புதன், 13 ஜனவரி, 2021

படத்தை வைத்து படைப்பு 2

 

வாசகர்கள் அனுப்பியுள்ள சில படைப்புகள் : 

1 ) மோ. தில்லைநாயகம் : வல்லிசிம்ஹன் : 

1 ) மரத்தில் படர இயலாத கொடி
தன் இலைகளை ஜன்னல் திரையில்
பரவ விட்டதோ!!!

2 ) கத்திரிக் கோலைக் கண்டதும்
துள்ளி விலகும் இளந்தளிர்கள்.

நெல்லைத் தமிழன் :

மரங்கள் வளர்ப்போம் மரங்கள் வளர்ப்போம்
என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு
இலைகள் செடிகள் படங்களாக
படுக்கை விரிப்பில் பிரிண்ட் பண்றாங்களே.

துரை செல்வராஜூ :

விதைக்குள் தான்
விழுது மரம்..
வெட்டுகிற கோடரி
அறிவதில்லை..

படம் என்றாலும்
பசுமை என்பதை
கத்தரிக்கும் கத்தரியும்
கற்றிருப்பதில்லை . . .  


2 கருத்துகள்: