இப்போ யோசிக்கறேன் கீதா ரங்கன், முதல் வரியிலேயே கதை ஆரம்பித்துவிடணும் என்பதுதான் சிறுகதையின் பாலபாடம். வர்ணனைகளெல்லாம் சரித்திரக் கதைகளுக்குத்தான் சரிப்படும்.

      நீக்கு
  30. வாழ்த்துகள் நண்பரே அருமை

    பதிலளிநீக்கு
  31. >>> நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?..<<<

    பல்லாயிரம் நெஞ்சங்களில் இன்றும் நின்றாடிக் கொண்டிருக்கும் வைர வரி..

    அதனுடைய கனம் குறையாமல் வாசகர்களின் கைகளில் சேர்த்து விட்டீர்கள்!..

    அன்பின் நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு