Srinivasagopalan Madhavan:
மயில் விளக்கை
......My விளக்காக்க
சுடலா மென்றால்
.....சுடுமோ வெனபயமே !!
Asokan Kuppusamy :
இருள் அகற்றும் தீபம்
இனிய மயில் தீபம்
Devarajan Shanmugam :
நிழலுக்கு வெளிச்சமில்லை
நிழல்விளக்கில்
தீபச்சுடரில்லை
இயற்கை வகுத்த நீதி
பொய்யாதிருக்கும்
பொய்யா விளக்கு.
துரை செல்வராஜு:
அன்னம் கொண்ட வண்ணம்
ஆக வேண்டும் எண்ணம்
மின்னும் சுடர் வண்ணம்
வெற்றி நமது திண்ணம்.
Pradhapan Jayaraman :
விளக்கில் நெய்போன்ற பொய்த்தோற்றம் தரும் உறைந்த தேங்காயெண்ணெய்.?
வடமதுரை சாணக்கியன்:
அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்... அதில் ஆசை என்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்.....
(மின்நிலா : இது சினிமா பாடல் ! பாடல் முதல் வரி : திருப்பதி மலை வாழும் வெங்கடேசா --- )
Srinivasagopalan Madhavan:
இதைக் கண்டவுடன், பிரபந்த பாசுரங்கள் நினைவில் வருகிறது..
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்..
Arun Jawarlal :
ஒளியில் உண்மை என்றும், பிம்பம் என்றும் உண்டோ என்று குழம்பியது உயிரற்ற அன்னம்!
ராஜேந்திரன் கந்தசாமி:
மெய் விளக்கில் பொய் தீபம்.
(மின்நிலா : "இது நல்ல கருத்துரை. ஆம்! இந்தப் படத்தில் ஒரு சிறிய விளக்கை ஒரு CD மீது நிறுத்தி, படம் எடுத்தேன். அதன் பின் விளக்கில் எண்ணெய் /நெய், திரி, விளக்கு ஒளி யாவும் paint app மூலம் வரையப்பட்டவை ")
Srinivasagopalan Madhavan :
நெய்யி லொருபஞ்சை நேர்த்தியாய் ஏற்றிவைத்துப்
பொய்யிருட் டையோட்டிப் பூவுலகில் - உய்யவழி
மெய்வழி யாகிய மேலோர் வழிசென்றுச்
செய்வோ மினிய செயல் !
Venkatesan Srinivasagopalan :
(நேரிசை வெண்பா)
அன்னம் விளக்கேற்ற அண்டம் ஒளிபெறும்
அன்னம் பிறர்க்களிக்க ஆனந்தம் - எண்ணம்
சிறப்புற எல்லாம் சீராகும் காண்பீர்
அறத்திற்காள் ஆதல் அறிவு.
அது போலியானது.. இட்டுக் கட்டப்பட்டது என்பது நன்றாகத் தெரிகிறது.. ஆனாலும் -
பதிலளிநீக்குகேட்டது படத்துக்கு நாலு வரி என்று தானே!..
படத்துக்கு நாலு வரி! கொடுத்தாச்சு!
பதிலளிநீக்குபடமும் படத்திற்கான நண்பர்களது வரிகளும் நன்று.
பதிலளிநீக்கு